by ayyasamy ram Today at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am
» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
mruthun | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
Srinivasan23 |
'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
Page 3 of 4 • 1, 2, 3, 4
'மோடி' பெயர் குறித்த விமர்சனம்: ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம் |
4 ஆண்டுகள் முன்பு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு 30 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று மனுதாரரின் வழக்கறிஞர் கோரியிருந்தார்.
இந்த வழக்கு, 2019ஆம் ஆண்டில் மோடி குடும்பப் பெயர் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துகளுடன் தொடர்புடையது. "எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப்பெயர் இருப்பது எப்படி" என்று ராகுல் காந்தி பேசியிருந்தார்.
வியாழனன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேரில் ஆஜராகி இருந்தார். விசாரணையின்போது, எந்த சமூகத்தையும் தனது பேச்சு மூலம் புண்படுத்த விரும்பவில்லை என்று ராகுல் காந்தி கூறியதாக பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரது வழக்கறிஞர்கள் குழு தெரிவித்தது.
தண்டனை அறிவிக்கப்பட்டதும், "என் மதம் சத்தியம் மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது, சத்தியம் என் கடவுள், அகிம்சை அதை அடைவதற்கான வழிமுறை." என்ற மகாத்மா காந்தியின் கருத்தை ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
ராகுல் காந்தி என்ன பேசினார்? இந்த வழக்கில் பின்னணி?
2019ம் ஆண்டு பொதுத்தேர்தல் சமயத்தில் ஏப்ரல் மாதம், கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோதியை கடுமையாக விமர்சித்துப் பேசினார். விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்ட எளிய மக்களின் பணத்தை திருடி நீரவ் மோதி, லலித் மோதி, முகுல் ஷோக்சி, விஜய் மல்லையாவுக்கு நரேந்திர மோதி வழங்குவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியதாக தி இந்து செய்தி வெளியிட்டது.
"எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. அதெப்படி அனைத்து திருடர்களுக்கும் மோதி என்ற துணைப் பெயர் இருக்கிறது எனத் தெரியவில்லை," என ராகுல் காந்தி பேசியதாக செய்திகள் வெளிவந்தன. |
இந்த விவகாரத்தில் அப்போதே ராகுல் காந்திக்கு பாஜக தரப்பில் இருந்து கண்டங்களும் எழுந்தன
ராகுல் பேசிய கருத்துகளுக்காக குஜராத் முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோதி வழக்கு தொடுத்தார். தனது வாதத்தை பதிவு செய்வதற்காக 2021 அக்டோபர் மாதம் சூரத் நீதிமன்றத்தில் ராகுல் ஆஜரானார்.
இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த சூரத் மாவட்ட நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஹெ.ஹெ. வர்மா மார்ச் 23-ம் தேதி தீர்ப்பளிப்பதாக கடந்த வாரம் தெரிவித்தார். இதை ராகுல் காந்தி வழக்கறிஞர் பிடிஐ செய்தி முகமையிடம் உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில், சூரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்காக இன்று ராகுல்காந்தி நேரில் ஆஜராஜானர்.
நான்கு ஆண்டுகளாக நீடித்து வந்த கிரிமினல் அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். மேலும்,
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499 மற்றும் 500-ன் படி ராகுல் காந்தி அதிகபட்ச தண்டனையான 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 15,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார் |
அதே சமயம் அவருக்கு உடனடியாக பிணை வழங்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் தனக்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை என்ற தனது தரப்பு விளக்கத்தின்போது ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
தண்டனை விவரம் அறிவிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மனுதாரர் பூர்ணேஷ் மோடி, ` இந்த முடிவை மனதார வரவேற்கிறோம். இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறீர்களா என்பது கேள்வியல்ல. இது சமூக இயக்கம் சார்ந்த விவகாரம். மேலும் சமூகம், சாதி போன்றவற்றுக்கு எதிராக எந்த கருத்தையும் கூறக் கூடாது. வேறு எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.
ரூ.10000 பிணையில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. எம்பியாக இருப்பதாக தற்போதைய சூழலில் ராகுல் காந்திக்கு எவ்வித சிக்கலும் இல்லை. தீர்ப்பை எதிர்ப்பு மேல்முறையீடு செய்ய அவர்களுக்கு 30 நாட்கள் அவகாசம் உள்ளது.
ராகுல் காந்தி தகுதிநீக்கம்: விமர்சனத்தைத் தவிர்த்த அமெரிக்கா
வாஷிங்டன்: ராகுல் காந்தி தகுதிநீக்கம் விவகாரத்தில் இப்போதைக்கு தனிப்பட்ட ரீதியில் விமர்சிக்க முடியாது என்று விலகி நிற்கிறது அமெரிக்கா.
சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க அமெரிக்கா இந்தியாவை ஒரு வலுவான கூட்டாளியாகக் கருதுகிறது. இதனால், இந்தியா - அமெரிக்கா இடையே சில காலமாக நெருக்கமான நல்லுறவு நீடித்துவருகிறது. இந்நிலையில் ராகுல் காந்தி விவகாரத்தில் ஜனநாயகத்தை மதிக்கிறோம் தனிப்பட்ட கருத்து இப்போதைக்கு சொல்ல முடியாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடகாவின் கோலார் பகுதியில் 2019 ஏப்ரல் 13-ம் தேதி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர். நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்?" என்று விமர்சித்திருந்தார்.
இது தொடர்பாக குஜராத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி, சூரத் தலைமை நீதித் துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். சுமார் 4 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரிடம் 'தி இந்து' ஆங்கில நாளிதழ் சார்பில் மின்னஞ்சல் வழியாக கருத்து கேட்கப்பட்டிருந்தது. அதற்கு அனுப்பப்பட்ட பதிலில், "சட்டத்தை நாங்கள் மதிக்கிறோம். எந்தவொரு ஜனநாயக தேசமாக இருந்தாலும் சட்டம் மற்றும் நீதித்துறை சுதந்திரமுமே அதன் மூலக்கல். மற்றபடி இப்போதைக்கு வழக்கு குறித்து நாங்கள் ஏதும் கருத்து தெரிவிக்க முடியாது. இந்தியாவும், அமெரிக்காவும் சில ஜனநாயக மாண்புகளைப் பகிர்ந்து கொண்டுள்ளது. அதை நிலைநிறுத்த அமெரிக்க அதிகாரிகள் எப்போதுமே இந்திய அரசுடன் தொடர்பில் இருக்கின்றனர். இதுதான் அமெரிக்கா - இந்தியா உறவின் அடித்தளம்." என்று அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல; நான் காந்தி - தகுதிநீக்கத்திற்கு பிறகு ராகுல்காந்தி ஆவேச பேட்டி
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: |
இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. பாராளுமன்றத்தில் எந்த ஒரு உறுப்பினராலும் அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூற முடியவில்லை. அதானி விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் பேசிய எனது பேச்சுகள் அனைத்தும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு விட்டன. பாராளுமன்றத்தில் என்னைப்பற்றி தவறான குற்றச்சாட்டுக்களை மத்திய அமைச்சர்கள் கூறியுள்ளனர். பாராளுமன்றத்தில் அதானி விவகாரம் குறித்து பிரதமரை நோக்கி கேள்வி எழுப்பியதில் இருந்து பிரச்சனை தொடங்கியது. தகுதி நீக்கத்தைப்பற்றி எனக்கு கவலை இல்லை.
தகுதி நீக்கத்தால் எனது குரலை ஒடுக்க முடியாது. அதானி பிரச்சனையை திசை திருப்ப நாடகம். பிரதமர் மோடியே நோக்கி 3 கேள்விகளை முன்வைத்தேன். அதானி குழுமத்தில் ரூ.20,000 கோடி முதலீடு செய்த நிறுவனங்கள் யாருடையது, அந்த பணம் யாருடையது? மோடி வெளிநாடு சென்றபோதொல்லாம் அதானி குழுமத்துக்கு தொழில் ஒப்பந்தங்கள் கிடைத்ததை புகைப்பட ஆதாரத்துடன் வெளியிட்டேன். அதானிக்காக விமான நிலையங்களின் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டன. அதானி குழும முறைகேடு விவகாரத்தில் சீனாவை சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு உள்ளது.
பிரதமருக்கும் அதானிக்குமான தொடர்பு குறித்து பாரளுமன்றத்தில் புதிய தகவலை பேசிவிடுவேன் என்பதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளேன். ஒருபோதும்வெளிநாடுகளை இந்திய ஜனநாயகத்தில் தலையிடும்படி நான் கேட்டதில்லை. அரசியல் நீதி என்பது எனது ரத்தத்தில் கலந்துள்ளது. எனது பேச்சு மோடிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகளுக்கு நன்றி. அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன். நாட்டு மக்களின் ஜனநாயகத்திற்காக நான் போராடிக் கொண்டிருக்கிறேன். நான் பாராளுமன்றத்துக்கு உள்ளே இருந்தாலும், வெளியே இருந்தாலும் என் பணியைச் செய்வேன். மன்னிப்பு கேட்பதற்கு நான் சவார்க்கர் இல்லை" இவ்வாறு அவர் கூறினார்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
எப்பிடியும் மேல் முறையீடு செய்வார்கள் காங்கிரஸ் தலைகள்.!
சிறிது வருடங்களுக்கு பிறகு விசாரணைக்கு வருமோ வழக்கு?
ஏற்கனவே மக்கள் சபையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.-MP பதவியும் இல்லை.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
அவகாசம் தருவதை முட்டாள்தனம் என்றவர் ராகுல்: அண்ணாமலை
எம்.பி., எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய 3 மாதம் அவகாசம் தருவதை முட்டாள் தனம் என்றவர் ராகுல் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். |
ராகுலின் எம்.பி பதவி தகுதி நீக்கம் குறித்து, முதல்வர் ஸ்டாலின், ‛ ராகுல் மீதான நடவடிக்கைக்கு கடும் கண்டனம். ராகுலை பார்த்து பா.ஜ., தலைமை பயந்திருக்கிறது என்பது இந்த நடவடிக்கை மூலம் தெரியவந்துள்ளது. எம்.பி.,க்கு கூட கருத்து சொல்லும் ஜனநாயக உரிமை இல்லை என்ற மிரட்டும் தொனியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறியிருந்தார்.
இதற்கு பதலளித்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: எம்.பி., எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய 3 மாதம் அவகாசம் தருவதை முட்டாள் தனம் என்றவர் ராகுல் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை அவமதித்ததற்காக நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஜனநாயகத்தை ஆதரிக்கும் மக்களாக மாறுவேடத்தில் இருக்கும் உங்களைப் போன்ற எதேச்சதிகாரர்களுக்கு என்ன காத்திருக்கிறது என்பதை நாங்கள் நிச்சயமாக அறிவோம். ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் மீது பொய் புகார் கூறியதற்காக கோர்ட்டில் ராகுல் மன்னிப்பு கேட்டார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
ராகுல் காந்தி இவ்வாறு பேசினால், சாலையில் நடமாட முடியாது: முதலமைச்சர் எச்சரிக்கை..!
ராகுல் காந்தி இவ்வாறு தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினால் சாலையில் நடமாட முடியாது என மகாராஷ்டிரா மாநில முதல்வர் எச்சரிக்கை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் காந்தி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் வழக்கு தொடரப்பட்டது என்பதும், இந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ராகுல் காந்திக்கு பல எதிர்க்கட்சி தலைவர்கள் ஆதரவளித்து வரும் நிலையில் மகராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். ராகுல் காந்தி தொடர்ச்சியாக இவ்வாறு பேசினால் சாலையில் நடமாடுவது கடினம் என்றும் ராகுல் காந்தி பிரதமர் மோடியை மட்டும் விமர்சிக்கவில்லை, ஒட்டுமொத்த பிற்பட்ட சமூகத்தையே அவர் அவதூறாக பேசி உள்ளார் என்றும் தெரிவித்தார். மகாராஷ்டிரா சட்டசபையில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே இவ்வாறு பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எம்.பி பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் அரசு பங்களாவை காலி செய்ய ஒரு மாதம் கெடு விதிக்கப்பட்டுள்ளது. |
கடந்த 2019 ஆம் ஆண்டு மோடி பெயரில் உள்ளவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள் என சர்ச்சைக்குரிய வகையில் நீரவ் மோடி குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறினார்.
இது சர்ச்சையான நிலையில், இது குறித்து பாஜக அவதூறு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதனை அடுத்து ராகுல் காந்தி தரப்பிலிருந்து ஜாமீன் பெற்றதாகவும் மேல்முறையீடு செய்திருப்பதாகத் தகவல் வெளியானது.
இந்த நிலையில் நேற்று மக்களவை செயலாளர்,’அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளதால் எம்பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக’ அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி, எம்.எல்.ஏக்கல், மக்கள் பிரதி நிதித்துவ சட்டதிதின்படி, 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை பெற்றால்,குற்றம் நிரூபிக்கப்பட்ட நாளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவர். எனவே, தண்டனை விதிக்கப்பட்ட காலத்திற்குப் பின் மேலும் ஆண்டுகள் என மொத்தம் 8 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது.
நேற்று மக்களவை செயலகம், ராகுல்காந்தி போட்டியிட்டு வென்ற கேரளா வய நாடு தொகுதி காலியானதாக அறிவித்தது.
எனவே, பதவியில் இருந்து தகுதி நீக்கப்பட்ட ராகுல்காந்தி, அரசு பங்களாவில் குடியிருக்க முடியாது. அதன்படி, தகுதி நீக்க உத்தரவு வெளியான 1 மாதத்திற்குள் அவர் அந்த பங்களாவை காலி செய்யய வேண்டுமென்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் கூறியுள்ளளது.
இந்த நிலையில், ராகுல்காந்தி தன் மீதான தீர்ப்புக்கு தடை உத்தரவு பெறும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார்.
தீர்ப்பு வெளியான 2 மணி நேரத்தில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும்: ராகுல் காந்தி தகுதிநீக்கம் குறித்து வழக்கறிஞர்! |
தீர்ப்பு வெளியான 2 மணி நேரத்தில் ராகுல் காந்தி மேல் முறையீடு செய்திருக்க வேண்டும் என மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி என்பவர் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியை அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் அவரது எம்பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலாளர் என்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ‘ராகுல் காந்திக்கு நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்த அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் மேல்முறையீட்டு மனுவை தயார் செய்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அவர்கள் செய்திருக்க வேண்டும்.
தகுதி நீக்கம் செய்யப்படும் அபாயம் உள்ளன என அன்று மாலையோ அல்லது அடுத்த நாள் காலையிலோ விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதியிடம் வலியுறுத்திருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியில் தலைசிறந்த வழக்கறிஞர்கள் இருந்தும் மேல்முறையீட்டுக்கு செல்வதில் ஏன் இவ்வளவு தாமதம் என்று தெரியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதாவது சாதிய வன்மம் காட்டபடுவது தவறு எனும் சட்டபடி அவர் பதவி பறிக்கபட்டு தண்டனை விதிக்கபட்டிருக்கின்றது
ஆனால் தமிழகத்தில் அண்ணாதுரை, கருணாநிதி என பலர் பிராமண துவேஷம் பேசியே முதல்வரானார்காள், இன்றும் பிராமண எதிரி என அறியபடும் ராம்சாமி கொண்டாடபட்டு ஊரெல்லாம் சிலை வைக்கபடுகின்றது
தமிழகத்தில் பிராமண இனம் பழிக்கபட்ட அளவு இந்தியாவில் இன்னொரு இனம் பழிக்கபட்டிருக்க முடியாது
ஆனால் ராகுலுக்கு தண்டனை என்பதும் அதே நேரம் இன்றும் தமிழகத்தில் பிராமணர்களை எதுவும்யாரும் பேசலாம் என்பதும் வினோதம்
மோடி சமூகம் பெற்ற சட்டகாவலை ஏன் பிராமண சமூகம் பெறமுடியவில்லை அவர்களை பெறவிடாமல் தடுத்த சக்தி எது என்பதுதான் தெரியவில்லை
ராகுல் காந்தி தகுதி நீக்கம்: பறிபோகும் சலுகைகள், நன்மைகள் எவை?
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2019 ஆம் ஆண்டு தனது ‘மோடி குடும்பப்பெயர்’ கருத்துக்காக அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை (மார்ச் 24) லோக்சபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். வெள்ளிக்கிழமை காலை மக்களவைக்கு ராகுல் காந்தி வந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்தது.
தகுதி நீக்க அறிவிப்புக்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, சசி தரூர், ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் மேலிட தலைவர் மம்தா பானர்ஜி, சிவசேனா (யு.பி.டி) தலைவர் உத்தவ் தாக்கரே, ஆம் ஆத்மி கட்சி தலைவர் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட பல எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
எம்.பி.யாக இருந்தால் கிடைக்கும் வசதிகளை இழக்கிறார்
லோக்சபா உறுப்பினர் பதவியை இழப்பது என்பது, எம்.பி.க்கள் பெறும் பல வசதிகளை இழப்பதுடன் சேர்ந்து வருகிறது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் “திறம்பட செயல்படும் நோக்கில்” சில சலுகைகள் மற்றும் நன்மைகளுக்கு உரிமையுடையவர்கள். இவை பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், படிகள் மற்றும் ஓய்வூதியச் சட்டம், 1954 மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளால் நிர்வகிக்கப்படுகின்றன. சட்டத்தின் சமீபத்திய திருத்தம் மே 11, 2022 அன்று செய்யப்பட்டது.
இவற்றில் சில சலுகைகள் மற்றும் பலன்கள் பின்வருமாறு.
‘கடமையில் இருப்பதற்காக’ சம்பளம் மற்றும் செலவினப்படிகள்
ஒரு எம்.பி.க்கு மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் மற்றும் பணியின் போது வசிக்கும் எந்த காலகட்டத்திலும் ஒரு நாளைக்கு ரூ.2,000 செலவினப்படிகள் கிடைக்கும். ‘கடமையில் இருக்கும் காலம்’ என்பது, ஒரு உறுப்பினர் நாடாளுமன்றத்தின் அமர்வு அல்லது ஒரு குழுவின் அமர்வு நடைபெறும் இடத்தில் அல்லது அத்தகைய அமர்வில் கலந்துகொள்வதன் நோக்கம் அல்லது உட்கார்ந்திருப்பது அல்லது அத்தகைய பிற வணிகத்தில் கலந்துகொள்வதன் நோக்கத்திற்காக, அத்தகைய உறுப்பினராக அவரது கடமைகளுடன் தொடர்புடைய பிற வணிகங்கள் பரிவர்த்தனை செய்யப்படும் இடத்தில் இருக்கும் காலம் என்று பொருள்படும்.
எம்.பி.க்களின் சம்பளம் மற்றும் தினசரி செலவினப்படிகள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, செலவு பணவீக்க குறியீட்டின் அடிப்படையில் அதிகரிக்கப்படுகிறது.
பயணப் படிகள் மற்றும் இலவச இரயில் போக்குவரத்து
பாராளுமன்ற உறுப்பினராக தமது கடமைகள் தொடர்பாக மேற்கொள்ளும் எந்தவொரு பயணத்தையும் எளிதாக்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பயண படியையும் பெறுகின்றனர். தங்கள் கடமைகளை நிறைவேற்ற அவர்கள் மேற்கொள்ளும் எந்தவொரு பயணத்திற்கும் விமானக் கட்டணத்தை அவர்கள் பெறுகிறார்கள். சாலை மார்க்கமாக பயணம் செய்தால், ஒரு கிலோ மீட்டருக்கு 16 ரூபாய் மைலேஜ் கட்டணமாக வழங்கப்படுகிறது.
முன்பு, எம்.பி.க்கள் ரயிலில் பயணம் செய்யத் தேர்வுசெய்தால் அவர்களுக்கும் ரயில் கட்டணம் செலுத்தப்பட்ட நிலையில், இப்போது அவர்களுக்கு இலவச, மாற்ற முடியாத பாஸ் வழங்கப்படுகிறது, இது குளிரூட்டப்பட்ட முதல் வகுப்பு அல்லது எக்சிகியூட்டிவ் வகுப்பில் எந்த ரயிலிலும் எந்த நேரத்திலும் பயணிக்க உரிமையளிக்கிறது. இந்த பாஸ் எம்.பி பதவியில் இருக்கும் காலத்திற்கு செல்லுபடியாகும். எந்தவொரு காரணத்திற்காகவும் ரயில் அனுமதிச் சீட்டை பெறவில்லை என்றால், எம்.பி.க்கள் இரயிலில் இலவசப் பயணம் செய்ய உரிமையுண்டு, அவர்களது கட்டணம் திருப்பிச் செலுத்தப்படும்.
எம்.பி.க்கள் நீராவி கப்பலில் இலவச போக்குவரத்தை அனுமதிக்கும் விதிமுறைகளும் உள்ளன. கடலோர, தீவு அல்லது ஆற்றங்கரை மாவட்டங்களின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இது வழங்கப்படுகிறது.
தொகுதி செலவினங்கள்
ஒரு உறுப்பினர் தொகுதி உதவித்தொகையாக மாதம் ரூ.75,000 பெற தகுதியுடையவர்.
அலுவலக செலவுப் படிகள்
ஒரு எம்.பி.க்கு அவர்களின் அலுவலக செலவுகளை கவனிக்க மொத்தம் ரூ.60,000 மாதம் ஒதுக்கப்படுகிறது. இதில், 20,000 ரூபாய் ஸ்டேஷனரி பொருட்கள் மற்றும் தபால் கட்டணத்திற்குச் செல்கிறது, லோக்சபா செயலகம், செயலர் உதவி பெறுவதற்காக பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதம் 40,000 ரூபாய் செலுத்துகிறது.
வீட்டுவசதி மற்றும் பிற தொடர்புடைய படிகள்
ஒவ்வொரு உறுப்பினரும் தனது பதவிக் காலம் முழுவதும், பணம் செலுத்தாமல், ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வடிவில் தங்குவதற்கு உரிமையுண்டு. அவர்களுக்கு பங்களா ஒதுக்கப்பட்டால், சாதாரண உரிமக் கட்டணம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு இலவச மின்சாரம் (ஆண்டுக்கு 50,000 யூனிட் வரை) மற்றும் இலவச தண்ணீர் (ஆண்டுக்கு 4,000 கிலோ லிட்டர் வரை) ஆகியவையும் உண்டு.
எம்.பி.க்களுக்குச் சில மரச்சாமான்கள் மற்றும் கூடுதல் சேவைகளுக்கான ஏற்பாடுகள் (எம்.பி.யின் இல்லத்தில் இணைக்கப்பட்டுள்ள பணியாளர்கள் போன்றவை) மற்றும் குறிப்பிட்ட கால பராமரிப்பு ஆகியவையும் உள்ளன.
தொலைபேசி கட்டணம்
எம்.பி.க்கள் தங்கள் டெல்லி இல்லம் மற்றும் அலுவலகம், அத்துடன் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநிலத்தில் உள்ள அவர்களது வீடு மற்றும் அலுவலகம் ஆகியவற்றில் தொலைபேசிகளை இலவசமாக நிறுவுவதற்கும் இயக்குவதற்கும் உரிமை உண்டு. எந்த வருடத்திலும் தொலைபேசியிலிருந்து செய்யப்படும் முதல் 50,000 உள்ளூர் அழைப்புகளுக்கு அவர்கள் பணம் செலுத்த வேண்டியதில்லை.
மேலும், எம்.பி.க்கள் தேசிய ரோமிங் வசதியுடன் மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட்டின் (எம்.டி.என்.எல்) ஒரு மொபைல் ஃபோன் இணைப்பையும், எம்.டி.என்.எல் அல்லது பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்) இன் மற்றொரு மொபைல் ஃபோன் இணைப்பையும் தனது தொகுதியில் பயன்படுத்துவதற்கு தேசிய ரோமிங் வசதியைப் பெற உரிமை உண்டு. அத்தகைய கையடக்கத் தொலைபேசி இணைப்புகளைப் பதிவு செய்தல் மற்றும் வாடகைக்கு எடுப்பது தொடர்பாக அவர் எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
மருத்துவ சேவை
500 ரூபாய் (உறுப்பினரின் சம்பளத்தில் இருந்து கழிக்கப்படும்) மாதாந்திரக் கட்டணத்திற்குப் பிறகு, எம்.பி.க்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இலவச மருத்துவச் சேவையைப் பெற உரிமை உண்டு.
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
» ராகுல் காந்திக்கு துணைவி கிடைக்க வேண்டும் - பிரார்த்தனை செய்த சாத்வி பிராச்சி
» வெங்காயம் விளைவது மண்ணுக்கு அடியிலா? அல்லது வெளியிலா? என்பது கூட ராகுல் காந்திக்கு தெரியாது : ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்..!!
» ராகுல் காந்திக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு
» நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
|
|