ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வரிப்பணம் எங்கே செல்கிறது: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கேள்வி
by ayyasamy ram Today at 5:45 am

» பொறுமை – ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Yesterday at 11:54 pm

» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Yesterday at 11:51 pm

» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Yesterday at 6:25 pm

» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Yesterday at 6:23 pm

» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Yesterday at 6:21 pm

» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Yesterday at 4:00 pm

» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:41 pm

» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:39 pm

» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Yesterday at 3:34 pm

» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 3:32 pm

» புத்தகம் தேவை
by Rajana3480 Yesterday at 3:18 pm

» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Yesterday at 10:39 am

» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Yesterday at 10:37 am

» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Yesterday at 10:18 am

» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Yesterday at 10:16 am

» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Yesterday at 10:08 am

» அசத்தும் நாயகிகள் – நயன்தாரா
by ayyasamy ram Yesterday at 10:06 am

» அசத்தும் நாயகிகள்- ஜோதிகா
by ayyasamy ram Yesterday at 10:05 am

» அசத்தும் நாயகிகள்- த்ரிஷா & சமந்தா
by ayyasamy ram Yesterday at 10:04 am

» அசத்தும் நாயகிகள்- நித்யா மேனன் & ஐஸ்வர்யா ராஜேஷ்
by ayyasamy ram Yesterday at 10:03 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 11/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:00 am

» ‘என் இதயத்தின் ஒரு பகுதி’ நண்பர்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 am

» முதுமையை கூட்டும் மது
by ayyasamy ram Yesterday at 5:21 am

» சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)
by ayyasamy ram Yesterday at 5:07 am

» மூத்தோருக்கு ரயிலில் சலுகை பார்லிமென்ட் குழு பரிந்துரை
by ayyasamy ram Yesterday at 5:01 am

» தமிழர் அடிமையானது ஏன் ? எவ்வாறு ? கா பா அறவாணன்
by vernias666 Yesterday at 1:29 am

» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:51 pm

» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:50 pm

» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:47 pm

» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Wed Aug 10, 2022 10:04 am

» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:45 am

» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:36 am

» மச்சு பிச்சு
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am

» அழும் கடலாமை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am

» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:33 am

» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:32 am

» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:31 am

» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:30 am

» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am

» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am

» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Wed Aug 10, 2022 5:38 am

» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:50 am

» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:37 am

» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


கன்னடக் குழந்தைப் பாடல்கள் (97 - 100 )

3 posters

request கன்னடக் குழந்தைப் பாடல்கள் (97 - 100 )

Post by Dr.S.Soundarapandian Thu Sep 09, 2021 12:32 pm

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (37 - 39 )

37 . வாங்க, ஆட்டோவில் போகலாம்!

நம்ம முத்து மக்களே!
ஆட்டோ நண்பர் வந்தாரே!
கூப்பிட்ட உடனே
வீட்டின்முன் நிற்பாரே!
பள்ளிக்கூடம் கொண்டுபோய்
நம்மையும் சேர்ப்பாரே!
பள்ளி முடிந்து வீட்டுக்கும்
கொண்டுவந்து சேர்ப்பாரே!
ஆட்டோ நண்பரே!
நம்ம ஆட்டோ நண்பரே!

38 .வருதே இரயிலு!

வருதே இரயிலு!
வருதே இரயிலு!
இருப்புப் பாதையில்
வருதே இரயிலு!
சனங்கள் நிரம்பிய
அழகிய இரயிலு இது!
புகையை உமிழும்
நல்ல இரயிலு இது!
மக்கள் மெச்சும்
அழகான இரயில் இது!
மக்கள் விரும்பும்
உன்னத இரயில் இது!
கூகூ…. என்று
கூவும் இரயில் இது!
மக்கள் மெச்சும்
அழகு இரயில் இது!
வருதே இரயிலு!
வருதே இரயிலு!

39 . அழகு வண்ணங்கள் !

அழகு அழகான வண்ணங்கள்!
வாவா அவற்றைத் தெரிந்து கொள்ளலாம்!
காக்கையின் நிறம்பார் அதுவே
கறுப்பு கறுப்பு!
கோழியின் நிறமே சிவப்பு!
சிவப்பு! அது சிவப்பு!
மரங்கள் செடிகள் இவற்றின் நிறம்
பச்சை ! அது பச்சை!
மேகத்தின் நிறம் என்ன?
வெள்ளை! அது வெள்ளை!
பூக்களின் நிறமே மஞ்சள்!
மஞ்சள் ! அது மஞ்சள்!
ஆரஞ்சுப் பழத்தின் நிறத்தைப் பார்!
ஆரஞ்சு! அது ஆரஞ்சு!
வானத்தின் நிறம்தான் நீலம்
நீலம் ! அது நீலம்!
காமன் வில்லின் நிறம் பார்!
ஏழுவண்ணம்! அது ஏழுவண்ணம்!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன். கன்னட ஒலி மூலம் :
infobells.com & KidsTVKannada)

***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7503
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4359

http://ssoundarapandian.blogspot.in

சிவா likes this post

Back to top Go down

request Re: கன்னடக் குழந்தைப் பாடல்கள் (97 - 100 )

Post by Dr.S.Soundarapandian Thu Sep 09, 2021 7:16 pm

'மொழிபெயர்ப்புக் கவிதைகள்' பகுதியில் எனது ‘கன்னடக் குழந்தைப் பாடல்கள்’ வரிசையைக் காணவில்லையே?
இரமணியன் கவனிக்கவும்!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7503
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4359

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

request Re: கன்னடக் குழந்தைப் பாடல்கள் (97 - 100 )

Post by T.N.Balasubramanian Thu Sep 09, 2021 9:24 pm

ஆம் காணவில்லையே. தெரியவில்லை.
குழந்தை சமாச்சாரம் வேறு.
ஆவன  செய்வோம் .


@Dr.S.Soundarapandian


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

request கன்னடக் குழந்தைப் பாடல்கள் (40 - 42 )

Post by Dr.S.Soundarapandian Sat Sep 11, 2021 11:56 am

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (40 - 42 )

40 . தாத்தாவின் பண்ணை !

எங்கள் அன்பான தாத்தா உடைய!
அழகான பண்ணை!
அருமையான பண்ணை!
ஹொய்யா! ஹொய்யா! ஹொய்யா!
பிராணிகள் துள்ளும் பண்ணை!
அவை அங்குமிங்கும்
ஓடிவரும் அழகான பண்ணை!
பசுவும் கன்றும் அங்கும் இங்கும்
அன்புடன் உலாவும் பண்ணை!
கொக்கரக்கோ என்றே கூவும்
கோழி நடக்கும் காட்சி உண்டு!
குவாக்! குவாக்! சத்தத்துடனே
வாத்து வரும் அழகான பண்ணை!
குதிரையும் குட்டியும் ஓடும் பண்ணை!
அவை அங்கும் இங்கும்
தாவும் பண்ணை!
ஆட்டுக் குட்டிகள் நீர் குடிக்கும்
அழகான பண்ணை!
அருமையான பண்ணை!
ஹொய்யா ! ஹொய்யா! ஹொய்யா!

41 . நாய்க் குட்டி !

நாய்க் குட்டி! நாய்க் குட்டி!
தின்ன வேண்டுமா?
தின்ன வேண்டும் தண்ணீர் வேண்டும்
எல்லாம் வேண்டும்!
நாய்க் குட்டி உனக்குத்
தின்ன ஏன் வேண்டும்?
தின்னுபுட்டு வீட்டைக் காக்கவேண்டும்!
நாய்க் குட்டி , கள்ளன் வந்தால்
என்ன செய்வாய்?
லொள் லொள் பௌ பௌ என்றே
கூவி எழுப்புவேன்!
நாய்க்குட்டி உனக்குத் தின்ன என்னவேண்டும்?
ஜிலேபியுடன் லட்டு ஒன்று
கொடுத்தால் போதுமே!

42 . நான் ஒரு மாயாவி !

வானில் இருந்து தேவதை வந்தது!
மாயக் கோலை எனக்குத் தந்தது !
இப்போநான் வேண்டியதைப் பெறுவேனே!
பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளைக்
கொண்டுவருவேனே!
அவற்றையுமே பிடித்துப் பிடித்து
விளையாடுவேனே!
வண்ண வண்ணப் பலூன்களைக்
கொண்டு வருவேனே!
ஊதி ஊதி நானும் அவற்றை
உடைத்து மகிழ்வேனே!
பூனைக் குட்டி ஒன்றையுமே
வரவழைப்பேனே!
மியாவ் மியாவ் என்று கத்தி
விளையாடுவேனே!
மாயக் கோலை ஆட்டியேதான்
நானும் மகிழ்வேனே!
அப்பா அம்மா சண்டை போடாமல்
என்னோடு விளையாடச் செய்வேனே
அப்பா அம்மா அன்பாக இருந்தால்
விளையாட எனக்கு எதுவும் வேண்டாமே!
எனக்கு விளையாட எதுவும் வேண்டாமே!

-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன்.கன்னட ஒலி மூலம் :
infobells.com & KidsTVKannada)

***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7503
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4359

http://ssoundarapandian.blogspot.in

சிவா likes this post

Back to top Go down

request கன்னடக் குழந்தைப் பாடல்கள் (43 - 45 )

Post by Dr.S.Soundarapandian Sun Sep 12, 2021 12:13 pm

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (43 - 45 )

43 . பொங்கல் வந்தது !

பொங்கல் வந்தது! பொங்கல் வந்தது !
வாங்க எல்லோரும் கொண்டாடுவோம் !
வீடெல்லாம் வெள்ளை அடித்து வைப்போம்!
வீட்டுமுன்னே வண்ணக் கோலம் போடுவோம்!
விளைச்சலை வீட்டுக்குக் கொண்டுவருவோம்!
சுத்திநின்று பூசை அதற்குச் செய்வோம்!
பொங்கல் வைத்துச் சூரியனை வணங்கி மகிழ்வோம்!
எருது பசுவை அலங்கரித்துக்
கரும்பு பொங்கலை உண்டு மகிழ்ந்து
பக்க வீடுகளுக்கும் கொடுத்து மகிழ்வோம்!
பொங்கல் வந்தது ! பொங்கல் வந்தது!

44 . இரயில் விளையாட்டு !

சிக்குப் புக்கு சிக்குப் புக்கு !
சிக்சிக் சிக்சிக் !
சிக்குப் புக்கு ! சிக்குப் புக்கு!
இரயில் வண்டி கண்டுள்ளோம்!
சிக்குப் புக்கு இரயிலைக் கட்டுவோம்!
முதலில் என்ன செய்ய வேண்டும்?
முதலில் தண்டவாளம் கட்டவேண்டும்!
இரயிலை எப்படித் தொடங்குவது?
முதலில் எஞ்சினை வைக்கவேண்டும்!
அதன் பின்னே போகிகளையும் வைக்கணும்!
இரயில் வண்டி கட்டுவோம்!
சிக்குப் புக்கு இரயிலைக் கட்டுவோம்!
வண்டியைப் பார்த்து எலிகள் வந்தன!
எலிகளை வண்டியில் ஏற்றுவோம்!
வண்டி போகுது சிக்குப் புக்கு
சிக்குப் புக்கு இரயிலை ஓட்டுவோம்!
சிக்குப் புக்கு சிக்குப் புக்கு!

45 . சிம்ம ராஜா !

சிம்மம்தான் காட்டின் ராஜா!
ஆனாலும் அதனால் பயமே இல்லை!
பிராணிகளின் அப்பா சிம்மம்தானே?
ஒவ்வொன்றையும் காப்பது சிம்மம்தானே?
நாம் ஆடுவதும் சுத்துவதும் –
பயமே இல்லை! நீரில்
நீந்துவதும் மரத்தில் ஏறுவதும்
எங்களுக்குச் சிரமமே இல்லை!
சிம்மம்தான் காட்டின் ராஜா!

-(கன்னட மூலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர்
முனைவர் சு. சௌந்தரபாண்டியன். கன்னட ஒலி மூலம் :
infobells.com)

***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7503
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4359

http://ssoundarapandian.blogspot.in

சிவா likes this post

Back to top Go down

request கன்னடக் குழந்தைப் பாடல்கள் (46 - 48 )

Post by Dr.S.Soundarapandian Tue Sep 14, 2021 12:51 pm

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (46 - 48 )

46 . எறும்பே ! எறும்பே!

எறும்பே! எறும்பே!
எங்கு இருக்கிறாய்?
ஏன் சும்மா உட்கார்ந்துள்ளாய்?
என்னிடம் வா உனக்கு நான்
வெல்லமும் சர்க்கரையும் தருவேனே!
உடலைப் பார்த்தால் சின்னது!
செய்யும் வேலையோ ரொம்பப் பெரியது!
உணவைச் சேமித்து வைக்கிறாய்!
தேவை வரும்போது பயன்படுத்துகிறாய்!
எறும்பே ! எறும்பே!
எங்கு இருக்கிறாய்?

47 . சைக்கிள்!

சைக்கிள்! சைக்கிள்! சைக்கிள்!
சிறுவர்கள் விரும்பும் சைக்கிள்!
வண்ணங்கள் அடித்த சைகிள்!
பளபளக்கும் சைக்கிள்!
சைக்கிள்!சைக்கிள்! சைக்கிள்!
இரண்டு பெடல் உள்ள சைக்கிள்!
மூன்று சக்கரம் கொண்ட சைக்கிள்!
முன்னும் பின்னும் ஓடும் சைக்கிள்!
ஓடி வருது சைக்கிள்!
வேகமா வழியை விடுவீரே!

48 . சின்னக் குருவி!

வாவா வா!
சின்னக் குருவி வாவா!
கடலைப் பொரி நான் தருவேன்!
வாவா வா சின்னக் குருவி!
அம்மா செய்யும் அவல்பொரி
அவள் எனக்குத் தந்தாளானால்
உனக்கு நான் தருவேன் குருவி!
குருவி! குருவி! சின்னக் குருவி!


-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன்.கன்னட ஒலி மூலம் :
infobells.com&KidsTvIndia)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7503
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4359

http://ssoundarapandian.blogspot.in

சிவா likes this post

Back to top Go down

request கன்னடக் குழந்தைப் பாடல்கள் (49 - 51 )

Post by Dr.S.Soundarapandian Tue Sep 14, 2021 7:28 pm

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (49 - 51 )

49 . ஆசிரியர்!

பள்ளி மணி அடித்தது!
டிரிங்! டிரிங்! டிரிங்!
எல்லோரும் மௌனமாய் ஆனாரே!
உஷ்!உஷ்!உஷ்!
ஆசிரியர் வகுப்புக்கு வந்தாரே!
மாணவர்கள் குட்மார்னிங் சொல்லினரே!
ஆசிரியரும் மாணவர்க்குக்
காலை வணக்கம் சொன்னாரே!
பாடம் நடத்துவதும்
சந்தேகம் தீர்ப்பதும் செய்வாரே ஆசிரியர்!
சிறந்த மாணவரைப்
புகழ்ந்து கூறுவார் ஆசிரியர்
மாணவர் படித்து முன்னேற
ஏணியாய் இருப்பவரே ஆசிரியர்!
எதிர்கால நன்மைக்கு அடித்தளமாய்
இருப்பவரே ஆசிரியர்! ஆசிரியர்!

50 . பொம்மை !

சின்னச் சின்னப் பொம்மை!
சிங்காரப் பொம்மை!
சிவந்த வண்ணப் பொம்மை!
கண்ணைச் சுழற்றியே காட்டும் பொம்மை!
இரண்டு கை தட்டியே
சத்தம் போடும் பொம்மை!
சின்னச் சின்னப் பொம்மையே!

51 . குதிரை வண்டி!

கடபுட வண்டி குதிரை வண்டி!
குதிரைச் சத்தம்! வண்டியின் சத்தம்!
கடகட வண்டி குதிரை வண்டி!
சாட்டையைச் சுழற்றிய
அக்கணமே சட்டென்று
வேகமாய் ஓடும் வண்டி!
குதிரை வண்டி ஏறினால்
சுகமாய்ச் சவாரி போகலாம்!
ஹாய் ஹாய் ஹாய்!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன்.கன்னட ஒலி மூலம் :
infobells.com)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7503
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4359

http://ssoundarapandian.blogspot.in

சிவா likes this post

Back to top Go down

request கன்னடக் குழந்தைப் பாடல்கள் (52 - 54 )

Post by Dr.S.Soundarapandian Wed Sep 15, 2021 9:45 pm

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (52 - 54 )

52 . ருசிகள்!

கசப்பாய் இருப்பது
பாகற்காய்!
உறைப்பாய் இருப்பது
மிளகாய்!
உப்பின் ருசியே
உப்பாய் இருக்கும்!
ஐந்து சுவை கலந்தது
நெல்லிக்காய்!
புளிப்பாய் இருக்கும்
மாங்காய்!
சர்க்கரை தின்றால்
மிக இனிக்கும்!
அதுவே உனக்கு
ரொம்பப் பிடிக்கும்!


53 . பொம்மையம்மா !

பொம்மை யம்மா !
பொம்மை யம்மா!- எனது
முத்துப் பொம்மையம்மா!
என்ன கனவு கண்டாய் என்று
எனக்கு நீயும் சொல்லம்மா!
என்ன நீ சாப்பிடுவாய்?
குதித்துக் குதித்து ஆடுவாய்!
உனக்கு நான்
முத்தமும் தருவேன்!
பொம்மை யம்மா!
பொம்மை யம்மா!

54 . நம்ம போலீஸ்!

அங்கே பாரு போலீசை!
நம்மைக் காக்கும் போலீஸ் !
கூப்பிட்டால் வருவார்
அந்தக் காவலர்!
காக்கி உடுப்பு அணிவார்!
தொப்பி தலையில் அணிவார்!
கையில் லத்தி பிடித்திருப்பார்!
கம்பீரமாக இருப்பாரே!
காலை முதலாய்
இரவு வரையில்
நம்மைக் காப்பார் போலீசே!
கள்ளன் திருடி ஓடினான்
விரட்டிப் பிடித்தார் போலீசே!
திருடப்பட்ட பர்சையுமே
திருப்பித் தந்தாரே
போலீஸ்! போலீஸ்!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன்.கன்னடக் காட்சி ஒலி மூலம் :
infobells.com)

***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7503
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4359

http://ssoundarapandian.blogspot.in

சிவா likes this post

Back to top Go down

request கன்னடக் குழந்தைப் பாடல்கள் (55 - 57 )

Post by Dr.S.Soundarapandian Thu Sep 16, 2021 9:43 am

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (55 - 57 )

55 . உடலும் உறுப்புகளும்!

தலை தோளு!
முட்டி காலு!
எனது கை கண்ணு!
செவி வாய்!
எனது மூக்கு!
எனது தலை தோளு காலு!

56 . ஒன்றுபோலத்தான் இருக்கும்!

ஒன்றாகக் காணப்படும்!
ஆனால் வேறே! வேறே!
பிராணிகள் காண்பதற்கு ஒன்றே!
ஆனால் அவை
வேறே! வேறே!
காக்கையும் புறாவும் ஒரே ரீதி!
எழுப்பும் ஓசையில் வேறே!வேறே!
காக்கை கறுப்பு ! புறா வெளுப்பு!
வேறே! வேறே!
சிங்கமும் புலியும் ஒரே ரீதி!
சிங்கந்தானே கர்ஜிக்கும்!
புலிதானே உறுமும்!
ஒலி எழுப்புவதில் இரண்டும்
வேறே!வேறே!
குளமும் கடலும் ஒரே ரீதி!
இரண்டிலுமே நீர்தான் இருக்கும்!
கடல்நீர் உப்பாகுமே
குளத்துநீர் உப்பாய் இருப்பதில்லை!
கடலும் குளமும்
வேறே!வேறே!

57 . வீட்டில் ஒரு குழந்தை !

நம்ம வீட்டில் குழந்தை ஒன்று
பாபு உள்ளது!
யாரும் தூக்காமல் விட்டுவிட்டால்
கத்தத் தொடங்குது!
உடம்பிலும் தலையிலும்
அடித்துக் கொள்கிறது!
கண்ணில் நீரைச் சிந்த விடுகிறது!
அம்மா வந்து தூக்கி ஒரு
முத்தம் தருவாளே!
அத்தனையும் அடங்கிப் போகும்!
நம்ம பாபுவுக்கே!
நம்ம வீட்டில் குழந்தை ஒன்று
பாபு உள்ளது!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன்.கன்னடக் காட்சி ஒலி
மூலம் : infobells.com& Shemaroo Kids Kannada)

**
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7503
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4359

http://ssoundarapandian.blogspot.in

சிவா likes this post

Back to top Go down

request கன்னடக் குழந்தைப் பாடல்கள் (58 - 60 )

Post by Dr.S.Soundarapandian Thu Sep 16, 2021 7:16 pm

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (58 - 60 )

58 . சின்னதொரு சிலேட்டு!

சின்னதாய் ஒரு சிலேட்டு!
நீளதாய் ஒரு குச்சி!
எழுதிக் காட்ட வில்லையென்றால்
உனக்கு இல்லை ஸ்வீட்டு!
அப்பா தந்த காசு!
அம்மா தந்த உணவு!
ஸ்கூல் முன்னே கதவு!
நிதானமாகப் போவோமே!

59 . மாமா ஊருக்குப் பொவோமா?

மாமா ஊருக்குப் போவோமா?
சிக்குப் புக்கு சிக்குப் புக்கு!
தண்டவாளத்தில் போகும் ரயிலில்
ஓடும் மரங்களைக் காண்போமா?
மாமா ஊருக்குப் போவோமா?
மாமா ஊர் பெரியது!
மாமா ஊரில் சிறுவர்கள்
ஆட்டம் ஆடுவோம் அவர்களுடன்!
மாமா ஊருக்குப் போவோமா?
அத்தை சமையல் செய்வாரே!
தினமும் புதிதாய்ச் செய்வாரே!
குலாப் ஜாமூனு தின்போமே!
மாமா ஊருக்குப் போவோமா?
மாமா பெரிய வியாபாரி!
புதிய துணிகளை விற்பாரே!
மாமா ஊருக்குப் போவோமா?

60 . ஒரு காகம் வந்தது !

ஒரு காகம் வந்தது!
இரண்டு ரொட்டி தின்றது!
மூன்று முட்டை இட்டது!
நான்குமுறை பார்த்தது!
ஐந்துமுறை பறந்தது!

காக்கை காக்கை அப்பா!
மாமா வந்தார் இங்கே!
மாமனைக் கேளு உண்ண!
நீ கறுப்புக் காக்கை!
காகா என்று கத்துவே!
திருகையில் திரித்த உணவு
தின்ன ஓடி வாவா!

-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு. சௌந்தரபாண்டியன்.
கன்னடக் காட்சி ஒலி மூலம் : infobells.com; Kids
Planet;KidsTvKannada)

***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7503
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4359

http://ssoundarapandian.blogspot.in

சிவா likes this post

Back to top Go down

request கன்னடக் குழந்தைப் பாடல்கள் (61 - 63 )

Post by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 12:06 pm

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (61 - 63 )

61 . தந்தையர் நாள் !

நம் அப்பா முத்தான அப்பா!
நமக்கு அவர்தானே சூப்பர் ஹீரோ!
குடும்பத்தை நன்றாய் நடத்துவாரு!
நம்முடன் ஆடி மகிழ்வாரே!
நீரில் குதித்து விளையாடும்போது
அவரும் வந்து குதிப்பாரே!
நம அப்பா முத்து அப்பா!
நமக்கு அவர்தான் சூப்பர் ஹீரோ!
தப்பு நாங்கள் செய்தாலுமே
தலையில் குட்டு வைப்பாரே!
தலை நோகக் கூடாதென்றே
முத்தம் தந்து மகிழ்விப்பாரே!
இப்படிப் பட்ட அப்பாவைத் தந்த
கடவுளுக்கு வந்தனை! வந்தனை!

62 . அம்மா வேண்டும் !

குழந்தை அழுதது! குழந்தை அழுதது!
குவாகுவா என்றே அழுதது!
அண்ணன் ஓடியே வந்தானே!
கையில் பொம்மையைத் தந்தானே!
பொம்மையைத் தூக்கி வீசிவிட்டு
மீண்டும் குழந்தை குவாகுவா!
தங்கை ஓடி வந்தாளே!
தோளில் தூக்கிக் கொண்டாளே!
குழந்தை குவாகுவா நிற்கவில்லையே!
அப்பா ஓடி வந்தாரே!
தோளில் தூக்கியேதான்
தட்டிக் கொடுத்தாரே!
குவாகுவா சத்தம் நிற்கவில்லையே!
அம்மா குவாகுவா கேட்டாளே
‘வந்துவிட்டேன்’ சத்தம் கொடுத்தாளே!
அம்மா சத்தம் கேட்டுக் குழந்தை
சட்டென்று அழுகையை நிறுத்தியதே!
அம்மா குழந்தையைத்
தூக்கி மகிழ்ந்தாளே!

63 . ஒன்று, இரண்டு!

ஒன்று!
எல்லோருக்கும் தலை ஒன்று!
இரண்டு!
முகத்தில் கண்ணிரண்டு!
மூன்று!
தேசியக்கொடி வண்ணம் மூன்று!
நான்கு!
நாற்காலிக்குக் கால்கள் நான்கு!
ஐந்து!
கையில் விரல்கள் ஐந்து!
ஆறு!
உணவின் சுவைகள் ஆறு!
ஏழு!
வாரத்தின் நாட்கள் ஏழு!
எட்டு!
எட்டுக்கால் பூச்சியின் கால்கள் எட்டு!
ஒன்பது!
தானிய வகை ஒன்பது!
பத்து!
இரண்டு கைவிரல்கள் பத்து!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன். கன்னடக் காட்சி
ஒலி மூலம் : infobells.com)

***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7503
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4359

http://ssoundarapandian.blogspot.in

சிவா likes this post

Back to top Go down

request கன்னடக் குழந்தைப் பாடல்கள் (64 - 66 )

Post by Dr.S.Soundarapandian Mon Sep 20, 2021 11:43 am

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (64 - 66 )

64 . ஜிராஃபி !

ஜிராஃபி ! ஜிராஃபி !
நம்முடைய ஜிராஃபி!
உயரமான கால்கள் தானே!
நீண்ட கழுத்துத் தானே!
ஜிராஃபி! ஜிராஃபி!
உடலில் வட்ட வட்டமாக
அழகு வடிவு கொண்டது தானே!
ஜிராஃபி! ஜிராஃபி!
உயரத்தில் இருக்கும் பழத்தைத் தானே
எளிதில் பறிக்கும் ஜிராஃபி தானே!
ஜிராஃபி! ஜிராஃபி!

65 . ஹோலி !

ஹோலி! ஹோலி ! ஹோலீ!
வண்ண மயமான ஹோலி!
வண்ண வண்ணப் பொடிகளையுமே!
தூவி மகிழும் ஹோலி!
நண்பர்கள் முகத்தில் வண்ணப் பொடி!
வண்ண நீரைப் பீச்சியே!
கொண்டாடி மகிழும் ஹோலீ!
இனிப்பு வகைகள் தருவாரே!
ஜிலேபி , லட்டுத் தின்போமே!
ஹோலி ஹோலி ஹோலீ!

66 . சாலை !

குறுகிய அகலப் பாதைகள் !
அவற்றில் வருவது கார்கள்!
நடப்பவர்கள் எல்லாம் ஓரத்தில் நடக்க!
சாலை நடுவே போகாதீர்!
சாலை நடுவே போகாதீர்!
சாலை நடுவே போனாலே
விபத்து நடகும் அறிவீரே!
தெரிந்தும் தப்பைச் செய்யாதீர்!
தெரிந்தும் தப்பைச் செய்யாதீர்!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன். கன்னடக் காட்சி ஒலி
மூலம் : infobells.com)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7503
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4359

http://ssoundarapandian.blogspot.in

சிவா likes this post

Back to top Go down

request கன்னடக் குழந்தைப் பாடல்கள் (67 - 69 )

Post by Dr.S.Soundarapandian Wed Sep 22, 2021 1:44 pm

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (67 - 69 )

67 . நான் ஒரு மங்கண்ணா !

நானு ஒரு மங்கண்ணா !
எனக்கு வாலு ஒன்று உண்டண்ணா!
நாலு காலால் நான் நடப்பேன்!
டான்ஸ்களும் ஆடுவேன்!
இடுப்பில் வளையம் வைத்தேதான்
ஆட்டமும் காட்டுவேன்!
நானு ஒரு மங்கண்ணா!

68 .சிறுவன் வாங்கிய பரிசு !

தாத்தா தாத்தா !
என் முத்துத் தாத்தா !
நான் பெற்று வந்த பரிசையுமே !
பார் தாத்தா!
பாட்டி பாட்டி!
என் முத்துப் பாட்டி!
நான் கொண்டு வந்த பரிசையுமே
பார் பாட்டி!
ஓட்டப் பந்தயத்தில் எனக்கு முன்னே
இரண்டுபேர் ஓடினார்கள்!
நான் முந்திக் கொண்டு
முதலிடம் பிடித்தேன்!
நான் பெற்று வந்த பரிசையுமே
பாருங்கள்! பாருங்கள்!
முத்துப் பையா உன்னோடு
இருப்பதே எனக்கு ஆனந்தம்!
நீஎனக்கு என்றென்றும்
பெருமையே கண்ணா!
அங்கே இங்கே ஓடியாடி
நானும் வருவேனே!
எப்போதும் எங்கள் ஆசீர்வாதம்
உனக்கும் தானே உண்டப்பா!
ஆட்டத்தில் மட்டும் அல்ல
ஓட்டத்திலும் நான்தான்
முதலில் வருவேனே!

69 .வாகனங்கள்! வாகனங்கள் !

வகை வகை வண்டிகள் உள்ளனவே !
ஆட்டம் ஆடுக அவற்றுடனே !
பலவகைச் சத்தங்க ளுடனே
சாலையில் வண்டிகள் ஓடுமே!
வண்ண வண்ண வண்டிகளும்
ஓசை யுடனே ஓடுமே!
பள்ளி மாணவர்களைக்
கொண்டு செல்லுமே பஸ்!
அலுவலகம் செல்லப் புதுப்புதுப்
பைக்குகள் உள்ளனவே!
பாரங்களையே ஏற்றிச் செல்லப்
பெரிய வண்டிகள் இருக்கின்றன!
எல்லா மக்களும் எறிச் செல்லப்
பெரிய பஸ்களும் ஓடுகின்றன!

டிக்கட் எடுக்காத ஆட்களையுமே
இடையில் இறக்கி விடுவாரே!
உடல்நல மில்லா ஆட்களை ஏற்றி
மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லும்
ஆம்பு லன்ஸுகளும் ஓடுகின் றனவே!
தீயை அணைக்க மணியடித்தே
விரைவாய் ஓடும் வண்டியுமே!

-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன்.கன்னடக் காட்சி ஒலி
மூலம் : infobells.com)
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7503
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4359

http://ssoundarapandian.blogspot.in

சிவா likes this post

Back to top Go down

request கன்னடக் குழந்தைப் பாடல்கள் (70 - 72 )

Post by Dr.S.Soundarapandian Thu Sep 23, 2021 12:50 pm

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (70 - 72 )

70 . லாலாஜியும் தண்ணீரும்  !

லாலாஜி குளிக்கப் போனாரே!
உடம்பில் சோப்பைத் தேய்த்தாரே!
தண்ணீரைத் திருகி விட்டே
குளிக்கவும் ஆரம் பித்தாரே!
கிணிகிணி கிணிகிணி
தொலைபேசி மணியும் அடித்ததே!
லாலாஜி திறந்த தண்ணீர்
கொட்டிக் கொண் டிருந்ததே!
லாலாஜி பேசி முடித்து வந்துமே
உடம்பில் சோப்பைப் போட்டாரே!
தண்ணீரைத் திருகிப் பார்த்தாரே
தண்ணீரோ காலி! காலி!
தண்ணீர் இல்லாமல்
அவஸ்தையும் அடைந்தார் அடைந்தாரே!

71 . லாலாஜியின் பொய்   !

தண்ணீர் வண்டி வந்ததே!
பலரும் பிடிக்கச் சென்றனரே!
லாலாஜி வந்து பார்த்தாரே!
அவருக்கு நீர் அவசியம் ! அவசியம்!
லாலாஜி தந்திரம் செய்தாரே!
‘உடல்நலம் இல்லாதவன்’
என்றொரு பொய்யைச் சொன்னாரே!
வரிசையில் முந்தியும் நின்றாரே!
வரிசையில்  நின்றோர் கண்டுபிடித்து
லாலாஜியைத் திட்டினரே ! விரட்டினரே!
பின்னர் வரிசைக்கு வந்தார் லாலாஜி!
இப்படித்தான் நாமும் எப்போதுமே
வரிசையைப் பேண வேண்டுமே!

72 . பொம்மை வீடு    !

பிளாஸ்டிக் கட்டிகளை!
ஒன்றோடு ஒன்றாய்ச் சேர்த்தேதான்
நானும் வீடு கட்டுவேனே !
நாலு பக்கமும் சுவரை எழுப்பி
மேலே ஒரு கூரை கட்டி
புகை போக்கி ஒன்றையுமே இட்டு
வீடு கட்டினேன்!
வீட்டுக்கு வண்ணமும் அடித்தேனே
காற்றுக்காகச் சன்னலும்
வாசலுக்காகக் கதவும் கூடக்
கட்டினேனே!
அம்மா அப்பா பார்த்து மிகவும்
மெச்சினாரே!
முத்தமும் இட்டாரே!
மிகவும் பெருமைப் பட்டாரே!
                                              -(கன்னட மூலத்திலிருந்து தமிழில்      
                                               மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
                                               சௌந்தரபாண்டியன்.கன்னடக் காட்சி ஒலி
                                              மூலம் : infobells.com)
                                              ***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7503
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4359

http://ssoundarapandian.blogspot.in

சிவா likes this post

Back to top Go down

request கன்னடக் குழந்தைப் பாடல்கள் (73 - 75 )

Post by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 10:25 pm

கன்னடக் குழந்தைப் பாடல்கள் (73 - 75 )

73 . பால் !

பாலு பாலு பாலு!
மியாவ் மியாவ் மியாவ்
என்று கத்தியே
பூனை ஒன்று வந்ததே!
பாலின் சக்தியை அறிந்தே அது
வந்ததே!
குவா குவா என்று
குழந்தை அழுதது!
அம்மா எடுத்துப் பால் கொடுத்ததும்
அழுகையை நிறுத்தியதே!
பசுவைப் போன்ற சக்தி
பசுவின் பாலில் உள்ளதே!
பால் நமது உடலுக்கு நல்லது!
நோய்களைத் தீர்ப்பது பால் தானே!

74 . சுதந்திர தினப் பாடல் !

வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
பாரத தேசம் நம்ம தேசம்!
கோடி கோடி நம்
மக்களின் தேசம்!
மொழி ஆடைகள் பலவிதம்!
ஆனால் நாடு ஒன்று பாரதமே!
அகிம்சை தர்மம் தருவதே
நமது பாரத தேசமே!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
உலகுக் கெல்லாம் குருவாக
இருப்பது நம்ம பாரதம்!
தேசங்கள் இடையே பேதம் காட்டாத
உன்னத நாடு பாரதம்!
தேசிய கீதம் கேட்பதாலே
தேசப் பற்று உண்டாகுமே!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

75 . எலிகளின் பாட்டு !

இரண்டு எலிகளே!
சின்ன எலிகளே!
பாலைக் குடிக்கத் தாவியே!
நன்றாகக் குடித்தனவே!
பெரிய எலி வந்தது!
‘நானும் வரவா பால் குடிக்க?’
என்றே தானே கேட்டது!
‘ஐயோ வேண்டாமே!
நீ வந்தால் எம்மைக் கொல்லுவாய்!
எங்கள் வாலை வெட்டுவாய்!’
என்றே பதில் சொன்னவே!
இரண்டு எலிகள் சின்ன எலிகளே!
இலட்டைத் தின்று மகிழ்ந்தனவே!
நாய் ஒன்று வந்ததே
‘நானும் வரவா? இலட்டுத் தின்ன?’
என்றும் தானே கேட்டது!
‘ஐயோ வேண்டாமே!
நீ வந்தால் எங்களையே
கொல்லுவாய் வாலையுமே
வெட்டிடு வாயே!’
என்றன எலிகளும் தாமே!
இரண்டு எலிகள் வந்தன!
இரண்டு எலிகள் வந்தன!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன்.
கன்னடக் காட்சி ஒலி மூலம் : infobells.com)
***
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7503
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4359

http://ssoundarapandian.blogspot.in

சிவா likes this post

Back to top Go down

request Re: கன்னடக் குழந்தைப் பாடல்கள் (97 - 100 )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை