உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» மெட்ரோ பயணியரிடையே'சுகர் பாக்ஸ்' செயலி பிரசாரம்by T.N.Balasubramanian Today at 5:25 pm
» சந்தோசம் தான் முக்கியம்!!
by T.N.Balasubramanian Today at 5:18 pm
» காளி : சர்ச்சையை ஏற்படுத்திய லீலா மணிமேகலை
by T.N.Balasubramanian Today at 5:14 pm
» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» தங்கப் பதக்கத்தை சோனுசூட்டுக்கு சமர்ப்பணம் செய்த கராத்தே வீராங்கனை
by ayyasamy ram Today at 2:19 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 03/07/2022
by mohamed nizamudeen Today at 9:12 am
» தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன்
by ayyasamy ram Today at 7:03 am
» நீ சாதிக்கப் பிறந்தவன்! துணிந்து நில்!!! ஜூலை 4 விவேகானந்தர் நினைவு நாள்
by ayyasamy ram Today at 6:09 am
» நேரம் நிற்பதில்லை!- கவிதை
by ayyasamy ram Today at 6:04 am
» மிரள வைக்க வருகிறான் ‘ஓநாய் மனிதன்’
by ayyasamy ram Today at 6:00 am
» புலி வருது, புலி வருது!
by ayyasamy ram Today at 5:46 am
» காஞ்சி மகா பெரியவா --"நீ பூரணத்துவம் அடைஞ்சுட்ட. உன் ஆசை நிறைவேற்றப் படும்...”*"
by T.N.Balasubramanian Yesterday at 9:16 pm
» பெண்கள் அழகாக இருந்தால்தான் கூடுதல் சம்பளம் கிடைக்கும்- சர்ச்சையை ஏற்படுத்திய திமுக எம்எல்ஏ பேச்சு
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm
» 1410 கிலோ எடையுள்ள காரை தனது தலைமுடியால் கட்டி இழுத்து சாதனை
by T.N.Balasubramanian Yesterday at 5:03 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 4:42 pm
» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» பிணம் பேச மாட்டேங்குது...!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:05 pm
» கங்கையில் 'டைவ்': 73. வயது மூதாட்டி சாகசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:04 pm
» ஒய்ஃபுக்கு அர்த்தம் இப்பதான் தெரிஞ்சுது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm
» இன்னலே வரே - மலையாளப் படம்
by T.N.Balasubramanian Yesterday at 12:55 pm
» சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 pm
» மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம்
by T.N.Balasubramanian Yesterday at 12:40 pm
» மயக்கமா இருக்குது டாக்டர்...!
by T.N.Balasubramanian Yesterday at 12:35 pm
» டெஸ்டில் ஒரே ஓவரில் 29 ரன்கள்… மரண மாஸ் காட்டிய பும்ரா; உலக சாதனை!
by T.N.Balasubramanian Yesterday at 12:33 pm
» இயல்பானதை குறைத்து மதிப்பிடாதே! - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:44 am
» சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் இந்து உப்பு !!
by ayyasamy ram Yesterday at 10:42 am
» தினம் ஒரு மூலிகை - ஆற்றலரி
by ayyasamy ram Yesterday at 8:54 am
» இன்டர்செப்டர் - ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சாகன் சாக்னே - பஞ்சாபி படம்
by ayyasamy ram Yesterday at 8:50 am
» ஜெயேஷ்பாய் ஜோர்தார் -இந்திப் படம்
by ayyasamy ram Yesterday at 8:49 am
» மருத்துவமனைக்கு ஆய்வுக்கு சென்றபோது நோயாளிக்கு ரத்த தானம் கொடுத்து உதவிய மந்திரி
by ayyasamy ram Yesterday at 6:05 am
» தோனி மூட்டு வலி சிகிச்சைக்காக ரூ 40 மட்டும் வாங்கிய டாக்டர்
by ayyasamy ram Yesterday at 5:55 am
» 18 ஆயிரம் பறவை இனங்கள்
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 9:01 pm
» அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 8:59 pm
» நுாதன முறையில் பண மோசடி
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 8:54 pm
» கடனா? சொத்தா? (சிறு கதை )
by krishnaamma Sat Jul 02, 2022 8:38 pm
» இதுதான் இன்றைய பெண்களின் தாய்மார்களின் வசனம்!
by krishnaamma Sat Jul 02, 2022 8:25 pm
» உருவு கண்டு (சிறுகதை)
by krishnaamma Sat Jul 02, 2022 8:22 pm
» பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் !
by krishnaamma Sat Jul 02, 2022 8:19 pm
» நதிகளை பாதுகாப்போம்! - ஹைகூ
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:53 pm
» கோவில்பட்டி கடலை மிட்டாயை இனிவீட்டில் இருந்தபடியே பெறலாம்.
by krishnaamma Sat Jul 02, 2022 7:52 pm
» இந்தியாவும் வல்லரசுதான்…! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:52 pm
» ரசிப்பதற்கு ஒன்றுமில்லை…! - ஹைகூ
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:50 pm
» நினைத்தாலே கிடைக்கும் மஹா பெரியவா அனுக்கிரகம்
by krishnaamma Sat Jul 02, 2022 7:46 pm
» பளக்க தோசம்...பளக்க தோசம்....அப்டீன்னா என்னா?
by krishnaamma Sat Jul 02, 2022 7:43 pm
» பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது?
by krishnaamma Sat Jul 02, 2022 7:40 pm
» விளையாட்டு தொடர்பான பாடல்கள் :)
by krishnaamma Sat Jul 02, 2022 7:34 pm
» முருகன் பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
by krishnaamma Sat Jul 02, 2022 7:29 pm
» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:51 pm
» ஒற்றைத் தலைமை வேணும்ங்கிறான்…!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:45 pm
Top posting users this month
ayyasamy ram |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Pradepa |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
2 posters
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
First topic message reminder :
13.12.2021
நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]
நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல நடிச்சார்.
அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.
லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம்.
தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார்.
தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS
ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS
சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன்
பேபி

heezulia- வி.ஐ.பி
- பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203
heezulia likes this post
Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
01.01.2022
நடிகர் VK ராமசாமி அவர்கள் பிறந்த நாள் [1926 - 2002]
நிறைய பழைய சினிமா கலைஞர்களை போல இவரும் 7 வயசிலேயே பாய்ஸ் நாடக கம்பெனியில 15 வருஷம் நடிச்சு வந்தவர். அங்க அவர் சிரிப்பு நடிகனாக இருந்தார். தியாக உள்ளம் நாடகத்தில 15 வயசில 60 வயசு கிழவனாக நடிச்சார். இந்த நாடகத்தை பாத்த AVM செட்டியார் இதையே அவர் 1947ல நடிச்ச நாம் இருவர் படத்ல நடிக்க வச்சார். VKR நடிச்ச முதல் படம்.
அநேகமா வயசானவர் ரோல்லதான் நடிக்க சான்ஸ் கெடச்சுது. காமெடி, வில்லன், குணசித்திர ரோல்கள்ல நடிச்சார். நடிகை மனோரமாகூட நடிச்ச படங்கள்ல காமெடி பாக்க ஜாலிதான். ரெண்டு மலையாள படங்கள்ல நடிச்சார். அப்போ இருந்த முன்னணி நடிகர்கள் கூடல்லாம் நடிச்சார்.
உலகநாயகன் கமல்ஹாஸன் 60 வருஷ சினிமா வாழ்க்கையை கொண்டாட 'உங்கள் நான்'னு ஒரு நிகழ்ச்சி 2019ல நடத்தினார். அதுல சினிமா உலகத்துல முக்கியமானவங்கனு கமல் நெனச்சவங்கள்ல VK ராமசாமியும் ஒருத்தர்னு சொன்னார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிச்ச அருணாசலம் படத்ல கெடச்ச லாபத்தை ரஜினி எட்டு பேருக்கு பிரிச்சு கொடுத்தாராம். அவங்கள்ல அந்த படத்ல நடிச்ச VKR ரும் உண்டு. கமலும், ரஜினியும் VKRரை அவ்ளோ மதிச்சாங்க.
மலையாள டைரக்ட்டர் பாசிலுக்கு VKRரை ரொம்ப பிடிக்கும். அவரோட சில தமிழ் படங்கள்ல VKRரை நடிக்க வச்சார். காமெடி நடிகர் சார்லி அவரை தனக்கு முன்னோடினு சொன்னார்.
இவர் நடிக்கும்போது அடிக்கடி பேசுற வார்த்தைகள் : முண்டம், மூதேவி, அது கெடக்குது கழுத.
VKR கலைமாமணி விருது வாங்கினார்.
மாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாது - TMS
குடும்பத் தலைவன் 1962 / KV மகாதேவன் / கண்ணதாசன்
குடியிருந்த கோயில் 1968
VK ராமசாமி அடிச்ச லூட்டி
இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ - மலேசியா வாசுதேவன்
https://www.youtube.com/watch?v=i_gzWQozLE8
உன் கண்ணில் நீர் வழிந்தால் 1985 / இளையராஜா / கங்கை அமரன்
என்ன படம்னு தெரியல. ஒரு மிக்ஸர் பாட்டு.
மனோரமாவும், VKRரும் முதலிரவில் அடிக்கிற லூட்டி.

பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே [1975]
நடிகை, மாடல். சில தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி படங்கள்ல நடிச்சிருக்கார். ஹிந்தி TV போட்டி நிகழ்ச்சிகள்ல ஜட்ஜா இருந்திருக்கார்.
முதல் முதலா தமிழ்ல பம்பாய் படத்ல ஹம்மா ஹம்மா பாட்டுக்கு மட்டும் ஆடினார். முதல் முதலா தமிழ்ல நடிச்ச படம் காதலர் தினம் [1999].
ஃபிலிம்ஃபேர் விருது, நட்சத்திர விருது வாங்கினார்.
அந்த அரபிக் கடலோரம் ஓர் அழகை கண்டேனே - ஸ்வர்ணலதா, AR ரஹ்மான் & சுரேஷ் பீட்டர்
பம்பாய் 1995 / AR ரஹ்மான் / வைரமுத்து
காதல் எனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் - ஸ்வர்ணலதா & SPB
காதலர் தினம் 1999 / AR ரஹ்மான் / வாலி
ஏ மோனா ஏ மோனா என் மோனாலிஸாதானா - ஹரிஹரன்
கண்ணோடு காண்பதெல்லாம் 1999 / தேவா / மயில்

02.01.2022
நடிகை சாந்தி கிருஷ்ணா பிறந்த நாள் [1963]
மும்பைல பிறந்தவர். மலையாள படங்கள்ல முன்னணி நடிகையா இருந்தார். தமிழ், கன்னட படங்கள்லயும் நடிச்சிருக்கார். TV சீரியல்கள்ல நடிச்சார். டைரக்ட்டர் சுரேஷ் கிருஷ்ணாவின் தங்கச்சி.
டான்ஸ் இவருக்கு ரொம்ப பிடிக்கும். தமிழ்ல முதல்ல நடிச்ச படம் சிவப்பு மல்லி [1981]. பேர் வாங்கி குடுத்த படம் பன்னீர் புஷ்பங்கள் [1981]. இப்போ பெங்களூர்ல இருக்கார். மலையாள படங்கள்ல செலெக்ட் செஞ்சு நடிச்சிட்ருக்கார். தமிழ்ல நேருக்கு நேர் படத்துக்கப்புறம் நல்ல சான்ஸ் கெடக்கலேன்னு சொல்லியிருக்கார்.
கேரள மாநில சினிமா விருது, ஏசியாவிஷன் விருது, ஏசியாநெட் சினிமா விருது இன்னும் சில விருதுகள் வாங்கினார். இந்த விருது கொடுக்கும் நடுவராவும் இருந்தார்.
ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம் தொட்டு கொள்ள ஆசைகள் துள்ளும் - P சுசீலா & KJ ஜேசுதாஸ்
சிவப்பு மல்லி 1981 / சங்கர் கணேஷ் / வைரமுத்து
பூந்தளிர் ஆட பொன்மலர் சூட சிந்தும் பனிவாடை காற்றில் கொஞ்சும் இரு காதல் நெஞ்சம் பாடும் புது ராகங்கள் - S ஜானகி & SPB
பன்னீர் புஷ்பங்கள் 1981 / இளையராஜா / கங்கை அமரன்
மந்திர புன்னகை மின்னிடும் மேனகை சந்தன பூங்கொடியோ - BS சசிரேகா & SPB
மணல் கயிறு 1982 / MS விஸ்வநாதன் / வாலி

03.01.2022
பின்னணி பாடகர் நரேஷ் அய்யர் பிறந்த நாள் [1981]
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, மலாய் மொழி படங்கள்ல பாடியிருக்கார். சார்ட்டட் அக்கௌன்டன்ட் ஆகணும்னு ஆசப்பட்டு, நடூல கர்னாடக, ஹிந்துஸ்த்தானி இசை கத்துக்கிட்டார்.
விஜய் TV சூப்பர் சிங்கர் இசை போட்டி நிகழ்ச்சியில கலந்துக்கிட்டார். AR ரஹ்மான் அவர் பாட்றதை கேட்டு, சினிமால பாட்றதுக்கு சான்ஸ் கொடுத்தார். மும்பைல த்வனிங்கிற மியூஸிக் ட்ரூப்ல பாடிட்டு இருந்தார்.
நரேஷ் பாடிய முதல் தமிழ் பாட்டு அன்பே ஆருயிரே படத்ல மயிலிறகே மயிலிறகே வருடுகிறாய் மெல்ல பாட்டு. இந்த பாட்டுக்கு சிறந்த பாடகருக்கான Hub விருதும், கண்ணதாசன் விருதும் வாங்கினார்.
தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் RD பர்மன் விருது வேற சில விருதுகளும் வாங்கினார்.
மயிலிறகே மயிலிறகே வருடுகிறாய் மெல்ல மழை நிலவே மழை நிலவே - மதுஸ்ரீ & நரேஷ் அய்யர்
அன்பே ஆருயிரே 2005 / AR ரஹ்மான் / வாலி
ஏ தில்லு முல்லு பண்ணல கெத்து கித்து காட்டல சீனு கீனு போடல
கெத்து 2016 / ஹாரிஸ் ஜெயராஜ்
ஒரு வெட்கம் வருதே வருதே சிறு அச்சம் தருதே தருதே - ஷ்ரேயா கோஷல் & நரேஷ் அய்யர்
பசங்க 2009 / ஜேம்ஸ் வசந்தன் / தாமரை

பின்னணி பாடகி சைந்தவி பிறந்த நாள் [1989]
ம்யூஸிக் டைரக்ட்டர் GV பிரகாஷ்குமாரின் மனைவி. இவர் ம்யூஸிக் போட்ட படங்கள்ல சைந்தவி பாடியிருக்கார். கர்நாட இசை பாடகி. 12 வயசிலிருந்தே பாட ஆரம்பிச்சுட்டார். ம்யூஸிக் ஆல்பத்தில பாடியிருக்கார்.
மஞ்சள் முகமே மங்கள விளக்கே வருக வருக வா
ABCD 2005 / D இமான் / சரவணா சுப்பையா
நீ எனக்கு நீ எனக்கு யாரடி யாரடி நீ எனக்கு பேரெதுக்கு பேரெதுக்கு - சைந்தவி & கார்த்திக்
திருத்தணி 2012 / ம்யூஸிக் & வரிகள் : டைரக்ட்டர் பேரரசு
ஆடு புலி ஆட்டந்தானே ஆடிபாப்போமா ஆடு இங்கே ஜெய்ச்சுபுடும் - சைந்தவி & ரஞ்சித்
மாப்பிள்ளை 2011 / மணி சர்மா / சினேகன்

04.01.2022
நடிகர் ஜீவா பிறந்த நாள் [1984]
நடிகர், தயாரிப்பாளர். சொந்த பேர் அமர். தயாரிப்பாளர் RB சௌத்ரியின் மகன். நடிகர் ஜித்தன் ரமேஷின் தம்பி.
ஜீவா நடிச்ச முதல் படம் ஆசை ஆசையாய் [2003]. மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஒவ்வொரு படத்தில நடிச்சார். விஜய் TVல டான்ஸ் ரியாலிட்டி ஷோல ஜட்ஜா இருந்தார்.
ஏ பெண்ணே திரும்பி பாரு ஹே ஹே பெண்ணே திரும்பி பாரு - ரஞ்சித்
ஆசை ஆசையாய் 2003 / மணி சர்மா / வைரமுத்து
ஒரே முறை ஒரே முறை தப்பு செய்யலாம் தப்பு செய்யலாம் - சுக்வீந்தர்சிங் & சங்கீதா
ஈ 2006 / ஸ்ரீகாந்த் தேவா / விவேகா
என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன் உன்னை விட்டு வேறு எங்கும் போகமாட்டேன் - கார்த்திக்
நீதானே என் பொன்வசந்தம் 2012 / இளையராஜா / நா முத்துக்குமார்

நடிகர் ரமணா பிறந்த நாள் [1979]
தெலுங்கு நடிகர் விஜய்பாபுவின் மகன். இந்த விஜய்பாபு யார்னு தெரியுமோ? படிக்காதவன் படத்ல ரஜினியின் தம்பியா நடிச்சிருப்பார்.
ரமணா தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சிருக்கார். ஒண்ரெண்டு கன்னட, மலையாள படங்கள்ல நடிச்சார். தமிழ்ல நடிச்ச முதல் படம் ஸ்டைல் [2002].
யாரும் தொடாத ஒன்றை ஏதோ முதல் முறை தொடுகிறதே - ஷ்ரேயா கோஷல் & இளையராஜா
அஜந்தா 2012 / இளையராஜா / பா விஜய்

07.01.2022
5ஆம் தேதி LR ஈஸ்வரி அம்மாகூட போன்ல பேசுற சான்ஸ் கெடச்சுது. முக்கா மணி நேரம் பேசினோம். நான் பாட்டு நல்லா பாடுவேன்னு அவங்களுக்கு ஏற்கனவே சொல்லியிருக்காங்க. அதனால என்னை அவங்க பாடின சில பாட்டு சொல்லி பாட சொன்னாங்க. நானும் பாடினேன். பாராட்டினாங்க. அவங்க க்ரூப்ல என்னை சேத்துவிட்டுட்டாங்க. அங்க ஒரு நாளைக்கு நூத்துக்கணக்கான மெஸேஜ் வருது. அதனால இந்த பிறந்த நாள் பதிவை அனுப்ப மறந்துபோச்சு.
05.01.2022 நடிகர் கஞ்சா கருப்பு பிறந்த நாள் [1976]
சொந்த பேர் கருப்பு ராஜா. 2003ல முதல் முதலா பிதாமகன் படத்ல கஞ்சா விக்கிறவரா நடிச்சதால கஞ்சா கருப்பு ஆயிட்டார். சினிமால பேர் வாங்கினது பேச்சு ஸ்டைலுக்காகவும், இன்னொசென்ட் நடிப்புக்காகவும். 2014ல வேல்முருகன் போர்வெல் படத்தின் தயாரிப்பாளர்.
தாமிரபரணி 2007
வேல்முருகன் போர்வெல் 2014

05.01.2022 - நடிகர் சாருஹாசன் அவர்கள் பிறந்த நாள்[1931]
ரிட்டயர்டு வக்கீல். உலக நாயகன் கமல்ஹாசனின் அண்ணன். ரெண்டு பேருக்கும் 23 வயசு வித்தியாசம். நடிகை சுஹாசினியின் அப்பா. நடிகர், டைரக்ட்டர், TV சீரியல் நடிகர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார்.
சின்ன வயசில ஆக்சிடென்ட் நடந்ததால, ஆரம்பத்ல ஸ்கூல் போக முடியாம போச்சு. அப்புறமா நேரடியா அஞ்சாங்கிளாஸ்ல சேந்துட்டார்.
சின்ன வயசிலேயே சினிமானா பிடிக்கும். 1940களின் கடைசியில டெய்லி ரெண்டு வெளிநாட்டு படங்கள் பாப்பார். தம்பி கமல் சினிமால சின்ன பையனா நடிக்க ஆரம்பிச்சபோ, சாருஹாசன் கமலை கவனிச்சுக்கிட்டார்.
துணை நடிகராவும், வில்லனாவும் நடிச்சார். சாருஹாசன் நடிச்ச முதல் படம் உதிரிப்பூக்கள் [1979]. IPC 215 & புதையல் சங்கமம் ரெண்டு படங்களை டைரக்ட்டினார். தாதா 87னு படத்தில தாதாவா நடிச்சார். இந்த படத்ல சாருஹாசனுக்கு ஜோடி கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா.
தேசிய விருது, கர்நாடகா மாநில விருது, ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார்.
இஞ்சி இடுப்பழகி மஞ்ச சேவப்பழகி கள்ள சிரிப்பழகி மறக்க மனம் கூடுதில்லையே
தா தா 87 - 2019

05.01.2022 - நடிகர் பாண்டியன் பிறந்த நாள் [1959 - 2008]
டைரக்ட்டர் பாரதிராஜா மதுரைக்கு ஷூட்டிங்க்கு போயிருந்தபோது அவர் கண்ல பட்டுதான் முதல் முதலா மண்வாசனை [1983] படத்ல நடிக்க பாண்டியனுக்கு சான்ஸ் கெடச்சுது. பாரதிராஜாவே பாண்டியனை அடுத்த ரஜினின்னு சொன்னாராமே.
சேர்க்க சரியில்லாம குடிப்பழக்கம் வந்து, கதையை சரியா செலெக்ட் செய்யாம, நட்புக்காக நடிச்சு சினிமா சான்ஸ் வரவர கொறஞ்சுபோச்சு. அதுக்கப்புறமா TV சீரியல்ல நடிச்சார்.
பொத்தி வச்ச மல்லிக மொட்டு பூத்திருச்சு வெக்கத்தவிட்டு பேசிப் பேசி ராசியானதே - S ஜானகி & SPB
மண் வாசனை 1983 / இளையராஜா / வைரமுத்து
குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே - KS சித்ரா & மலேசியா வாசுதேவன்
ஆண்பாவம் 1985 / இளையராஜா / வாலி

09.01.2022
06.01.2022 - இசைப்புயல் AR ரஹ்மான் பிறந்த நாள் [1966]
சொந்த பேர் திலீப்குமார். முஸ்லிமா மாறி ரஹ்மான் ஆயிட்டார். அப்பாவும் ம்யூஸிக் டைரக்ட்டர், மலையாளத்துல.
ரஹ்மான் பாடகரும்கூட. தமிழ், ஹிந்தி, இங்கிலிஷ் படங்களுக்கு ம்யூஸிக் போட்டு இசை புயல்னு பட்டபேர் கெடச்சுது. க்ளாசிக்கல் ம்யூஸிக், அப்போதைய ட்ரெண்ட் ம்யூஸிக் ரெண்டையும் சேத்து போட்டு ம்யூஸிக்ல புதுமையை செஞ்சவர் இவர். தமிழ் சினிமாக்கு அறிமுகமானது ரோஜா படத்துக்கு ம்யூஸிக் போட்டு. எல்லா பாட்டும் ஹிட். முதல் படத்திலியே முதல் தேசிய விருது வாங்கிட்டார். யார் அந்த இளைஞன்னு கேக்குற அளவுக்கு வளர்ந்தார். ஆல்பங்களும் வெளியிட்டார்.
வெஸ்டன் இசை கருவிகளை திறமையாக போடும் மாஸ்ட்டர் தன்ராஜ்கிட்ட முறைப்படி ட்ரைனிங் எடுத்துகிட்டார் ரஹ்மான். 11வயசில இசைஞானி ட்ரூப்ல கீபோர்ட் வாசிப்பவராக சேந்தார். அதுக்கப்புறம் மெல்லிசை மன்னர், குன்னக்குடி வைத்தியநாதன் போன்றவங்க குழுலயும் இருந்தார். ம்யூசிக் காலேஜ்ல கர்நாடக சங்கீதம் கத்துக்கிட்டார். சின்ன வயசில விளம்பரங்களுக்கு ம்யூஸிக் போட்டு தயாரிச்சார்.
2008ல Slumdog Millionaire படத்துக்கு ஆஸ்க்கார் விருது வாங்கினார். இந்த படத்ல ஜெய்ஹோ பாட்டு ப்ரபலம். இதுக்கும் ஆஸ்க்கார் விருது வாங்கினார். ஒரே நேரத்ல ஒரே படத்துக்கு ரெண்டு ஆஸ்கார் விருது வாங்கிய ஒரே இந்தியர். ரெண்டு விருதுகளையும் ரெண்டு கைல பிடிச்சு "எல்லா புகழும் இறைவனுக்கே"னு சொன்னார்.
தாய் மண்ணே வணக்கம் வந்தே மாதரம் பாட்டும் ஓஹோதான். 1997ல இந்தியா சுதந்திரம் வாங்கிய பொன்விழாவுக்காக போட்ட ம்யூஸிக். சர்வதேச அளவில் கவனிக்கப்பட்டுச்சு. செம்மொழியான தமிழ் மொழியாம் பாட்டு சொல்லவே வேணாம். ஜனங்களை அவ்ளோ கவர்ந்த பாட்டு. இளைய தளபதி நடிச்ச பிகில் படத்ல சிங்க பெண்ணே பாட்ல நேரடியா வந்திருப்பார்.
சூப்பர் ஸ்டார் நடிச்ச முத்து படம் ஜப்பான்ல ஓஹோன்னு ஓடி, உலகம் முழுசும் ரஹ்மான் புகழ்தான். இவரோட AM ஸ்டூடியோ ஆசியாலயே சிறந்த நவீன டெக்னாலஜி கொண்ட ரெக்கார்டிங் ஸ்டூடியோ. ராத்திரி நேரம் அமைதியா இருக்கிறதால அந்த நேரத்திலதான் ம்யூஸிக் போட பிடிக்கும்னு சுயசரிதைல சொல்லியிருக்காராம்.
ரஹ்மானின் சுயசரிதை Notes Of A Dream ங்கிற பேர்ல புத்தகமா வந்திருக்கு. மத்தவங்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர். பரோபகாரி. 2008ல சென்னை ரோட்டரி க்ளப்ல இருந்து வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கினார். 2014ல பெர்க்லி ம்யூஸிக் காலேஜ் இவருக்கு கௌரவ டாக்ட்டர் பட்டம் கொடுத்துச்சு.
ம்யூஸிக் நிகழ்ச்சிகள் நடத்தினதுல கெடச்ச வருமானத்தில ஒரு தொகையை கஜா புயல்ல பாதிக்கப்பட்டவங்களுக்கு கொடுத்து உதவினார்.
அநேகமா குடும்பத்துடன் நேரம் செலவழிப்பது ரஹ்மானுக்கு பிடிக்கும்னு சொல்லியிருக்கார். இலவசமா ம்யூஸிக் ஸ்கூல் நடத்துறார். அங்க விலையுயர்ந்த இன்ஸ்ட்ருமென்ட்ஸ் இருக்குனு சொல்றாங்க. வீடியோ கேம்ஸ் வெளையாட பிடிக்கும். இவருக்கு பிடிச்ச கார்கள்ல BMW ஒண்ணு. புதுசா ஏதாச்சும் இசை கருவிகள் வந்தா உடனே வாங்கிருவார். அவர் வீட்ல உள்ள ஸ்டூடியோலதான் ம்யூஸிக் போடுவார். இல்லேன்னா பாம்பே ஸ்டூடியோக்கு போவார்.
இன்னும் இவரை பற்றி, இவரோட ம்யூஸிக்கை பற்றி எழுத ஏராளமா இருக்கு.
இந்தியாலேயே அதிக தேசிய விருதுகள் வாங்கிய ம்யூசிக் டைரக்ட்டர் AR ரஹ்மான். கலைமாமணி விருது, பத்மஸ்ரீ விருது, பத்மபூஷன், ஆஸ்க்கார் விருது, கோல்டன் க்ளோப் விருது, BAFTA விருது, தேசிய விருதுகள், கௌரவ டாக்ட்டர் பட்டங்கள், கோல்டன் க்ளோப் விருது இன்னும் ஏராளமான விருதுகள் வாங்கியிருக்கார். சர்வதேச அளவுல மியூஸிக்கு ஏராளமான விருது வாங்கிய ம்யூஸிக் டைரக்ட்டர்.
வந்தே மாதரம் தாய் மண்ணே வணக்கம்
செம்மொழியான தமிழ் மொழியாம்
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூசிவந்த கன்னங்கள் ரோசாப்பூ - SPB
உழவன் 1993 / AR ரஹ்மான் / வாலி

06.01.2022 - பழம்பெரும் நடிகை ஜெயந்தி அம்மா பிறந்த நாள்
[1945 - 2021]
சொந்த ஊர் கர்நாடகா. சொந்த பேர் கமலக்குமாரி. கன்னட டைரக்ட்டர் வச்ச பேர் ஜெயந்தி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி, மராத்தி படங்கள்ல நடிச்சார். முதல்ல நடிக்க ஆரம்பிச்சது கன்னட படங்கள்ல. கன்னட சினிமால இவருக்கு அபிநய சாரதேனு கௌரவ பேர். கன்னடத்திலதான் நெறைய நடிச்சார்.
ரொம்ப சின்ன வயசில அப்பா கூட ஷூட்டிங் பாக்க போயிருந்த போது, அங்க வந்திருந்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் NTR மடிமேல ஏறி விளையாடினார். பின்னால NTR கூடவும் நடிச்சார்.
அம்மாவுக்கு ஜெயந்தி பரதநாட்டிய கலைஞர் ஆக்கணும்னு ஆச. அதனால பரதநாட்டியம் கத்துக்க அனுப்பினார். ஜெயந்தி குண்டா இருந்ததால டான்ஸ் கத்துக்க முடியல. அங்கதான் மனோரமாவை, கோபிசாந்தா பேர்ல சந்தித்தார். சின்ன வயசில சில தமிழ், தெலுங்கு படங்கள்ல சின்ன சின்ன ரோல்ல நடிச்சார்.
1965ல கன்னட படம் மிஸ் லீலாவதி படத்தில நடிக்கும்போது, கன்னட சினிமால முதல் முறையா ஸ்கர்ட், டிஷர்ட், நைட்டி போட்டு நடிச்சார். வேற படங்கள்ல ஹீல்ஸ் வச்ச ஷூ, நீச்சல் உடைல நடிச்சார். மிஸ் லீலாவதி படத்ல நடிச்சதுக்கு தேசிய விருது வாங்க டெல்லிக்கு போனார். அவருக்கு அப்போதைய ப்ரதமர் இந்திரா காந்தி அவர்கள்ட்ட இருந்து ஜெயந்தி விருது வாங்கிட்டு போனபிறகு, ப்ரதமர் ஜெயந்தியை கூப்ட்டு அவர் கன்னத்தில முத்தமிட்டு அனுப்பினார்.
இயக்குனர் சிகரம் பாலசந்தருக்கு பிடித்தமான நடிகை ஜெயந்தி.
கர்நாடக மாநில விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், டாக்ட்டர் சரோஜாதேவி தேசிய விருது வாங்கினார்.
நான் கேட்டேன் அவன் தந்தான் தாலாட்டும் தாயானேன் - P சுசீலா
கண்ணா நலமா 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்
என்னம்மா பொன்னம்மா பக்கம் வாம்மா வாம்மா - P சுசீலா & TMS
எதிர் நீச்சல் 1968 / V குமார் / வாலி
கன்னி நதியோரம் மின்னி விளையாடும் - P சுசீலா & TMS
நீர்க்குமிழி 1965 / V குமார் / ஆலங்குடி சோமு

07.01.2022 - நடிகர் K பாக்யராஜ் அவர்கள் பிறந்த நாள் [1953]
நடிகர், டைரக்ட்டர், திரைக்கதை, வசன எழுத்தாளர், தயாரிப்பாளர், பத்திரிகையாளர், ம்யூஸிக் டைரக்ட்டர், பாடகர் இப்டி பல வேலைகளை சினிமால செஞ்சார்.
நடிகை பூர்ணிமா ஜெயராம் இவரோட மனைவி. சரண்யா, சாந்தனு இவரோட ரெண்டு பிள்ளைங்களும் சினிமால நடிக்கிறாங்க. மருமகள் TV நிகழ்ச்சி தொகுப்பாளர் கீர்த்தி என்ற கிகி.
இயக்குனர் இமயம் பாரதிராஜா கூட உதவி இயக்குனராக இருந்து சினிமாவை பற்றி கத்துக்கிட்டார். நடிக்க ஆரம்பிச்சது கிழக்கே போகும் ரயில் படத்ல சின்ன ரோல். இதே மாதிரி சிகப்பு ரோஜாக்கள், 16 வயதினிலே படத்லயும். ஹீரோவா நடிச்ச முதல் படம் புதிய வார்ப்புகள். வசனமும் இவர்தான். டைரக்ட்டின முதல் படம் சுவர் இல்லாத சித்திரங்கள். கன்னிப் பருவத்திலே படத்ல வில்லனா நடிச்சார்.
1988ல இருந்து பாக்யானு வார இதழுக்கு எடிட்டரா இருந்து நடத்தினார்.
பாரதிராஜாவால இவர் டைரக்ட்டரா உருவான மாதிரி, இவராலயும் சில டைரக்டர்கள் உருவானாங்க. பாண்டியராஜன், பார்த்திபன், V சேகர் போலவங்க. நடிகை ஊர்வசியை முந்தானை முடிச்சு படத்துலயும், ஊர்வசியின் அக்கா கல்பனாவை சின்ன வீடு படத்துலயும் இன்ட்ரோ செஞ்சார்.
1977ல ஸ்ரீதர் டைரக்ட்டி மக்கள் திலகம் நடிச்சு பாதியில நின்னு போன படம் அண்ணா என் தெய்வம். இந்த படத்தின் காட்சிகளுக்குனே பாக்யராஜ் புதுசா ஒரு திரைக்கதை எழுதி, டைரக்ட்டி அவரும் ரெட்டை வேஷத்ல நடிக்கவும் செஞ்சார். படம் பேர் அவசர போலீஸ் 100 [1990]. 1984ல நடிகர் திலகத்தை வச்சும் தாவணிக் கனவுகள் படத்தை எடுத்தார்.
அநேகமா இவரோட நிறைய படங்கள் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகள்ல அந்தந்த மொழி முன்னணி நடிகர்கள் நடிச்சு அவைகளும் இங்க மாதிரி போடு போடுன்னு ஓடுச்சு. ஹிந்தி படங்கள்ல பாக்கியராஜ் ரோல்ல அனில்கபூர் நடிச்சார்.
இவர் படங்கள்ல யதார்த்தமான காமெடி நிறைய இருக்கும். பெருஸ்ஸா தொழில் நுட்பங்கள் இருக்காது. அநேகமா வெளிநாட்டு ஷூட்டிங், ப்ரம்மாண்டமான காட்சிகள் இருக்காது. இப்போ எடுக்கப்போற படத்துக்கு பிரளயம்னு பேர் வச்சிருக்கார். த்ரில்லர் படம். பாக்யராஜ் ஸ்டைல்ல இல்லாம புதுமையா இருக்க போவுதாம். தனக்கு சினிமாவை தவிர வேற எதுவும் தெரியாதுன்னும், அதுவே அவருக்கு பலமும், பெருமையாவும் இருக்குன்னும் சொல்லியிருக்கார். அவரே இந்து தமிழ் பத்திரிகைல சொல்லியிருக்கார். மக்கள் திலகம் பாக்யராஜை தன்னோட கலை வாரிசுன்னு சொன்னார்.
பாரதிராஜா, பாலசந்தர், ஸ்ரீதர் இவங்களையெல்லாம் தன்னோட குரூன்னு சொன்னாலும், டெக்னிகலா சினிமாவை பற்றி கத்து கொடுத்த பாரதிராஜா மானசீக குருன்னு சொல்லியிருக்கார்.
வேட்டிய மடிச்சு கட்டு [1998] படம் தோல்விக்கு பிறகு நடிக்கிறதை விட்டுட்டார். முந்தானை முடிச்சு 2 இப்போ ரீமேக் செஞ்சு எடுத்துட்டு இருக்காங்க. இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி பாக்யராஜ் கொஞ்சம் மாத்தி கொடுத்திருக்கார். TV ஷோக்களை டைரக்ட்ட ஆரம்பிச்சார். போட்டி நிகழ்ச்சிகள்ல ஜட்ஜா இருந்தார். அப்புறமா 2006ல சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் படத்ல நடிச்சார். 2010ல பையன் சாந்தனு நடிச்ச சித்து +2 படத்தை தயாரிச்சு, டைரக்ட்டினார்.
ஃபிலிம்ஃபேர் விருதுகள், SIIMA வாழ்நாள் சாதனையாளர் விருது, தமிழ்நாடு மாநில விருது வாங்கினார்.
கிழக்கே போகும் ரயில் 1978
வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள் - S ஜானகி & மலேசியா வாசுதேவன்
புதிய வார்ப்புகள் 1976 / இளையராஜா / கண்ணதாசன்
மதன மோக ரூபா சுந்தரி மதனாங்கி - SP ஷைலஜா & மலேசியா வாசுதேவன்
இன்று போய் நாளை வா 1981 / இளையராஜா / கங்கை அமரன்

07.01.2022 - அபிநய சரஸ்வதி சரோஜாதேவி அவர்கள் பிறந்த நாள் [1938]
இவரோட பட்டபேர்கள் :
தமிழ் - கன்னடத்து பைங்கிளிஹிந்தி - அபிநய பாரதி கன்னடம் - அபிநய சரஸ்வதி, அபினன்டன் காஞ்சனமாலா தெலுங்கு - சல்லாப சுந்தரி
நெஜ பேர் ராதாதேவி. டான்ஸ், நடிப்பு கத்துக்க அப்பா உற்சாகப்படுத்தினார். அப்பாகூட அடிக்கடி ஸ்டூடியோவுக்கு போனார். கால்ல சலங்கை கட்டி ஆடி, அதனால கால் வீங்கிரும். அப்பா மசாஜ் செஞ்சார். நடிக்கும்போது போட்ட ட்ரெஸ்ல அம்மா கண்டிப்பா இருந்தார். அரைகுறை டிரஸ், நீச்சல் ட்ரஸ்க்கு நோ சொல்லிட்டார். அதையே சரோஜாதேவி பின்பற்றினார்.
ஸ்கூல் படிக்கும்போது, ஸ்கூல்களுக்குள்ள நடந்த இசை போட்டீல, சரோஜாதேவி பாடினார். அங்க வந்திருந்த கன்னட நடிகர் ஹொன்னப்ப பாகவதர் சரோஜாதேவி பாடியதை ரசிச்சு, அவரை பின்னணி பாடகி ஆக்கலாம்னு நெனச்சு ஸ்டூடியோவுக்கு கூட்டிட்டு போனார். வாய்ஸ் டெஸ்ட் செய்ற நேரத்துல, அவரை நடிகை ஆக்கணும்னு எண்ணம் வந்து 1955ல தன்னோட மகாகவி காளிதாஸ் கன்னட படத்ல சின்ன ரோல்ல நடிக்க வச்சார்.
தமிழ்ல முதல் படம் மணாளனே மங்கையின் பாக்கியம் [1958].
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். அவர் நடிச்ச காலத்ல அதிக சம்பளம் வாங்கியவர். கன்னடத்தில சரோஜாதேவி என்ற பேர்ல ஹீரோயினா நடிக்க ஆரம்பிச்சார். தமிழ்ல புகழ் கெடச்சுது நாடோடி மன்னன் படத்தில. மக்கள் திலகம், நடிகர் திலகம், காதல் மன்னன்கூட பல படங்கள்ல நடிச்சார்.
கணவர் இறந்த பிறகும் சில படங்கள்ல நடிச்சார். அதுக்கப்புறமா பெங்களூர்ல செட்டில் ஆயிட்டார். அங்க கணவர், அம்மா பேர்ல தொண்டு நிறுவனம் நடத்துறார்.
வாழ்நாள் சாதனையாளர் விருது, பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகள், கலைமாமணி, Dr ராஜ்குமார் விருது, NTR தேசிய விருது, MGR விருது இன்னும் பல விருதுகள் வாங்கினார். கலைக்காக உழைத்தவர்களை கௌரவப்படுத்துவதற்காக 2010ல பாரதிய வித்யா பவன் 'பத்மபூஷன் B சரோஜாதேவி தேசிய விருது' ங்கிற பேர்ல வாழ்நாள் சாதனையாளர் விருதை அறிவிச்சது.
சினிமால 25 வருஷத்துக்கு மேலா முன்னணி கதாநாயகியாக உலா வந்தவர் சரோஜாதேவி. ஆடை, அணிகலன்கள், ஹேர்ஸ்டைல், நடை, உடை பாவனை எல்லாத்துலயும் புதுமை, தனக்கென தனி அபிநயங்கள் இவர் நடிப்பில் இருக்கும். சினிமாவுக்கு கெடச்ச ஒரு பொக்கிஷம்.
யவ்வனமே என் யவ்வனமே அன்போடு காலம் அள்ளி வழங்கும் சீதனமே - AP கோமளா & K ராணி
தங்கமலை ரகசியம் 1957 / TG லிங்கப்பா / கு மா பா
ஆஹாஹா ஆசை தீர ஆடலாமே ஊஞ்சல் மேலே - ஜிக்கி & TMS
செங்கோட்டை சிங்கம் 1958 / KV மகாதேவன் / A மருதகாசி
முத்து பவளம் முக்கனி சக்கரை மூடி வைக்கலாமா - P சுசீலா & TMS
அருணோதயம் 1971 / KV மகாதேவன் / கண்ணதாசன்
நான் பாடிய பாடல் மன்னவன் கேட்டான் படையுடனே வந்தான் - P சுசீலா & PB ஸ்ரீனிவாஸ்
வாழ்க்கை வாழ்வதற்கே 1964 / விஸ்வநாதன் & ராமமூர்த்தி / கண்ணதாசன்
நான் பார்த்ததில் அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகியென்பேன் - P சுசீலா & TMS
அன்பே வா 1966 / MS விஸ்வநாதன் / வாலி

Last edited by heezulia on Sun Jan 09, 2022 1:27 pm; edited 1 time in total
heezulia- வி.ஐ.பி
- பதிவுகள் : 2692
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203
heezulia likes this post
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|