ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm

» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm

» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm

» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 9:57 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 17/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:51 am

» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm

» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm

» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm

» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm

» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm

» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm

» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm

» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm

» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm

» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm

» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm

» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm

» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm

» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm

» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm

» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm

» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm

» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm

» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm

» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm

» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm

» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm

» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm

» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm

» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே...

3 posters

துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Empty துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே...

Post by ayyasamy ram Tue Jun 07, 2022 6:45 am

துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Tamil_News_large_3044709

ரோஷன் பாஞ்சா
சிறந்த ஆடிட்டர்,பாடுவதில் வல்லவர்,இசை கோர்ப்பாளர்,
நடிகை என்று பன்முகம் கொண்டவர்.

இப்போது 48 வயதாகும் இவர் தனது இரண்டாவது வயதில்
இருந்து டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்.

மும்பையில் பிறந்த ரோஷனிற்கு இரண்டு வயதாகும் போது
அவர் நீரிழிவு நோய் பாதிப்பிற்கு உள்ளானது தெரியவந்தது.
ரோஷனின் பெற்றோர் முதலில் கவலைப்பட்டாலும் தங்களது
கவலை மகளை பாதித்துவிடக்கூடாது என்பதற்காக
‛அடுத்து என்ன'? என்பதை நோக்கி சிந்தித்தனர்.

தினமும் இன்சுலின் ஊசி போடுவதைத் தவிர வேறு வழியில்லை
என்ற நிலையில் ரோஷனின் தந்தை மகளுக்கு ஊசி போட்டார்
அந்தக் காலகட்டத்தில் ஊசியின் அளவு பெரிதாக இருக்கும்
இரண்டு வயது மகளுக்கு வலிக்காமல் ஒவ்வொரு நாள் காலையிலும்
ஊசி போட்டு பழகினார்
மகளின் வலியை எல்லாம் மனதளவில் தான்வாங்கிக் கொண்டார்.

டிஸ்போஷபிள் ஊசி இல்லாத காலம் என்பதால் தடிமனான ஊசியை
கொதி நீரில் போட்டு தயார் செய்வது, அந்த ஊசியில் சரியான அளவு
மருந்து ஏற்றுவது என்பது ரோஷனின் தாயின் வேலை, மருந்து
ஏற்றப்பட்ட ஊசியை மகளுக்கு கதை சொல்லி சிரிக்கவைத்தபடி
போடவேண்டியது தந்தையின் கடமை.

இந்த கடமைக்காக ரோஷனின் பெற்றோர் எந்த ஊருக்கும்
சென்றதில்லை அதே போல சர்க்கரை நோயாளிக்கான கட்டுப்பாடான
வாழ்க்கை மற்றும் உணவை மகளுக்காக தங்கள் வீட்டு உணவாக
மாற்றிக்கொண்டனர், ரோஷனுக்கு இனிப்பு என்றால் என்னவென்றே
தெரியாமல் வளர்ந்தார்.
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77190
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Empty Re: துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே...

Post by ayyasamy ram Tue Jun 07, 2022 6:48 am

துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Gallerye_160602263_3044709
-
துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Gallerye_160609584_3044709
ஒரு முறை பள்ளியில் சக மாணவியின் பிறந்த நாள் பரிசாக
வழங்கப்பட்ட சாக்லெட்டை சாப்பிட்டுவிட்டு வீட்டில் வந்து
சிரமப்பட்டார், விஷயமறிந்த ரோஷனின் தாய் மறுநாள்
பள்ளிக்கூடம் சென்று ரோஷனின் ஆசிரியையிடம் மகளின்
பிரச்னைபற்றி கூறி அங்கும் இனிப்பு சாப்பிட விடாமல் பார்த்துக்
கொண்டார்.

எட்டு வயதான போது ரோஷன் தனக்கு தானே இன்சுலின் போட்டுக்
கொள்ளும் அளவிற்கு முன்னேறினார்,கட்டுப்பாடான உணவு மற்றும்
வாழ்க்கை இவருக்கு பலவிஷயங்களை கற்றுக்கொள்ள நிறையவே
கைகொடுத்தது.

படிப்பில் கெட்டிக்காரரான இவர் ஆடிட்டர் படிப்பை முடித்த கையோடு
மும்பையில் பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தது,அலுவலக
ரீதியாக சைரஸ் பாஞ்சா என்பவரை அடுத்தடுத்து சந்திக்க நேர்ந்த
போது சைரஸ் தன் காதலை தெரிவித்தார்.

தான் யார்? தனக்கு என்ன பிரச்னை? என்பதை ரோஷன் தெரிவித்தார்.

அதனால் தனக்கு பிரச்னை எதுவும் இல்லை தான் இப்போதுதான்
இன்னும் தீவிரமாக காதலிப்பதாக தெரிவித்தார்.ஒரு விஷயம் மட்டும்
நெருடல் தந்தது.

காதலர் சைரஸ் சென்னை வாசி, தானோ மும்பை வாசி எப்படி ஒன்றாக
குடும்பம் நடத்துவது என்று எண்ணினார்,தனது ‛பாஸை' சந்தித்து
விவரம் சொன்னார் ‛அதனால் என்ன? நீ சென்னை அலுவலகத்திற்கு
மாற்றல் வாங்கிக் கொள்' என்று சொல்லி, உடனே மாறுதலும் கொடுத்து
விட்டார்.

மும்பையைக் காலி செய்துவிட்டு சென்னை வந்தவருக்கு அடுத்த
பிரச்னை, தன்னையும் தனது சர்க்கரை நோய் பிரச்னையையும்
சிறுவயது முதலே அறிந்த டாக்டர்களை விட்டு வரவேண்டுமே என்று
நினைத்தார், அங்கு இருந்தவர்கள் சென்னையில் உள்ள டாக்டர்கள் சிலரை
சிபாரிசு செய்தனர்.

அந்த டாக்டர்களை ரோஷன் சென்று சந்தித்தார், அவர்கள் ஒரு டோஸ்
போதாது தினமும் மூன்று நான்கு டோஸ் ஊசி போடவேண்டும் என்றனர்
ஆனால் அதற்கு ரோஷனுக்கு உடன்பாடில்லை இந்த நிலையில்தான்
கோபாலபுரத்தில் உள்ள பிரபல நீரிழிவு மருத்துவரான டாக்டர் மோகனை
சந்தித்தார்.

அவர் ரோஷனின் மருத்துவ அறிக்கையைப் பார்த்துவிட்டு மிகவும்
கட்டுப்பாடான வாழ்க்கை முறையை கொண்டு இருக்கிறீர்கள் ஆகவே
நீங்கள் இதுவரை போட்டுக்கொண்டது போலவே தினமும் ஒரு டோஸ்
போட்டுக் கொண்டால் போதும் என்று சொல்லியிருக்கிறார்
அது முதல் டாக்டர் மோகன் இவரது குடும்ப டாக்டராகவும் நண்பராகவும்
வழிகாட்டியாகவும் மாறிவிட்டார்.

நான் உங்களை மாற்றவில்லை நீங்கள்தான் நீரிழிவால் பாதிக்கப்பட்ட
பலரது மனதை மாற்றி நம்பிக்கை கொடுத்து இருக்கிறீர்கள் சாதாரண
மக்கள் செய்யும் வேலைகளை விட அதிக வேலைகளையும்
திறமைகளையும் நீங்கள் கொண்டுள்ளீர்கள் நீரிழிவை வென்ற உங்க
ள் வாழ்க்கை கதையை எனது புத்தகத்தில் இடம் பெறச்செய்வேன்
அந்த புத்தகத்தை நீங்களே வந்து வெளியிடுங்கள் என்று டாக்டர் மோகன்
கூறியிருந்தார்.

அந்த நாளும் கடந்த வாரம் வந்தது ‛பாண்டிங் போஸ் அண்ட் பியாண்ட்'
என்ற நீரிழிவை வென்ற பலரின் நிஜக்கதையைக் கொண்ட ஆங்கில நுால்
வெளியீட்டு விழா நடைபெற்றது.நுாலை எழுதிய டாக்டர் மோகன்
பேசுகையில் நீரிழிவு நோயுடன் நுாறு வயதைக்கடந்து வாழும் பலரின்
சான்றுகளும் எங்களிடம் உள்ளது என்றார்.

நுாலைப் பெற்றுக் கொண்ட ரோஷன் பாஞ்சா,‛டாக்டர் என்னை நன்றாக
பார்த்துக் கொள்கிறார், எனது தலைக்கு மேல் வளர்ந்த இரண்டு குழந்தைகள்,
வேலைகள்,இசை ஆல்பம் தயாரிப்பு நடிப்பு என்று ரொம்பவே பிசியாக
இருக்கிறேன். இதற்கெல்லாம் காரணமான டாக்டர் மோகனுக்கு நன்றி
கூடுதலாகவும் இந்த இடத்தில் அவருக்கு இந்த இடத்தில் நன்றி கூறிக்
கொள்கிறேன்,

காரணம் எனக்கு பிரியமான மாம்பழம் சாப்பிடவும் இப்போது அளவுடன்
அனுமதித்திருக்கிறார்' என்றபோது அரங்கம் புன்னகை பூத்தது.

-எல்.முருகராஜ்
நன்றி-தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77190
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Empty Re: துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே...

Post by T.N.Balasubramanian Tue Jun 07, 2022 7:53 am

மிக நல்ல பதிவு ராம்.

ஞாயிறு அன்று தினமலரில் பார்த்த உடனேயே நகலெடுத்து, நம் உறவுகளுக்கு பகிர்ந்திட ஆசை.
எனோ அந்த செய்தியை நகலெடுக்க முடியவில்லை.

பகிர்வுக்கு நன்றி.

@ayyasamy ram


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32956
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149

Back to top Go down

துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Empty Re: துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே...

Post by ஜாஹீதாபானு Tue Jun 07, 2022 3:55 pm

துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... 3838410834 துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... 103459460


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 31329
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615

Back to top Go down

துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே... Empty Re: துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை