புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 5 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 5 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 5 Poll_c10 
21 Posts - 70%
heezulia
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 5 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 5 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 5 Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 5 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 5 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 5 Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 5 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 5 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 5 Poll_c10 
1 Post - 3%
viyasan
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 5 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 5 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 5 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 5 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 5 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 5 Poll_c10 
213 Posts - 42%
heezulia
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 5 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 5 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 5 Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 5 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 5 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 5 Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 5 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 5 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 5 Poll_c10 
21 Posts - 4%
prajai
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 5 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 5 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 5 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 5 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 5 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 5 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 5 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 5 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 5 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 5 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 5 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 5 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 5 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 5 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 5 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 5 Poll_c10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 5 Poll_m10கன்னடச் சிறுவர் கதைகள் (50) - Page 5 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னடச் சிறுவர் கதைகள் (50)


   
   

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 02, 2022 6:50 pm

First topic message reminder :

கன்னடச் சிறுவர் கதைகள் (1)

தூங்கிக் காலத்தைக் கழிக்காதே !

“பிள்ளைங்களா! சீக்கிரம் எழுந்திருங்கள்! எழுந்திருந்து பல்லை விளக்கிச், சாப்பிட்டுவிட்டுச் சீக்கிரம் பள்ளிக்குக் கிளம்புங்க!” எனத் தாய் அதட்டினாள். “சீக்கிரம்! நேற்று லேட்டா போனதுமாதிரி இன்றும் போகக் கூடாது!” என்று துரிதப் படுத்தினாள்!

“சரி! வாங்க கூட்டிட்டுப் போறேன்! பள்ளிக்கு நடந்து போகக் கொஞ்சம் நேரம் ஆகும்! அதுவரை ஒரு கதை சொல்கிறேன்!” என்று தாய் கூறச், “சொல்லுங்க சொல்லுங்க” என்றனர் பிள்ளைகள்.
தாய் கதை சொன்னாள்.

ஒரு காட்டில் சில முயல்கள்! அவைகளுக்குள் ஒரு தலைவன்!

ஒரு நாள் தலைவன் முயல், பிற முயல்களைக் கூட்டியது; ஒரு முயல் மட்டும் வரவில்லை! கூப்பிடப் போன முயலிடம், ‘எனக்குத் தூக்கம் தூக்கமா வருது!என்னைத் தொந்தரவு செய்யாதே! போ!’ என்றது தூங்கும் முயல். “இல்லை! நம் தலைவர் நல்ல விஷயங்களைக் கூறவுள்ளார்! அவர் அனுபவசாலி! நீ இப்படித் தூங்காதே! ” என்றது கூப்பிடப் போன முயல். அதற்கும் தூங்கும் முயல் மசியவில்லை!

முயல் கூட்டத்தில், தலைவன் முயல், “கேளுங்க முயல்களே! மழைக்காலம் வரப்போகுது! காரட்டுகளை எடுத்துச் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்! இந்தக் காலம் பார்த்து நரிகள் நம்மைத் தாக்கும்! பாதுகாப்பாக நாம் வேறு இடம் சென்று தப்பித்துக் கொள்ள வேண்டும்; இங்கு இருக்கக் கூடாது!” என்றது.

தலைவன் முயல் சொன்னது போலவே சில நரிகள் வந்தன! நரிகள், “ அட! ஒரு முயலையும் காணோமே! எல்லாம் போய்விட்டனவே! இன்று நாம் பட்டினிதான்! என்று புலம்பின!
அப்போது, தூங்கிக் கொண்டிருந்த அந்த முயல், “ஹாவ்! … தூக்கம் தூக்கமா வருது!...எங்கே யாரையும் காணலை? ” என்று விழிக்கவே, நரிகள் அதைப் பார்த்துவிட்டன! அவை அத் தூங்குமூஞ்சி முயல் மீது பாய்ந்து கொன்று, தின்றன!

“பிள்ளைகளே! கேட்டீர்களா? இதிலிருந்து என்ன தெரிகிறது? சோம்பல் பட்டுக்கொண்டு , எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கக் கூடாது என்பது புரிகிறதா?” எனத் தாய் கூறவும், பிள்ளைகள், “புரிகிறது! புரிகிறது!என்று உரக்கத் தலையாட்டிக் கூறினர்!
(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் , KooKooTv)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

T.N.Balasubramanian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 23, 2022 11:16 am

கன்னடச் சிறுவர் கதைகள் (26)

மரம் வெட்டியும் ஒரு கோடரியும் !

ஒரு மரம் வெட்டி , மரங்களை வெட்டக், காட்டு வழியே நடந்து போனான்! வழியில், ஒரு ஆற்றுப் பாலத்தைக் கடக்கவேண்டி வந்தது!

அந்த ஆற்றுப் பாலத்தைக் கடக்க,அதன் மீது நடந்த போது, கால் இடறிக் கீழே விழுந்தான்! அதில், அவனது கோடரி ஆற்றுக்குள் விழுந்துவிட்டது!

“ஐயோ ! என் கோடரி! என் கோடரி!” எனக் கத்தினான் அந்த மரம் வெட்டி.
அவனது அலறல் கேட்டு, ஆற்றுக்குள்ளிருந்து ஒரு தேவதை வந்தது! வந்த தேவதை, “மரம் வெட்டுபவரே! என்ன உன் கவலை?” எனக் கேட்டது!

“என் ஒரே கோடரி ஆற்றுக்குள் விழுந்துவிட்டது தாயே!” என்றான் அவன்.
“அப்படியா? நான் எடுத்துத் தருகிறேன்!” என்று நீருள் மூழ்கிச் சற்று நேரத்தில் வெளிவந்த தெய்வம், “இதோ இந்தக் கோடரிதானே? இதை நீயே எடுத்துக்கொள்!” என்று, ஒரு தங்கக் கோடரியைக் கொடுத்தது!

“இல்லை!இல்லை! என் கோடரி இரும்புக் கோடரி! நீங்கள் தருவது தங்கக் கோடரி அல்லவா?” என்று கூறி, அத் தங்கக் கோடரியை வாங்க மறுத்தான் மரம் வெட்டி!

“சரி!” என்று சொல்லி,ம்ீண்டும் நீருக்குள் மூழ்கிய அத் தேவதை,சற்று நேரத்தில், மேலே வந்து, “இதோ! இந்தக் கோடரியை வாங்கிக் கொள்!” என்று ஒரு வெள்ளிக் கோடரியைத் தந்தது!
“இல்லை! இல்லை! நீங்கள் தருவது வெள்ளிக் கோடரி அல்லவா? என் கோடரி இரும்புக் கோடரி!” என்று கூறி, அந்த வெள்ளிக் கோடரியை வாங்க மறுத்தான் மரம் வெட்டி!

“சரி” என்று மீண்டும் மூழ்கிய அத் தெய்வம், அவனது இரும்புக் கோடரியை நீரிலிருந்து எடுத்துவந்து, அவன் கையில் கொடுத்தது!

“ஆம்! இதுதான் என் கோடரி! நன்றி தாயே!” என்று அந்த இரும்புக் கோடரியை வாங்கிக் கொண்டான் மரம் வெட்டி!

மரம் வெட்டியை வெகுவாகப் பாராட்டிய அத் தெய்வம், “மரம் வெட்டியே! உன் நேர்மைக்காக இந்தத் தங்க,வெள்ளிக் கோடரிகளையும் உனக்குப் பரிசாக நான் தருகிறேன்”எனக் கூறி , அவற்றை அவனிடம் கொடுத்தது!

மரம் வெட்டி வாழ்வில் வெளிச்சம் உண்டானது!

நேர்மைக்கு என்றுமே மதிப்பு உண்டு!

(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் –infobells.com)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 23, 2022 8:57 pm

கன்னடச் சிறுவர் கதைகள் (27)

சிறுவனின் அச்சம் !

ஒரு கிராமத்தில், இரு சிறுவர்கள் கிட்டிப்புள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

களைப்படையவே, அருகே ஒரு மரத்தடியில் அமர்ந்தனர்!

ஒரு சிறுவன் மரத்தடியிலிருந்த கல்லில் தலையை வைத்துக் கண்ணயர்ந்தான்! சிறிது நேரம் க்ழித்து எழுந்த அவன் கண்முன்னே ஒரு பூரான் தென்பட்டது! “ஐயோ ! நண்பா! இங்கே பார்! பூரான்!” எனக் கத்தினான்!

“இருக்கட்டுமே! நீ ஏன் அதற்குக் கவலைப் படுகிறாய்? ” என்று அக் கல்லை மேலும் அசைத்தான் அவனின் நண்பன்! மேலும் சில பூரான்கள் கல்லடியிலிருந்து வெளி வந்தன!

“ஐயோ! நண்பா! பூரான்கள்! பூரான்கள்” எனக் கத்தினான் அந்த முதற் பையன்!

“டேய்! உனக்கென்னடா? பூரான்களைக் கண்டு கத்தாதே!” என்றான் இரண்டாம் பையன்!

“ஐயோ ! நான் அந்தக் கல் மீதுதான் தலையை வைத்துத் தூங்கினேன்! என் காதுக்குள் பூரான் போயிருக்குமே?”எனக் கத்தினான் முதற் பையன்!

வீட்டுக்குச் சென்ற முதற் பையன், தன் தாய் தந்தையரிடம் நடந்ததைக் கூறினான்! தன் காதுக்குள் பூரான்கள் இருக்கின்றன என்று பயத்துடன் கூறினான்!

தந்தை அவ்வூர் டாக்டரிடம் காண்பித்தார்! காதினைச் சோதித்து, டாக்டர், “காதுக்குள் ஒன்ரும் இல்லை!” என்று அனுப்பிவிட்டார்!

ஆனால் பையன் மட்டும் , “என் காதுக்குள் பூரான்கள் இருக்கின்றன!” என்று சொல்லி அழுதுகொண்டே இருந்தான்!

தந்தை பல டாக்டர்களிடம் காண்பித்தாகிவிட்டது! ஆனால், ஒன்றும் பலனில்லை! பையன் மட்டும், “என் காதில் பூரான்! என் காதில் பூரான்!”என அழுதுகொண்டே இருந்தான்!

அவ் வூருக்கு ஒரு வயதான வைத்தியர் வந்திருப்பதைக் கேள்விப்பட்டார் தந்தை. அவரிடம் சென்று நடந்ததை எல்லாம் கூறினார் தந்தை.

“ஓ! அதுவா காரணம்?” என்று உண்மையைப் புரிந்துகொண்ட வைத்தியர், “சரி! நாளை பையனை என் வீட்டுக்கு அனுப்பி வையுங்கள்! நான் குணப் படுத்திவிடுகிறேன்!” என்ரு கூறிகூறினர் வைத்தியர்.

வைத்தியர், ஒரு டப்பாவில் சில பூரான்களைப் பிடித்துத் தயாராக வைத்துக்கொண்டார்!
கூறியபடி, தன் வீட்டுக்கு வந்த அந்தப் பையனின் கண்ணைக் கட்டினார் வைத்தியர்! “பையா! உன் காதுக்குல் இருந்த எல்லாப் பூரான்களையும் இந்தத் தீவட்டி மூலம் வெளியே எடுத்துவிடுகிறேன்!”என்று தீவட்டியை அவனருகே காட்டிவிட்டு , “முடிந்தது! உன் கண் கட்டை அவிழ்த்து விடுகிறேன்” என்று சொல்லிக், கட்டை அவிழ்த்துவிட்டு , அவர் வைத்திருந்த டப்பாவைக் காட்டி, “பார்த்தாயா? எல்லாப் பூரான்களையும் காதுக்குள்ளிருந்து வெளியே எடுத்துவிட்டேன்!”என்று டப்பாவைக் காட்டினார்!

“அப்பாடா! இப்போதான் நான் குணமானேன்! இனித் தொல்லையே இல்லை!”என்று மகிழ்ந்தான் சிறுவன்!

வீண் பயம் நமக்கு ஆபத்தாகப் பல நேரங்களில் அமைந்துவிடுகிறது!

(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் – KooKooTv)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jan 24, 2022 10:27 am

கன்னடச் சிறுவர் கதைகள் (28)

பொம்மைக்காரன்!

ஓர் ஊரில் சிறந்த பொம்மை செய்பவன் இருந்தான். தத்ரூபமாகப் பொம்மை செய்வன் அவன்!
ஒரு நாள் ஒரு கனவு கண்டான் அவன்!

கனவில், எம கிங்கரர்கள் அவனை எம லோகத்திற்கு இழுத்துச் செல்ல வருவதாகக் கனவு கண்டான்!
பயந்துபோன அவன் “எம கிங்கரர்கள் வந்தால் அவர்கள் எம்மாந்து செல்ல வேண்டும்!” என நினைத்துத் தனது உருவம் போன்றே ஒன்பது பொம்மைகளைச் செய்து , அதன் நடுவே தானும் பொம்மை வண்ணத்தில் நின்றுகொண்டான்!

எமகிங்கரர்கள் அடுத்த நாள் அவனை எம லோகத்திற்கு இழுத்துச் செல்ல வந்தனர்!
வந்து பார்த்தால், மொத்தம் பத்துப் பொம்மைகள் ஆட்கள் உருவத்தில் நின்றுகொண்டிருந்தன!

மலைத்துத் திரும்பிச் சென்றுவிட்டனர்!

“எம தர்மரே! அங்கே பொம்மைக்கார வர்மா ஒருவனில்லை! மொத்தம் 10 வர்மாக்களைப் பார்த்தோம்! யாரை நாங்கள் இழுத்து வருவது? ” எனக் கேட்டனர். எம தர்மர் ,
“கிங்கரர்களே! பத்து வர்மா உருவங்களில் ஒவ்வொன்றாகக் குறை கூறுங்கள்! உண்மை வர்மா வெளியே தானாக வந்து விடுவான்!” எனக் கூறி அனுப்பினான்.

மீண்டும் பொம்மைக்கார வர்மா வீட்டுக்கு வந்தனர் எம கிங்கரர்கள்.

வரிசையாக நின்ற 10 வர்மா உருவங்களருகே வந்து , ஒவ்வொரு பொம்மையாகப் பார்த்து , “இது என்ன உருவம்? தலை சரியாக அமையவில்லையே! இதோ இந்தப் பொம்மையைப் பார்! கையா இது?சரியாக வரவே இல்லை!” என்று கூறலாயினர்!

இதைப் பார்த்துப் பொறுக்க முடியாத அந்த உண்மையான பொம்மைக்கார வர்மா, “யேய்! என்ன நினைத்தீர்கள்? யார் சரியாக இல்லை? என்ன தெரியும் உங்களுக்கு?” என வாய் திறந்து பேசலானான்!


எம கிங்கரர்கள் கண்டுபிடித்துவிட்டனர்! “இவந்தான் உண்மையான பொம்மைக்கார வர்மா!” என்றுகூறி, அவனை இழுத்துச் சென்றுவிட்டனர்!
அகங்காரம் ஆபத்து!

(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் –infobells.com)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jan 24, 2022 6:35 pm

கன்னடச் சிறுவர் கதைகள் (29)

எலிகளும் யானைகளும்!

ஒரு காட்டில் பல எலிகள் கூட்டமாக ஓரிடத்தில் வாழ்ந்தன! தரையில் குழிகள் பறித்து நிம்மதியாக வாழ்ந்தன! அக் குழிகளில் தமக்கு வேண்டிய உணவுகளையும் சேகரித்து வைத்துக்கொண்டன!

ஒரு நாள் அந்த எலிகள், சற்ருத் தொலைவில் ஒரு யானைக் கூட்டம் வருவதைப் பார்த்டன! “ஐயோ! யானைகள் நம்மை அழித்துவிடுமே!” என்று நடுங்கி, திக்குக்கு ஒன்றாக ஓடலாயின!

ஆனால் சிறு எலிகளால் தப்பிக்க இயலவில்லை! பல, அந்த யானைகளின் காலடியில் மிதிபட்டுச் செத்தன!

“இப்படி யானைகளால் சாகிறோமே? இதற்கு உபாயம் காண வேண்டும்” என்று டமக்குள் எலிகள் பேசின.
“நாம் யானைத் தலைவனைச் சந்தித்துக் கூறுவோமே!’’ என முடிவெடுத்தன!
இரு எலிகள் யானைத் தலைவனைச் சந்திக்கச் சென்றன!

“சரி! எப்படி யானைத் தலைவனின் கவனத்தை நம் பக்கம் இழுப்பது? ” என இரு எலிகளும் யோசித்தன.

“அதோ பார்! ஒரு சங்கு உள்ளது! அதை நாம் ஊதுவோம்! அப்போது யானைத் தலைவன் வருவானல்லவா?” என்று பேசி, அந்தச் சங்கை எடுத்து ஊதின!

“என்னது? ஏன் சங்கு ஊதுகிறீர்கள்? என்ன காரணம்?” என்று யானைத் தலைவன் வந்து கேட்டான்.

இரு எலிகளும் நடந்ததை விவரமாகக் கூறின.

“அடப் பாவமே! எங்களால் உங்கள் உயிருக்கு ஆபத்தா?” எங்களுக்க்த் தெரியாதே!” என்று வருந்திய யானைத் தலைவன் , ஒரு உபாயத்தைக் கூறினான்!

“நாங்கள் எங்கள் காலில் சலங்கையைக் கட்டிக் கொள்கிறோம்! சலங்கை ஒலி கேட்டதும், நீங்கள் பாதுகாப்பான இடத்துக்குப் போய்விடுங்கள்!” என்று யோசனை கூறினான் யானைத் தலைவன்.

“நல்லது! நல்லது! தப்பித்தோம்!” என்று யானைத் தலைவனை வெகுவாக எலிகள் பாராட்டி விடை பெற்றன.

சிக்கல் வந்தால் இரு தரப்பும் பேசித் தீர்க்க முடியும்!

(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் – KooKooTv)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jan 25, 2022 10:21 am

கன்னடச் சிறுவர் கதைகள் (30)

முயல் தின்ற தீனி!

ஒரு கிராமத்தின் ஓரத்தில் ,முயல் ஒன்று தனி வீடு கட்டி வாழ்ந்து வந்தது! வீட்டில் நன்றாக உண்டு, இன்பமாக இருந்தது!

ஒரு நாள் நண்பர்கள் அதனைக் காண வந்தனர். “நாம் எப்போதும் சாப்பிட்டதையே சாப்பிடுகிறோமே! வேறு ஏதாவது புதிதாக இன்று உண்போமே!” என்றது ஒரு முயல்.
“ஆமாம்! வாருங்கள் அடுத்த தோட்டத்திற்குப் போவோம்!” என்று அவை எல்லாம், அடுத்த தோட்டத்துக்குச் சென்றன! “ஆகா! தானியங்களும் காய்கறிகளும் பிரமாதம்! இவற்றை உண்போம்!” என்று அவற்றை ருசித்து உண்ணலாயின!

“ஆ! இதோ தோட்டக்காரன் வருகிறான்! வாங்க ஓடிடலாம்!”என்ற மற்ற முயல்கள் ஓடிவிட்டன!

ஆனால் வீடு கட்டி வாழ்ந்த நம் முயல் மட்டும் ஓடாது, “எங்கே? தோட்டக்காரன் வருவது தெரியலையே?” என்று பேசிவிட்டு , நிதானமாகச் சாப்பிடுவதைத் தொடர்ந்தது!

அது மெய் மறந்து சாப்பிட்ட வேளையில் தோட்டக்காரன் கையில் கம்புடன் நெருங்கவே, ஓட்டம் பிடித்தது முயல்!

முயல் ஓட, தோட்டக்காரன் விரட்ட இப்படியாகப் போய், ஒரு முள் குவியலைத் தாண்டியது முயல்!தோட்டக்காரனால் முள் குவியலைத் தாண்ட முடியவில்லை! முள் குவியலைத் தாண்டிய போது, முயலுக்குக் காலில் முள் குத்தியது! ஆனால் அதையும் தாங்கிகொண்டு முயல் ஓடியது!

அப்போது, ஒரு நரி அந்த முயலைப் பார்த்து, அதனை விரட்டியது!

இதனைக் கண்ட , தப்பித்த மற்ற முயல்கள் , “வேகமா வா! பினால் நரி!”
எனக் கூவின வீட்டுக்குள் இருந்த படியே!

ஒரு வழியாக வீட்டு வாசலை அடைந்த நம் முயல், வீட்டுகுள் நுழைய முடியவில்லை! அண்ட அளவுக்கு பெருத்துவிட்டது!

அதற்குள் விரட்டி வந்த நரி, முயலின் வாலைப் பிடித்துக் கடித்துத் துண்டாக்கியது! வால் இழந்த முயல் , ஒரு வழியாக வீட்டுக்குள்ளே இழுக்கப்பட்டது பிற முயல்களால்! முயல் தப்பித்தது!

உணவை எப்போதும் அளவாக உண்ண வேண்டும்!
(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் – KooKooTv)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jan 26, 2022 10:56 am

கன்னடச் சிறுவர் கதைகள் (31)

சிங்கமும் பன்றியும்!

ஒரு காட்டில் ‘காட்டு ராஜா’ எனப்படும் சிங்கம் வழ்ந்தது!

ஒரு நாள் ஒரு குளத்தருகே நீர் குடிக்கச் சென்றது சிங்கம்.

பார்த்தால், குளத்தின் எதிர்த் திசையில் ஒரு பன்றி நீர் குடிக்க முன்பே வந்திருந்தது!
சிங்கம், “ஏய்! நான் காட்டு ராஜா! நான் முதலில் நீர் குடித்த பிறகுதான் நீ குடிக்க வேண்டும்; நான் குடிக்கும் வரை நீ காத்திருக்க வேண்டும்!” என்றது பன்றியைப் பார்த்து!
பன்றி, “அதெல்லாம் முடியாது! நான் முதலில் குடிப்பேன்! உன்னால் முடிந்தால் தடுத்துப் பார்! ”என்றது!

பன்றி, “சரி! இருவரும் சண்டை போடுவோம்! யார் ஜெயிக்கிறாரோ அவரே முதலில் நீர் குடிக்க வேண்டும்!” என்றது!

அப்போது, சிங்கம், “ஏய்!நாம் இருவரும் சண்டை போட்டு , ஒருவர் செத்தால், அவ் வுணவைத் தின்பதற்கு, இதோ இந்த மரத்தின் உச்சியில் இரு கழுகுகள் காத்துக்கொண்டிருக்கின்றன பார்! எதற்கு? ஏன் ஒருவர் சாக வேண்டும்? நாமே சமாதானமாகப் போகலாம் அல்லவா?” என்றது!

“சரி! நீ சொல்வது சரிதான்! சண்டை வேண்டாம்!” என்றது பன்றி!

சிங்கம், “நீதான் முதலில் குளத்துக்கு வந்தாய்! ஆகவே நீயே முதலில் நீர் குடி! அதன்பின் நான் குடிக்கிறேன்!”என்றது!

அதன் படியே இருவரும் நீர் குடித்து அவரவர் வழியில் சென்றன!

மரத்திலிருந்து பார்த்த இரண்டு கழுகுகளும் , “சரி! வா வேறு இடம் பார்ப்போம்! இங்கே உணவு கிடைக்காது!”எனக் கூறிப், பறந்து போயின!

எப்போதுமே,சமாதானமாக இரு தரப்பாரும் போய்விட்டால், சிக்கல் யாருக்கும் வராது!

(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் – infobellsTv)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 26, 2022 2:41 pm

Code:
எப்போதுமே,சமாதானமாக இரு தரப்பாரும் போய்விட்டால், சிக்கல் யாருக்கும் வராது!

100 விழுக்காடு உண்மை.அருமை.பகிர்வுக்கு நன்றி .

@Dr.S.Soundarapandian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jan 26, 2022 6:42 pm

நன்றி இரமணியன் அவர்களே!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jan 26, 2022 6:45 pm

கன்னடச் சிறுவர் கதைகள் (32)

ஏரியைக் காணோம்!

ஒரு நாள் அரசன் முன்பு , அதிகாரி ராம்தேவ் வந்து, “ராசரே! தென் பகுதியில் நீரே இல்லை! மக்கள் துன்புறுகிறார்கள்!” என்றார்.

“அப்படியா? அதைப் போக்க வழி?” – அரசன் கேட்டான்.

“நாம் சில ஏரிகளை வெட்ட வேண்டும்!” என்றார் ராம்தேவ்.

“சரி! நூறு ஏரிகளை வெட்ட ஏற்பாடு செய்!இதை நீயே செய்து முடி!” என்ற அரசன், “ராம் தேவுக்கு ஒரு லட்சம் வராகன் நாணயங்களைக் கொடுங்கள்!” என உத்தரவிட்டான் அரசன்.

“சரி! ” என்று கிளம்பினான் ராம்தேவ்!

ஆனால் அவன் சொன்னபடி நூறு ஏரிகளை வெட்டவில்லை! 25 ஏரிகளை மட்டும் வெட்டிவிட்டு , மீதிப் பணத்தை அவனே எடுத்துக்கொண்டான்!

ஒரு நாள் ராம்தேவ் , “அரசரே! நூறு ஏரிகளையும் வெட்டிவிட்டேன்! நீங்களே வந்து பார்த்துக் கொள்ளுங்கள்! ” என்று கூறி, அரசனை அழைத்தான்.

“சரி! வருகிறேன்!” என்று அரசனும் ராம்தேவுடன் போய், ராம்தேவ் உண்மையில் வெட்டிய ஏரிகளை மட்டும் பார்த்து மகிழ்ந்தான்!

ஒரு நாள் ராம்தேவ், ஒரு கிராமத்திற்குப் போகலானார். அங்கு தண்ணீர் இல்லை! மக்கள் வாடிக்கொண்டிருந்தனர்! கிராமத்தார் ராம்தேவிடம் புகார் கூறினர்! “நாந்தான் உங்கள் கிராமத்தில் ஏரி வெட்டினேனே? அது எங்கே?”எனக் கேட்டான். “இல்லையே? நாங்கள் இந்த ஊரில் பல ஆண்டுகள் வசிக்கிறேன்! இங்கு ஏரியே வெட்டவில்லையே?”என்றனர் கிராம வாசிகள்!

கிராம வாசிகள், ராம்தேவுடன் அரசன் முன் சென்றனர்.

“எங்கள் கிராமத்தில் ராம்தேவ் வெட்டிய ஏரி காணாமல் போய்விட்டது ராஜா!” என்றனர்.

“அப்படியா? உனக்கு யார் மீதாவது சந்தேகம் உள்ளதா?”- அரசன் கேட்டான்.

“இல்லை ராசரே! ஆனால் நீங்கள் எங்களோடு அங்கு வந்தால் எல்லாம் தெரியவரும்!” என்றனர்.
“சரி!” என்று அரசன், ராம்தேவ் மற்றும் கிராமத்தார் ஆகியோர் அந்தக் கிராமத்தை அடைந்தனர்.
“ராம்தேவ்! நீ வெட்டிய ஏரி எங்கே? – அரசன் கேட்டான்.”

“அரசரே! இந்த மைதானம் இருக்கிறதே, இந்த இடத்தில்தான் ஏரி வெட்டினேன்!” என்றன் ராம்தேவ்!
“இல்லை! இல்லை! பல வருடங்களாக இது காலியாகத்தான் இருக்கு! இது சந்தை நடக்கும் இடம்! ஏரி இங்கு வெட்டப்பட்டிருக்கவே முடியாது!”என்றார் கிராமத் தலைவர்.

“ராம்தேவ்! எங்கே வெட்டினீர்?” – அரசன் அதட்டினான்.

“காட்டுகிறேன் வாருங்கள்!”என்று கூறி ராம்தேவ் ஒரு மரத்தடிக்குக் கூட்டிவந்தார்! “இதோ இந்த இடத்தில்தான் ஏரி வெட்டினேன்!” என்றான் ராம்தேவ்!

“இல்லை! இல்லை! இது பஞ்சாயத்துக் கூடும் இடம்! இந்த மரத்தடி மேடையில்தான் பஞ்சாயத்தார் உட்காருவர்!” என்றார் கிரமத் தலைவர்.

அரசனுக்கு உண்மை விளங்கிவிட்டது!

“ஏய்! ராம்தேவ்! நீ ஏரி வெட்டவே இல்லை இங்கு! நீ பொய் சொல்லுகிறாய்! உண்மையைச் சொலு!” – அரசன் கோபமாகக் கேட்டான்.

“என்னை மன்னிச்சிடுங்க ராசரே! தவறு செய்துவிட்டேன்!” – கெஞ்சலானார் ராம்தேவ்!

“முடியாது! என் மக்களுகு நீ துரோகம் செய்துவிட்டாய்!” எனக் கூறிய அரசன், “இவனை இழுத்துச் சென்று ஆயுள் முழுதும் சிறையில் தல்லுங்கள்!” என உத்தரவிட்டான் அரசன்!
நேர்மையை ஒருநாளும் கைவிடலாகாது!

(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் – KooKooTv)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jan 27, 2022 10:54 am


கன்னடச் சிறுவர் கதைகள் (33)

காட்டில் நான்கு பிராணிகள் !

ஒரு காட்டில் மான்,ஆமை,காகம், எலி ஆகியன மிக ஒற்றுமையாக இருந்தன!

ஒரு நாள் மான், வேடனின் வலையில் மாட்டிக்கொண்டது! வலையிலிருந்து மானால் தப்பிக்கவே முடியவில்லை! அலறியது!

மானின் அலறல் கேட்டு, மற்ற மூன்று பிராணிகளும் ஓடி வந்தன!

எலி, வலையினைக் கத்தரித்தது!

மான் விடுதலை ஆனது!

நான்கும் மகிழ்ச்சியாக இருந்தன!

ஒரு நாள், வேடன், அந்த நான்கு பிராணிகள் முன்னே வந்தான். அவனிடமிருந்து தப்பிக்க ஆளுக்கொரு திசையில் ஓடின! ஆனால், ஆமை மட்டும் மெதுவாக நகர்ந்தது!

வேடன், ஆமை பின்னாலேயே சென்று, அதை லபக்கென்று பிடித்துத் தூக்கித் தன் பையில் போட்டுக்கொண்டான்!

காகம், மரத்து மேலிருந்து இதைப் பார்த்தது!

ஆமையைக் காப்பாற்ற ஒரு சூழ்ச்சி செய்தன மற்ற மூன்று விலங்குகளும்!
அதன்படி, மான் வேடனின் கண்ணில் படுமாறு சற்றுத் தூரத்தில் போய் நின்றுகொண்டது! மானைப் பிடிக்கச் வேடன், ஆமையை வைத்துவிட்டு, மானருகே சென்றான்! வேடன் அருகே வரவும் , மான் ஓட்டம் பிடித்துத் தப்பித்துவிட்டது!

இந்த நேரத்தில், எலியானது ஆமை வைத்திருந்த வேடனின் பையைத் தன் பற்களால் கடித்து, ஆமையைத் தப்பிக்கவிட்டது!

திரும்பி வந்து பார்த்த வேடன், “போச்சே! மானும் போச்சு! ஆமையும் போச்சே! இன்று நான் பட்டினிதான்! ” என்று புலம்பலானான்!

ஒற்றுமைக்கு நிகர் ஏது?

(கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்; கன்னடக் காட்சி ஒலி மூலம் – infbells.com)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக