ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.
by T.N.Balasubramanian Today at 5:24 pm

» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Today at 5:10 pm

» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Today at 5:03 pm

» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Today at 4:49 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022
by mohamed nizamudeen Today at 9:27 am

» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm

» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm

» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm

» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 9:57 am

» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm

» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm

» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm

» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm

» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm

» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm

» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm

» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm

» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm

» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm

» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm

» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm

» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm

» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm

» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm

» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm

» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm

» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm

» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm

» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm

» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm

» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Empty சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’

Post by Dr.S.Soundarapandian Mon Jun 20, 2022 3:38 pm

சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’

1 .  1934இல் மணிக்கொடி இதழில் வெளியான புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதை .

2. ‘கவர்ன்மெண்டு’ மருத்துவ மனைகளில் நடக்கும் அவலத்தைப் புலப்படுத்துவதே கதை! இதுதான் ‘கதைக் கரு’.

3 .  ஒரு நோயாளி , தன் கதையைக் கூற ஆரம்பிக்கிறார்; இடையில் பேசுவதெல்லாம் மருத்துவ மனைக் கட்டில்! இறுதியில் கதை கூறத் தொடங்கிய நோயாளியே கதையைச் சொல்லி முடிக்கிறார். இந்த இரண்டும்தான் கதையின்  கூற்றுகள் நிகழும் இரு திக்குகள். இதுவும் சிறுகதை உத்திதான்! சிறுகதையில் , கூற்றுகளானவை ஒரே திக்கிலிருந்து , தொடக்கம் முதல் கடைசி வரை வருகிறதா, பல்வேறு திக்குகளிலிருந்து வருகின்றனவா எனக் காணவேண்டும்.

4 .  ‘கவர்ன்மெண்டு ஆஸ்பத்திரியின்’  கேடுகெட்ட நிலையை இப்படிச் சுக்கமாகச் சொல்கிறார்:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ VraCh7a

வெகு இரத்தினச் சுருக்கமாக ‘நரகத்தின் உதாரணம்’ என்றார் பாருங்கள்!அருமை!

5 . அரசு மருத்துவ மனை ‘நர்சு’களும் , நோயாளி மீது அக்கறை உள்ளவர் போலவும் இருப்பார், அக்கறை இல்லாதவர் போலவும் இருப்பார்! இதனை :
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ C4Mdckr

புதுமைப் பித்தனின்  எழுத்தின் ஒரு முத்திரை,   ‘சொற்சுருக்கம்’  ஆகும்! மருத்துவமனைப்  பணிப்பெண்ணை அறிமுகப்படுத்திய விதமே இதற்குச் சான்று!

6 . நம் நோயாளி, ‘ஸ்பிரிங் கட்டில் அழுத்துகிறது’  என்று சொல்லவும் கேட்ட மருத்துவமனைக் கட்டில் வெகுவாகக் கோபித்துச் சொன்னது:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ Vs8Tyo9

இதை வைத்தே , அங்கு நடக்கும் மருத்துவத்தையும் , மருத்துவரின்  ‘நேர்மை’யையும் நாம் உணர்ந்துகொள்ளலாம்! இது ஒரு சிறுகதை உத்தி! ஆசிரியரே வெளிப்படையாகச் சொல்வதினும் , படிப்பவர் உணர்ந்து கொள்ளுமாறு செய்வது கதைக்கு உயிரூட்டும்.

7 . இப்போது கட்டில் ஒரு காதல் கதை சொல்கிறது நம் நோயாளிக்கு:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ OyRAHNX

காதல் தோல்வியால் விஷம் குடித்துச் செத்ததை எவ்வளவு சுருக்கமாகக் கூறியுள்ளார் பாருங்கள்!  ‘காற்றிற்கு ஒரு முத்தம். அவ்வளவுதான்’! காதலன் காலி!
அரசு மருத்துவமைகளின் பொறுப்பற்ற செயலைக் கண்டிக்கிறார் ஆசிரியர் :
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ I4LDzc6

8 . கட்டில் , அடுத்தது ஓர் இளம் காங்கிரஸ் தியாகியைப் பற்றிச் சொல்கிறது!
அவன் விடுதலைக்காகப் போராடியபோது வயிற்றில் குத்து! ஆனால் அவன் ‘நெஞ்சில் குண்டு படவில்லையே!’ என ஏங்கினானாம்! ஆனால் அந்தப் பெருமை பற்றியெல்லாம் மருத்துவமனையில் யாருக்கும் கவலை இல்லை என்பதை நாம் ஊகிக்குமாறு எழுதுகிறார் புதுமைப்பித்தன். இவர் எழுதுவது:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ H3Bsrgy

அவன் இறந்தான் என்பதை ‘அவன் குரல்வளையில் ‘ கொர்ர்ரென்றது’ என்று எழுதி முடித்துவிடுகிறார்!  
9 . கட்டில் கூறிய அடுத்த கதை,  ஒரு மில்  கூலியின் இரத்த வாந்தி !
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ AxQllw0

மருத்துவரின் அப்பட்டமான அநியாயம்!

இது ஏதோ புதுமைப்பித்தன் காலத்தில்தான் நடந்தது என யாரும் நினைக்க வேண்டாம்! இன்றும் பல இடங்களில் நிலை இதுதான்!

10 . அடுத்தகதை ஏதாவது இருக்கிறதா என நம் நோயாளி பார்க்கும் போது, கட்டில் என்ன சொல்லிற்று? :
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ L5SyDyT

அபேதவாதி – பேதம் பார்க்காதவன்; ஏழை, பணக்காரன் , கீழ்ச்சாதி, மேற்சாதி என்றெல்லாம் பிரித்துப் பார்க்காதவன்.
லெனின் தலைமையிலான ‘ Russian Social Democratic Party’ உறுப்பினர்களே ‘Bolsheviks’ எனப்பட்டனர்.
 ‘நல்லவன் , கெட்டவன், ….’ என்று யாராக இருந்தாலும் ‘போட்டுத் தள்ளுவதுதான் என் வேலை’ என்ற கிண்டல்  பொருளில்தான் கட்டில்  ‘போல்ஷிவிக்கி’ என்ற சொல்லைச் சொல்கிறது!  
புதுமைப் பித்தன் காலத்தில் , தமிழகம் உள்ளிட்ட இந்தியாவில் பொதுவுடைமைத் தத்துவங்கள்  ஓங்கியிருந்தன என்பதை ஈண்டுச் சுட்டவேண்டும்.

11 . இந்த நிலையில், நம் நோயாளி எப்படி இருப்பான்?
‘ நாம் பிழைத்துப் போகமுடியுமா?’என்று கலங்கிப் போயிருந்தான்!அந்தக் கடைசிக் காட்சி!:
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘கட்டில் பேசுகிறது’ GBYKdXu

‘பூட்ஸ்’ சத்தம் கேட்டதுமே ‘மருத்துவராக இருக்குமோ?’ என்று நம் நோயாளி எண்ணுவதைக் காட்டி, நோயாளியின்  கலக்க நெஞ்சை நமக்குப் புலப்படுத்துகின்றார் புதுமைப்பித்தன்.

நம் நோயாளியின் நிலை?

யாருக்குத் தெரியும்?

12 . ஏழையாக இருக்கும் ஒருவன் அரசு உதவியுடன் மேலே போகிறான்; ஆனால் மேலே போய் உட்கார்ந்ததும் அவன் பிறந்து வளர்ந்த கதை அவனுக்கு மறந்துவிடுகிறது! அவனை ஒத்த ஆட்களுடன் சேர்ந்து, அவர்கள் எல்லாம்  தனி வர்க்கமாக ஆகிவிடுகின்றனர்! அவனுக்குக் கீழே உள்ளவர்களை மிதிக்க அரசுக்குத் தூணாக நின்று உதவுகின்றனர்!

13 . ‘கட்டில் பேசுகிறது’ கதை, எந்தப் பாத்திரத்தையும் உயர்த்திக் காட்டவில்லை; ‘பாத்திரப் படைப்பு’ எதுவும் இல்லை; அரசு மருத்தமனைகளின் அவலத்தைக் கட்டிலை விட்டுப் பேசச் சொல்லியிருக்கிறார் புதுமைப் பித்தன். இது ஒரு நல்ல வலுவான சிறுகதை உத்தி!
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7517
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4369

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை