புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_m10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10 
11 Posts - 73%
kavithasankar
கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_m10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10 
1 Post - 7%
prajai
கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_m10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10 
1 Post - 7%
mohamed nizamudeen
கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_m10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10 
1 Post - 7%
Barushree
கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_m10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_m10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10 
65 Posts - 82%
mohamed nizamudeen
கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_m10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_m10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10 
2 Posts - 3%

ஆனந்திபழனியப்பன்
கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_m10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10 
1 Post - 1%
Barushree
கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_m10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_m10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_m10கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 22, 2023 5:19 pm

கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் 15475010

கரிசலாங்கண்ணி இலையில் உள்ள சத்துக்கள்:

நீர்=85%
மாவுப்பொருள்=9.2%
புரதம்=4.4%
கொழுப்பு=0.8%
கால்சியம்=62 யூனிட்
இரும்புத் தாது=8.9 யூனிட்
பாஸ்பரஸ்=4.62%

இவை அனைத்தும் 100 கிராம் #கரிசலாங்கண்ணி இலைச்சாற்றில் உள்ள சத்துகள்.

‘ஒரு மூலிகையில் இரும்பு விளையும்’ என்று சொல்லுமளவுக்கு இரும்புச் சத்தை வாரி வழங்கும் ‘#மூலிகை இயந்திரம்’ கரிசாலை!

முதுமைக்கான அறிகுறிகளை எட்டிப்பார்க்க விடாமல் இரும்புக்கரம் கொண்டு அடக்கும் வலிமையான மூலிகை இது.

வயலோரங்களிலும் நீர்ப்பாங்கான இடங்களிலும் நிறைவாய்த் தென்படும் இந்தக் கற்ப மூலிகையைப் பற்றிய வள்ளலாரின் பதிவுகள் அதிகம். கரிசாலையிலிருந்து பிறப்பெடுக்கும் ‘#கரிசாலை மை’ கண்களுக்கு அழகூட்டுவது மட்டுமல்லாமல், தலைவலியையும் கண் நோய்களையும் நீக்கும் ‘அஞ்சனமாக’ வழக்கத்திலிருந்தது!

பெயர்க்காரணம்:

கரிச்சை, கரியசாலை, கரிக்கை, கைகேசி, கரிக்கண்டு, கையாந்தகரை, பிருங்கராஜம், தேகராஜம், கரிசணாங்கண்ணி, கரிசனம், பொற்றலைக்கையான் (மஞ்சள் கரிசாலை) ஆகிய வேறு பெயர்களை உடையது.

கரிசல்+ ஆம்+காண்+நீ (கரிசலாங் கண்ணி); இதன் இலைச் சாறு கரிசல் நிலம் போல, கருமையான சாயத்தைக் கொடுப்பதால் இப்பெயர்.

அடையாளம்:

படர்ந்தும் சற்று நிமிர்ந்தும் வளரக்கூடிய சிறுசெடி. இலைகளின் மேற்பரப்பு சொரசொரப்பாக இருக்கும். வெள்ளை, மஞ்சள் நிற மலர்கள், இனத்தைப் பிரித்துக் காட்டும். ‘அஸ்டரேசியே’ (Asteraceae) குடும்பத்தைச் சார்ந்த இதன் தாவரவியல் பெயர் ‘எக்லிப்டா புரோஸ்ட்ரேடா’ (Eclipta prostrata). ‘விடிலோலேக்டோன்’ (Wedelolactone), ‘பீட்டா அமைரின்’ (Beta-amyrin), ‘லுடியோலின்’ (Luteolin) போன்ற முக்கியத் தாவர வேதிப்பொருட்கள் இதிலுள்ளன.

உணவாக:

கோடைக்கால மதிய வேளைகளில், நீர்மோரோடு கரிசாலை இலைச் சாற்றைச் சிறிதளவு கலந்து பருக, உடல் குளிர்ச்சியடைவதோடு, வெப்பச் சோர்வைச் சமாளிக்கக்கூடிய ஆற்றலும் கிடைக்கும். துவரம் பருப்பு சேர்த்து சமைத்த ‘கரிசாலை-பருப்புக் கடையலை’ அவ்வப்போது சுவைத்துவர, உடல் தளர்வடையாமல் தேவைக்கேற்ப உழைப்பதோடு கண்பார்வையும் கூர்மையடையும்.

பசியை அதிகரித்து ஊட்டங்கள் முழுமையாக உட்கிரகிக்கப்படவும் கரிசாலை உதவுகிறது. இதன் சாற்றுடன் சிறிது வெண்ணெய் சேர்த்து விழுங்க, தொண்டைவலி குணமாகும்; குடற் கிருமிகளையும் வெளியேற்றும். சுவாசப் பிரச்சினைகளுக்கான உணவாகக் கரிசாலையைப் பயன்படுத்தலாம். கரிசாலையின் பலன்களைப் பெற, இதன் சாற்றுடன் பனைவெல்லம் சேர்த்து, லேகிய பதத்தில் செய்து சுவையாகவும் சாப்பிடலாம். கொடம்புளியும் கரிசாலையையும் சம அளவு எடுத்து புன்னைக் காயளவு சாப்பிட்டுவர, மூல நோயின் தாக்கம் குறையும்.

மருந்தாக:

#கல்லீரல் செல்களுக்குப் புத்துயிர் அளித்து, ‘கல்லீரல் பாதுகாவலனாக’ செயல்படும் முக்கிய மூலிகை கரிசாலை என்று ஆய்வுகள் பதிவிடுகின்றன. உடலின் நோய் எதிர்ப்பாற்றலை முடுக்கிவிடும் ஆற்றல் (Immuno-stimulatory) படைத்தது கரிசாலை. புற்று செல்களுக்கு எதிரியாகச் செயல்படும் நுண்கூறுகளைக் கொண்டிருக்கிறது. ரத்தத்தில் #கொழுப்பு_வகைகள் அதிகரித்து விடாமல் கட்டுப்படுத்தும் ஆதாரமாகக் கரிசாலை செயல்படுவதாக ஆய்வு குறிப்பிடுகிறது. எதிர்-ஆக்ஸிகரணி தன்மை உடையதால், கரிசாலையை வைத்து பல்வேறு கற்ப மருந்துகள் வழக்கத்தில் உள்ளன. பொற்றலை கையாந்தக்கரை பொன்னிறமாக்கும் உடலை…’ எனும் அகத்தியர் பாடலின் மூலம், மஞ்சள் கரிசாலை யின் மேன்மையை அறியலாம்.

வீட்டு மருந்தாக:

குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, இருமலுக்கு, இதன் இலைச் சாறு இரண்டு துளியோடு தேன் சேர்த்துக் குழப்பி நாவில் தடவ, இயற்கையாய் இருமல் தணியும். இலைச் சாறு, #நல்லெண்ணெய் சேர்த்து தயாரிக்கப்படும் மருந்தே, அக்கால கிராமங்களில் இருமலுக் கான டானிக்! கரிசாலையை #சூரணம் செய்து, இளநீரில் ஒரு மாதமும் தேனில் ஒரு மாதமும் உட்கொள்ள நரைதிரை மாறும் என்கிறது ‘தேரன் யமக வெண்பா’. இதன் இலைகளை மென்று சாப்பிட்டு வாய் கொப்பளிக்க, பல் ஈறு பலமடையும்.

‘அயச் செந்தூரம்’ எனும் சித்த மருந்தைக் கரிசலாங்கண்ணி சாற்றின் அனுபானத்தில் கொடுக்க, ரத்தக் குறைவு, உடல் வீக்கம் குணமாகும். ‘அயபிருங்கராஜ கற்பம்’ எனும் சித்த மருந்து, ரத்த சோகையில் சிறப்பாகச் செயல்படக் கூடியது. கரிசாலை, மிளகின் உதவியுடன் உருவாக்கப்படும் மாத்திரைகள், #காமாலை, உடல் வீக்கத்துக்கான பாரம்பரிய மருந்து.

கரிசாலை சூரணத்தோடு #திப்பிலி சூரணத்தைத் தேனில் குழைத்துக் கொடுக்க, சளி, இருமல் அமைதியடையும். கரிசாலை கற்ப மாத்திரை, கையான் எண்ணெய் என சித்த மருத்துவத்தில் பல்வேறு வகைகளில் பயன்படும் கரிசாலை, சில வகையான காமாலைக்கான அற்புத மருந்து.

#ஆமணக்கெண்ணெய், கரிசாலைச் சாறு, சிறிது பூண்டு சேர்த்து பதமாய்க் காய்ச்சி தயாரிக்கப்படும் மருந்து, பித்த நோய்களின் ஆட்டத்தைக் கட்டுப்படுத்தும் வல்லமை பெற்றது. கரிசாலைச் சாறு, நெல்லிக்காய்ச் சாற்றின் உதவியுடன், நல்லெண்ணெய்யை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்படும் தலைமுழுகும் எண்ணெய்யை அவ்வப்போது பயன்படுத்த, உடலில் அதிகரித்திருக்கும் பித்தம் சாந்தமடையும்.

கண், காது நோய்களுக்கான மருத்துவ எண்ணெய்யும்கூட! உள்ளுக்கு மருந்தாகப் பயன்படும் ‘கரிசாலை மடக்குத் தைலம்’, தோல் முதல் உள்ளுறுப்புகள்வரை வலுவைக் கொடுக்கக்கூடியது. கரிசாலைச் சாறு, செம்பரத்தை, கறிவேப்பிலை ஆகியவற்றைத் தேங்காய் எண்ணெய்யில் சேர்த்துக் காய்ச்சிப் பயன்படுத்த, கூந்தல் ஆரோக்கியத்துக்கு நீண்ட நாள் உத்தரவாதம் கிடைக்கும்.

#கரிசாலை, #அம்மான்பச்சரிசி, #தும்பை, #மிளகு, ஆகியவற்றை அரைத்து வெள்ளாட்டுப் பாலில் கலக்கி, பனங்கற்கண்டு சேர்த்துக் கொடுக்க, சிறுநீர் எரிச்சல் குறைந்து, உடல் வீக்கம் வற்றும்.

கரிசாலை… உடல் நலமோடு பயணிக்க தேவையான இரும்புச்சாலை..!

[thanks]டாக்டர் வி.விக்ரம்குமார்
அரசு சித்த மருத்துவர் [/thanks]

#சித்த_மருத்துவம் #கரிசாலை #கரிசலாங்கண்ணி #இரும்புச்_சத்து #இயற்கை_மருத்துவம்

கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 22, 2023 7:25 pm

கரிசாலையிலிருந்து பிறப்பெடுக்கும் ‘கரிசாலை மை’ கண்களுக்கு அழகூட்டுவது மட்டுமல்லாமல், தலைவலியையும் கண் நோய்களையும் நீக்கும் ‘அஞ்சனமாக’ வழக்கத்திலிருந்தது!

உண்மைதான் சிவா. எனக்கு இன்றும் நினைவில் உள்ளது.எனது அந்த காலங்களில் ( 1948) 
கரிசலாங்கண்ணி கீரை வாங்கி அதை சாறெடுத்து, புதிதாக வாங்கிய மண் சட்டியில் 
அதன் வெளிப்புறத்தில் அந்த சாறை தடவி, சிறிய அகல் விளக்கில் விளக்கெண்ணெய் விட்டு 
பஞ்சு திரி கொண்டு பற்ற வைத்து படியும் கரும் புகை தூளை எடுத்து கண்ணுக்கு மை தயாரிப்பார்கள் .

இப்போது அதெல்லாம் கனவாகி போச்சு. 

ஏதாவது இது போல் பதிவுகள் வந்தால் மட்டும் நினைவுக்கு வருகிறது. அநியாயம் அநியாயம்

@சிவா

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக