புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_c10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_m10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_c10 
53 Posts - 42%
heezulia
கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_c10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_m10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_c10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_m10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_c10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_m10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_c10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_m10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_c10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_m10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_c10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_m10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_c10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_m10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_c10 
304 Posts - 50%
heezulia
கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_c10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_m10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_c10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_m10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_c10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_m10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_c10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_m10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_c10 
21 Posts - 3%
prajai
கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_c10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_m10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_c10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_m10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_c10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_m10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_c10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_m10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_c10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_m10கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைத் திருவிழா - ஒரு மாபெரும் கவிதைத் தொகுப்பு


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Mon Oct 17, 2022 3:01 pm

அன்புடையீர்,

எனக்கு பல தாய்மார்கள் இருக்கிறார்கள்..

1) என்னைப் படைத்த உலகாளும் அகிலாண்டேஸ்வரியான அம்பிகை ஒரு தாய்..
2) என்னையும் உங்களையும் தாங்கும் பூமித்தாயான பூமாதேவி ஒரு தாய்.
3) நமக்காக ரத்தம் சிந்திய பல தியாகிகளின் தவப்பயனால் தலைநிமிர்ந்த என் பாரதத்தாய் ஒரு தாய்.
4) சங்கத்தில் பூப்படைந்து இன்று எங்கும் நிறைந்திருக்கும் சிங்கத் தமிழ்த்தாயும் ஒரு தாய்.
5) என்னைப் பத்து மாதம் சுமந்து, சத்தான பாலூட்டி
அதனால் எத்தனையோ இடர்பட்டு என்னை வளர்த்து வித்தகனாக்கிய என் பெற்ற தாய் என் முதல் தாய்..
6) நான் காதலிக்கும் அன்பிற்குரிய பெண்ணாய், என் அன்னைக்கு மருமகளாகவும் எனக்கு மறுதாயாகவும் விளங்கும் எந்தன் ஆருயிர் இன்னொரு தாய்..

இப்படி பல தாய்களுக்கு மகனாகத் திகழ எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும்? என் தமிழை அரங்கேற்ற வாய்ப்பு கொடுத்த ஈகரையையும் தாயாக நினைப்பதில் எனக்கு மகிழ்ச்சி...

அதனால், கடந்த சில மாதங்களில் நான் எழுதிய அனைத்துக் கவிதைகளையும் ஒரே பதிவில் பதிவு செய்ய ஆசை கொண்டு இதைப் பதிவு செய்கிறேன். உங்களது கருத்துகள் மற்றும் அறிவுரைகளை வரவேற்கிறேன்.. இதே பதிவில் அடுத்தடுத்து என் கவிதைகளை வெளியிடுகிறேன்...



அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Mon Oct 17, 2022 3:02 pm

தினை மாவு - தமிழ்க் கவிதை (நேரிசை வெண்பா)
************************************************************************

உனைக்காணக் கோடி விழிவேண்டும் உன்னை
நினைக்காத நாளில்லை கண்ணே - தினைமாவில்
தேன்சேர்த்தே உன்னைப் படைத்தானோ ஆண்டவன்?
நான்சேர வந்தாய் பிறந்து...

இசையின் மகளாய்ப் பிறந்தாய்நீ பாடல்
அசையின் எழுத்தாகப் பூத்தாய் - திசையே
அறியாமல் நான்தவித்தேன் அன்பேநீ வந்தால்
பறிபோன இன்பம் வரும்.

சூரியனாய்ச் சுட்டாய் நிலவாய்க் குளிர்சேர்த்தாய்
காரிருளில் மின்னும் ஒளியானாய் - பூரித்து
மனத்தோட்டம் தன்னில் உன்னை விதைத்தேன்
கனவை நனவாக்க வா.

மிருதங்க  தாளத்தின் பொன்மகளாய் வந்த
திருமகளே  தேனின் இனிப்பே  - கருவிழியில்
அம்பெய்து‌ தாக்கிய அம்பிகையே உன்நினைவில்
பம்பரமாய்ச் சுற்றும் மனம்.

காட்டாற்று வெள்ளத்தில் மாட்டிய மாவிலையாய்ப்
பாட்டாறே உன்னில் தொலைந்தேன்நான் - தீட்டிய
வீச்சரிவாள் கண்ணழகி! வெண்கலமாய் உன்னுடைய
பேச்சருவி கொட்டாதோ சொல்!

வாழைப் பழத்தோலால் கால்வழுக்கி வீழ்வதுபோல்
ஏழைநான் உன்னில் விழுந்தேனே - கோழைபோல்
ஓடி ஒளியாதே! ஒன்றாய் இணைந்துகவி
பாடிப் பிழைப்போம்நாம் வா.

பிபரே ராமரசம் என்றுநீ பாட
அபயம் எனவுன்னை நாடி - உபயம்
தரும்பக்தன் போலுருகி ஊரூராய்ச் சென்றேன்;
வருவாயா வாழ்வில் துணைக்கு.

பாதக் கொலுசின் ஒலிகேட்டுப் பேச்சிழந்தேன்
காதணி ஆட மதியிழந்தேன் - மீதம்
இருந்த உயிரையும் பாட்டில் இழந்தேன்
மருந்தே ரணமாற்ற வா.

எத்தனை பாடல் எழுதினேன்! காதலால்
பித்தனைப் போல உளறினேன் - செத்த
பிணம்போல நான்வாழ வேடிக்கை பார்க்கும்
குணமேன்? குறைநீக்க வா!

கலைமகளும் வீர மலைமகளும் செல்வ
அலைமகளும் ஓர்பெண்ணாய் வந்த - விலைமதிப்பே
இல்லாத இன்னிசையே! பொல்லாத காதலால்
எல்லாம் இழந்தேன்நான் இன்று.



அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Mon Oct 17, 2022 3:03 pm

கண்ணே கலைமானே - தமிழ்க்கவிதை (நேரிசை வெண்பா)
***************************************************************************************
கண்ணே கலைமானே கன்னி மயிலென
கண்டேன் உனைநானே ஆருயிரே - மண்ணில்
முளைத்தவொரு மூன்றாம் பிறையடிநீ  மூங்கில்
துளைவழியே வந்தயிசை நீ..

வீணை நரம்பாடி உன்நரம்பு? நீயின்றே
ஆணையிட் டால்நான்‌ ஒருதுரும்பு - தூண்போல
என்னைநீ தாங்க வருவாய் எனும்நினைப்பில்
தன்னை மறந்தே னடி...

தாலாட்ட நீயும் வருவாய் எனயெண்ணி
பால்வடியும் இன்முகமாய்க் காத்திருந்தேன் - வாலாட்டும்
நாய்கூட நன்றி நினைக்கும் நீயெந்தன்
தாய்போல; தேன்கூடே வா...

திகட்டாத நெல்லை இனிப்பே! கயிலை
சிகரத்தில் பூத்தநறும் பூவே - அகல்விளக்கின்
ஆலய தீபமே! ஆண்டாளே  சேதுவின்
பாலமே பூக்கோல மே..

நீயின்றி நானில்லை நாயகியே  நாமகளே
தாய்போல வந்த திரவியமே -  சேயாக
நானுந்தன் பொன்மடியில்‌ தூங்க விழைகின்றேன்
பானுவே பெண்மலரே வா..

நினைத்தாலே நெஞ்சில் இனிக்கின்ற எந்தன்
மனையாளும் ராணியே கண்ணீர்- நனைத்ததினால்
ஈரத்தில் நானூறிப் போனேன் இனியவளே
தூரமாய் நிற்காதே வா.

தூவானம் தூவ துளிகளில்நீ நீராட
தேவதையே உன்னைநான் கண்டேனே - காவல்
நிலையத்தில் உன்பெற்றோர் முன்னிலையில் எந்தன்
நிலைசொன்னேன் நீயே உயிர்.

பச்சை வயல்விளைந்த பச்சரிசி நீயடி
தச்சையில் தோன்றிய தோழன்நான் - பிச்சை
எடுக்கநீ வைக்காதே என்னைநீ கொல்ல
தொடுக்காதே காதல் கணை...

சந்தனக் கட்டையால் செய்த சிலையேநீ
தந்தபுது வாழ்க்கையை வாழ்கின்றேன் - சிந்திய
கண்ணீர் துளிகளுக்கு என்னபதில் ஏன்நீயோர்
பெண்ணாய்ப் பிறந்தாயோ சொல்.

உப்புக் கருவாடு ஊறவச்ச சாப்பாட்டை
இப்பவே ஊட்டிவிட நீவந்தால் - அப்பாடி
என்றுநான் நிம்மதியாய் உன்மடியில் தூங்கிடுவேன்
நன்றாக சிந்தித்து வா...

ஆயிரம் காதலில் எந்தன் மதிமயங்கி
வாயிலே வந்ததைப் பேசினேன் - தீயிலே
சுட்ட சுடர்பொன்போல் சேர்ந்தாயே என்வாழ்வை!
சட்டத்தை மாற்றுவோம் வா.

தாலாட்ட நீவருவாய் என்ற கனவினிலே
கால்மேல்கால் வைத்தே அமர்ந்திருந்தேன் - வாலால்
விருட்சம் தனைத்தாண்டும் வானரம்போல் நெஞ்சம்
தெருநாயாய் ஓடியதே இன்று.

ஏனேந்தென் வாழ்வில்நீ வந்தாய்? மனதில்யேன்
தேனாக நீயூறித் தாக்கினாய்? - வான்மழைபோல்
பெய்தே எதற்காக என்னை நனைத்தாய்நீ
பொய்யின்றி நீபதில் சொல்.

புரமேரி என்ற சிறிய ஊரில்
வரமாய்ப் பூத்த மலரே - கரம்பிடித்தே
ஊரெல்லாம் உன்னோடு சுற்றிவர ஆசையடி
பாரெல்லாம் சுற்றலாம் வா.

வயதுக்கு வந்த வனப்பூவே வாயால்
நயம்ததும்பப் பாடினாய் நீயே - கயல்விழியால்
என்னைச் சிறைசெய்த சந்தனமே சாகும்முன்
முன்னால்நீ வாடி உணர்ந்து.

கண்ணாலே போர்தொடுத்த சேர இளவரசி!
விண்ணை விழியிலே காட்டியே - மண்ணைக்
கவர்ந்து முடிசூட்டிப் பட்டமும் பெற்ற
தவப்பயனே! வாநீ துணிந்து.

வற்றாத பொய்கையே! பொய்க்காத வான்மழையே!
பொற்றா மரையே! பனிமழையே! - கற்ற
அனைத்தையுமே நான்மறந்தேன் நாமகளே உன்னால்!
உனையன்றி நானில்லை வா.

சிந்திய கண்ணீர் துளிகள்தான் எத்தனை?
சிந்தித்த பாடல்கள் எத்தனை? - சிந்துநதி
மீதுதித்த சிற்றலையே! சற்றுனது விழியம்பைத்
தூதுவிடு தேனே எனக்கு.

ஓணத்தில் போட்டநறும் பூக்கோலம் நீயடி
நாணத்தில் பூத்தபுது செம்மலர்நீ - சாணத்தை
மண்ணுரமாய்ப் போட்டு முளைத்தவெண் மல்லிகைநீ!
கண்மணியே வாடி மலர்ந்து.

தென்பொதிகை சந்தனமே! தித்திக்கும் தேன்பூவே!
தின்று திகட்டாத சர்க்கரையே!- வென்று
உலகாண்ட என்மண்ணில் உண்டான ஊற்றே!
குலவிளக்கே! வாநீ குளிர்ந்து.



அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Mon Oct 17, 2022 3:03 pm

நிலவில் கால்பதித்த டீமாஸ்டர் - தமிழ்க்கவிதை
********************************************************************
திருச்சூர் வந்த திரிசாவே நெஞ்சில்
உருவான ஊட்டி மலரே - திருச்சியில்
சீறிப் புகுந்தபெரும் காவிரியே! ஒர்வார்தை
கூறித் தொலையாத தேன்.


நிலவில் முதலில்கால் வைத்தடீ மாஸ்டர்
மலயாளி தானே மயிலே - வலவலன்னு
பேசாமல் வேலையைப் பார்ப்போம்வா‌ உண்மையை
நாசாவே கண்டறியும் நின்று.


புல்லாங் குழலைப் பூவாயாய்க் கொண்டவளே!
எல்லா மொழியிசையும்‌ தேர்ந்தவளே‌ - கல்லாத
சங்கீத அஞ்ஞானி‌ நானடி நம்வீட்டில்
பொங்காதோ இன்றைக்கே சோறு..


விஞ்ஞானம் நன்கு வளர்ந்துள்ள போதிலும்
அஞ்ஞானி ஆனேன்‌ விதிவசத்தால் - சங்கத்தில்
பூப்படைந்த என்மொழியின்‌ சேர மருமகளே!
ஆப்புவைக் காதே எனக்கு..


தும்பைப்பூ சேகரிக்கும் தென்னாட் டிளம்பூவே
அம்பே எனப்பாடும்‌ ஆருயிரே‌- பம்பை
நதிபாயும் நாட்டிலே இன்னோர் நதியாய்
துதிபாடும் தேவதையே வா...


கேரள நாட்டில் மழையுண்டோ முத்தேயெம்
வீரவில் இன்றும் பறக்கிறதோ - தூரத்தில்
நின்றே எனைக்கொன்ற வள்ளிக் கிழங்கேநீ
இன்றே புறப்பட்டு ‌வா..


புடவை மடிப்பினில் பாவாடை நூலில்
அடநான்‌ அகப்பட்டுப் போனேன் - தொடக்கும்
கடவுள் கணபதியைத் தாங்கும் எலியே
உடனே அகப்பட்டு வா..


இறக்கை முளைத்த இளங்குயில்நீ வந்தால்
மறப்பேனே காயங்கள் எல்லாம் - மறத்தமிழர்
காட்டில் மணக்கின்ற ‌குண்டுமல்லிப் பூவேநீ
வீட்டில் இருக்காதே வா..


நெடுகவுன் பேரை‌ எழுதுகிறேன்‌ என்று
கடுப்பாக வேண்டாம்நீ கண்ணே - தொடுத்த
கவிதைகள் எல்லாமே காதலை உந்தன்
செவியில் கிசுகிசுக்கத் தான்.


மனைவி அமைவதெல்லாம் ஆண்டவனின்‌ அன்பால்,
வினைப்பயனால் வந்த வரமே! - பனைமரத்துத்
தும்பாய் இளைத்தாயே! தூத்துக் குடிசென்று
தெம்பாய்ப் புசிக்கலாம் வா..



அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Mon Oct 17, 2022 3:05 pm

மனசிலாயோ ? (மலைத்தமிழ் கவிதை)
******************************************************
பாலக்காட்டுப் பக்கம் நீ வருகிறாயா இல்லை கோழிக்கோட்டுப் பக்கம் நான்வரட்டுமா?

வடகரை வரைக்குமாவது வந்தால் புரமேரி வரை பேசிக்கொண்டே போகலாம்...

ஒருபையை நீ தூக்கிக் கொள்!
வரும்போது உன்னை நான்தூக்கிக் கொள்கிறேன்..

ஓணத்திற்கு என்னை அழைக்காமைக்கு நாணம் காரணமா இல்லை நிண்ட ஓணராகிய நிண்ட அச்சன் காரணமா? மாவேலியை ஓணர் செய்த மான்குட்டியே! பூவேலி போட்டு என்னைப் பூட்டிய பூங்குட்டியே! மறந்துவிடாத இனிநானேவுன் மதிப்பிற்குரிய ஓணர் என்பதை... மனசிலாயோ?

உன் வீட்டில் ஞான் ஊனு கழிக்கும்‌ இன்றேல் ஊர் பழிக்கும்..

அம்ம அருகில் இருந்தால் ஆறடி தள்ளி நில்.. சும்மா நீமட்டும் இருந்தால் உம்ம ஒன்றுநான் உனக்குக் கொடுப்பேன்.‌‌

காதலுக்கு ஆதார் கார்டு தேவையில்லை... ரேசன் கார்டு அவசியம் இல்லை.. ஏன்? ஏடியம் கார்டுகூட முக்கியம் ‌இல்லை.. பக்சே நிண்ட பாடி கார்டாக நன்னாயிட்டு ஞான்மாத்ரம் இருந்தாலே மதி... மாவேலி நாட்டு மதியே! அதனால் என்னை மதி... மனசிலாயோ?



அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Mon Oct 17, 2022 3:06 pm

புரமேரி பால்கோவா - தமிழ்க் கவிதை
*****************************************************

பால்கோவா போன்ற புரமேரி பெண்குட்டி
வேல்விழியால் தாக்கியதால் வீழ்ந்தேன்நான் - கால்வலிக்க
காத்துக் கிடந்தேன் கதறினேன் கண்மணியைப்
பாத்துநாள் ஆச்சே‌ என.

ஐந்தாறே பாலாற் றணைநீ அழகான
பைந்தமிழ் பாடல்நீ பார்வதியின் - மைந்தன்
மயங்கிய வள்ளிநீ மாவேலி நாட்டின்
நயன்தாரா நீதா னடி

ஒருமுறையென் பேர்சொன்னால் என்ன? உனது
திருவாய் திறந்தால்தான் என்ன? - ஒருவார்த்தை
செப்பினால் என்னடி சொப்பன சுந்தரியே
ஒப்பனையே வேண்டாம் உனக்கு...



அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Mon Oct 17, 2022 3:07 pm

ஊட்டியில் பூத்த மலர் - தமிழ்க் கவிதை
******************************************************

காதலில் வாடிட என்னை வைத்தாய்..

காமத்துப் பாலைப் படிக்கவும் வைத்தாய்

நீயே கதியென புரியவும் வைத்தாய்

நித்தில மாக நினைவினில் நின்றாய்..

மாதே மதுவால் மயங்கவும் வைத்தாய்..

மன்மதன் அம்பினில் மாளவும் செய்தாய்..

தூது விடுத்தேன் தென்றல் காற்றை...

தூத்துக் குடியில் குளித்த் முத்தே!

பாதை எதுவெனத் தெரியா மல்நான்

பரிதவித் தேனடி பக்கம் வாடி...


பேயோ என்றுனை முதலில் நினைத்தேன்.

பெண்ணே உன்னைப் பார்த்தவந் நாளில்

தாயே என்றென் இதயம் தெளிந்தேன்

தமிழிலே உன்குரல் ஒலிப்பதைக் கேட்டு..

நாயோ நரியோ என்றும் பயந்தேன்.

நம்பவில் லைநீ நல்லவள் என்று..

ஒயா நினைவே ஊட்டியில் பூத்த

உயிர்ப்பூ வேபின் காதலில் வீழ்ந்தேன்.



அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Mon Oct 17, 2022 3:08 pm

தங்க்லீஷில் தோன்றிய தமிழ்ப்பூக்கள் - தமிழ்க்கவிதை
********************************************************************************

பேஸ்புக்கில் வந்த பழரசமே யூட்யூபில்
டேஸ்டாகப் பாடிய டார்லிங்கே - பாஸ்டாக
வாட்சப்பில் வாடி கதைக்கலாம் என்னருமை
பீட்சாவே போன்நம்பர் தா...

தாடி வளர்த்தொரு தேவதாஸ் போலநான்
ஓடி அலைந்து திரிந்தேன் - வேடிக்கை
பார்க்கும் மனிதர்கள் பாவம் எனயெண்ணிச்
சேர்த்துவைக் கட்டும் நமை...

கோட்டர் அடித்தால் கவிதை வருமென்ற
மேட்டர் தெரியுமா மச்சினியே - வாட்டரில்
கட்டிங் கலந்தடித்தால் கொட்டுதடி வெண்பாக்கள்
குட்டியே கிட்டநீ வா.

ரூம்போட்டு யோசித்த ரோமியோ நானடி
மாம்பழமே ஜூலியட் நீயடி - ஸேம்பிஞ்ச்சாய்
நம்மிடையே எத்தனை ஒற்றுமைகள் நம்பிநீ
கம்மென்று வாய்மூடி வா...

ஐஸ்க்ரீமே எந்தன் அழகான பிஸ்கட்டே
பைஸ்டார் சாக்லேட்டே பால்டீயே! - நைஸாய்
மசால்போட்ட தோசையே மாஸாவே எந்தன்
விசாகார்டே வாடி விரைந்து.

குறையோன்றும் இல்லா குழிப்பணியா ரம்நீ
கறைபடியா அன்புக் கனிநீ - சிறைவாசம்
போன்றதடி உன்னைப் பிரிந்துநான் வாழ்வது
தேன்பூவே வாநி துணிந்து.

சக்கரை சேர்த்தவோரு ஆப்பம்நீ அஞ்சப்பர்
சிக்கன் பிரியாணி நீயடி - பக்குவமாய்
பாலில் சமைத்தவொரு பெங்காளி முட்டாய்நீ
வாலில்லா வானரம் நீ.

அதிகம் மிளகுள்ள ஆம்லட்டே ராமன்
பதியிலே பூத்தசுவை லட்டே - விதியால்
விளைந்தநம் காதல் விளையாட்டா இல்லை
களைப்பாற்றும் நல்ல மருந்து...

சூப்பர் பிகரடிநீ சூரியனின் வம்சம்நீ
காப்பரில் செய்தவோர் மோதிரம்நீ - ஆப்பிள்நீ
ஆம்ட்ஸ்ராங்கே கால்வைக்கா அந்தி நிலவும்நீ
நாம்ஸ்ட்ராங்காய் வாழநீ வா..

போன்போட்டு நானுனக்கு ஐலவ்யூ சொல்லவே
நான்நினைத்தேன் நம்பர் கொடுப்பாயா - சீன்போட்ட
தெல்லாம் நிறுத்தடிநீ நேருக்கு நேர்வந்தால்
பல்லை உடைப்பே னடி...



அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Mon Oct 17, 2022 3:10 pm

சுத்திப் போட வேண்டும் - தமிழ்க்கவிதை
**********************************************************

ஆயிரம் பெண்களை நான்பார்த் திருப்பேன்...
கோயிலில் பிகர்களை சைட்டடித்‌ திருப்பேன்...
தாயினைப் போலவே நீவந்தாயே!
தேவதை யேநான்‌ மறப்பே னோ‌வுனை...

தீயினைத் தொட்டால் தித்திக் கிறது...
பாயினில் படுத்தால் முள்குத்து கிறது...
நோயும் நெய்பொல் நாவில் இனித்தது..
தூயவ ளேவுன் காதலி னாலே...

இரவிலே சூரியன்‌‌‌ என்னை எரித்தது..
பகலிலே நிலவு புண்படுத் தியது..
அகல்விளக் கேவுன் காதலி னாலே
அனைத்தும் மாறி இயல்பு இழந்தது...

உன்னை விடயிவ் வுலகிலே வேறோரு
பெண்ணுண் டோவொரு பொக்கிஷம் உண்டோ...
பொன்நேர் சிலையே! புன்னகை ராணியே!
பெண்ணே உனைவிட உயர்ந்ததும் உண்டோ?

கண்ணின்‌ மணியே கவிதையின்‌ ஊற்றே!
காணக் கிடைக்கா கந்தர்வப் பூவே..
மண்ணிண் விளக்கே! மாசிலா மணியே!
உன்னை விட்டுநான் உயிர்வாழ் வேனோ?

காதல் என்ற கொடிய நோயினின்
பாதகம் நீங்க போர்தொடுத் தேன்நான்..
தூதும் அனுப்பினேன் தீயவ ளேநீ
ஏதோ நினைப்பினில் என்னை மறந்தாய்!

இளிச்ச வாயன் நானேன எண்ணி
இதுவரை கண்டுக் காமல் இருந்தாய்..
தளிர்த்த செடியே! தங்கக் கொடியே!
தாங்க முடியவே இல்லையுன் பிரிவை..

பருத்திப் பூவே! பால்நிறத் தும்பையே!
பாட்டா லெயென் உள்ளம் கவர்ந்த
ஒருத்தி நீயே ஊனுடல் நீயே
பொறுத்தது போதும் பேதைநீ வாடி..

அத்தி பூத்தது போலநீ பூத்தாய்!
ஆத்தி எனநான்‌ வியக்கவும் வைத்தாய்!
சுத்திப் போட‌ வேண்டுமே அம்மணி...
சூடம் வாங்கக் காசுகொடுப் பாயோ?

நீயென் நாயகி நீயென்‌ தேவி!
நீயே‌‌‌ எனது கார்த்திகை தீபம்!
நீயே‌ எனது ‌நித்யகல் யாணி..
நீயே முருகன் ஈஸ்வரி நீயே!



அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Mon Oct 17, 2022 3:11 pm

காதல் போயின் சாதல் - தமிழ்க்கவிதை
********************************************************

நீயில்லா வாழ்க்கை நரகம் உனைப்பிரிந்து
தாயில்லா பிள்ளைபோல் நான்தவித்தேன் - வாயில்லா
சீவன்போல் சோகத்தை சொல்ல வழியில்லை
பாவம்நான் வாநீ விரைந்து

காதல் எனும்நோயால் காலமெல்லாம் நான்வாட
மாதே எனக்குத் தலையெழுத்தா? - வேதாளம்
தன்னை முதுகிலே ஏந்துதல்போல் நானின்று
உன்னை சுமந்தே னடி…

சூரியன் வேண்டுமா வெண்ணிலா வேண்டுமா
மாரியின் மூக்குத்தி வேண்டுமா? - பாரினிலே
பொக்கிஷம் ஆயிரம் உண்டடி கண்மணியே
பக்கம்நீ வாடி புரிந்து…

கண்ணே கனிமொழியே கண்மணியே காதலியே…
விண்ணை விடவுயர்ந்த வான்மதியே - பண்ணால்
உனைப்பாடி உள்ளம் மகிழ்ந்தேன் மணியே
எனைத்தேடி வாடி விரைந்து..

நீசெத்தால் நானும் உடனே உயிர்துறப்பேன்
பேசத்தான் ஏங்கித் தவிக்கின்றேன் - நேசத்தீ
என்னை எரித்துத் தகிக்கிறதே! நீவந்தால்
உன்னை மணப்பேன்நான் இன்று…

லேடி எனநான் உனைநினைத்தேன் நீயோரு
கேடி எனநான் பிறகுணர்ந்தேன் - வாடி
எனநான் அழைத்தும் வரவில்லை சூர்யா
மனம்வாடிப் போனேன் தவித்து…

கவிதை எழுதியென் கைவலிக்கச் செய்தாய்
தவிக்கநான் வேடிக்கை பார்த்தாய் - செவிகொடுநீ
சேதி பலகோடி உண்டடி நீயெந்தென்
பாதியென இன்றே உணர்.

தங்கம்நீ வைரம்நீ தூயமா ணிக்கம்நீ
மங்காத முத்துநீ தேயாத - திங்கள்நீ
எங்கும் தெரிகின்ற நங்கைநீ சிங்கம்நீ
வங்கக் கடற்பவளம் நீ..

தாணிக் குடத்தினிலே தங்கமே உன்பார்வை
ஆணியெனக் குத்தியதால் ஆவென்றேன் - வாணியே
கண்முன்னே வந்ததுபோல் தோன்றியதால் காதலிலே
பண்கள் எழுதினேன் நான்.

காதலை சாதா ரணமென்றே எண்ணினையோ
மாதே சதாரணம் ஆனதடி - ஆதலினால்
வேதத்தின் மீதுநான் சத்தியம் செய்கின்றேன்
வாதமே செய்யாமல் வா…

வைரமுத்து கண்ணதாசன் பாரதியைத் தோற்கடிக்க
பைரவரைக் கும்பிட்டேன் பாடலினால் - தைரதமே
மார்கழிப் பூவே மரகதமே நானுன்னை
வார்த்தேனே வெண்பாவில் இன்று..



அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக