by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
Page 1 of 4 • 1, 2, 3, 4
'மோடி' பெயர் குறித்த விமர்சனம்: ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம் |
4 ஆண்டுகள் முன்பு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு 30 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று மனுதாரரின் வழக்கறிஞர் கோரியிருந்தார்.
இந்த வழக்கு, 2019ஆம் ஆண்டில் மோடி குடும்பப் பெயர் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துகளுடன் தொடர்புடையது. "எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப்பெயர் இருப்பது எப்படி" என்று ராகுல் காந்தி பேசியிருந்தார்.
வியாழனன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேரில் ஆஜராகி இருந்தார். விசாரணையின்போது, எந்த சமூகத்தையும் தனது பேச்சு மூலம் புண்படுத்த விரும்பவில்லை என்று ராகுல் காந்தி கூறியதாக பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரது வழக்கறிஞர்கள் குழு தெரிவித்தது.
தண்டனை அறிவிக்கப்பட்டதும், "என் மதம் சத்தியம் மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது, சத்தியம் என் கடவுள், அகிம்சை அதை அடைவதற்கான வழிமுறை." என்ற மகாத்மா காந்தியின் கருத்தை ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
ராகுல் காந்தி என்ன பேசினார்? இந்த வழக்கில் பின்னணி?
2019ம் ஆண்டு பொதுத்தேர்தல் சமயத்தில் ஏப்ரல் மாதம், கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோதியை கடுமையாக விமர்சித்துப் பேசினார். விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்ட எளிய மக்களின் பணத்தை திருடி நீரவ் மோதி, லலித் மோதி, முகுல் ஷோக்சி, விஜய் மல்லையாவுக்கு நரேந்திர மோதி வழங்குவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியதாக தி இந்து செய்தி வெளியிட்டது.
"எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. அதெப்படி அனைத்து திருடர்களுக்கும் மோதி என்ற துணைப் பெயர் இருக்கிறது எனத் தெரியவில்லை," என ராகுல் காந்தி பேசியதாக செய்திகள் வெளிவந்தன. |
இந்த விவகாரத்தில் அப்போதே ராகுல் காந்திக்கு பாஜக தரப்பில் இருந்து கண்டங்களும் எழுந்தன
ராகுல் பேசிய கருத்துகளுக்காக குஜராத் முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோதி வழக்கு தொடுத்தார். தனது வாதத்தை பதிவு செய்வதற்காக 2021 அக்டோபர் மாதம் சூரத் நீதிமன்றத்தில் ராகுல் ஆஜரானார்.
இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த சூரத் மாவட்ட நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஹெ.ஹெ. வர்மா மார்ச் 23-ம் தேதி தீர்ப்பளிப்பதாக கடந்த வாரம் தெரிவித்தார். இதை ராகுல் காந்தி வழக்கறிஞர் பிடிஐ செய்தி முகமையிடம் உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில், சூரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்காக இன்று ராகுல்காந்தி நேரில் ஆஜராஜானர்.
நான்கு ஆண்டுகளாக நீடித்து வந்த கிரிமினல் அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். மேலும்,
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499 மற்றும் 500-ன் படி ராகுல் காந்தி அதிகபட்ச தண்டனையான 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 15,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார் |
அதே சமயம் அவருக்கு உடனடியாக பிணை வழங்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் தனக்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை என்ற தனது தரப்பு விளக்கத்தின்போது ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
தண்டனை விவரம் அறிவிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மனுதாரர் பூர்ணேஷ் மோடி, ` இந்த முடிவை மனதார வரவேற்கிறோம். இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறீர்களா என்பது கேள்வியல்ல. இது சமூக இயக்கம் சார்ந்த விவகாரம். மேலும் சமூகம், சாதி போன்றவற்றுக்கு எதிராக எந்த கருத்தையும் கூறக் கூடாது. வேறு எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.
ரூ.10000 பிணையில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. எம்பியாக இருப்பதாக தற்போதைய சூழலில் ராகுல் காந்திக்கு எவ்வித சிக்கலும் இல்லை. தீர்ப்பை எதிர்ப்பு மேல்முறையீடு செய்ய அவர்களுக்கு 30 நாட்கள் அவகாசம் உள்ளது.
ராகுல் காந்தியின் தலைவிதி; அவருக்கே சிக்கலாக வந்த அவர் கிழித்த மன்மோகன் அரசின் அவசரச் சட்டம்
கிரிமினல் அவதூறு வழக்கில் குற்றவாளியாக சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி “உடனடி தகுதி நீக்கத்தை” சந்திக்க நேரிடும். ஜூலை 10, 2013 இன் முக்கிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, தண்டனை பெற்ற எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் இந்திய உச்ச நீதிமன்றம் வரையிலான அனைத்து நீதித்துறை தீர்வுகளும் கிடைக்கும் வரை தங்கள் பதவிகளைத் தக்கவைக்க அனுமதிக்கும் முந்தைய நிலைப்பாட்டை மறுத்தது.
அந்த நேரத்தில் ஆட்சியில் இருந்த மன்மோகன் சிங் அரசாங்கம் தீர்ப்புக்கு எதிராக ஒரு அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்தது, ஆனால் அதற்கு எதிராக ராகுல் காந்தி அவசரச் சட்டத்தை கிழித்த பிரபலமான சம்பவம் உட்பட, ராகுல் காந்தி மற்றும் பொதுமக்கள் தரப்பில் கண்டனம் எழுந்ததால், அரசாங்கம் அவசரச் சட்டத்தை திரும்பப் பெற்றது.
லில்லி தாமஸ் vs யூனியன் ஆஃப் இந்தியா வழக்கில் தான் உச்ச நீதிமன்றம், “குற்றம் செய்து குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி.க்கு உடனடியாக அவையின் உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும்” என்று தீர்ப்பளித்தது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் தண்டனையை “அரசியலமைப்பிற்கு எதிரானது” என்று மூன்று மாதங்களுக்கு மேல்முறையீடு செய்ய அனுமதிக்கும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8(4) ஐத் தாக்கியது.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, UPA அரசாங்கம் இந்த உத்தரவை மறுக்கும் ஒரு அவசரச் சட்டத்தை இயற்றியது. கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், RJD கட்சியின் தலைவரும், காங்கிரஸின் கூட்டாளியுமான லாலு பிரசாத்தை தகுதி நீக்கம் செய்வதிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டது. மறுபுறம், மூத்த காங்கிரஸ் தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான ரஷித் மசூத், ஏற்கனவே ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு, உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
பா.ஜ.க மற்றும் இடதுசாரிகள் உட்பட அப்போதைய எதிர்க்கட்சிகள் மன்மோகன் சிங் அரசாங்கத்தையும் காங்கிரஸையும் இந்த அவசரச் சட்டம் தொடர்பாக கடுமையாக விமர்சித்தன, இந்த அவசரச் சட்டம் தண்டனை பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களைப் பாதுகாப்பதாகக் குற்றம் சாட்டின.
அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 27 அன்று, டெல்லியில் நடந்த கட்சியின் செய்தியாளர் நிகழ்வில் ராகுல் காந்தி ஆச்சரியமான மற்றும் வியத்தகு முறையில் கருத்துக்களைத் தெரிவித்தார். அங்கு, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்திய ராகுல் காந்தி, இந்த அவசரச் சட்டத்திற்காக UPA அரசாங்கத்தை பகிரங்கமாக சாடினார், இது ஒரு “முழு முட்டாள்தனம்” என்றும், “கிழித்து எறியப்பட வேண்டும்” என்றும் கூறினார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, “உள்ளே என்ன நடக்கிறது என்பதை நான் உங்களுக்கு சொல்கிறேன். அரசியல் காரணங்களுக்காக நாம் இதை [ஒரு அவசரச் சட்டம்] கொண்டு வர வேண்டும். எல்லோரும் இதைச் செய்கிறார்கள். காங்கிரஸ் கட்சி இதை செய்கிறது, பா.ஜ.க இதை செய்கிறது, ஜனதா தளம் செய்கிறது, சமாஜ்வாடி இதை செய்கிறது, எல்லோரும் இதைத்தான் செய்கிறார்கள். இந்த முட்டாள்தனத்தை நிறுத்த ஒரு நேரம் இருக்கிறது,” என்று கூறினார்.
மேலும், “இந்த நாட்டில் ஊழலுக்கு எதிராக நாம் உண்மையில் போராட விரும்பினால், அது நாமாக இருந்தாலும் சரி, காங்கிரஸாக இருந்தாலும் சரி, பா.ஜ.க.,வாக இருந்தாலும் சரி, என்னுடைய கட்சி மற்றும் பிற அனைத்து அரசியல் கட்சிகளும் இதுபோன்ற சமரசங்களை நிறுத்த வேண்டிய நேரம் இது, இந்த சிறிய சமரசங்களை நாம் தொடர முடியாது என்று நான் உணர்கிறேன்… காங்கிரஸ் கட்சி என்ன செய்கிறது என்பதில் எனக்கு ஆர்வம் உள்ளது, நமது அரசாங்கம் என்ன செய்கிறது என்பதில் எனக்கு ஆர்வம் உள்ளது, மேலும் இந்த அவசரச் சட்டத்தைப் பொருத்தவரை நமது அரசாங்கம் செய்தது தவறு என்று தனிப்பட்ட முறையில் உணர்கிறேன்,” என்று கூறினார்.
காங்கிரஸ் வட்டாரங்கள் அந்த நேரத்தில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், UPA அரசாங்கத்தின் “கவனிக்கப்படும் குறைபாடுகள் மற்றும் கமிஷன்களில்” இருந்து விலகி இருக்க ராகுல் காந்தி முயற்சிப்பதாகக் கூறியது. மேலும், 2014 தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே உள்ள நிலையில், 2ஜி ஊழல், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் போன்ற பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுடன் அரசு போராடி வரும் நிலையில், அவர் தார்மீக உயர்நிலையை எடுத்துக்கொள்வது கட்சி “சுத்தமான இமேஜுடன்” வாக்காளர்களிடம் செல்ல உதவும் என்று ராகுல் காந்தி நம்புவதாகவும்” அவர்கள் தெரிவித்தனர்.
ஆனால், முடிவு எதிர்மாறாக இருந்தது. மன்மோகன் சிங் அமெரிக்காவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருந்த நேரத்தில் நடந்த இந்தச் சம்பவம், பிரதமரின் அதிகாரத்திற்கு அடியாகக் காணப்பட்டது மற்றும் அரசாங்கமும் கட்சியும் வெவ்வேறு திசைகளில் இழுக்கப்படுவதற்கான அறிகுறியாகக் காணப்பட்டது.
இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே பிரதமருக்கு ராகுல் காந்தி ஒரு கடிதம் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது, அதில் தனது கருத்துக்கள் “உத்வேகத்தின் பேரில் செய்யப்பட்டவை” ஆனால் “நான் கூறியதை நான் உறுதியாக நம்புகிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
ராகுல் காந்தியின் கோபத்திற்கு ஒரு நாள் முன்பு, பா.ஜ.க தலைவர்கள் எல்.கே அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லி ஆகியோர் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து அவசரச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மனு அளித்தனர். அப்போது சட்ட அமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஆகியோரை வரவழைத்த குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்றம் அவசரச் சட்டத்தை ரத்து செய்தால் அரசாங்கம் என்ன செய்யத் திட்டமிட்டுள்ளது என்று கேட்டிருந்தார். அமைச்சர்கள் கூட்டத்தில் இருந்து திரும்பி வந்து, அமைச்சரவை அவசரச் சட்டத்தை மறுபரிசீலனை செய்து வாபஸ் பெற வேண்டுமா என்று ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது.
இது தொடர்பாக பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம் அனுப்பியதாக நம்பப்படுகிறது, ஆனால் அவர் மன்மோகன் சிங்கின் பதிலுக்காக காத்திருக்காமல் தனது வியத்தகு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.
பின்னர், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவைச் சந்திப்பதற்கு சற்று முன்பு வெளியிட்ட அறிக்கையில், மன்மோகன் சிங், “மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் தொடர்பான அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட அவசரச் சட்டம் பொது விவாதத்திற்குரிய விஷயமாக உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவரும் எனக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த விஷயங்கள் அனைத்தையும் அரசாங்கம் எடுத்துக் கொண்டுள்ளது. நான் இந்தியா திரும்பியதும் அமைச்சரவையில் உரிய ஆலோசனைக்குப் பிறகு, எழுப்பப்பட்ட பிரச்சினைகள் பரிசீலிக்கப்படும்,” என்று கூறினார்.
அக்டோபர் 2 ஆம் தேதி, அவர் இந்தியா திரும்பிய பிறகு, மன்மோகன் சிங் ராகுல் காந்தியைச் சந்தித்தார், காங்கிரஸ் செயற் குழுவின் கூட்டத்திற்கு முன், அவசரச் சட்டத்தைத் திரும்பப் பெறுவது நல்லது என்று முடிவு செய்யப்பட்டது.
மறுநாள் அவசரச் சட்டத்தை அரசாங்கம் திரும்பப் பெற்றது.
சத்தியமே என் கடவுள், அதை அடைய அகிம்சை வழி; நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு ராகுல் ட்வீட்
’மோடி குடும்பப் பெயர்’ தொடர்பான அவதூறு வழக்கில் வியாழனன்று குஜராத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இந்நிலையில், மகாத்மா காந்தியின் சத்தியம் மற்றும் அகிம்சை குறித்து ராகுல் ட்வீட்டில் மேற்கோள் காட்டியுள்ளார்.
“எனது மதம் உண்மை மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது. சத்தியமே என் கடவுள், அதை அடைய அகிம்சை வழி. – மகாத்மா காந்தி,” என நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு ராகுல் காந்தி, இந்தியில் ஒரு ட்வீட்டில் கூறினார்.
मेरा धर्म सत्य और अहिंसा पर आधारित है। सत्य मेरा भगवान है, अहिंसा उसे पाने का साधन। – महात्मा गांधी — Rahul Gandhi (@RahulGandhi) March 23, 2023 |
ராகுல் காந்தி எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்ய முடியுமா?
ஒரு குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட எம்.பி ஒருவரை தகுதி நீக்கம் செய்வது இரண்டு நிகழ்வுகளில் நிகழலாம்.
முதலாவதாக, 1951 ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8(1) இல் அவர் தண்டனை பெற்றிருந்தால் பதவி பறிக்கப்படும்.
இரண்டு குழுக்களிடையே பகையை ஊக்குவித்தல், லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் தேர்தல் குற்றங்கள் இந்தப் பட்டியலில் வரும். எனினும், அவதூறு வழக்குகள் வராது.
இரண்டாவதாக, சட்டமியற்றுபவர் வேறு ஏதேனும் குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டாலும், இரண்டு வருடங்கள் அல்லது அதற்கும் அதிகமாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால். RPA இன் பிரிவு 8(3) ஒரு எம்.பி., குற்றம் நிரூபிக்கப்பட்டால் தகுதி நீக்கம் செய்யப்படலாம்.
தண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தகுதி நீக்கத்தை எவ்வாறு பாதிக்கும்?
பிரிவு 8(4) மேலும் தகுதி நீக்கம் என்பது தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து “மூன்று மாதங்கள் கடந்த பிறகு” மட்டுமே நடைமுறைக்கு வரும் என்றும் கூறுகிறது. அதற்குள் காந்தி உயர்நீதிமன்றத்தில் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம்.
2013 ஆம் ஆண்டு ‘லில்லி தாமஸ் எதிராக யூனியன் ஆஃப் இந்தியா’ வழக்கில், உச்ச நீதிமன்றம் RPA இன் பிரிவு 8(4) ஐ அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று ரத்து செய்தது.
அதாவது மேல்முறையீட்டை தாக்கல் செய்வது மட்டும் போதாது, ஆனால் தண்டனை பெற்ற எம்.பி விசாரணை நீதிமன்றத்தின் தண்டனைக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட தடை உத்தரவைப் பெற வேண்டும்.
மேலும், குறிப்பிடத்தக்க வகையில், அந்தத் தடை என்பது, CrPC பிரிவு 389 இன் கீழ் தண்டனையை நிறுத்தி வைப்பதாக மட்டும் இருக்க முடியாது, ஆனால் தண்டனையை நிறுத்தி வைப்பதாக இருக்க முடியாது.
CrPC இன் பிரிவு 389 இன் கீழ், மேல்முறையீடு நிலுவையில் இருக்கும் போது, ஒரு குற்றவாளியின் தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைநிறுத்தலாம். இது மனுதாரரை ஜாமீனில் விடுவிப்பதற்கு ஒப்பானது.
‘அடக்குமுறைக்கு அடிபணியமாட்டோம்’: ராகுல் காந்தி அவதூறு வழக்கு தீர்ப்புக்கு காங்கிரஸ் பதிலடி
இந்தத் தீர்ப்புக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, எம்பி ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுள்ள பா.ஜ.க., காங்கிரஸ் தலைவரின் கருத்துக்களால் அக்கட்சி பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
2019-ம் ஆண்டு தொடரப்பட்ட குற்றவியல் அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததைத் தொடர்ந்து, அவருடை மோடி குடும்பப்பெயர் குறித்த கருத்துக்களுக்காக, அக்கட்சி அடக்குமுறைக்கு அடிபணியாது என்று கூறியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா பதிவிட்டுள்ள ட்வீட்டில், “பயமுறுத்தும் அதிகாரத்தின் முழு இயந்திரமும், அபாதரம் விதிப்பது, தண்டனை, பாகுபாடுகளை திணிப்பதன் மூலம் ராகுல் காந்தியின் குரலை நசுக்க முயற்சி செய்கிறது என்று கூறினார். “என் சகோதரர் ஒருபோதும் பயந்ததில்லை, பயப்பட மாட்டார். உண்மையைப் பேசி வாழ்பவர், உண்மையைப் பேசுவார், நாட்டு மக்களின் குரலை தொடர்ந்து எழுப்புவோம்” என்று கூறினார்.
ராகுல் காந்தி, மகாத்மா காந்தி கூறியதை மேற்கோள் காட்டி “எனது மதம் உண்மையையும் அகிம்சையையும் அடிப்படையாகக் கொண்டது” என்றார். “உண்மையே என் கடவுள், அகிம்சையே அதை அடைவதற்கான வழி” என்று ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்த தீர்ப்பு வெளியான சில நிமிடங்களுக்குப் பிறகு, நீதிமன்றம் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது. நீதிமன்ற உத்தரவை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தது, காங்கிரஸ் தலைவர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்று கூறியது.
காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் மற்றும் பிற எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள் இந்த தீர்ப்புக்கு எதிராக கடுமையாக பதிலளித்தனர்.
இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று கூறிய மல்லிகார்ஜுன கார்கே, பா.ஜ.க-வை கடுமையாக சாடினார். அவர் ட்விட்டரில், “ஒரு விரலை மற்றவர்களை நோக்கி நீட்டினால் நான்கு விரல்கள் அவர்களை நோக்கியும் நீட்டி இருக்கும்” என்று அவர் ட்விட்டரில் கூறினார்.
ராகுல் காந்தியை ஆதரித்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இது எதிர்க்கட்சிகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சதி என்று குற்றம் சாட்டினார். இதுகுறித்து கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில், “எங்களுக்கு காங்கிரஸுடன் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால், இது போன்ற அவதூறு வழக்கில் ராகுல் காந்தியை சிக்க வைப்பது சரியல்ல… பொது மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்க வேண்டும். நாங்கள் நீதிமன்றத்தை மதிக்கிறோம். ஆனால், தீர்ப்பில் உடன்படவில்லை.” என்று கூறினார்.
சிவசேனா எம்.பி பிரியங்கா சதுர்வேதி, “ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை அதிகம், நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும். எதிர்க்கட்சி தலைவர்களை இடைவிடாமல் குறிவைப்பது கண்டனத்திற்குரியது, இது மக்களுக்காக பேசும் குரல்களை, அரசாங்கத்தை கேள்வி கேட்கும் குரல்களை அமைதிப்படுத்தாது” என்று கூறினார்.
உண்மையைப் பேசியதற்காகவும், சர்வாதிகாரிக்கு எதிராக குரல் எழுப்பியதற்காகவும் ராகுல் காந்தி தண்டிக்கப்படுகிறார் என்று காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் கூறினார். மேலும், அவர் “அநீதிக்கு எதிராக குரல் எழுப்பினால், இ.டி-சி.பி.ஐ, போலீஸ், வழக்கு என அனைவர் மீதும் பாய்கிறது” என்று கூறினார்.
ஆம் ஆத்மியின் ராஜ்யசபா எம்பி ராகவ் சதா கூறுகையில், எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்தின் அடிப்படையாகும், கருத்து வேறுபாடுகளை ஒடுக்கக்கூடாது. “ராகுல் காந்திக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பில் மரியாதையுடன் உடன்படவில்லை. எதிர்க்கட்சியே ஜனநாயகத்தின் அடிப்படை. கருத்து வேறுபாடுகளை அடக்கக் கூடாது. இந்தியா ஒரு வலுவான விமர்சன பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இதை ஒரே சித்தாந்தம், ஒரே கட்சி, ஒரே தலைவர் என்ற கண்ணோட்டத்தில் குறைப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது, ஜனநாயக விரோதமானது” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
இதற்கிடையில், காங்கிரஸைத் தாக்கிய மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, ராகுல் காந்தியின் கருத்து காங்கிரஸுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார். “ராகுல் காந்தி என்ன சொன்னாலும் அது தீங்கு விளைவிக்கும். அது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது தேசத்திற்கு நல்லதல்ல,” என்று கிரண் ரிஜிஜு செய்தியாளர்களிடம் கூறினார், என்று பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இதில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
குஜராத்தின் முன்னாள் அமைச்சரும், சூரத் மேற்கு பா.ஜ.க எம்.எல்.ஏ-வுமான பூர்ணேஷ் மோடி தாக்கல் செய்த வழக்கு, ஏப்ரல் 13, 2019-ல் கர்நாடகாவின் கோலாரில் நடந்த மக்களவைத் தேர்தல் பேரணியில், “நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களும் மோடி என ஏன் பெயர் வைத்திருக்கிறார்கள்?” என்று பேசினார்.
இந்த உத்தரவை தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எச் எச் வர்மா பிறப்பித்தார். வியாழக்கிழமை பிற்பகல் பல தேசிய மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி நீதிமன்ற அறைக்குள் இருந்தார். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சூரத் போலீசார் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியுள்ளனர்.
சென்னை செல்வதற்காக, கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் அவருடன் வந்த தஞ்சாவூர் வடக்கு மாவட்டத் தலைவர் டி.ஆர்.லோகநாதன், மாநகரத் தலைவர் மிர்சாவூதீன், மாநிலத் துணைத் தலைவர் ஜி.ராஜேந்திரன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் வி.தியாகராஜன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர், ராகுல் காந்திக்கு நீதிமன்றத்தில் தண்டனை விதித்துள்ளதை அறிந்ததும், அந்த தீர்ப்பைக் கண்டித்து முன்னறிவிப்பின்றி, திருச்சியிலிருந்து சென்னை செல்லும் சோழன் விரைவு ரயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து கண்டன முழக்கமிட்டனர்.
இதனையறிந்த ரயில்வே போலீஸார், அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதின் பேரில், ரயில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர், அதே ரயிலில் காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, சென்னைக்கு சென்றார். இதனால் அங்கு சுமார் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனையால் பறிபோன எம்பி பதவி
2019ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது, ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக அவர் மீது சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் நேற்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், ராகுல் காந்தி குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு 30 நாட்கள் அவகாசமும் உடனடியாக கைது செய்யப்படுவதைத் தவிர்க்கும் வகையில் அவருக்கு ஜாமீனும் வழங்கியது சூரத் நீதிமன்றம்.
இதைத் தொடர்ந்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பையடுத்து, வயநாடு மக்களவை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ராகுல் காந்தியைத் தகுதிநீக்கம் செய்து மக்களவை சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாகவும் அடுத்த கட்டமாக ராகுல் காந்தி என்ன செய்ய முடியும் என சட்ட வல்லுநர்கள் சில விளக்கங்களை அளித்துள்ளனர்.
எப்படி தகுதிநீக்கம் செய்யலாம்?
எம்.பி. எம்.எல்.ஏ-க்களின் பதவி பொதுவாக மூன்று முறைகளில் பறிக்கப்படும்.
முதலாவதாக, பதவியில் உள்ள ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளில் இருப்பது, மனநிலை சரியில்லாமல் இருப்பது, இந்திய குடியுரிமை இல்லாமல் இருப்பது போன்ற ஏதேனும் ஒரு காரணத்திற்காக தகுதிநீக்கம் செய்யப்படுவார்.
இரண்டாவது முறை: கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் மூலம், பிற கட்சிகளுக்கு மாறும் மக்கள் பிரதிநிதிகள் மீது தகுதிநீக்கம் கொண்டு வருவது.
மூன்றாவது முறை: மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மூலமாக தகுதி நீக்கம் செய்யப்படுவது.
இந்தச் சட்டத்தில் உள்ள உட்பிரிவுகள், எதற்காக, எப்படி தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951(Representation of the People Act) பிரிவு 8-இன் கீழ், பதவியில் இருக்கும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள்(MPs), சட்டப்பேரவை உறுப்பினர்(MLA), சட்டமேலவை உறுப்பினர்(MLC) ஆகியோர் மீது கிரிமினல் வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து, 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்துக்கு தண்டிக்கப்பட்டால் அவர்களின் பதவி தகுதிநீக்கம் செய்யப்படும் என குறிப்பிடுகிறது.
பிரிவு 9இன் கீழ், ஊழல், அரசாங்க ஒப்பந்தங்களில் தலையிடுவது போன்ற காரணங்களுக்காக தகுதிநீக்கம் செய்யப்படுவது.
பிரிவு 10, தேர்தல் செலவுக் கணக்கைத் தாக்கல் செய்யத் தவறினால் தகுதி நீக்கம் செய்வது பற்றிக் கூறுகிறது.
பிரிவு 11, ஊழல் நடைமுறைகளுக்கான தகுதி நீக்கம் பற்றி கையாள்கிறது.
பிரிவு 8-இன் கீழ் தகுதிநீக்கம் செய்யப்படும் நபர்கள், தண்டனைக் காலம் நீங்கலாக 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.
'குற்றவாளி' என தீர்ப்பு : அடுத்தது என்ன?
ராகுல் காந்தியின் வழக்கு தொடர்ப்பான தீர்ப்பு தொடர்பாக பிபிசியிடம் பேசிய முன்னாள் நீதிபதி சந்துரு, சூரத் நீதிமன்ற தீர்ப்பில் ராகுல் காந்தி குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதனால் மேல்முறையீட்டு நீதிமன்றம் 'குற்றவாளி' என்ற தீர்ப்பை நிறுத்தி வைக்கும் வரை அவரைத் தகுதி நீக்கம் செய்ய முடியும் என நீதிபதி சந்துரு தெரிவித்தார்.
ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் பேசும் போது, சட்டப்படி தீர்ப்பு வெளியான அடுத்த நிமிடத்தில் இருந்து அவரின் தகுதிநீக்கம் அமலுக்கு வருகிறது எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 2013ஆம் ஆண்டு லில்லி தாமஸ் வழக்கில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8(4) அரசியல் சாசனத்திற்கு விரோதமாக இருக்கிறது என உச்ச நீதிமன்றம் கூறியது.
இந்தத் தீர்ப்பின் மூலமாக இயல்பிலேயே அவரின் தகுதிநீக்கம் உறுதியாகிறது. தீர்ப்பின் நகலைப் பெற்றதன் அடிப்படையில், மக்களவை சபாநாயகர் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறார்.
ராகுல் காந்தி இதை எதிர்த்து மேல் முறையீட்டு நீதிமன்றம் செல்வதுதான் அவருக்கான வாய்ப்பு. மேல்முறையீட்டில் தண்டனையையும், 'குற்றவாளி' என்ற தீர்ப்பையும் நிறுத்தி வைக்க முறையீடு செய்ய வேண்டும்.
இதுபோன்ற வழக்குகளில், பொதுவாக நீதிமன்றம் குற்றவாளி என்று அளித்த தீர்ப்பை நிறுத்தி வைக்காது, மாறாக தண்டனை மீது இடைக்காலத் தடையை விதித்துள்ளது என்று குறிப்பிட்டார்.
என்ன சட்ட சிக்கல்?
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 8(4), தகுதிநீக்கம் செய்யப்படும் நபர் தீர்ப்பு வெளியான நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வரை தகுதிநீக்கம் செய்யக்கூடாது எனக் குறிப்பிடுகிறது.
ஆனால் லில்லி தாமஸ் vs யூனியன் ஆஃப் இந்தியா வழக்கில், 2013ஆம் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 8(4) அரசியல் சாசனத்திற்கு எதிரானது என தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பின் அடிப்படையில் 3 மாத காலம் வரை ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்படாது என்ற உத்தரவாதம் கிடையாது.
சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை 'விநோதமானது' என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் குறிப்பிட்டார். நீதிமன்றம் தண்டனையை மட்டும் நிறுத்தி வைத்தால் அது போதுமானதாக இருக்காது. குற்றவாளி என அளித்த தீர்ப்பையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்றார்.
உச்ச நீதிமன்றம் லில்லி தாமஸ், லோக் பிரகாரி வழக்குகளில் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தண்டனை அறிவிக்கப்பட்ட உடனே தகுதி நீக்க காலம் தொடங்குகிறது. ஆனால் தீர்ப்பின் அடிப்படையில் தானாக தகுதி நீக்கம் செய்யப்பட மாட்டார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8(3)-இல் தகுதிநீக்கம் செய்யப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது, மாறாக தகுதியற்றவர் என குறிப்பிடப்படவில்லை.
அதனால் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய முடியும். ஆனால் மேல்முறையீட்டு நீதிமன்றம், தண்டனையை நிறுத்தி வைத்தால், தகுதி நீக்கமும் நிறுத்தப்படும் என்று மக்களவை முன்னாள் செயலாளரும், அரசியல் சட்ட நிபுணருமான பி.டி.டி. ஆச்சாரி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு தெரிவித்துள்ளார்.
தகுதிநீக்கம் செய்யப்பட்டால் அடுத்து என்ன?
ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக அவர் மக்களவை உறுப்பினராக இருந்த வயநாடு தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வியும் எழுகிறது.
இது தொடர்பாக பேசிய முன்னாள் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமி, ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் உடனடியாக தேர்தல் நடக்காது, அதற்கு சில மாதங்கள் ஆகும் என்றார்.
தற்போது ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தீர்ப்பில் இரண்டு முக்கிய அம்சங்களை நாம் பார்க்க வேண்டும். ஒன்று அவருக்கு வழங்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் தண்டனை, மற்றொன்று அவர் 'குற்றவாளி' என நீதிமன்றம் உறுதி செய்து இருக்கிறது. குற்றவாளி என ராகுல் காந்தி உறுதி செய்யப்பட்டு 2 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதனால் அவரை நேரடியாக தகுதிநீக்கம் செய்ய முடியும். ஆனால் இடைக்கால நிவாரணமாக மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு சென்று இந்த தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரலாம்.
அதனால் இந்த விவகாரத்தில் உடனடியாக தேர்தல் ஆணையத்திற்கு வேலை எதுவும் இருக்காது. சபாநாயகர் எப்போது ராகுல் காந்தியின் தொகுதி காலியானதாக அறிவிக்கிறாரோ, அதுவரை மறுதேர்தல் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளிவராது என கோபால்சாமி தெரிவித்தார்.
சட்டத்தின் அடிப்படையில் தான் ராகுல் காந்தி தகுதி நீக்கம்: அண்ணாமலை விளக்கம்
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சட்டத்தின் அடிப்படையில் தான் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார். சட்டத்தின் அடிப்படையில் தான் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர் சட்டத்தின் அடிப்படையில் எம்பி பதவி தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்று தெரிவித்தார்
மேலும் சாதாரண மனிதனுக்கு என்ன சட்டம் பொருந்துமோ அதே தான் ராகுல் காந்திக்கும் பொருந்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இந்த கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்
ராகுல் காந்தி 8 ஆண்டு தேர்தலில் போட்டியிட முடியாது: காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி..!
காங்கிரஸ் கட்சி எம்பி ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துள்ளதை அடுத்து அவர் எட்டு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற தகவல் காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தண்டனை காலமான இரண்டு ஆண்டுகள் மற்றும் அதற்குப் பிறகு ஆறு ஆண்டுகள் என மொத்தம் எட்டு ஆண்டுகள் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என கூறப்படுகிறது.
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளது காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவர் எம்பி ஆக இருந்தால் வயநாடு தொகுதி காலியானது என அறிவிக்கப்பட்டு அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்திற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ராகுல் காந்தி தகுதியிழப்பு ஜனநாயக படுகொலைக்கு சமமானது என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தின் புதிய வீழ்ச்சியை கண்டு உள்ளோம் என்றும் பிரதமர் மோடியின் புதிய இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பாஜகவின் பிரதான இலக்காக மாறி உள்ளது என்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பாலாஜி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்திக்கு முன் பைசல், ஆசம், லாலு… இந்த வழக்குகளில் நீதிமன்றத் தீர்ப்புகள் என்ன?
2019 அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் தண்டனை வழங்கியது, உயர் நீதிமன்றம் அவரது தண்டனையை நிறுத்தி வைக்கும் வரை, அவர் மக்களவையில் இருந்து உடனடியாக தகுதி நீக்கம் செய்ய வழி வகுத்தது. சமீப காலங்களில், இதே போன்ற தண்டனைகள் தகுதியிழப்புகளைத் தூண்டின. இந்த வழக்குகளில் நீதிமன்றத் தீர்ப்புகள் என்ன என்பதைப் பாருங்கள்:
முகமது பைசல், எம்.பி., லட்சத்தீவு
கொலை முயற்சி வழக்கில் லட்சத்தீவில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஜனவரி 13 அன்று, மக்களவைச் செயலகம் லட்சத்தீவு எம்பி முகமது பைசலை தகுதி நீக்கம் செய்து அறிவிப்பை வெளியிட்டது.
இருப்பினும், ஜனவரி 25 அன்று, கேரள உயர்நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்தது. இதனால், மக்களவைத் தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவிருந்த இடைத்தேர்தலை நிறுத்தி வைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.
அசம் கான், எம்எல்ஏ, ராம்பூர்
அக்டோபர் 27, 2022 அன்று, கூடுதல் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட்டின் ராம்பூர் எம்.பி-எம்.எல்.ஏ நீதிமன்றம், 2019 வெறுப்பு பேச்சு வழக்கில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் ஆசம் கானை குற்றவாளி என்று அறிவித்து அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. ஒரு நாள் கழித்து, உத்தர பிரதேச சட்டமன்ற செயலகம் அசம் கானை சபையில் இருந்து தகுதி நீக்கம் செய்வதாக அறிவித்தது.
லாலு பிரசாத், எம்.பி., சரண்
அக்டோபர் 3, 2013 அன்று பல கோடி ரூபாய் மதிப்பிலான கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் ராஞ்சியில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் லாலு பிரசாத்துக்கு தண்டனை வழங்கியது. இதைத் தொடர்ந்து, ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத், தனது மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக நாடாளுமன்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
விக்ரம் சைனி, எம்எல்ஏ, கட்டௌலி
2013 முசாபர்நகர் கலவரத்தில் ஈடுபட்டதற்காக, முசாபர்நகரில் உள்ள சிறப்பு எம்பி-எம்எல்ஏ நீதிமன்றம், பாஜக எம்எல்ஏ விக்ரம் சைனிக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு,
உத்தர பிரதேச சட்டமன்றம் நவம்பர் 7, 2022 தேதி அவரது கட்டௌலி சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டது.
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
» ராகுல் காந்திக்கு துணைவி கிடைக்க வேண்டும் - பிரார்த்தனை செய்த சாத்வி பிராச்சி
» வெங்காயம் விளைவது மண்ணுக்கு அடியிலா? அல்லது வெளியிலா? என்பது கூட ராகுல் காந்திக்கு தெரியாது : ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்..!!
» மனைவியை 16 ஆண்டுகள் சிறை வைத்த கணவர்
» ராகுல் காந்திக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்