புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 11 Poll_c10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 11 Poll_m10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 11 Poll_c10 
48 Posts - 46%
heezulia
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 11 Poll_c10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 11 Poll_m10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 11 Poll_c10 
46 Posts - 44%
T.N.Balasubramanian
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 11 Poll_c10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 11 Poll_m10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 11 Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 11 Poll_c10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 11 Poll_m10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 11 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 11 Poll_c10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 11 Poll_m10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 11 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 11 Poll_c10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 11 Poll_m10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 11 Poll_c10 
48 Posts - 46%
heezulia
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 11 Poll_c10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 11 Poll_m10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 11 Poll_c10 
46 Posts - 44%
T.N.Balasubramanian
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 11 Poll_c10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 11 Poll_m10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 11 Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 11 Poll_c10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 11 Poll_m10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 11 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 11 Poll_c10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 11 Poll_m10மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 11 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்


   
   

Page 11 of 18 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 14 ... 18  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 07, 2023 1:06 am

First topic message reminder :

வியர்வை நாற்றத்தை போக்க என்ன செய்ய வேண்டும்?


வெயில் காலத்தில் எல்லோருக்கும் வியர்வை என்பது மிக அதிகமாக வரும். வேர்வை வந்தாலே தானாகவே வியர்வை நாற்றம் உடலில் இருந்து வீசத் தொடங்கிவிடும்.

எனவே வியர்வை நாற்றம் தடுக்க சில முயற்சிகளை செய்யலாம். முதல் வகையில் மஞ்சள் பொடியை அக்குளில் தடவி வந்தால் வியர்வை நாற்றம் மறைந்து மஞ்சள் மணம் மட்டுமே இருக்கும்.

அதேபோல் தக்காளியை பிழிந்து பக்கெட் தண்ணீரில் கலந்து குளித்தால் வியர்வை மாற்றம் இருக்காது.

மேலும் புதினாவை ஊறவைத்து அக்குளில் தடவி குளித்து வந்தால் வியர்வை வாடை சுத்தமாக இருக்காது. குளிக்கும் போது நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குளித்து வந்தால் உடலில் உள்ள துர்நாற்றம் நீங்கும்

T.N.Balasubramanian, Dr.S.Soundarapandian and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 26, 2023 9:07 pm

லிச்சி பழம்


கோடை கால சீசன் பழங்களில் சுவையானதும் ஆரோக்கியமானதும் லிச்சிப்பழமாகும். சத்துக்கள் நிறைந்த லிச்சிப்பழத்தை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகளை பார்ப்போம்:

லிச்சி அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழமாகும். வைட்டமின் சி, கே, பி 1, பி 2, பி 3, பி 6 மற்றும் ஈ ஆகிய ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகிறது. கால்சியம், சோடியம், பொட்டாசியம், இரும்பு, பாஸ்பரஸ், செலினியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள், பாலிபினால்கள் மற்றும் கரோட்டினாய்டுகளும் இதில் காணப்படுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி, உடலின் இரும்புச்சத்தை உறிஞ்சும் திறனை மேம்படுத்தி ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. எனவே ரத்தசோகையை போக்க உதவி செய்யும்.

சருமத்தை அழகாக்கும் சக்தி லிச்சிக்கு உண்டு. மேலும் கோடை காலத்தில் சூரிய ஒளியால் ஏற்படும் சரும எரிச்சலுக்கும் லிச்சி சிறந்த மருந்தாகிறது. உடலை நீரேற்றமாக வைத்திருக்கும் பழங்களின் பட்டியலில் லிச்சி மிக முக்கிய இடம் வகிக்கிறது. உடல்​ எடையை குறைக்கவும் இது உதவுகிறது. சோர்வில் இருந்து உடலையும், மனதையும் உற்சாகப்படுத்தும் இயற்கை மருந்தாகவும் பயன்படுகிறது. ஈ.கோலி நோய்த்தொற்றுகள் போன்ற பல கோடை நோய்களுக்கு சிகிச்சையளிக்க லிச்சி பழச்சாறு உதவுகிறது. இது நமது சரும பராமரிப்பிலும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. அதே மாதிரி பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்று நோயை தடுக்க லிச்சிபழம் உதவுகிறது.

லிச்சி சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை பலப்படுத்துகிறது, இது தொப்பை கொழுப்பை குறைக்க உதவுகிறது.லிச்சியில் மிகக் குறைவான கலோரிகள் இருப்பதால், உடல் எடையைக் குறைக்க மிகவும் பயன்படுகிறது. இந்த பழத்தில் பொட்டாசியத்தின் அளவு மிக அதிகமாக இருப்பதால் லிச்சி சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

லிச்சி பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இதன் காரணமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதனால், பல வகையான தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கிறது. செரிமான அமைப்பை மேம்படுத்தி, வயிற்று பிரச்னைகளை ஏற்படுத்தாத பல ஊட்டச்சத்துக்கள் லிச்சியில் உள்ளது.லிச்சியில் 80 சதவீதம் நீர்ச்சத்து இருப்பதால், சருமத்தை கோடையில் நீரேற்றமாக வைக்க உதவுகிறது.

#லிச்சி #lychee



மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 26, 2023 9:15 pm

குடை மிளகாய்


காரம் குறைவாக காணப்படும் குடை மிளகாய் ஃப்ரைட் ரைஸ் உள்ளிட்ட துரித உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த குடை மிளகாய்களால் என்ன பயன் என்பது குறித்து பார்ப்போம்

குடை மிளகாயில் அபிஜெனின், குவெர்செடின், கேப்சியேட் உள்ளிட்ட ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளன.

குடை மிளகாயில் நம் கண்களை பாதுகாக்கும் கரோட்டின்கள் உள்ளது.

சிவப்பு குடை மிளகாயில் உள்ள கேப்சந்தின் சருமத்தை பாதுகாக்க உதவுகிறது.

குடை மிளகாயில் உள்ள விட்டமின் ஏ மற்றும் சி உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கிறது.

குடை மிளகாயில் உள்ள கரோட்டினாய்டுகள் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராட உதவுகின்றன.

குடை மிளகாய் சாப்பிடுவது ப்ரீ ரேடிக்கல்ஸ் சேதத்தை தடுத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

#குடை_மிளகாய் #capsicum



மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 27, 2023 6:47 pm

பூண்டின் பயன்கள்


பூண்டு ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாக பல வகையில் நமக்குப் பயன்தருகிறது. உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற பயன்கள் உள்ளன.பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும், அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துகளும் இருக்கின்றன. பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட நிறைய நன்மைகளைத் தருகிறது.

பூண்டில் அலிசின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. மேலும், உயர் ரத்த அழுத்தம், ரத்த உறைவு, சீரற்ற ரத்த ஓட்டம் ஆகியவற்றுக்கும் நல்ல பலன் தருகிறது. பூண்டுப் பல் 5 எடுத்து அத்துடன் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை 10 கிராம் அளவு எடுத்துக்கொண்டு, அரைத்துத் தூள் செய்து, பால் கலந்து உண்டுவர ரத்த ஓட்டம் சரியாகும்.

பாலில் பூண்டை வேகவைத்து அதை அருந்திவர தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கிறது.சளியை கரைத்து, சுவாசத் தடையை நீக்கும். ஜீரணசக்தியை அதிகரிக்கும்.பூண்டை தொடர்ந்து சாப்பிட்டு வர, கல்லீரல், சிறுநீர்ப்பை சரியாக செயல்படும். வயிற்றுப் பிரச்னைகளைத் தீர்ப்பதில் பூண்டு பெரும் பங்கு வகிக்கிறது. வாயுவை அகற்றி, அஜீரணத்தை குறைத்து. பசியின்மையைப் போக்கும்.இதய அடைப்பை நீக்கும். நீரிழிவு நோயாளிகளின் ரத்த அளவைக் குறைக்கிறது.

பூண்டில் உள்ள ஈதர், நுரையீரல் குழாயில் உள்ள கெட்டி சளியை இளக்கி வெளியேற்றும். தொண்டைச் சதையை நீக்கும்.5 பூண்டுப் பற்கள் எடுத்துத் தோல்நீக்கி 100 மில்லி பசும்பாலில் போட்டு வேக வைக்கவேண்டும். நன்றாக வெந்த பின்பு பூண்டைக் கடைந்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து தினமும் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மார்புவலி, மூச்சு அடைப்பு சரியாகும். மேலும், உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது.

10 வயதுக்கு உட்பட்டவர்கள் தினமும் 2 பூண்டுப் பற்களும், 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் 3 பூண்டுப் பற்களும், 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தினமும் 5 பூண்டுப் பற்களும் பனங்கற்கண்டுடன் சேர்த்து உண்டு வர உடல் பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி, மூட்டுவலி ஆகியவை குணமாகும்.



மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 27, 2023 8:05 pm

பிரண்டை


நாட்டு மருத்துவத்தில் அவசியமான பொருட்களில் ஒன்றான #பிரண்டை செடி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. பிரண்டையை என்னென்ன வகையில் பயன்படுத்தலாம் என்பதை காண்போம்.

இளம் பிரண்டையை நெய்விட்டு வதக்கி அடைத்து நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.

அடிபட்டு ஏற்படும் வீக்கத்தின் மேல் பிரண்டையை அரைத்து கட்டி வர வீக்கம் குறையும்.

பிரண்டை துவையல் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பிரண்டை தண்டை நெய்விட்டு வறுத்து அரைத்து சாப்பிட்டு வர பெருங்குடல் புண் குணமாகும்.

பிரண்டை சாப்பிடுவதால் நரம்பு தளர்ச்சி நீங்கி ஆண்மை பெருகும்.

பிரண்டை துவையல் செருமான கோளாறு, மலச்சிக்கலை போக்குகிறது.

பிரண்டை சாப்பிடுவது பெண்களுக்கு மாதவிடாய் கால வலியை குறைக்க உதவும்.



மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 02, 2023 6:09 pm

உடலில் யூரிக் அமிலத்தை இயற்கையாக குறைப்பது எப்படி?



தற்போதைய காலத்தில் இருவரில் ஒருவருக்கு யூர்க் அமில சுரப்பு அதிகமாக உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பிரச்சனை சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது ஒரு தீவிர பிரச்சனையாக மாறும். இந்த சிக்கலை எவ்வாறு தடுப்பது என்பதைக் கற்றுக்கொள்வோம்.

யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த ஒரு கிளாஸ் தண்ணீரில் அரை டீஸ்பூன் பேக்கிங் சோடாவைக் கலந்து குடிக்கலாம்.

உடலில் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்க, தினமும் உணவில் வைட்டமின் சி உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. எனவே அவற்றை உட்கொள்ள வேண்டும்.

அதிக தண்ணீர் குடிப்பது உடலில் இருந்து சிறுநீர் மூலம் யூரிக் அமிலம் வெளியேற உதவுகிறது.

நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது இரத்தத்தில் இருந்து யூரிக் அமிலத்தை உறிஞ்சி சிறுநீரகங்கள் வழியாக வெளியேற்றுகிறது.

சமையலுக்கு வெண்ணெய் அல்லது தாவர எண்ணெய்க்குப் பதிலாக ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

யூரிக் அமிலத்தைக் குறைக்க, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களைத் தவிர்க்கவும். இவை மீன் மற்றும் அதன் எண்ணெய்களில் காணப்படுகின்றன.

#யூரிக்_அமிலம் #Uric_Acid



மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 02, 2023 6:13 pm

இளநீர்


கோடைக்காலம் வந்தாலே தாகம் தணிப்பதில் முதல் இடம் வகிப்பது இளநீர். இது வெறும் தாகம் தணிக்கும் பானம் மட்டுமல்ல. ஏராளமான சத்துக்களையும், மருத்துவ பயன்களையும் கொண்ட இயற்கை அளித்த கொடை. அதன் நன்மைகளைத் தெரிந்து கொள்வோம்..

இளநீரில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து உள்ளிட்ட பல சத்துக்கள் நிறைந்துள்ளன.

கோடைக்காலங்களில் #இளநீர் குடிப்பது உடல் சூட்டைத் தணித்து, புத்துணர்ச்சியை அளிக்கிறது.

தினம் ஒரு இளநீர் குடித்து வந்தால் வயிற்றில் ஏற்படும் புண்கள் குணமாகும்.

இளநீரில் உள்ள நீர்ச்சத்து தோல் வறட்சியைப் போக்கி முகப்பரு உள்ளிட்டவை வராமல் தடுக்கிறது.

கோடைக்காலங்களில் உடல் வறட்சியால் ஏற்படும் சிறுநீர் எரிச்சல் இளநீர் குடிப்பதால் சரியாகும்.

இளநீரில் உள்ள லாரிக் அமிலம் தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் காப்பதால் இளமையாக தோற்றமளிக்க உதவுகிறது.

இளநீர் குடிப்பதால் உடலில் உள்ள கழிவுகளைச் சிறுநீர் மூலமாக வெளியேற்றி உடலைச் சுத்தப்படுத்துகிறது.



மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 02, 2023 6:14 pm

இந்த காய்கறிகளை அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?


#காய்கறிகள் உடலுக்கு நன்மை அளிப்பவை என்றாலும் சில காய்கறிகளை அதிகம் சாப்பிடுவது உடலுக்கு பிரச்சினையை அளிக்கும். எந்த காய்கறிகளை அதிகம் சாப்பிடக்கூடாது என அறிவோம்.

உருளைக் கிழங்கு அதிகமாக சாப்பிட்டால் வாயு தொல்லை, வாயு அடைப்பு பிரச்சினைகள் ஏற்படும்.

பட்டாணி அதிகம் சாப்பிட்டால் செரிமான பிரச்சினை ஏற்படுவதுடன் பசி இருக்காது.

பீட்ரூட் அதிகமாக சாப்பிட்டால் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் என்பதால் குறைத்து சாப்பிட வேண்டும்.

முருங்கைக்காய் அதிகமாக சாப்பிட்டால் இரவில் தூக்கம் வராமல் பிரச்சினையை உண்டாக்கும்.

சோள உணவுகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வது உடல் எடையை அதிகரிக்கும்.

மாங்காய் அதிகமாக சாப்பிட்டால் உடல் சூடு அதிகரித்து நீர்க்கடுப்பு, கண் எரிச்சல் பிரச்சினைகள் ஏற்படலாம்



மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 05, 2023 8:40 pm

நெல்லிக்காய்


மாதுளையை விட நெல்லிக்காயில் 27 மடங்கு அதிக சத்துக்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆம்லாவில் ஆன்டிவைரல் மற்றும் ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் நிறைந்துள்ளன. நெல்லிக்காயின் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

#நெல்லிக்காய் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.

ஆண்களின் ஆற்றலை அதிகரிப்பதில் நெல்லிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.

நெல்லிக்காய் இதய நோய் மற்றும் நீரிழிவு நோயைத் தடுக்கிறது.

நெல்லிக்காய் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கிறது.

முடிக்கு சரியான ஊட்டச்சத்தை அளிக்கிறது. பொடுகு தொடர்பான பல பிரச்சனைகளுக்கு நெல்லிக்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

நெல்லிக்காயை உட்கொள்வதால் தோல் புள்ளிகள் மற்றும் வயது தொடர்பான சுருக்கங்களைத் தடுக்கலாம்.

நெல்லிக்காயை அரைத்து, அதில் சிறிது மஞ்சள் மற்றும் நல்லெண்ணெய் கலந்து, உடலில் பூசி குளித்தால், சருமம் இயற்கை அழகுடன் மிளிரும்.

இரவு உணவுக்குப் பிறகு ஒரு டீஸ்பூன் நெல்லிக்காய் பொடியை தேனுடன் கலந்து சாப்பிட்டால் அமிலத்தன்மை நிரந்தரமாக நீங்கும்.



மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 05, 2023 8:42 pm

தொப்பையை குறைக்க


எல்லாருக்குமே உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஆசைதான். ஆனால் பலருக்கு தொப்பை உடல் அழகையும், ஆரோக்கியத்தையும் கெடுப்பதாக உள்ளது. அப்படியான தொப்பையை குறைக்க சில டிப்ஸ் இதோ

நெல்லிக்காய் சாறு குடிப்பதால் தேவையற்ற கொழுப்புகள் நீங்கி தொப்பை குறையும்.

வெந்தயத்தை இரவில் ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை சூடாக்கி குடித்தால் தொப்பை குறைய உதவும்.

எலுமிச்சை பழச்சாறுடன் சிறிது உப்பு மற்றும் தேன் கலந்து குடிக்க தொப்பை குறையும்.

உணவுகளில் இஞ்சி சேர்ப்பது வயிற்று தொப்பை குறைய உதவியாக இருக்கும்.

தினம் காலை ஒரு டம்ப்ளர் க்ரீன் டீ குடிப்பதன் மூலம் தொப்பையை குறைக்கலாம்.

உணவில் அதிகமான உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்துக் கொள்வதை தவிர்ப்பதன் மூலம் தொப்பையை குறைக்கலாம்.



மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 05, 2023 8:43 pm

கீரைகள்


குறிப்பாக பொன்னாங்கண்ணி, பாலக்கீரை, காசினிக்கீரை, மணத்தக்காளி கீரை, சிறுகீரை, அரைக்கீரை, ஆகியவை மருத்துவ குணங்கள் கொண்டது என்று கூறப்படுகிறது.

மருத்துவ குணம் கொண்ட இந்த கீரைகளை சாப்பிட்டால் இதயத்தில் ரத்த ஓட்டம் சீராகும் என்றும் உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை சிறுகீரைக்கு உள்ளது என்றும் வயிற்றுப்புண்ணை ஆற்றும் தன்மை மணல் தக்காளிக்கு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் மஞ்சள் காமாலை நோய் வந்தவர்கள் கரிசலாங்கண்ணிக் கீரையை சாப்பிடலாம் என்றும் கூறப்படுகிறது. பொன்னாங்கண்ணி கீரை சாப்பிட்டால் உடல் சூட்டை தணிக்கும் என்றும் வழுக்கை தலையில் முடி வளரும் என்றும் கூறப்படுகிறது.

விலை குறைவாகவும் அதே நேரத்தில் மருத்துவ குணத்தில் இருக்கும் இந்த கீரைகளை சாப்பிடுவது உடல்நலத்திற்கு நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறது.




மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்  - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 11 of 18 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 14 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக