ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 5:53

» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 21:49

» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 21:24

» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 21:23

» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 21:21

» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 21:19

» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 21:15

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 20:44

» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 20:24

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 09/08/2022
by mohamed nizamudeen Yesterday at 20:06

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 17:06

» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 11:28

» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 11:23

» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 11:22

» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 11:19

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:15

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:15

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:15

» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 11:12

» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 11:10

» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 11:10

» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 11:04

» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 11:03

» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 11:02

» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 11:00

» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 10:59

» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 10:56

» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 10:56

» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 10:54

» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 10:54

» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 10:53

» கருடாழ்வாரைப் பற்றி சில தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 10:53

» காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு
by ayyasamy ram Yesterday at 8:21

» புகழ்பெற்ற தமிழ்வாணன் துப்பறியும் கதைகள்
by Rajana3480 Mon 8 Aug 2022 - 23:07

» நிழல்கள் நடந்த பாதை - மனுஷ்ய புத்திரன் நூல் (இரண்டு நாட்களுக்கு மட்டும் )
by Rajana3480 Mon 8 Aug 2022 - 21:02

» கி.ராஜநாராயணன் புத்தகம் தேவை
by Rajana3480 Mon 8 Aug 2022 - 20:24

» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Mon 8 Aug 2022 - 12:29

» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Mon 8 Aug 2022 - 12:28

» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Mon 8 Aug 2022 - 11:06

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Mon 8 Aug 2022 - 8:37

» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Mon 8 Aug 2022 - 8:32

» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Mon 8 Aug 2022 - 7:57

» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Mon 8 Aug 2022 - 7:49

» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Mon 8 Aug 2022 - 7:38

» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Mon 8 Aug 2022 - 7:35

» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Mon 8 Aug 2022 - 7:32

» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Mon 8 Aug 2022 - 7:27

» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Mon 8 Aug 2022 - 7:25

» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Sun 7 Aug 2022 - 17:20

» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Sun 7 Aug 2022 - 17:18

நிகழ்நிலை நிர்வாகிகள்


உருவு கண்டு (சிறுகதை)

உருவு கண்டு (சிறுகதை) Empty உருவு கண்டு (சிறுகதை)

Post by krishnaamma Sat 2 Jul 2022 - 21:50

உருவு கண்டு (சிறுகதை)
-------------------------------
அரசுமருத்துவ மனையிலிருந்து
வந்த
அவசர அழைப்பைக் கேட்டதும்
"இதோ வெகு விரைவில் வந்து விடுகிறேன்" என்றவாறு
கசங்கல் துணியோடும்
கலங்கிய முகத்தோடும்
பேருந்தில் ஏறி விரைந்தான்.

பணம் அவசரத்தில் எடுக்காமல் வந்து விட்டோமே என்ற போது பையைத் துழாவினான்
ஐந்து நூறு ரூபாய் நோட்டுக்கள் பத்திரமாயிருந்தது.

பேருந்தில் கூட்ட நெரிசல். எல்லோருமே அலுவலகம், கல்லூரிகள், பள்ளிகள், பிற நிறுவனங்களென்று படையெடுக்கும் கூட்டம்.

அத்தோடு நாகரீக உடையிலுள்ளவர்கள்
கந்தலான, கசங்கலான ஆடை அணிந்த கந்தனைக்கண்டு
"தள்ளி நில்லுயா"
என இளக்காரமாக பேசினார்கள்.

கந்தனின் பதட்டமெல்லாம் மருத்துவமனையின் மீதே இருந்தது. தோளிலிருந்த துண்டு நழுவிக் கீழே அடிக்கடி விழ குனிந்து குனிந்து எடுத்து மீண்டும் தோளில் மாட்டிக்கொண்டான்.

பேருந்தில்
"ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா....
என்ற பாடலுக்கிடையில்
"எங்கய்யா போகனும்"

"ராசபாளையம்
அரசு மருத்துவ மனை"
எனச்சொல்லி
பையைத் துளாவிய
போது பகீரென்றது.

பயணச்சீட்டை நடத்துனர் கொடுப்பதை வாங்குமுன் பதை பதைக்க தேடினான் கீழே குனிந்து துண்டை எடுத்த போது விழுந்திருக்குமோ என்று.

"யோவ்..! என்னயா தேடுற"

"பையில பணம் வச்சிருந்தேன் எங்கேயோ விழுந்திருச்சு"

"பணத்த காணுமா எவ்வளவுயா"

"ஐநூறு ரூபாய்ங்க"
"யோவ்..! பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுயா..

"சத்தியமா காணும்யா..

"கீழ இறங்குயா"
ஆத்திரத்தோடு நடத்துனர் சொன்னதும் வண்டி நிறுத்தப்பட்டது.

"ஏன் சார் வண்டியில பெண்களுக்கு இலவசம்னு சொன்ன மாதிரி இந்த மாதிரி ஏழைகளுக்கும் இலவசம்னு சொல்லியிருக்கலாம்.

"இலவசம் இலவசம்னு குடுத்து குடுத்துதான்யா நாடு நாசமாப்போகப் போகுது"

"பாவம்யா உச்சி வெயிலு காலில் செருப்பு கூட இல்லை,

"அப்படிப்பாவம் பாக்குற ஆளு நீ எடேன்,
"இந்தாங்க பணம் அய்யா நீங்க மேல வாங்க,
பேருந்து நகர்ந்தது நன்றிப்பெருக்கோடு பார்த்து கையெடுத்துக் கும்பிட்டான்.

தொடரும்.....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

உருவு கண்டு (சிறுகதை) Empty Re: உருவு கண்டு (சிறுகதை)

Post by krishnaamma Sat 2 Jul 2022 - 21:52

"அட விடுங்கயா நானும் உங்களை மாதிரி தொழிலாளி தான், ஆமா திரும்ப எப்படி வருவே..?"

"பரவாயில்லயா நடந்தே வந்திருவேன்"

மருத்துவமனையை நெருங்கி விட்டதும் வாசற்படியை நோக்கி நடந்து வந்தவனின் முன் முழு ஐநூறு ரூபாய் ஒரு பெண்மணியின் காலுக்குக் கீழே கிடந்தது.

"அம்மா பணம் கீழ கிடக்கு காத்துக்கு பறந்திடாம,"

அனைவரின் கவனமும் அவன் மீது பாய்ந்த போது
"பெரியவரே ஐநூறு ரூபா பணம் காணும்னு சொன்னீங்களே அது உங்க பணமா இருக்கும் எடுத்துக்கோங்க,"

"இல்லைங்கயா இது என் பணமில்ல நான் வச்சிருந்தது அஞ்சும் நூறு ரூபா தாளு,
இப்போது அனைவரது பார்வையும் அவர் மீது பரிதாபத்தோடு பாய்ந்தது.

"ஆமா மருத்துவ மனைக்கு என்ன விசயமா போறீங்க,

"...........,"

"சும்மா சொல்லுங்க ஏதாவது
பண உதவி தேவைன்னா கூட நான் உதவுறேன்"

"அய்யா உதவுறதயும், தர்மம் பண்ணியதையும் வெளிய சொல்லக்கூடாதுனு சொல்வாங்க, நீங்க எனக்கு பயணச்சீட்டு எடுத்து குறித்த நேரத்தில் வர உதவிய கடவுள் அதனால சொல்றேன், ஒரு உசுரக்காப்பாத்துறதுக்காக ரத்தம் குடுக்க கூப்பிட்டிருந்தாங்க அதான்."..... எனச் சொல்லி முடித்ததும் பல பேர் கன்னத்தில் அறை விழுந்தது போல இருந்தது.

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து

என்ற பேருந்தின் உட்புற திருக்குறளை அப்போதுதான் பலர் உணரவே ஆரம்பித்தார்கள்.

வண்டி நின்றபோது ஒலித்த பாடலின் கடைசி வரி அனைவரின் கண்களிலும் கண்ணீர் வழிய வைத்தது.

நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்.

படித்ததில் பிடித்தது ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை