புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாதை மாறிய பயணம்! – சிறுகதை Poll_c10பாதை மாறிய பயணம்! – சிறுகதை Poll_m10பாதை மாறிய பயணம்! – சிறுகதை Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
பாதை மாறிய பயணம்! – சிறுகதை Poll_c10பாதை மாறிய பயணம்! – சிறுகதை Poll_m10பாதை மாறிய பயணம்! – சிறுகதை Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாதை மாறிய பயணம்! – சிறுகதை Poll_c10பாதை மாறிய பயணம்! – சிறுகதை Poll_m10பாதை மாறிய பயணம்! – சிறுகதை Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
பாதை மாறிய பயணம்! – சிறுகதை Poll_c10பாதை மாறிய பயணம்! – சிறுகதை Poll_m10பாதை மாறிய பயணம்! – சிறுகதை Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாதை மாறிய பயணம்! – சிறுகதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 27, 2021 2:16 pm

பாதை மாறிய பயணம்! – சிறுகதை 27728Tamil_News_Nellai
-
வரதட்சணை வாங்குவதும் சரி, கொடுப்பதும் சரி சட்டப்படி குற்றம்.
இருந்தும் நாம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஏன்?
ஏன் என்றுதான் கேட்கிறேன். வரதட்சணை கொடுத்துத்தான் வரனை
விலைக்கு வாங்கி திருமணம் செய்ய வேண்டுமென்றால்,
எனக்கெல்லாம் அப்படிப்பட்ட திருமணமே வேண்டாமென இருந்து
விடுவேன்!'' – இப்படி படபடவென தெளிவாக வரதட்சணை பற்றி
மாலா பேசிவிட்டு இருக்கையில் வந்து அமரும் வரை கல்லுாரி
மாணவிகளின் கைத்தட்டல் ஓயவேயில்லை.

''மாலு, துாள் கிளப்பிட்டே. உனக்குத்தான் முதல் பரிசு.'' தோழிகள்
அவளை சூழ்ந்து கொண்டனர். இறுதியில் முதல் பரிசும் அவளுக்கே
கிடைத்தது.

''முதல் பரிசு வாங்கின மாலா, எங்களுக்கெல்லாம் டிரீட் தரணும்.
எங்கே போகலாம்?'' – மீனா துாண்டிவிட்டாள்.

''டிரீட்டெல்லாம் இருக்கட்டும். முதல்ல நிஜம் தெரியணும்.''

''ஏன் மாலு, மேடையிலே எவ்வளவு ஆக்ரோஷமா, அழகா பேசினே?
நிஜவாழ்க்கையிலும் வரதட்சணை கொடுக்காமல் கல்யாணம்
பண்ணுவியா? இல்லே மேடையில் மட்டும்தான் இந்த பேச்சா....?''

''ஏய் சுபா, என்னையும் மத்தவங்க மாதிரி நினைக்காதே. மேடையில் ஒரு
பேச்சு, வாழ்க்கையில் ஒரு பேச்சுன்னு பேசுற அரசியல்வாதி நான்
கிடையாது. நான் வித்தியாசமானவள் என்பது உங்களுக்கெல்லாம்
அப்புறம்தான் தெரியும்.''

''இல்லே மாலு, சில பேர் கவிதை, கதை, பேச்சு இதில் செய்கிற புரட்சியை
யதார்த்த வாழ்க்கையில் செய்ய மறந்து போயிடுவாங்க. ஏதோ
பரிசுக்காக பேசினதாத்தான் நாங்கல்லாம் நினைச்சோம்.''

தோழிகளின் விவாதங்களுக்கு தகுந்த பதிலை கூறியவள், அவர்களை
அழைத்துக் கொண்டு கல்லுாரி கேண்டீன் சென்றாள். கேலி, கிண்டல்,
சிரிப்பென கேண்டீன் களை கட்டியது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 27, 2021 2:16 pm



திருமணம் என்பது எவ்வளவு பெரிய விஷயம்? ஏன் ஒரு பூதாகரமான
பிரச்னையாக உருவெடுத்து இன்று? ஆண், பெண் இருபாலரும் படும்
இன்னல்கள் எதுவுமே அறியாதவர்களாக அரட்டை அடித்துக்
கொண்டிருந்தார்கள்.

இதில் மாலு யதார்த்தமானவள். முதுநிலை பட்டதாரி. கல்லுாரி படிப்பை
கலாட்டாவோடு கழித்தாலும் படிப்பு, விளையாட்டு உட்பட எதிலும்
முதலானவள். இவளின் கண்டிப்பு, கம்பீரத்தோற்றம் இதையெல்லாம்
பார்த்தாலே எல்லோரும் திமிரானவள் என்றுதான் கூறுவார்கள் –
உள்ளம் மென்மையானது என்பது அறியாமல்! ஏன் பெண் என்றால் பயந்து,
தலைகுனிந்து தழைய, தழைய புடவை கட்டி, யார் எது பேசினாலும்
அடங்கி வீட்டுக்குள் முடங்கி இருப்பவளாகத்தான் இருக்க வேண்டுமா
என்ன?

நிறைய படித்து புத்திசாலியாக, உள்ளத்தில் மறைத்து வைத்து பேசாமல்,
கவிதையை ரசித்து, இலக்கியம் முதல் அரசியல் வரை அலசி ஆராய்ந்து,
தவறான கருத்தாக இருந்தால் மாற்றுக்கருத்து கூறுபவளாக
இருப்பவள்தான் மாலா. ஆனால், இவளுக்கு கிடைத்த பெயர் 'அடங்காதவள்.'
இவளுக்கெல்லாம் எவன் வந்து வாய்க்க போகிறானோ?
இப்படித்தான் சாபமிட்டிருக்கிறார்கள்.

''பேசுபவர்கள்தான் பேசிக்கொண்டேயிருப்பார்களே இதுக்கெல்லாம்
நீங்க ஏம்ப்பா கவலைப்படுறீங்க?'' என்பாள் தந்தையிடம். துணிச்சலாக
இப்படியெல்லாம் வாழவேண்டும் என்று சொல்வதும் இந்த சமுதாயம்தான்.
அப்படி வாழ்பவர்களை முடக்கிப் போட நினைப்பதும் இந்த சமுதாயம்தான்.

''மாலும்மா, புரியாம பேசுறியே.... அம்மா இல்லாத பொண்ணா
வளர்த்ததாலதான் இப்படியெல்லாம் பேசுறியோன்னு தோணுது. ஆண்களை
பத்தி என்னமோ நினைக்கிறே? எவனுமே பொண்ணுன்னா தனக்கு கீழே
இருக்கணும், புத்திசாலியா ஒரு படி மேலே மனைவி இருக்கக்கூடாதுன்னு
பலபேர் நினைக்கிறதில்லே.''


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 27, 2021 2:17 pm


''அப்போ எல்லா ஆண்களும் மனைவியின் முன்னேற்றத்திற்கு பின்னாடி
உறுதுணையா நிக்கிறாங்கன்னு நினைக்கிறீங்களாப்பா...?''

''நீ பேசுறதை பார்த்தா எனக்கு பயமா இருக்கும்மா...''

படித்து முடித்ததும் வேலை கிடைப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை
தன் மூலம்தான் உணர்ந்தாள் மாலா. கடைசியில் தனியார்
நிறுவனமொன்றில் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தாள்.

''மாலு, சாயங்காலம் உன்னை பொண்ணு பாக்க வர்றாங்க...''

''என்னப்பா சம்பிரதாயமெல்லாம்? நானென்ன வீட்டுக்குள்ளே அடைஞ்சி
கிடக்கிறவளா...? வேலைக்கு போகும் போது பாத்துக்கலாம்.''

பெண்ணை பொம்மையாக்கி நிற்க வைத்து அழகு பார்ப்பது
சம்பிரதாயமா? ச்சீ... உள்ளம் கொதித்தது. அப்பாவின் முகத்திற்காக
ஒத்துக் கொண்டாள்.

சாய்வு நாற்காலியில் அமர்ந்து சிந்தித்துக் கொண்டிருக்கும் அப்பாவை
பார்த்தாலே கோபத்தில் இருக்கிறார் என்பது புரிந்தது.

''அப்பா.... இன்னும் அதையே நினைச்சுக்கிட்டு இருக்கீங்களா....?''
மெல்ல பேச்சை ஆரம்பித்தாள்.

''மாலும்மா.... நீ செய்யறது உனக்கே நல்லாயிருக்கா? என்ன இருந்தாலும்
நீ அவங்களை அப்படி பேசியிருக்கக்கூடாது.''

''எப்படி பேசினாங்கப்பா.... நீங்களும் கேட்டீங்க இல்லே? எப்படி பேசாம
இருக்க முடியும்?''

''நாம மேடையிலே பேசி கைத்தட்டல் வாங்கறது வேேறம்மா.....
நிஜ வாழ்க்கை வேேறம்மா... பேசுறபடியே நடக்க முடியாதும்மா....''

அப்பாவின் பேச்சு எரிச்சலை தந்தது. வரதட்சணை கொடுக்காமல் ஒரு
பெண்ணால் வாழ முடியாதா? பத்தாம் வகுப்பை கூட ஒழுங்காக
முடிக்காதவனுக்கு ஐம்பது பவுன் நகையும், பட்டம் படித்த பெண்ணும்
வேண்டுமாம். ஆணுக்கு இருக்கும் கற்பனையில் சிறிது பெண்ணுக்கும்
இருக்கக்கூடாதா? காலங்காலமாய் பெண்ணை கனவிலேயே வாழ விட்டு
விட்டதே இந்த உலக? தன் உள்ளக் குமுறலை தந்தையிடம் சொல்ல
முடியாமல் தடுமாறினாள்.

''வந்த வரனையெல்லாம் தட்டிக் கழிச்சு வேணாம்னு சொல்லிக்கிட்டே
இருந்தா... இந்த வயசான காலத்திலே மாப்பிள்ளை தேடுறது கஷ்டம்
இல்லையாம்மா...'' – இது அப்பாவின் ஆதங்கம்.

மாலாவின் வயது ஏறியதே தவிர வாழ்க்கை அவளுக்கு வாய்க்கவில்லை.
படித்தவனும் எதிர்பார்க்கிறான். படிக்காதவனோ, பெண் அதிகம்
படித்தால் வேண்டாம், புருஷனை மதிக்க மாட்டாள் என்கிறான்.

''பையன் பேரு குருமூர்த்தி. ஒரு தங்கச்சி. சாதாரண வேலைதான்.
ஆனால் தங்கச்சிய கல்யாணம் பண்ணிக் கொடுத்த பிறகுதான்
கல்யாணம் பண்ணிப்பானாம். சம்மதம்ன்னு ஒரு வார்த்தை
சொல்லிடும்மா....'' அப்பா சுருதியில்லாமல் பேசினார்.

கடலை பருப்பு, துவரம் பருப்பு போல வியாபாரமாகி விட்டதே இந்த
கல்யாணம்! காதலையும் கவுரவ கொலைகள் காவு வாங்குகின்றன. நான்
கொடுக்கும் பணம் சீர் வரிசையில் தங்கையை கரையேற்றிவிட்டு என்னை
திருமணம் செய்வாராம்! முப்பதை தாண்டி ஒரு கல்யாண வாழ்க்கை.
அப்படியானால் நான் மேடையில் பேசியதெல்லாம் பொய்யாகிவிட்டதே?
என் கொள்கைகள், துணிச்சல் எல்லாம் என்னை விட்டு போய் விட்டதா?
படிக்கின்ற காலங்களில் முன்னணியில் தெரிபவர்கள் எல்லாம் பிறகு
முகவரியின்றி காணாமல் போய்விடுகிறார்களே?

ஏதோ என்னை திருமணம் செய்து கொள்ள போட்டி போட்டு வருவார்கள்
என்ற கற்பனையில் இருந்தேன். பணமிருந்தால்தான் நடக்கும் என்பது
தெரியாமல் போனேனே....!

''அப்பா! நீங்க சொல்ற பையனையே கட்டிக்கிறேன்ப்பா...'' –
கண்ணீரோடுதான் கூறினாள் மாலா.

'கல்யாண' வியாபாரத்தில் காசு கொடுத்து விற்கப்பட்டேன் –
அப்பாவின் பாரமாவது குறையுமே!

இப்போதெல்லாம் அநேக மேடைப்பேச்சுக்களை கேட்கும் போது எனக்கு
சிரிப்புதான் வருகிறது.

– குரும்பூர் பாலா, சிவகளை.
நன்றி-தினமலர்-நெல்லை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக