ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm

» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm

» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm

» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 9:57 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 17/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:51 am

» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm

» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm

» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm

» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm

» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm

» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm

» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm

» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm

» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm

» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm

» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm

» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm

» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm

» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm

» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm

» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm

» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm

» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm

» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm

» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm

» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm

» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm

» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm

» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm

» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


நார்த்தாமலை சிவன் கோயில்கள் அற்புதங்கள் - நூல்

 நார்த்தாமலை சிவன் கோயில்கள் அற்புதங்கள் - நூல் Empty நார்த்தாமலை சிவன் கோயில்கள் அற்புதங்கள் - நூல்

Post by bharathichandranssn Wed Oct 20, 2021 7:47 pm

நார்த்தாமலை சிவன் கோயில்கள் அற்புதங்கள் - நூல்
ஆசிரியர் : பாரதிசந்திரன்
வெளியீடு சிவகுரு பதிப்பகம், சென்னை-16
 நார்த்தாமலை சிவன் கோயில்கள் அற்புதங்கள் - நூல் 1sxAbYN
இந்த நூலில் இடம்பெற்றுள்ள சிறப்புக்கள் குறித்து பேராசிரியர் முனைவர் சோ முத்தமிழ்ச் செல்வன் அவர்கள் அணிந்துரை வழங்கியுள்ளார்கள். இந்த நூலுக்கான அறிமுகமாக இதைக் காணலாம். நம் நாட்டின் கலைப்பொக்கிசம் இக்கோயில்.
அணிந்துரை
முனைவர் ”இளம்அறிஞர்” சோ.முத்தமிழ்ச்செல்வன்.
தமிழ் உதவிப் பேராசிரியர்,
அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி,
சிவகாசி.

கோயில்கள் நம் முன்னோர்களின் ஆன்மீக அறிவியல் வெளிப்பாடுகளாக காணப்படுகின்றன. காலத்தால் தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக ஆன்மீகமும் அறிவியலும் கடத்தப்படுகின்றன தமிழக கட்டிடக்கலையின் வளர்ச்சியும் சிறப்பும் மிகப் பழமையானவை அதோடு அறிவு வயப்பட்ட வை. இவ்வாறான கோயில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் தமிழ்நிலத்தில் புதுமையானதாகவும், மாறுபட்டதாகவும், சிறப்பானதாகவும் அமைந்திருக்கின்றன.

கோயில்களோடு அதைக் கட்டிய மன்னனும், மன்னரின் ஆட்சியும் வரலாறாகிப் பதிவாகின்றன. எனவே, வரலாற்று ஆவனமாகவும் பாதுகாப்புப் பெட்டகமாகவும் கோவில்கள் விளங்குகின்றன எனலாம். கலையும் கலை சார்ந்த வழிபாட்டு மரபுகளும் குவிந்துகிடக்கும் இடமாகவும் இவைகள் திகழ்கின்றன.
மனம் சார்ந்த, உடல் சார்ந்த உயர்வுக்கு இடம் அளிக்கும் பல்வேறு பரிசோதனைகளும் விடாமுயற்சிகளும் நடக்கும் ஒன்றிணைந்த மருத்துவச் சாலைகளாகவும் கோயில்கள் அமைந்திருக்கின்றன. அபிஷேக நீர், அலங்காரம், தீப ஆராதனை, திருச்சுற்று, பிரசாதம், காந்த சிகிச்சை, திருவீதியுலா என்பவை மருத்துவ முறையில் சிலவாகும்.
”நார்த்தாமலை சிவன் கோவில்களின் அற்புதங்கள்” எனும் இந்நூல் நம் புராதனச் சின்னங்களாகவும் மற்றும் மன்னர்களின் வரலாற்றையும் பேசுகின்றன. விஜயாலய சோழீச்சுரம் கோயில் பிற்காலச் சோழர்களின் அரசியல் நுழைவை வெளிப்படுத்தும் சின்னமாக இருக்கிறது. முத்தரையர்களின் அரசியல் நிகழ்வுகளை வெளிப்படுத்தும் கலைப்பொக்கிஷமாகவும் அமைகிறது. அதோடு இவ்வூரில் கட்டப்பட்டுள்ள பிற சிவன் கோவில்களும் அதனின் வரலாறும் மன்னர்கள் செய்த திருப்பணிகளும் வரும் இளம்தலைமுறைகள் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியச் செய்திகளாக அமைந்திருக்கின்றன. சுனைத்தண்ணீருக்குள் இருந்து அருள்பாலிக்கும் ஜ்வரகரேஸ்வரர் குறித்த செய்திகள் ஆச்சரியம் ஊட்டுகின்றன.
நார்த்தாமலையில் காணலாகும் தங்கப்புதையல், சித்தன்னவாசல் இருக்கும் இடத்திற்க்கும் இவ்வூருக்கும் இடையிலான சுரங்கப் பாதை போன்ற வியப்பை அளிக்கும் செய்திகள் இந்நூலில் ஆங்காங்கு கூறப்பட்டுள்ளன. கலைப் படைப்பு குறித்த விவரங்கள் நாம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய கோவில்கள் குறித்த செய்திகள் ஆகும். அரிய செய்திகள் பல நிறைந்திருக்கும் வரலாற்று ஆவணமாக இந்நூல் விளங்குகிறது. பேராசிரியர் பாரதிசந்திரன் அரிதின் முயன்று கோயில்கள் குறித்தச் செய்திகளைச் சேகரித்து அழகாக எழுதியுள்ளார்.
கோயில்களைச் சார்ந்த நூல்களில் இன்னும் ஒரு முக்கியமான நூலாக இந்நூல் விளங்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இதுபோல் அழிந்து போகும் நிலையிலுள்ள வரலாறுகள் பதிவு செய்யப்படவேண்டும். வரலாறுகளும் கலைப்பொக்கிஷங்களும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டியது நமது கடமையாகும். அதை இந்நூல் நிறைவேற்றும். நூல் வெளியிட்ட பதிப்பகத்தாருக்கும் கடினமாக உழைத்து இந்த நூலைக் கொண்டு வந்திருக்கிற பேராசிரியர் பாரதிசந்திரன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் என்றும் உரியதாகும்.

நூல் விரைவில் அமோசான் கிண்டிலில் கிடைக்கும். பதிப்பில் வேண்டுவோர் 9283275782 எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
நூலைத் தமிழ் உலகம் பாதுகாக்கும் என நம்புகிறேன்.

அன்பன்
பாரதிசந்திரன்
bharathichandranssn
bharathichandranssn
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 34
இணைந்தது : 16/01/2020
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை