புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீராம தரிசனம் Poll_c10ஸ்ரீராம தரிசனம் Poll_m10ஸ்ரீராம தரிசனம் Poll_c10 
107 Posts - 49%
heezulia
ஸ்ரீராம தரிசனம் Poll_c10ஸ்ரீராம தரிசனம் Poll_m10ஸ்ரீராம தரிசனம் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஸ்ரீராம தரிசனம் Poll_c10ஸ்ரீராம தரிசனம் Poll_m10ஸ்ரீராம தரிசனம் Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
ஸ்ரீராம தரிசனம் Poll_c10ஸ்ரீராம தரிசனம் Poll_m10ஸ்ரீராம தரிசனம் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
ஸ்ரீராம தரிசனம் Poll_c10ஸ்ரீராம தரிசனம் Poll_m10ஸ்ரீராம தரிசனம் Poll_c10 
7 Posts - 3%
prajai
ஸ்ரீராம தரிசனம் Poll_c10ஸ்ரீராம தரிசனம் Poll_m10ஸ்ரீராம தரிசனம் Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
ஸ்ரீராம தரிசனம் Poll_c10ஸ்ரீராம தரிசனம் Poll_m10ஸ்ரீராம தரிசனம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஸ்ரீராம தரிசனம் Poll_c10ஸ்ரீராம தரிசனம் Poll_m10ஸ்ரீராம தரிசனம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஸ்ரீராம தரிசனம் Poll_c10ஸ்ரீராம தரிசனம் Poll_m10ஸ்ரீராம தரிசனம் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
ஸ்ரீராம தரிசனம் Poll_c10ஸ்ரீராம தரிசனம் Poll_m10ஸ்ரீராம தரிசனம் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீராம தரிசனம் Poll_c10ஸ்ரீராம தரிசனம் Poll_m10ஸ்ரீராம தரிசனம் Poll_c10 
234 Posts - 52%
heezulia
ஸ்ரீராம தரிசனம் Poll_c10ஸ்ரீராம தரிசனம் Poll_m10ஸ்ரீராம தரிசனம் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஸ்ரீராம தரிசனம் Poll_c10ஸ்ரீராம தரிசனம் Poll_m10ஸ்ரீராம தரிசனம் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
ஸ்ரீராம தரிசனம் Poll_c10ஸ்ரீராம தரிசனம் Poll_m10ஸ்ரீராம தரிசனம் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
ஸ்ரீராம தரிசனம் Poll_c10ஸ்ரீராம தரிசனம் Poll_m10ஸ்ரீராம தரிசனம் Poll_c10 
18 Posts - 4%
prajai
ஸ்ரீராம தரிசனம் Poll_c10ஸ்ரீராம தரிசனம் Poll_m10ஸ்ரீராம தரிசனம் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
ஸ்ரீராம தரிசனம் Poll_c10ஸ்ரீராம தரிசனம் Poll_m10ஸ்ரீராம தரிசனம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஸ்ரீராம தரிசனம் Poll_c10ஸ்ரீராம தரிசனம் Poll_m10ஸ்ரீராம தரிசனம் Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஸ்ரீராம தரிசனம் Poll_c10ஸ்ரீராம தரிசனம் Poll_m10ஸ்ரீராம தரிசனம் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஸ்ரீராம தரிசனம் Poll_c10ஸ்ரீராம தரிசனம் Poll_m10ஸ்ரீராம தரிசனம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீராம தரிசனம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 22, 2023 1:29 am

ஸ்ரீராம தரிசனம் 4Qq87nW

`ஸ்ரீராம ஜயம்... ஸ்ரீராம ஜயம்... ஸ்ரீராம ஜயம்’ என்று அனுதினமும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் கண்களை மூடி, மனத்துக்குள் ராமபிரானைத் தியானித்து, உள்ளம் உருக தாரக மந்திரமாம் ஸ்ரீராம நாமத்தை ஜபித்து வாருங்கள்.

அப்போது உங்கள் உள்ளத்தில்... சீதா, லட்சுமணன் சமேதராக, தம் சிறிய திருவடியாம் ஆஞ்சநேயருடனும் அரியாசனம் போட்டு அமர்ந்து கொள்வான் ஜானகிமணாளன்.

`ஆம், அயோத்தி சிம்மாசனத்தைத் துறந்த அந்தத் தூயவனுக்கு, நம் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்க அவ்வளவு இஷ்டமாம்!’ ஆகவே தினமும் ராம நாமம் ஜபிப்போம்.

ஸ்ரீமத் ராமாயணத்தின் தியான சுலோகம் ஒன்று மிக அற்புதமான விளக்கத்தைத் தருகிறது. ‘வேதங் களின் நாயகனாகக் குறிக்கப்படும் பரம்பொருளே தசரதச் சக்ரவர்த்திக்கு மகனாக, ஸ்ரீராமனாக அவதரித்தார்’ என்கிறது. அதேபோல் `பரம் பொருளாகிய ஸ்ரீராமனின் கல்யாணக் குணங்களை விவரிக்க, அந்த வேதங்களே வால்மீகியின் வாக்கில் இருந்து ராமாயணமாகப் பிறப்பெடுத்தன’ என்று ஞான நூல்கள் பலவும் கூறுகின்றன. எனில், சதுர்வேதங்களுக்கும் கருப்பொருள் சாட்ஷாத் ஸ்ரீராமனே என்பதை நாம் அறியலாம். ஆக, ஜகம் புகழும் ஸ்ரீராமனின் திருக்கதையைப் படிப்பது, நான்கு வேதங்களையும் படிப்பதற்குச் சமம்.

ஸ்ரீராம நாமம் ஜபிப்பதும் ஸ்ரீராம சரிதத்தைப் படிப்பதும் எவ்வளவு விசேஷமோ, அதேபோல அவன் அருளும் ஆலயங்களைத் தேடிச் சென்று தரிசிப்பதும் பெரும் புண்ணியம் தரும் செயலாகும்.

வரும் பங்குனி - 16 (30.3.23) வியாழனன்று ஸ்ரீராமநவமி வருகிறது. இந்தப் புண்ணிய தினத்தில் நாம் தரிசித்துப் பேறு பெறும் விதம், அற்புதமான சில தலங்களும் தகவல்களும் உங்களுக்காக...

வடுவூர் அருள்மிகு கோதண்டராமர்!



திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு அருகில் உள்ளது வடுவூர். தஞ்சை- மன்னார்குடி சாலையில், சுமார் 24 கி.மீ. தொலைவில் உள்ளது வடுவூர். இங்குள்ள அருள்மிகு கோதண்டராமர் ஆலயம் பிரசித்திபெற்றது.

வனவாசத்தின்போது முனிவர்களோடும் தங்கினார் ராமபிரான். அவர்களைப் பிரிந்துசெல்லும் நாள் வந்தபோது, மிகவும் கலங்கித் தவித்தார்களாம் முனிவர்கள். அவர்களின் வருத்தத்தைத் தீர்க்கும் பொருட்டு தன் திருவுருவைச் சிலையாகச் செய்து அவர்களிடம் ஒப்படைத்தாராம் ஸ்ரீராமன். அதுவே இந்த ஆலயத்தில் உள்ள உற்சவ மூர்த்தம் என்கின்றன புராணங்கள்.

முன்னொரு காலத்தில், திருவாரூர் அருகில் உள்ள திருக்கண்ண புரம் ஸ்ரீசௌரிராஜபெருமாள் திருக்கோயிலில்தான் இந்த உற்ஸவ மூர்த்தம் இருந்ததாம். பின்னர், புயல் மழை போன்று மிகப் பெரிய பிரளயம் ஏற்பட, வேதாரண்யம் அருகில் உள்ள தலைஞாயிறு பகுதியில் உற்ஸவ விக்கிரகம் கண்டெடுக்கப்பட்டதாம். அந்நிய படையெடுப்பின்போது, பாதுகாப்பு கருதி தலைஞாயிறு பகுதியில் இந்த விக்கிரகம் வைக்கப்பட்டிருந்தது என்றும் ஒரு தகவல் சொல்லப் படுகிறது.

இந்த நிலையில், தஞ்சையை ஆட்சி செய்த மன்னரின் கனவில் தோன்றிய ராமபிரான், தான் இருக்கும் இடத்தைக் காட்டி அருளினாராம். அதன்படி மன்னர் ஓடி வந்து, உற்ஸவ விக்கிரகத்தை வடுவூர் தலத்தில் வைத்துப் பூஜித்ததுடன் மக்களின் தரிசனத்துக்கும் வழிவகைகள் செய்தாராம். இதையடுத்து வடுவூர் கிராமமே செழித்தோங்கியதாகச் சொல்கிறது தலபுராணம்.

தை, மாசி மாதங்களில் தெப்போற்ஸ வம் சிறப்புற நடைபெறுகிறது. கோயிலின் தீர்த்தம் - சரயு புஷ்கரணி. இந்தத் தீர்த்தக் குளத்துக்கு அருகிலேயே மிகப் பெரிய ஏரி ஒன்றும் உள்ளது.

இந்தத் தலத்துக்குச் சென்று கோதண்டராமரை மனம் உருகி வேண்டிக் கொள்ள விரைவில் காரியம் கைகூடுமாம். பிரார்த்தனை நிறைவேறியதும் பக்திப்பெருக்குடன் நேர்த்திக்கடனைச் செலுத்திச் செல்கிறார்கள் பக்தர்கள்.

ஸ்வாமிக்குத் திருமஞ்சனம் செய்து வழிபட்டால் பதவி உயர்வு, தொழில் விருத்தி, திருமண பாக்கியம் ஆகியன கைகூடும் என்பது நம்பிக்கை. மாதந்தோறும் புனர்பூச நாளில் மூலவருக்கு திருமஞ்சனம் செய்வது சிறப்பு! ஆடி வளர்பிறை ஏகாதசி துவங்கி ஆவணி பூரட்டாதி வரை உற்ஸவரின் திருமேனியில் உள்ள கவசங்கள் அகற்றப்பட்டிருக்குமாம். அப்போது உற்ஸவருக்கு திருமஞ்சனம் நடைபெறும் காட்சியை தரிசிப்பது மிகுந்த பலனைத் தருமாம். பங்குனி புனர்பூச நாளில் துவங்கி, 10 நாள் விழாவாக சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது பிரம்மோற்ஸவம்.

அதேபோல், இங்கே விழாக்காலங்களில் நிகழும் திருக்கல்யாண வைபவத்தைத் தரிசித்தால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும்; நற்குணம் வாய்ந்த கணவன் கிடைப்பான்; இல்லறம் செழிக்கும் என்று சிலாகிக்கின்றனர் பக்தர்கள்!

யோக ராமர் தரிசனம்!



அம்பாள் ஸ்ரீரேணுகாதேவியாக கோயில்கொண்டிருக்கும் தலம் படைவீடு எனப்படும் படவேடு. இங்கிருந்து சுமார் 4 கி.மீ. தொலை வில் உள்ளது ஸ்ரீயோக ராமர் திருக்கோயில்.

சதகண்ட ராவணனை அழித்தபிறகு, சீதாதேவியுடனும் தம்பி லட்சுமணன் மற்றும் அனுமனுடனும் குண்டலீபுரம் எனும் இந்தத் தலத்துக்கு (படவேடு) வந்து கோயில்கொண்டாராம் ராமபிரான். இதேபோல் நெடுங்குணம் என்றொரு தலத்திலும் யோகராமரை தரிசிக்கலாம். திருவண்ணாமலையில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவிலும், ஆரணி மற்றும் வந்தவாசியில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவிலும் உள்ளது நெடுங்குணம்.

இலங்கையில் ராவணனை அழித்துத் திரும்பியபோது, வழியில் இந்தத் தலத்தில் இருந்த சுகப்பிரம்ம ரிஷியின் ஆஸ்ரமத்துக்கு எழுந்தருளினார் ராமன். அவரிடம் சுக மகரிஷி, தான் பாதுகாத்து வைத்திருந்த அரிய சுவடிகளைத் தந்தார். அவற்றைப் பெற்று அனுமன் படிக்க, அதற்கு ஸ்வாமி ஞான விளக்கம் தந்தாராம். மட்டுமன்றி, சுகபிரம்ம மகரிஷியின் வேண்டுகோளை ஏற்று ஞான விளக்கம் உபதேசிக்கும் கோலத்திலேயே இங்கு எழுந்தருளினார் என்கிறது தலபுராணம்.

கருவறையில், வலப்புறம் லட்சுமணன் நின்றிருக்க, இடப்புறத்தில் சீதாபிராட்டியுடன் காட்சி தருகிறார் ராமபிரான். பத்மாசனத்தில் அமர்ந்து, ஞானம் உபதேசிக்கும் ஸ்வாமியின் அருட்கோலம், அபூர்வமானது. அனுமன் சுவடியுடன் அருள்பாலிக்கிறார். இங்கு அருளும் தாயாரின் திருநாமம் ஸ்ரீசெங்கமலவல்லித் தாயார்.

ஆடி மாதம் பவித்ரோத்ஸவம், வைகாசியில் கருடசேவை, பங்குனியில் ராமநவமி உற்சவம் என விழாக்களும் களைகட்டுகின்றன. ராமநவமி புண்ணிய தினத்தில் நெடுங்குணம் தலத்துக்குச் சென்று இந்த யோக ராமனை தரிசித்து வழிபட்டால், ஞானம் கைகூடும்; இல்லறம் செழிக்கும் என்பது ஐதீகம்!

சரணாகதி திருத்தலம்!



ராமநாதபுரத்துக்குத் தெற்கே சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள ஊர் திருப்புல்லாணி. புல்லாரண்யம், தர்ப்ப சயனம் ஆகிய சிறப்புப் பெயர்களால் போற்றப்படும் தலம் இது. திருமங்கையாழ்வாரால் 20 பாடல்களால் மங்களாசாஸனம் செய்யப்பெற்ற தலம். `சகல மங்கலங்களும் அருளும் க்ஷேத்திரம் இது’ என்று ஆன்மிக ஆன்றோர்கள் போற்றுவார்கள். ஏன் தெரியுமா?

பெருமாள், அவர்தம் தேவியார், கோயிலின் விமானம்... திருப்பெயரில் கல்யாணம் எனும் மங்கலத்தைத் தாங்கியிருக்கும் தலம் இது. பெருமாளுக்குக் கல்யாணஜகந்நாதன் என்று திருப்பெயர். தாயாரின் திருப்பெயர் கல்யாணவல்லி. விமானம் - கல்யாண விமானம். ஆகவே, இங்கு வரும் பக்தர்களுக்கு சகல மங்கலங்களும் ஸித்திக்கும் என்பது நம்பிக்கை.

கிருத யுகத்தில் புல்லவர், கால்வர், கண்வர் ஆகிய மூன்று மகரிஷிகளும், தர்ப்பைப் புற்கள் நிரம்பிய திருப்புல்லாணிக் காட்டில் உலக நன்மைக்காகத் தவம் இருந்தனர். அவர்களுக்கு அசுரர்கள் பல விதங்களில் துன்பத்தைத் தந்தனர். அப்போது, அரசமர ரூபத்தில் தோன்றி அவர்களைக் காப்பாற்றினார் மகாவிஷ்ணு. மேலும், அந்த மகரிஷிகளின் வேண்டுகோளை ஏற்று, சங்கு சக்ர தாரியாக - அபய முத்திரையுடன் காட்சி தந்த பகவான், அதே கோலத்தில் ஜெகந்நாதப் பெருமாளாக அருள்பாலிக்கிறார்.

இலங்கைக்குச் செல்லும் வழியில் சேதுக்கரையை அடைந்தார் ராமன். கண்ணுக்கெதிரில் விரிந்து பரந்து கிடக்கும் கடற்பரப்பைக் கண்டு, ‘எப்படி இதைக் கடந்து செல்வது, யார் உதவியை நாடுவது’ என்ற ஆயாசத்துடனும் சோகத்துடனும் தம்பி லட்சுமணன் மடியில் தலை சாய்த்துப்படுத்தார். தர்ப்பைப் புல் பரப்பி, அதிலேயே மூன்று நாள்கள் உபவாசம் இருந்தார். அவரது திருமேனியைத் தர்ப்பைப் புற்கள் தாங்கிப் பெரும் புண்ணியம் பெற்றதால், ‘திருப்புல்லாணி’ எனப் பெயர் பெற்றதாம் இந்தத் திருத்தலம்.

இங்குள்ள பெருமாளை வழிபட்டு அவரின் திருவருளால் `பாணம்’ ஒன்றைப் பெற்றுச் சென்ற ராமன், அதைக் கொண்டே ராவணனை அழித்ததாகச் சொல்வர். அதுமட்டுமா? கடலரசனும், விபீஷணனும், ராவணனின் உளவாளிகளான சுகன், சாரணன் ஆகியோரும் ராமனிடம் சரண் புகுந்ததும் இந்தத் தலத்தில்தான். ஆகவேதான் இத்தலத்தைச் சரணாகதிக்கு உகந்ததாகச் சொல்வர். கோயிலில் கல்யாணவல்லி, பத்மாஸநி என்று இரண்டு தாயார்கள். மட்டுமின்றி, சந்தானகிருஷ்ணனையும் இங்கே தரிசிக்கலாம்.

இங்கு ராமபிரான், ஆதிசேஷன் மீது தர்ப்பைப் புல் விரித்து, அதன்மீது சயனத்திருக்கும் திருக்கோலத்தில் அருள்கிறார். சீதா தேவியை மீட்பதற்காகச் செல்லும் வழியில் ராமர் தங்கிய தலம் என்பதால், கருவறையில் சீதை இல்லை. லட்சுமணரின் அம்சமான ஆதிசேஷன் அருள்வதால், லட்சுமணரும் இல்லை.

தசரதர் இங்கு வந்து பெருமாளை வழிபட்டு ‘புத்திர பாக்கிய மூல மந்திரம்’ உபதேசம் பெற்றுச் சென்ற பிறகே ராமபிரானை மகனாகப் பெற்றாராம். ஆகவே, இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டுச் சென்றால், தடைகளும் தோஷங்களும் நீங்கிக் குழந்தைப் பேறு வாய்க்கும் என்பது நம்பிக்கை.

அபூர்வ தரிசனம்... ராம யந்திரம்!



அது 17-ம் நூற்றாண்டு. பாரத தேசம் அந்நியர் படையெடுப்பால் சிரமப்பட்டு வந்த நேரம். அப்போது அதற்கெதிராகக் கிளர்ந்து எழுந்து புரட்சி செய்து, ‘இந்து ராஷ்டிரம்’ அமைப்போம் என்று குரல் கொடுத்தவர் மாமன்னர் வீரசிவாஜி.

அவருக்குக் குருவாக இருந்து வழிகாட்டியவர் சமர்த்த ராமதாஸ் எனும் மகான். ஆதிசங்கரருக்குப் பின் காஷ்மீர் முதல் ராமேஸ்வரம் வரை பாதயாத்திரை செய்து, மடங்கள் நிறுவி சோர்ந்துகிடந்த சனாதன தர்மத்துக்குப் புத்துணர்வு ஊட்டியவர். ஆஞ்சநேயரின் அவதாரமாகக் கருதப்பட்டவர் சமர்த்த ராமதாஸ்.

அவர், தென் இந்தியா செல்லும்போது சத்ரபதி சிவாஜி ஒரு வேண்டுகோள் முன்வைத்தார். தஞ்சையில் இருக்கும் தன் சகோதரனான வெங்கோஜிக்கு அருளாசி வழங்கி வரவேண்டும் என்பதுதான் அது. அதை ஏற்றுக்கொண்டு சமர்த்த ராமதாசரும் தென் இந்திய விஜயத்தின் போது தஞ்சாவூருக்கு எழுந்தருளினார். தஞ்சையில் ஓர் மடத்தையும் நிறுவினார்.

தஞ்சையில் 1677-ம் ஆண்டு மடத்தை நிறுவிய சமர்த்த ராமதாஸர், ஸ்ரீராமர், சீதா, லட்சுமணன், ஆஞ்சநேயர் இருக்கும் பஞ்சலோக விக்ரகம் ஒன்றைச் செய்யச் சொல்லி அங்கே பிரதிஷ்டை செய்து வழிபட்டார். மேலும் அந்த இடத்தில் ஸ்ரீராமரின் சாந்நித்தியம் எப்போதும் நிரம்பியிருக்கும் வகையில், ஸ்ரீராம யந்திரம் ஒன்றையும் பிரதிஷ்டை செய்தார். இந்த யந்திரம் இருக்கும் இடத்தில் வைக்கும் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் என்று அருளாசி வழங்கினார்.

இந்த ராம யந்திரம் தற்போதும் தஞ்சை சமர்த்த ராமதாசர் திருமடத்தில் உள்ளது. ஸ்ரீராமருக்கு சமர்த்த ராமதாசர் யந்திரம் பிரதிஷ்டை செய்த ஒரே தலமும் இதுதான். எனவே இத்தகைய மகிமை மிக்க தலத்தில் வழிபாடு செய்வது மிகவும் விசேஷம். இங்கு ராமநவமி உற்சவம் மிக சிறப்பாக நடைபெறும். இதில் கலந்து கொண்டு சமர்த்த ராமதாசரார் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும் ஸ்ரீராமயந்திரத்தையும் தரிசனம் செய்து வழிபட்டால் வாழ்வில் குறைகள் நீங்கி குறைகள் தீர்த்து சுபிட்சம் பெருகும் என்கிறார்கள் பக்தர்கள்.

தஞ்சையின் மையப்பகுதியில் - கீழ ராஜவீதியில், சாமர்த்தன் குளத்துக்கு அருகே இந்தத் திருமடம் அமைந்துள்ளது. இப்பகுதியில் ராமர்கோயில் என்றே அழைக்கிறார்கள். தஞ்சைக்குச் செல்லும் அன்பர்கள் அவசியம் இந்தத் திருமடத்துக்கும் சென்று ஸ்ரீராமனின் திருவருளைப் பெற்று வரலாம்.

விகடன்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:21 pm

ஸ்ரீராம தரிசனம் 4Qq87nW



இந்த மந்திரத்தை மும்முறை கூறினால் 
விஷ்ணு சஹஸ்ரநாமம் கூறிய பலன் கிடைக்கும் 
என்று கூறுவர்.




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக