by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
* ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது
* தாலிபான் ஆட்சியின் இருண்ட நாட்கள் திரும்புகிறதோ என்ற அச்சத்தில் பெண்கள்
* ஆப்கான் தலைநகர் காபுலை கைப்பற்றிய தாலிபான்கள்
ஆப்கான் பெண்களுக்கு நரக வாழ்க்கை ஆரம்பம்..!
#ஆப்கானிஸ்தான் நிலத்தின் ஒவ்வொரு அங்குல பகுதியிலும் #தலிபான் களின் ஆதிக்கம் அதிகரித்து வருவது ஆப்கானிஸ்தான் பெண்கள் நரகம் போன்ற சித்திரவதைகளை அனுபவித்த சகாப்தத்தை நினைவூட்டுகிறது. 1996 மற்றும் 2001 க்கு இடையில், நாடு #தாலிபான் களால் ஆளப்பட்டது. அது பெண்களுக்கான இருண்ட காலம். இது மிகவும் மோசமான காலகட்டம். பெண்களின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், அவர்களின் வாழ்க்கையை நரகமாக்கியது.
பெண்கள் தங்கள் வீடுகளில் கைதிகள் போல் வாழ்ந்தனர்
ஆப்கானிஸ்தானில் (Afghanistan) தாலிபான் காலத்தில், பெண்கள் தங்கள் வீடுகளில் கைதிகளாக வாழ்ந்தனர். அவர்கள் வீட்டை விட்டு வெளியேறவோ அல்லது படிக்கவோ, வேலைக்கு செல்லவோ அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் கட்டாயத்தின் பேரில் வெளியே செல்ல வேண்டியிருந்தால், ஒரு ஆண் உறவினர் துணையோடு தான் செல்ல வேண்டும். இருப்பினும், #தலிபான்கள் பல மாகாணங்களைக் கைப்பற்றிய பிறகு இத்தகைய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டதா என்பது குறித்து உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் சமீபத்தில் ஒரு இளம் பெண் இறுக்கமான ஆடை அணிந்திருந்ததால் தாலிபான்களால் கொல்லப்பட்டார் என்ற செய்தி வெளியானது.
நவீன வடிவமைப்புடன் செருப்பை அணிந்ததற்காக தாக்குதல்
வீடுகளை விட்டு வெளியேறி, காபூலில் சாலையோரத்தில் அல்லது பூங்காக்களில் தஞ்சமடையும் குடும்பங்களின் நிலைமையை விவரித்துள்ளது அசோசியேட்டட் பிரஸ்ஸின் அறிக்கை ஒன்று . இந்த குடும்பங்களில் ஒன்று வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள தகர் மாகாணத்தைச் சேர்ந்தது, அங்கு பெண்கள் ரிக்ஷாவில் வீட்டுக்குச் சென்ற போது, அவர்கள் நவீன வடிவமைப்புடன் செருப்பை அணிந்ததால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது #தாலிபான்கள் ஆக்கிரமித்துள்ள பகுதி.
பெண்கள் சந்தித்த இருண்ட காலம் திரும்புகிறதா
சமீபத்திய நாட்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான இந்த கொடூர சம்பவங்கள், 2001 -க்கு முன்பு இருந்த பழைய தலிபான் ஆட்சியை மக்களுக்கு நினைவூட்டியது. 1996 ஆம் ஆண்டு காபூலில் தலிபான்கள் நுழைந்தபோது, காபூலைச் சேர்ந்த பெண்கள் உரிமை ஆர்வலர் #ஜெர்மினா கக்கருக்கு ஒரு வயது. அவரது தாயார் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக அவரை வெளியே அழைத்துச் சென்றார், அப்போது சாப்பிட அவர் முகத்தில் இருந்த முக்காட்டை அகற்றினார், இதன் காரணமாக ஒரு தலிபான் போராளி அவரை கடுமையாக தாக்கினார். 'இன்று மீண்டும் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தால், நாம் மீண்டும் அந்த இருண்ட நாட்களுக்குத் திரும்புவோம் என்று எனக்குத் தோன்றுகிறது' என அவர் கூறுகிறார்
அந்த நேரத்தில், தலிபான்கள் விபச்சார குற்றச்சாட்டின் கீழ் பகிரங்கமாக பெண்களை தூக்கில் தொங்க விடுவது, தலையை வெட்டுவது மற்றும் பெண்களைக் கல்லால் அடிப்பது போன்ற கொடூர சம்பவங்களை அரங்கேற்றினர். இப்போது பெண்கள் அந்த இருண்ட காலம் திரும்புமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
இந்தியாவிற்கான கடைசி ஏர் இந்தியா விமானமும் காபூலிலிருந்து தற்போது புறப்பட்டு 129 இந்தியர்களும் பத்திரமாக டில்லி வந்திறங்கினர்.
இந்தியாவிலிருந்து வாரத்தில் மூன்று நாட்கள் காபூலுக்கு இயக்கப்பட்ட #ஏர்_இந்தியா விமானம், இனி இயக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1350045சிவா wrote:* ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது
* தாலிபான் ஆட்சியின் இருண்ட நாட்கள் திரும்புகிறதோ என்ற அச்சத்தில் பெண்கள்
* ஆப்கான் தலைநகர் காபுலை கைப்பற்றிய தாலிபான்கள்ஆப்கான் பெண்களுக்கு நரக வாழ்க்கை ஆரம்பம்..!
#ஆப்கானிஸ்தான் நிலத்தின் ஒவ்வொரு அங்குல பகுதியிலும் #தலிபான் களின் ஆதிக்கம் அதிகரித்து வருவது ஆப்கானிஸ்தான் பெண்கள் நரகம் போன்ற சித்திரவதைகளை அனுபவித்த சகாப்தத்தை நினைவூட்டுகிறது. 1996 மற்றும் 2001 க்கு இடையில், நாடு #தாலிபான் களால் ஆளப்பட்டது. அது பெண்களுக்கான இருண்ட காலம். இது மிகவும் மோசமான காலகட்டம். பெண்களின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், அவர்களின் வாழ்க்கையை நரகமாக்கியது.பெண்கள் தங்கள் வீடுகளில் கைதிகள் போல் வாழ்ந்தனர்
ஆப்கானிஸ்தானில் (Afghanistan) தாலிபான் காலத்தில், பெண்கள் தங்கள் வீடுகளில் கைதிகளாக வாழ்ந்தனர். அவர்கள் வீட்டை விட்டு வெளியேறவோ அல்லது படிக்கவோ, வேலைக்கு செல்லவோ அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் கட்டாயத்தின் பேரில் வெளியே செல்ல வேண்டியிருந்தால், ஒரு ஆண் உறவினர் துணையோடு தான் செல்ல வேண்டும். இருப்பினும், #தலிபான்கள் பல மாகாணங்களைக் கைப்பற்றிய பிறகு இத்தகைய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டதா என்பது குறித்து உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் சமீபத்தில் ஒரு இளம் பெண் இறுக்கமான ஆடை அணிந்திருந்ததால் தாலிபான்களால் கொல்லப்பட்டார் என்ற செய்தி வெளியானது.நவீன வடிவமைப்புடன் செருப்பை அணிந்ததற்காக தாக்குதல்
வீடுகளை விட்டு வெளியேறி, காபூலில் சாலையோரத்தில் அல்லது பூங்காக்களில் தஞ்சமடையும் குடும்பங்களின் நிலைமையை விவரித்துள்ளது அசோசியேட்டட் பிரஸ்ஸின் அறிக்கை ஒன்று . இந்த குடும்பங்களில் ஒன்று வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள தகர் மாகாணத்தைச் சேர்ந்தது, அங்கு பெண்கள் ரிக்ஷாவில் வீட்டுக்குச் சென்ற போது, அவர்கள் நவீன வடிவமைப்புடன் செருப்பை அணிந்ததால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது #தாலிபான்கள் ஆக்கிரமித்துள்ள பகுதி.பெண்கள் சந்தித்த இருண்ட காலம் திரும்புகிறதா
சமீபத்திய நாட்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான இந்த கொடூர சம்பவங்கள், 2001 -க்கு முன்பு இருந்த பழைய தலிபான் ஆட்சியை மக்களுக்கு நினைவூட்டியது. 1996 ஆம் ஆண்டு காபூலில் தலிபான்கள் நுழைந்தபோது, காபூலைச் சேர்ந்த பெண்கள் உரிமை ஆர்வலர் #ஜெர்மினா கக்கருக்கு ஒரு வயது. அவரது தாயார் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக அவரை வெளியே அழைத்துச் சென்றார், அப்போது சாப்பிட அவர் முகத்தில் இருந்த முக்காட்டை அகற்றினார், இதன் காரணமாக ஒரு தலிபான் போராளி அவரை கடுமையாக தாக்கினார். 'இன்று மீண்டும் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தால், நாம் மீண்டும் அந்த இருண்ட நாட்களுக்குத் திரும்புவோம் என்று எனக்குத் தோன்றுகிறது' என அவர் கூறுகிறார்அந்த நேரத்தில், தலிபான்கள் விபச்சார குற்றச்சாட்டின் கீழ் பகிரங்கமாக பெண்களை தூக்கில் தொங்க விடுவது, தலையை வெட்டுவது மற்றும் பெண்களைக் கல்லால் அடிப்பது போன்ற கொடூர சம்பவங்களை அரங்கேற்றினர். இப்போது பெண்கள் அந்த இருண்ட காலம் திரும்புமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
ஆஹா...மிகவும் கொடுமை.....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1350051சிவா wrote:இந்தியர்களை அழைத்து வர ஆப்கானிஸ்தான் சென்ற ஏர் இந்தியா விமானம் 129 பயணிகளுடன் இந்தியாவிற்கு புறப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வர காபூல் விரைந்தது ஏர் இந்தியா விமானம். இந்த விமானம் அங்கு பணியாற்றும் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள், ஊழியர்கள், என அனைவரையும் அழைத்து கொண்டு ஏர் இந்தியா விமானம் இன்று இரவே தாயகம் திரும்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதற்கட்டமாக காபூலில் இருந்து 129 பயணிகளுடன் டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டதாக கூறப்படுகிறது.
தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
நல்ல முடிவு...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1350056சிவா wrote:தாலிபன்கள் காபூல் பக்கமாக வந்துவிட்டார்கள் ஆனால் வானில் இருக்கும் சாட்டிலைட்டுகள் தங்களை கண்காணிக்கும் என்பது அவர்களுக்கு தெரிந்துவிட்டது
இதற்காக செயற்கைகோளை அழிக்கும் ஏவுகனைகளையா அவர்களால் ஏவமுடியும்?
இதனால் மிக எளிதான வழியினை கண்டுவிட்டார்கள், ஆம் காபூல் தெருக்களை டயர்களாலும் இன்னும் பல பொருட்களாலும் எரித்து பெரும் புகையினை கிளப்பிவிட்டுவிட்டார்கள்
மிக பெரிய கரும்புகையில் நகரம் சிக்க, அமெரிக்க சாட்டிலைட்டுகள் திணறுகின்றன, அமெரிக்க விமானங்களும் தடுமாறுகின்றன
இது என்னவகை தாக்குதலோ தெரியவில்லை, இன்னும் எவ்வளவு தாக்குதல் உத்தி உண்டோ என்பதும் பகீர் என்கின்றதுபின்லேடனிடம் இருந்து இதையெல்லாம் குகை போட்டு கற்றிருப்பார்கள் போலிருக்கின்றது
அமெரிக்க வீரர்களும் ராஜதந்திரிகளும் இன்னும் பிரிட்டானியர் உள்ளிட்டோர் காபூலில் சிக்கி கொள்ள, மிக பெரிய புகைமூட்டம் அங்கே கிளம்பியிருக்கும் நிலையில் காட்சிகள் மிக மிக உக்கிரமாகின்றன
என்ன வொரு பயங்கரம்......
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
ஆப்கன் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: ஐ.நா., பொதுச்செயலர் வலியுறுத்தல்
ஐ.நா. ஆப்கன் மக்கள் பாதுகாக்க வேண்டும் என ஐ.நா.பொதுச்செயலர் ஆண்டனியோ கட்டரஸ் தெரிவித்துள்ளார். ஆப்கான் நிலைமை குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் இன்று (ஆக.16) நடந்தது.
இதில் பங்கேற்று ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியே கட்டரஸ் கூறியது, ஆப்கன் நிலவரத்தை ஐ.நா.கண்காணித்து வருகிறது. அங்குள்ள ஆப்கன் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். நாட்டை விட்டு வெளியேறும் அவர்களை மற்ற நாடுகள் ஏற்றுக்கொண்டு ஆதரவு அளிக்க வேண்டும். அவர்கள் நாடு கடத்தப்படுவதை தவிர்க்க வேண்டும். ஆப்கனில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் கவலை அளிக்கிறது. இக்கட்டான நிலையில் சர்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆப்கன் நிலைமையை கண்காணித்து வருகிறோம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதி தலிபான் பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில் ஆப்கனில் சிக்கியுள்ள இந்தியர்கள் குறித்து இன்று மத்திய வெளியுறவு அமைச்சகம் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்தியில், ஆப்கன் நிலைமையை தொடர்ந்து கவனித்து வருகிறோம். அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுரை வழங்கியுள்ளோம். அங்குள்ள இந்தியர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றோம். அவர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கட்டுகட்டாக பணத்தை கார்களில் திணித்து எடுத்துச் சென்ற அஸ்ரப் கனி..!
ஆப்கானிஸ்தானில் தற்போது தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ளனர். அல்லாஹ்வின் உதவியுடன் ஆட்சியைப் பிடித்தோம் என்று தலிபான் தலைவர்கள் பெருமையாக பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்து வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் அஷ்ரஃப் கனி கட்டுக்கட்டாக பணம், நான்கு கார்கள், ஒரு ஹெலிகாப்டர் உடன் ஓமனுக்கு சென்று தஞ்சம் அடைந்து விட்டார் என காபுலில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகள் தற்போது தகவல் அளித்துள்ளனர்.
முன்னதாக தலைநகர் காபூலின் அனைத்து பகுதிகளையும் தாலிபான்கள் கட்டுப்படுத்த துவங்கியபோது வன்முறையையும் போராட்டத்தையும் தவிர்க்கத் தான் பதவி விலகுவதாக அறிவித்த அஷ்ரப் கனி அண்டை நாடான டாஜ்கிஸ்தானில் குடி ஏற முயன்றார். ஆனால் அவரை நாட்டுக்குள் அனுமதிக்க அந்நாட்டு அரசு மறுப்பு தெரிவித்தது.
இதனை அடுத்து அவர் நான்கு கார்களில் கட்டுக்கட்டாக பணத்தை அடைத்து திணித்து அதுபோதாமல் ஹெலிகாப்டர் ஒன்று பணக்கட்டுகளை வைத்து ஓமனுக்கு சென்று குடியேறி விட்டார் என்று ரஷ்ய அதிகாரிகள் கூறினர். கனியின் அலுவலகத்தில் மேலும் கட்டுக்கட்டாக பணம் இருந்தாலும் அதனை எடுத்துச் செல்ல முடியாததால் பணக்கட்டுகள் ஆங்காங்கே சிதறிக்கிடந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில் தாலிபான்கள் தங்களது ஆட்சியில் பழைய இஸ்லாமிய சட்டங்களை மீண்டும் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளனர். 10 வயதுக்குமேல் பெண் குழந்தைகள் பள்ளி சென்று படிக்கக் கூடாது, அவர்கள் தங்கள் முகம் மற்றும் உடலை முழுவதுமாக மூடும் ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும், திருடக் கூடாது உள்ளிட்ட பல இஸ்லாமிய சட்டங்களை தாலிபான்கள் அமல்படுத்த உள்ளனர்.
குற்றவாளிகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றுதல், பிரம்படி கொடுத்தால் உள்ளிட்ட தண்டனைகளை அளிக்கவும் தாலிபான்கள் திட்டமிட்டுள்ளனர். இவர்களது இந்த கொடுமையான ஆட்சிக்கு தற்போது சீனா ஆதரவு தெரிவித்துள்ளது கடும் கண்டனத்தை பெற்றுள்ளது. ஒரு பயங்கரவாத அமைப்பு இஸ்லாமிய நாட்டை ஆக்கிரமித்து ஆளுவது உலகையே அச்சுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆப்கனில் பரிதாபம்; விமான டயரில் தொங்கியபடி பயணித்த 3 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் தலிபான்களிடம் இருந்து தப்பிக்க அமெரிக்க விமானத்தின் டயரில் தொங்கியபடி பயணித்த 3 பேர் விமானம் பறந்த போது வானத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தனர்.
தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுவதுமாக கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் தலிபான்களுக்கு பயந்து வெளிநாட்டவர்களும், சொந்த நாட்டவர்களுமே நாட்டைவிட்டு வெளியேற முயற்சித்து வருகின்றனர். ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையத்தை தலிபான்கள் மூடியதுடன் அனைத்து விமான சேவைகளையும் நிறுத்தி வைத்துள்ளது. சில விமானங்கள் அங்கிருந்து இயக்கப்பட்டபோது, பலரும் முண்டியடித்து விமானத்தில் ஏறினர். அதேபோல், அமெரிக்க ராணுவ விமானம் ஒன்றும் காபூலில் இருந்து கிளம்பியது.
இதில் ஆப்கனில் இருந்து தப்பித்து செல்லவேண்டும் என பலரும் விமானத்தின் ஓரப்பகுதி, டயர் பகுதியில் தொங்கியபடி சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அதில், தஞ்சம் கேட்டு ஆப்கன் மக்கள் பலர் விமானத்தை சுற்றி ஓடிவருவதாகவும், மறுபுறம் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறுவதை கொண்டாடும் விதமாக தலிபான் ஆதரவாளர்கள் அதை சுற்றி கோஷமிடுவதாகவும் வீடியோவில் பதிவாகியுள்ளது. மேலும், விமானம் நடுவானில் பறந்தநேரத்தில் டயர் பகுதியில் தொங்கியபடி பயணித்தவர்களில் 3 பேர் வானத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆப்கனில் தலிபானுடன் நட்புறவு: சீனா அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான அரசுடன் நட்புரீதியிலான உறவை மேம்படுத்த தயாராக உள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
ஆப்கனில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கிய நிலையில், அந்நாட்டில் தலிபான்கள் ஆதிக்கம் அதிகரித்தது. தலிபான்கள் தங்களின் தாக்குதல்களை அதிகப்படுத்தியதுடன் பல முக்கிய நகரங்களை அடுத்தடுத்து தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி பதவியை ராஜினாமா செய்ததுடன் காபூலை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காபூலையும் கைப்பற்றிய தலிபான்கள், ஆப்கானிஸ்தானின் ஆட்சியதிகாரத்தையும் தன்வசப்படுத்தினர். ஆப்கன் அதிபர் மாளிகை உள்பட அனைத்து பகுதிகளையும் கைப்பற்றிய தலிபான்கள் போர் முடிவுக்கு வந்து விட்டதாக அறிவித்தன.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான அரசுடன் நட்புரீதியிலான உறவை மேம்படுத்த தயாராக உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. முன்னதாக, தலிபான் தலைமையிலான அரசை பாகிஸ்தான் ஆதரித்த நிலையில், தற்போது சீனாவும் ஆதரவளித்துள்ளது. மேலும், தலிபான்களின் நடவடிக்கைகளை பொறுத்து அவர்களுக்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆப்கானிஸ்தான் இனி 'ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம்' என அழைக்கப்படும்: தாலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் இடைக்கால ஆட்சியை நிறுவியுள்ளதாகவும், அதற்கு 'ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம்' என்று பெயர் மற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் இனி ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம் என அழைக்கப்படும்: தாலிபான்கள்
ஆப்கானிஸ்தானின் அனைத்து நகரங்களையும் கைப்பற்றிய பிறகு, தலைநகரான காபூலையும் தாலிபான்கள் கைப்பற்றியுள்ளதால் ஒட்டு மொத்த நாடும் அவர்களின் ஆட்சிக்கு கீழ் வந்துள்ளது. இதனையடுத்து அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிகாரம் தாலிபான்கள் கையில் சென்றிருக்கிறது.
கடந்த 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடத்தப்பட்ட இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை அகற்றி அமெரிக்கா அங்கு ஜனநாயக முறைப்படி ஆட்சியை நிறுவியது. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் அரசு படைகளுக்கும் தாலிபான்களும் மோதலில் ஈடுபட்டு வந்தனர். அரசு படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கப்படைகளும் ஐரோப்பிய படைகளும் களத்திற்கு வந்தனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் நடந்த முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதையடுத்து ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் என அவர் அறிவித்தார். அதனையடுத்து முக்கிய நகரங்களை ஒன்றன்பின் ஒன்றாக கைப்பற்றத் தொடங்கிய தாலிபான்கள் இறுதியாக தலைநகர் காபூலையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தாலிபான்களின் கை ஓங்கியதை அடுத்து அதிகாரத்தை அவர்களுக்கே விட்டுத்தர அதிபர் அஷ்ரப் கானி ஒப்புக்கொண்டார். இதன் தொடர்ச்சியாக அவர் ஆப்கானிஸ்தானை விட்டே வெளியேறிவிட்டார். இதனையடுத்து காபூலில் உள்ள அதிபர் மாளிகை தாலிபான்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.
இதனையடுத்து அங்கு தாலிபான்கள் இடைக்கால ஆட்சியை நிறுவியுள்ளதாகவும், அதற்கு இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான் என்று பெயர் மற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
» 'மீண்டும் திமுக ஆட்சி' - ஹெட்லைன்ஸ் டுடே, ஸ்டார் நியூஸ்; 'அதிமுக ஆட்சி' - சிஎன்என் ஐபிஎன்
» ஆப்கானிஸ்தானில் 150 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சரண்
» ஆப்கானிஸ்தானில் ஆயிரம் அமெரிக்க வீர்ர்கள் பலி
» ஆப்கானிஸ்தானில் 10 வெளிநாட்டு டாக்டர்கள் சுட்டுக்கொலை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்