புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) Poll_c10பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) Poll_m10பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) Poll_c10 
7 Posts - 64%
heezulia
பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) Poll_c10பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) Poll_m10பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) Poll_c10பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) Poll_m10பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) Poll_c10பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) Poll_m10பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) Poll_c10பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) Poll_m10பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) Poll_c10பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) Poll_m10பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) Poll_c10பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) Poll_m10பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) Poll_c10பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) Poll_m10பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) Poll_c10 
8 Posts - 2%
prajai
பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) Poll_c10பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) Poll_m10பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) Poll_c10பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) Poll_m10பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) Poll_c10பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) Poll_m10பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) Poll_c10பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) Poll_m10பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) Poll_c10 
3 Posts - 1%
mruthun
பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) Poll_c10பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) Poll_m10பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41)


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Feb 13, 2023 2:08 pm

பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) Coq37Nv

பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (1)
                                                                     - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

    #பாலி (Pali) – என்றதும்  ‘நமக்குத் தொடர்பில்லாதது’ என்றே தமிழர்கள் நினைத்துக் கொண்டுள்ளார்கள்! இந்த நினைப்பை முதலில் மாற்றவேண்டும்! இதற்கான ஒரு முயற்சியே இப் பதிவு!

   பாலி மொழிக்கு என்று தனி #எழுத்துமுறை (script) இல்லை . பாலி நூற்களிற் காணலாகும் மிகத் தொன்மையான எழுத்துமுறை யாதென்றால், #தமிழர்தம் #பிராமிதான்!

     கீழ்வரும் பாலிச் சொற்களை ஒவ்வொன்றாகப் பார்த்துவாருங்கள்:-

1 .  அக்கி  (பாலி)
அக்கினி என்பது பொருள்.
‘அக்கினிச் சட்டி எடுத்து ஆடுதல்’ நாம் அறிந்ததுதானே?

2 . அங்குசகா  (பாலி)
நம்மூர் யானைப் பாகன் கையில் கொண்டிருக்கும் அங்குசம்தான் இது!

3. அங்காரகன்    (பாலி)
நம் தமிழ்ச் சோதிடர்கள் கூறும் அதே ‘அங்காரகன்’தான்! செவ்வாய்க் கிரகத்தைக் குறிக்கும்.

4. அங்குட்டா  (பாலி)
‘அங்குஷ்டம்’ எனப் பழைய தமிழ் நூற்களில் வருவதுதான்; ‘கட்டை விரல்’ என்பது பொருள் .
மற்ற விரல்களைவிடப்  பார்வைக்குக்  குட்டையாக இருப்பது கட்டை விரல். ஆகவே இதன் அடிப்படையில்,  ‘குட்டை’ என்பது, ‘குட்டா’ எனப் பாலியிற் பயின்றுள்ளது; அவ்வளவுதான்! முன்னே உள்ள ‘அம்’ , முன்னொட்டு.
ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குச் சொற்கள் செல்லும்போது #முன்னொட்டு, #பின்னொட்டுகள் (prefix and suffixes) சேர்வது ஒரு  #மொழியியல் (Linguistics ) இயல்பு.
இப் பாலி ஆய்வால் நாம் அறிவது யாதென்றால், ‘அங்குஷ்டம்’ என்ற சொல்லுக்கு முன்னே தோன்றியது, ‘அங்குட்டம்’ எனும் தமிழ்ச் சொல்; ‘அங்குட்டம்’ என்பதனை வேறுவிதமாக உச்சரிக்க விழைந்த தமிழர்கள் ‘ஷ்’ சேர்த்து, ‘அங்குஷ்டம்’ எனலாயினர்!

5. அங்குலா (பாலி)
‘ஒரு அங்குல நிலத்தைக் கூட விட்டுத்தர முடியாது!’ – சொல்கிறார்கள் அல்லவா? அதே ‘அங்குலம்’தான் , பாலியில் ’அங்குலா’!
நல்லவேளை , நம்மவர்கள் ‘அங்குஷ்லா’ என்றொரு சொல்லை உருவாக்கவில்லை!
இப்போதைக்கு , #ஈறுகளின் #மாற்றத்தை மட்டும் கவனியுங்கள்! தமிழின் #‘அம்’ #ஈறு, பாலியில் #‘ஆ’ #ஈறாகத் திரிந்துள்ளது! அவ்வளவுதான்!

6 . அஞ்னானா (பாலி)
‘அஞ்ஞானம்’ என்று நாமறிந்த சொல்தான் இது!
#‘அ’ #முன்னொட்டால் #எதிர்மறைப் #பொருள் #தமிழில் #ஏற்படும்!
சட்டைசெய் – உடன்பாட்டுச் சொல்
அசட்டைசெய் – எதிர்மறைச் சொல்
ஆகவே , ‘அ’ எனும் தமிழ் வேர்ச்சொல் தமிழுக்கும் பாலிக்கும் ஒன்றுதான்!

7 . அஞ்ஞானின் (பாலி)
ஞானி – உடன்பாட்டுச் சொல்
அஞ்ஞானி – எதிர்மறைச் சொல்
ஞானமற்றவன் , அஞ்ஞானி.
சற்றுமுன் சொன்னதுபோல, இங்கும் ‘அ’ முன்னொட்டு எதிமறைப் பொருளைத் தமிழில்  தந்துள்ளதைக் கவனிக்க!

8. அடவி  (பாலி)
காடு எனும் பொருள் தரும் அருமையான தமிழ்ச்சொல் ‘அடவி’!
தமிழ்ச்சொல் எந்த மாற்றமும் அடையாமல் , அப்படியே பாலியில் வந்துள்ளதைக் கவனியுங்கள்!
இங்கு நான் ஒன்றை உங்களுக்குக் கூறவேண்டும்!
பாலிச் சொற்களை ஆய்ந்தவர்கள், ‘இப் பாலிச்சொல்லுக்கு மூலம் சமஸ்கிருதமா ? இலத்தீனா? கிரேக்கமா?’ என்றெல்லாம் , பல சொற்களுக்கு , ஆய்வை ஓட்டியுள்ளார்களே தவிர ஒரு இடத்திற்கூட  ’தமிழிலிருந்து வந்திருக்குமா?’ என்று பார்க்கவே இல்லை! பாலி ஆய்வாளர்களுக்குத் தமிழ் என்று ஒரு மொழி இருப்பதே தெரியாதமாதிரித்தான் உள்ளது! தமிழை உலகளாவிய நிலையில்  நாம் எடுத்துச் செல்லவில்லை என்பதை இது தெரிவிக்கிறது!  ‘அவர் ஜெர்மனியில் வேலை செய்தவர்; இவர் கனடாவில் வேலை செய்தவர்’ என்று சில தமிழர்களைப் பற்றிக் கேள்விப்படுகிறோம்! ஆனால் , அவர்கள் வெகு கமுக்கமாக இருந்து, எங்கே, தமிழ் தொடர்பாக என்ன வேலை செய்கிறோம் என இங்கு மூச்சு விடமாட்டார்கள்! தமிழை உலகளாவிய நிலைக்கு நாம் எடுத்துச்சென்ற இலட்சணம் இதுதான்!

9 . அட்டா  (பாலி)
பரண் என்பது பொருள்.
‘தலையணை பாயை அட்டாலையில் போட்டியா?’ – சிற்றூர்களிற் பாட்டி இரைவாள்!
‘அட்டாலைப் பலகை’ என்பதும் இதுவே.
சதுர அல்லது செவ்வக வடிவில் , சட்டங்களால் அமைக்கப்பட்டு, நான்கு மூலைகளிலும் கயிற்றால் கட்டி உயரமாகத் தூக்கிக் கட்டியிருப்பர்; இதுவே  #‘அட்டாலை’. பாலி மொழி தமிழகத்தில் அறியப்பட்ட  காலத்தில் , தமிழர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது.

10 . அன்னா (பாலி)
அன்னம் – சோறு
தமிழ் ’அன்னம்’தான் , பாலி ‘அன்னா’! ‘அன்னமிட்ட வீட்டில் கன்னமிடாதே’ – தமிழ்ப் பழமொழி.
தமிழ் ‘அம்’மீறு , பாலியில் மாறும் வகையைப் பார்த்துக்கொண்டே வாருங்கள்.

(கருவி நூல் :  Poli – English Dictionary by T.W.Rhys Davids and William Stede, Pali Text Society , www.buddhistboards.com).
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 13, 2023 4:49 pm

அந்த காலத்தில் ஜாவா /சுமத்திரா /பாலி தீவுகளுக்கு சென்று /வென்று /தமிழையும் 
புழக்கத்தில் விட்ட ராஜராஜ சோழன் /ராஜேந்திர சோழன் அவர்களை நினைவுபடுத்துகிறது.

அதே போல் ரியூனியன் தீவுகளிலும் பழந்தமிழ் புழக்கத்தில் இருந்திருக்குமோ?????



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Feb 14, 2023 12:26 pm

நன்றி இரமணியன் , சிவா அவர்களே!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Feb 14, 2023 12:28 pm

பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (2)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

10 . அதிஉத்தமா (பாலி)
‘அதிஉத்தமம்’ என்று நாம் கூறுவதே இது!
‘அதி’ முன்னடை , தமிழ்ச் சொற்களுக்கானதே!
‘அதிரசம்’ சுட்டுச் சாப்பிட்ட இனம் தமிழினம் அல்லவா?
’அதிகம்‘ , ‘அதிகப்படி’, ‘அதிட்டானம்’ (உயரப் பீடம்; தமிழர்தம் ஆகமக் கலைச்சொல் இது) – என்றெல்லாம் தமிழ் நூற்களில் வரும்.

11. அனுபத்தா (பாலி)
‘அனுபந்தம்’தான் இது ; இணைப்பு என்பது பொருள்.
‘அனு’ , ‘பந்தம்’ – இரண்டுமே தமிழ்ச்சொற்கள்தாம்.
‘அனுசரித்துப் போ’ – தொடர்ந்து போ; அடியொற்றிப் போ.
‘நெய்ப்பந்தம் பேரன் பிடிக்கிறான்’ – சாவு ஊர்வலத்தில் தமிழர் சொல்வது.

12. அனுபாவா (பாலி)
பொருள் – ‘அனுபவம்’ என்பதே.

13. அனுமதி (பாலி)
நாம் பயன்படுத்தும் அதே ‘அனுமதி’தான்! பொருள் மாற்றம் இல்லை!

14 . அனுமானம் (பாலி)
‘ஊகம்’ என்பதே பொருள்.
தமிழ்ச் சொற்களுக்கே உரிய #‘அம்’மீறு , #பாலியில் வந்துள்ளதைக் கவனிக்க.
#தமிழிலிருந்து #கன்னடத்திற்குப் போனபோது ‘அனுமானா’ ஆகியது.

15. அநேக (பாலி)
நாம் பயன்படுத்தும் அதே வடிவம்; அதே பொருள்;சிறிதும் மாற்றமில்லை!
‘அநேக விசாரணை முடிவுகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன’ – நாம் சொல்வது.

16. அந்தா (பாலி)
தமிழில் ‘அந்தம்’ என வழங்கியதுதான்! ஈறு மட்டும்தான் மாற்றம்!
அந்தம் – முடிவு

17. அந்தராளா (பாலி)
கட்டட உட்பகுதியைக் குறிக்கும் ‘அந்தராளம்’தான் இது. ’; #தமிழ் #ஆகமக் #கலைச்சொல் (technical word) இது.

18 . அந்திமா (பாலி)
‘அந்திமம்’ – தலிழில்.
‘அந்திமச் சடங்கு’ , ‘அந்திமக் கிரியை’ – கூறுகிறோம்.

19. அமரா (பாலி)
அமரா – இறவாதவர்; தமிழில் ‘அமரர்’ என வந்ததே!
‘அமரர் ஊர்தி’ – இறந்தார் செல்லும் ஊர்தியாயினும், ‘அவர் இறவாதவர்’ என்று குறிக்கு முகத்தான் இச் சொல் வந்தது.

20. அம்மா (பாலி)
‘அம்மா’ எனும் தமிழ்ச்சொல் , முனை முறியாமல் பாலியில் அப்படியே வந்துள்ளதைக் காணலாம்.
***
(கருவி நூல் : Poli – English Dictionary by T.W.Rhys Davids and William Stede, Pali Text Society , www.buddhistboards.com).
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Feb 17, 2023 12:43 pm

பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (3)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

21 . அயணா (பாலி)
‘அயணம்’ எனத் தமிழ் எழுத்துகளில் உள்ளதுதான் இது.
இராம + அயணம் = இராமாயணம்
உத்தர + அயணம் = உத்தராயணம்
அயணம் – பாதை ; தமிழ்ப் பொருளே பாலியிலும்.
‘அய’ , அடிச்சொல்; ‘அயல்’ என்பது பொருள். செல்லுமிடம் அயலாக இருப்பதால் ‘அயணம்’ , ‘பாதை’, ‘பயணம்’ என்றெல்லாம் இந்த அடிச்சொல் பொருள் தருகிறது.

22 . ஐயா (பாலி)
‘மதிப்புக்குரியவரே’ என்பதே பொருள்.
‘sir’ என ஆங்கிலத்தில் நாம் கூறும் அதே பொருள்தான்.
பாலிச் சொற்களுக்கு எல்லாம் மூலம் வடமொழிதான் என்போர் இதுபோன்ற எடுத்துக்காட்டுகளைக் கவனத்திற் கொள்ளவேண்டும்.

23 . அரஹதி (பாலி)
‘அருகதை’ என்ற தமிழ்தான் இது.
‘இதைச் சொல்வதற்கு ஆளுங்கட்சிக் காரருக்கு அருகதை இல்லை! ’ என்ற கொந்தளிப்பை நாம் கேட்கிறாம்!

24 . அருணா (பாலி)
‘சூரியன்’ என்ற பொருளைத்தான் இப் பாலிச் சொல் தருகிறது.
அருணன்+ அசலம் = அருணாசலம் ; அசலம் – மலை

25 . அரூபம் (பாலி)
‘உருவமற்றது’ என்ற தமிழ்ப் பொருளே இங்கும்.
‘உருவம்’ என்ற தமிழ்ச் சொல்லுக்கு எதிர்ச்சொல்தான் ‘அருவம்’.
தமிழ்ச் சைவ நூற்களில் ‘அருவம்’ எனும் சொல் பயிலல் காணலாம்.

26 . அலங்காரா (பாலி)
‘அலங்காரம்’ என்ற நம் சொல்லே இது.
#‘இருசொல் #அலங்காரம்’ என்றே #தமிழில் #இலக்கிய #வகை #(genre) ஒன்று உண்டு.

27 . அவனி (பாலி)
அவனி நாயகன் – உலக நாயகன்; அவனி – உலகம் ; தமிழ்ச் சொல்லே.

28. அவமான (பாலி)
‘அவமானம்’ எனும் நாம் கொள்ளும் அதே பொருள்தான்!
‘நெக்லஸ் இல்லைனா நான் கல்யாணத்துக்கு வரலை; எனக்கு அவமானம்’ – மருமகள் உறுமுகிறாள்!

29 . அவயவா (பாலி)
அவயவம் – உறுப்பு (limb)
அவயம் – உறுப்பு; ‘வ’ எனும் #சாரியை #(euphonic #extension) பெற்று ‘அவயவம்’ ஆனது.
‘மாவாட்டி மாவாட்டி அவயமெல்லாம் நோவுது’ நம் வீட்டு முணங்கல்!

30. அசமா (பாலி)
‘சமம்’ எனும் தமிழ்ச் சொல் உங்களுக்குத் தெரிந்ததுதானே? அதன் முன் , ‘அ’வைச் சேருங்கள்; ‘அசமம்’ வரும்!
‘அ’ எனும் தமிழ் முன்னொட்டுக்கு எதிர்மறைப் பொருள் உள்ளதென்பதை முன்பே பார்த்துள்ளோம். ‘நீதி’ யின் முன் ‘அ’வைச் சேர்த்தால், ’அநீதி’ !
‘சமம்’ , தமிழாக இருக்கும்போது, ‘அசமம்’ மட்டும் வேறு மொழியாகிவிடுமா? நம் பயன்பாட்டில் அவ்வளவாக ‘அசமம்’ இல்லை; அவ்வளவுதான்!
இதைப் போன்றே ‘நீதி’ , தமிழாக இருக்கும்போது ‘அநீதி’யும் தமிழாகத்தானே இருக்கவேண்டும்?
***
(கருவி நூல் : Poli – English Dictionary by T.W.Rhys Davids and William Stede, Pali Text Society , www.buddhistboards.com).
***





முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Feb 19, 2023 11:38 am

பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (4)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

31. ஆகாசா (பாலி)
நாம் பேசும் ‘ஆகாயம்’தான்!
ஆ- இத் தமிழ் வேர்ச்சொல்லுக்கு விரிவு என்பது பொருள்; ‘ஆவென்று வாயைப் பிளக்கிறாயே!’ என்பார்கள்.
மற்ற மரங்களைவிட அகலமாக இருப்பதால்தான் , ’ஆ’
அடிப்படையில் அது ‘ஆல்’ எனப்பட்டது!
இவ்வாறு #தமிழ் #வேர்ச்சொற்களுக்கும் #பாலி #மொழிச் #சொற்களுக்கும் #இடையே #இருக்கும் #நெருக்கத்தைப் பார்த்துவாருங்கள்; உங்களுக்கே ஒரு முடிபு தோன்றும்!

32 . ஆகமா  (பாலி)
‘ஆகமம்’தான் இது.
பயப்படாதீர்கள்!  கட்டட அறிவு உட்படத்  தமிழரின் பல பரம்பரை நுணுக்கஅறிவுகளின் தொகுப்பே ’ஆகமம்’ என்பது!
ஆகிவந்ததே ஆகமம்!
என்ன ஆகிவந்தது?
மிகப் பழங்காலத்திலிருந்து தமிழ் மண்ணில் நடைமுறையில் இருந்துவந்தது என்பது பொருள் !
நுணுக்கமான அல்லது துல்லியமான கலைச்சொற்களை, மக்கள் அன்றாடம் பேசும் எளிய சொற்களில் தெரிவித்தால் , பொருளின் துல்லியம் மாறிவிட வாய்ப்பு அதிகம் ! இஃது ஓர் மொழியியல் உண்மை! யாரும் மறுக்க முடியாது! இக் காரணத்தால்தான் , ஆங்கிலச் சட்ட நூற்களில்  ‘suo mottu’, ‘sine die’ போன்ற , பேச்சு வழக்கில் இல்லாத,  இலத்தீன் முதலிய பிறமொழிச் சொற்கள் மூலம் குறிக்கின்றனர்!
இந்த அடிப்படையில்தான் , தமிழர்களே , ஆகம நூற்களை, அவசரம் அவசரமாக நம் சமஸ்கிருதத்தில் எழுதிப் பாதுகாக்கலாயினர்! இவ்வளவுதான் இரகசியம்!

33. ஆசாரின்    (பாலி)
‘ஆசிரியன்’ என்ற தமிழ்ச் சொல்லே இது. சில எழுத்து மாற்றங்களே மட்டுமே காண்கிறோம்.
ஆசு + இரியன் ; குற்றங்களை நீக்குபவன் ஆசிரியன் என விளக்கம் கூறியுள்ளனர்; இது தவறானது.
ஆசிரியன் – உயர்ந்தவன் ; மேலானவன் ;  ‘ஆசிரியன்’, ‘ஆசான்’ என்பனவற்றுக்கு அடிச்சொல் ‘ஆசு’தான்; ‘மேல்’ என்பது பொருள்.
நகையில் பற்றவைப்பதைப்  ‘பற்றாசு’  என்பர்; ‘ஆசு’என்பது பற்றவைக்கப் பயன்படும் பொடியைக் குறிக்கும். அந்தப் பொடியைப் பற்றவைப்பதால் ‘பற்றாசு’!
‘குரு’ என்பதும் ‘உயர்ந்தவர்’ எனும் பொருளையே தரும். ‘குற்றம் களைபவர்’ என்ற பொருள் இங்கு இல்லாமை காண்க!

34. ஆசாரா  (பாலி)
  நாமறிந்த ‘ஆசாரம்’தான் இது.
‘நற்பழக்க வழக்கம்’ என்ற பொருளில் வருகிறது.
பாலியில் ‘ஆச்சாரம்’ என உச்சரிக்கப்பட்டாலும், இதன் தொன்மைத் தமிழ் வடிவம் ‘ஆசாரம்’ என்பதே. சான்று #‘ஆசாரக் கோவை’ என்ற தலைப்பே!  
எண்ணற்ற தமிழ்ச் சொற்கள் அழுத்தி உச்சரிக்கப்பட்டு  ‘வேற்றுமொழி’ எனும் மாய வலைக்குள் மாட்டிக்கொண்டுள்ளன.
கோடி + ஈசுவரன் = கோடீசுவரன்தானே? இதைக் ‘கோட்டீசுவரன் ’ என ஆக்குவனேன்? இதைத்தான் ‘அழுத்தி உச்சரித்தல்’ என்பது!

35. ஆதாரா (பாலி)
தமிழ் ‘ஆதாரம்’தான் இது.
ஈற்றெழுத்து மாற்றத்தைக் கவனிக்க.
‘ சின்னச்சாமிக்கு நான் எழுதிக் கொடுக்கும் ஆதரவு’ என்று தமிழ்  உறுதிப் பத்திரங்களில் எழுதுவார்கள். ‘நெய்க்குத் தொன்னை ஆதாரமா, தொன்னைக்கு நெய் ஆதாரமா?’ – பழந்தமிழ்ச் சொல்!

36 . ஆப (பாலி)
இப் பாலிச் சொல்லுக்கு ‘நீர்’ என்பது பொருள்.
‘அப்பு’ என்ற தமிழ்ச் சொல்லுக்கு நீர் என்பதே பொருள். வரலாற்று ஆவணங்களில் வரும்  ‘அப்புக்கல்’ என்பதில் இப் பொருள் வருகிறது.
தமிழ் பற்றிச் சிறிதும் அறியாத பாலி ஆய்வாளர்கள் என்ன எழுதியுள்ளார்கள்?
‘உபே’ எனும் லித்துவேனியச் (Lithuvanian) சொல்லிலிருந்து, ‘ஆப’ என்ற பாலிச்சொல் வந்திருக்குமாம்! பழைய பிரஷ்ஷிய மொழியில்(old Prussian language)   அபே (ape) எனும் சொல் ஆற்றைக் குறிக்கிறதாம்!

37. ஆமா (பாலி)
‘ஆமாம்’ என்பதே கருத்து.
”  வலுவானவர் என்ன உளறினாலும் நம்மவர்கள் ஆமாம் சாமி’ போடுகிறார்கள் அல்லவா? அதே ‘ஆமாம்’தான்.
‘ஆமா இவரு சொன்னதை அப்படியே நிறைவேற்றுவாரு!’ – இதில் வரும் ‘ஆமா’ ஓர் #அசைச்சொல்; ‘ஆமாம்’ என்பதன் சுருக்கம் அல்ல.

38. ஆய (பாலி)
இப் பாலிச் சொல்லுக்கு ’இலாபம்’  என்பது பொருள். ஏறத்தாழ இப் பொருள் உள்ள தமிழ்ச் சொல்லே ‘ஆயம்’; தமிழ் அகராதிகளில் ‘ஆயம்’ , வருமானத்தைக் குறிக்கும் என்றுள்ளது. செலவு போக எஞ்சியது ‘இலாபம்’ ; அது ’வருமானம்’தானே?
39. ஆயாமா  (பாலி)
‘நீளம்’ என்பது பொருள்.
#மயமதம் முதலிய #தமிழ் #ஆகமங்களில், #சிற்ப வடிவமைப்பில் நீளத்தைச் சுட்ட ‘ஆயாமம்’ எனும் சொல் பயன்படுகிறது.
‘நீளம்’ எனும் சொல்லைவிட ‘ஆயாமம்’ என்றால் , எது குறிப்பிடப்படுகிறது என்பதில் ஒரு  #தெளிவும் #துல்லியமும் (clarity and specification) தமிழ்ச் சிற்பிகளுக்குக் கிடைத்தது!  

40. ஆரோஹணா  (பாலி)
‘ஏறுதல்’ என்று பாலியில் பொருள்.
தமிழிசையில் சுரங்களின் ஏறு வரிசை ‘ஆரோகணம்’ என்றுதானே சொல்லப்படுகிறது?
‘க’, ‘ஹ’ வேறுபாடுதான்!
***
(கருவி நூல் :  Poli – English Dictionary by T.W.Rhys Davids and William Stede, Pali Text Society , www.buddhistboards.com).
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Feb 21, 2023 12:53 pm

பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (5)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

41. ஆலயம் (பாலி)

பாலியில் ‘ஆலயம்’ , ‘இருப்பிடம்’ என்ற பொருளில் ஆளப்படுகிறது.
‘அரசனின் இருப்பிடம்’ என்ற பொருளில்தான் ‘கோயில்’ என்ற தமிழ்ச் சொல் உருவானது என ஆய்ந்துள்ளனர். கோ+ இல் = கோயில் ; கோ – அரசன். பிறகு , கடவுளின் இருப்பிடத்தைக் ‘கோயில்’ சுட்டியது. #தமிழ்ச் #சொற்களின் #தொன்மைப் #பொருளைப் #பாதுகாக்கும் #பெட்டகமாகப் #பாலி மொழி உள்ளது என்பதற்கு இஃது ஒரு சான்று!

42. ஆவளீ (பாலி)
பாலியில் ‘வரிசை’ என்ற பொருளில் இச் சொல் ஆளப்படுகிறது.
தமிழிலும் இதே பொருள்தான்.
தீப + ஆவளி = தீபாவளி ; தீபங்களின் வரிசை என்பதே பொருள்.

43. ஆசனா (பாலி)
தமிழில் ‘ஆசனம்’ என்பது எதைக் குறிக்கிறதோ அதையே இப் பாலிச்சொல்லும் குறிக்கிறது.
ஈற்றெழுத்து ஒன்று மட்டுமே வேறுபாடு.
முன் ஆய்வில் ‘ஆசு’ பற்றிப் பார்த்தோம்; அங்கு பார்த்தபடியே , இங்கும் ‘ஆசு’ என்பதற்கு ’மேல்’, ‘உயர்ந்தது’ என்றுதான் பொருள் உள்ளது.
‘ஆசு’ அடிப்படையில், உட்கார்வதற்கு ஏற்ற உயர்வான பொருள் அல்லது இடமே ‘ஆசனம்’ என வந்துள்ளது.

44. ஆசா (பாலி)
‘ஆசை’ என்பதே இப் பாலிச்சொல்லுக்குப் பொருள்.
பொதுவாகச் #சொற்களின் #ஈற்றெழுத்து #நெடிலில் #முடிவது #பாலிச் #சொற்களின் #ஓர் #இயல்பு!
‘ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் என்ற முன்னாள் தமிழகக் காங்கிரஸ் முதலமைச்சர் ஆசா பாசம் அற்றவராக வாழ்ந்து காட்டியவர்’ என எழுதியுள்ளனர். இங்கு வந்த ‘ஆசா’தான் பாலியில் மெருகு குறையாமல் வந்துள்ளது!

45. ஆஹாரா (பாலி)
‘குழந்தைக்கு என்ன ஆகாரம் கொடுப்பது?’ – தாய் மருத்துவரிடம் கேட்பது.
இதே ஆகாரம்தான் , பாலியில் ‘ஆஹாரா’ என வந்துள்ளது; அவ்வளவுதான்!
‘ஆகாரம்’ என்று தமிழில் எழுதினாலும் , தமிழர்கள் உச்சரிக்கும்போது ‘ஆஹாரம்’ என்றுதான் உச்சரிப்பார்கள்.
’அகநானூறு’ என்று எழுதினாலும் , உச்சரிப்பில் ‘அஹநானூறு’ என்றுதான் வரும் ; Akananuru என வருவதில்லை.
ஒவ்வொரு ஒலிக்கும் ஓர் எழுத்தை வைத்துக்கொண்டு தொல்லைப்பட வேண்டாம்; இடம் நோக்கி உச்சரித்துக் கொள்ளலாம் என்பதே தமிழ்க் கோட்பாடு!
ஆகவே சமஸ்கிருததிற்கு எங்கிருந்து #ஹ, #ஜ, #முதலிய #ஒலிப்பு #எழுத்துகள் வந்தன என்றால் , இவை #தமிழிலிருந்து #வந்தன என அறிதல் வேண்டும்!

46. இச்சா (பாலி)

நாம் அறிந்த ‘இச்சை’தான் !
ஈற்றொலியில் மட்டும்தான் வேறுபாடு.
தமிழர்களே , ‘இச்சா சக்தி’என்றுதான் தமிழ்ச் சைவ நூற்களில் எழுதியுள்ளனர்.
இச்சை - ஆசை
‘ஆசை’ என நான் பொருள் எழுதிவிட்டாலும் , ‘ஆசை’ , ‘இச்சை’ இவற்றிடையே #சன்னப் #பொருள் #வேறுபாடு உண்டு!
‘சொந்த வீடு கட்ட எனக்கு ஆசை’ எனலாம். ‘‘சொந்த வீடு கட்ட எனக்கு இச்சை’ எனல் பொருத்தமில்லை. ‘மாம்பழம் சாப்பிட எனக்கு இச்சை’ எனலாம். ஆனால், இத்தகைய சொற்பொருள் வேறுபாடுகளை இன்று நாம் கவனிப்பதில்லை ! உலகம் ‘டமால் டுமீல்’ என்று போய்க்கொண்டிருக்கையில் இந்த நுணுக்கத்தைப் பற்றிக் கவல்வார் இல்லை!

47 . ஈசா (பாலி)
‘ஈசன்’ என நாம் பேசுவதுதான் இது. ‘ஈசனோடாயினும் ஆசையை அறுமின்’ என்று பரவியுள்ளனர்.
‘ஈசன்’ , விளியில் வரும்போது ‘ஈசா’ , ‘ஈசனே’ என்றெல்லாம் வரலாம். விளி – அழைத்தல்; கூப்பிடல்.
ஈசன் – ஆண்பாற் பெயர்
ஈசுவரி – பெண்பாற் பெயர்; #‘ஈசுவரி’ #என்பதை , #‘ஈஸ்வரி’ #என #எழுத #விழைந்தவர்கள் #தமிழர்கள்தான்; #நடந்தது #தமிழ் #மண்ணில்தான்!

48 . உச்சா (பாலி)
‘உயரம்’ என்ற பொருள் தரும் பாலிச்சொல் இது.
‘உச்சம்’ எனும் தமிழ்ச் சொல்லை நாம் அறிவோமே!
வழக்கில் , ‘உச்சாணிக் கொம்பு’ என்பர்; ‘உயரமான இடத்துக் கொம்பு’ என்பதே பொருள்.
‘உச்சாணி’யில் வந்துள்ள ‘ஆணி’ , தச்சர் அடிக்கும் ஆணியல்ல; அஃது #அசைச்சொல். ‘சிரிப்பாணி’ என்ற தமிழ் வழக்கும் உண்டு; இது மருவிச் ‘சிப்பாணி’ ஆனது; இங்கு வந்துள்ள ‘ஆணி’யும் அசைச்சொல்லே! ‘உங்களுக்குச் சிப்பாணி வருதாக்கும்’ – பாட்டி சொல்வாள்!

49 . உத்தமா (பாலி)
இஃது நம் ‘உத்தமம்’தான்!
‘இஃது உத்தமமான பேச்சு’ – சொல்வோ மல்லவா?
உத்தமமான குணம் கொண்டோர் ‘உத்தமர்’ ! ‘’உத்தமர் காந்தி’ – நம் தொடர்.

50 . உத்தரீயா (பாலி)
‘மேலாடை’ என்ற பொருளைத் தரும் பாலிச்சொல்!
‘உத்தரீயம்’ என நம் எழுத்துகளில் வருவதே இது.
பழைய #நள #தமயந்தி கதையில் இச் சொல்லை நாம் படித்துள்ளோம்.
#தரித்தல் – அணிதல்; தாங்குதல்
‘உ’ எனும் தமிழ் வேர் அடியாக ‘உத்த’ ‘மேல்’ எனும் பொருளைத் தந்தது.
கருத்தரித்தாள் பொன்னி – கருவைத் தாங்கினாள் பொன்னி
***
(கருவி நூல் : Poli – English Dictionary by T.W.Rhys Davids and William Stede, Pali Text Society , www.buddhistboards.com).
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Feb 23, 2023 11:38 am

பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (6)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

51 . உதகா (பாலி)
பாலியில் ‘உதகா’ என்றால் ‘நீர்’ என்பதே பொருள்.
தமிழில் ‘உதகம்’ என்றால் , நீர்.
‘கோடையில் உதக மண்டலம் நன்றாயிருக்கும்’ – சொல்கிறோம்.
குளிர் மேகநீர் மண்டலத்தையே ‘உதக மண்டலம்’ என்கிறோம்.

52. உதயா (பாலி)
பொருள் , ‘உதயம்’தான்!
சூரிய உதயத்தின்போது, சூரியன் முன்பாக நின்றுகொண்டு வணங்குவது #தமிழர் #வழிபாட்டு #இயல்பு.
‘உதயாதி நாழிகை’ என்று தமிழ்ச் சோதிடர்கள் 40 பக்க நோட்டில் எழுதுவார்கள்!
உதயாதி நாழிகை – ‘ சூரியன் உதித்த பின் இத்தனை நாழிகை கழித்து ’ என்பது பொருள்.

53. உதாசீனா (பாலி)
அரசு அலுவலகங்களில் பொதுமக்களை உதாசீனப் படுத்துகிறார்களே, அந்த ‘ உதாசீனம்’தான் இது!

54 . உதாஹரணா (பாலி)
#கடைப்போலிக்கு ஓர் உதாரணம் கொடு’- தமிழாசிரியர் இரண்டு மதிப்பெண் வினாவாக வினாத்தாளில் கேட்பார். இந்த ‘உதாரணம்’தான் பாலியில் ‘உதாஹரணா’!
காமராஜர் , ஓர் உதாரண புருஷராக வாழ்ந்தவர். பள்ளி விழாக்களில் பேசுவர்.
உதாரணம் – எடுத்துக்காட்டு
55. உதி (பாலி)
தமிழில் உள்ள ‘உதித்தல்’தான் இது.
‘எனக்கு மூளையில் அப்போது அது உதிக்கவில்லை’ – பேசுகிறார்கள்.

56. உதும்பரா (பாலி)
#வேதச் #சொல் இது.
தீயை உண்டாக்கும் #அரணிக்கட்டையை , அத்தி மரத்தில்தான் அமைப்பர். இந்த #அத்தி #மரமே ‘ உதும்பரா’ .

57. உன்னதா (பாலி)
மேலே ‘உத்தமா’ என்ற பாலிச்சொல் ஒன்றைப் பார்த்தோம்; அதைப்போன்றதே ‘உன்னதா’வும்.
‘உத்தமம்’ என்று நம் எழுத்துகளில் எப்படிப் பயில்கிறதோ அதுபோன்றே ‘உன்னதம்’ என்பதும் பயில்கிறது.
‘உன்னதம்’ , ‘உத்தமம்’ இரண்டுக்கும் ‘உ’தான் #வேர்(root). ஆனால் பொருளில் சன்ன வேறுபாடு உண்டு.
அவர் ’உத்தம’மான மனிதர்; அவர் பேச்சு ’உன்னத’மாக இருக்கும். வேறுபாடு விளங்கியதா?

58. கடம்பா (பாலி)
நம்மூர்க் கடம்ப மரமே ‘கடம்பா’ எனப் பாலியில் சுட்டப்படுகிறது.
பிறமொழி ஒப்பீட்டு ஆய்வில் , இது போன்ற இயற்கை சார்ந்த சொற்கள் சிறப்பிடம் பெறுகின்றன.
ஏனெனில், மரம் செடி கொடிப் பெயர்கள் அவை எந்த நிலத்தில் உருவாகின்றனவோ அந்த நிலமே அவற்றின் பூர்வீக நிலம்; அவற்றை எடுத்தாலும் பிற மொழிகள், அம் மூலப் பெயர்களையே பெரும்பாலும் பயன்படுத்தும்.
எனவே ‘கடம்பு’ , ‘கடம்பம்’ ஆகிய தமிழ்ச் சொற்களிலிருந்து போனதே பாலிக் ‘கடம்பா’

59. கட்டா (பாலி)
‘கட்டை’ என நாம் சொல்லும் அதே பொருள்தான் ‘கட்டா’வுக்கும்.
‘கட்டை’, ‘கட்டா’ இரண்டுமே மரக்கட்டையையே சுட்டுவன.

60. கடாஹா (பாலி)
நம்மூர்க் ‘கடகம்’தான்!
அகன்றுயர்ந்த நார்ப் பெட்டியே ‘கடகம்’.
‘சந்தைக்குப் போய்ப் பாட்டி ஒரு கடகம் நிறையப் பொருட்கள் வாங்கிவரும்’ – செட்டிநாட்டுப் பக்கம் சொல்வார்கள்.
இதைப் போன்ற பொருட் பெயர்கள் , மொழி ஒப்பீட்டாய்வில் தனித்த சிறப்பிடம் பெறுவன; சொல்லானது எங்கிருந்து எங்கே சென்றன என அறிய நமக்கு உதவுவன; சான்றளிப்பன.
***
(கருவி நூல் : Poli – English Dictionary by T.W.Rhys Davids and William Stede, Pali Text Society , www.buddhistboards.com).
***





முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Mar 04, 2023 12:15 pm


பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (7)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்


61. கமலா (பாலி)
‘கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ’ – தமிழர்கள் ஓதி இன்புற்றுள்ளனர்!
கமலம் – தாமரை
ஈற்றோசை மட்டும் மாற்றம் கொண்டுள்ளது.

62. கமண்டலு (பாலி)
முனிவர் கையில் நீர்க் கரகம் இருக்குமே, அதுதான் கமண்டலம்!
கமம் – நீர்
‘நீர் மண்டலம்’ என்ற பொருளில்தான் ‘கமண்டலம்’ வந்துள்ளது.
#தெலுங்குச் #சொற்கள் பலவற்றில் ஈற்று #உகரச் #சாரியை இடம்பெறும்; ‘நீளு’ , ‘செட்லு’ , ‘அடுகுலு’ என்றல்லாம் வரும். இதைப் போன்றே பாலியிலும் ‘கமண்டலு’ வந்துள்ளதை நோக்குவீர்!

63. கப்பா (பாலி)
பாட்டைப் , ‘பா’ என்றும் குறிப்பர். பாலியில் ‘கப்’பை முன்னே சேர்த்துக் ‘கப்பா’ என்று சுட்டியுள்ளனர். பாலியின் ‘கப்பா’வுக்குக் கவிதை என்பதே பொருள்.

64 . கபலா (பாலி)
கபலா – கவளம்
‘காய்நெல் லறுத்துக் கவளம் கொளினே’ – சங்க இலக்கியம்.
வ- ப எழுத்து வேறுபாட்டைக் கவனிக்க.

65. கப்பூரா (பாலி)
கப்பூரா – கற்பூரம்
‘கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ’ – ஓதியுள்ளோமே!
‘கற்பூரம்’, #மரூஉவாக வந்தால் , ‘கப்பூரம்’ என்றுதான் ஆகும்.
#தமிழ்ச் #சொல்லானது #பாலியில் #வரும்போது, #ஈற்றோசை #மாற்றம் #நடக்கிறது இந்த இடமும் சான்று.

66. கஞ்சகா (பாலி)
கஞ்சகா – கஞ்சி
‘காய்ச்சல் இன்னும் விடலை; கஞ்சி வச்சுக் குடுங்க’- பக்கத்து வீட்டு அம்மாள் சொல்வாள்.
‘கஞ்சி’ என்ற சுருக்கச் சொல்லானது, ‘கஞ்சகா’ என்று விரிந்துள்ளதை நோக்குவீர்.
தொன்மைச் சொற்கள் சுருக்கமாயும் , பிற்காலச் சொற்கள் விரிவாயும் அமைவது #மொழியியல் #பண்பு.
சங்கச் சொல், ‘கடு’ , கசப்பைக் குறிக்கும்; ஆனால் இன்று ‘கடு’ என்றால் நமக்கு விளங்காது; ‘கசப்பு’ என்ற விரிந்த சொல்தான் விளங்குகிறது.

67. கஞ்சுகா (பாலி)
கஞ்சுகா – சட்டை
‘கஞ்சுக மாக்கள்’ என்று சிலம்பில் வருகிறது; இதே பொருள்தான்.
‘கமம்’ என்ற சொல்லின் அடியாகப் பிறந்து, ‘கமஞ்சு’ ஆகிப் பின், ‘கஞ்சு’ ஆகியிருக்க வேண்டும். அஃதாவது, உடம்பைத் தழுவியபடி , நிறைந்து அமைவதால், ‘கமம்’ பொருந்துவதாயிற்று.

68. கணவீரா (பாலி)
கணவீரா – செவ்வரளி
இதுதான் தமிழ்க் ‘கணவீரம்’.
ஈற்றெழுத்து மாற்றத்தைக் கவனிக்க.

69 . கடுகட்டா (பாலி)
சற்றுமுன் ‘கடு’ என்றொரு பழந்தமிழ்ச் சொல்லொன்றைக் குறிப்பிட்டோம்.
அதே ‘கடு’வைத்தான் , பாலி, ‘கடுகட்டா ’ என்றது அப்போது.
இதன் மூலம், தமிழானது பாலிக்கு அடிப்படையாக அமைந்த காலத்தை ஒருவாறு ஊகிக்கச் சிறிது வெளிச்சம் கிடைக்கிறது.

70. கம்மாரா (பாலி)
கம்மாரா – கம்மாளன்
பழந்தமிழ் நூற்களில் #‘கம்மியர்’ எனப்படுவோர் , இக் கம்மாளரே. #‘கைவினைஞர்’ என்றும் இவர்கள் தமிழகத்தில் குறிப்பிடப் படுவதுண்டு.
#வேதத்தில் , #‘கர்மாரா’ எனப்பட்டது இவர்களையே.
இச் சொல்லைப் பொறுத்தவரையில், பாலி மொழியானது, தமிழுக்கு நெருக்கமாயும் வேதச் சொல் அமைவதற்கு இடையிலே ‘ர்’ தேவைப்பட்டது என்பதையும் அறிகிறோம்.
***
(கருவி நூல் : Poli – English Dictionary by T.W.Rhys Davids and William Stede, Pali Text Society , www.buddhistboards.com).
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Mar 06, 2023 1:03 pm

பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (8)

71. கம்பளின் (பாலி)
கம்பளின் – கம்பளி
பாலியில் , ஒரு னகர ஒட்டு மட்டும் வந்து ஒட்டிக்கொண்டது.
கம்பு கம்பாக , விறைப்பாக , மயிர்கள் அமைந்து காணப்படுவதால் , ‘கம்பளி’ ஆனது; தூய தமிழ்ச் சொல்.

72 . கம்பா (பாலி)
கம்பா – அசைவு
‘கரக் கம்பமும் சிரக் கம்பமும் செய்தார்’ – பழைய தமிழ் நூற்களில் எழுதுவார்கள்!
சிரக் கம்பக் – தலையை ஆட்டுதல்; அசைத்தல்.

73 . கருணா (பாலி)
கருணா – கருணை
தமிழ்த் தொடர்களில் ‘கருணா மூர்த்தி’ என்றும் வரும்.
நாம் பார்த்துவருவது போல, #‘ஆ’ #ஈறு #பாலிச் #சொற்களுக்கு ஒரு #பழக்கமான #ஈறாகவே உள்ளது.

74 .கலசா (பாலி)
கலசா – கலசம்
கோயிற் குடமுழுக்கில் , கோபுர உச்சிக் கலசத்தில் நீரூற்றுவார்களே , அந்தக் ‘கலசம்’தான்.

75. கலஹா (பாலி)
’விழாவில் கலகம் விளைவித்ததாக மூவர் கைது’ – அவ்வப்போது செய்தி வரும். பாலிக் ‘கலஹா’வுக்கும் இதே பொருள்தான்!

76. கவசா (பாலி)
மார்பில் அம்பு தைக்காவாறு போர் வீரர்கள் அணியும் உலோகத்தாலான தடுப்புதான் கவசம்.
‘கவசம்’ என்ற தமிழே பாலியில் ‘கவசா’ ஆகியுள்ளது.
‘கவ்’ என்பதன் அடியாகப் பிறந்த தமிழ்ச் சொல் , ‘கவசம்’.
‘கவசம்’ சங்க இலக்கியத் தமிழ்ச் சொல்.

77. கலகலா (பாலி)
‘கலகல என்னும் வளையோசை’ என்று திரைப்படப் பாடல்களில் வருமே அதே ‘கலகல’தான், பாலியில் ‘கலகலா’ என வந்துள்ளது.
பொருளற்ற #ஓசையானது எப்படிச் சொற்களானவை #பிறமொழி #புகும்போது #கூடவே #செல்கின்றன பாருங்கள்!

78 . காவ்யா (பாலி)
‘காவியம்’, ‘காப்பியம்’ இரண்டுமே தமிழ்ச் சொற்கள்தாம்; இதை நான் எனது ‘தமிழில் காப்பியங்கள்’ (சென்னைப் பல்கலைக் கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டது) என்ற நூலில் விளக்கியுள்ளேன்.
காவ்யா – காவியம்

79. கசா (பாலி)
கசா- கசை – சவுக்கு (whip)
‘இவனுக்கு நூறு கசையடி கொடுங்கள்’ – பழைய தமிழ் அரச நாடகங்களில் வசனம் வரும்!

80. காமா (பாலி)
‘காமா சோமா’வில் சேர்ந்தது அல்ல இது.
காமா – காமம் (இச்சை)
தமிழ்க் ‘காமத்துப் பால்’ நாம் அறிந்ததுதானே?
###
(கருவி நூல் : Poli – English Dictionary by T.W.Rhys Davids and William Stede, Pali Text Society , www.buddhistboards.com).
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக