புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10 
15 Posts - 68%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10 
4 Posts - 18%
kavithasankar
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10 
1 Post - 5%
Barushree
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10 
69 Posts - 80%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10 
2 Posts - 2%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10 
2 Posts - 2%
Shivanya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10 
1 Post - 1%
Barushree
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 20 of 60 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 40 ... 60  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6023
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 13, 2021 12:14 pm

First topic message reminder :

13.12.2021

நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]

நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல  நடிச்சார்.

அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.

லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார். 

தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS 

ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS 

சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன் 

பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6023
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Mar 23, 2022 9:49 pm

23.03.2022

நடிகை பேபி அஞ்சு பிறந்த நாள் [1977]

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்னு நூறு படங்களுக்கு மேலா நடிச்சிருக்கார். குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தவர். மறக்க முடியாத குழந்தை நட்சத்திரங்கள்ல இவரும் ஒருத்தர். பேபி அஞ்சுன்னு 1979ல  உதிரிப்பூக்கள் படத்ல  குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பிச்சார். அப்புறமா ஹீரோயினா நடிச்சார். முதல் படம் 1990ல கேளடி கண்மணி. கல்யாணத்துக்கப்புறம் சின்ன சின்ன ரோல்ல நடிச்சார். 

நடிக்கும்போது சினிமா கால்ஷீட்டைல்லாம் அவங்க அம்மாவும், பாட்டியும் பாத்துக்கிட்டாங்க. நிறைய TV சீரியல்கள்ல நடிச்சார். இப்பவும் நடிக்கிறார். உதிரிப்பூக்கள் படத்தின் டைரக்ட்டர் மகேந்திரன் தன்னோட மானசீக குரூனு அஞ்சு  சொல்லியிருக்கார். இந்த படத்ல நடிக்கும்போது அஞ்சுவுக்கு ரெண்ட்ற வயசு. நடிக்கும்போது பெரும்பாலும் அவர் என்ன செஞ்சாரோ அதையே ஷூட் செஞ்சாங்களாம். இதுவும் அஞ்சு ஒரு பேட்டீல சொன்னது. 

தமிழ்லயும், மலையாளத்திலயும் 30 படங்களுக்கும் மேலா குட்டி பாப்பாவா நடிச்சார். சிறந்த நடிகைக்கான கேரளா மாநில விருது வாங்கினார். 

கன்னட நடிகர் டைகர் ப்ரபாகரை கல்யாணம் செஞ்சு டைவோர்ஸ் ஆச்சு. அவர் இறந்த பிறகு OAK சுந்தரை கண்ணாலம் கட்டிக்கினார். 

சின்ன கண்ணே சித்திர கண்ணே கேளம்மா

பொல்லாதவன் 1980 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்

சின்ன சின்ன கண்கள் ரெண்டு என்னென்னவோ எண்ணம் கொண்டு
அழகிய கண்ணே 1982 / இளையராஜா / வாலி 

ஒத்து ஒத்து இப்புடொத்து இது தப்பு தப்பு ரொம்ப தப்பு

அக்னிப் பார்வை 1992 / இளையராஜா / புலமைப்பித்தன்

இதழ் இனிக்க இசைக்கும் இளம் பூக்களே

அக்னி பார்வை 1992 / இளையராஜா / புலமைப்பித்தன்

செம்பட்டுப்பூவே வெண்மொட்டுத்தேரே ஸ்ரீரங்க காவிரியே
புருஷ லட்சணம் 1993 / தேவா / காளிதாசன்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6023
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Mar 23, 2022 11:22 pm

23.03.2022

பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் பிறந்த நாள் [1979]

ப்ரபல பின்னணி பாடகர் KJ ஜேசுதாஸ் அவர்களின் மகன். விஜய் யேசுதாஸ் ரெண்டு தமிழ் படங்கள்ல நடிச்சிருக்கார், மாரி [2015] & படைவீரன் [2018]. 1000 படங்களுக்கும் மேல் பாடியிருக்கார். தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்கள்லயும், ஒரு சில கன்னடம், ஹிந்தி  படங்கள்லயும்  பாடினார். 

முறையா கர்னாடக சங்கீதம் கத்துக்கிட்டார். பிரபலமானது யுவன் சங்கர் ராஜா ம்யூஸிக்ல பாடிய பாட்டுக்கள். 

விருதுகள்
எல்லாமே மலையாள பாட்டுக்களுக்குத்தான் வாங்கினார். 

கேரளா மாநில விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், சர்வதேச இந்திய சினிமா அகாடெமி விருதுகள் [IIFA], நந்தி விருது, SIIMA விருதுகள், ஏசியாவிஷன், ஏசியாநெட், வனிதா, எடிசன் விருதுகள், இன்னும் சில விருதுகளும் வாங்கியிருக்கார்.  

தாவணி போட்ட தீபாவளி வந்தது ஏவ்வீட்டுக்கு

சண்டக்கோழி 2005 / யுவன் சங்கர் ராஜா / யுகபாரதி

எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே

ஜூலி கணபதி 2003 / RP பட்நாயக் / பழனிபாரதி

விஜய் யேசுதாஸ் நடிச்ச படைவீரன்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 24, 2022 3:31 am

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 20 Divorce-rumours-seems-to-be-unstoppable-21
-

விஜய் யேசுதாஸ்


-
சனவரி 21, 2007 அன்று தமது நீண்டநாள் நண்பர்
தர்சனாவை திருவனந்தபுரத்தில் திருமணம் செய்தார்.
இருவருக்கும் அம்மெயா என்ற மகள் உள்ளனர்.

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6023
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Mar 25, 2022 7:00 pm

25.03.2022

24.03.2022 - பழம்பெரும் பின்னணி பாடகர் TM சௌந்தரராஜன் அவர்கள் பிறந்த நாள் [1922 - 2013]

ஒரிஜினல் பேரு தொகுளுவ மீனாட்சி அய்யங்கார் சௌந்தரராஜன்.

40 வருஷமா சினிமால பாடினார். நிறைய பக்தி பாட்டுக்களையும் பாடினார். சௌராஷ்ட்ரா குடும்பத்ல பிறந்தார். முறையா இசை பயிற்சி செஞ்சார். பல வருஷங்களா கச்சேரிகள்ல பாடினார். கர்னாடக சங்கீத முதல் கச்சேரி 1945ல மதுரைல நடந்துச்சு. மேடை கச்சேரிகள்ல, அப்போதைய சூப்பர்ஸ்டார்  தியாகராஜ பாகவதர் பாடின மாதிரி பாடினார். 

அதுக்கப்புறமா 1950ல கிருஷ்ண விஜயம் படத்ல "ராதே நீ என்னை விட்டு போகாதேடி"னு பாட ஆரம்பிச்சார். இந்த முதல் படத்திலியே 3 பாட்டு பாடிட்டார். 

1951ல தேவகி படத்தில ஒரு பாட்டுக்கு பாடி  நடிச்சார். இதே மாதிரி சில படங்கள்ல கெஸ்ட் ரோல்ல நடிச்சார். அப்புறமா பட்டினத்தார், அருணகிரிநாதர், கல்லும் கனியாகும், கவிராஜ காளமேகம் படங்கள்ல முக்கிய ரோல்லயும், ஹீரோவாவும் நடிச்சார். கல்லும் கனியாகும் படத்தை AL ராகவன் கூட சேந்து தயாரிச்சார். TMS ம்யூஸிக் போட்ட ஒரே படம் பலப்பரீட்சை [1977]. 

பழம்பெரும் நடிகர்கள் உட்பட ஏகப்பட்ட முன்னணி நடிகர்களுக்கு பின்னணி பாடினார். வீரம், காதல், துள்ளல், சோகம், தத்துவம், நையாண்டி, க்ராமிய மணம் எதுவானாலும், தன் குரலால ஜனங்களை காந்தம் போல கவர்ந்தவர். 10000 பாட்டுக்கும் மேலா, 3000க்கும் மேலான படங்கள்ல பாடினார். 2010ல கோவைல நடந்த உலக தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக உருவாக்கப்பட்ட "செம்மொழியான தமிழ் மொழியாம்" பாட்டை பாடியவங்கள்ல இவரும் ஒருத்தர். 1955 - 1985 வரையிலான காலத்தின் முடி சூடா மன்னனாக இருந்தவர். 

ஆரம்பத்ல ம்யூஸிக் டைரக்ட்டர்களுக்கு இவரை பாட வைக்க மறுத்தாங்க. அவர் பாடினா மூக்கால பாடின மாதிரி இருந்துச்சாம். சென்ட்ரல் ஸ்டூடியோஸின்  டைரக்ட்டர் சுந்தர்ராவ் நட்கர்னி TMS மேல் நம்பிக்கை வச்சு ம்யூஸிக் டைரக்ட்டர் SM சுப்பையா நாயுடு இடம் இன்ட்ரோ செஞ்சு வச்சார். SMS தான் 1946ல கிருஷ்ண விஜயம் படத்ல 3 பாட்டு பாட வச்சார். ஆனா படம் என்னவோ 1950லதான் ரிலீஸ் ஆச்சு. 

TMS ஐ KV மகாதேவன் AVM நிறுவனம் புது பாடகர்களை தேடியதால அங்க சான்ஸ் கேக்க சொன்னார். அதனால 1955ல செல்லப்பிள்ளை படத்ல R சுதர்சனம் ம்யூஸிக்ல 6 பாட்டு பாடினார். இப்டியே தொடர்ந்து படங்கள்ல பாடிட்டே இருந்தார். 

MGR தனக்காக தொடர்ந்து TMS ஐ பாடச்சொன்னது, அவர் சிவாஜிக்காக கூண்டுக்கிளி படத்ல பாடிய "கொஞ்சும் கிளையான பெண்ணை" பாடியதை கேட்டு. 1955ல இருந்து சிவாஜி கணேசன் TMS ஐ தனக்காக தொடர்ந்து பாடச்சொன்னார். 

1957ல TMS மலேசியால முதல் தடவையா இசைக்கச்சேரில பாடினார். பல வெளிநாடுகள்லயும் 2007 வரை கச்சேரிகள்ல பாடினார். அதுக்கு பின்னால உடல்நிலை காரணமா மேடைல பாட்றதை கொறச்சார். 

TMS ம்யூஸிக் போட்ட ஒரே படம் பலப்பரீட்சை [1977]. சுசீமா கூட ஒரு பாட்டும், தனியா ஒரு சோக பாட்டும் பாடினார். 

ஆனந்தம் விளையாடும் வீடு நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு

சந்திப்பு 1983 / MS விஸ்வநாதன் / வாலி

பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா

ஆனந்த ஜோதி 1963 / விஸ்வநாதன் & ராமமூர்த்தி / கண்ணதாசன்

செம்மொழியான தமிழ் மொழியாம்


பேபி பேபி ஓ மை பேபி குட்டிக்கதை சொல்லவா கண்ணே ஆஷா

பந்தம் 1985 / சங்கர் கணேஷ் / வாலி

நான் அறிந்த மட்டில் இந்த நாட்டில் உள்ள பைத்தியங்கள் கோடி

சினிமா பைத்தியம் 1975 / சங்கர் கணேஷ் / கண்ணதாசன்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6023
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Mar 25, 2022 7:15 pm

25.03.2022

24.03.2022 - பழம்பெரும் நடிகர் PV நரசிம்ம பாரதி அவர்கள் பிறந்த நாள் [1924 - 1978]

TM சௌந்தரராஜன் மாதிரி இவரும் சௌராஷ்ட்ரா குடும்பத்ல பிறந்தவர். பாரதி பிறந்தது ஒரு மணி நேரத்துக்கப்புறம் பக்கத்து வீட்ல பிறந்தவர்தான் TMS. பால்ய நண்பர்கள், இல்லியா? 

பாரதிக்கு முதல் படம் பக்த மீரா [1945]. 50க்கும் மேற்பட்ட படங்கள்ல நடிச்சார்.  தான் நடிச்ச படங்கள்ல TMS பின்னணி பாட SM சுப்பையா நாயுடுக்கிட்ட  ரெகம்மெண்ட் செஞ்சது நரசிம்ம பாரதிதான். அமெரிக்க டைரக்ட்டர் எல்லிஸ்
R டங்கனுக்கு பிடிச்ச நடிகர். ஒரு கட்டத்தில NT ராமாராவுக்கே நடிப்புல போட்டியாக இருந்தார். 

இவருக்கு சின்ன வயசிலேயே நடிக்கிற திறமை இருந்துச்சு. சௌராஷ்ட்ரா சபைல சேந்து அவங்க நடத்திய நாடகங்கள்ல நடிச்சார். அப்புறமா அந்த காலத்து கலைஞர்கள் மாதிரி வேற வேற நாடக கம்பெனில சேந்து மலாயா, சிங்கப்பூர் போயி நடிச்சார். இந்தியா திரும்பி வந்து நடிச்ச படம்தான் பக்த மீரா, சாது வேஷத்தில். ஜூப்பிட்டர் பிக்ச்சர்ஸ் ASA சாமி பாரதியை தன் படங்கள்ல  நடிக்க வச்சார். ராமன், கிருஷ்ணன், நாரதர் வேஷங்கள்ல நடிச்சார். 

பாய்ஸ் கம்பெனி நாடகங்கள்ல நடிச்சப்போ, அந்த ஊர் ஜமீன்தார் 12 வயசு நரசிம்மனின் அழகை பார்த்து, அவரை சிறுமியாக நாடகங்கள்ல நடிக்க வச்சார். பிறகு சரஸ்வதி வேஷத்திலகூட நடிச்சார். சரஸ்வதியாக நடிச்ச நரசிம்மனின் திறமையை பார்த்த அந்த ஊர் தனவந்தர்கள், மேடையிலே பாரதினு பட்டம் கொடுத்தாங்க. அதனால நரசிம்ம பாரதி ஆயிட்டார். 15 வயசில ஸ்த்ரீ பார்ட் நடிகர்னு பேரெடுத்தார். எகிப்து நடனம், குறத்தி நடனம்லாம் ஆடி நடிச்சார். ரசிகர்கள் ரசிச்சாங்க. 

இதை பாத்த புளியம்பட்டி ஜமீன்தார், நாடக சபையை குத்தகைக்கு எடுத்து, ஆறு மாச கலைப்பயணமாக மலேசியாவுக்கு அனுப்பினார். பாமா விஜயம் நாடகத்தை 100 நாள் நடத்தினார். இந்த நாடகத்தில பாரதி பாமாவாக பெண் குரல்ல பேசி, பாடி, ஆடி நடிச்சார். நாடகம் முடிஞ்சதும், ரசிகர்கள் மேடை ஏறி வந்து பெண் வேஷத்தில் இருந்த பாரதிக்கு மாலைகள் போட்டு பாராட்டினாங்க. 

நரசிம்மன் திடீர்னு காணாம போனார். விசாரிச்சுதுல, ஊமை படம் ஓடிட்டு இருந்த தியேட்டர்ல உக்காந்து, [அப்போல்லாம் பேசாத படங்கள்தானே] காட்சிகளை வர்ணிச்சுட்டு இருந்தார். அதாங்க லைவ் ரிலே. நாடகங்கள்ல நடிக்கிற நேரம் போக, மீதி நேரங்கள்ல இதத்தான் செஞ்சார். சும்மா இல்லீங்க, காட்சிகளுக்கு வர்ணனைகளை சொல்லி  ரெண்டணா சம்பாதிச்சார். 

கலைவாணர் NS கிருஷ்ணன் நடத்திட்டு இருந்த எதிர்பாராத முத்தம் நாடகம் படமாச்சு. 1950ல பொன்முடி படம். TR சுந்தரம் தயாரிச்சு, எல்லிஸ் டங்கன் டைரக்ட்டின படம். எனக்கு அழகான ஹீரோ வேணும்னு சொன்னார் டங்கன். சிவாஜி, MGR, நரசிம்ம பாரதி உள்ளிட்ட 10க்கும் அதிகமான நடிகர்களை க்யூல நிக்க வச்சார் சுந்தரம். ஒவ்வொருத்தரயா பாத்த டங்கன் பாரதி முன்னால வந்து நின்னார். கேள்வி கேட்டார். 

டங்கன் : யார் நீ 
பாரதி : நான் ஒரு சிங்கம் [கம்பீரமா இங்கிலீஷ்லியே சொன்னார்]
டங்கன் : சிங்கத்தால லவ் டயலாக் பேச முடியுமா? 
பாரதி : அதெல்லாம் பேசும்போது நா ஜோடியை பிரியாத gold மான். 

அவ்ளோதான் டங்கன் முடிவு செஞ்சுட்டார். பொன்முடி படத்துக்கு ஹீரோ நரசிம்ம பாரதீன்னு. 

இன்னும் இவரை பற்றி எழுத நிறைய இருக்கு. 

நீலவானம் நிலவும்போல ஞானமீதில் இணைந்து வாழ்வோம்

பொன்முடி 1950 / G ராமநாதன் / A மருதகாசி

வாழிய செந்தமிழ் தாயே - பாடியவர் KV மகாதேவன்

மதனமோகினி 1953 / KV மகாதேவன்

இனிதான பேச்சிலே இரு கண்ணின் வீச்சிலே இனி என் நெஞ்சம் மாறுமோ

குடும்ப விளக்கு 1956 / TR பாப்பா / கம்பதாசன்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6023
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Mar 25, 2022 7:27 pm

25.03.2022

24.03.2022 - பழம்பெரும் நடிகை ஷீலா அவர்கள் பிறந்த நாள் [1945]

நெஜ பேர் க்ளாரா ஆப்ரஹாம். சினிமாவுக்காக ஷீலா. மலையாள நடிகை & டைரக்ட்டர். பிரேம் நசீர் கூட நிறைய படங்கள்ல நடிச்சிருக்கார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்னு 475க்கும் அதிகமான படங்கள்ல நடிச்சார். செம்மீன் புகழ் ஷீலா. இவர் நடிச்ச செம்மீன் மலையாள படம் ஓஹோன்னு ஓடியதால அவருக்கு இந்த பேர். யார்ட்டயாச்சும் சும்மா ஷீலானு சொல்லி பாருங்க. ஊஹூம், தெரியாதூம்பாங்க. செம்மீன் ஷீலா னு சொல்லுங்க, அவரா, நல்லா தெரியுமே, நல்ல நடிகைன்னு  சொல்வாங்க.  

நடிகர் ரவிச்சந்திரன் [காதலிக்க நேரமில்லை] ஷீலாவின் ரெண்டாவது கணவர். லவ்வி கண்ணாலம் கட்டிக்கினாங்க. இவங்க ரெண்டு பேரும் சேந்து நிறைய படங்கள்ல நடிச்சாங்க. 

நடிகர் SS ராஜேந்திரன் நடித்திய நாடக மன்றத்தில் நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். MGR அவர் 1962ல நடிச்ச பாசம் படத்ல ஷீலாதேவி பேர்ல  ஷீலாவை நடிக்க வச்சார். ஷீலாவுக்கு தமிழ்ல முதல் படம். அப்புறமா தன் பேரை அவரே ஷீலானு மாத்திக்கிட்டார். ஒரு சில மலையாள படங்களுக்கு, கதை, திரைக்கதை எழுதி டைரக்ட்டினார். மலையாள குறும்படமும் எடுத்தார். 

2018ல கேரளால வெள்ள நிவாரண நிதிக்கு ஷீலா அஞ்சு லட்சம் ரூவா  கொடுத்தார். மலையாள TV சீரியல்கள்ல நடிச்சார். நிகழ்ச்சிகள்ல  கலந்துகிட்டார். போட்டி நிகழ்ச்சிகள்ல ஜட்ஜா இருந்தார்.  

விருதுகள்
எல்லாமே மலையாள படங்களுக்கு கெடச்ச விருதுகள். 
தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், ஏசியாநெட் விருது, கேரளா மாநில விருதுகள், வாழ்நாள் சாதனையாளர் விருதுகள், இன்னும் சில விருதுகளும் வாங்கினார். 

சந்தோஷமே நெஞ்சில் சங்கீதமே தாயே உன் நிழல் என் சொர்க்கமே

பாலக்காட்டு மாதவன் 2015 / ஸ்ரீகாந்த் தேவா

சரவண சமையல் இது சர்வ யோகினி அறுசுவை தருவாள் அவள் அன்னபூரணி

சீடன் 2011 / தீனா / பா விஜய்

ஆடவரெல்லாம் ஆட வரலாம் காதல் உலகை காணவரலாம்

கருப்பு பணம் 1964 / மெல்லிசை மன்னர்கள் / கண்ணதாசன்

வெள்ளை கமலத்திலே அவள் வீற்றிருப்பாள் புகழேற்றிருப்பாள்

கௌரி கல்யாணம் 1966 / MS விஸ்வநாதன் / பாரதியார்

அழகிலே கனிரசம் இதழிலே மதுரசம் ஆட்டம் என்னென்ன

பெண்ணை வாழ விடுங்கள் 1969 / SM சுப்பையா நாயுடு / கண்ணதாசன்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6023
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Mar 26, 2022 4:47 pm

26.03.2022

நடிகர் ப்ரகாஷ்ராஜ் பிறந்த நாள் [1965]

கர்நாடகால பிறந்தவர். நடிகர், டைரக்ட்டர், தயாரிப்பாளர், TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி படங்கள்ல நடிச்சிருக்கார். 

கர்னாடக மாநிலத்தில இன்னும் இவர் பேர் பிரகாஷ் ராய். இயக்குனர் சிகரம் K பாலசந்தரின்  ஆலோசனைப்படி, இவரோட குடும்ப பேர் ராய் என்பதை ராஜ் என்று மாத்தினார். 

ப்ரகாஷ் நடிச்ச முதல் தமிழ் படம் டூயட். நாடகங்கள்ல நடிச்சு சினிமாவுக்கு வந்தவங்கள்ல  இவரும் ஒருத்தர். பெங்களூரு கலாக்ஷேத்ரா சேந்து நாடகங்கள்ல நடிச்சார். 2000 தெரு நாடக நிகழ்ச்சிகளை நடத்தினார். நாடகங்கள்ல நடிச்சு ப்ரபலமானதால, கன்னட TV சீரியல்கள்ல நடிச்சு, அதுக்கப்புறமா கன்னட சினிமால நடிக்க ஆரம்பிச்சார். ஹீரோ, வில்லன், குணசித்திரம், கௌரவ பாத்திரம்  என்ற ரோல்கள்ல நடிச்சார். அதிகமா நடிச்சது வில்லனா. 

1997ல இவர் நடிச்ச இருவர் படம். கலைஞர் கருணாநிதியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கேரக்ட்டர்ல நடிச்சார் ப்ரகாஷ்ராஜ். தமிழை தாய்மொழியாக கொண்டவங்களே பேச சிரமப்பட்ற மாதிரியான வசனங்கள். அதை ஈஸியா பேசி நடிச்சார் ப்ரகாஷ்ராஜ். இவர் நடிச்ச, தயாரிச்சு படங்கள்ல  நடிச்சும் இருக்கார். 

தெலுங்கானால ஒரு ஊரையும், கர்நாடகால ஒரு ஊரையும் தத்தெடுத்தார். 

விருதுகள் :
தமிழ், தெலுங்கு படங்களுக்கு
அப்சரா சினிமா & TV தயாரிப்பாளர்கள் கில்ட் விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், சர்வதேச இந்திய சினிமா அகாடமி விருது, சர்வதேச தமிழ் சினிமா விருது, நந்தி விருதுகள், சந்தோஷம் விருது,தேசிய விருதுகள், தமிழ்நாடு மாநில விருதுகள், விஜய் விருதுகள். Zee Cine விருது. SIIMA விருதுகள் 

ஆசை 1995


தாவித் தாவி போகும் மேகம் ஒளியும் நேரம் காயப்பட்ட நெஞ்சில் - இளையராஜா 

தோணி 2012 - டைரக் ஷன், திரைக்கதை, தயாரிப்பு, நடிப்பு - தமிழ்நாடு மாநில விருது கெடச்சுது.  
இளையராஜா / நா முத்துக்குமார் 

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு அய்யா ஒரே ஒரு அய்யாவுக்கு 

அபியும் நானும் 2008 - தயாரிப்பு & நடிப்பு - தமிழ்நாடு மாநில  விருது, சிறந்த படத்துக்கான தமிழ்நாடு மாநில ரெண்டாவது பரிசு, விஜய் விருது, ஃபிலிம்ஃபேர் விருது கெடச்ச படம். 
வித்யாசாகர் / வைரமுத்து 

ஈரமாய் ஈரமாய் பூமழை பூங்காற்று தூரமாய் தூரமாய் மூங்கிலின் ஓர் பாட்டு

உன் சமையலறையில் 2014 - தயாரிப்பு, டைரக் ஷன் & நடிப்பு
இளையராஜா / பழனிபாரதி 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6023
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Mar 26, 2022 4:57 pm

26.03.2022

நடிகை மதுபாலா பிறந்த நாள் [1969]

சொந்த பேர் பத்மா மாலினி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். தமிழ்ல நடிச்ச முதல் படம் 1991ல இயக்குனர் சிகரம் K பாலசந்தரின் அழகன். பட்டி தொட்டீலலாம் புது வெள்ளை மழையாக ப்ரபலமானது 1992ல ரோஜா படத்ல. TV சீரியல்கள்ல  நடிச்சார். சில ஹிந்தி TV நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். 

என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்

ஜென்டில்மேன் 1993 / AR ரஹ்மான் / வைரமுத்து

பாட்டு எசப்பாட்டு கேட்டு இத கேட்டு சிறை கதவினை திறந்து கொண்டு

செந்தமிழ் செல்வன் 1994 / MS விஸ்வநாதன் & இளையராஜா / வாலி

துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி வெல்டன் டாடி

அழகன் 1991 / மரகதமணி / புலமைப்பித்தன்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6023
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Mar 28, 2022 6:39 pm

28.03.2022

நடிகை சோனியா அகர்வால் பிறந்த நாள் [1982]

பஞ்சாப்ல பொறந்தார். இவரே தான் துணிச்சலான பொண்ணுன்னும், ஆனா நடிக்கிறது எல்லாமே  சாதுவான பொண்ணு ரோல்னு சொன்னார். இன்னொரு ஊருக்கு கார்ல போகும்போது தனியாவே போவார். ஆனா சினிமால பாத்தா சாந்தமாத்தானே இருக்கார். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகள்ல 40க்கும் மேற்பட்ட  படங்கள்ல நடிச்சார். தமிழ்ல அறிமுகமானது 2003ல காதல் கொண்டேன் படத்ல. இந்த படத்தின் டைரக்ட்டர் செல்வராகவனை [நடிகர் தனுஷின் அண்ணன்] 2006ல கல்யாணம் செஞ்சு 2010ல டைவோர்ஸ் ஆச்சு. கல்யாணத்துக்கப்புறம் நடிக்கல. டைவோர்ஸுக்கப்புறம் நடிக்க ஆரம்பிச்சுட்டார். 

சோனியாவுக்கு ம்யூஸிக் பிடிக்கும். அதனால பாடகியாக நடிக்க இவருக்கு  ஆசை இருக்காம். 

கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன்

மதுர 2004 / வித்யாசாகர் / யுகபாரதி

காதல் என்பது கடவுள் அல்லவா அது கனவு தேசத்தின்

ஒரு கல்லூரியின் கதை 2005 / யுவன் சங்கர் ராஜா / நா முத்துக்குமார்

தையத்தா தையத்தா தையதையத்தா பையத்தா பையத்தா

திருட்டு பயலே 2006 / பரத்வாஜ் / வைரமுத்து

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6023
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Mar 28, 2022 6:47 pm

28.03.2022

பழம்பெரும் நடிகர் சித்தூர் V நாகையா அவர்கள் பிறந்த நாள் [1904 - 1973]

ஆந்த்ராக்காரர். நாடகம், சினிமா நடிகர், டைரக்ட்டர், தயாரிப்பாளர், ம்யூஸிக் டைரக்ட்டர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணி பாடகர். சினிமால இத்தனை வேலையும் செஞ்சார். 

திருமலை திருப்பதி தேவஸ்தானம் கொடுத்த கல்வி உதவி தொகை வச்சு பட்டப்படிப்பு முடிச்சார். கொஞ்ச காலம் அரசாங்க வேலை பாத்தார். அப்புறமா  ஆந்திர பத்திரிக்கை ஆபீஸ்ல  பத்திரிகையாளராக இருந்தார். 1925ல அஸ்ஸாம் மாநிலம் குவாஹத்தியில நடந்த காங்கிரஸ் மாநாட்டில தமிழ், தெலுங்குல  தேசபக்தி பாட்டுக்கள் பாடினார். அதுக்கப்புறம் அலகாபாத் போற சான்ஸ்  கெடச்சுது. அங்க மகாத்மா காந்தி, நேரு இவங்களோட சுதந்திர பேச்சுக்களை கேட்டதால, 1930ல தண்டி யாத்திரைக்கு சுதந்திர போராட்ட வீரராக போனார். 

சித்தூர்ல இருந்த ராம விலாச சபால சேந்து, நாடகங்களை டைரக்ட்டி, நடிச்சார். 

மனைவி இறந்த பிறகு வீட்டை விட்டு வெளியேறி திக்கு திசை தெரியாம  அங்கும் இங்கும் அலஞ்சு, ரமண மகரிஷியின் ஆசிரமத்துக்கு வந்து சேந்தார். ஒரு நாள் சித்தூரிலிருந்து வந்த நாகய்யாவின் தோழர், அவரோட  படத்துக்கு ம்யூஸிக் போட்றதுக்காக நாகையாவை கூப்ட்டார். அவரும் மகரிஷிகிட்ட  உத்தரவு வாங்கிட்டு, நண்பர்கூட போயி, அவர் படத்ததுக்கு  ம்யூஸிக் போட்டு கொடுத்தார். இது நாகய்யாவின் வாழ்க்கையை  புரட்டி போட்டுச்சு. சினிமால  பெரிய ஆளாயிட்டார். தனக்கு புது வாழ்வை கொடுத்தது மகரிஷினு நாகையா சொன்னார். 

தமிழ், தெலுங்கு, ஒரு சில கன்னட படங்கள்லனு 285 படங்கள்ல நடிச்சார். 1938ல ஒரு தெலுங்கு படத்துல நடிச்சு சினிமா வாழ்க்கை ஆரம்பமாச்சு. நடிச்ச முதல் தமிழ் படம் 1941ல அசோக்குமார். 1946ல இவர் நடிச்ச சூப்பர் ஹிட்டான தியாகையா தெலுங்கு படத்தை அப்போதைய மைசூர் மகாராஜாவுக்கு போட்டு காட்டி, அதை பாத்த மகாராஜா வெள்ளித்தட்டுல 101 தங்க காசுகள் வச்சு நாகையாவுக்கு கொடுத்தார். 

தென்னிந்தியால பத்மஸ்ரீ விருது வாங்கிய முதல் நடிகர். சென்னை தி.நகர் பனகல் பார்க் பக்கத்தில இவருக்கு சிலை வச்சிருக்காங்க. 

விருதுகள்
பத்மஸ்ரீ 1965, தேசிய விருது, மாநில விருதுகள் 

விண்ணும் மண்ணும் நிறைந்த உன் கண்ணன் விக்கிரகம் ஒன்றில் அடங்கினானோ

மீரா 1945 / SV வெங்கட்ராமன் / பாபநாசம் சிவன்

என்னாசை பாப்பா சிங்கார பாப்பா சின்னஞ்சிறு தெள்ளமுதே வா

ஏழை படும் பாடு 1950 / SM சுப்பையா நாயுடு / VA கோபாலகிருஷ்ணன்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 20 of 60 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 40 ... 60  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக