புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 11:14 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 8:32 pm

» எல்லாம் தலையெழுத்து..!
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» எல்லாவற்றுக்குமான தேடல்..! – கவிதை
by ayyasamy ram Yesterday at 4:11 pm

» கையள்ளத் துடிக்கிறேன் நிழலை! – கவிதை
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» திசை தேடியலையும் பறவை – கவிதை
by ayyasamy ram Yesterday at 4:08 pm

» பேல்பூரி – கேட்டது!
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» காந்தி வேடத்தில் நடிக்கும்வரை…
by ayyasamy ram Yesterday at 4:02 pm

» வரலட்சுமிக்கு நிச்சயதார்த்தம்… ஹேப்பி மோடில் சரத்குமார், ராதிகா
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» முகம் காட்டினால் முகம் தெரியும்…(புதிருக்கு பதில் கண்டுபிடி)
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» புதிருக்கு சரியான பதில் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:55 pm

» மண்ணால் செய்த பானை இல்லை…(புதிருக்கு பதில் கண்டுபிடி)
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» தண்ணியில்லாக் காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி! - விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» உடம்பெல்லாம் முள்ளு, உள்ளே இனிப்பை அள்ளு – விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 3:34 pm

» காட்டில் உள்ள குடை, வீட்டில் இல்லாத குடை - விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» திறக்க மூட சத்தம் வராத கதவுகள் - (புதிருக்கு விடை கண்டுபிடி)
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» Cloves are an best aromatic herb. !
by sugumaran Yesterday at 12:05 pm

» வெங்காயம் விளைவது மண்ணுக்கு அடியிலா? அல்லது வெளியிலா? என்பது கூட ராகுல் காந்திக்கு தெரியாது : ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்..!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» தலைவலி அல்லது தலையிடி, மண்டையிடி என்பது நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலி
by Dr.S.Soundarapandian Yesterday at 11:37 am

» எள்ளோதரை அல்லது எள் சாதம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:36 am

» தாயும்... பிறந்தநாளும்...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:35 am

» தாயும் சேயும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:32 am

» இறந்த தாயும் சேயும் உயிர் மீண்ட அதிசயம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:30 am

» ஓவியங்கள் - தாயும் சேயும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:28 am

» தாயும் நீயே சேயும் நீயே
by Dr.S.Soundarapandian Yesterday at 11:26 am

» நீ புயல்! ஆம் நீயே புயல்! நீயாகவே புழு ஆகிவிடாதே!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:25 am

» நீ நீயாகவே இரு!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 am

» கருத்துப்படம் 03/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sat Mar 02, 2024 8:29 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Sat Mar 02, 2024 8:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Mar 02, 2024 7:54 pm

» சிரிப்பு -வசனம் தேவையில்லை!
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:56 pm

» அவுரி எனும் அமிர்தம் !
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:49 pm

» ஒரு சொல் – கவிதை
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:42 pm

» சமையலறை பராமரிப்பு
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:35 pm

» திருப்புகழ்-கண்ட அறிஞர் வ.த.சுப்பிரமணிய பிள்ளை
by sugumaran Sat Mar 02, 2024 5:31 pm

» பதினாறும் செய்தால் பெருவாழ்வு
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:31 pm

» பூலோகம் வந்த பாதாள நாக கன்னியர்கள்
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:26 pm

» சிரிப்போ சிரிப்பு- கேட்டு ரசித்தது!
by T.N.Balasubramanian Sat Mar 02, 2024 5:24 pm

» அறிந்து கொள்ளலாம்! - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:22 pm

» அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !!
by ayyasamy ram Sat Mar 02, 2024 4:52 pm

» இது ‘கெட்ட ‘ பார்வை!
by ayyasamy ram Sat Mar 02, 2024 4:49 pm

» சும்மா ஒரு டைம்பாசுக்கு...!
by ayyasamy ram Sat Mar 02, 2024 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Mar 02, 2024 4:22 pm

» ஒரு புதிய புதையல்--ஆய்வேடு
by sugumaran Sat Mar 02, 2024 4:20 pm

» தொல்லியலில் சாதித்த மீனவர் பிஸ்வஜித் சாஹு
by sugumaran Sat Mar 02, 2024 4:16 pm

» முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் !
by sugumaran Sat Mar 02, 2024 4:00 pm

» ஆரோக்கியமாய் வாழ...
by Dr.S.Soundarapandian Sat Mar 02, 2024 12:40 pm

» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Sat Mar 02, 2024 12:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘ துன்பக் கேணி’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘ துன்பக் கேணி’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘ துன்பக் கேணி’ Poll_c10 
51 Posts - 37%
ayyasamy ram
சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘ துன்பக் கேணி’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘ துன்பக் கேணி’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘ துன்பக் கேணி’ Poll_c10 
48 Posts - 35%
Dr.S.Soundarapandian
சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘ துன்பக் கேணி’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘ துன்பக் கேணி’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘ துன்பக் கேணி’ Poll_c10 
28 Posts - 20%
sugumaran
சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘ துன்பக் கேணி’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘ துன்பக் கேணி’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘ துன்பக் கேணி’ Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘ துன்பக் கேணி’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘ துன்பக் கேணி’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘ துன்பக் கேணி’ Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘ துன்பக் கேணி’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘ துன்பக் கேணி’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘ துன்பக் கேணி’ Poll_c10 
3 Posts - 2%
சுகவனேஷ்
சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘ துன்பக் கேணி’ Poll_c10சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘ துன்பக் கேணி’ Poll_m10சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘ துன்பக் கேணி’ Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘ துன்பக் கேணி’


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9427
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jun 24, 2022 12:35 pm

சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘ துன்பக் கேணி’

1 . திருநெல்வேலி மாவட்டத்து வாசவன்பட்டியை முதலில் விரிவாகக் காட்டுகிறார் .
இதிற் சிறப்பு யாதெனில், அந்தக்காலக் கிராமங்களின் அமைப்பு முறை எப்படி இருந்தது என்று இதன்மூலம் அறிந்துகொள்ளலாம்!  எந்தெந்தச் சாதியினர்க்கு எப்படிப் பிரித்துப்  பிரித்து இடங்கள் கொடுத்து  வாழச்செய்தனர்  என்று கனகச்சிதமாகக் காட்டியுள்ளார்! தவிரவும் அவ்வூர் மளிகைக் கடைக்காரர் , ’மருதை வீரன் கதை’, ’அல்லியரசாணி மாலை’ முதலிய கதைப் பாடல்களையும் படித்துக்காட்டி, ‘காலட்சேபம்’ செய்வாராம்! தமிழகத்தில் கதைப்பாடல் தோன்றி வளர்ந்த கதையைத் தெரிந்துகொள்ளவும் நமக்கு வாய்ப்பைத் தருகிறார் புதுமைப்பித்தன். பண்ணையார் நல்லகுற்றாலம் பிள்ளை, கக்கத்தில் குடையை இடுக்கிக்கொண்டு, பின்னே கையைக் கட்டிக்கொண்டு இரண்டு மூன்று மறவர்கள் தொடர வரும் காட்சி, திரைப்பட இயக்குநர்களுப் பயன்படும் ஆதாரப் பூர்வமாக காட்சி!
2 . அந்நாளில் , கிராமங்களில் பிற்படுத்தப்பட்ட உழைப்பாளிகளை மிகவும் இழிவுபடுத்தும் அதிகாரப் போக்கைத் தோலுரித்துக் காட்டுகிறார் ஆசிரியர்!
ஓட்டப்பிடாரம் பிள்ளை , பண்ணையாரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே , அவருக்கு வேண்டிய சக்திக்காக ஒரு தலித் சிறுமியை அதட்டுகிறார்! (கீழே உள்ள படத்தில் அவர் உச்சரித்த  சாதிப் பெயரை அகற்றிவிட்டுப் புள்ளிகள் இட்டுள்ளேன்) . அடுத்துப் பண்ணையாருக்கும்  ஒரு சக்தி வேண்டவே , அவரும் ஒரு  பிற்படுத்தப்பட்ட வகுப்புப்  பெண்ணை இரைகிறார்! படியுங்கள்:
சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘ துன்பக் கேணி’ Lh5MLCB
அந்நாளில் ‘மேட்டுக்குடி’ என்று தாங்களாகவே ஓர் இடத்தை எடுத்துக்கொண்டவர்கள், பிற்படுத்தப்பட்ட உழைப்பாளிகளை  கன்னாபின்னா என்று திட்டுவதில் ஒரு ‘சக்தி’ பெற்றார்கள்! புளகாங்கிதம் அடைந்தார்கள்! புதுமைப்பித்தன் எழுதிய மேல் வரிகளே இதற்குச் சான்று!

இது ஏதோ முற்றிலும் ஒழிந்துவிட்டது என நினைக்காதீர்! இன்னும் ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கிறது!

3 .பண்ணையார்களிடம் கடன் வாங்கும் ஏழையின் மன நிலையையும் நமக்கு , நடுநிலையோடு , விளக்குகிறார்!:
சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘ துன்பக் கேணி’ MgmO2Md

கொடுத்த கடனுக்காக இரு காளைகளையும் மருதி குடும்பத்திலிருந்து  கையகப் படுத்திக் கொண்டார் பண்ணையார்! அடுத்த நாள், பண்ணையாரின் வேறு இரு காளைகளைக் காணவில்லை! மருதியின் கணவன் வெள்ளையன் மீது தலையாரிக்குச் சந்தேகம்!  வெள்ளையனும் குடித்துவிட்டு மரத்தடியில் கிடந்தான்; போலீஸ் , கேட்கவேண்டுமா? வெள்ளையன் திருடாத நிலையிலும் அவனைச்  சிறையில் தள்ளியது!

4. மருதி , இரண்டு மாதக் கர்ப்பிணி; தந்தை வீடு சென்றாள்; பணமுடை! அன்பையும் ஆதரவையும் தவிர வேறு ஒன்றும் தந்தை வீட்டில் கிடைக்கவில்லை என எழுதுகிறார் ஆசிரியர்!

5 . ஒரு ‘ஏஜண்டு’ மூலம் , மருதியும் அவள் தாயாரும் கொழும்புக்குப் புறப்பட்டனர்.
கொழும்பில், மருதி , ஓர்  ‘ஏஜண்டு’ வீசிய வலையில் சிக்கிக்கொண்டாள்! அந்தக் கதை:
சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘ துன்பக் கேணி’ Td994Yp
6. தேயிலைத் தோட்டத்துத் தொழிலாளர்களின் இன்னல்களைப் புதுமைப்பித்தன் எழுதுவது குறிப்பிடத் தக்கது-
சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘ துன்பக் கேணி’ L60uIuQ

7 .  மருதி, இன்னொரு ஆங்கிலேயனுக்கும் பலியாகிறாள், பழைய ‘ஏஜண்டு’ மூலம்தான்! இப்போது, மருதி பங்களாவுக்குப் பக்கத்தில் ஒரு தோட்டக்காரியாக வேலை பார்த்தாள்.
8. இதற்கிடையில் , சிறையிலிருந்து விடுதலயான மருதியின் கணவன் வெள்ளையன், மாமனிடம் பணம் வாங்கிக்கொண்டு, கொழும்பு வந்து, நேரே மருதி வீட்டுக் குடிசையைக் கண்டுபிடித்து , மருதியையும் பார்த்தான்!மருதியின் கையைப் பிடிக்கப்போனான் வெள்ளையன்; ‘தொடாதே’ என்று அவளுடம்பில் இருந்த  ‘பரங்கிப் புண்’ணைக் காட்டினாள் மருதி; ‘இங்கே இதுதான் வளமொற’ என்றாள் அவள். மருதி கெட்டுவிட்டாள் என்பதை உணர்ந்துகொண்டான் வெள்ளையன். மருதியை ஊருக்குக்  கூப்பிட்டான்; ’நான் வரலை, இந்தா உன் குழந்தை; குழந்தையைக் கொண்டுபோ’ என்றாள் மருதி, தன்னிடமிருந்த 200 ரூபாயையும் தந்து .

9. குழந்தை யுடன் (வெள்ளைச்சி), சொந்த ஊர் திரும்பினான் வெள்ளையன்.
வாசவன் பட்டியில், பண்ணைப்பிள்ளையிடம் முன்பு வாங்கிய கடன் 200 ரூபாயைக் கொடுத்தான்; வாங்க மறுத்துவிட்டார் பண்ணையார்.

10. மருதிக்குப் ‘பரங்கிப் புண்’ வளர்ந்தது, துரையால்! அந்தத் துரை போனபின் அடுத்த துரை, மருதியின் பரங்கிப்புண் உடல் கண்டு , அருகில், தோட்டத்தில் வைத்துக்கொள்ளாமல், தேயிலைத் தோட்டத்துக்கே அனுப்பிவிட்டார்!

11. தேயிலைத் தோட்டத்தில்,  உடன்பணியாற்றும் பேச்சியும் கங்காணிச் சுப்பனும் ‘இருந்த’ நிலையை மருதி பார்க்கவில்லை; ஆனால் மருதி பார்த்திருப்பாள் என்று ஊகித்த சுப்பன் மருதியை அடித்து உதைக்கிறான்; அந்த உளவியல்:
சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘ துன்பக் கேணி’ MlnE006

12 . மருதியின் நிலை மோசமாக இருந்தது:
சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘ துன்பக் கேணி’ QrNuTmH

சித்த சுவாதீனமற்றுத் தனக்குள் பேசிக்கொள்ளும்போது மருதி முகத்தில் கல்யாணக்களை வந்ததாகக் கூறுவதை, இனிமேல் எங்காவது வாய்ப்பு வந்தால்தான் என்னால் சரிபார்த்துக்  கூறமுடியும்;இதுவரை அந்தக் களையைப் பார்க்கும்  அனுபவம் எனக்கு ஏற்பட்டதில்லை; நீங்கள் அந்தக் களையை, அப்படிப்பட்ட சூழலில், பார்த்துள்ளீர்களா?

13. மருதியின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு, கொழும்பிலிருந்து ஊருக்கு அனுப்பிவிட்டனர், சம்பளத்துடன்.

14. மருதி, கோலூன்றியபடி, வாசவன் பட்டியில் உள்ள தன் குடிசை நோக்கிப் போகும்போது, திருமண ஊர்வலம் ஒன்றைக் கண்டாள்; மாப்பிள்ளை, வேறு யாருமல்ல மருதியின் கணவன் வெள்ளையன்தான்!

15. அடுத்த காட்சி பாளையங்கோட்டையில்! பாளையங்கோட்டையில், மருதி புல் வெட்டி விற்கிறாள்;குழந்தை வெள்ளைச்சியைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை மருதியை வாட்டவே வாசவன் பட்டிக்கு வருகிறாள் மருதி. இப்போது அவளின் மனப் போராட்டத்தை வெகு சிறப்பாக ஆசிரியர் வடிக்கிறார்:
சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘ துன்பக் கேணி’ RiGqOgC

புறப்படும் வரையில் மகள் வெள்ளைச்சியைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை மட்டும்தான் இருந்ததாம்! புறப்பட்டு வந்துகொண்டிருக்கையில் ‘எப்படி மகளைப் பார்ப்பது? ’ என்ற குழப்பம் வந்துவிட்டதாம்!  இதுதான் சிறுகைதை ஆசிரியருக்கும் படிக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு! மன ஓட்டத்தைத் துல்லியமாகக் காட்டத் தெரிந்தால்தான் சிறுகதை எழுத வரவேண்டும்! நிகழ்ச்ச்சிகளை வெறுமனே விவரிப்பது சிறுகதை ஆசிரியரின் இலக்கணமல்ல!

16 . ஒருவழியாக மகள் வெள்ளைச்சியைப் பார்க்கக் குடிசைக்குப் போனால், மகளை அடித்துக் கொண்டிருந்தாள் வெள்ளையனின் புது  இரண்டாம் மனைவி!மருதி, குழந்தையை அணைத்தாள்; புதுமனைவியை வெளுத்து வாங்கினாள்! கூட்டம் கூடியது! ஆனால் மருதியை யாரும் அடையாளம் கண்டுகொள்ள வில்லை! கடைசியில், மகள் வெள்ளைச்சியைக் கூட்டிக்கொண்டு பாளையம் கோட்டை போவதற்கு இருந்தபோது, பழைய  கங்காணிச் சுப்பனைப்  பார்த்தாள் மருதி! சுப்பன் கூப்பிட்டதால், மீண்டும் அவனுடன் வெள்ளைச்சி சகிதமாகக் கொழும்பு புறப்பட்டாள் மருதி!

17. 14 வருடங்களுக்குப் பிறகு –
இராமச்சந்திரன் (தேயிலைத் தோட்டப் பகுதியில் புதிதாகத் தொடங்கிய பள்ளி ஆசிரியர்) என்ற இளைஞனையும், மரகதம் (கங்காணிச் சுப்பனின் ஸ்டோர் மானேஜரின் மகள்) என்ற இருவரையும் நமக்கு அறிமுகப் படுத்துகிறார் புதுமைப்பித்தன்.
இராமச்சந்திரன், மரகதம் மீது கொண்ட காதல் துளிரை அழகாகக் காட்ட முடிந்துள்ளது புதுமைப்பித்தனால்!:
சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘ துன்பக் கேணி’ 3I5jHIB

18 . இராமச்சந்திரன், வெள்ளைச்சி இருவரும் பள்ளிக்கூடத்தில் தனியாக நின்று பேசுகையில், மரகதம் வந்தாள்; காட்சியைப் பார்த்ததும் மரகதத்துக்கு உடனே சிறு சந்தேகம் முளைவிட்டது; ஆனால் எப்படித்  தீர்ந்தது? இப்படியாம்:
சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘ துன்பக் கேணி’ TWWRL7d

இராமச்சந்திரனின் குரல் சத்தத்திற்கு உள்ள மதிப்பு நமக்கு எப்படித் தெரியும்? மரகதத்திற்குத்தானே தெரியும்! ஆசிரியரின் எழுத்து மணியான எழுத்து!

பாத்திரத்தினைச் தன் சிந்தனையால் நகர்த்துவது ஓர் உத்தி; பாத்திரத்தின் சிந்தனையால் கதையை நகர்த்துவது இன்னோர் உத்தி! இரண்டாவது உத்தி எல்லோருக்கும் வராது!

19 . இராமச்சந்திரனுக்கு மருதி மகள் வெள்ளைச்சி மீது ஒரு கண். இதனை ஆசிரியர் இப்படித் தீட்டுகிறார்!:
சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘ துன்பக் கேணி’ ESz6LfA

ஒரு பெண்ணின் பேச்சுக்கும் அவளுடைய உள்ளத்துக்கும் உள்ள வேறுபாட்டை எப்படிச் சித்திரிக்கிறார் பார்த்தீர்களா? ‘முதிர்ந்த விபச்சாரியின் பேச்சு’ என்றது, வெள்ளைச்சியின் தாய் சோரம் போனதை!

20 .  ‘துரை’பங்களாவில் வேலைபார்க்கும் குதிரைக்காரச் சின்னானுக்கும் வெள்ளைச்சிக்கும் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்பது மருதி- சுப்பன் இருவரின் எண்ணம். வெள்ளைச்சிக்குச் சின்னானைப் பிடிக்கவில்லை! நிலையைத் தெரிந்துகொண்டான் இராமச்சந்திரன். அவன் என்ன செய்தான்? :
சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘ துன்பக் கேணி’ D8UT1Hr

(‘ஒத்து வருமா?’ என்பதற்கு முன் உள்ள காலியிடத்தில்  இருந்த தலித் சாதிப் பெயரை நீக்கியிருக்கிறேன்)
வெள்ளைச்சியின் பார்வையிலேயே அவளது உள்ளத்தை இராமச்சந்திரன் தெரிந்துகொண்டான் என்பதைக் கவனியுங்கள்! ஒரு பாத்திரத்தின் உள்ளத்தை இன்னொரு பாத்திரம் உணர்வதாகக் காட்டுவது சிறுகதையின் நல்ல உத்தி!
திருமணம் செய்வதற்கு ஒத்துக்கொண்ட வெள்ளைச்சி  ‘அவனை நெருங்கினாள்’ என்று எழுதுகிறார் ஆசிரியர். ‘ நெருங்கினாள்’ என்றால் ,வேறு ஏதாவது நடந்ததா ? நம் யூகத்துக்கு விடுகிறார் ஆசிரியர்! இவ்வாறு படிப்பவரின் யூகத்துக்கு விடுவது ஒரு சிறுகதை உத்தி! இதைத்தான் நவீனத்துவம் (modernism) என்கின்றனர். இவ்வகையில், சிறுகதை நவீனத்துவத்திற்கு ஒரு முன்னோடியாகப் புதுமைப்பித்தன் விளங்கக் காண்கிறோம்!
21 . தேயிலைத் தோட்ட ‘ஸ்டோர் மானேஜ’ருக்காகத் தந்திரமாகக் குதிரைக்காரச் சின்னான் , வெள்ளைச்சியை ஓரிடத்திற்கு வரவழைத்து, ஒரு மரத்தில் கட்டிவைத்து விட்டான்! அப் பக்கமாக வந்த இராமச்சந்திரன் , வெள்ளைச்சி அலறலைக் கேட்டுச், சின்னானை அடித்தான்;சின்னான் பதிலுக்கவே இராமச்சந்திரன் மூர்ச்சையானான்; மூர்ச்சை தெளிந்ததும், வெள்ளைச்சியின் கட்டுகளை அவிழ்த்துவிட்டான்;இருவரும் மருதியின் வீட்டுக்குப்போய் நடந்ததைக் கூறினர். மருதி நேரே , மானேஜர் வீட்டுக்குப் போய் ‘அடப் பாவி! என்னைக் கெடுத்தது மல்லாமல் என் மகளையும் கெடுத்தாயா?’எனக் கத்திக்கொண்டே  ஒரு கல்லைத் தூக்கி மானேஜர் தலையில்  எறிய , அவர் காலி!அங்கு நின்றுகொண்டிருந்த தாமோதரன் (மானேஜரின் சகோதரி மகன்; தனக்குப் பிறகு மானேஜர் பதவியில் அமர்த்த மானேஜரால் கொண்டு வரப்பட்டன்) மருதியைத் தாக்கவே மருதி மூர்ச்சையானாள்!
செய்தியறிந்த தோட்டத் தொழிலாளர்கள் துரை பங்களாவை நோக்கிச், சின்னானைத் தேடி வந்தனர்; துரை துப்பாக்கியால் கூட்டத்தை நோக்கிச் சுட்டார்;கூட்டம், சின்னான் வீட்டை எரித்தது; சின்னான் முன்பே  ஓடியிருந்தான்;கூட்டம் ஸ்டோர் மானேஜர் வீட்டை நோக்கியது; இராமச்சந்திரன் , மரகதத்தையும், தாமோதரனையும் கூட்டிக்கொண்டு  துரை பங்களாவுக்கு வந்தான்;  மருதிக்குக் காவலாக  வெள்ளைச்சி நின்றாள்; கூட்டம் மருதி வீட்டுக்கு வந்தது.
அப்போது வெள்ளைச்சி, ‘கிழவன் (ஸ்டோர் மானேஜர்) போய்விட்டான்! இனிக் கோபம் வேண்டாம்!’ என்றாள் கோபத்துடன் இருக்கும் கூட்டத்தைப் பார்த்து.  அந்த நேரத்தில் கூட்டத்தின் மன நிலையை ஆசிரியர் சித்திரிக்கிறார் பாருங்கள்!:
சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘ துன்பக் கேணி’ FoBQ63Y

தனி மனிதரின் மனநிலையைச் சித்திரித்த ஆசிரியர் , கூட்டத்தின் மன நிலையையும் துல்லியமாகச் சித்திரித்துள்ளார் பாருங்கள்! கூட்டத்தின் அபிப்பிராயத்திற்கும் ஆவேசத்துக்கும் உள்ள வேறுபாட்டைக் கூறிய அழகே அழகு!
22. துரை , மானேஜர் கொலை செய்யப்பட்டதை அமுக்கிவிட்டார்.
மருதி, தாமோதரன் அடித்ததால், சித்தம் கலங்கிப் பைத்தியமாகவே ஆகிவிட்டாள்! மருதி, வெள்ளைச்சி, இராமச்சந்திரன் மூவரும்  ‘எங்கோ’ சென்றுவிட்டனர்.  அதன்பின்:
சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘ துன்பக் கேணி’ OjNDRJ7

இதுவரை பாத்திரங்களின் அருகே இருந்து கதை சொல்லிவந்த  புதுமைப்பித்தன், இறுதியில் தூரமாக விலகிப்போய் நின்றுகொண்டு , ‘அவர்களுக்குக் கல்யாண மாகிவிட்டது என நினைக்க வேண்டியிருக்கிறது; அப்படித்தான் சொல்லிக்கொள்கிறார்கள்’ என முடிக்கிறார் பாருங்கள்! இந்த உத்தி சிறுகதைக்குப் புத்துணர்ச்சி ஊட்டும் நல்ல உத்தி! இதுவும் முன் சொன்ன நவீனத்துவமே!

23 . இந்தக் கதையில் துன்பம் என்பது பலருக்கு வந்துள்ளது! மருதிக்கு, அவள் மகளுக்கு, அவள் கணவனுக்கு என்று எல்லோருக்குமே துன்பம்தான்! துன்பத்திலிருந்து நல்லவிதமாகக் கரையேறினார்களா? இல்லையே! ஆகவே ‘துன்பக் கேணி!’ ; கரையேற இயலாத கேணி!.
ஆழ்ந்து பார்த்தால், இக் கதையில் சில துன்பக் கேணிகள் வெட்டி வைக்கப்பட்டுள்ளமை தெரிய வரும்!
முதலாவது-  ‘மேட்டுக் குடியினர்’ , பிற்படுத்தப்பட்டோரை முடிந்த அளவுக்கு இழிவுபடுத்துவது!; காரணம் இல்லாமலே இழிவு படுத்துவது! விளிக்கும் போதே ‘மூதி’( ‘மூதேவி’ என்பதன் சுருக்கம்தான் ‘மூதி’) என்று விளிப்பது! எவ்வளவு நசுக்க முடியுமோ அவ்வளவு நசுக்குவது! இந்தத் துன்பக் கேணியிலிருந்து இன்றுவரை நசுக்கப்படுவோர் மீளவே இல்லை!

இரண்டாவது – பின் தங்கிய பிரிவிலிருந்து சற்று மேலே போனவர்கள் , தங்களுக்கு மேலே உள்ளவர்களுடன் கைகோர்த்துக்கொண்டு, அவர்களும் பிற்படுத்தப்பட்டோரை நசுக்கவே  செய்கின்றர்! கங்காணிச் சுப்பன், குதிரைக்காரச் சின்னான் செய்கைகள் சான்று!

மூன்றாவது – சில தொழிற் சூழல்களில் பெண்கள் மாட்டிக்கொண்டு சீரழிவது! தேயிலைத் தோட்டப் பெண்களின் நிலையைக் கதையிற் கண்டோம்!

நான்காவது – ஆளுவோர் தரப்பிலும் , அன்றும் இன்றும், நசுக்கப்படுவோர்க்கு எதிரானவையே செய்யப்படுகின்றன! கேட்பாரில்லை!

இவ்வாறாகச் சில துன்பக் கேணிகள் நம்மிடையே வெட்டி வைக்கப்பட்டுள்ளன!
இக் கேணிகளிலிருந்து கரையேற வழி உண்டா?
வழியைப் பற்றி யாரும் சிந்திப்பதில்லையே! பின் எப்படி வழி ஏற்படும்?
***முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81385
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 24, 2022 4:52 pm

சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘ துன்பக் கேணி’ 3838410834 சிறுகதைத் திறனாய்வு :புதுமைப்பித்தனின் ‘ துன்பக் கேணி’ 3838410834
--
புதுமைப்பித்தன் என்ற புனைபெயர் கொண்ட
சொ. விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 - சூன் 30, 1948),
மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர்.

நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர்
கருதப்படுகிறார்.

கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச்
சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய
படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன.

இவரது படைப்புகள் மிக அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி, 2002இல் தமிழக அரசு இவரது படைப்புகளை
நாட்டுடமை ஆக்கியது

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9427
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jun 24, 2022 8:30 pm

நன்றி ஐயாசாமி அவர்களே!முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored contentView previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக