புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_c10போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_m10போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_c10 
51 Posts - 44%
heezulia
போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_c10போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_m10போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_c10 
48 Posts - 41%
mohamed nizamudeen
போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_c10போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_m10போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_c10போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_m10போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_c10 
3 Posts - 3%
Dr.S.Soundarapandian
போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_c10போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_m10போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_c10போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_m10போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_c10 
2 Posts - 2%
prajai
போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_c10போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_m10போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_c10 
2 Posts - 2%
Manimegala
போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_c10போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_m10போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_c10போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_m10போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_c10போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_m10போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_c10போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_m10போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_c10 
417 Posts - 49%
heezulia
போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_c10போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_m10போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_c10 
284 Posts - 33%
Dr.S.Soundarapandian
போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_c10போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_m10போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_c10போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_m10போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_c10போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_m10போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_c10 
28 Posts - 3%
prajai
போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_c10போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_m10போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_c10போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_m10போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_c10போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_m10போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_c10போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_m10போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_c10போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_m10போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போகி பண்டிகை சொல்லும் தத்துவம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 14, 2023 2:51 pm

பொங்கலுக்கு முந்தைய நாள் போகி கொண்டாடப்படும்

இந்துமதம் அறிவியலும் ஆன்மீகம் கலந்தது என நாம் அறிவோம், அப்படி போகி பண்டிகையிலும் ஏராளமான தத்துவமும் மருத்துவமும் உண்டு

மறுநாள் பண்டிகையெனில் முதல் நாள் வீட்டை சுத்தம் செய்தல் இந்துக்கள் மரபு , “அன்பே சிவம்” என்று மட்டுமல்ல “‘சுத்தத்வாத் சிவம் உச்யதே’ என்கிறது வேதம்.

அதாவது சுத்தமே சிவம்.

போகி என்றால் அதை பல அர்த்தத்தில் சொல்லமுடியும், இந்துமதமும் அதை சொல்லிற்று எனினும் அதன் பொருள் ஒன்றே. அதாவது பழையன கழிந்து புதியன பெறுதல்

தைபொங்கலுக்கு சீதேவி நம் வீட்டுக்கு வருவாள் அதற்கு முந்தைய நாளில் மூதேவியினை அனுப்பிவிட வேண்டும், அழுக்கும் பழைய பொருட்களும் இருக்குமிடத்தில் மூதேவி இருப்பாள், சுத்தமான இடத்தில் இருக்கமாட்டாள்ம், மூதேவியினை போக்கும் நாளே போகி என்றார்கள்

உண்மையில் சுத்தம் இருக்குமிடத்தில் செல்வம் இருக்கும், கூடவே அதை அனுபவிக்க அமைதியும் இருக்கும் மேல்நாடுகளிலும் சில கிழக்காசிய நாடுகளில் அதை கண்கூடாக காணலாம்

சுத்தம் அவ்வளவு முக்கியமானது, இது ஆன்மீகம் என்றால் ஆன்மீகம், உளவியல் என்றால் சுத்தமான இடத்தில் மனம் புத்துணர்ச்சி கொள்கின்றது தெளிவாகின்றது, தெளிந்த சிந்தனை வெற்றியினை கொடுக்கின்றது என்பது

இதைத்தான் அன்றே தத்துவரீதியாக சொல்லி வைத்தது இந்துமதம்

ஏன் எரிக்க சொன்னார்கள், இந்து தத்துவம் அதுதான் குப்பை மேடு என ஒன்றை உருவாக்க அந்த அறிவார்ந்த சமூகம் விரும்பவில்லை. குப்பைகளை உரமாக்கு முடியாதவற்றை சாம்பலாக்கி மண்ணோடு கலந்துவிடு என சொன்னது உயிர்நீங்கிய கூடு உட்பட‌

இதனாலே இன்றிருக்கும் குப்பை கூளம் அன்று இல்லை, இன்று ஒவ்வொரு நகரத்தின் வெளியே மிக மிக அலங்கோலமாக நோய்களின் பிறப்பிடமான, அரசுகளே என்ன செய்ய என தெரியாமல் திணறும் அந்த குப்பை கலாச்சாரம் அன்று இந்துக்களிடம் இல்லை

வேண்டாதது எல்லாம் எரித்துவிடு என்பதில் ஊரும் நாடும் அவ்வளவு சுத்தமாக இருந்தது

போகிக்கு இன்னொரு காரணம் இந்திரன், அவனின் பெயரே போகி, அதாவது போகங்கள் எனும் இன்பத்தை கொடுப்பவன் அதன் அதிபதி, தை பிறந்து செல்வம் கொழிக்க போகின்றது அதன் அடிப்படையின் மழைக்கு காரணமான இந்திரனை நினைப்பதும் இந்நாளே

மழைக்கு அதிபதியான தெய்வத்திற்கு நன்றி சொல்லும் காட்சி, அதுவும் தீ வளர்ந்து நன்றி சொல்லும் காட்சி தமிழ் இலக்கியங்களில் உண்டு , போகி பண்டிகையில் அதன் சாயலை காணலாம்

"பொச்சாப்பு இலாத புகழ் வேள்வி தீ ப்போல
எச்சாரரும் மின்னும் மழை” (கார் நாற்பது பாடல் ஏழு)

“புகழ்மிகு சாந்தெறிந்து புல் ரூட்டிப்
புண் கொடுக்கப் பெற்ற புலவோர் துகள் பொழியும்
வானுயர் வெற்ப இரவில் வர ல்வேண்டா
யானை யுடைய சுரம் “ (திணைமொழி ஐம்பது பாடல் 1)

“குன்றக் குறவன் ஆர்ப்பின் எழிலி
நுண்பல் அ ழிதுளி பொழியும் நாட
நெடுவரைப் படப்பை நம்மூரக்
கடுவரல் அருவி காணினும் அழாமே” (ஐங்குறுநூறு 187, 188, 189, 190)

ஆம், இந்திரனுக்கு நன்றி செலுத்தி அக்காலத்தில் ஒரு யாகம் செய்வார்கள், அதில் பல பொருட்களை கலந்து எரிப்பார்கள், அக்காலத்தில் அப்படி எல்லாம் வழக்கம் இருந்திருக்கின்றது

கரும்பும் பொங்கலும் அக்கால சித்திரை மாதங்களில் நடந்த இந்திரவிழாவில் படைக்கபட்டவை என்பது சங்க கால பாடல்கள் சொல்லும் வரி

அதாவது இந்திரனை கரும்பும் பொங்கலும் வைத்து கொண்டாடும் வழக்கம் இருந்திருக்கின்றது

கண்ணனை சோதிக்க இந்திரன் மழைபொழிந்ததும், கண்ணன் கோவர்த்தன மலையினை தூக்கி மக்களை காத்து இந்திரனின் கர்வம் அடக்கியதும் இந்நாளே என்பார்கள்

இன்றும் கிராமங்களில் பொங்கல் என்பது தமிழர் உக்ஷவர் பண்டிகை அல்ல எல்லாம் அல்ல, அது ஒரு ஊர் விழா, கோவில் விழா

அன்று வீட்டில் காப்பு கட்டுவார்கள், வேப்பிலை ஆவாரை கருந்துளசி இலை எல்லாம் கலந்து காப்புகட்டி வாசலில் தொங்கவிடுவார்கள்

இந்துமதம் முன்னோர் வழிபாட்டை வலியுறுத்தும் மதம் என்பதால் பித்ருவழிபாடும் உண்டு, குடும்பத்தில் மரித்த கன்னி பெண்களுக்கு சேலை வளையல் எல்லாம் வைத்து வழிபடுவார்கள்,

மறுநாள் அவர்கள் வந்து ஆசீர்வதிக்க அழைக்கின்றார்களாம்

ஏன் இந்த வழக்கத்தை வைத்தார்கள்?

அங்கேதான் இருக்கின்றது நன்றிகடன், அந்த வயல்களும் கழனிகளும் முன்னோர்களால் உருவாக்கபட்டவை அல்லவா?, அவர்களுக்கும் அதில் உழைத்த எல்லோருக்கும் நன்றி கூறும் நிகழ்வு

வீடுகளின் முன்னோர் வழிபாடும் படையலும் நடைபெறும் குலதெய்வத்துகான பூஜை உண்டு வாசல் நிலைகதவில் மஞ்சள் குங்குமம் சாற்றி தெய்வங்களை வரவேற்பார்கள்

வாசலில் அந்த காப்பு கட்டுகின்றார்களே ஏன்? அது சமயம் என்றால் அம்பாள் என்றால் அம்பாள், தெய்வம் என்றால் தெய்வம்

அதன் மகா முக்கிய தத்துவம் பண்டிகைக்கு பலர் வீடுகளுக்கு வருவார்கள் நாமும் செல்வோம் அப்பொழுது நோய் தடுக்கும் கிருமி நாசினியாக இந்த வேப்பிலையும் ஆவாரையும் கருந்துளசியும் கட்டாக காவல் இருந்தன‌

மதம் இல்லா இனம் என உலகில் எதுவுமே இல்லை. மதம் அவர்களின் அடையாளமும் கலாச்சாரமும் அங்கீகாரமும் அறிவின் அடையாளமாய் இருந்தது

தமிழன் இந்துவாய் இருந்ததால் அவனும் தெய்வதுக்கு நன்றி சொல்ல கொண்டாடினான், நிச்சயம் மறுநாள் சூரியன் உட்பட எல்லா சக்திகளுக்கும் மறுநாள் மாட்டுக்கும் நன்றி சொல்லி கொண்டாட அவன் முடிவெடுத்தான்

அதற்கு முதல்நாளில் விளைச்சலுக்கு காரணமான மழையின் அதிபதி இந்திரனுக்கு நன்றி சொன்னான், யாகம் செய்து நன்றி சொன்னான்

தன் வயலை உருவாக்கிய முன்னோர்களுக்கு பித்ருவழிபாடு என நன்றி சொன்னான், பழையதை எரித்து சுத்தபடுத்தி தன்னை புதுபித்து கொண்டான்

எவ்வளவு அழகான ஏற்பாடு? எவ்வளவு அழகான விழாக்கால தொடக்கம்?

ஒரு பண்டிகையில்தான்உளவியல், நன்றிகடன், தத்துவம், ஆன்மீகம், அறிவியல், பக்தி என எவ்வளவு விஷயங்கள்?

ஒரே ஒரு பண்டிகையில் சுற்றுபுறத்தை சுத்தமாக்கி, முன்னோர்களுக்கு நன்றி தெரிவித்து, கிருமி நாசினி விஷயங்களை செய்து ஆரோக்கியத்தை பலபடுத்தி, மழை என்பது கடவுள் அருள்வது என அவனுக்கு நன்றி சொல்ல வைத்து, பழையதை எரித்துவிடு சாம்பல் உரமாகும் என அதிலும் விவசாய அனுகூலத்தை சொல்லி எவ்வளவு உன்னதமான ஏற்பாட்டை செய்தனர் முன்னோர்

ஏன் இந்த மதம் காலமெல்லாம் நிலைத்திருக்கின்றது என்றால் இதனால்தான்

அந்த முன்னோர் இந்துவாய் இருந்தனர், அந்த பரந்த மனப்பான்மையில் சிந்தித்தே இப்படிபட்ட அதி உன்னத ஏற்பாடுகளை அவர்களால் செய்யமுடிந்தது

ஒரு நல்ல இந்துவாய் உங்களை உணருங்கள், உங்கள் மனம் விசாலபடும் , பெரும் நற் சிந்தனை உருவாகும்

அந்த சிந்தனையில் அக்காட்சியினை கொண்டுவரலாம், ஞானம் பிறக்கும்

அக்கால இந்திரனுக்கு போகி நாளில் யாகம் செலுத்தும்பொழுது பல பொருட்களை இடும் பொழுது நம்முடைய அகங்காரம், கோபம், கவுரவம் இன்னும் பல கெட்ட விஷயங்களையும் அக்னி எரிக்க வேண்டும் என பிரார்த்திப்பார்களாம்

ஆம் கோவர்த்த மலையினை தூக்கி இந்திரனின் கர்வத்தை அடக்கினான் கிருஷ்ணன், அன்றே இந்திரனின் அகங்காரம் அழிந்ததாம்..

ஒவ்வொரு மனிதனும் அந்த அகங்காரத்தை பொசுக்க வேண்டிய நாள் இது

ஆம் இந்த அழகான பூமி மனிதனால் வந்ததல்ல, பருவம் தவறாமல் வரும் மழையும், என்ன விதைத்தாலும் அள்ளி கொடுக்கும் பூமியும் அவன் உருவாக்கியது அல்ல‌

விவசாயத்து பயன்படும் மரமும் மாடும் இன்ன பிறவும் எதுவும் மனிதனால் உருவாக்கபட்டது அல்ல, அதன் மூலம் இங்கேயே பரம்பொருளால் உருவாக்கபட்டது

மனிதன் என்பவன் இவற்றை எல்லாம் பயன்படுத்த உரிமை பெற்றிருக்கின்றான், மற்ற உயிர்களுக்கு இல்லா விஷேஷ ஞானம் அவனுக்கு வழங்கபட்டிருக்கின்றது

எல்லா உயிர்களும் மனிதனுக்கு ஒவ்வொரு வடிவில் உதவிகொண்டே இருக்கின்றன, கண்ணுக்கு தெரிந்து சில கண்ணுக்கு தெரியாமல் பல‌

நிலா வருவதும் இன்னும் பல வானியல் அதிசயங்களும் மேகமும் மழையும் மானிடன் இங்கு வாழவே

இந்த பெரும் பிரமாண்டத்தை நினைக்க நினைக்க மனித மனம் ஒடுங்கும், ஆம் ஏன் மனிதனுக்கு இவ்வளவு வசதிகளை கொடுத்தான் பரம்பொருள்

மானிடன் ஒவ்வொரு நிலையிலும் தன்னை உணர்ந்து முழு ஞானம் அடைந்து அவன் தன்னிடம் திரும்பிவரவேண்டும் என்பதற்காக..

போகியும் பொங்கலும் அதை நினைத்து பார்க்க வேண்டிய நாள், சூரியன் சந்திரன் மேகம் மழை நிலம் காற்று சக உயிர்கள் இன்னும் பஞ்சபூதமாய் நிலைத்திருக்கும் அந்த பரம்பொருள் தான் இந்த பூமியில் வாழ வரமருளிய நன்றிக்கு அவனை நினைத்து பார்க்கும் நாள்

பண்டையஇந்து தமிழன் அதை ஆத்மார்த்தமாக செய்தான், அதை போகியில் நன்றியாக தொடங்கினான்

“ஏ பரம்பொருளே, விளைந்து கிடக்கும் நெல்லும் கரும்பும் மஞ்சளும் என் உழைப்பால் வந்ததல்ல, நான் அதற்கு சொந்தக்காரனும் அலல்

மழை கொடுத்தவன் நீ, நிலம் படைத்தவன் நீ, விதை படைத்தவன் நீ, காற்றும் ஒளியும் கொடுத்தவன் நீ, உழைக்க என்னை படைத்தவனும் நீ..

என்னால் ஆனது ஒன்றுமே இல்லை

என்னை படைத்து என் பசிபோக்க சகலத்தையும் படைத்து என்னிடம் கொடுத்தாய், விளைச்சலின் மூலமே நீ. உன்னை வணங்க ஆயத்தமாகின்றேன்”

போகி பண்டிகை சொல்லும் தத்துவம் அதுவே,

அது இந்துக்களின் பெரும் ஞானத்தையும் நன்றிகடனையும் உலகுக்கு எக்காலமும் சொல்லும் விழா

பிரம்மரிஷியின் முகநூல் பதிவு



போகி பண்டிகை சொல்லும் தத்துவம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 14, 2023 5:28 pm

அருமையான தகவல்கள்

நன்றி சிவா



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக