ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/07/2022
by mohamed nizamudeen Today at 7:15 am

» மாநிலங்களவை எம்பி ஆகிறார் இசையமைப்பாளர் இளையராஜா!
by ayyasamy ram Today at 5:44 am

» தமிழ் புக்
by kadhaikalam Today at 5:43 am

» நிலத்தடி நீருக்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் வசூலிக்கும் மத்திய அரசின் திட்டம், தமிழகத்திற்கு பொருந்தாது
by Dr.S.Soundarapandian Yesterday at 9:32 pm

» சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘குப்பனின் கனவு’
by Dr.S.Soundarapandian Yesterday at 9:26 pm

» 'கூகுள் பே'யில் லஞ்சம்; டிஜிட்டலான வருவாய்த்துறை!
by T.N.Balasubramanian Yesterday at 7:38 pm

» பார்த்திபன் படத்திற்கு 3 சர்வதேச விருது
by Dr.S.Soundarapandian Yesterday at 6:59 pm

» அது ஒரு அழகிய கலாம் காலம்.
by Dr.S.Soundarapandian Yesterday at 6:54 pm

» மது மாமிசம் சாப்பிடுபவர் தானே காளி: குதர்க்கம் பேசிய பெண் எம்.பி., மீது வழக்கு
by T.N.Balasubramanian Yesterday at 4:42 pm

» தந்தையும் மகளும் போர் விமானத்தில் பறந்தனர்
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm

» அடி மலர்ந்து நுனி மலராத பூ – விடுகதைகள்
by T.N.Balasubramanian Yesterday at 4:21 pm

» பழைய நூல் தேடல்-2
by RAJA MUTTHIRULANDI Yesterday at 4:16 pm

» பழைய நூல் தேடல்
by RAJA MUTTHIRULANDI Yesterday at 4:06 pm

» உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ?
by RAJA MUTTHIRULANDI Yesterday at 3:47 pm

» டி பிளாக் - சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» மஞ்சு வாரியரை பாராட்டிய மத்திய அரசு
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» மகாபாரதம் கதையை படமாக்கும் ராஜ்மவுலி
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» நித்திரையின் தூதுவன் இவன் – விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» வாயால் வருவதே வம்பு – வெண்பா
by T.N.Balasubramanian Yesterday at 12:24 pm

» பத்தும் பேச வைக்கும் பணம - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:46 am

» நிலவே…(கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:44 am

» விபத்தில்லாமல் கடக்கணும்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43 am

» கடைசி நம்பிக்கை….(கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:42 am

» நேசம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:41 am

» மருட்டும் புத்தம்புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதல் அழிவதில்லை – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:33 am

» பாப்பா…..(கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:30 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:46 am

» 5,318 பணியிடங்களுக்கான அறிவிப்பு ரத்து! – ஷாக் கொடுத்த மின்சார வாரியம்!
by ayyasamy ram Yesterday at 9:43 am

» சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் பிரபல பாலிவுட் ஹீரோயின்!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 9:31 am

» ரூ.489 கோடி செலவில் வர்ணம் பூசப்படுகிறது, ஈபிள் கோபுரம் துருப்பிடித்ததா?
by ayyasamy ram Yesterday at 5:28 am

» சிங்கப்பூர் அதிபர் மற்றும் சபாநாயகருக்கு கொரோனா தொற்று
by ayyasamy ram Yesterday at 5:23 am

» மஹா., பாடப் புத்தகத்தில்புதுக்கோட்டை மாணவி
by ayyasamy ram Yesterday at 5:06 am

» உணவு பாதுகாப்பு: ஒடிசா முதலிடம்; தமிழகத்துக்கு 9வது இடம்
by ayyasamy ram Yesterday at 4:59 am

» புத்தம் வீடு நாவல் தேவை
by Rajana3480 Yesterday at 3:18 am

» உள்ளத்தில் நல்ல உள்ளம்
by vandhiyathevan Tue Jul 05, 2022 11:23 pm

» தங்கப் பதக்கத்தை சோனுசூட்டுக்கு சமர்ப்பணம் செய்த கராத்தே வீராங்கனை
by Dr.S.Soundarapandian Tue Jul 05, 2022 8:00 pm

» வானதி ஸ்ரீனிவாசன் --கமல் ஹாசன் --விக்ரம்.
by Dr.S.Soundarapandian Tue Jul 05, 2022 7:54 pm

» சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘மகா மசானம்’
by Dr.S.Soundarapandian Tue Jul 05, 2022 7:51 pm

» ரூட் - பேர்ஸ்டோ கூட்டணி அசத்தியதில் இங்கிலாந்து வெற்றி;
by T.N.Balasubramanian Tue Jul 05, 2022 6:20 pm

» மஹா.,வில் தொடர் மழை: வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை
by T.N.Balasubramanian Tue Jul 05, 2022 4:52 pm

» 'பொன்னியின் செல்வன்' படத்தில் வந்தியத்தேவனாக நடிக்கும் கார்த்தி - போஸ்டர் வெளியீடு..!
by ayyasamy ram Tue Jul 05, 2022 3:14 pm

» ஹவ் ஓல்ட் ஆர் யூ - திரைப்படம்
by ayyasamy ram Tue Jul 05, 2022 2:53 pm

» உயரே - திரைப்படம்
by ayyasamy ram Tue Jul 05, 2022 2:51 pm

» மிலி - திரைப்படம்
by ayyasamy ram Tue Jul 05, 2022 2:50 pm

» டேக் ஆஃப் - பெண்களுக்கான திரைப்படம்
by ayyasamy ram Tue Jul 05, 2022 2:48 pm

» 5 சுந்தரிகள் -பெண்களுக்கான படம்
by ayyasamy ram Tue Jul 05, 2022 2:46 pm

» கொரோனா வைரஸ் தொற்று,அதிகளவில் பரவி வருகிறது
by T.N.Balasubramanian Tue Jul 05, 2022 9:20 am

» இதுதான் வாழ்க்கை.. இதுதான் பயணம்..!
by ayyasamy ram Tue Jul 05, 2022 7:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

2 posters

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 5 Empty பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Mon Dec 13, 2021 12:14 pm

First topic message reminder :

13.12.2021

நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]

நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல  நடிச்சார்.

அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.

லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார். 

தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS 

ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS 

சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன் 

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down


பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 5 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Jan 12, 2022 7:18 pm

12.01.2022

11.01.2022 - நடிகை கிரண் ரத்தோட் பிறந்த நாள் [1981]

காலேஜ் படிச்சு முடிச்சுட்டு விளம்பரங்கள்ல நடிச்சார். ஹிந்தி பாப் ஆல்பத்துல நடிச்சார். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். தமிழ்ல மொதல்ல நடிச்ச படம் ஜெமினி. 

தப்பு தண்டா தப்பு தண்டா தலைவா நீ செய்ய வா - சுஜாதா மோகன் & சங்கர் மகாதேவன் 

வில்லன் 2002 / வித்யாசாகர் / வைரமுத்து 

இங்கே இங்கே ஒரு முறை பார் டோலுனா இரக்கமே உனக்கில்லையா டோலுனா - சுஜாதா மோகன் & ஹரிஹரன் 

பரசுராம் 2003 / AR ரஹ்மான் / பா விஜய் 

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 5 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Thu Jan 13, 2022 4:15 pm

13.01.2022

பாலிவுட் நடிகர் சாயாஜி ஷிண்டே பிறந்த நாள் [1952]

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி படங்கள்ல நடிச்சார். 

காலேஜ் படிச்சதும் மகாராஷ்ட்ரா அரசு நீர்ப்பாசன துறைல நைட் வாச்மேனா  வேல செஞ்சார். இங்க வேல செஞ்சுட்டு இருக்கும்போது சினிமா மேல ஆச வந்துச்சு. மும்பைக்கு போனார். ஆரம்பத்தில மராத்தி நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். அதுக்கப்புறமா மராத்தி, ஹிந்தி படங்கள்ல நடிச்சார். 

தமிழ்ல நடிச்ச முதல் படம் பாரதி [2000]. இதுல ஸ்பெஷாலிட்டி என்னான்னா  இவருக்கு தமிழ் தெரியாது. ஆனா தமிழ் கவிஞர் பாரதியார் ரோல்ல நடிச்சு, மாநில விருது வாங்கினார். 

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொப்பனம்தானோ - ஹரிஷ் ராகவேந்திரா

பாரதி 2000 / இளையராஜா / பாரதியார்

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 5 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Fri Jan 14, 2022 12:49 pm

14.01.2022

எல்லாருக்கும் இனிய தமிழ் புது வருஷ & பொங்கல் வாழ்த்துக்கள்.

பழம்பெரும் சிரிப்பு நடிகர் சுருளிராஜன் அவர்கள் பிறந்த நாள் [1938 - 1980]

மதுரை தேனீல பிறந்த இவர், அங்க ஒரு சின்ன தொழிற்சாலைல வேல செஞ்சார். நாடகங்கள்ல நடிச்சார். சினிமால நடிக்க ஆசை வந்துருச்சு. சென்னைக்கு போனார். கலைஞரின் காகிதப்பூ நாடகத்தில தேர்தல் நிதிக்காக நடிச்சார். OAK தேவர், TN பாலு நாடக குழுக்கள்ல நடிச்சார். அப்புறமா சினிமாலயும் நடிக்க ஆரம்பிச்சார். காமெடி, குணசித்திர ரோல்ல நடிச்சார். நடிச்ச முதல் படம் இரவும் பகலும் [1965]. 27 வயசில நடிக்க ஆரம்பிச்சார். ஆனா ஆரம்பத்தில வயசான ரோல்ல நடிச்சார். நான், மூன்றெழுத்து படங்கள்ல நடிச்ச மாதிரி. 

இந்த காலத்தில இவருக்கு ஆதரவாய் இருந்தவர் டைரக்ட்டர் TN பாலு. 

அப்போ டைரக்ட்டர்களும், தயாரிப்பாளர்களும் அவங்க படத்ல எப்படியாவது சுருளியை நடிக்க வச்சுரணும்னு போராடி கால்ஷீட் வாங்குவாங்களாம். ஒரு நாளக்கி 50,000 ரூபாய் சம்பளம் வாங்கிய பெரிய சிரிப்பு நடிகர். ஒரே நேரத்தில 7 படங்கள்லலாம் நடிச்சார். ஒரு டைரக்ட்டருக்கு 3 மணி நேரம்தான் கால்ஷீட் கொடுத்த பிஸியான நடிகரா இருந்தார். ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர் கூட நிறைய படங்கள்ல நடிச்சார். 

இவர் குரல் வித்தியாசமானதா இருந்துச்சு. மிமிக்ரி கலைஞர்கள் உபயோகிக்கும் குரல்கள்ல இவரோடது இருக்கும். 

டைரக்ட்டர்கள் சில சமயங்கள்ல சம்பளத்தை கொறச்சு கொடுப்பதாக சொன்னா, கொறஞ்ச சம்பளம் வாங்கி நடிச்ச நல்ல மனம் இருந்துச்சு  சுருளிக்கு. பத்திரிகையாளர்களுக்கு ரொம்ப நெருக்கமானவர். 

தமிழ்நாடு மாநில விருது வாங்கினார். 

கொஞ்சம் ஒதுங்கு நா தனியா பேசணும் ஒன்னோட - SPB 

வசந்தகாலம் 1981 / சங்கர் கணேஷ் / MA காஜா 

சொல்ல வெக்கமா இருக்கு சொக்கம்மா - SPB 

பெண்ணுக்கு யார் காவல் 1980 / ரமேஷ் நாயுடு / ஆலங்குடி சோமு 

வா மச்சா வா வண்ணாரப்பேட்ட ஊத்திக்கிட்டேன் கேளேண்டா என்னோட பாட்ட - SPB 

வண்டிச்சக்கரம் 1980 / சங்கர் கணேஷ் / புலமைப்பித்தன் 

படமெடுக்கிற பாம்ப போல பளபளப்பவளே நா காட்டி சலசலப்பவளே - வாணி ஜெயராம், TK கலா & SC கிருஷ்ணன் 

பாலாபிஷேகம் 1977 / சங்கர் கணேஷ் / வாலி 

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 5 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sat Jan 15, 2022 1:59 pm

15.01.2022

நடிகை பானுப்ரியா பிறந்த நாள் [1966]

ஆந்திரால பிறந்தவர். நடிகை நிஷாந்தி என்ற சாந்திப்ரியாவின் அக்கா. 

பானுப்ரியா பரதநாட்டிய கலைஞர். கவர்ச்சியான கண்கள் இவருக்கு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்கள்ல நடிச்சிருக்கார். சில ஹிந்தி படங்கள்லயும், TV சீரியல்கள்ல, விளம்பரங்கள்லயும் நடிச்சார். முதல் தமிழ் படம் மெல்ல பேசுங்கள் [1983]. நாலு படங்கள்ல டப்பிங் பேசினார். 

ஸ்கூல் படிக்கும்போது ஆண்டுவிழாக்கு பாக்யராஜ் கெஸ்ட்டா போயிருந்தார். பானுப்ரியாவின் டான்ஸ் பாவனைகளை பார்த்தார். 1982ல தூறல் நின்னு போச்சு படத்ல நடிக்கவைக்கலாம்னு நெனைச்சார். வயசு பத்தாம நடிக்க முடியல. அப்புறமா 1989ல ஆராரோ ஆரிரரோ படத்ல அவருக்கே ஹீரோயினா நடிச்சு படம் ஓஹோன்னு ஓடி தமிழ்நாடு மாநில ஸ்பெஷல் விருதும், ஃபிலிம்ஃபேர் விருதும் வாங்கினார். 

நந்தி விருதுகள், தமிழ்நாடு மாநில விருது, சினிமா எக்ஸ்ப்ரஸ் விருது,  ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார். 

காதல் சாகாது ஜீவன் போகாது - S ஜானகி & மலேசியா வாசுதேவன் 

மெல்ல பேசுங்கள் 1983 / இளையராஜா / நா காமராசன்  

நாடோடி மன்னர்களே வணக்கம் வணக்கம் - KS சித்ரா 

வானமே எல்லை 1992 / மரகதமணி / வைரமுத்து 

தானா தலையாடுண்டா தம்பிகளா நாம்பாடுனா - S ஜானகி & கோரஸ்  

ஆராரோ ஆரிரரோ 1989 / பாக்யராஜ் / வாலி 

நாதம் எழுந்ததடி கண்ணம்மா நவரசம் ஆனதடி - S ஜானகி & KJ யேசுதாஸ் 

கோபுர வாசலிலே 1991 / இளையராஜா / வாலி 

புன்னகையில் மின்சாரம் பொங்க வரும் முத்தாரம் அள்ளியெடுக்க - S ஜானகி & இளையராஜா 

பரதன் 1992 / இளையராஜா / வாலி 

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 5 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sat Jan 15, 2022 2:07 pm

15.01.2022

பழம்பெரும் சிரிப்பு நடிகர் KA தங்கவேலு அவர்கள் பிறந்த நாள் [1917 - 1994]

காரைக்கால் அருணாசலம் தங்கவேலு. டணால் தங்கவேலு. 

மனைவி நடிகை M சரோஜா. ரெண்டு பேரும் சேந்து நடிச்ச அறிவாளி  "அதா எனக்கு தெரியுமே" காமெடி மறக்கக்கூடியதா? கல்யாண பரிசு பைரவன், மன்னார் & கம்பெனி, இதுவும் நல்ல காமெடி. 50 படங்களுக்கு மேலா ஒண்ணா நடிச்ச பிறகு லவ்வி கல்யாண பரிசு படத்தின் 100வது நாள் கொண்டாட்ட விழால கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்க. 

தனக்கு பிடிச்ச காமெடி நடிகராக தங்கவேலுவை இப்போதைய சிரிப்பு  நடிகர் சந்தானம் சொல்லியிருக்கார். கலைவாணர் NS கிருஷ்ணன் டைரக்ட் செஞ்ச பணம் படத்ல நடிச்சதுக்கு, NSK தங்கவேலுவுக்கு 5,000 ருவா கொடுத்தார். தங்கவேலு பணத்தை தன் வீட்டுக்கு வந்து காட்னபோ, அவரோட பெரியப்பா, அந்த பணத்தை கலைவாணர் வீட்ல திருடிட்டார்னு நெனச்சு, திட்டி, அவரை  இழுத்துட்டு கலைவாணர் வீட்டுக்கு போனார். "அந்த பணம் அவர் நடிச்சதுக்கு நா கொடுத்த சம்பளம்"னு சொல்லிட்டார். தங்கவேலு வாழ்க்கைல ரொம்ப கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். 

10 வயசிலிருந்து நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். கந்தசாமி முதலியார் நாடக குழுல தங்கவேலுவும், கலைவாணரும் அண்ணன் - தம்பியா  பழகினாங்க. கலைவாணர் தன்னோட நாடக குழூல தங்கவேலுவை சேத்திக்கிட்டார். அப்புறமா தங்கவேலு சொந்த நாடக குழு ஆரம்பிச்சு  நடத்தினார். சினிமா சான்ஸ் கொறஞ்சதும் நாடங்கள்ல 1994 வரை நடிச்சார். 1951ல சிங்காரி படத்ல அடிக்கடி டணால் டணால்னு சொல்லி நடிச்சதால, இவர் டணால் தங்கவேலுவாயிட்டார். 

கந்தசாமி முதலியாரின் பதிபக்தி நாடகம், சதிலீலாவதி [1936] படமாச்சு. இந்த படத்லதான் தங்கவேலு சின்ன ரோல்ல நடிக்க ஆரம்பிச்சார். ஆரம்பத்ல 60 வயசு கிழவனாக நடிச்சார். பணம், திரும்பிப்பார், இல்லறஜோதி, சுகம் எங்கே உள்பட படங்கள்ல நடிச்ச மாதிரி. 

தங்கவேலுவுக்கு SC கிருஷ்ணன் அதிகமா பின்னணி பாடினார். சில பாட்டுக்கள் சீர்காழியார், PB ஸ்ரீனிவாஸ் பாடினார். 

கலைமாமணி விருது, கலைவாணர் விருது வாங்கினார். 

பொம்பள தங்கவேலு டான்ஸ்
இது இங்கேருக்கு அது அங்கேருக்கு - SC கிருஷ்ணன் & SV பொன்னுசாமி

ஹரிச்சந்திரா 1968 / KV மகாதேவன் / தஞ்சை ராமையாதாஸ்

உங்கள் அழகை கண்டேன் நிலவிலே உண்மையிலே மன்மதனே

நான் கண்ட சொர்க்கம் 1960 / G அஸ்வத்தாமா

My Dear Meena ஓ ஐடியா என்னா வதைப்பதுதானா என்னை வதைப்பதுதானா

மஞ்சள் மகிமை 1959 / மாஸ்ட்டர் வேணு / மருதகாசி

ஆனது ஆச்சு போனது போச்சு அஞ்சாமல் வா

மஞ்சள் மகிமை 1959 / மாஸ்ட்டர் வேணு / மருதகாசி

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 5 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Sat Jan 15, 2022 3:29 pm

அதா எனக்கு தெரியுமே


-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76322
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 5 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sun Jan 16, 2022 6:42 pm

16.01.2022

நடிகர் விஜய் சேதுபதி பிறந்த நாள் [1978]

நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், நிகழ்ச்சி தொகுப்பாளர், வசனகர்த்தா. TV சீரியல்ல நடிச்சார். கலைஞர் TVல  நாளைய இயக்குனர் போட்டி நிகழ்ச்சிக்காக கார்த்திக் சுப்புராஜா கூட சேந்து பல குறும்படங்கள்ல வேல செஞ்சார், நடிச்சார்.

ஒண்ரெண்டு தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். ஆரம்பத்ல சின்ன சின்ன ரோல்ல நடிச்சிட்டு, ஹீரோவா நடிச்ச முதல் படம் தென்மேற்கு பருவக்காற்று [2010]. 2019ல ரஜினி நடிச்ச பேட்ட படத்ல வில்லனா நடிச்சார். 
 
காலேஜ் படிச்சு முடிச்சுட்டு துபாய்க்கு போயி வேல செஞ்சார். அந்த வேல பிடிக்காம இந்தியாவுக்கு வந்துட்டார். இவருக்கு ஃபோட்டோஜீனிக் முகமா இருக்குதுனு ஒரு ஃபோட்டோகிராஃபர் சொன்னதால, சேதுபதிக்கு நடிப்பு மேல ஆச வந்துருச்சு. கூத்துப்பட்டறைல கணக்காளரா வேலக்கி சேந்தார். 

ஃபிலிம்ஃபேர் விருதுகள், விஜய் விருதுகள் வாங்கினார். 

ஏவ்வீட்டில நா இருந்தேனே எதிர் வீட்டில அவள் இருந்தாளே

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2013 / சித்தார்த் விபின் / லலிதானந்த்

தாபங்களே ரூபங்களாய் படுதே தொடுதே அழகினை சுடுதே

'96 / 2018 / கோவிந்த் வசந்தா / உமாதேவி

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 5 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Sun Jan 16, 2022 7:20 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 5 Actorsooribirthdaywishtovijaysethupathi1-1642335229
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 5 0eLpffz
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76322
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 5 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Thu Jan 20, 2022 2:41 pm

20.01.2022

17.01.2022 - நடிகை திஷா பாண்டே பிறந்த நாள் [1991]

நடிகை & மாடல். தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்கள்ல நடிச்சார். விளம்பரங்கள்ல நடிச்சிருக்கார். 
தமிழ்ல நடிச்ச முதல் படம் தமிழ் படம் [2010]. 

ஓ மஹசீயா ஓஹோ மஹசீயா - ஸ்வேதா மோகன் & ஹரிஹரன் 

தமிழ்ப் படம் 2010 / கண்ணன் 

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 5 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Thu Jan 20, 2022 2:52 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 5 Disha250211_10.jpg?w=600&dpr=1
-
திஷா பாண்டே இந்திய தமிழ் திரைப்பட நடிகை ஆவார்.
இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மற்றும் ஹிந்தி திரைப்
படங்களில் நடித்து வருகிறார்.

2010-ம் ஆண்டு போலோ ராம் என்ற ஹிந்தி திரைப்படத்தில்
நடித்து திரையுலகில் அறிமுகமான இவர், அதே ஆண்டு
தமிழில் சிவா நடித்த தமிழ் படம் என்ற திரைப்படத்தில்
நடித்து தமிழில் அறிமுகமாகியுள்ளார்.

இத்திரைப்படத்தினை தொடர்ந்து மயங்கினேன் தயங்கினேன்,
கீரிப்புள்ள போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76322
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 5 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Thu Jan 20, 2022 3:03 pm

20.01.2022

17.01.2022 - மக்கள் திலகம் MG ராமச்சந்திரன் அவர்கள் பிறந்த நாள் [1917 - 1987]

மருதூர் கோபாலன் மேனன் ராமச்சந்திரன். இலங்கையில் பிறந்தார். MG சக்கரபாணியின்  தம்பி. 

MGR ரை ஜனங்களுக்கு பிடிக்க காரணம் அவர் ஏழைகளின் இதய தெய்வமாக  வாழ்ந்தார். முதலமைச்சரான முதல் இந்திய நடிகர்ங்கிற பெருமை அவருக்கு உண்டு. நாமதான் பெரிய நடிகராச்சே, முதலமைச்சராச்சேங்கிற கர்வம் இல்லாம, இல்லாதவங்களுக்கு அள்ளி கொடுத்த வள்ளலாகவே வாழ்ந்தார். இதனாலதான் அதிகமா ப்ரபலமானார். 

1982ல பள்ளிக்கூடங்கள்ல 'MGR சத்துணவு திட்டம்' ஏற்படுத்தி குழந்தைகளுக்கு இலவசமா சாப்பாடு கொடுக்க செஞ்சார். பெண்களுக்குனு தனி பஸ் போக்குவரத்து ஏற்படுத்தினார். தமிழ்நாட்ல மது குடிக்க தடை சட்டம் போட்டார். முதலமைச்சரா இருந்த போது இது போன்ற நிறைய ஜனங்களுக்கு நல்லதை செஞ்சார். 

அம்மாவின் அப்பா பேர் சீதாராமன் பேர்ல ராமன், அப்பாவின் அப்பா பேர்  சந்திரசேகரன்ல சந்திரன் சேத்து ராமச்சந்திரன்னு பேர் வச்சுட்டாங்க. இலங்கைல இருந்து எல்லாரும் கேரளாவுக்கு போய் வசிச்சாங்க. குடும்ப சூழ்நிலை காரணமாக அங்க இருந்து கும்பகோணத்துக்கு வந்தாங்க. MGR படிக்க முடியாம 7 வயசிலேயே அண்ணன்கூட பாய்ஸ் நாடக கம்பெனில  சேந்து நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். இங்கதான் நடிப்பு, டான்ஸ், பாட்றது, நடிக்கும்போது எப்டி பேசணும், வாள் சண்டை, மனப்பாடம் எப்டி செய்றது எல்லாத்தயும் உற்சாகமா கத்துக்கிட்டார். வேற சில நாடக கம்பெனி நாடகங்கள்லயும் நடிச்சார். 

கொஞ்சம் கொஞ்சமா சினிமால  நடிக்க ஆரம்பிச்சு, நடிப்பு, தயாரிப்பாளர், டைரக்ட்டர்ன்னு  தூள் கெளப்பினார். 

மனைவி VN ஜானகியும் [மூணாவது மனைவி], MGR ரும் சினிமால ஒண்ணா நடிச்சு, லவ்வி பெரும் ப்ரச்னைங்களுக்கு நடுவே கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்க. இந்த ஜானகி பாக்றதுக்கு MGRரின் முதல் மனைவி மாதிரி இருந்தாராம். அதனால லவ்வு வந்துருச்சாம். 

1936ல அமெரிக்க டைரக்ட்டர் எல்லிஸ் டங்கன் டைரக்ட்டின சதிலீலாவதி படத்ல MGR அறிமுகமானார். ஹீரோவா நடிச்ச முதல் படம் ராஜகுமாரி [1947]. இந்த படத்தின் டைட்டில்ல இவர் பேர் MG ராமசந்தர்னு இருந்துச்சு. சினிமா உலகத்தில நல்லாவே பாப்புலர் ஆயிட்டார். 25 வருஷம் கழிச்சு நடிகவேள் MR ராதா MGRரை சுட்டு, அவர் குரல் சரியில்லாம போன பின்னாலகூட, அவரோட  ஸ்டார் வால்யூ  கொறயவே இல்ல. சிகரெட் பிடிப்பது, மது குடிப்பது போல நடிப்பை தவிர்த்தார். 

1977ல அண்ணா நீ என் தெய்வம் படம் ஸ்ரீதர் டைரக்ட்டி, MGR சில ஸீன்ல நடிச்சார். அந்த படம் ஏனோ பாதீல நின்னுபோச்சு. எடுத்த வரைக்கும் இருந்த படத்துக்குன்னே பாக்கியராஜ் ஒரு திரைக்கதை எழுதி, அவரே ரெண்டு ரோல்ல நடிச்சு, அவசர போலீஸ் 100னு [1990] ஒரு படத்தை எடுத்து ரிலீஸ் செஞ்சார். ஓஹோ படம். 

நடிப்புக்காக பாரத் விருதுனு தேசிய விருது வாங்கிய முதல் தமிழ் நடிகர். இது 1971ல ரிக் ஷாக்காரன்  படத்ல நடிச்சதுக்கு வாங்கினார். தேசிய விருதுகள், கௌரவ டாக்ட்டர் பட்டங்கள், அண்ணா விருது, ஃபிலிம்ஃபேர் விருது, தமிழ்நாடு மாநில விருதுகள் வாங்கினார். மூணு தடவ தொடர்ந்து தேர்தல்ல ஜெயிச்சு முதலமைச்சராக இருந்தார். 

நாடோடி மன்னன் படம் 1958ல தயாரிச்சு, டைரக்ட்டி, நடிச்சார். இந்த படம் உருவானதை பற்றி ஒரு புத்தகம் எழுதினார். இந்த படத்ல வேல  செஞ்சவங்க  ஒவ்வொருத்தரை பற்றியும் அதுல இருக்குது. இந்த புத்தகத்தில இருக்கிற முக்கியமான விஷயம் என்னான்னா, இந்த படம் வெற்றியடஞ்சா மன்னன், தோல்வியடஞ்சா நாடோடினு எழுதியிருந்தார். நான் ஏன் பிறந்தேன்னு இவரோட சுயசரிதை 2003ல வெளியிடப்பட்டுச்சு. 1990ல இவர் பேர்ல ஸ்டாம்ப் வெளியிடப்பட்டுச்சு. 

இவருக்கு நிறைய பட்டபேர் இருக்கு. அதல முக்கியமானது அறிஞர் அண்ணா இதயக்கனின்னும், கலைஞர் கருணாநிதி புரட்சி நடிகர்னும் கொடுத்தது ப்ரபலம். இவரோட நினைவிடம், மார்பளவு சிலை சென்னை மெரினா கடற்கரைல இருக்கு. சென்னை தியாகராஜ நகர்ல MGR ஆபீஸாக உபயோகிச்சுட்டு இருந்த கட்டிடம் நினைவு இல்லமாக நிக்குது. இங்க அவர் உபயோகிச்ச பொருட்கள், அவருக்கு கொடுக்கப்பட்ட பரிசுகள் எல்லாத்தையும் வச்சிருக்காங்க. நடிப்புல MGR ரின் வழிகாட்டிகள் நடிகர் காளி N ரத்தினம் & KP கேசவன். 

இயற்கை அழிவுகள் ஏற்பட்ட காலங்கள்ல, பாதிக்கப்பட்ட ஜனங்களுக்கு MGR பெரிதும் உதவி செஞ்சார். இந்தோ - சைனா போர்க்காலத்தில 75,000 ருவா நன்கொடை கொடுத்தார். தாய் மாத இதழுக்கும், அண்ணா தினசரி பத்திரிகைக்கும் நிறுவனர். சத்யா ஸ்டூடியோஸ், MGR பிக்ச்சர்ஸ் இவரோட  சினிமா தயாரிப்பு நிறுவனங்கள். 

திருமுக எழிலை திருடிக்கொண்டது தாமரையது - K மாலதி & MM மாரியப்பன்

ராஜகுமாரி 1947 / SM சுப்பையா நாயுடு / உடுமலையார்

நதியே நீராழி அதையே சேர்தல் போலே நாம் சேர்ந்தோம் - KV ஜானகி & MM மாரியப்பன்

மருதநாட்டு இளவரசி 1950 / MS ஞானமணி / CA லட்சுமணதாஸ்

கடலோரம் வாங்கிய காற்று குளிராக இருந்தது நேற்று - TM சௌந்தரராஜன் 

ரிக் ஷாக்காரன் 1971 / MS விஸ்வநாதன் / வாலி 

நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே என் மேனி என்னாகுமோ - P சுசீலா & TMS 

நல்ல நேரம் 1972 / KV மகாதேவன் / கண்ணதாசன் 

அழகெனும் ஓவியம் இங்கே உனை எழுதிய ரவிவர்மன் எங்கே - P சுசீலா & KJ ஜேசுதாஸ்  

ஊருக்கு உழைப்பவன் 1976 / MS விஸ்வநாதன் / புலமைப்பித்தன் 

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 5 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Thu Jan 20, 2022 3:16 pm

20.01.2022

17.01.2022 - தயாரிப்பாளர் LV ப்ரசாத் அவர்கள் பிறந்த நாள் [1908 - 1994]

லக்ஷ்மி வர ப்ரசாதராவ். தயாரிப்பாளர், நடிகர், டைரக்ட்டர், ஒளிப்பதிவாளர். தொழிலதிபர் வேற. சினிமாவின் முன்னோடிகள்ல ஒருத்தர். 1956ல ப்ரசாத்  குழுமத்தை நிறுவினார். இதுல ப்ரசாத் ஆர்ட் பிக்ச்சர்ஸ், ப்ரசாத் ஸ்டூடியோஸ், ப்ரசாத்ஸ் IMAX, LV ப்ரசாத் கண் நிறுவனம் இவ்ளவும் அடங்கும். ஹைதராபாத்தில் கண் மருத்துவமனைக்கு பல ஏக்கர் நிலத்தை கொடுத்தார். 

நடிக்கும் ஆசை வந்து 1930ல பம்பாய்க்கு போனார். 1931ல முதல் பேசும் ஹிந்தி படம் ஆலம் ஆரா படத்தில சின்ன ரோல்ல நடிச்சார். அதுக்கப்புறம் ஒரு ஹிந்தி படத்ல உதவி டைரக்ட்டரா வேல செய்ய சான்ஸ் கெடச்சுது. எட்டு வருஷம் உதவி இயக்குனர்தான். டைரக்டரானது தெலுங்கு படம் மனதேசம் [1949]. தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களை உருவாக்கினார். 

1981ல ராஜபார்வை  படத்ல கமல், மாதவி லவ்வுக்கு உதவி செய்ற கேரக்ட்டர்  நடிச்சது இவர்தான். ஞாபகத்துக்கு வந்துச்சா ?

1980ல 27வது தேசிய விருது கொடுக்கும் செலக் ஷன் கமிட்டீல ச்சேர்மேனா இருந்தார். இது போல இந்தியாலயும், சர்வதேச சினிமா சம்பந்தப்பட்ட கமிட்டிகள்லயும் ச்சேர்மேனா இருந்தார். 2006ல இவர் பேர்ல ஸ்டாம்ப் வந்திருக்கு. 

தாதாசாஹெப் பால்க்கே விருது வாங்கினார்.   

ராஜபார்வை 1981


யாரோ யாரோ இந்த நவநாடக சூத்ரதாரிகள் யாரோ - P லீலா & கண்டசாலா

கல்யாணம் பண்ணிப்பார் 1952 / கண்டசாலா / தஞ்சை ராமையாதாஸ்

சிங்கார பைங்கிளியே பேசு செந்தமிழ் தேனை அள்ளி அள்ளி வீசு - ராதா ஜெயலட்சுமி & AM ராஜா

மனோகரா 1954 / SV வெங்கடராமன் & TR ராமநாதன் / உடுமலையார்

கண்ணே கண்ணே உறங்காதே காதலர் வருவார் கலங்காதே - P சுசீலா

இருவர் உள்ளம் 1963 / KV மகாதேவன் / கண்ணதாசன்

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 5 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Thu Jan 20, 2022 3:48 pm

20.01.2022

18.01.2022 - வீணை S பாலசந்தர் அவர்கள் பிறந்த நாள் [1927 - 1990]

சுந்தரம் பாலசந்தர். நடிகர், டைரக்ட்டர், வீணை கலைஞர். தானே வீணை வாசிக்க கத்துக்கிட்டார். வீணைனா பாலசந்தர், பாலச்சந்தரனா வீணை னு சொல்ற அளவுக்கு வீணை வாசிச்சார். சினிமால  புதுமைகள் செஞ்சார். இவரோட படங்கள்ல இவரே ம்யூஸிக் போட்டார். 

பாலசந்தருக்கு அஞ்சு வயசிலேயே ம்யூஸிக் பிடிச்சிருந்துச்சு. சீக்கிரமாவே  கஞ்சிரா வாசிக்க கத்துக்கிட்டு, தன் அண்ணன், வேற இசைக்கலைஞர்கள் கூட பக்க வாத்தியம் வாசிச்சார். வீணை, தபேலா, மிருதங்கம், ஆர்மோனியம், புல்புல்தாரா போன்ற வாத்தியங்களை டீச்சர் இல்லாம தானே கத்துக்கிட்டார். 12 வயசில சித்தார் இசை கருவி கச்சேரி தனியா நடத்துற அளவுக்கு வளந்தார். 15 - 18 வயசு வரைக்கும் ஆல் இண்டியா ரேடியோல இசைக்கலைஞராக இருந்தார். அப்புறமா வீணை இசை மேல இன்ட்ரெஸ்ட் ஏற்பட்டு, அதுலயே முழு நேரம் செலவழிச்சார். வீணை கச்சேரி நடத்தினார். இது தவிர இந்துஸ்தானி ம்யூஸிக், வெஸ்டர்ன் ம்யூஸிக்கும்  தெரியும்.

ஏழு வயசில கல்கத்தால ஒரு இசை கச்சேரியில கஞ்சீரா வாசிச்சார். கச்சேரி முடியுற வரைக்கும் ஜனங்கள் அமைதியா கேட்டுட்டு இருந்தாங்க. கச்சேரி முடிஞ்சுதோ என்னவோ, தட்னாங்க தட்னாங்க அப்டி கை தட்னாங்க. அரங்கமே அதுந்துச்சாம். அப்டி கஞ்சீரா வாசிச்சார் பாலசந்தர்.

சினிமாவுக்கு திரைக்கதை எழுதி, பாட்டு எழுதி, ம்யூஸிக் போட்டு, டைரக்ட் செஞ்சார். 1934ல சீதா கல்யாணம் படத்ல குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பிச்சார். ராவணன் அரண்மனைல கஞ்சிரா வாசிக்கிறவரா நடிச்சார். பாட்டே இல்லாத படம் அந்த நாள் [1954] படத்துக்கு இவர்தான் மூலக்கதை, டைரக் ஷன். ஹீரோவா நடிச்ச முதல் படம் இது நிஜமா [1948]. KJ ஜேசுதாஸை பொம்மை [1964] படத்ல "நீயும் பொம்மை நானும் பொம்மை" பாட வச்சு இன்ட்ரோ செஞ்சு வச்சவர் பாலசந்தர்தான். 

போட்டோ எடுக்கிறதில இன்ட்ரெஸ்ட் அதிகம். ஸ்னூக்கர், பில்லியர்ட்ஸ் சூப்பரா விளையாடியவர். 

Magic Music Of India, Sounds Of Veena, Immortal Sound Of Veena போல பல ரெக்கார்டுகளை ரிலீஸ் செஞ்சார். இது உலகம் முழுசும் சேல் ஆச்சு. 

பத்மபூஷன் விருது, சங்கீத நாடக அகாடமி விருது, சங்கீத கலாசிகாமணி விருது வாங்கினார். 

உன் கண்ணில் ஆடும் ஜாலம் யாவும் கருத்தின் ரகசியம் - P சுசீலா & AM ராஜா

பூலோக ரம்பை 1958 / CN பாண்டுரங்கன் / வில்லிபுத்தன்

வரும் கால உலகம் நமதின்றே பாடுவோம் - ஜிக்கி & கோரஸ்

அவன் அமரன் 1958 / TM இப்ராஹீம் / A மருதகாசி

கல்யாண பொண்ணு கலங்காதே கண்ணு கல்யாணம் நின்னாச்சு டுடும் டுடும் டும்

அவனா இவன் 1972 / S பாலசந்தர் / வித்வான் வே லட்சுமணன்

பாலசந்தர் ஆடிய ஆட்டத்தை பாருங்க.
உல்லாசமாகவே உலகத்தில் வாழவே மாப்பிள்ளையாகி - JP சந்திரபாபு

பெண் 1954 / R சுதர்சனம் / உடுமலையார்

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 5 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Thu Jan 20, 2022 3:57 pm

20.01.2022

19.01.2022 - வெண்கல குரலோன் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பிறந்த நாள் [1933 - 1988]

கர்னாடக இசை & சினிமா பின்னணி பாடகர், நடிகர். சீர்காழீன்னா ஊர் பேரா ஞாபகத்துக்கு வரும்? இவர் பேர்தான் நெனச்சு பாப்பாங்க. சின்ன வயசிலேயே தியாகராஜ பாகவதர், PU சின்னப்பா, கிட்டப்பா பாட்டுக்களை விரும்பி பாடினார். தேவி நாடக சபா, பாய்ஸ் கம்பெனில வேல செஞ்சார். சென்னை ம்யூஸிக் காலேஜ்ல ம்யூஸிக் கத்துக்கிட்டார். இங்க 1949ல இசைமணி னு பட்டம் வாங்கினார். 1951ல சென்னை ம்யூஸிக் அகாடமில நடந்த இசை போட்டிகள்ல 3 தங்க பதக்கங்களை வாங்கினார். KB சுந்தராம்பாள் அவர்களுக்கு அடுத்தபடியாக, இவர் குரல் ஸ்பீக்கர் இல்லாமலே எதிரொலிக்கும் குரல் வளம் இவருக்கு. மகன் சிவசிதம்பரமும் அப்பா மாதிரி கர்னாடக இசை பாடகர் & பின்னணி பாடகர். 

துணை நடிகரா நடிச்சிட்டு இருந்த சமயத்ல, பாட்றதுக்கு சான்ஸ் கெடச்சுது. பாடிய முதல் பாட்டு ம்யூஸிக் டைரக்ட்டர் G ராமநாதன் கொடுத்தார். 1953ல  பொன்வயல் படத்ல "சிரிப்புதான் வருகுதையா" பாட்டு. இதே வருஷத்ல  ஒளவையார் படத்ல ஆத்திச்சூடி பாடினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்கள்ல பாடினார். 

இவர் பாடிய சில காமெடி பாட்டு : 
* பட்டணந்தான் போகலாமடி பொம்பள - எங்க வீட்டு மகாலட்சுமி 
* மாமியாளுக்கு ஒரு சேதி - பனித்திரை 
* காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை - காதலிக்க நேரமில்லை 
* ஆசைக்கிளியே கோபமா என் அருகில் - சபாஷ் மீனா 

சங்கீத நாடக அகாடமி விருது, இசை பேரறிஞர் விருது, பத்மஸ்ரீ, சங்கீத வித்வான், இசை அரசு, இசை கடல் உள்பட பலபல  விருதுகளும், பட்டங்களும் வாங்கினார். 

ஆடி வரும் ஆடக பொற்பாவையடி நீ - S ஜானகி & சீர்காழியார் 

தாய் மகளுக்கு கட்டிய தாலி 1959 / TR பாப்பா / உடுமலையார் 

காதல் உண்டாகும் கட்டழகி உன்னாலே - LR ஈஸ்வரி & சீர்காழியார் 

இரு வல்லவர்கள் 1966 / வேதா / கண்ணதாசன் 

சிரிப்புத்தான் வருகுதையா உலகை கண்டால் - சீர்காழியார் 

பொன்வயல் 1954 / துறையூர் ராஜகோபால் சர்மா & R ராஜகோபால் 

என்னை விட்டு ஓடிப்போக முடியுமா - P சுசீலா & சீர்காழியார் 

குமுதம் 1961 / KV மகாதேவன் / மருதகாசி 

பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 5 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Thu Jan 20, 2022 5:30 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 5 Vikatan%2F2022-01%2Fed5f344a-b222-4e85-aed4-03827f2057a1%2Fsirkali1
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 5 ACtQUo0
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76322
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் - Page 5 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை