புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு - Page 2 Poll_c10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு - Page 2 Poll_m10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு - Page 2 Poll_c10 
96 Posts - 49%
heezulia
கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு - Page 2 Poll_c10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு - Page 2 Poll_m10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு - Page 2 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு - Page 2 Poll_c10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு - Page 2 Poll_m10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு - Page 2 Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு - Page 2 Poll_c10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு - Page 2 Poll_m10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen

prajai
கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு - Page 2 Poll_c10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு - Page 2 Poll_m10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு - Page 2 Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு - Page 2 Poll_c10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு - Page 2 Poll_m10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

Geethmuru
கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு - Page 2 Poll_c10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு - Page 2 Poll_m10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு - Page 2 Poll_c10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு - Page 2 Poll_m10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு - Page 2 Poll_c10 
223 Posts - 52%

137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

16 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Mon Oct 17, 2022 3:01 pm

First topic message reminder :

அன்புடையீர்,

எனக்கு பல தாய்மார்கள் இருக்கிறார்கள்..

1) என்னைப் படைத்த உலகாளும் அகிலாண்டேஸ்வரியான அம்பிகை ஒரு தாய்..
2) என்னையும் உங்களையும் தாங்கும் பூமித்தாயான பூமாதேவி ஒரு தாய்.
3) நமக்காக ரத்தம் சிந்திய பல தியாகிகளின் தவப்பயனால் தலைநிமிர்ந்த என் பாரதத்தாய் ஒரு தாய்.
4) சங்கத்தில் பூப்படைந்து இன்று எங்கும் நிறைந்திருக்கும் சிங்கத் தமிழ்த்தாயும் ஒரு தாய்.
5) என்னைப் பத்து மாதம் சுமந்து, சத்தான பாலூட்டி
அதனால் எத்தனையோ இடர்பட்டு என்னை வளர்த்து வித்தகனாக்கிய என் பெற்ற தாய் என் முதல் தாய்..
6) நான் காதலிக்கும் அன்பிற்குரிய பெண்ணாய், என் அன்னைக்கு மருமகளாகவும் எனக்கு மறுதாயாகவும் விளங்கும் எந்தன் ஆருயிர் இன்னொரு தாய்..

இப்படி பல தாய்களுக்கு மகனாகத் திகழ எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும்? என் தமிழை அரங்கேற்ற வாய்ப்பு கொடுத்த ஈகரையையும் தாயாக நினைப்பதில் எனக்கு மகிழ்ச்சி...

அதனால், கடந்த சில மாதங்களில் நான் எழுதிய அனைத்துக் கவிதைகளையும் ஒரே பதிவில் பதிவு செய்ய ஆசை கொண்டு இதைப் பதிவு செய்கிறேன். உங்களது கருத்துகள் மற்றும் அறிவுரைகளை வரவேற்கிறேன்.. இதே பதிவில் அடுத்தடுத்து என் கவிதைகளை வெளியிடுகிறேன்...

அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/

avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Mon Oct 17, 2022 3:12 pm

நீயே என் உயிர் - தமிழ்க் கவிதை (நேரிசை வெண்பா)
****************************************************************************

உன்னை விடயிந்த பூமியிலே வேறெதுவும்
பொன்பொருளும் பூவும் உயர்வில்லை - என்னவளே!
நீயின்றி நானில்லை உன்னை இழந்துவிட்டால்
தீயாய் எரியும் மனம்.

எனக்காக பூமியில் வந்து பிறந்த
மனக்கனவே மாணிக்க மானே - உனக்குவமை
உண்டா உலகத்தில்? உண்மையடி என்காதல்
கண்மணி வாநீ விரைந்து.

உன்னைநான் கண்டுப் பிறவிப் பயனுணர்ந்தேன்
தன்னலம் முற்றும் இழந்தேன்நான் - பொன்மணியே
கண்ணுக்குள் நீகலந்தாய் காதல் வரம்தந்தாய்
மண்ணில் புதையுமுன் வா.

மரணம் அடைந்தாலும் என்ன? மணியே!
சிரமே வெடித்தாலும் என்ன? - கரமிரண்டு
நான்கொண்டே இந்த உலகில் பிறந்தது
மானுன்னைக் கைப்பிடிக்கத் தான்.

எனக்குநீ இல்லை எனநீ உரைத்தால்
வனப்பூவே இன்றே இறப்பேன் - உனக்காக
என்னுயிரை நான்கொடுப்பேன் உன்னால் உயிர்வாழ்வேன்
உன்விழியே எந்தன் உயிர்.

வானம் பிளக்கட்டும் பூமி வெடிக்கட்டும்
கானகம் தீயால் எரியட்டும் - தானம்
தவமெல்லாம் செத்தழிந்து போனாலும் என்ன?
அவளே எனைமறந்த பின்பு

அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Mon Oct 17, 2022 3:14 pm

கண்மணி அன்போடு - அறுசீர் விருத்தம்
***********************************************************

கண்மணி அன்பு டன்நான்
காதலில் விடுத்தேன் தூது;
பொன்மணி உந்தன் தம்பி
பெற்றோரும் நலமா சொல்சொல்;
எண்ணிநான் உன்னைப் பார்த்தால்
எத்தனைக் கவிதை தோன்றும்?
பண்ணுக்கு வார்த்தை இல்லை!
பாடநீ அருகில் இல்லை.

காயமோர் கோடி பட்டேன்!
காற்றடித்து ஆறி போன
மாயம்தான் என்னே! மானே!
மேனியே பூவாய்ப் பூத்த
நீயதைத் தாங்க மாட்டாய்!
நித்திரை கொள்ள மாட்டாய்!
தூய வெண்பனியே தேனே!
தூங்குநீ கவலை தீர்ந்து!

நான்கொண்ட காதல் சொல்ல
நல்லதோர் வழியைத் தேடி
வான்மதி போலத் தேய்ந்து
வற்றாத கண்ணீர் விட்டேன்!
தேன்நிறைத் தும்பை உன்னை
தாக்குமென் றெண்ணி உந்தன்
மீன்விழி காக்க வேண்டி
மெல்லநான் துடைத்துக் கொண்டேன்!

மனிதர்கள் புரிந்து கொள்ளா
மறைபொருள் நிறைந்த இந்தத்
தனித்தன்மை வாய்ந்தக் காதல்,
தெய்வீகக் காதல் அன்றோ!
கனியேவுன் கண்ணன் நானே!
கள்ளிநீ ராதை தானெ!
இனிநீஎன் மடியில் தூங்கு..
இசைக்கிறேன் நான்தாலாட்டு!

அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Mon Oct 17, 2022 3:16 pm

அப்பன் அகவல் - தமிழ்க் கவிதை
************************************************

அப்பா சிவனே அப்பா சிவனே!
ஆனந் தத்தின் ஊற்றே! அரனே!
வதிட்டபு ரத்தில் கோவில் கொண்ட
வான்புகழ் பெற்ற வைத்திய நாதா!
வானமாய் விரிந்த ம்றைகளும் நீயே!
வேகமாய் விழுந்த மழையும் நீயே!
வீசும் காற்றும் வைகை ஆறும்
வேள்வியில் எரியும் நெருப்பும் நீயே!
இடப்பா கத்தில் அம்மையை ஏற்ற
ஈசா! இடுக்கண் களையும் நேசா!
ஒவ்வொரு சிலையின் உயிரும் நீயே!
சிலைவணங் காதோர் சிந்தையும் நீயே!
கடவுள் மறுத்த பெரியோர் மனதில்
காதலாய் மலர்ந்த காலனும் நீயே!
காலனின் பயத்தால் கர்த்தனை அழைத்தால்
கவலை போக்கும் கடவுளும் நீயே!
தந்தை சொன்ன மந்திரம் நீயே!
தாயின் அன்புப் புன்னகை நீயே!
ஆதியும் நீயே! அந்தமும் நீயே!
வேதியன் நீயே! சோதியும் நீயே!
எல்லா பெயரிலும் எரியும் விளக்கே!
எல்லாப் புகழும் இறைவா உனக்கே!
காட்டில் மிரட்டும் கால பைரவா!
கடவுள் இல்லை உன்னைத் தவிர!
நின்தே ரோட முட்டு கொடுத்தேன்
முன்னோர் செய்த பாவம் போக்கு!
சீர்திருத் தத்தில் சிந்திய சிற்சில
வார்த்தை அனைத்தையும் மந்திரம் ஆக்கு!
தூக்கமில் லாதயென் பிணியினைப் போக்கு!
துயர்கொ டுக்கும் வலியினை நீக்கு!
அறிந்துநான் செய்த தவறுபல் கோடி!
அறியாமல் செய்தவை எத்தனை கோடியோ?
சில தவறுகள் ஆசையால் முளைத்தன;
செருக்கா லும்சில தவறுகள் கிளைத்தன;
கோபம் கொண்டதால் செய்த தாயிரம்;
கல்லா மையினால் விளைந்த தாயிரம்;
மகா தேவனே! மகா கோபனே!
மன்னிப்பு வேண்டி மண்டியிட்டேன் நான்!
மனமெலாம் உருக முட்டியிட்டேன் நான்!
அண்ணா மலையில் அடர்ந்த வனத்தில்
அஞ்சாய் உயர்ந்த மலைகளைச் சுற்றிக்
காட்டு மிராண்டியாய் கிரிவலம் வந்தேன்!
கானக வாசனே! கருணை காட்டு!
நினைவில் நித்தமும் அறிவாய் நின்று
நல்வழி நோக்கி புத்தியைத் தூண்டு!
உலகில் யாவரும் ஒருவரை ஒருவர்
உள்ளம் குளிர்ந்து மன்னிக் கட்டும்!
ஊரும் நாடும் மக்களெல் லோரும்
உவகை கூடி உறவைக் கூடி
நவதா னியங்களின் விளைச்சல் கூடி
நாட்டு மக்களின் மகிழ்ச்சி கூடி
நதிகள் கூடி நீர்வளம் கூடிக்
கூடிக் கூடிக் கூத்தா டட்டும்!
குவலயம் சீக்கிரம் ஒன்றுசே ரட்டும்!
கோடி நன்மைகள் அதனால் தோன்ற
கயிலை நாதா அருள்செய் வாயே!

அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Mon Oct 17, 2022 3:17 pm

கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சி - தமிழ்க்கவிதை
****************************************************************************

கண்மணிப் பூங்காவே என்மனை மாட்சியே!
என்வயலும் என்வாழ்வும் என்றென்றும் நீதானே!
கண்ணிலே தெரிந்திடும் கண்ணீர் துடைத்திடக்
கரம் எட்டவில்லை! கரம்சேர்க்க வாவா!
நேருக்கு நேராக நாம்பேச லாமா?
ஊருக்கும் பாருக்கும் நலம்சேர்க்க லாமா?
வெள்ளிக் கிழமைக்குள் ஒளியும் ஒலியும்
வேர்விதையாய் ஒன்றிணைய வேகமாய் வாவா!
புதனொரு ஞானச் சித்திரக் காரன்!
பொன்னும் கிடைக்கப் புறப்பட்டு வா!
செவ்வாய்த் திறந்து பாடிட வாவா!
சோமசந் திரனாய் வளர்ந்திட வாவா!
வியாழக் கிழமைக் குள்நீ வந்திட
தயாளன் தட்சிணா மூர்த்தியைத் தொழுவாய்!
கனியாய் மனதில் இனிக்கும் கனவே!
சனிக்குள் வந்தால் தோஷங்கள் நீங்கும்!
ஞாயிறு வந்தால் கொண்டாட் டம்தான்!
யாவரும் நலம்பெற வாழ்வு தொடங்கலாம்!
தொலைவில் இருந்து கண்டது போதும்...
தொல்லை நீங்க அருகினில் வாவா!
கருப்பும் வெள்ளையும் ஒன்றாய் சேர்ந்தால்
காலமெல் லாமினிக் காதல் வாழும்!

அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Mon Oct 17, 2022 3:18 pm

ஆடிப் பெருக்கு - தமிழ்க் கவிதை
***********************************************
ஆடிப் பாடி இன்பம் பெருக்கும்
அற்புதமான நாளிதுவே!
ஆடிப் பெருக்கில் அசனாம்பிகைதான்
அள்ளித் தருவாள் வரங்களையே!
தேடித் தேடி அழுத விழிகளில்
தெய்வம் காட்சி தந்திடுமே!
கோடி விழிகளும் போதாதேயென்
காமாட்சியினைக் கண்டிடவே!
அன்னை அவளது கருணை இன்றி
அணுக்கள் அசைவது சாத்தியமா?
தென்னங் கீற்றின் தென்றல் காற்று
தேவி யில்லாமல் வீசிடுமா?
பொன்முகம் காட்டும் சூரியன் அவளது
பேச்சை மீறி உதித்திடுமா?
என்மனம் பூத்தக் காதலை ஏற்க
என்னவள் நெஞ்சம் மறுத்திடுமா?
வேண்டும் வரங்களைக் கொடுப்பவளே! நான்
விரும்பிய வாழ்க்கை அளித்திடுவாய்!
நீண்ட நாட்களாய் வாட்டிடும் கனவை
நனவாய் இன்றே ஆக்கிடுவாய்!
பாண்டிய நாட்டின் பேரரசி! என்
பூவை என்கரம் சேர்த்திடுவாய்!
ஆண்டாள் போன்றொரு திருமுகத்தாளவள்
அருகில் துணையாய் அமர்த்திடுவாய்!

அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Mon Oct 17, 2022 3:20 pm

சூரிய காயத் திரி -- நேரிசை வெண்பா
**********************************************************
மாரி எனும்பெயரில் மண்ணுலகை ஆள்கின்றாய்
சூரியனாய் வானில் தகிக்கின்றாய் - காரிருளில்
சந்திரனாய்த் தோன்றுகின்ற சக்தியே சாம்பவியே
வந்துவரம் தாயேன் எனக்கு.

ஸ்ரீமதி என்ற பெயருடைய மாணவிக்குத்
தாமதிக் காமல் கொடுநீதி - தீமிதித்துத்
தாயே உனைத்தொழுத பக்தர் துயர்தீர்த்தாய்!
நீயே இதற்கும் கதி.

எழுத்தறி வித்த இறைவியே எம்மை
அழுத்துகின்ற கல்விமுறை மாறி - கழுத்தை
நெரிப்பது போன்றகடும் தேர்வுமுறை தீர்ந்து
சிரிக்கட்டும் மக்கள் மகிழ்ந்து.

இனியிந்த பூமியிலே தற்கொலைகள் வேண்டாம்
தனிமையிலெ யாருமழ வேண்டாம் - கனிமொழியாம்
தாய்மொழிக் கல்வி தமிழிசைப் பாடலென
வாய்மணக்கச் சேய்மணக்கச் செய்!

காயத் திரியினிலே காதல் விளக்கேற்றித்
தூயவளே உன்னை தினம்தொழுதேன் - ஓயாமல்
என்சிந்தை மேலுதித்து என்புத்தித் தூண்டினையே!
உன்னை மறவேன் இனி.

கழுதைபோல் புத்தக மூட்டை சுமந்து
அழுகிய முட்டைபோல் வாடிப் - புழுவாய்த்
துடித்துப் பிரம்படிப் புண்தாங்கிப் பட்ட
அடிக்கெல்லாம் நீதியுண்டோ சொல்.

சடுதியில் வாயென் சரவணா என்றேன்
விடுதியில் ஏன்விட்டாய் என்னை -சுடுதீயில்
வெந்த உடல்கள் எத்தனையோ அம்மாநீ
வந்துசொல் தீர்ப்பு விரைந்து.

மாமறை செய்த மகாதேவன் அஞ்செழுத்து
நாமத்தால் செய்த தமிழ்செத்தால் - தாமரை
எப்படித் தோன்றும் தமிழகத்தில்? சாப்பாட்டில்
உப்புண்டோ சொல்தோழா நீ

அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Mon Oct 17, 2022 3:21 pm

குயில்பாட்டு 2.0 - தமிழ்க் கவிதை
**************************************************

வாங்குகின்ற மூச்செல்லாம் இசையாக்கிக் கூவுகிற
வரம்பெற்ற அழகான கோகிலமே!
வனத்தினிலே திரிகின்ற வண்ணத்துப் பூச்சிகளை
வசப்படுத்தும் சங்கீத சாகரமே!
தூங்காத விழியிணையின் துயரத்தைப் போக்கியெனைத்
தாலாட்ட வந்த இளம் காரிகையே!
தெய்வீக ராகத்தைத் தேடுகின்ற வண்டுக்குத்
தேனாகப் பிறப்பெடுத்தத் தாரகையே!

நீலமலை மாஞ்சோலைக் கிளைதங்கிக் கூவுகிற
நந்தவனச் கொடியமர்ந்த கோரகையே!
நீணடகடற் கரையினிலே தென்னைமரத் தோட்டத்தில்
நிலவொளியில் கவிபாடும் பேரழகே!
ஆலமரக் கிளைமேலே அமுதமொழிக் கவிபாடி
அனைவரையும் ஈர்த்திட்ட களத்தொனியே!
ஆகாயச் சூரியனை சங்கீத மழைபெய்து
குளிர்வித்த இசையருவிப் பொக்கிஷமே!

பாரதியின் குயில்பாட்டுக் கரும்பேடைக் குயிலாகப்
பாமாலை சூட்டுகின்ற அற்புதமே!
பாட்டுக்குப் பெருமைதரும் நோக்கத்தில் பிறப்பெடுத்த
புதியதொரு மதுகண்டப் புல்லினமே!
சாரதியாய் வந்தவனும் வனவாசம் சென்றவனும்
பிறப்பெடுத்த புண்ணியநம் பூமியிலே
சங்கீதம் தழைத்தோங்க மெல்லிசைக்கு முடிசூட்ட
சுயம்புவென உருவான கலைமகளே!

இசைத்தமிழை பெண்குயிலாம் இவள்ஆண்டாள் எனும்பேரை
வாங்கிவிடத் தவமிருக்கும் மலைக்குயிலே!
இனியிந்த பூமியிலே எல்லோரும் இன்புறவே
இசையாலே பூஜிக்கும் சுடர்கொடியே!
திசையெங்கும் விடிந்துவிட்ட செய்தியினை அறிவிக்கும்
தீம்பாடல் பாடுகின்ற திரவியமே!
தெய்வத்தின் குரலாகத் தென்னகத்தில் பிறப்பெடுத்து
தேவாரம் இசைக்கின்ற கோகிலமே!

அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Mon Oct 17, 2022 3:22 pm

கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு - Page 2 Iyarkai

அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Mon Oct 17, 2022 4:22 pm

புதைந்து போன உண்மைகள் – தமிழ்க் கவிதை
*********************************************************************

கட்டாயப் படுத்தி ஒரு குழந்தையை சாப்பிட வைத்தால் அந்தக் குழந்தை உணவையே வெறுக்கும்…

கட்டாயப் படுத்தி ஒரு மாணவனைப் படிக்கச் சொன்னால் அவன் படிப்பை வெறுப்பான்..

கட்டாயப் படுத்தி நீ ஒரு பெண்ணைக் காதலிக்கச் சொன்னால் அவள் உன்னை முற்றிலும் வெறுப்பாள்..

கட்டாய மதமாற்றம் அந்த மதத்தை அழிக்கும்…

கட்டாயக் கல்யாணத்தில் கடைசி வரைக்கும் நிம்மதி இல்லை..

கட்டாயப்படுத்தி ஒருவனை மதுவையோ புகைப்பழக்கத்தையோ விடச் சொன்னால், திரும்பத் திரும்ப அவற்றை நாடுவது இயல்பாகிவிடும்.,,

கட்டாயத்தால் சாத்தியமாகாத விஷயங்கள் காதலாலும், உள்ளமும் முகக்குறிப்பும் புரிந்த அன்பாலும் சாத்தியமாகும்..

காதலின்முன் மாமலையும் ஓர் கடுகே!
அன்பிற்கு அகிலமே அடிமையாகும்!

இன்று மனித குலம் பெருமைக்கும் கௌரவத்திற்கும் அடிமையாக இருப்பதால்,
இந்த அவசர உலகத்தில் எல்லாமே கட்டாயம் ஆகிவிட்டது…

கட்டாயத்திற்கு அடிபணிந்த உலகில் சுதந்திரப் பள்ளு எப்படி இசைக்க முடியும்?

பன்றி ஒரு அருவருப்பான மிருகம் என்று சிலர்
சொல்கிறார்கள்…
எந்தப் பன்றியும் தன் சொந்தக் குட்டியை விடுதியில் அடைக்காது…
ஆனால் நாம் அடைப்போம்..

வராக அவதாரமும் வாராஹியும் தோன்றியது இதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும் என்பதால்தானோ?

புதைந்து போன பல உண்மைகள்
வெளிவந்தால் மனித குலம் தப்பிப் பிழைக்கும்…
சிதைந்து நாசமாய்ப் போன
நியாயமும் தர்மமும் மறுபடி சிறகு விரிக்கும்….

அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Mon Oct 17, 2022 4:23 pm

கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு - Page 2 Ithuvum-kadanthu-pogum

அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக