ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சினி துளிகள் ( தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 7:21 pm

» ட்ரோன் ஆப்பரேட்டர்களாக திருநங்கைகளை நியமிக்கும் சென்னை மாநகராட்சி
by ayyasamy ram Today at 1:09 pm

» சத்தியமூர்த்தியும் பாரதி பாடல்களும் !
by ayyasamy ram Today at 1:05 pm

» இனி ஒரு முறை - கவிதை
by ayyasamy ram Today at 12:54 pm

» ஓம் சரவண பவ
by ayyasamy ram Today at 9:46 am

» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Today at 9:44 am

» எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு!
by ayyasamy ram Today at 9:42 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 30/06/2022
by mohamed nizamudeen Today at 8:40 am

» என்னுயிரின் அடர் - கவிதை
by ayyasamy ram Today at 6:53 am

» கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசிக்கு ஒப்புதல்
by ayyasamy ram Today at 6:34 am

» மராட்டிய முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே
by ayyasamy ram Today at 6:31 am

» வானில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் "அபியாஸ்" சோதனை வெற்றி!
by ayyasamy ram Today at 6:08 am

» திருட்டு - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 9:04 pm

» நியாயம் - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 9:01 pm

» அக்கறை – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:58 pm

» பழைய வீடு – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:56 pm

» நடிகை மீனாவின் கணவர் மரணம்
by krishnaamma Yesterday at 8:52 pm

» நகை – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:51 pm

» தினம் ஒரு மூலிகை - அருநெல்லி
by krishnaamma Yesterday at 8:49 pm

» பல்பு
by Dr.S.Soundarapandian Yesterday at 8:48 pm

» இது என்ன?அக்கப்போரு?
by Dr.S.Soundarapandian Yesterday at 8:20 pm

» பானி பூரி தண்ணீரால் காலரா: நேபாளத்தில் பானி பூரிக்கு தடை
by Dr.S.Soundarapandian Yesterday at 8:18 pm

» படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் கமல்ஹாசன்
by Dr.S.Soundarapandian Yesterday at 8:14 pm

» உலகில் பெரிய தைரியசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 8:11 pm

» சிறுகதைத் திறனாய்வு: புதுமைப்பித்தனின் ‘கொலைகாரன் கை’
by Dr.S.Soundarapandian Yesterday at 8:02 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» புள்ளத்தாச்சி மரம்
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» ஒரே படத்தில் நான்கு முன்னணி கதாநாயகிகள்
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» மாயோன் – சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 4:35 pm

» மலையாளத்திலும் இனி மாஸ் படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» ஜோதிகா இடத்தில் த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» செந்தில் மகன் நடிக்க வருகிறார்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:48 pm

» ஸ்ரீகலா அவர்களின் நாவல் வேண்டும்
by T.N.Balasubramanian Yesterday at 12:08 pm

» பாக்கிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சரின் அழகான புகைப்படங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 11:53 am

» ஆன்மீக அருளுரை
by ayyasamy ram Yesterday at 10:26 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 10:25 am

» ஆண்டியார் பாடுகிறார்!
by ayyasamy ram Yesterday at 10:15 am

» சாணக்கியன் சொல்
by ayyasamy ram Yesterday at 10:13 am

» 1/4 நிமிடத்தில் படித்த ஒரு "ஒரு நிமிட கதை."
by ayyasamy ram Yesterday at 10:12 am

» உங்க உடலில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு ஆஞ்சினா மார்பு வலி வரப்போகுதுனு அர்த்தமாம்... உஷார்!
by ayyasamy ram Yesterday at 9:59 am

» அடப்பாவிகளா.. இங்க இருந்த டயர காணோம்?
by T.N.Balasubramanian Yesterday at 9:01 am

» ஜி-7 தலைவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி அசத்திய பிரதமர் மோடி...என்னென்ன பொருட்கள்?
by ayyasamy ram Yesterday at 5:19 am

» கட்டம் தன் கடமையைச் செய்யும்!
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:44 pm

» வலை வீச்சு
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:36 pm

» மிளகாய் செடிக்கு மோர் ஊத்தறா…
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:35 pm

» புதிய தொழிலில் ஈடுபடும் ராஷ்மிகா
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:33 pm

» நிபந்தனைகள் விதிக்கும் நயன்தாரா
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:32 pm

» அல்லு அர்ஜூன் படத்தில் மீண்டும் சமந்தா நடனம்
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:32 pm

» போலாமா ஊர்கோலம் - விமர்சனம்
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:31 pm

» நடிகர்’ பூ’ ராம் மரணம்
by ayyasamy ram Tue Jun 28, 2022 6:30 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ Empty சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’

Post by Dr.S.Soundarapandian Wed Jun 22, 2022 11:21 am

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’

1 . 1934இல், மணிக்கொடி இதழில், ‘கூத்தன்’ என்ற புனைப் பெயரில் புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதை இது.

2 . முதலில் புராண மாந்தர்கள் இருவரை அறிவோம்; தலைப்பு இவர்களைக் கொண்டுதானே அமைக்கப்பட்டுள்ளது?
கவந்தன் – இராமாயணத்தில் வரும் இராட்சசன்; கால்கள்,தலை இல்லாதவன்; இந்திரன் சாபத்தால் ஏற்பட்டது இது. பின்னாளில் , இராமலக்குவர்கள் இவனின் கைகளையும் வெட்டி ‘முத்தி’ கொடுக்கின்றனர்.
காமன் – பிரம்மாவின் மானசீக மகனாகவும், திருமாலின் மகனாகவும் சித்திரிக்கப்படுபவர்; தமிழர் கடவுளாக மதிக்கப்படுபவர்; பார்வதியைச் சிவன் மணக்கவேண்டிக் காமன் தன் மலரம்பைச் சிவன் மீது எய்யச், சினந்த சிவன் காமனை எரித்தான் என்பர். காதற் கடவுளாக் கூறப்படுபவர்.

3 . இரவில்தான் ஒரு நகரத்தின் நாகரிக உச்சத்தைக் காணமுடியும் என்கிறார் புதுமைப்பித்தன். சென்னையைக் கொண்டுதான் இதைக் கூறுகிறார் அவர். இது உண்மைதான் , மற்ற நேரங்களில் அவரவர் பாட்டைப் பார்த்துக்கொண்டு போவார்கள்; இரவில் வேறு உலகில் சஞ்சரிப்பார்கள்! ஆசிரியர் சொல்வது-
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ 15BSrwQ

2 . அடுத்ததாக இரவு மின்விளக்குகள்! கண்ணுக்கு வழிகாட்டுவனவா , கண்மூலம் நம்மைக் குழப்புவனவா? குழப்பம்!
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ ZqVlmUK

‘மனிதனின் உயர்வையும் உடைவையும்’ என்று வரைதுள்ளது நல்ல நடை! புதுத் தொடர்! ‘உடைசல்’ என்று பழக்கமாக எழுதும் போது, ‘உடைவை’ என்று போட்டது சொற்சுவை கொண்டது!
மனிதனின் உயர்வையும் காட்டுவன ஒளிரும் வண்ண விளக்குகள்தாம்! மனிதனின் தேய்வையும் இதே விளக்குகள்தான் காட்டுகின்றன என்பது உண்மைதான்! நம் வாழ்க்கை விளம்பரப் பின்னல்களின் நடுவே நெளிந்து கொண்டிருப்பது நம் அன்றாட அனுபவமாக உள்ளது! தற்காலத்தில் எந்தச் சமுதாயக் கவலையும் இல்லாமல் , ‘நான் கிரிக்கெட் டுக்கு வராமல் இருந்திருந்தால் ரம்மி விளைட்டில் சாம்பியனாக ஆகியிருப்பேன்’ என்று உலகமறிந்த விளையாட்டு க்காரர்கள் தொலைக்காட்சிகளில் விளம்பரத்திற் கூறுகிறார்கள்! இதைத்தான் ‘விளம்பர யுகம்’ என்கிறார் ஆசிரியர்.
இரவு, கண்ணைப் பறிக்கும் ஒளி, விளம்பர ஒளிப்பலகைகள் – எல்லாம் மனிதனின் அவசரம், வேகம், போட்டி ஆகியவற்றின் குறியீடுகளாக நகரில் நிற்பதைச் சுட்டிக் காட்டுகிறார் .

ஒரு ஆட்டோக்காரரிடம் ஓர் அம்மாள், ‘மெதுவாகப் போங்கள்! ஏன் இவ்வளவு அவசரம்?’ என்றார்; அதற்கு ஆட்டோக்காரர் , ‘சாகிறவரைக்கும் மனுசனுக்கு அவசரம் தானுங்களே!’ என்றார். இதைத்தான் ஆசிரியரும் குறித்துள்ளார். ஆனால், ‘அவசரம், போட்டி, வேகம்’எல்லாம் ‘நாகரிகம்’ வளரவளரக் கூடிக்கொண்டே போகின்றன மனிதனின் அமைதி வாழ்வைக் கெடுத்துக் கொண்டே!
டிராம் வண்டிகளின் கணகண ஓசையை , ‘ நாகரிக யக்ஷனின் வெற்றிச் சிரிப்போ?’ என்று புதுமைப் பித்தன் தன் காதுகளைப் பொத்திக்கொண்டு சொல்வது உண்மைதானே?

3 . நகரத்தின் இன்னொரு பகுதியை அடுத்துப் பேசுகிறார் ஆசிரியர்.
பாலியல் தொழில் கீழ்த்தரமாக நகரத்தில் நடப்பதையும், ஒருவர் வயிறு நிறைவதற்காக இன்னொருவர் வயிற்றில் அடிப்பது நகரத்தில் சாதாரணம் என்பதையும் பேசுகிறாற் ஆசிரியர்! :
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ TWiChpt

ஆசிரியர் பாத்திரத்தைப் பேசவிட்டு அதன்மூலம் கூறாமல், அவரே நேரடியாக மேடையேறிக் கூறியதைக் கவனியுங்கள்! இது ஒரு சிறுகதை உத்தி!

4 . பாலியல் ,குடி நிறைந்த இன்னிரு தெருவைக் காட்டுகிறார் ஆசிரியர்! :
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ ROkwgwi

சொற்ப ஊதியத்துக்காகச் சக்கையாகைப் பிழியப்பட்டு நடந்துவரும் அந்த வாலிபனுக்குத் தன் நினைவே இல்லை! பசி வேறு! இவனுக்கு எப்படிக் காமம் வரும்?

5 . இப்போது ஒருவன் ! அவனும் பசியோடுதான்! ஆனால் ‘காமன்’ அம்பால் ஒருத்தியோடு நிற்கிறான் ; தன் கவலையை மறக்கக் குடிக்கிறான்!
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ FUt5kbI


6 . சக்கையாகப் பிழியட்டுத் தெம்பில்லாமல் வரும் , முன் நாம் பார்த்த, அந்த வாலிபனுக்கு என்ன நேர்ந்தது? :
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ MEcR16E

நம் வாலிபனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை! சில்லறையை அவள் கையில் திணித்துவிட்டு ஓடிவிடுகிறான்!
பிறகு? படியுங்கள் :
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கவந்தனும் காமனும்’ 51mUAJZ

அப் பெண் , வீராப்புக் காட்டினாலும், பசிக்கொடுமையால், சில்லறையைப் பொறுக்கி எடுத்துக்கொள்கிறாள்! இவள் காமத்தால் (காமனால்) பிற ஆண்களை நாடி நிற்கவில்லை என்று கூறவருகிறார் ஆசிரியர்.
அப்போது, மனித முன்னேறற்ற அடையாளமான டிராம் கணகணப்பது மனிதரின் , இக் கூத்தைப் பார்த்துச் சிரிப்பது போல் உள்ளது எனக் கதையை முடிக்கிறார் புதுமைப் பித்தன்!

7 . கதையின் தலைப்புப் பொருத்தம் –
கவந்தன் – பசியின் குறியீடு.
அலுவலகப் பணிகளால் சக்கையாகப் பிழியப்பட்ட வாலிபன் , பசியோடு போராடுகையில் அவனுக்கும் காம இச்சை வராது!
பாலியல் தொழிலுக்கு வரும் பெண்ணும் காம இச்சையால் வருவதில்லை; பசிக் கொடுமையால் , காசுக்காக வருகிறாள்.
காமன் – பாலியல் தொழிலின் குறியீடு. பசித்த பெண், காமத்தை முதலீடாக ஆக்கித் தன் பசியைப் போக்கவேண்டிய சூழ்நிலை!
இவ் வகையில் ‘கவந்தனும் காமனும்’ என்ற தலைப்பு பொருந்துகிறது.

8. பாத்திரப் படைப்பு எதுவும் இக் கதையில் இல்லை.
நெஞ்சைப் பிழிந்த ஒரு சம்பவமே கரு.
கருவைச் சிறுகதையாக்கத் தேவையான பின்புலங்களை உருவாக்கிக் கொண்டுள்ளார் ஆசிரியர்.

9. இக் கதை, ஆங்கிலக் கதை ஒன்றின் தழுவல் என்று ஒருவர் எழுத , இன்னொருவர் , ‘அதெல்லாம் இல்லை! நானும் புதுமைப்பித்தனும் கண்ணாற் கண்ட ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புதுமைப்பித்தன் தானே எழுதியது என்றும் நவின்றுள்ளார்.
கதையின் ஓட்டம், இது புதுமைப்பித்தனின் சொந்தக் கதை என்பதற்கே ஆதரவு தருகிறது!
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7416
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4251

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை