by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
DMK Files - திமுக கோப்புகள்
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
அமைச்சர்கள் யாருக்கு எவ்வளவு சொத்து ? பட்டியல் வெளியிட்டார் அண்ணாமலை
சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., பிரமுகர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இதில் முதல்வரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் யாருக்கு எவ்வளவு சொத்து என்ற விவர பட்டியலையும், வெளியிட்டார்.
இன்று தமிழக பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். இந்த பேட்டியில் அவர் கூறியதாவது :
நான் சொல்லும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்கிறது. ஏனோ தானோ என்று இந்த புகாரை வெளியிடவில்லை. எல்லோரும் பூதகண்ணாடி கொண்டு பாருங்கள், 21ம் தேதி மீண்டும் பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன். அந்நாளில் கேள்வி பதில் வைத்து கொள்வோம்.
வீடியோவில் வெளியான சொத்து விவரம் பட்டியல் வருமாறு:
ஜெகத்ரட்சகன்
₹.50 ஆயிரத்து ,219.37 கோடி
எ.வ.வேலு
₹.5,442.39 கோடி
கே.என்.நேரு
₹.2,495.14 கோடி
கனிமொழி
₹.830.33 கோடி
கலாநிதிமாறன்
₹.12,450 கோடி
டிஆர் பாலு
₹.10,841.10 கோடி
துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த்
₹.579.58 கோடி
கலாநிதி வீராசாமி
₹.2,923.29 கோடி
பொன்முடி மற்றும் கவுதம் சிகாமணி
₹.581.20 கோடி
திமுக கட்சியின் சொத்து மதிப்பு
₹.1,408.94 கோடி
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
₹.1,023.22 கோடி
உதயநிதி
₹.2,039 கோடி
சபரீசன்
₹.902.46 கோடி
மொத்தம் ₹.1,343,170,000,000 (₹.1,34,317 கோடி)
மாணிக்கம் நடேசன் and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
ரூ.200 கோடி லஞ்சம் பெற்றார் மு.க.ஸ்டாலின்: அண்ணாமலை
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஷெல் கம்பெனிகளிடம் இருந்து ரூபாய் 200 கோடி லஞ்சம் பெற்றார் என அண்ணாமலை குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியலை வெளியிட்ட பின்னர் அவர் பேசியபோது சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் போது ஷெல் கம்பெனிகளிடம் இருந்து முதல்வர் மு க ஸ்டாலின் 200 கோடி லஞ்சம் பெற்றார் என்று தெரிவித்தார்.
இந்த திட்டத்திற்கு ஜிகா நிறுவனம் 59% மத்திய அரசு 15 சதவீதம் மாநில அரசு 21 சதவீதம் நிதிகளை தந்தன என்று அண்ணாமலை தெரிவித்தார். டெண்டர் முடிய சில நாட்கள் இருக்கும்போது ஒரு திருத்தம் கொண்டு வந்தார்கள் என்றும் டென்டரில் சுங்கவரியை சேர்க்க போகிறோம் என்ற திருத்தம் தான் கொண்டு வந்தார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த திட்டத்திற்காக இரண்டு நாடுகளை சேர்ந்த ஷெல் நிறுவனங்கள் 2011 ஆம் ஆண்டு தேர்தல் நிதிக்காக ரூபாய் 200 கோடி முக ஸ்டாலினுக்கு கொடுத்தார்கள் என்றும் இது குறித்து நானே சிபிஐக்கு புகார் அளிக்க போகிறேன் என்றும் அண்ணாம்லை தெரிவித்துள்ளார்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை: ஆர்.எஸ்.பாரதி
முதலமைச்சர் முக ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உள்பட திமுக பிரபலங்களின் சொத்து பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டார். இந்த நிலையில் அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திமுக சொத்து பட்டியலுக்கான ஆதாரங்களை அவர் 15 நாட்களில் வெளியிட வேண்டும் என்றும் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.
மேலும் யார் யார் பெயரில் அவதூறு பரப்பினாரோ அவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் திமுக அமைச்சர்கள் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார். மேலும் அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் விவரங்கள் ஆதாரமற்றவை என்றும் தமிழக முழுவதும் நீதிமன்றங்களுக்கு அண்ணாமலை சுற்றுப்பயணம் செய்வார் என்றும் அண்ணாமலையின் அறியாமையை பார்த்தால் ஐபிஎஸ் எப்படி ஆனார் என்று சந்தேகம் வருகிறது என்று ஆர் எஸ் பாரதி தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டுக்குள் அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும்
திமுக பிரமுகர்கள் மற்றும் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை இன்று வெளியிட்ட அண்ணாமலை 2024ஆம் ஆண்டுக்க் அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
ஒரு கட்சியின் ஊழல் பட்டியலை மட்டுமே வெளியிட வேண்டும் என்ற கொள்கை பாஜகவுக்கு கிடையாது என்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலும் அடுத்தடுத்து வெளியிடப்படும் என்றும் குறிப்பாக 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பே இந்த பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே அதிமுக உள்பட அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்று வெளியிடப்பட்ட ஊழல் பட்டியல் குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு இன்னும் ஒரு வாரத்தில் பதில் சொல்லப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிடுவதை செய்தியாக்க வந்த பத்திரிக்கைக்காரர்கள்.
ஆனால் திமுக கார்ப்பரேட்டின் பணம் இவர்களின் வாயை மூட வைத்துவிட்ட்து. ஒருசில தமிழக ஊடகங்களில் மேலோட்டமாகவும், சிலவற்றில் இந்த செய்தி வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற ஒரு குற்றச்ச்சாட்டு பாஜக மீது வந்திருந்தால் தமிழக ஊடகங்கள் நிலை தலைகீழாக மாறியிருக்கும்.
வாய்கிழிய ஒரு மாதத்திற்கு பேசியிருப்பார்கள்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
இது அரசு நிர்ணயித்த விலை மதிப்பில் வெளியிடபட்ட பட்டியல் நிஜத்தில் இந்த சொத்துமதிப்பு மிகபெரிதாக இருக்கலாம், மிக பாதுகாப்பாக இந்த பட்டியலை தயாரித்துள்ளார் அண்ணாமலை
விஷயம் சொல்வது இதுதான்
அடுத்த பாராளுமன்ற தேர்தலில் திமுக சல்லிகாசு செலவழிக்காதபடி அடித்து முடக்க கிளம்பிவிட்டார்கள், தமிழகத்தின் மிகபெரிய சீர்கேடான பண அரசியலுக்கு முடிவுகட்ட இறங்கிவிட்டார்கள்
மிகபெரிய திட்டத்துடன் பாஜக கால் வைத்திருப்பது தெரிகின்றது, பாராளுமன்ற தேர்தலுக்கு முன் அடித்து ஆடி தேசிய அரசியலில் திமுகமேல் ஒரு பிம்பம் விழவும் வழியினை தொடங்கிவிட்டார்கள்
பணம் ஒன்றுதான் திமுகவின் பலம் அதை முறித்தால் திமுக காற்றுபோன பலூனாகும் என்பதை சரியாக உணர்ந்துவிட்டார்கள்
அண்ணாமலை தன் நடைபயணத்திற்கு மிகபெரிய விஷயத்தை மக்கள் முன்னால் வைத்துகொண்டு கிளம்புகின்றார், ஒரு வகையில் நல்ல வியூகம் இது
எல்லா விஷயத்தையும் சொத்துகுவிப்பு என காட்டும் அண்ணாமலை ஷெல் கம்பெனி ஸ்டாலினாருக்கு கொடுத்த 200 கோடி விவகாரத்தை மட்டும் கையில் எடுக்கின்றார்
இதுபற்றி தானே சிபிஐ அமைப்பிடம் இதுபற்றி புகார் அளிப்பதாக சொல்வதுதான் திமுகவுக்கு கொஞ்சம் சிக்கலான விஷயம்
மற்றவை மக்கள் உணர்ந்து கொள்ளலாம் அல்லது பாஜக வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கலாம்
நிச்சயம் இந்த சொத்துபட்டியல் அதிர்ச்சிதான் இந்நிலை இன்னும் சில ஆண்டுகள் நீடித்தால் தமிழகம் பீஹார் போன்ற மாகாணம், மெக்ஸிகோ உள்ளிட்ட தென்னமெரிக்க நாடுகள் சில ஆப்ரிக்க நாடுகள் போல எல்லாமே ஊழல், பணம், அடிதடி என சட்டம் ஒழுங்கு இழந்த பிரதேசமாகலாம் வாய்ப்பு இல்லாமல் இல்லை
திமுகவின் பெரும் தலைகள் சில பதில்களை தந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன, உதயநிதி ஸ்டாலினார் அதனில் முக்கியமானவர்
தமிழகத்தை ஆளும் கட்சியாக இதனை திமுக மவுனமாக கடந்து செல்லமுடியாது என்பது நிதர்சனம்
திமுக இதனை எப்படி எதிர்கொள்ளும் என்பது இனிதான் தெரியும், அண்ணாமலை மிக துணிச்சலான காரியத்தை தொட்டிருக்கின்றார்
அந்த ஷெல் கம்பெனியின் 200 கோடி பணம் திமுகவுக்கு கொஞ்சம் சவாலான விஷயம்தான்
2011ல் இது நடந்ததாக அவர் சொல்கின்றார், அப்பொழுது காங்கிரஸின் மத்திய அமைச்சரவையில் திமுக இருந்தது கவனிக்கதக்கது
அவ்வகையில் காங்கிரஸ் கட்சிக்க்கும் இது கொஞ்சம் சிக்கலே
அது என்ன ராசியோ தெரியவில்லை , 200 ரூபாய் 200 கோடி என்பதெல்லாம் ஒரு திமுக சென்டிமென்ட், அந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் கலைஞர் டிவி வழக்கும் 200 கோடி பரிமாற்றத்தில்தான் தொடங்கிற்று...
#பிரம்ம_ரிஷியார்
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
அண்ணாமலை வெளியிட்ட சொத்துப் பட்டியல் | முழு விவரம்
கர்நாடகாவில் ஐ.பி.எஸ் அதிகாரியாகப் பணியாற்றிவந்தவர் அண்ணாமலை. அந்தப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு, பா.ஜ.க-வில் இணைந்தார். அப்போது,"நான் ஒரு ஏழை விவசாயி மகன். என்னிடம் ஆடுகள், மாடுகள் மட்டும்தான் இருக்கின்றன" எனத் தன்னை பற்றி எளிமையாக வெளிப்படுத்திக் கொண்டார். அதைத் தொடர்ந்து, தமிழக பா.ஜ.க தலைவராகவும் பொறுப்பேற்றார். அப்போது முதல் தொடர்ந்து தி.மு.க-வைக் கடுமையாக விமர்சித்து, மாநில அரசுடன் அவ்வப்போது மோதல் போக்கையும் கடைப்பிடித்துவருகிறார்.
இந்த நிலையில், அவரது கையில் வெளிநாட்டு வாட்ச் கட்டியிருப்பதாகவும், அது பல லட்சம் மதிப்பு என்றும், ஏழை விவசாயியின் மகனுக்கு இவ்வளவு பணம் எப்படிக் கிடைத்தது என்றும் தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பின. இந்த விவகாரம் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதற்கு ஒரு செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்த அண்ணாமலை, "நான் கட்டியிருப்பது ரஃபேல் விமானத்தின் உதிரிப்பாகங்களால் தயாரான ரஃபேல் வாட்ச். இதுபோல் உலகில் 500 வாட்ச்சுகள் மட்டுமே இருக்கும்.
அதில் ஒன்றை நான் வாங்கி அணிந்திருக்கிறேன். நான் இந்தியன், என் மூச்சிருக்கும் வரை இந்த வாட்ச்சைக் கட்டியிருப்பேன்" என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, ' இந்த வாட்ச் வாங்கியதற்கான ரசீதை வெளியிட வேண்டும்' என தி.மு.க மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேட்டிருந்தார். அதனால் அமைச்சர் செந்தில் பாலாஜி - பாஜக தலைவர் அண்ணாமலைக்கிடையே ட்விட்டரில் வார்த்தைப்போர் நடைபெற்றது. சமூக வலைதளங்களிலும் வாட்ச் பில் தொடர்பாகப் பரவலாகப் பேசப்பட்டது.
அப்போதும் அண்ணாமலை, "என்னிடம் வாட்ச் பில் இருக்கிறது" எனத் தெரிவித்தார். ஆனால், பில்லை வெளியிடவில்லை. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஒரு செய்தியாளர் சந்திப்பில், "ஏப்ரல் 1-ம் தேதி வாட்ச் பில்லை வெளியிடுவேன். ஏப்ரல் 14-ம் தேதி தி.மு.க அமைச்சர்களின் ஊழல் பட்டியலையும், எனது சொத்துத் தகவல்களையும் வெளியிடுவேன்" என்பதாக அறிவித்தார். ஆனால், கடந்த ஒன்றாம் தேதி அண்ணாமலை அந்த ரஃபேல் வாட்ச் பில்லை வெளியிடவில்லை. ஏப்ரல் 14-ம் தேதி தி.மு.க-வின் ஊழல் குறித்து வெளியிடுவதாக அறிவித்திருந்த நிலையில் வாட்ச் பில் குறித்தும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்றைய தினம் அண்ணாமலை, "நாளை காலை 10:15 மணிக்கு தி.மு.க அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும்" எனத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், செந்தாமரை, சபரீசன்,செல்வி, மு.க.முத்து, மு.க.அழகிரி, துரை அழகிரி, கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்டோரின் படங்கள் இருக்கக்கூடிய ஒரு வீடியோவை வெளியிட்டார்.
இந்த நிலையில், இன்று கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அண்ணாமலை, "கவிஞர் கண்ணதாசன் தனது `வனவாசம்’ என்ற புத்தகத்தில் கலைஞர் கருணாநிதியும், கண்ணதாசனும் ரயிலில் வந்தது தொடர்பாக எழுதியிருக்கிறார். அதில் பழம் விற்கும் நபர் கூடையை வைத்துவிட்டு கழிவறைக்குச் சென்றபோது கலைஞர் பழத்தைத் திருடலாமா எனக் கேட்டார் எனக் குறிப்பிட்டிருக்கிறார். அப்போது முதல் திருடத் தொடங்கினார்கள். சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளாக இன்னும் திருடிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்னை ஆரம்பித்தது என் ரஃபேல் வாட்சின் மூலமாகத்தான்.
நான் கட்டியிருக்கும் ரஃபேல் வாட்ச்சை, சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நண்பரிடமிருந்து வாங்கினேன். அதற்கான பில் இதோ...” என பில்லைக் காட்டினார். மேலும் தொடர்ந்தவர், ``எனது வங்கிக் கணக்கு முதல் சம்பளம் வரை அனைத்து விவரங்களையும் இன்று இணையதளத்தில் வெளியிடுகிறேன். ஆனால் நேற்றே ஒரு போலி பில்லைப் பதிவிட்டது திமுக ஐடி விங். அதையும் நம்பி பரப்பிவருகிறார்கள். தற்போது நான் ஒரு வீடியோவை வெளியிடுகிறேன். அதில் திமுக கட்சியைச் சார்ந்தவர்களின் சொத்து விவரங்கள் இருக்கின்றன.
அதை நன்கு பூதக்கண்ணாடி வைத்து ஆராய்ந்து வாருங்கள். அதற்காக ஒரு வாரம் நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு 20 அல்லது 21-ம் தேதிகளில் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்துகிறேன். அப்போது உங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன்" எனத் தெரிவித்து வீடியோவை வெளியிட்டார். சுமார் 15 நிமிடங்கள் ஓடிய வீடியோவில் பல திமுக தலைவர்களின் சொத்து விவரங்கள் காண்பிக்கப்பட்டன.
அதில், ஜெகத்ரட்சகன் ரூ.50,219 கோடி, எ.வ.வேலு ரூ.5,442 கோடி, கே.என்.நேரு ரூ.2,495 கோடி, கனிமொழி ரூ.830 கோடி, கலாநிதி மாறன் ரூ.12,450 கோடி, கதிர் ஆனந்த் ரூ.579 கோடி, கலாநிதி வீராசாமி ரூ.2,923 கோடி, உதயநிதி ரூ.2,039 கோடி, சபரீசன் ரூ.902 கோடி, பொன்முடி ரூ.581 கோடி, அன்பில் மகேஸ் ரூ.1,023 கோடி எனக் காட்டப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து பேசிய அண்ணாமலை, "இந்த வீடியோ மூலம் திமுக தலைவர்களிடம் நான்கு கேள்விகளை வைக்கிறேன். உதயநிதி ஸ்டாலினுக்குச் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்தத் தொழிலும் இல்லாத நிலையில் ரெட் ஜெயன்ட் மூவி நிறுவனம் 2008-ல் ஆரம்பிக்கப்படுகிறது. 2008 - 2011 வரை ரூ.300 கோடிக்கு படம் எடுத்திருக்கிறார். அதில் நிறைய படங்கள் தோல்வியடைந்தன. அந்தப் பணம் எங்கிருந்து வந்தது... ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் முதலீட்டாளர் யார்... அதை உதயநிதி ஸ்டாலின் வெளியிட வேண்டும். தற்போது அந்த நிறுவனத்தின் மதிப்பு ரூ.2,010 கோடி.
இரண்டாவதாக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன்.... இவர் லண்டனில் இருக்கும் 'வெஸ்ட் பாங்க்' எனும் மணி லாண்டரிங் பேங்க் நிறுவனத்துடன் தொடர்பில் இருக்கும் இரண்டு நிறுவனங்களில் பங்குதாரராக இருக்கிறார். இது லஞ்சம் வாங்குவதைவிடப் பெரும் குற்றம். இதற்கு முதல்வரும், அவருடைய மருமகன் சபரீசனும் பதில் சொல்ல வேண்டும். முதல்வர் துபாய்க்குச் சென்றபோது பல்வேறு கையெழுத்துகளைப் போட்டார். அதில் ஒன்று, `நோபல் ஸ்டீல்’ எனும் நிறுவனம்.
இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் 1,000 கோடியில் முதலீடு செய்யப்போவதாக அறிவித்தார். ஆனால், இந்த நிறுவனத்தில் 2009-ம் ஆண்டு உதயநிதி ஸ்டாலினும், 2016-ம் ஆண்டு அமைச்சர் அன்பில் மகேஸும் இயக்குநராக இருந்து ராஜினாமா செய்திருக்கிறார்கள். இது எப்படி... இதன் மர்மத்தை விளக்க வேண்டும். 2006-2011 வரை திமுக ஆட்சியில் இருக்கும்போது சென்னை மெட்ரோ முதற்கட்ட பணிக்கான மதிப்பீடு ரூ.14,600 கோடி என முடிவுசெய்யப்பட்டது.
இதற்காக உடனடியாக டெண்டர்விடப்படுகிறது. இந்த டெண்டர் ஒப்பந்தம் ஆல்ஸ்டாம் நிறுவனத்துக்குச் செல்ல உதவியதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு, தேர்தல் நிதியாக சிங்கப்பூர் நிறுவனம் மூலம் ரூ.200 கோடி கொடுக்கப்பட்டது. இதை நேரடியாகவே குற்றம்சாட்டுகிறோம். இதை நேரடியாக சிபிஐ-க்கு நானே புகார் அளிக்கப்போகிறேன். அழுக்குகளின் மொத்த வடிவம் தி.மு.க. மதன் ரவிச்சந்திரன் போன்றவர்களை இறக்கிவிட்டு ஸ்டிங் ஆபரேஷன் செய்தார் உதயநிதி ஸ்டாலின். சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு ஓர் அரசியல்வதி தனது 10 ஆண்டுக்கால வரவு, செலவு கணக்குகளை வெளியிட்டிருப்பாரா... நான் வெளியிட்டிருக்கிறேன்.
இதைப் பெருமைக்காகச் சொல்லவில்லை. திமுக-வை எதிர்க்க எனக்கு வேறு வழியில்லை. அதனால் யாருக்கும் பயந்தோ, பணிந்தோ பதவிக்கு வர வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இது ஊழலுக்கு எதிரான போர். இந்த வெளிப்படைதான் பிரதமர் மோடி விரும்பக்கூடிய ஆட்சி. இலங்கை விவகாரம் முதல் ஹைட்ரோகார்பன், நீட் வரை அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணம் திமுக-தான். அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்பது பா.ஜ.க-தான்.
எனவே தமிழ்நாடு மக்களுக்கு... 'என் மண் என் மக்கள்" எனும் எனது பாதயாத்திரை ஊழலை எதிர்க்கத்தான். அதனால் ஜூன் முதல் வாரம் தொடங்கும் எனது நடைப்பயணத்தில் பங்குபெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். ஊழலை எதிர்க்க சபதமேற்று வாருங்கள். என்னுடன் இருப்பவர்களையெல்லாம் கைதுசெய்தாலும் நான் அடங்கப்போவதில்லை. என்ன நடந்தாலும் எனது குரலை அடக்க முடியாது. அது இன்னும் பலமாக இருக்கும்” என்றார்.
T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அது என்ன ராசியோ தெரியவில்லை , 200 ரூபாய் 200 கோடி என்பதெல்லாம் ஒரு திமுக சென்டிமென்ட், அந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் கலைஞர் டிவி வழக்கும் 200 கோடி பரிமாற்றத்தில்தான் தொடங்கிற்று...
நம்பர் 2--என்பவர் 2ம் மனைவியோ அல்லது பினாமி மனைவியோ.
நம்பர் 2 பணம் என்றால் இலஞ்சப்பணம்.
நம்பர் 2 நம்பர் 2 க்கு போகும். அல்லது அவரது வாரிசுக்கு போகும்.
இவர்கள் வாழ்வில் நிம்மதி என்பதேது?
இவ்வளவு சொத்தையும் சேர்த்தவர் அனுபவிக்க போவதில்லை.
மற்றவருக்காக உழைப்பவர்கள் இவர்கள்.
நடைமுறையில் சமீப காலத்தில் நாம் கண்ட உண்மைதானே.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
என்ன செய்ய முடியும்?
கேலி செய்து நகைக்க முடியும்-
°°°🧡
அவன் நெஞ்சம் நிமிர்த்தி நிற்கிறான்
நீங்கள் முதுகில் ஒளிந்து
குத்திக் கொண்டிருக்கிறீர்கள்-
°°°🧡
உனது ஈனபுத்திக்கு மகிழ்ச்சியென்றால்
இன்னும் ஓராயிரம்முறை
சொல்லிக்கொள்
ஆடு-
°°°🧡
போரிட்டு கூட வேண்டாம்
அவனை வாதிட்டு வெல்ல, ஒத்த ஆண்?
நினது கூட்டத்தில் உண்டோ?
°°°🧡
பட்டத்து அரியணை பிறப்பல்ல
ஆடு மேய்த்தவன்தான்
தொட்டுத்தான் பாரேன்-
°°°🧡
இப்படியோர் வீரம் தெலுங்கர்க்கு புதிது
அவன் தமிழனல்லவா
காணீர், இப்படிதான் இருக்கும்-
°°°🧡
அவமானங்கள் பின்னால் நிற்பது
உமக்கு அழகென்றால்,
ஆண்மகன் பின்னால் நிற்பதே
அறிவுக்கு அழகு-
°°°🧡
அந்த முண்டாசுக்காரனின் ரெளத்திரம்
நூறாண்டுகள் கழித்தல்லவா
அவனிடத்தே பார்க்க நேர்ந்தது-
°°°🧡
மயிர்க்கூச்செறியும் நிகழ்வொன்று
சொல்கிறேன், அவன் கத்தினால்
மனிதக் காடே ஆடி அடங்குகிறது-
°°°🧡
இவன் துணிவு
இந்த நூற்றாண்டின் தேவை
இனி மெல்ல உயிர்கள் செழிக்கும்-
- Sponsored content
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
» திமுக உதயமான ராயபுரம் தொகுதியை காங்.குக்கு விட்டுக் கொடுத்த திமுக
» திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிவா? ஆதரவை விலக்குமா திமுக?
» முதலமைச்சர் ஜெயலலிதா ஆணை பிறப்பித்து முதல் கையொப்பமிட்ட கோப்புகள்
» எழுத்தாளர் சுஜாதாவின் தொகுப்புகள் சுமார் 162 கோப்புகள்(1.09GB)- தரைவிறக்கம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்