புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
PTR பழனிவேல் தியாகராஜனிடமிருந்து நிதித்துறை பறிப்பு
Page 1 of 1 •
தமிழக அமைச்சரவை சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக அமைச்சர் பதவியிலிருந்து ஒருவர் நீக்கப்பட்டிருக்கிறார். நிதித் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அந்தப் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டுள்ளார். அமைச்சரவை மாற்றம் தொடர்பான பட்டியல் வெளியானதும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "கடந்த இரண்டு ஆண்டுகள் நிதித்துறை பொறுப்பு வழங்கியதற்காகவும், தற்பொழுது எழுச்சிமிக்க புதிய பொறுப்பை வழங்கி மக்களுக்காகப் பணியாற்றும் வாய்ப்பை அளித்துள்ள என் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார். |
புதிய மாற்றங்கள் என்னென்ன?
தமிழ்நாட்டு அமைச்சரவையின் புதிய அமைச்சராக இன்று பதவியேற்றுள்ளார் டி.ஆர்.பி. ராஜா. தற்போதைய அமைச்சரவையில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர், அந்தப் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை மாற்றமின்றி 35 ஆக நீடிக்கிறது.
இருந்தாலும், அமைச்சரவையில் பல முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. தமிழக நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தொழில்துறை அமைச்சரான தங்கம் தென்னரசு நிதியமைச்சராக பதவியேற்றுள்ளார். புதிதாக அமைச்சரவையில் இணையும் டி.ஆர்.பி. ராஜா, தொழில்துறை அமைச்சராக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ், பால் வளத்துறை அமைச்சராக்கப்பட்டுள்ளார்.
செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சரான வெள்ளகோவில் சாமிநாதனுக்கு தமிழ் வளர்ச்சித்துறை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று சில நாட்களுக்கு முன்பாக வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில் முதலமைச்சரின் மகனும் அமைச்சருமான உதயநிதி குறித்தும் மருமகன் குறித்தும் அவர் பேசியவை, கட்சிக்குள் பெரும் புயலையே ஏற்படுத்தின. இந்தப் பின்னணியில்தான் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அவர் வகித்துவந்த முக்கியத் துறையிலிருந்து மாற்றப்பட்டுள்ளார்.
யார் இந்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்?
நீதிக் கட்சியின் தலைவரும் சென்னை மாகாணத்தின் முன்னாள் பிரதமர் பி.டி. ராஜனின் பேரனும் முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜனின் மகனுமான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தன் தந்தையின் மரணத்திற்குப் பிறகு அரசியலுக்குக் கொண்டுவரப்பட்டார்.
2006ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது, பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரானார். ஆனால், பதவியேற்று மதுரைக்குத் திரும்பும் வழியிலேயே அவர் மரணமடைந்தார். அந்தத் தருணத்திலேயே அவரது மகன் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை அவரது தந்தையின் தொகுதியான மதுரை மத்தியத் தொகுதியில் போட்டியிடும்படி தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வலியுறுத்தினார். ஆனால், அந்த சமயத்தில் அவர் அதனை ஏற்கவில்லை.
இதற்குப் பிறகு 2016ல் அமெரிக்காவிலிருந்து திரும்பிய பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மதுரை மத்தியத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பிறகு, மீண்டும் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் மதுரை மத்தியத் தொகுதியில் போட்டியிட்ட பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அதில் வெற்றிபெற்றார். தி.மு.கவின் அமைச்சரவையில் நிதியமைச்சர் என்ற முக்கியப் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.
பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் நிதித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றபோது, மிக மோசமான நிலையில் இருந்த நிதித்துறையை மேம்படுத்த அவர் எடுத்த நடவடிக்கைகள் மிகுந்த கவனத்தைப் பெற்றன. பாராட்டுதல்களையும் பெற்றன. ஆனால், அதே நேரம் அரசின் பல்வேறு துறைகளுக்கு அவர் நிதியை விடுவிப்பதில் தாமதம் செய்வதாகவும் புகார்கள் எழுந்தன.
மற்றொரு பக்கம், தேசிய அளவில் தி.மு.கவின் முகத்தை மாற்றியமைப்பதிலும் அவர் முக்கியப் பங்கு வகித்தார். ஆங்கில ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டிகள், தொலைக்காட்சி விவாதங்களில் அவர் பங்கேற்று முன்வைத்த கருத்துகள் ஆகியவை நாடு முழுவதும் வெகுவாகக் கவனிக்கப்பட்டன.
தி.மு.கவின் ஐடிவிங்கை தீவிரமாகச் செயல்படவைக்க முடிவுசெய்யப்பட்டபோது, அதன் செயலராக பி.டி.ஆர். நியமிக்கப்பட்டார். தி.மு.க. ஐ.டி. விங்கின் கட்டமைப்பை முழுமையாக உருவாக்கியதிலும் கட்சிக் கட்டமைப்பு குறித்த தரவுகளை ஒழுங்குபடுத்தியதிலும் அவரது பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது.
இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின்போது தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் செலவுகளில் முறைகேடு இருப்பதாகக் கூறி அவர் வெளியிட்ட விவரங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால், முதலமைச்சர் குடும்பம் குறித்து தனிப்பட்ட முறையில் அவர் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ வெளியானது, அவர் பற்றிய நேர்மறை பிம்பம் அனைத்தையும் மாற்றியமைத்தது.
நாசர் நீக்கப்பட்டது ஏன்?
பால் வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசரைப் பொறுத்தவரை, அமைச்சரான நாளில் இருந்து தினமும் ஆய்வுகள், கூட்டங்கள் என பரபரப்பாகவே இருந்தார். அவருக்கு முன்பாக அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜியின் ஊழல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றெல்லாம் அறிவித்தார்.
ஆனால், அப்படியேதும் நடக்கவில்லை என்பதோடு, நாசர் மீதே பல புகார்கள் குவிந்தன. பால் வளத்துறையின் கீழே வரும் ஆவினின் நிர்வாகத்தில் குளறுபடிகள், முறைகேடுகள் என புகார்கள் குவிந்தன. அ.தி.மு.க. ஆட்சியில் தினமும் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், இவரது நிர்வாகத்தின் கீழ் ஒரு கட்டத்தில் பால் கொள்முதல் 30 லட்சம் லிட்டராகக் குறைந்ததாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பாக சென்னையின் பல பகுதிகளில் ஆவின் பால் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டது, அரசைப் பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கியது.
இது தவிர, வேறு சில சர்ச்சைகளிலும் அவரது பெயர் அடிபட்டது. ஊடக கேமராக்களுக்கு முன்பாகவே ஒருவரை கல்லைக் கொண்டு எறிந்தது, அமைச்சரின் மகனும் கவுன்சிலருமான ஆசிம் ராஜா உள்ளாட்சி நிர்வாகத்தில் தலையிடுவது என பலவிதங்களிலும் புகார்களுக்கு உள்ளானார் நாசர். இதனால், இவர் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என நீண்ட நாட்களாகவே பேசப்பட்டுவந்தது.
அமைச்சரான டி.ஆர்.பி. ராஜா
மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரான டி.ஆர்.பி. ராஜா அமைச்சராக நியமிக்கப்பட்ட பிறகு அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம், ரகசியக் காப்பு பிரமாணம் செய்து வைத்தார்
புதிதாக அமைச்சரவையில் இணைக்கப்படும் டி.ஆர்.பி. ராஜா, நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த தி.மு.க. தலைவருமான டி.ஆர். பாலுவின் மகன். 2011ல் முதல் முறையாக மன்னார்குடி தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்குத் தேர்வான இவர், தற்போது மூன்றாவது முறையாகவும் அதே தொகுதியில் இருந்து வெற்றிபெற்றார். துவக்கத்திலேயே அமைச்சரவையில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு திட்டக் குழுவின் உறுப்பினர் பதவிதான் கிடைத்தது. அதற்குப் பிறகு தி.மு.க. ஐ.டி. விங்கின் செயலராகவும் அவர் நியமிக்கப்ப்டடார். ஆட்சி அமைந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டம் பெற்றுள்ள டி.ஆர்.பி. ராஜாவுக்கு, எடுத்த எடுப்பிலேயே முக்கியத் துறையான தொழில்துறையைக் கொடுத்திருப்பது பலரது புருவங்களை உயர்த்தியிருந்தாலும், அவர் சிறப்பாகச் செயல்படுவார் என்ற நம்பிக்கையிலேயே இந்தத் துறை வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பது, உலக முதலீட்டாளர் மாநாட்டை விரைவில் நடத்துவது போன்ற பெரிய சவால்கள் அவர் முன்பாக இருக்கின்றன.
தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையை கவனித்துவந்த மனோ தங்கராஜுக்கு பால் வளத் துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆவினின் நிர்வாகத்தைச் சீராக்க வேண்டிய உடனடிப் பொறுப்பு அவருக்கு இருக்கிறது.
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனைப் பொறுத்தவரை நிதித் துறையிலிருந்து தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு மாற்றப்பட்டது ஒரு பின்னடைவுதான் என்றாலும், மிகப் பெரிய சர்ச்சைக்குப் பிறகும் அமைச்சரவையில் நீடிக்கிறார் என்பதே குறிப்பிடத்தக்க விஷயமாக இருக்கும்.
ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சரான கயல்விழி செல்வராஜ் நீக்கப்படுவார், அவருக்குப் பதிலாக தமிழரசி அந்தத் துறையின் அமைச்சராக நியமிக்கப்படுவார் என்றெல்லாம் பேசப்பட்டாலும், அந்த மாற்றம் நடக்கவில்லை.
இந்த அமைச்சரவை மாற்றத்தின் மூலம் தமிழக அமைச்சரவையில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டிருக்கிறது என்ற விமர்சனமும் இருக்கிறது. அதேபோல, பா.ஜ.க. வெளியிட்ட ஆடியோவுக்காக, திறம்படச் செயல்பட்ட பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை நீக்க வேண்டுமா என்ற கேள்வியையும் தி.மு.க. தொண்டர்கள் சமூக வலைதளங்களில் எழுப்பி வருகின்றனர்.
அமைச்சர்கள் மாற்றம் தவிர, முக்கியத் துறைகளின் செயலர்களும் இந்த வார இறுதிக்குள் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பாக தமிழ்நாடு அமைச்சரவை கடந்த ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி மாற்றியமைக்கப்பட்டு, உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.
அமைச்சரவை மாற்றம் பற்றி பிடிஆர் கூறியது என்ன?
அமைச்சரவை மாற்றம் தொடர்பான பட்டியல் வெளியானதும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்ட விவரம் பின்வருமாறு:
கடந்த இரண்டு ஆண்டுகள் என் வாழ்விலேயே மிகவும் நிறைவான ஆண்டுகளாகும் . மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையின் கீழ் பெருந்தொற்றுக் காலத்தில் ஒரு திருத்தப்பட்ட பட்ஜெட்டையும் ('21 - '22), பெருந்தொற்றுக்குப் பிறகு இரண்டு ஆண்டு பட்ஜெட்டுகளையும் ('22 - '23, '23 - '24) சமர்ப்பித்துள்ளேன். முந்தைய ஆட்சியின் விளைவாக உட்சபட்ச பற்றாக்குறை மற்றும் கடன் விகிதங்களைப் பெற்றிருந்த போதிலும், நாங்கள் வரலாறு காணாத வகையில் சமூக நலத் திட்டங்களிலும், மூலதனச் செலவினங்களிலும் முதலீடு செய்துள்ளோம். இதனை என் பொது வாழ்விலும், என் வாழ்க்கையிலும் மிகச் சிறப்பான பகுதியாகக் கருதுகிறேன்.
நிதி ஆதாரங்களை வலுப்படுத்துதல் மற்றும் சமூக நல செலவினங்கள் ஆகியவை சமத்துவ சமுதாயத்திற்கு அவசியமான படிகள் என்றாலும், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான உந்து சக்தியாக விளங்குவது முதலீடுகள், நிறுவன விரிவாக்கம் மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாக்கம் ஆகியவைகளே ஆகும்.
உலகளவில் இன்று முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான #1 துறையாக விளங்கும் தகவல் தொழில்நுட்ப இலக்காவை மாண்புமிகு முதல்வர் அவர்கள் எனக்குத் தற்போது வழங்கியதற்கு நான் நன்றியுள்ளவனாவேன். தொழில்நுட்பமே எதிர்காலத்தை வடிவமைக்கிறது என்பதை நாம் அறிவோம்.
தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு இத்துறையில் முன்னோடியாக இருந்தபோதிலும், கெடுவாய்ப்பாக கடந்த பத்தாண்டுகளில் இந்தத் துறையில் நமது உண்மையான செயல் திறனை எட்டுவதில் நாம் பின்தங்கிவிட்டோம். எனவே எனக்கு முன்னாள் இத்துறையை நிருவகித்த மனோ தங்கராஜ் அவர்களின் பெருமுயற்சிகளின் தொடர்ச்சியாக இத்துறையில் கூடுதல் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கத்தை விரைவுப்படுத்துவதற்கும், தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகத்தை மீண்டும் ஒரு முன்னணி மாநிலமாக நிலைநிறுத்தும் வளர்ச்சிக்கான செயல்பாடுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.
கடந்த இரண்டு ஆண்டுகள் நிதித்துறை பொறுப்பு வழங்கியதற்காகவும், தற்பொழுது எழுச்சிமிக்க புதிய பொறுப்பை வழங்கி மக்களுக்காகப் பணியாற்றும் வாய்ப்பை அளித்துள்ள என் தலைவர் மாண்புமிகு முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
பிபிசி தமிழ்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்ற அமைச்சர்களிடம் மென்மையாக நடந்து கொள்கிறாரா?
பி.டி.ஆர். நிதி தொடர்பாக படித்தவர். ஆகவே அவரே இந்தப் பதவிக்குப் பொருத்தமானவர் என்பது போன்ற கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இதற்கு முன்பாக நிதியமைச்சராக இருந்தவர்கள் யாரும் நிதி தொடர்பான படிப்பையோ, எம்.பி.ஏவோ படித்தவர்கள் அல்ல. சங்கத் தமிழ் பேசிக் கொண்டிருந்தவர்கள்தான் அந்தப் பதவியில் இருந்தார்கள்.
நாவலர் நெடுஞ்செழியன், ஏம்.ஏ. தமிழ் படித்த பேராசிரியர் க. அன்பழகன், மு. கருணாநிதி ஆகியோர் நிதியமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள்.
ஓ. பன்னீர்செல்வத்தின் பின்னணி என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழக வரலாற்றில் அதிக முறை பட்ஜெட்டைத் தாக்கல் செய்த நிதியமைச்சர்களில் அவரும் ஒருவர்.
நிதித்துறையைப் பொறுத்தவரை அதிகாரிகள்தான் பட்ஜெட்டை எழுதுகிறார்கள். அந்தத் துறையின் அமைச்சருக்கு நிதித் துறையில் நிபுணத்துவம் இருப்பது வரவேற்கத்தக்க விஷயம். ஆனால், அதுவே எல்லாம் என ஆகிவிடாது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக மருத்துவரான விஜய பாஸ்கர்தான் இருந்தார். அந்தத் துறையில் ஊழல் இல்லாமலோ, பிரச்சனை இல்லாமலோ இருந்ததா? எத்தனை பிரச்னைகள் வெடித்தன? ஆகவே, அந்தத் துறையில் நிபுணத்துவம் கொண்டவர்தான் அமைச்சராக இருக்க வேண்டுமென்பதில்லை. அதிகாரிகளின் துணையுடன் யார் வேண்டுமானாலும் அதை சரியாகச் செய்யலாம்.
சமூக ஊடகங்களில் பெரும் ஆதரவு
பி.டி.ஆரை பொறுத்தவரை, அவருக்கு சாதாரணமான துறை ஒதுக்கப்பட்டிருப்பதால் அவருடைய செயல்பாடுகளும் ஈடுபாடும் குறைந்து விடும் என எதிர்பார்த்தால் அது தவறு.
பல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு தண்டனைப் பதவியாக, அதிகாரமில்லாத இடத்தில் நியமனம் செய்வார்கள். திறமையான அதிகாரியாக இருந்தால், அவர்கள் அந்த இடத்திலும் தங்களால் முடிந்ததைச் செய்து காட்டுவார்கள். அதேபோலத்தான் அமைச்சர்களும்.
"நான் நிதித் துறை போன்ற பெரிய துறையை நிர்வகித்தேன். அதில்தான் என் முழுத் திறமையும் வெளிப்படும்" எனக் கூறி, பி.டி.ஆர். பட்டும்படாமல் இருந்தால், அது வருத்தமளிக்கும் விஷயம்தான். ஆட்சி இன்னும் மூன்று ஆண்டுகள் நீடிக்கவிருக்கிறது என்பதால் ஆறு மாதம் கழித்துகூட மீண்டும் அவருக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கலாம்.
அவரை முதல்வர் கையாண்டவிதம் தவறு என சமூக வலைதளங்களில் எழுதி வருகிறார்கள். அவர் மத்திய அரசுக்கு எதிராக எப்படியெல்லாம் பேசினார், செயல்பட்டார் என்பதைச் சுட்டிக்காட்டிவருகிறார்கள். நிதி அமைச்சராக அவருக்கு அந்த வாய்ப்பு இருந்தது, அதனால் செய்தார். வாய்ப்பு கிடைத்தால் எல்லா அமைச்சர்களும் அதைச் செய்வார்கள்.
தங்கம் தென்னரசுவின் திறமையைக் குறைத்து மதிப்பிட முடியாது. ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றியவர். பள்ளிக் கல்வித் துறையைச் சிறப்பாக கையாண்டவர். அவர் அந்தத் துறையை வைத்திருக்கும்போது ஒரு சம்பவம் நடந்தது.
அப்போது பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்த துரை முருகன், ஒரு சர்ச்சையில் சிக்கியதால் முதலமைச்சர் மு. கருணாநிதி அந்தத் துறையை அவரிடமிருந்து எடுத்துக் கொண்டார். அதனை தங்கம் தென்னரசுவிடம் தர முன்வந்தார்.
ஆனால், தங்கம் தென்னரசு அதனை ஏற்க மறுத்துவிட்டார். இவ்வளவு முக்கியமான துறையைக் கொடுத்தும் ஏற்க மறுத்ததற்காக மு.கருணாநிதியே அவரைப் பாராட்டினார்.
பொதுப் பணித் துறை அமைச்சராக இல்லாதபோதே, அண்ணா நூற்றாண்டு நூலகம், புதிய தலைமைச் செயலகம் கட்டுவது ஆகியவற்றை தொடர்ந்து மேற்பார்வை செய்தார். ஆகவே, நிதித் துறையைக் கையாள்வது தங்கம் தென்னரசுவுக்கு பெரிய விஷயமாக இருக்காது.
டிஆர்பி ராஜாவுக்கு உள்ள சவால்கள்
டி.ஆர்.பி. ராஜாவைப் பொறுத்தவரை ஏற்கனவே இரண்டு முறை எம்.எல்.ஏவாக இருந்தவர். இப்போது மூன்றாவது முறையாக எம்.எல்.ஏவாக இருக்கிறார்.
இருந்தாலும், இவ்வளவு பெரிய துறையை அவர் எப்படி கையாள்வார் என்பது குறித்த கேள்விகள் இருக்கின்றன. குறிப்பாக தொழில் அதிபர்கள் மத்தியில் இந்தக் கேள்விகள் வலுவாகவே இருக்கின்றன.
வரும் ஜனவரி மாதம் புதிதாக ஒரு தொழிலாளர் மாநாட்டிற்கு தொழில்துறை தயாராகி வருகிறது. 60 சதவீத பணிகளை தங்கம் தென்னரசுவே முடித்துவிட்டார்.
ஆனாலும் டி.ஆர்.பி. ராஜா எப்படி இந்தத் துறையைக் கையாள்வார் என்ற பயம் தொழிலதிபர்களிடம் இருக்கிறது. அவர் புதியவர் என்பதால் அல்ல. அவருடைய தந்தையும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர். பாலுவின் தலையீடு இந்தத் துறையில் இருக்குமோ என்ற அச்சம்தான் அது. சமூக வலைதளங்களிலும் இதைப் பற்றி பலர் எழுதி வருகிறார்கள். டி.ஆர். பாலுவின் தலையீடு இல்லாமல் இருந்தால் அவருக்கும் அந்தத் துறை கைவந்துவிடும்.
நாசர் பதவி நீக்கம் செய்யப்பட்டதைப் பொறுத்தவரை அதற்குப் பல காரணங்கள். ஆவினைப் பொறுத்தவரை அது மக்களோடு நேரடியாக சம்பந்தப்பட்ட துறை. அதில் சின்ன தவறு நேர்ந்தாலும் அமைச்சருக்கும் ஆட்சிக்கும் பெரும் கெட்ட பெயரை ஏற்படுத்தும்.
ஆறேழு மாதங்களுக்கு முன்பிருந்தே, ஆவின் பால் கெட்டுப்போனதாகவும், பால் பாக்கெட் கிடைப்பதில்லை என்றும் புகார்கள் வந்துகொண்டிருந்தன. அதற்குப் பிறகு, அந்தத் துறையில் இருந்த அதிகாரிகள் இந்த அமைச்சரோடு பணியாற்றுவதில் சிக்கலை எதிர்கொள்ள ஆரம்பித்தார்கள்.
ஏற்கெனவே பால் கொள்முதல் குறைவாக இருக்கும் நிலையில் இனிப்புகள், ஐஸ் க்ரீம் விற்பனையை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஏழை மக்களுக்கும் நடுத்தர மக்களுக்கும் சரியான விலை பால் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆவின் செயல்படுகிறது. அதற்காகத்தான் பால் விலையும் குறைக்கப்பட்டது. ஆனால், தனியார் பால் பாக்கெட்டுகள்தான் அதிகம் விற்பனையாயின. காரணம், ஆவின் பால் கிடைக்கவில்லை.
பிடிஆருக்கு தற்காலிக நிவாரணம்
மேலும், திருவள்ளூர் மாவட்ட அரசியலில் இவருடைய தலையீடும் இவருடைய குடும்பத்தினரின் தலையீடும் மிக மோசமாக இருந்தது. முதல்வர் அங்கு பொதுக் கூட்டத்திற்குச் சென்றால், அவர் பெயரைச் சொல்லி கடைகளில்கூட வசூல் வேட்டை நடத்தப்பட்டது. இது அரசுக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தியது.
அடுத்ததாக, ஆவடி மாநகராட்சியின் மேயராக தன் மகனைக் கொண்டுவர மிகவும் முயற்சி செய்தார். ஆனால் அது நடக்கவில்லை.
தற்போதுள்ள மேயர், மேயருக்கான கார் நிறுத்தும் இடத்தில் காரை நிறுத்த விடாமல், அமைச்சரின் மகன் கார் நிறுத்தப்படும். இதெல்லாம் உளவுத் துறை முதல்வரிடம் தெரியப்படுத்திய பிறகு அவரை அழைத்து முதல்வர் கடுமையாக எச்சரித்தார். அதற்குப் பிறகும் அவர் மாறவில்லை என்பதால்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு நிகழ்வில் கட்சிக்காரர் மீதே கல்லை எடுத்து வீசினார். அது தி.மு.க மீது பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்த குளறுபடிகளை மனதில் வைத்துத்தான் அவர் மாற்றப்பட்டிருக்க வேண்டும்.
ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜும் மாற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் மாற்றப்படவில்லை. அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லை என்றாலும் அமைச்சராக அவரது செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட அரசியலில் அவரது செயல்பாடுகள் குறித்தும் விமர்சனங்கள் இருந்தன.
ஆனால், அவரை நீக்கினால் அவருக்குப் பதிலாக யாரைப் போடுவது என்ற கேள்வி எழுந்தது. சங்கரன் கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜாவையோ முன்னாள் அமைச்சரும் மானாமதுரை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான தமிழரசியையோ புதிய அமைச்சராக்கலாம் என்று விவாதிக்கப்பட்டது. அவரைப் பொறுத்தவரை, இப்போதைக்கு காப்பாற்றப்பட்டிருக்கிறார் அவ்வளவுதான்.
மனோ தங்கராஜைப் பொறுத்தவரை, ஐ.டி. துறையிலிருந்து பால் வளத் துறைக்கு மாற்றப்பட்டிருப்பது ஒரு பதவி உயர்வைப் போலத்தான். ஏனென்றால் ஆவின் மக்களோடு நேரடியாக சம்பந்தப்பட்ட துறை. ஒரு நாள் பிரச்னை என்றாலும் பெரிய விவகாரமாகிவிடும்.
தி.மு.க ஆட்சி வந்தால், அ.தி.மு.க. ஆட்சியின் போது பால்வளத் துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜிதான் முதலில் சிறைக்குச் செல்வார் என எல்லோரும் பேசினார்கள். முதலமைச்சரே பேசினார். அந்த அளவுக்கு அவர் மீது புகார்கள் இருந்தன.
ஆனால், அதைவிட மோசமாக இருந்தார் நாசர். இப்போது பெயரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மனோ தங்கராஜுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அவரைப் பொறுத்தவரை இது ஒரு உயர்வுதான்.
இன்னும் நிறைய அமைச்சர்கள் மாற்றப்பட்டிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. நிறைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன.
ஆனால், எதிர்க்கட்சிகள் கண்கொத்திப் பாம்பாக காத்துக்கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் அ.தி.மு.க. இருக்கிறது. மற்றொரு பக்கம் பா.ஜ.கவின் அண்ணாமலை எடுத்தேன் கவிழ்த்தேன் எனப் பேசுகிறார். இது போதாதென ஆளுநர் ஆர்.என். ரவியும் இருக்கிறார். இந்த ஆட்சியைக் குறித்து பல விமர்சனங்களை அவர் முன்வைக்கிறார். அதில் பல விஷயங்கள் பொய். அந்த அளவுக்கு எதிர்க்கட்சிகள் தி.மு.க. ஆட்சி மீது பாயக் காத்திருக்கின்றன. இப்படியான சூழலில் தி.மு.க. எப்படிச் செயல்பட வேண்டும்.
சில நாட்களுக்கு முன்பு நாளிதழில் செய்தி ஒன்று வெளியானது. அதில், கோவளம் மழைநீர் வடிநிலத் திட்டம் குறித்து அதில் பேசப்பட்டிருந்தது. 740 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் அது.
அது தற்போது அங்குள்ள எம்.எல்.ஏவாலும் மண்டல குழுத் தலைவர்களாலும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. அவர்கள் கமிஷன் கேட்பதாக ஒப்பந்ததாரர்கள் புகார் கூறுகிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த ஊழலைக் குறைப்பதாகக் கூறித்தான் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. ஆனால், அதிகரித்திருப்பதாக பலர் வெளிப்படையாக பேட்டியளிக்கிறார்கள். இந்த சூழலில், அமைச்சரவை பெரிய அளவில் மாற்றியிருக்க வேண்டும்.
"திராவிட மாடல் முழக்கம் மட்டும் கைகொடுக்காது"
2024ல் மோடி எதிர்ப்பும் திராவிட மாடல் கோஷமும் மட்டுமே கைகொடுக்காது. 40 எம்.பி. இடங்களையும் பிடிக்க வேண்டுமென்றால் இது போன்ற ஊழலையோ, சர்ச்சையையோ அனுமதிக்கக்கூடாது. 20 - 30 வருடங்கள் அமைச்சர்களாக இருந்தவர்களை மாற்றிவிட்டு, புதியவர்களை நியமிக்க வேண்டும். அமைச்சரவை மாற்றம் இதைவிட சிறப்பாக இருந்திருக்க வேண்டும்.
ஒரு ஆட்சி நூறு சதவீதம் தூய்மையானதாக இருக்க முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரிதான் இருப்பார்கள். ஆனால், முதல்வர்தான் அவர்களை சரியாக வழிநடத்திச் செல்ல வேண்டும்.
கவுன்சிலர்களில் இருந்து அமைச்சர்கள் வரை அனைவரும் அவரவர் சந்தோஷத்தைத்தான் பார்க்கிறார்கள். ஆகவே முதலமைச்சர் கருணையே பார்க்கக்கூடாது. நாகரிகமாகவும் மென்மையாகவும் நடந்துகொள்வதால் நல்ல பெயர் கிடைக்காது. கடுமையான நடவடிக்கை எடுக்கும்போதுதான் மக்கள் மத்தியில் நல்ல பெயர் வரும்.
கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியை 40 சதவீத ஆட்சி என முத்திரை குத்திவிட்டார்கள். அதுபோல இங்கேயும் தி.மு.க. ஆட்சியை முத்திரை குத்திவிட முதல்வர் அனுமதிக்கக்கூடாது.
தி.மு.கவை வீழ்த்த பா.ஜ.க என்ன வேண்டுமானாலும் செய்யும். அதற்கு நல்ல உதாரணம், ஆளுநர் ஆர்.என். ரவி ஆங்கில நாளிதழுக்கு அளித்த சமீபத்திய பேட்டி. அவர் ஒருவர்போதும் இந்த ஆட்சியைக் கலகலக்கச் செய்வதற்கு. ஆகவே, முதல்வர் மிகக் கடுமையாக அடுத்த மூன்று ஆண்டுகள் நடந்தால்தான் பெயரைக் காப்பாற்ற முடியும்.
ஆரம்பத்திலிருந்து அவர் புலம்பிக் கொண்டிருக்கிறாரே தவிர, நடவடிக்கை எடுப்பதில்லை. சட்டமன்ற தேர்தலில் ஜெயிக்கும்வரை இவர் பேச்சைக் கேட்டார்கள். அதற்குப் பிறகு கேட்பதில்லை. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்குக் கொடுக்க வேண்டிய இடங்களைக் கொடுக்கச் சொல்லி முதல்வர் உத்தரவிட்டாலும் கட்சிக்காரர்கள் கேட்பதில்லை.
"உங்கள் முன் வெட்கித் தலைகுனிகிறேன்" என்றார். அப்போதும் கூட்டணிக் கட்சியினருக்கு கொடுக்க வேண்டிய இடங்களை கட்சிக்காரர்கள் தரவில்லை.
துரைமுருகனைப் போன்ற ஒரு தி.மு.க. விசுவாசியைப் பார்க்க முடியாது. எம்.ஜி.ஆர். அழைத்தும் அ.தி.மு.கவுக்குச் செல்லாதவர். ஆனால், பிரச்னை ஏற்பட்டபோது, அவரையே பொதுப் பணித் துறையிலிருந்து நீக்கி, வெறும் சட்ட அமைச்சராக மட்டும் வைத்திருந்தார் மு. கருணாநிதி.
மு.க. ஸ்டாலினுக்கு இது தெரியாத விஷயமல்ல. ஆகவே, அவர் மென்மையாக நடந்து கொண்டால் அவரது கட்சியினர் சிக்கலான சூழலை உருவாக்குவார்கள். அது அ.தி.மு.கவுக்கு, பா,ஜ.கவுக்கும் ஆளுநருக்கு சாதகமாகப் போய்விடும்.
‘மை டியர் யங் மேன்’ என்று ஜெயலலிதா அழைத்த டி.ஆர்.பி. ராஜா யார்?
முக்கிய சாராம்சம்
மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் இருந்து தொடர்ச்சியாக 3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் டி.ஆர்.பி.ராஜா. தற்போது திமுகவின் தகவல், தொழில்நுட்ப பிரிவின் (ஐ.டி. விங்) செயலாளராக பதவி வகித்து வருகிறார். திமுகவின் பொருளாரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர். பாலுவின் மகன்தான் டி.ஆர்.பி. ராஜா. முதலமைச்சர் தலைமையில் இயங்கி வரும் மாநில திட்டக்குழுவின் உறுப்பினராகவும் இவர் இருக்கிறார். சென்னையில் உள்ள எம்.சி.சி கல்லூரியில் பள்ளிப்படிப்பை முடித்து, லயோலா கல்லூரியில் இளங்கலை படித்துள்ளார். அதைத் தொடர்ந்து, சென்னை பல்கலைக்கழகத்தில் உளவியல் பாடத்தில் முதுநிலை பட்டமும், சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். |
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டு, மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரான டி.ஆர்.பி. ராஜா தொழில் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவி பிரமாணம், ரகசியக் காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
அவர் யார்? புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் அவருக்கு மிக முக்கியமான துறை ஒதுக்கப்பட்டிருப்பது ஏன்?
ஜெயலலிதா vs டி.ஆர்.பி. ராஜா
மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் இருந்து 2011, 2016, 2021 ஆகிய சட்டப் பேரவைத் தேர்தல்களில் தொடர்ச்சியாக 3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் டி.ஆர்.பி.ராஜா.
2016ஆம் ஆண்டு திமுக எதிர்கட்சியாக இருந்தபோது, சட்டமன்றத்தில் டி.ஆர்.பி. ராஜா பேசிய உரை கவனத்தை ஈர்த்தது.
தொழில்துறை மீதான மானியக் கோரிக்கையின் போது திமுக சார்பாக டி.ஆர்.பி. ராஜா பேசினார். தமிழ்நாட்டிலுள்ள தொழிற்சாலைகள் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவுக்கு செல்வதாக பேசினார்.
அதற்கு பதிலளித்த அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, “மை டியர் யங் மேன், நீங்கள் சொல்வது போல பிற மாநிலங்களுக்கு எந்த தொழிற்சாலையும் செல்லவில்லை. வரும் காலங்களில் தொழில் தொடங்க இங்கே முதலீட்டாளர்கள் வரிசையில் வந்து நிற்பார்கள்,” என்று பதிலளித்தார்.
இந்த காரசாரமான விவாதம் முழுவதும் ஆங்கிலத்திலேயே நடந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் டி.ஆர்.பி. ராஜா பேசிய கருத்துகள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன.
டெல்டாவுக்கு பிரநிதித்துவம்
சொந்த தொகுதியான மன்னார்குடியில் நடைபெறும், பேருந்து நிலைய விரிவாக்க பணிகளை டி.ஆர்.பி. ராஜா பார்வையிட்டார்
தமிழ்நாடு அமைச்சரவையில் டெல்டா மாவட்டங்களிலிருந்து அமைச்சர்கள் யாரும் இல்லை என்ற குறை இருந்து வந்தது.
தற்போது டி.ஆர்.பி. ராஜா அமைச்சராக நியமிக்கப்பட்டதையடுத்து, அந்த குறை நீங்கியிருக்கிறது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டி. ஆர்.பி. ராஜாவின் தந்தையும், திமுகவின் பொருளாளருமான டி.ஆர். பாலு, முதலமைச்சரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கிறேன். டெல்டா மாவட்டத்திற்கு மேலும் அமைச்சர்களை தர வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைப்பேன், என்றார்.
இதுமட்டுமின்றி, டெல்டா மாவட்டங்களில் சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கத்தால், திமுகவின் செல்வாக்கு குறைந்து வருவதற்கு மாற்றாக உறுதியான ஒரு தலைவரை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் டி.ஆர்.பி. ராஜாவை தேர்தலில் அறிமுகப்படுத்தினார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.
பதவி பிரமாணத்தில் எழுந்த சர்ச்சை
2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, முதலமைச்சராக பதவியேற்றபோது 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்' என மு.க.ஸ்டாலின் பதவியேற்றார்.
அதைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் பதவி ஏற்றுக் கொண்டபோது, 'தளிக்கோட்டை ராசுத்தேவர் பாலு ராஜா என்னும் நான்' என்று டி.ஆர்.பி. ராஜா தனது தாத்தாவின் பெயரையும், அவரது பெயரிலிருந்த சாதிப்பெயரையும் சேர்த்து பதவியேற்றுக் கொண்டார்.
இது அப்போது பரவலாக விமர்சனத்திற்குள்ளானது.
ஐ.டி விங் செயல்பாடுகள்
2021ஆம் ஆண்டு, அயலக தமிழர்கள் அணி என திமுகவில் அமைப்பு ரீதியாக புதிதாக ஒரு அணி உருவாக்கப்பட்டது. அந்த அணியின் செயலாளராக டி.ஆர்.பி. ராஜா அப்போது நியமிக்கப்பட்டார்.
ஐ.டி விங் துறையின் செயலாளராக இருந்த பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் அந்த பொறுப்பிலிருந்து விலகிய பிறகு ஐடி விங் செயலாளர் பொறுப்பு டி.ஆர்.பி. ராஜாவுக்கு வழங்கப்பட்டது.
அதன் பிறகு 'ஐ.டி. விங் 2.0' என்று திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள தகவல், தொழிநுட்ப அணியின் தொண்டர்களை திரட்டினார். கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம், 'திராவிட மாதம்' என்ற தலைப்பில் ட்விட்டர் ஸ்பேஸ் மூலமாக பல்வேறு கூட்டங்களை நடத்தினார்.
டி.ஆர்.பி. ராஜாவின் துறை எவ்வளவு முக்கியம்?
முதல்முறையாக அமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் டி.ஆர்.பி. ராஜாவுக்கு தொழில்துறை வழங்கப்பட்டது மிகமுக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
தமிழ்நாடு அரசை பொறுத்தவரை, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030ஆம் ஆண்டுக்குள் '1 ட்ரில்லியன் டாலர்' பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என இலக்கை நிர்ணயித்துள்ளது.
இதற்காக தமிழ்நாட்டில் மட்டுமின்றி, உலக நாடுகளுக்கு சென்று முதலீட்டாளர்களை ஈர்க்கும் பணியை மேற்கொண்டு வருகிறது தமிழ்நாடு அரசு.
விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர், ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டு முதலீட்டாளர்களை சந்திக்க இருக்கிறார்.
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தனிக்கொள்கையை வகுத்ததோடு மட்டுமல்லாமல், பல மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலைகளை தமிழ்நாட்டில் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
இப்படி தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தொழில்துறை, தகவல், தொழில்நுட்பத்துறை, சிறு, குறு, நடுத்தர தொழில் வளர்ச்சித்துறை ஆகிய துறைகள் பங்கு அவசியம் என முதலமைச்சர் கருதுகிறார்.
3 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதிலும், முதல் முறையாக அமைச்சராக பொறுபேற்று இருக்கும் டி.ஆர்.பி. ராஜா, தொழில்துறை வளர்ச்சிக்கு எந்தளவு பங்களிப்பார் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
"திராவிட மாடல் என்பது வாரிசு அரசியலை மையப்படுத்தியது" - அமைச்சரவை மாற்றம் குறித்து வானதி சீனிவாசன்
கோவை புலியகுளம் பகுதியில், சுத்திகரிக்கப்பட்ட தானியங்கி குடிநீர் இயந்திரம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கோவை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பா.ஜ.க மகளிரணி தேசியத் தலைவருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “24 மணி நேரமும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைப் பெற்றுக்கொள்ளும் தானியங்கி இயந்திரத்தை திறந்துவைத்திருக்கிறோம்.
மேலும் இரண்டு இயந்திரங்களைத் திறக்க திட்டமிட்டிருக்கிறோம். தமிழகத்தின் அமைச்சரவையில் புதிதாக ஓர் அமைச்சர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அரசியல்ரீதியாக அவர் அனுபவம் உள்ளவர். சக உறுப்பினராக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதே வேளையில், மாநில முதல்வருக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு கோரிக்கை வைத்திருந்தேன். திராவிட மாடலின் அடிப்படை சமூகநீதி என்றால் அந்தச் சமூகநீதி, சமநீதியாக இருக்க வேண்டும். பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு துணை முதல்வர் பதவி வழங்கவில்லை.
கட்சியில் இருக்கும் தலைவரின் மகனுக்குத்தான் இந்தப் பதவியை வழங்கியிருக்கின்றனர். திராவிட மாடல் என்பது வாரிசு அரசியலை மையப்படுத்தியதுதான் என்பதை இது மீண்டும் நிரூபிக்கிறது. இது ஜனநாயகத்துக்கு எதிரானது.
பா.ஜ.க-வில் கடைநிலை ஊழியரும்கூட நாட்டின் உயர்ந்த பொறுப்புகளுக்கு வர முடியும். உண்மையான ஜனநாயகத்தை நாங்கள் பிரதிபலித்துக்கொண்டிருக்கிறோம். கர்நாடகத் தேர்தலைப் பொறுத்தவரை, நாங்கள் மக்களை நம்புகிறோம். மக்கள் ஆதரவு பா.ஜ.க-வுக்கு இருக்கிறது. கோவையில் கனிமவளக் கொள்ளை தினமும் இரவு நேரத்தில் நடைபெறுகிறது. நூற்றுக்கணக்கான லாரிகளில் கனிம வளம் கடத்தப்படுகிறது.
ஈராண்டு ஆட்சி சாதனை அல்ல வேதனைதான். பா.ஜ.க மாநிலத் தலைவர்மீது சட்டரீதியான நடவடிக்கை என்கிறார்கள். குடும்பமே சேர்ந்து நோட்டீஸ் அனுப்புகிறார்கள். மேலும், தி.மு.க சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், பி.டி.ஆர் ஆடியோவின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
அமைச்சரவை மாற்றத்தில் `எஸ்கேப்’ ஆனவர்கள் யார் யார்?!
``பால்வளத்துறை அமைச்சர் நாசர் பெயர் மட்டும் `டிக்’ அடிக்கப்பட்டு, மற்றவர்களை பெண்டிங்கில் வைத்திருக்கிறது தலைமை. இந்த அமைச்சர்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம்” என்கிறார்கள்.
மூன்றாவது முறையாக அமைச்சரவை மாற்றம் இருக்கும் என எதிர்பார்த்த நிலையில், இவர்கள்தான் லிஸ்ட்டில் இருந்தவர்கள் எனச் சில அமைச்சர்கள் பெயர்கள் செயலக வட்டாரங்களில் உலாவின. ஆனால், லிஸ்ட்டில் இருந்து ’நாசர்’ பெயர் மட்டும் `டிக்’ அடித்து மற்றவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியிருக்கிறது தலைமை. ஆனால், இது நிரந்தரமல்ல என்றும் கூறப்படுகிறது.
அதில், கைத்தறித்துறை அமைச்சர் காந்தி, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் தப்பித்து அமைச்சர் பதவியைத் தக்கவைத்தவர்கள் என்றார்கள்.
இது தொடர்பாக சில முக்கியப் புள்ளிகளிடம் விசாரித்தபோது, ``அமைச்சரவையில் புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா சேர்க்கப்படுகிறார் என்றதும் கைத்தறித்துறை அமைச்சர் காந்தி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு அந்தத் துறை டி.ஆர்.பி.ராஜாவுக்கு கொடுக்கலாம் என்றுதான் விவாதிக்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து கயல்விழி செல்வராஜ், ராஜகண்ணப்பன், ராமச்சந்திரன் ஆகியோர் பெயர்கள் அடிப்பட்டன.
குறிப்பாக, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருக்கும் கயல்விழி செல்வராஜ் செயல்பாடுகள் திருப்தியாகயில்லை. மேலும், நிர்வாகத்தில் அவர் கணவரின் தலையீடு அதிகமாக இருப்பதால், பதவி பறிப்பு பட்டியலில் அவர் பெயர் இடம்பெற்றிருந்தது. அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சராக இருந்த தமிழரசிக்கு வாய்ப்பு கிடைக்குமென சொல்லப்பட்டது.
மேலும், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனின் மருமகன்மீது சட்டவிரோதமாக வனப்பகுதியில் சாலை அமைப்பது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்ததால், அவரின் பெயரும் அடிபட்டது.
ஆனால், நீலகிரி கிராமங்களில் பா.ஜ.க வேர் பரப்பிவருகிறது. இந்தச் சமயத்தில் ராமச்சந்திரன் அதிருப்தியடைந்தால், கட்சிக்கு நீலகிரியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். நாடாளுமன்றத் தேர்தல் வியூகம் காரணமாகவே ராமச்சந்திரன் அமைச்சராகத் தொடர்கிறார் என்ற தகவலும் சொல்லப்படுகிறது.
இவர்களைத் தொடர்ந்து, தி.மு.க ஆட்சியின் முதல் அமைச்சரவை மாற்றத்தைத் தொடங்கிவைத்தவர் ராஜகண்ணப்பன். சாதிரீதியாகத் திட்டியதாகக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி போக்குவரத்துறையிலிருந்து மாற்றப்பட்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வழங்கப்பட்டது. இந்தத் துறையிலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அவரின் செயல்பாடுகள் இல்லாததால் இவர் பொறுப்பு பறிக்கப்படும் என சொல்லப்பட்டது.
ஆனால், இதில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் பெயர் மட்டும் `டிக்’ அடிக்கப்பட்டு, மற்றவர்களை பெண்டிங்கில் வைத்திருக்கிறது தலைமை. இந்த அமைச்சர்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம்” என்கிறார்கள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஆவின் துறை மந்திரி மாற்றம்.
அவர் பால் முணுமுணுப்புகள் அதிகமாகி வருகின்றனவே.
ஆவின் பால் கிடைப்பதில்லை.
தரம் குறைந்துவிட்டது.
ஆவின் வெண்ணெய் எப்போதோ பார்த்த ஞாபகம் .
மக்கள் சேவையாக மாதமொரு முறை ஒவ்வொரு பூத்திலும் பால்கள் கார்டு விநியோகிக்கப்படும் /புதுப்பிக்கப்படும்.
இப்போது அது இல்லை .பால் அலுவலகத்திற்கு சென்றுதான் புதுப்பிக்கவேண்டும்.அங்கு கூட்டமோ கூட்டம்.
தெரியவந்தது சில --தெரியாதது பல.
அவர் பால் முணுமுணுப்புகள் அதிகமாகி வருகின்றனவே.
ஆவின் பால் கிடைப்பதில்லை.
தரம் குறைந்துவிட்டது.
ஆவின் வெண்ணெய் எப்போதோ பார்த்த ஞாபகம் .
மக்கள் சேவையாக மாதமொரு முறை ஒவ்வொரு பூத்திலும் பால்கள் கார்டு விநியோகிக்கப்படும் /புதுப்பிக்கப்படும்.
இப்போது அது இல்லை .பால் அலுவலகத்திற்கு சென்றுதான் புதுப்பிக்கவேண்டும்.அங்கு கூட்டமோ கூட்டம்.
தெரியவந்தது சில --தெரியாதது பல.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
`பி.டி.ஆர் இலாகா மாற்றம், ஆடியோ விவகாரத்தை உண்மையென நிரூபிக்கிறதா?!’ - விமர்சனமும் திமுக பதிலும்!
``அமைச்சரவை மாற்றம் என்பது முழுக்க முழுக்க முதலமைச்சரின் பிரத்யேக உரிமை. அமைச்சரவை, இலாகா மாற்றம் தமிழக நலன் மற்றும் வளர்ச்சியை மையப்படுத்தியதே தவிர எந்த அரசியல் காரணங்களுக்கும் இடமில்லை” என்கிறார்கள் தி.மு.க-வினர் |
தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் நிகழ்ந்து தகவல் தொழில்நுட்ப அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன். அமைச்சரவைக்குள் புதிதாகத் தொழில்துறை அமைச்சராக என்ட்ரி கொடுத்திருக்கிறார் டி.ஆர்.பி.ராஜா. புதிய நிதியமைச்சராக நியமனமாகியிருக்கிறார் தங்கம் தென்னரசு. அமைச்சரவை மாற்றம் ஒரு பக்கம் இருந்தாலும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனிடமிருந்து நிதித்துறை பறிக்கப்பட்டிருப்பதுதான் தமிழக அரசியலின் ஹாட் டாப்பிக்
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோவில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனான அமைச்சர் உதயநிதியும், மருமகனான சபரீசனும் 30,000 கோடி ரூபாய் சேர்த்துவிட்டனர் என்று கூறுவதுபோல் இடம்பெற்றிருக்கிறது. தொடர்ச்சியாகப் பல நாள்களுக்கு இந்த விவகாரம் பற்றி எரிந்த நிலையில், அமைச்சரவை மாற்றம் தொடர்பாகவும் நிதியமைச்சர் பி.டி.ஆரின் துறை மாற்றம் செய்யப்படலாம் என்ற தகவல்கள் கசிந்தன. ஒருவேளை பி.டி.ஆர் நிதியமைச்சர் பதவியிலிருந்து மாற்றப்பட்டால் அவர் சொன்ன குற்றச்சாட்டுகள் உண்மையாகிவிடாதா என்ற கேள்விகள் தி.மு.க சீனியர்கள் மத்தியில் எழுந்துவந்த நிலையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார் பி.டி.ஆர். அவர் வசமிருந்த நிதித்துறை தற்போது தங்கம் தென்னரசுவிடம் வழங்கப்பட்டிருக்கிறது.
நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள், ”வெறும் வாய்க்கு அவல் கொடுத்த கதையாகிவிடும் பி.டி.ஆர் இலாகா மாற்றம். வருவாய்ப் பற்றாக்குறை 62,000 கோடி ரூபாயிலிருந்து 30,000 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டதற்கு பாராட்டு மழை பொழிந்த நிலையிலும் அவர் மாற்றப்பட்டிருப்பது பெரும் விமர்சனங்களுக்கே வழிவகுக்கிறது. இலாகா மாற்றத்தை வைத்து ஆடியோ விவகாரம் உண்மை என எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்யத் தொடங்கிவிடுவார்கள்” என்கிறார்கள்.
``சமீபத்தில் பி.டி.ஆர் ஆடியோ சர்ச்சையைக் கிளம்பியது. அதில் உதயநிதியும் சபரீசனும் 30,000 கோடி சம்பாதித்ருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது பழனிவேல் தியாகராஜனை நிதித்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து மாற்றியிருக்கின்றனர். இதன் மூலம் இந்த ஆடியோ விவகாரம் மேலும் உண்மையாகிறது” என்கிறார் அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன். |
தொடர்ந்து பேசிய அவர் “தி.மு.க ஆட்சியில் நிதித்துறை செயல்பாடுகள் முறையாக இல்லை, பல்வேறு மக்கள் நலப்பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. ஆகவே, நிதித்துறை எப்படி செயல்படப் போகிறது என ஆயிரம் கேள்விகளும் இருக்கின்றன.
தொழில்துறை அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா பொறுப்பேற்றிருக்கிறார். குடும்ப அரசியலுக்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. மேலும் தி.மு.க-வின் இரண்டாண்டுக்கால ஆட்சி வேதனை ஆட்சி. அதன்மீதான விமர்சனங்களை மறைத்திடவே இந்த அமைச்சரவை மாற்றம் என அ.தி.மு.க கருதுகிறது. மேலும், புகார்கள் அதிகம் எழுந்திருப்பதால் நாசர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமியர்களின் பாதுகாவலர் எனப் பேசிவரும் தி.மு.க, இன்னொரு இஸ்லாமியச் சமூகத்தைச் சார்ந்தவரை அமைச்சராக நியமித்திருக்க வேண்டும்” எனக் கொதிக்கிறார் வைகைச் செல்வன்
இது குறித்து குறித்துப் பேசிய பா.ஜ.க பிரமுகர்கள், “பி.டி.ஆரின் இரண்டு ஆடியோக்கள் வெளியானதே, இந்த அமைச்சரவை மாற்றத்துக்குக் காரணம். தி.மு.க-வினரும் பி.டி.ஆரும் ஆடியோ பொய் என்றுதான் சொல்வார்கள். அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டுமா... குறைந்தபட்சம் தடயவியல்துறை மூலமாகவாவது பொய் என நிரூபிக்கட்டுமே, ஆடியோ விவகாரத்தால்தான் நிதியமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன் பதவியிறக்கப்பட்டிருப்பதாகவே பார்க்கிறோம்” என்கிறார்கள்
இது குறித்து விளக்கம் கேட்க தி.மு.க செய்தித் தொடர்புச் செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம், “அமைச்சரவை மாற்றம் என்பது முழுக்க முழுக்க மாண்புமிகு முதலமைச்சரின் பிரத்யேக உரிமை. அமைச்சரவை, இலாகா மாற்றம் தமிழக நலன் மற்றும் வளர்ச்சியை மையப்படுத்தியதே தவிர எந்த அரசியல் காரணங்களுக்கும் இடமில்லை.
பி.டி.ஆர் ஆடியோ வெட்டி ஒட்டப்பட்ட ஒன்று, அது பொய் என அவரே தெளிவுபடுத்தியிருக்கிறார். அது மெய் என எவராவது நிரூபித்திருக்கின்றனரா... சரி ஒருவேளை பி.டி.ஆரின் ஆடியோவுக்காக இந்த நடவடிக்கை என்றால் அவர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டிருப்பாரே... மாறாக தகவல் தொழில்நுட்பத்துறை வழங்கப்பட்டிருக்கிறது. தகவல் தொழில்நுட்பத்துறைக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது, தமிழ்நாட்டில் தொழில்நுட்பத்துறையை வளர்த்திடவும் மேம்படுத்திடவும்தான் அவருக்குத் தகவல் தொழில்நுட்பத்துறை வழங்கப்பட்டிருக்கிறது. அதில் அவர் நல்ல அனுபவம் பெற்றவரும் கூட. எதிர்க்கட்சிகள் தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்வதற்காக அவதூறான விஷயங்களைப் பரப்புகிறார்கள்” என்கிறார் அவர்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1