புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10 
15 Posts - 71%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10 
1 Post - 5%
Barushree
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10 
1 Post - 5%
kavithasankar
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10 
4 Posts - 5%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10 
3 Posts - 4%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10 
2 Posts - 2%
Barushree
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10 
1 Post - 1%
Shivanya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 44 of 60 Previous  1 ... 23 ... 43, 44, 45 ... 52 ... 60  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6022
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 13, 2021 12:14 pm

First topic message reminder :

13.12.2021

நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]

நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல  நடிச்சார்.

அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.

லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார். 

தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS 

ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS 

சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன் 

பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6022
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Jun 20, 2023 12:05 pm

20.06.2023

பின்னணி பாடகர் கானா பாலா பிறந்த நாள் [1971]

நெஜ பேர் பாலமுருகன். வக்கீலுக்கு படிச்சவர். வக்கீலா வேலயும் செஞ்சார். கானா  பாட்டுக்கள்ல சிறந்த பாடலாசிரியர் & பாடகர். ம்யூஸிக் டைரக்ட்டர் தேவாவுக்கு அடுத்தபடியான கானா ஸ்பெஷலிஸ்ட் இவர்தான். 

படிக்கிற வயசிலேயே ஸ்கூல், காலேஜ் மேடைல கானா பாட்டு பாடி பேர் வாங்கினார். கலைஞர் TV  ரியாலிட்டி ஷோ கானா குயில் பாட்டு நிகழ்ச்சியில பங்கெடுத்து ஜெயிச்சார். பக்தி பாடல்கள் பாடி ஆல்பங்கள் வெளியிட்டார். இவரோட வானவில் என்ற தனி ஆலாபத்தை ம்யூஸிக் டைரக்ட்டர்கள் தேவாவும், தினாவும் ரிலீஸ் செஞ்சாங்க. 

2007ல பிறகு என்ற படத்தில முதல் முதலா சினிமால பாடவும், சின்ன ரோல்ல மெக்கானிக்கா நடிக்கவும் ஆரம்பிச்சார். பேர் வாங்கினது 2012ல அட்டகத்தி படத்தில பாடிய "ஆடி போனா ஆவணி" & "நடு கடலில கப்பல எறங்கி" பாட்டுகள்ல. ரேடியோ மிர்ச்சியின் 10வது ஆண்டுவிழால GV ப்ரகாஷ்குமார் & யுவன் சங்கர் ராஜா மியூஸிக்ல ஜிங்கிள்ஸ் பாடினார். ரெண்டு TV சீரியல்ல ரெண்டு பாட்டு பாடியிருக்கார். 

விருதுகள்
அட்டகத்தி 2012
விகடன் விருது - சிறந்த ஆண் பின்னணி பாடகர் - ஆடி போனா ஆவணி & நடு கடலில கப்பல எறங்கி தள்ள முடியுமா


ஓரக் கண்ணால என்ன ஓரங்கட்டுறா ஜாட காட்டியே ரொம்ப வாட்டி வதக்குறா  வான வில்லாட்டம் வந்து எட்டி பாக்குறா வளச்சு போட்டேன்டா ஒரு சோக்கு பிகருடா - கானா பாலா  
 
உதயம் NH4 - 2013 / GV ப்ரகாஷ்குமார் / கானா பாலா

கோழி சண்டக்கெல்லாம் கோர்ட்டுக்கு தான் போனாலும் கொழந்த பொறந்த பின்னே
கொஞ்ச அழகு கொறஞ்சாலும் ஆடி மாசம் மனைவி அம்மா வீட்டுக்கு போனாலும் - கானா பாலா
 

நிமிர்ந்து நில் 2014 \ GV ப்ரகாஷ்குமார் / கானா பாலா & செல்லா

ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி நீ கண்ணால பாத்தா போதும் நாந்தா கலைமாமணி - கானா பாலா

அட்டகத்தி 2012 \ சந்தோஷ் நாராயண் \ கானா பாலா

காசு பணம் துட்டு மனிமனி காசு பணம் துட்டு மனிமனி கொட புடிச்சு நைட்டுல பறக்க போறேன் ஹைட்டுல தல காலு புரியல தலைகீழா நடக்குறேன் - கானா பாலா & அந்தோணிதாசன்

சூது கவ்வும் 2013 / சந்தோஷ் நாராயணன் / கானா பாலா

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6022
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jun 23, 2023 2:21 pm

23.06.2023

22.06.2023 - நடிகை தேவயானி பிறந்த நாள் [1974]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Devaya11

அம்மா கேரளாக்காரர். அப்பா ஆந்த்ராக்காரர். சொந்த பேர் சுஷ்மா. நடிகர் நகுல் இவரோட தம்பி. தேவயானி தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள், ஒரு சில ஹிந்தி, வங்காள படங்கள்ல நடிச்சிருக்கார். TV சீரியல்கள்லயும் நடிச்சார், நடிச்சிட்டும் இருக்கார். 

விருதுகள்
கலைமாமணி விருது 
தமிழ்நாடு மாநில சிறப்பு சினிமா விருது - காதல் கோட்டை - சிறந்த நடிகை 
தமிழ்நாடு மாநில சினிமா விருது - சூரிய வம்சம் & பாரதி - சிறந்த நடிகை
சர்வதேச தமிழ் சினிமா விருது  - அழகி - சிறந்த துணை நடிகை
சிறந்த TV நடிகை விருது & தமிழ்நாடு மாநில TV விருது - கோலங்கள் சீரியல் - சிறந்த நடிகை 


நலம் நலமறிய ஆவல் உன் நலம் நலமறிய ஆவல் நீ இங்கு சுகமே நான் அங்கு சுகமா - அனுராதா ஸ்ரீராம் & SPB   

காதல் கோட்டை 1996 \ தேவா \ அகத்தியன்
 
சிக்சிக் சிக்சிக் சிக்னல் தந்தாய் ஸ்டிக்கர் போலே ஒட்டிக்கொண்டாய் வண்ணம் தந்தாய் வானவில் ஆனேன் தீபம் தந்தாய் ஆலயம் ஆனேன் -  சுவர்ணலதா& மனோ 

பெரிய இடத்து மாப்பிள்ளை 1997 \ சிற்பி \ பழனிபாரதி 

காதலா காதலா காதலின் சாரலா தீயிலே தென்றலாய் வாழ்கிறேன் காதலா கண்களா தூண்டிலா மாறினேன் மீன்களாய் - சுவர்ணலதா & ஹரிஹரன் 
 
சூர்ய வம்சம் 1997 \ SA ராஜ்குமார் \ பழனிபாரதி 

நன்றி சொல்ல ஒனக்கு வார்த்தை இல்லை எனக்கு நாந்தான் மயங்குறேன் காலமுள்ள வரைக்கும் காலடியில் கிடக்க நாந்தான் விரும்புறேன் - சித்ரா & உன்னிகிருஷ்ணன் 
 
மறுமலர்ச்சி 1998 \ SA ராஜ்குமார் \ வாலி 

அதிகாலையில் சேவலை எழுப்பி அதை கூவென்று சொல்லுகிறேன் கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி அதன் வேகத்தை மிஞ்சுகிறேன் - சுஜாதா & உன்னிகிருஷ்ணன் 
 
நீ வருவாய் என 1999 \ SA ராஜ்குமார் \ ரமேஷ் வைத்யா 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6022
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jun 23, 2023 3:13 pm

23.06.2023

22.06.2023 - நடிகர் விஜய் பிறந்த நாள் [1974]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 2tl254c                  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 J52YzxG

தளபதி விஜய். சூப்பரா டான்ஸ் ஆடுவார். நிஜ பேர் ஜோஸப் விஜய். அம்மா மாதிரி பாடகரும்கூட. நடிப்பு மேல ஆசை இருந்ததால படிப்பை பாதில நிறுத்திட்டார். டைரக்ட்டர் சந்திரசேகர் & பின்னணி பாடகி ஷோபாவின் மகன். பின்னணி பாடகர் SN சுரேந்தர் விஜயின் தாய்மாமன். 

விஜய் 10 வயசிலேயே குழந்தை நட்சத்திரமானார். 1984ல வெற்றி படத்தில. 1988 வரை குழந்தை நட்சத்திரமாக நடிச்சார். 1992ல நாளைய தீர்ப்பு படத்தில ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சார். ப்ரபலமானது 1996ல நடிச்ச பூவே உனக்காக படம் மூலமா. குழந்தை நட்சத்திரமாக நடிச்ச படங்கள் எல்லாமே அப்பா டைரக்ட்டினவை. வளந்த பிறகு நடிச்ச நிறைய படங்கள் சந்திரசேகர் டைரக்ட்டின படங்கள்தான். விஜயகாந்த், அஜீத், சூர்யா கூடல்லாம் விஜய் நடிச்சார். விளம்பரங்கள்லயும் நடிச்சார்.  

இவர் நடிச்ச படத்தில முதல் முதலா பாடியது 1994ல ரசிகன் படத்தில. விஜய் 2009ல நடிச்ச வேட்டைக்காரன் படத்தில அவரோட மகனும், 2016ல விஜய் நடிச்ச தெறி படத்தில அவர் மகளும் குட்டி குட்டி ரோல்ல நடிச்சிருக்காங்க. விஜய் அறப்பணிகள் நிறைய செய்றார். 

ஸ்கூல் மாணவர்கள் படிப்பு விஷயத்துல நிறைய நல்லது செஞ்சாரு. 2008ல படிக்க முடியாம  பாதியில படிப்பை நிறுத்திட்டு போன மாணவர்களை தடுத்து நிறுத்தறதுக்கு 'விஜய் ஹீரோவா ஜீரோவா'னு ஒரு சின்ன பொது சேவை வீடியோல வந்தார். 2012ல 10, 12ஆம் வகுப்பு பரீச்சையில முதல்ல வந்தவங்களுக்கு விஜய் கல்வி விருது 2012னு விஜய் மக்கள் இயக்கத்தால  நடத்தப்பட்டு, விஜய்யே நேரடியாக விருதுகள் கொடுத்தார். இப்டி படிப்பு விஷயத்தில நெறய நெறய நல்லது செஞ்சார். 2007ல தன்னோட பிறந்த நாளன்னிக்கி சென்னை எக்மோர் அரசு  மருத்துவமனையில பிறந்த குழந்தைங்களுக்கு தங்க மோதிரங்களை போட்டார். 

புயலாலயும், வெள்ளத்தாலயும் பாதிக்கப்பட்டவங்களுக்கு லட்ச லட்சமா பணம் கொடுத்து உதவினார். இது போல பல நிவாரண உதவிகளை செஞ்சார். இந்த மாதிரி உதவிகளை  செய்ததுக்காகவும், சினிமால செஞ்ச சாதனைகளுக்காகவும் 2007ல டாக்ட்டர் MGR பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்ட்டர் பட்டம் கொடுத்துச்சு. 

இவரோட சில படங்கள் சீனால ஷாங்காய் பன்னாட்டுத் திரைப்பட விழா, ஆஸ்திரேலியா மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழா & தென்கொரியால புச்சியான் பன்னாட்டுத் திரைப்பட விழாக்களில் போட்டு காட்டப்பட்டுச்சு. சில ஹிந்தி படங்களுக்கும், இவரோட தமிழ் படங்களுக்கும் கடுமையான போட்டி இருந்துச்சு. ஒரு ஹிந்தி பட பாட்டுக்கு விஜய் தலைய காட்டிட்டு போனார். இன்னொரு இந்தி பட சண்டை சீன்ல விஜய் நடிச்ச தெறி பட போஸ்ட்டரும், பைரவா பட பாட்டு "வர்லாம் வர்லாம் வா" பாட்டு பின்னணி இசையாவும் வருது. 

தெலுங்கு பட ஹீரோ ஜூனியர் NTR க்கு விஜய் டான்ஸ் ரொம்ப பிடிக்கும். 

விருதுகள்
கலைமாமணி விருது 1998
சர்வதேச சிறந்த நடிகர் - 2018ல ப்ரிட்டிஷ் கூட்டரசு கொடுத்தது. 
ஒசாகா விருது - மாஸ்டர் 2023 - சிறந்த நடிகர் 
தமிழ்நாடு அரசு சினிமா விருது - காதலுக்கு மரியாதை - சிறந்த நடிகர் 
தமிழ்நாடு அரசு சினிமா சிறப்பு விருது - திருப்பாச்சி - சிறந்த நடிகர் விருது 
MGR விருது - துள்ளாத மனமும் துள்ளும்  

ஸ்டார் இண்டியா விருதுகள்
நாளைய சூப்பர் ஸ்டார் - திருப்பாச்சி, சிவகாசி 
2007ஆம் ஆண்டின் என்ட்டர்டெய்னர் - போக்கிரி, அழகிய தமிழ் மகன் 
2009இன் Favourite ஹீரோ - வேட்டைக்காரன் 
2012ஆம் ஆண்டின் எண்ட்டர்டெய்னர் - நண்பன், துப்பாக்கி 
2012இன் Favourite ஹீரோ - துப்பாக்கி
2013இன் Favourite ஹீரோ - தலைவா 
2014ஆம் ஆண்டின் என்ட்டர்டெய்னர் - ஜில்லா, கத்தி 
2018இன் Favourite ஹீரோ - மெர்சல் 

தென்னிந்திய சர்வதேச சினிமா விருது - தெறி - 2014ஆம் ஆண்டின் என்ட்டர்டெய்னர்

எடிசன் விருதுகள் : 
2011 வேலாயுதம் - சிறந்த நடிகர் & சூப்பர் ஸ்ட்டார் ரஜினி விருது 
தெறி & மெர்சல் - மாஸ் ஹீரோ 

Behindwood Gold Medals :
கத்தி - சிறந்த ஹீரோ & People's Choice ஆக்டர்
தெறி - People's Choice ஆக்டர்
2016ன் The Samrat of South Indian Box Office 

ஏசியாநெட் சினிமா விருது : 
சிறப்பு விருது - மிகவும் ப்ரபலமான தமிழ் நடிகர் 

Techofes Awards : 
துப்பாக்கி - சிறந்த நடிகர் 
தலைவா - 2013ன் Favourite நடிகர் 
மெர்சல் - 2017ன் Favourite  நடிகர் & என்ட்டர்டெய்னர் 

Cosmopolitan People Choice Award 2012 - நண்பன் & துப்பாக்கி -  சிறந்த நடிகர் 

குமுதம் விருது : 
People Choice Superstar Award 2014 - சிறப்பு விருது 

India Today விருது 2018 :
சிறப்பு விருது - தமிழ்நாட்டின் சிறந்த நடிகர் 

Roja Duke's சினிமா விருது 1998 : 
காதலுக்கு மரியாதை - சிறந்த நடிகர் 

சினிமா எக்ஸ்ப்ரஸ் விருது 1992 : 
நாளைய தீர்ப்பு - புது முகம் 

இசையருவி TV விருது : 
போக்கிரி - சிறந்த ஹீரோ 
வேட்டைக்காரன் - Favourite நடிகர் 

Gaana ம்யூஸிக் விருது : 
வாங்கண்ணா வணக்கங்கண்ணா [தலைவா] - 2013ன் ப்ரபல பாட்டு 

Variety Film Awards : 
காவலன் & வேலாயுதம் - 2011ன் ஹீரோ 

Zee Cine Awards : 
பிகில் - 202ன் Favourite ஹீரோ 

கில்லி - சிறந்த நடிகருக்கான சென்னை கார்ப்பரேட் க்ளப் விருது, தினகரன் விருது & ஃபிலிம் டுடே விருது
போக்கிரி - சிறந்த நடிகருக்கான அம்ரிதா மாத்ருபூமி விருது & இசை அருவி தமிழ் இசை விருது 
வேட்டைக்காரன் - சிறந்த நடிகருக்கான இசை அருவி தமிழ் இசை விருது
துப்பாக்கி, நண்பன், மெர்சல் - விகடன் சிறந்த நடிகர் விருது
பொதுச்சேவை அறிவிப்பு (2005)-க்கு வெள்ளி விருது


வாங்கண்ணா வணக்கங்கண்ணா மை சாங்க நீ கேளுங்கண்ணா நா ஒளரல ஒளரலணா ரொம்ப பீலிங் பீலிங்குனா ஹேய் ஆனானா ஊனானா ஓ ஆள தேடி போவ - விஜய் & சந்தானம் 

தலைவா 2013 / GV ப்ரகாஷ்குமார் \ நா முத்துகுமார் 

சின்ன வயசிலேயே தாலி கட்டின விஜய் 

வசந்த ராகம் 1986 \ MS விஸ்வநாதன் 


ஒரு ப்ருந்தாவனம் எங்கள் வீடானது அதில் எங்கள் மனம் இன்ப தேனானது இது சுகம் தரும் ஒரு பாச ராகம் இது யுகம் யுகமென வாழும் வேதம் - வாணி ஜெயராம், ஷோபா சந்திரசேகர், ஷீலா & SPB 

சட்டம் ஒரு விளையாட்டு 1987 \ MS விஸ்வநாதன் \புலமைப்பித்தன் 

கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கெடச்சா கொங்கு தமிழிலே பாட்டு படிச்சா  சிறுவாணி தண்ணி போலே துள்ளி குதிச்சா சோளி கெடைச்சதும் அள்ளி அணைச்சா - சாதனா சர்கம் & உதித் நாராயணன் 

கோயம்புத்தூர் மாப்பிள்ளை 1996 \ வித்யாசாகர் \ வாலி 

கண்களா மின்னலா கூந்தலா ஊஞ்சலா இந்த சந்தேகம் நீ வந்ததாலா காதலா மௌனமே பாடலா ஆனதே காதலா இந்த சந்தோசம் நீ தந்ததாலா வெண்ணிலா - சித்ரா & SPB 

என்றென்றும் காதல் 1999 \ மனோஜ் பட்நாகர் \ பழனிபாரதி 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6022
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Jun 24, 2023 11:47 am

24.06.2023

23.06.2023 - பாடலாசிரியர் சினேகன் பிறந்த நாள் [1978]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 49wZonK          பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Je0EaeV
மனைவி கன்னிகா

நிஜ பேர் சிவச்செல்வம். கவிஞரும், நடிகரும்கூட. ஸ்கூல்ல படிக்கும்போதே கவிதை எழுதினார். 11 வயசில இவர் எழுதிய ஒரு கவிதைக்கு மாநில அளவில் முதல் பரிசு வாங்கினார். பரிசு கொடுத்தவர் அப்போதைய முதல்வர் மக்கள் திலகம் MGR. 

தஞ்சாவூர்ல விவசாய குடும்பத்தில பிறந்தார். டீச்சரா வேல செஞ்சார். எழுத்திலயும், சினிமாலையும் இன்ட்ரெஸ்ட் இருந்ததால சென்னைக்கு வந்து கவிஞர் வைரமுத்துக்கிட்ட அஞ்சு வருஷம் 1995வரை உதவியாளரா வேல செஞ்சார். 

"எங்கோ க்ராமத்தில களிமண்ணாய் இருந்த என்னை சிற்பியாய் செஞ்சவர் வைரமுத்து. என் தமிழுக்கும், கவிதைக்கும் அவர்தான் தந்தை"னு சினேகன் சொன்னார். இளந்தென்றல் என்ற மாத இதழ்ல மூணு வருஷம் எடிட்டராக வேல செஞ்சார். 

1997ல புத்தம்புது பூவே படத்துக்கு பாட்டு எழுத ஆரம்பிச்சார்.  2009ல யோகி படத்தில சின்ன ரோல்ல நடிச்சார். அதுல ஒரு பாட்டும் பாடியிருக்கார். தனியா இல்ல, ம்,மூணு பேர்கூட. அப்புறமா கவிதை புத்தகங்களும்  எழுதினார். இவருக்கு  கவிச்சிற்பி, சின்ன பாரதி, எழுச்சி கவிஞர் என்ற பட்டங்கள் உண்டு. 

இதுவரை இளையராஜா, AR ரஹ்மான் ம்யூஸிக் போட்ட படங்களுக்கு பாட்டு எழுதல. அதுக்கு சந்தர்ப்பம் வரலேன்னு சொன்னார் சினேகன். 

"உங்கள் சில பாட்டு வரிகள் கண்ணதாசன், வைரமுத்து பாட்டு வரிகளை ஞாபகப்படுத்துது"னு  ஒரு சிலர் சொல்லியிருக்காங்க. 


ஒரு ரோஜா தோட்டம் பூத்து குலுங்குதே நீ வந்ததாலா என் உள்ளங்கையிலே உலகம் வந்ததே உன்னை கண்டதாலா ஒரு வானவில்லை பூமியில் கண்டேன் நீ வந்ததாலா - சித்ரா & உன்னிகிருஷ்ணன்

மனுநீதி 2000 \ தேவ / சினேகன்

தோழா தோழா கனவுத் தோழா தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கணும்  நட்ப  பத்தி  நாமும் பேசி தீத்துக்கணும் - சித்ரா சிவராமன் & யுகேந்திரன்

பாண்டவர் பூமி 2001 \ பரத்வாஜ் / சினேகன்

ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் அத காதலுன்னு சொல்லுறாங்க அனைவரும் காதல் ஒரு கண்ணாம்பூச்சி கலவரம் அது எப்போதுமே போதையான நெலவரம் - கிருஷ்ணராஜ், வேல்முருகன் & சத்யன்
 
கழுகு 2012 \ யுவன் சங்கர் ராஜா / சினேகன்

சிலு சிலு சிலுவென தென்றல் சிரிக்குது சுட சுட சுட சுட மழையும் பெய்யுது பட பட பட வென இதயம் பறக்குதம்மா தொடு தொடு தொடு என மனசு தவிக்குது - திப்பு

கோவில் 2004 \ ஹாரிஸ் ஜெயராஜ் / சினேகன்

மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ மயிலிறகில் வாசம் வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ தமிழ் படிக்க ஆசை வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ - ரேஷ்மி & ஹரிஷ் ராகவேந்திரா

ஆட்டோகிராஃப் 2004 / பரத்வாஜ் \ சினேகன் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6022
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jun 25, 2023 12:45 am

25.06.2023

24.06.2023 - பழம்பெரும் ம்யூஸிக் டைரக்ட்டர் MS விஸ்வநாதன் அவர்கள் பிறந்த நாள் [1928 - 2015]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Kd__ms11

மெல்லிசை மன்னர் கேரளால மலையாள குடும்பத்தில பிறந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்களுக்கு ம்யூஸிக் போட்டார். தமிழ்ல முதல்ல ம்யூஸிக் போட்டது 1953ல ஜெனோவா படத்துக்கு, MS ஞானமணி, TK கல்யாணம் கூட சேந்து. 

ஸ்கூல் படிக்கும்போதே ம்யூஸிக் மேல இன்ட்ரெஸ்ட். வறுமையின் காரணமாக சினிமா தியேட்டர்ல  சம்பளமில்லாமலே முறுக்கு வித்தார். அப்பதான் சினிமா பாத்து, பாட்டு கேட்டு ம்யூஸிக் பிடிச்சுது. 
நடிகராகணும், பாடகராகணும்னு விஸ்வநாதன் நெனைச்சார். ஆனா அது நடக்கல. கர்நாடக இசை கத்துக்கிட்டு 13 வயசிலேயே மேடை கச்சேரில பாடினார். ஜூப்பிட்டர் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தில ஆபீஸ் பையனாக வேல செஞ்சார். 1940கள்ல மேடை நாடகங்கள்ல சின்ன சின்ன ரோல்ல நடிச்சார். ம்யூஸிக் டைரக்ட்டர் TR பாப்பா விஸ்வநாதனின் திறமையை பாத்து SV வெங்கடராமன் ம்யூஸிக் குழூல சேத்துவிட்டார். அங்கதான் விஸ்வநாதனுக்கு ம்யூஸிக் போட்றதுல ஆர்வம் வந்துச்சு. 

ம்யூஸிக் டைரக்ட்டர் CR சுப்பாராமன் ம்யூஸிக் ட்ரூப்ல  ஆர்மோனியம் வாசிச்சார். பிற்காலத்திலே இவரோட  பார்ட்னரா சேந்த TK ராமமூர்த்தியும், TG லிங்கப்பாவும் அதே ட்ரூப்ல  வயலின் வாசிச்சாங்க. 

CR சுப்பாராமனால முடிக்க முடியாம போன சினிமா ம்யூஸிக் ப்ராஜெக்ட் எல்லாத்தயும்  விஸ்வநாதன் தனியாவும், ராமமூர்த்திகூட சேந்தும் முடிச்சார். விஸ்வநாதன் அதிகமா ம்யூஸிக் போட்டது பீம்சிங், கிருஷ்ணன்-பஞ்சு, AC திருலோகசந்தர், K பாலசந்தர் படங்களுக்கு. மத்த ம்யூஸிக் டைரக்ட்டர்கள் மியூஸிக்லயும் விஸ்வநாதன் பாடினார். தமிழ்த்தாய் வாழ்த்து "நீராரும் கடலுடுத்த நிலமடந்தைகெழிலொழுகும்" பாட்டு மெல்லிசை மன்னர் போட்ட ம்யூஸிக்தான். 

டைரக்ட்டர் ஸ்ரீதர் & சித்ராலயா கோபு முன்னிலைல 1963ல நடந்த நடந்த ஒரு விழால நடிகர் திலகம் சிவாஜி கணேசன் விஸ்வநாதனுக்கும், ராமமூர்த்திக்கும் கொடுத்த பட்டம்தான் 'மெல்லிசை மன்னர்கள்'. அப்போதைய முதல்வர் கலைச்செல்வி ஜெயலலிதா 2012ல 'திரை இசை சக்கரவர்த்தி'னு பட்டமும், 60 தங்க காசுகளும், ஒரு காரும் கொடுத்தார். 

ஹிந்தியில சங்கர்-ஜெய்கிஷன் இரட்டை ம்யூஸிக் டைரக்ட்டர்கள் ரொம்ப ப்ரபலம். அவங்கள  மாதிரி MS விஸ்வநாதன் - TK ராமமூர்த்தி இருக்கணும்னு ராமமூர்த்திக்கிட்ட  சொல்லி இவங்க  ரெண்டு பேரும் சேந்து ம்யூஸிக் போட விஸ்வநாதன் புரிய வச்சு சம்மதிக்க வச்சார். இப்டி  விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் சேந்து ம்யூஸிக் போட்ட முதல் படம் 1952ல பணம். 1965 ஆயிரத்தில் ஒருவன் வரைக்கும் ரெண்டு பேரும் சேந்து ம்யூஸிக் போட்டாங்க. அதுக்கப்புறம் ஒரு சில படங்கள்ல ரெண்டு பேரும் சேந்தாங்க. 1986ல மெல்ல திறந்தது கதவு படத்தில ஆரம்பிச்சு ஒரு சில படங்களுக்கு இசைஞானி இளையராஜாகூடவும், இசைஞானி மகன் யுவன் சங்கர் ராஜாகூட  ஒரு படத்துக்கும்  சேந்து ம்யூஸிக் போட்டார் விஸ்வநாதன். விஸ்வநாதன் ஒரு சில படங்கள்ல நடிச்சார். 

ஆரம்ப காலத்தில ராமமூர்த்தி விஸ்வநாதன்னு பேர்ல  வேல செஞ்சுட்டு இருந்தாங்க. கலைவாணர் NS  கிருஷ்ணன் டைரக்ட்டின பணம் படத்தில அவங்க பேரை விஸ்வநாதன் ராமமூர்த்தின்னு கலைவாணர் மாத்திட்டார். 

ம்யூஸிக் டைரக்ட்டர் SM சுப்பையா நாயுடு, காமெடி நடிகர் சந்திரபாபு இவங்க வறுமை நிலைல  இருக்கும்போது விஸ்வநாதன் உதவி செஞ்சார். "சோத்துக்கே வழியில்லாம  இருந்த  எனக்கு விஸ்வநாதன் மியூஸிக்ல  பாட ஆரம்பிச்ச பிறகு சாப்பிட நேரமில்ல" - சொன்னவர் வாலிப கவிஞர் வாலி. ஒரே பாட்டுக்கு ஏகப்பட்ட வயலினை யூஸ் செஞ்சவர் விஸ்வநாதன் ஒருத்தர்தான். பாட்டு - எங்கே நிம்மதி - புதிய பறவை. 

விருதுகள் :  
தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருது
PBS புரஸ்கார் விருது 2013
கௌரவ டாக்ட்டர் பட்டம் 2013
சத்யபாமா பல்கலைக்கழகம் கொடுத்த டாக்ட்டர் பட்டம் 2006
தங்க ரெமி விருது - விஷ்வ துளசி - சிறந்த ம்யூஸிக்  2005
இசை பேரறிஞர் - இசை சங்கமம் 2004ல கொடுத்தது 
கலைமாமணி விருது 1971
7வது காமுகரா விருது - கேரள அரசு கொடுத்தது 
ஏசியா விஷன் விருது 2013 - வாழ்நாள் சாதனையாளர் விருது 
தமிழ்நாடு மாநில விருது 1968 - லட்சுமி கல்யாணம் - சிறந்த ம்யூஸிக் டைரக்ட்டர் 
கண்ணதாசன் விருது 2002
டாக்ட்டர் சிவாஜி கணேசன் நினைவு விருது - 2005 - சிவாஜி ப்ரபு அறக்கட்டளை கொடுத்தது 
இன்னும் பலப்பல விருதுகள்.
 

எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள் கீதம் அவளது வளையோசை நாதம் அவளது தமிழோசை - MS விஸ்வநாதன் & SPB 

முத்தான முத்தல்லவோ 1976 \ MS விஸ்வநாதன் \ வாலி 

மயக்கும் மாலை பொழுதே நீ போ போ இனிக்கும் இன்ப இரவே நீ வா வா இன்னலை தீர்க்க வா - ஜிக்கி & AM ராஜா 

குலேபகாவலி 1955 \ விஸ்வநாதன்-ராமமூர்த்தி \ தஞ்சையார் 

காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே ஆசையென்னும் உள்ளமே பொங்கி பெருகும் வெள்ளமே கண்ணிரெண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா - சுசீலா & PB ஸ்ரீனிவாஸ் 

மோட்டார் சுந்தரம் பிள்ளை 1966 \ MS விஸ்வநாதன் \ வாலி 

மழைக்காலம் வருகின்றது தேன் மலர்தோட்டம் தெரிகின்றது பொன் மணியோசை கேட்கின்றது என்னை வலை வீசி அழைக்கின்றது - வாணி ஜெயராம் 

பாட்டும் பரதமும் 1975 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

ஸ்விங் ஸ்விங் உனது ஊஞ்சல் நான் சிங் சிங் உனது பாடல் நான் ஸ்வீட் ஸ்வீட் உனது அழகுதான் ஷ்வர் ஷ்வர் உனது அமுதம் நான் - வாணி ஜெயராம் & ஜெயசந்திரன் 

வணக்கத்துக்குரிய காதலியே 1978 \ MS விஸ்வநாதன் \ வாலி 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6022
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jun 25, 2023 11:28 pm

25.06.2023

24.06.2023 - கவியரசு கண்ணதாசன் அவர்கள் பிறந்த நாள் [1927 -1981]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Msv__k10

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Kannad10

காலத்தை வென்ற காவிய கவிஞன். சொந்த பேர் முத்தையா. கதை வசனகர்த்தா, தயாரிப்பாளர். கவிதைகள், கட்டுரைகள், இலக்கிய படைப்புகள் ஏராளமா எழுதினார். பல இதழ்களின்  ஆசிரியராக இருந்தார். தமிழக அரசின் அரசவை கவிஞராக இருந்தவர். விசாலி கண்ணதாசன் இவரோட பொண்ணு.

சின்ன வயசில கவிஞரை சிவப்பு ஆச்சி என்றவர் 7,000 ரூபாய்க்கு தத்து எடுத்துகிட்டார். நாராயணன் என்ற பேர்ல வளத்தார். கவிஞர் எட்டாப்பு வரை படிச்சார். 1943ல ஏஜாக்ஸ் என்ற நிறுவனத்தில வேலைக்கு சேந்தார். இங்க வேல செஞ்சுக்கிட்டே கதை எழுதினார். கிரகலட்சுமி பத்திரிகைல 'நிலவொளியிலே'னு ஒரு கதை வந்துச்சு. இதான் கவிஞர் எழுதிய முதல் கதை.  

பா கண்ணன் என்ற நாடக ஆசிரியர்கிட்ட வேல  செஞ்சார். அங்கதான் தனக்கு கண்ணதாசன்னு பட்டபேர் வச்சுக்கிட்டார். கம்பரின் செய்யுள்களும், பாரதியாரின் பாட்டுகளும் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.  மனசுல பட்டதை அப்டியே பேசிருவார். பல பத்திரிக்கைல ஆசிரியர் வேல செஞ்சார்.

கண்ணதாசனின் நினைவாக தமிழக அரசு சிவகங்கை மாவட்டத்தில கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்திருக்கு. இதை பற்றி அறிவிச்சவர் மக்கள் திலகம் MGR, அடிக்கல் நாட்டியவர் கலைஞர் கருணாநிதி, 1992ல திறந்து வச்சவர் கலைச்செல்வி ஜெயலலிதா. இங்க கண்ணதாசனின் மார்பளவு சிலை வச்சிருக்காங்க. ஒரு லைப்ரரி இருக்கு. அவரோட வாழ்க்கை வரலாற்றின் போட்டோக்கள் கண்காட்சி வச்சிருக்காங்க.

கலங்காதிரு மனமே நீ கலங்காதிரு மனமே - 1949ல கன்னியின் காதலி  படத்துக்கு கவிஞர் எழுதிய முதல் சினிமா பாட்டு. தன்னபிக்கை பாட்டு எழுதுறதுல வல்லவர். சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்ல கதை, வசனம் எழுதுபவராக சேந்தார்.  நாலஞ்சு படங்கள்ல குட்டி குட்டி ரோல்ல நடிச்சார்.

இவருக்கு வேற பேர்களும் உண்டு :
காரை முத்து புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், துப்பாக்கி, ஆரோக்கியசாமி

சிறப்பு பேர்கள் :
கவியரசு, கவிச்சக்கரவர்த்தி, குழந்தை உள்ளம் கொண்ட கவிஞர்

இவர் எழுதிய தன் வரலாறு நூல்கள் :
வனவாசம், மனவாசம்

விருதுகள் :
இவர் எழுதிய சேரமான் காதலி நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வாங்கினார்.
தேசிய சினிமா விருது 1968 - குழந்தைக்காக - சிறந்த பாட்டுக்கள்
தமிழ்நாடு மாநில சினிமா விருது 1968 - லட்சுமி கல்யாணம் - சிறந்த பாடலாசிரியர்


கவிஞர் எழுதிய முதல் பாட்டு
கலங்காதிரு மனமே நீ கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே ஒரு தினமே - KV ஜானகி

கன்னியின் காதலி 1949 \ SM சுப்பையா நாயுடு & CR சுப்பாராமன் \ கண்ணதாசன்

ஒரு கோப்பையிலே என் குயிருப்பு ஒரு கோலமயில் என் குடியிருப்பு இசை பாடலிலே என் உயிர் துடிப்பு நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு - TMS

இரத்தத்திலகம் 1963 / KV மகாதேவன் \ கண்ணதாசன்

ஒனக்கு புரியுது எனக்கு புரியுது ஊருக்கு புரியலடி சிங்கி ஊருக்கு புரியலடி வெளியே கணக்கு நடக்குது கூட்டம் திரளுது கட்டாயம் புரியுமடா சிங்கா கட்டாயம் புரியுமடா - லீலா & ஜெயராமன்

குறவஞ்சி 1960 \ TR பாப்பா \ கண்ணதாசன்

அம்மாவுக்கு மனசுக்குள்ளே ஆசையால் டக்டக்டக் அடிக்கிற அடியும் துடிக்கிற துடியும் காதில கேக்குது டக்டக்டக் - ஜமுனாராணி & SC கிருஷ்ணன்

மணப்பந்தல் 1961 / விஸ்வநாதன் - ராமமூர்த்தி \ கண்ணதாசன்

குருவி கூட்டம்போல நிக்கிற பூவம்மா உன்னை கொண்டு போகும் புருஷன் இங்கே யாரம்மா அறுவடைக்கு காத்து நிக்கிற நெல்லம்மா நீ ஆசை கொண்ட புருஷன் பேரை சொல்லம்மா - சுசீலா

குடும்பத் தலைவன் 1962 \ KV மகாதேவன் \ கண்ணதாசன் [/color]

பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6022
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jun 25, 2023 11:44 pm

25.06.2023

24.06.2023 - பின்னணி பாடகர் மது பாலகிருஷ்ணன் பிறந்த நாள் [1974]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Madhu_10

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Madhu_11

கேரளால பிறந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்கள்ல பாடியிருக்கார். சென்னைல இந்திய இசை மற்றும் கலை அகாடமில ம்யூஸிக் படிச்சு பட்டம் வாங்கினார். ஆல் இண்டியா ரேடியோ, தூர்தர்ஷன்ல சிறந்த கலைஞராக வேல செஞ்சார். சின்ன வயசிலேயே கர்நாடக ம்யூஸிக் கத்துக்கிட்டார்.

விருதுகள் :
கலைமாமணி விருது
சிறந்த பாடகருக்கான கேரள மாநில சினிமா விருது, தமிழ்நாடு மாநில சினிமா விருது


கனா கண்டேனடி தோழி கனா கண்டேனடி கனா கண்டேனடி கனா கண்டேனடி உன் விழி முதல் மொழி வரை முழுவதும் கவிதைகள் அகமெது புறமெது புரிந்தது போல கனா கண்டேனடி - மது பாலகிருஷ்ணன்

பார்த்திபன் கனவு 2003 / வித்யாசாகர் \ யுகபாரதி

கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேச கூடாதா அந்த நேரம் அந்தி நேரம் அன்பு தூறல் போடாதா கொஞ்ச நேரம் கொஞ்சும் நேரம் எல்லை மீற கூடாதா - ஆஷா போஸ்லே & மது பாலகிருஷ்ணன்  

சந்திரமுகி 2005  / வித்யாசாகர் \ யுகபாரதி  

வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா வான் மிதக்கும் கண்களுக்கு மயில் இறகால் மையிடவா - மது பாலகிருஷ்ணன்  

அபியும் நானும் 2008 \ வித்யாசாகர் \ வைரமுத்து


பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6022
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jun 25, 2023 11:55 pm

25.06.2023

24.06.2023 - லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி பிறந்த நாள் [1966]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 SoYUPNq          பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 4UBNBg8

சூப்பர் ஸ்ட்டார் யார்னு கேட்டா, ஒட்................டனே ரஜினிகாந்த்னு எல்லாரும் சொல்லிர்வோம். சூப்பர் ஸ்ட்டாரினி யார் தெரியுமோ? அதுவும் எல்லாருக்கும் தெரிஞ்சவங்கதான். விஜயசாந்தி. அதிரடி படங்கள்ல நடிச்சதால லேடி சூப்பர் ஸ்டார் ஆயிட்டார். இந்திய சினிமாவின் ஆக் ஷன் குயின்.

ஆதி காலத்தில, ஹிந்தியில நாதியா, தமிழ்ல KT ருக்மணி சூப்பர் ஸ்ட்டாரா இருந்தாங்க. ஆம்பளைங்கள மாதிரி சண்டை காட்சியில ஜோ................ரா நடிச்சாங்க. அப்புறமா ஜோதிலட்சுமி வந்தாங்க, ரிவால்வர் ரீட்டா, கன்ஃபைட் காஞ்சனா படங்கள்ல. அதுக்கப்புறம்தான் லேடி ஜேம்ஸ்பாண்ட் விஜயசாந்தி வந்தாங்க. இவருக்கு லேடி அமிதாப்பச்சன், இந்திய சினிமாவின் பெண் ஜாக்கிசான்னு பேரும் இருக்கு.

தெலுங்கிலயும், தமிழ்லயும் நடிச்ச விஜயலலிதா இவரோட சித்தி. சித்தியோடு ஷூட்டிங்க்கு போனார் விஜயசாந்தி. பிரமிப்பா எல்லாத்தையும் பாத்தார். ஆனா சினிமால நடிக்கணும்னு ஆச வரல. டாக்டர் ஆகணும்னுதான் கனவு கண்டுட்டு இருந்தார். கனவு நனவாகாமலே போயிருச்சு. ஆந்திரால பிறந்தாலும், சென்னைலதான் வளந்தார்.

1990களிலேயே ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய முதல் நடிகை. 1980ல கல்லுக்குள் ஈரம் படத்தில முதல் முதலா சினிமால நடிக்க வந்தார். அந்த படத்தின் ஹீரோயினோட தோழி ரோல் முக்கியமானது. அதுக்கு ஒரு புதுமுகத்தை பாரதிராஜா தேடிட்டு இருந்தார். பட அதிபர் விஜயன் ஒரு ஸ்டூடியோல விஜயசாந்தியின் ஃபோட்டோவை பார்த்தார். பாரதிராஜாட்ட சொன்னார். பாரதிராஜா அந்த போட்டோவில் உள்ள விஜயசாந்தியை தேட ஆரம்பிச்சுட்டார். அப்டீ................... இப்டீன்னுட்டு வீட்டை கண்டுபுடிச்சு, பாரதிராஜா பேசினார்.

அப்போ விஜயசாந்தி எட்டாப்பு படிச்சிட்டு இருந்தார். பாரதிராஜா பேசின பிறகு, விஜயசாந்தி மனசில கொஞ்சம் கொஞ்சமா சினிமா ஆச வந்துச்சு. அப்போ பாரதிராஜா படத்தல நடிக்க சான்ஸ் கெடக்காதா...........................ன்னு ஏங்கிட்டு இருந்தாங்க. இப்ப தானாவே சான்ஸ் வீடு தே....................டி வந்திருக்கு. விடுவாரா விஜயசாந்தி? “ம்ம்ம்” சொல்லிட்டார். கல்லுக்குள் ஈரம் படத்ல, ஹீரோயின் அருணாவுக்கு, தோழியா நடிச்சார். இந்தப் படம் நல்லா ஓடலேன்னாலும், நல்ல படம்னு நிறைய பேர் பாராட்டினாங்க.

என்னதான் தமிழ் படத்தில அறிமுகம் ஆனாலும், தெலுங்கிலதான் பேரு கெடச்சுது. தெலுங்கில ஹீரோயினா நடிச்சார். 1988ல ‘பிரதிகடனா’ங்கற படத்ல, புரட்சி பெண்ணா நடிச்சு, அவர் புகழ் உச்சத்துக்கு போயிருச்சு. இந்தப் படம் தமிழ்ல, ‘பூ ஒன்று புயலானது’ படமாச்சு. தமிழ் படம் 100 நாளுக்கு மேல ஓடுச்சு. தெலுங்குல ஆஹா ஓஹோன்னு ஓடின படங்கள் எல்லாமே தமிழ்ல டப்பிங் ஆச்சு. ஒணரெண்டு ஹிந்தி படங்கள்லயும் நடிச்சார்.

விஜயசாந்தியின் அநேக படங்களுக்கு ஆரூர்தாஸ் வசனம் எழுதி, படங்கள் அட்டகாசமா ஓடுச்சு. அதனால ஆரூர்தாஸ் விஜயசாந்தியின் ஆஸ்த்தான வசனகர்த்தாவா நெனக்க ஆரம்பிச்சுட்டாங்க.

விஜயசாந்திக்காகவே........................... அடிதடி உள்ள கதைகளை எழுத ஆரம்பிச்சாங்க. சண்டை படங்கள்ல, சுறுசுறுப்பா நடிச்சு, பாராட்டுகளை பெற்றார். போலீஸ் அதிகாரி கிரண் பேடி, பூலாந்தேவி இவங்க வாழ்க்கையை பற்றி எடுத்த வைஜெயந்தி IPS, அடிமைப்பெண் போன்ற சினிமாக்கள்ல நடிச்சார். ரெண்டுமே நல்லா ஓடுச்சு.

போலிஸ் லாக்கப் படத்ல, துடுக்கு பொண்ணாவும், அப்பாவிப் பொண்ணாவும் ரெட்டை வேஷத்ல நடிச்சிருப்பார். தமிழ்ல dub செய்யப்பட்ட படங்கள்ல, விஜயசாந்திக்கு நடிகை சரிதா குரல் கொடுத்தார்.

ரொம்ப நா.......................ள் கழிச்சு நடிச்ச படங்கள்ல, ரஜினி கூடவும் நடிச்சிருக்கார். மன்னன் படம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தினு நடிச்சிருக்கார்.

விருதுகள் :
கலைமாமணி விருது
தெலுங்கு படங்களுக்கு தேசிய சினிமா விருது, தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், சினிமா எக்ஸ்பிரஸ் விருது வாங்கினார்.


தோப்பிலொரு நாடகம் நடக்குது ஏலேலங்கிளியே தோகை மயில் ஆட்டம் போடுது ஏலேலங்கிளியே நாடகத்து கதையோ புதுசு நடிக்க வந்த ஆளும் புதுசு - ஷைலஜா, இளையராஜா & மலேசியா வாசுதேவன்

கல்லுக்குள் ஈரம் 1980 / இளையராஜா \ முத்துவேந்தன்

முகம் செந்தாமரை என்றானே இதழ் ரோஜாவென சொன்னானே முகம் தாமரை மலரா இதழ் ரோஜா நிறமா அடியே நீயே சொல்லு - ஜானகி

வேடிக்கை மனிதர்கள் 1982 / சங்கர் - கணேஷ் \ முத்துலிங்கம்

மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ ஜென்ம ஜென்மஜென்மமாய் எனக்கு கட்டுப்பட்டு நீ எந்த ஊரு ராணி என்று என்னை நினைத்தாய் எட்டு தேசம் ஆளுகின்ற பெண்ணை முறைத்தாய் மன்னவா ஓ மன்னவா வா வா - ஜானகி & SPB

மன்னன் 1992 / இளையராஜா \ வாலி


பேபி மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6022
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Jun 26, 2023 10:10 pm

26.06.2023

25.06.2023 - நடிகை பூஜா உமாசங்கர் பிறந்த நாள் [1981] 

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 L6zn3y1      பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Ho2oibP

சிலோன்ல பிறந்து அங்கேயே படிச்சார். படிப்பை பாதீல நிறுத்திட்டு குடும்பம் கர்னாடக மாநிலத்துக்கு வந்து படிப்பை தொடர்ந்தார். தமிழ், சிங்கள மொழி படங்கள்ல நடிச்சிருக்கார். தமிழ்ல நடிக்க ஆரம்பிச்சது உள்ளம் கேட்குமே படத்தில. ஆனா அந்த படம் எடுத்து முடிக்க டிலே ஆனதால ரெண்டாவதா நடிச்ச ஜே ஜே 2003 முதல் படம் ஆச்சு. உள்ளம் கேட்குமே படம் 2005ல ரிலீஸ் ஆச்சு. தமிழ், கன்னடம், சிங்களம், இங்கிலீஷ் மொழிகள்ல பேசுவார். 

தமிழ், சிங்களம் TV ரியாலிட்டி ஷோக்கள்ல ஜட்ஜா இருந்தார்.

விருதுகள் :
நான் கடவுள் 2009 : சிறந்த துணை நடிகை - தமிழ்நாடு மாநில சினிமா விருது 
சிறந்த நடிகை - தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருது & விஜய் விருது 

விடியும் முன் 2013 : 
சிறந்த நடிகை - நார்வே தமிழ் சினிமா விழா விருது & ஆனந்த விகடன் சினிமா விருது 

சிங்கள படங்களுக்கு பல விருதுகள் வாங்கியிருக்கார்.
 

ஏ பொள்ளாச்சி இளநீரே நீ வந்தால் என்ன என் கையோட ஹே குன்னூரு கோனாரே ஊர் தாங்காது இப்போ நீ தள்ளி போ வாலிபத்தை ஒத்தி வைக்க வழி இருக்கா - அனுராதா ஸ்ரீராம் & கார்த்திக்
அட்டகாசம் 2004/ பரத்வாஜ் / வைரமுத்து

கோயம்புத்தூர் கோயம்புத்தூர் பொண்ணு நீயா சொல்லு அன்பே ஹேய் ஏனுங்கன்னுஏனுங்கன்னு கூப்பிடுவியா சொல்லு அன்பே நான் திருநெல்வேலி ஹல்வா கொடுத்துடுவேன் என்னை தொட்டு தொட்டு பேசாதே - ஸ்ரீகாந்த் தேவா & Febi Mani

ஜித்தன் 2005 / ஸ்ரீகாந்த் தேவா \ நா முத்துகுமார்

சுடும் நிலவு சுடாத சூரியன் ஓடும் நிமிஷம் உறையும் வருஷம் எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா  காதலித்துப் பார் காதலித்துப் பார்

தம்பி 2006 / வித்யாசாகர் / வைரமுத்து

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம் பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம் விடுமுறை நாட்களில்  பள்ளிக்கூடம் விளையாட்டு பிள்ளைகளின் செல்ல கோபம் - மதுஸ்ரீ & மது பாலகிருஷ்ணன்
பொறி 2007 / தினா \ யுகபாரதி

இது என்ன மாயம் மாயம் மாயம் இது எதுவரை போகும் போகும் போகும் இரு சிறகை விரித்து நான் மிதந்து போகிறேன் மேலே ஓஹோ கனவுகள் வருவதால் கலவரம் விழியிலே - அல்கா யாக்னிக் & சங்கர் மகாதேவன்

ஓரம் போ 2007 \ GV ப்ரகாஷ்குமார் \ நா முத்துகுமார்


பேபி  மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6022
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Jun 26, 2023 11:22 pm

26.06.2023

25.06.2023 - நடிகை ஊர்வசி சாரதா பிறந்த நாள் [1945]

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Urvasi14

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 44 Urvasi13

ஆந்திரா குண்டூர்ல பிறந்தார். நிஜ பேர் சரஸ்வதி தேவி. சென்னைல பாட்டிகிட்ட வளந்தார். அம்மா விருப்பப்படி 6 வயசில பரத நாட்டியம் கத்துக்க ஆரம்பிச்சார். பாட்டி பேத்தியை ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா வளத்தார். அதனால சாரதா நடிக்க ஆரம்பிச்சப்போ ஹீரோவை தொடாம நடிப்பேன்னு சொல்லிட்டார். ஞாயிறுக்கிழமைல மட்டும்தான் ஷூட்டிங்க்கு போனார். சினிமா உலகத்தில பெரியாளா வரணும்னு அம்மா நெனச்சார். ஆனா அப்பாவுக்கு பிடிக்கல. ஆனாலும் சாரதா நடிக்கிறதுக்கு அப்ஜெக்ட் பண்ணல.  

டைரக்ட்டர் LV ப்ரசாத் சாரதாவுக்கு நடிப்பு சொல்லி கொடுத்தார். சாரதா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி  படங்கள்ல நடிச்சிருக்கார். 10 வயசில தெலுங்கு படத்தில சின்ன ரோல்ல நடிக்க ஆரம்பிச்சார்.  ஆரம்பத்தில தெலுங்கு மேடை நாடகங்கள்ல சின்ன சின்ன ரோல்ல நடிச்சார். அப்புறமா தமிழ், தெலுங்கு மேடை நாடகங்கள்ல ஹீரோயினா நடிச்சார். ம்யூஸிக் கேக்க ரொம்ப பிடிக்கும். இப்டி அவர் தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சிட்டு இருக்கும்போது மலையாள டைரக்ட்டர்களின் கண்ணுல பட்டார். எங்க படங்கள்ல நடிக்க வான்னு ரெண்டு கைய விரிச்சு கூப்பிட்டாங்க. சான்ஸை மிஸ் பண்ண பிடிக்காம, அங்கயும் போய் நடிச்சார் சாரதா. அவ்ளோதான் அங்க முன்னணி நடிகையாக மலையாள சேச்சியாவே  மாறிட்டார். 

துலாபாரம் படம் 4 மொழிகள்ல எடுத்தாங்க. அத்தனையிலும் சாராதாதான் நடிச்சார். செம ஹிட் படம்ல? சாதனைதானே. நடிப்புக்காக 3 தேசிய விருதை வாங்கிய முதல் நடிகை. அதுல இருந்து ஊர்வசி சாராதா ஆயிட்டார். 

தமிழ்ல சாரதாவை முதல் முதலா நடிக்க வச்சவர் நடிகர் திலகம், குங்குமம் 1963 படத்தில. 1975ல நினைத்ததை முடிப்பவன் படத்தில தனக்கு தங்கையாக சாராதாதான் நடிக்கணும்னு சொன்னார். அதன் சமயத்தில மத்த மொழிகள்ல நிறைய நடிச்சிட்டு இருந்ததால MGR படத்தில நடிக்க நேரமில்ல. ஆனா MGR விட்டபாடில்ல. "அந்த பொண்ணுக்கு எப்ப  முடியுமோ, அப்ப வந்து நடிக்கட்டும். அதுக்கேத்த மாதிரி கால்ஷீட் கொடுக்கிறேன். இந்த ரோலுக்கு அந்த பொண்ணு நடிச்சாதான் சரியா இருக்கும்"னு சொல்லி MGR வெய்ட் செஞ்சு அவரை நடிக்க வச்சார். இந்த படம் ரிலீஸ் ஆன பிறகு, சாரதாவை பாத்தவங்க *வாத்தியார் தங்கச்சி*ன்னே சொன்னாங்க. 

மொதல்ல தேசிய விருதுக்கு ஊர்வசி விருதுன்னுதான் பேர் இருந்துச்சு. அப்புறமாத்தான் ஊர்வசி விருதை தேசிய விருதுன்னு பேர் மாத்தப்பட்டுச்சு. "பல விருதுகள் வாங்கினாலும், தமிழ் படங்கள்ல ஒரு ப்ரேக் கிடைக்கலியேன்னு எனக்கு வருத்தம் உண்டு"னு சாரதா சொல்லியிருக்கார். 

விருதுகள் :
1968, 1972 & 1977 - மூணு தேசிய சினிமா விருதுகள் - 2 மலையாள படங்கள் & 1 தெலுங்கு படம் 
2013 - கலைமாமணி விருது 
மலையாளம், கன்னட படங்களுக்கு கேரள மாநில விருதுகள், தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், வாழ்நாள் சாதனையாளர் விருது இன்னும் சில விருதுகளும் வாங்கினார்.


பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில் பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும் ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே - சுசீலா & TMS 
 
துலாபாரம் 1969/ G தேவராஜன் \ கண்ணதாசன்  

சின்னஞ்சிறிய வண்ணப்பறவை எண்ணத்தை சொல்லுதம்மா அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா - ஜானகி & TMS
 
குங்குமம் 1963 \ KV மகாதேவன் \ கண்ணதாசன் 

மணமேடை மலர்களுடன் தீபம் மங்கையர் கூட்டம் மணக்கோலம் மாப்பிள்ளை பெண்ணென்றால் இவர் என்பார் என்றும் வாழ்க மணமங்கை என்பார் - சுசீலா
 
ஞான ஒளி 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது எழில் பொங்கிடும் அன்பு தங்கையின் நெற்றியில் குங்குமம் சிரிக்கின்றது மங்கள குங்குமம் சிரிக்கின்றது - TMS

நினைத்ததை முடிப்பவன் 1975/ MS விஸ்வநாதன் \ புலமைப்பித்தன்  

வா வள்ளியம்மை கணவா வேலன்  வந்தாயோ வேடன் வந்தாயோ இல்லை விருத்தன் வந்தாயோ - சுசீலா & மனோரமா
 
சக்கரவர்த்தி 1977/ V குமார் / கண்ணதாசன்
 

பேபி  மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 44 of 60 Previous  1 ... 23 ... 43, 44, 45 ... 52 ... 60  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக