புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மருத்துவம் - Page 6 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 6 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 6 Poll_c10 
62 Posts - 57%
heezulia
தமிழ் மருத்துவம் - Page 6 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 6 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 6 Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
தமிழ் மருத்துவம் - Page 6 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 6 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 6 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழ் மருத்துவம் - Page 6 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 6 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 6 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மருத்துவம் - Page 6 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 6 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 6 Poll_c10 
104 Posts - 59%
heezulia
தமிழ் மருத்துவம் - Page 6 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 6 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 6 Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
தமிழ் மருத்துவம் - Page 6 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 6 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 6 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழ் மருத்துவம் - Page 6 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 6 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 6 Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் மருத்துவம்


   
   

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 27, 2021 11:51 pm

First topic message reminder :



கோட்பாடு விளக்கம்

சித்த மருத்துவக் கோட்பாடு என்பது, அம்மருத்துவம் எந்தக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு மருத்துவம் செய்யப் படுகின்றதோ அக்கொள்கையின் அடிப்படையைக் குறிப்பிடுவதாகும்.

மருத்துவக் கோட்பாடு

உடலைப் பற்றி அறிவது; உடலில் தோன்றும் நோய்களைக் கண்டறியும் கருவிகளை உருவாக்குதல்; நோய்களுக்கான காரணங் களைக் கூறல்; நோய்களுக்குரிய மருந்துகளை உடலியலுக்கு ஏற்றவாறு அமைத்தல்; மருந்துகளால் நோய்களைத் தீர்க்கும் முறைகளை வகுத்தல்; நோயிலிருந்து விடுபடல்; தடுத்தல்; பாது காத்தல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மருத்துவக் கோட்பாடு உருவாக்கப்படும்.

சித்த மருத்துவக் கோட்பாடு

சித்த மருத்துவக் கோட்பாடு ஐம்பூதக் கொள்கையை அடிப் படையாகக் கொண்டது. இந்த உலகம் ஐம்பூத மயமானது; இந்த உலகத்திலுள்ள உயிர்கள் அனைத்தும் அவற்றால் உருவானவையே; மனித உடலும், உடல் உறுப்புகளும் ஐம்பூதங்களை ஆதாரமாகக் கொண்டு உருவானவை; உடலில் தோன்றும் நோய்களுக்குக் காரணமாக அமைவதும், அந்நோய்களைத் தீர்க்கும் மருந்துப் பொருள்களும், மருந்தும் பஞ்சபூதச் சேர்க்கையினாலேயே உருவா கின்றன. இயற்கையாகத் தோன்றிய பஞ்சபூத முறைக்கு மாறாக அமையும் மருந்துகள், பயன் தர மாட்டா என்னும் கருத்துகளின் அடிப்படையில் வகுக்கப் பெற்றதாகும்.

பஞ்சபூதம்

பஞ்சபூதம் என்பது, நிலம், தீ, நீர், காற்று, ஆகாயம் என்னும் ஐந்தாகும். இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லா விட்டாலோ, குறைந்தாலோ உயிர்கள் தோன்றவும் வாழவும் வழியில்லை. உயிர்கள் தோன்றவும் உய்யவும் காரணமாக அமைவது பஞ்ச பூதமாகும்.

"" நிலம், தீ, நீர், வளி, விசும் பொடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்''1

இந்த உலகம், பஞ்சபூதங்களின் கலவையால் உருவானதே என்று, தொல்காப்பியம் உரைக்கிறது.

உலகமும் பஞ்சபூதமும்

உலகம் பஞ்சபூதங்களின் கலவையினால் உருவாகியிருப்பதைப் போல, நிலவுலகில் உருவாகி யிருக்கும் பொருள்களும் பஞ்சபூதங் களின் கலவையால் அல்லது சேர்க்கையால் உருவானவை.2 பஞ்ச பூதங்களின் தொகுதியே உயிரினங்களை உருவாக்கின என்பதால், உயிர்த் தோற்றத்திற்குப் பஞ்சபூதங்களே ஆதியாக அமைவது தெரிய வருகிறது.3

“ வாறான சனங்களுக்கும் ஐந்து பூதம்
மருவியதோர் தேவதைக்கும் ஐந்து பூதம்
தாறான அண்டமெலாம் ஐந்து பூதம்
சதாசிவமாய் நின்றதுவும் ஐந்து பூதம்
கூறான யோனியெல்லாம் ஐந்து பூதம்
குரும்பனே ஐந்தினால் எல்லாம் ஆச்சு''4

என்று, சட்டைமுனி உரைக்கின்றார். ஐம்பூதங்களால் உருவானவை மனிதர் மட்டுமல்ல, தேவதைக்கும் அவைதாம். சதாசிவமாய் நின்ற தெய்வத்துக்கும் அவைதாம். உயிரினங்கள் அனைத்துக்கும் அவைதாம். அவற்றால்தான் அனைத்துமே உருவாயிற்று என்று தெளிவுபடுத்துவர்.

உயிரினங்கள் பஞ்சபூதங்கள் அல்லாமல் வேறு முறையில் உருவானவை அல்ல என்பதே இதன் அடிப்படைக் கருத்து.

ஒரு பொருளின் மூலத்தைக் கண்டுரைப்பதைப் போல, உயிரினங்கள் அனைத்திற்கும் மூலமாய் நிற்பது பஞ்சபூதங்கள் என எண்ணினர்.




தமிழ் மருத்துவம் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 1:11 am



கற்பம்

‘கற்பம்’ என்பது உடலைக் காக்கும் மருந்து அல்லது உடலைக் கற்போல் மாற்றுகின்ற கருவி. கற்பம் உண்பவர், நீண்ட நாள் வாழ்வர் என்பதும், கற்பம் உண்டவர் நோயற்ற நிலையடைவார் என்பதும் பொது வழக்கு.

கற்பம் இரண்டு வகையாக உரைக்கப் பெறும். ஒன்று மருந்து கற்பம்; மற்றொன்று யோகக் கற்பம்.

‘கற்பம்’ எல்லாப் பொருளினும் சிறந்தது. அல்லது எல்லா முறையினும் சிறந்தது என்பதும் பொருந்தும்.

"" காலமே யிஞ்சி யுண்ணக் காட்டினார் சூத்தி ரத்தில்

மாலையதி லேக டுக்காய் மத்தியானஞ் சுக்க ருந்த

சூலமே தேக மடா சுக்கிலத்தைக் கட்டி விடும்

ஞாலமே உனது விந்து நற்றேங் காய்போ லாமே''

காலையில் இஞ்சியும், கடும்பகலில் சுக்கும், மாலையில் கடுக்காயும் அருந்தி வந்தால் துரும்பான உடல் இரும்பாகும். விந்து கட்டி, இறுகும். என்பது இதன் கருத்தானாலும், இந்த முறை ஒன்று மட்டும் கற்பமல்ல. மருந்துகளில், மூலிகைளில், சாதன முறைகளில் கற்பங்கள் பல உள்ளன.

"" கற்பமுறை முக்க டுகுணவி கற்பமுறை

மூவருக்கங் கட்டை முதலொடு நென் மாத்திரமன்

மூவருக்கங் கட்டையது முன்.''

முக்கடுகு என்பது சுக்கு, திப்பிலி, மிளகு ஆகியன. முதிர்ந்த எருக் கங்கட்டையை வேருடன் கொணர்ந்து வரிசைப் படியே ஒரு மண்டலம், ஒரு நெல்லளவு, சுக்குடன் தண்ணீரில் உண்டால், வாதப் பிணியும், திப்பிலியுடன் உண்டால் பித்தப் பிணியும், மிளகுடன் உண்டால் ஐயப்பிணியும் அற்றுப் போகும் என்பதும் கற்ப முறையில் ஒன்றாகும்.

மூன்று வகை நோயும் இருக்கவொட்டாமற் செய்வதே கற்பத்தின் சிறப்பு என்பதனால், கற்பம் என்பது உடலைக் காக்கும் மருந்தாகும். கற்பம் உண்டால், நெடுங்காலம் உயிர் வாழலாம். உடம்பு கற்×ணைப் போல் உறுதி கொண்டு விளங்கும். சித்தொளி தோன்ற வாழலாம் என்னும் அகத்தியர் வாக்கினால் கற்பத்தின் சிறப்பினை அறியலாம்.

கற்பமுறை:

‘இருக்கவென்று மனம் உரைத்தால்’ கற்பம் உண்க, என்று கற்ப நூல் கூறுகின்றது. இந்த உடலம் நீண்டநாள் நிலைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே கற்பம் என்னும் முறை கண்டறியப்பட்டிருக்கிறது.

"" கேளப்பா மண்டலந்தான் ஒருமா வீதம்

கொண்டாக்கால் சிவனவனாய்க் கூடி வாழ்வான்

கொள்ள கற்பமிது கொண்டா யானால்

கோடியுகஞ் சென்றாலுமோ சாவில்லைதான்''

ஒரு சிறிய அளவு, ஒரு மண்டலம் ( நாள்கள்) கற்பம் உண்டால் மரணமில்லை என்று அறிவிக்கப்படுகிறது. இம்மருந்தை உண்பது எளிது–அரிது எனக் கருதத் தோன்றுகிறது. ஆனாலும்,

"" உருக்கமுடன் பெண்ணாசை பிள்ளை யாø

ஒட்டினால் கற்பமெல்லாம் ஓடிப் போமே.''

கற்பம் உண்ணுகின்ற காலத்திலும், உண்டபின்பும் ஆசைக்கும், பாசத்திற்கும் இடமளித்தால் கற்பம் உண்டது வீணாகும் என்று உரைக்கப்படும். இருப்பினும், உடலில் நோய்கள் தங்காமல் பாதுகாக்க கற்பம் வகை செய்யும். கற்பங்கள், காசினியில் நூற்றெட்டுக் கப்ப மானால், பேசாது மவுனமுற்றுக் கொள்ள வேண்டும், என்று, கடுமையான கட்டளை பிறப்பிக்கப் படுவதனால், கற்பங்கள் என அறிய முடிகிறது. மூலிகைகள், இரசங்கள், உப்புகள், உபரசங்கள் முதலியவற்றைச் சிறந்த முறையில் மருந்துகளாக அமைத்து, அவற்றை உடல் அழியாமல் இருத்தற் பொருட்டு உபயோகித்தார்கள். அவ்வாறு உபயோகித்த மருந்துகளையே ‘கற்பம்’ என்பர்.

கற்பம் உண்ணும் காலம்

கற்பம் எப்பொழுது வேண்டுமானாலும், எப்படி வேண்டு மானாலும் உண்ணக் கூடியதாக இல்லை. காலத்திற்கு ஏற்றவாறு உண்ணுகின்ற முறையில் வேறுபாடு வேண்டும் என்று தெரிவிக்கப் படுகிறது. அதாவது,

“ ஆனி, ஆவணி மாதங்களில் வெல்லத்திலும், சித்திரை, வைகாசி யில் சுக்கு கசாயத்திலும், புரட்டாசி, ஆடியில் குறிஞ்சித் தேனிலும், ஐப்பசி, கார்த்திகையில் குமரிச் சோற்றிலும், மார்கழி, தை, மாசியில் கற்கண்டிலும், பங்குனியில் நெய்யிலும்” உண்ணுமாறு உரைக்கப் பட்டுள்ளது.

இதனால், கற்ப மருந்திற்கும், இயற்கைச் சூழலுக்கும் தொடர்பு இருப்பதாகப் புலப்படுகிறது. மருந்தின் துணைப் பொருளாக உரைக்கப் பெற்ற வெல்லம், சுக்கு, குறிஞ்சித் தேன், குமரிச் சோறு, கற்கண்டு, நெய் ஆகிய பொருள்களின் குணத்திற்கும், மேற்கண்ட மாதங்களின் பெரும்பொழுது குணத்திற்கும் ஓர் ஒற்றுமை உள்ளதை உணரலாம்.

"" நானுண்ட படி சொன்னேன் நீயும் உண்ணு''

என்று, தாம் உண்ட முறையைப் பிறர்க்கும் உரைக்கின்ற பாங்கு சிறப்பிற்குரியதாகும்.

கடுக்காய் கற்பம்:

கடுக்காயைத் தேர்ந்தெடுத்து உடைத்து, அமுரியில் ஊறவைத்து மறுநாள் வெய்யலில் காயவைக்க வேண்டும். இவ்வாறு பத்து முறை செய்ய கடுக்காய் சுத்தியாகும். சுத்தி செய்த கடுக்காய் செங்கடுக்காய் ஆகும்.




தமிழ் மருத்துவம் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 1:12 am


பத்திய முறைகள்:

காலை வல்லாரை, மதியம் அமுது, மாலையில் கடுக்காய்த்தூள் வெருகடி அளவு உண்ணவும். சிறுபயறு, சர்க்கரை, பழம், நல்ல காய்கறிகள் உண்டுவர காய சித்தியாகும். கற்பம் உண்போர் ஒரு வேளை உணவே உட்கொள்ள வேண்டும். பச்சரிசியும் சிறு பயறும் சேர்த்து சமைத்த சோறும், சர்க்கரை, தேன், முக்கனி, பால் இவற்றுடன் ஒரு போதே உண்ண வேண்டும். ‘ஒரு வேளை உண்பவன் யோகி’என உரைப்பதும் நோக்கத் தக்கது. ஒரு படி அமுதுடன் துவரம் பருப்பும் சேர்த்து சோறு பொங்கி, அத்துடன் தேங்காய்ப்பூ, சர்க்கரை, நெய்யுங் கூட்டி உண்ணவும். அதன்பின் கற்பம் உண்ணவும். அப்படி உண்டால் உடல் உறுதியாகும்.

இவ்வாறு பல்வேறு முறைகளில் கற்பங்கள் உரைக்கப்படு கின்றன. ஒரு வேளை உணவும், உணவுக்குப் பின் கற்ப மருந்து என்பதும் எல்லா முறைகளிலும் ஒன்றாகவே காணப்படுகின்றன.

"" பானென்ற பச்சையுப்பை தின்றா னானால்

பட்டுதா கண்ரெண்டும் பரிந்து காணே.''

"" வாய்பட்ட கொழுப்பாலே (பச்சை) யுப்பைத் தின்றால்

வாய்த்திருந்த சித்தியது மண்ணாய்ப் போமே.''

கற்பங்கள் உண்ணும் போது, சாதாரணமான உப்பைத் தின்றால் கற்பத்தினால் கிடைத்த பலன் கெடுவதுடன், கண்ணிரண்டும் கெட்டுப் போக வாய்ப்புள்ளது. எனவே, கட்டிய உப்பை மட்டுமே உண்ண வேண்டும் என்னும் சிறப்பு விதிகள் உரைக்கப் படுவதனால், மருந்துண் போர் நலனை நுணுக்கமாகக் கண்காணித்து உரைக்கப்படுவது தெரிகிறது. மருந்து பயனுடையதாக இருந்த போதிலும், மருந்துண் போரின் நலனைக் கண்காணிப்பதும், பாதுகாப்பதும் மருத்துவத்தின் தலையாய கடன் என்பது தெற்றென விளங்கும்.

கற்பங்கள் உண்ணும் முறைகளையும், பத்திய உணவுகளையும் பின்பற்றி உடலைப் பாதுகாப்பதைப் போலவே, சாதாரணமாகத் தலைமுழுகப் பயன்படுத்தும் பொருளும் கற்பமுறையாக உரைக்கப் படுகிறது.

"" நேமேதான் நெல்லிக்காய் பலந்தான் ஆறு

நிலையாக நீர்மிளகு பலந்தான் அஞ்÷

அஞ்சப்பா கடுக்காய்தான் பலந்தான் நாலு

அப்பனே வேப்பரிசி பலந்தான் மூன்று

மஞ்சளப்பா மஞ்சளது பலந்தான் ரெண்டு

வகையாக இவைகளைக் கூட்டிக் கொண்டு''

என்று பொருள்களை வரிசைப்படுத்திய முறையை அவற்றின் அளவைக் கொண்டே அமைந்திருப்பதும் நோக்கத் தக்கது. இதனையே,

"" பூ நெல்லி நீர்மிளகு பொற்கடுக்காய் வான்மஞ்சள்

கானகத்து வேம்பரிசி காரிகையே மானங்கேள்

ஒன்றரை ஒன்றே கால் ஒன்று உறுதிமுக்கால்

கன்றரைக்கை யான் நீரில் தேய்.''

இச்செய்யுளும் மேற்கண்ட ஐந்து பொருள்களையே உரைத்திருந் தாலும், வேம்பரிசியும், மஞ்சளும் அளவில் மாறுபடுகின்றன.

மேற்கண்ட கற்பத்தினால் தலை (கபாலம்) இறுகும் என்று திருமூலரும் (கற்பமுறை. செய். ) திருமந். செய். ), (கபாலம்) தலை இறுகுவதுடன், முடி கருக்கும்; பகலில் வான்மீன்கள் தோன்றும். உடலிலுள்ள நச்சு நீர் வற்றும், உடல் பொன் போலாகும் என்று நந்தீசரும் உரைக்கக் காணலாம்.

தூதுவளையைக் கறி, வற்றல், ஊறுகாய், கீரை இப்படி முறைப் படுத்தி, ஒரு மண்டலம் உண்டு வந்தால் இரவும் பகல்போலத் தோன்ற கண்ணொளி கூடும்.இதனை இலக்கிய நயத்துடன்,

"" திருக்குளத்தை நன்றாக்கித் தின்னுவையே னல்ல

திருக்குளத்தைப் போலே திருத்துந் திருக்குளத்தை

யெல்லா மிரவுவிளை யென்னவருந் தூதுவளை

யெல்லா மிரவு மிளி யென்''

நீர்க்குளத்தைத் திருத்தி விளங்கச் செய்வதைப் போல் கண்குளமான நேத்திரத்திலிருக்கின்ற பித்த நீர் முதலான மலினங்களைப் போக்கும் செயலைத் தூதுவளை செய்யும் என்பதைக் அறியலாம்.

கூறப்படும் கற்பத்தின் பொருள்கள் சிறந்த பொருள்களிலிருந்து மட்டுந்தான் செய்யப்படுகின்றன என்ற நிலையில்லை. குப்பைக்குச் செல்ல வேண்டிய பொருள் என்று தூக்கி எரியப்படுகின்ற பொருள்கள் கூட கற்பங்களாக ஆகின்றன என்பது வியப்பிற்குரிய ஒன்றாகவும், அதனால் விளையக் கூடிய நன்மை அதனினும் வியப்பாகவும் தோன்றும்.

பல்வேறு வகைப்பட்ட பறவைகளின் முட்டை ஓடுகள் கற்ப மாகின்றன. கோழி, பருந்து, கிளி, காக்கை, காடை, மயில் ஆகிய வற்றின் முட்டை ஓடுகள் பற்பம் எனும் முறையில் கற்பமாகின்றன. அவை, முறையே, அத்திசுரம், மூர்ச்சை, காசம், சத்தி , பிடிப்பு, வெட்டை, உப்புசம், பெருவியாதி, வெப்பம், மாரடைப்பு, கபமிகுதி, சன்னி ஆகியவற்றைப் போக்குகின்றன.

இரத்தச்சுத்தி

உடல் தூய்மைக்கு (காயசித்தி) இரத்தம் தூய்மையாக வேண்டும். இரத்தத்தை கொண்டே உடலின் நோய்க் குற்றங்கள் அறியப்பட்டு வருகின்றன. அதேபோல் இரத்தத்தைத் தூய்மையாக்கி, உடலைத் தூய்மையாக்கும் முறை சித்த மருத்துவத்தின் கோட்பாடுகளில் ஒன்றாக அறியப்படுகிறது. இரத்தத்திலுள்ள நோய்க் கிருமிகளை அழிப்பதே மருத்துவத் துறையின் தலையாயப் பணி என்பதை அடிப்படையாகவும் கொண்டிருக்கக் காண்கிறோம். அதே போல், உடல் நோயுற்றிருந்தால் துர்நாற்றமும், நிறத்தில் மாற்றமும் ஏற்படுவதைக் காணமுடிகிறது. இதற்கு இரத்தத்தில் நோய்க்கிருமிகள் அண்டி யிருப்பதே காரணமாகும். இவற்றையெல்லாம் முறைப்படுத்துவதே மருந்தின் பணியாகும். அதனையே காயசித்தியின் தொடக்கமாகக் கருதுவர்.

"" கரிசாலை, குப்பைமேனி, கரந்தை, வல்லாரை, நீலி,

பொற்றலை, செருப்படை ஆகியவற்றை நிழலிலுலர்த்தி

இடித்துச் சூரணம் செய்து வெருகடி அளவு, தினமும்

தேனில், ஒரு மண்டலம் உண்டால், உடல்

நோய்கள் போகும் காய சித்தியாகும்.''

மேற்கண்ட மூலிகைகள் மிகவும் எளிமையாகக் கிடைக்கக் கூடியவை. ஆடு, மாடுகள் அன்றாடம் தின்னக் கூடியவை. என்றாலும் அவற்றி லுள்ள மருத்துவக்குணங்களும், ஒன்றுடன் ஒன்று சேர்ந்து ஆற்றுகின்ற மருந்தாற்றலும் அறியப்படாமல் இருக்கும் செய்திகளாகும்.

"" உண்ணப்பா மண்டலந்தான் நோயும் போகும்

உதிரத்தில் உத்தமனே நோயும் போகும்.''

ஒரு மண்டலம் உண்டால் நோய் போவதுடன் இரத்தத்திலுள்ள கிருமிகள் எல்லாம் அழிந்து போகும் என்பது குறிப்பிடத்தக்கது. கிருமிகள் எவை என்று குறிப்பிடாமல் கூறப்பட்டுள்ளதால், உடலில், இரத்தத்தில் இருக்கத் தகாத கிருமிகள் என்றே கருத வேண்டும்.

"" பண்ணப்பா பவளம்போல் சிவந்தி ருக்கும்

காயமெல்லாம் சம்பழத்தின் வாசம் வீசும்

விண்ணப்பா அந்தரத்தில் மீன்க ளெல்லாம்

வெகுளாமல் பகல்காணத் தோற்று விக்கும்''

உடல் வண்ணம் பவளம் போல் சிவந்து காணும். அத்துடன் சம்பழத்தின் வாசம் போல உடலிலிருந்து மணம் வீசும். கண்ணொளி ஏற்படுவதுடன், விண்ணகத்திலுள்ள மீன்களெல்லாம் கற்பம் உண்டவர் காண்பதைக் கண்டுவெகுளாமல் கண்ணின் காட்சிக்கு ஏதுவாகித் தோற்றமளிக்கும் என்று கண்ணொளியைச் சிறப்பித்துக் கூறப் பட்டுள்ளது

முறைகள் மிகவும் எளிதாக இருக்கின்ற போதிலும் அதனுள் புதைந்துள்ள பயன்கள் அரிதாகவும் சிறப்பாகவும் இருக்கின்றன.




தமிழ் மருத்துவம் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 1:13 am


கற்ப மருந்தின் சாதனை

தன் இனத்தைப் பெருக்குதலும், உயிரைப் பாதுகாத்தலும் இவ்வுலகில் ஒவ்வொரு பிராணியின் பிறவிக் கடன். இத்தலையாயக் கடன் அது அதன் பண்பு. ஆனால், பகுத்தறிவு மிக்க மனிதனோ தன் இனத்தை மட்டும் பெருக்கிப் பாதுகாப்பதுடன், ஒருபடி முன்னே சென்று தன் வாழ்நாளையும் நெடுங்காலம் பாதுகாக்கும் வழிவகைகளைக் காண முற்பட்டான். இந்த முயற்சியில் உடலை வாட்டும் நரைதிரை மூப்பையும், வாழ்வை வதைக்கும் நோய் நொடி சாக்காட்டையும் எதிர்த்துப் போராடும் மருந்துகள் பலவற்றையும் கண்டான்.

இந்த மருந்துகள் இருவகைப்படும். முதல்வகை இயல்பாகத் தோன்றும் உடல் நோய்களுக்கு மருந்தாக அமைந்து உடல் நலத்தைப் பேணுபவை. இரண்டாம் வகை, உறுப்புகளின் இளமையைப் பாதுகாத்து மனித வாழ்வை நெடுங்காலமாகப் பேணுகின்ற காய கற்ப மருந்துகள் (சித்த மருத்துவம் பக்.) என்று, காயகற்பம் பற்றி சித்தர்கள் கூறியுள்ளனர்.

வாத வைத்தியம்

சித்தர்கள் வாதத்தை ‘வகார வித்தை‘ என்று குறிப்பிடுவர். ‘வ’என்னும் எழுத்து ஆகாயத்தைக் குறிக்கும். ஆகாயம் என்பது தலையின் உச்சியையும், ஞானத்தின் முத்தி நிலையையும் குறிக்கும். ஞானத்தின் முத்தி நிலையை அடைய முனைவோர் வாத முறையில் தயாரித்த மருந்தை உண்டால் உடல் சுத்தியாகும். அதன்பின் ஞானத்தை மேற்கொண்டால் சித்தியாகும் என்பதால், வகார வித்தை என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டது.

வாதத்தை ‘உலோக மாற்றுக் கலை’ யென்றும் குறிப்பிடுவர். இதனை ‘இரச வாதம்‘ என்பர். பாதரசத்தை ஆதாரமாகக்கொண்டு தயாரிக்கப்படுகின்ற மருந்தினால், குற்றமுடைய செம்பு, வெள்ளி, இரும்பு, பித்தளை, நாகம் போன்ற உலோகங்களைக் குற்றமில்லாப் ‘பசும் பொன்’ னாக மாற்றலாம் என்பர். உலோகங்களைத் தங்கமாக மாற்றுவது மருத்துவத்தின் பணி அல்ல. ஆனால், வாத முறையில் தயாரிக்கப்படும் மருந்து, உலோகங்களைக் கொண்டு சோதிக்கப் படுகிறது. அச்சோதனையில், உலோகம் தங்கமாக மாற்றுக் கொண்டால், மனிதனுக்குப் பயன்படும் என்று அறியப்படுகிறது. குற்றமுடைய உலோகங்களைப் பசும்பொன்னாக மாற்றுகின்ற மருந்து, மனித உடம்பிலுள்ள நோய் என்னும் குற்றங்களையும் தீர்த்து உடலைப் பொன் போலாக்கும் என்பதே வாத வைத்தியத்தின் மூலக் கருத்தாகும்.

சித்தர் நூல்கள் பெரும்பாலும் வைத்தியம், வாதம், யோகம், ஞானம் என்னும் நான்கையும் இணைத்தும் விரவியும் கூறக் காணலாம். வாத முறைகள் மிகவும் கவனமாகச் செய்ய வேண்டியிருப்பதனால் இம்முறையைச் செய்த பலர் தோல்வி கண்டுள்ளனர் போலும். அவர்கள், வகார வித்தை பொய் என்று சொல்லியிருக்கின்றனர். அதற்கு,

"" ஆமேதான் உலகத்தில் வாதம் பொய்யோ

அடுத்துமே ஞானமது பொய்யோ அல்ல''

என்றும்,

"" கொள்ளவே நவகண்டந் தன்னிலே தான்

கூறரிய ரசவாதம் பொய்யோ யென்றால்

துள்ளவே வங்கிசங்கள் எல்லாம் பொய்யாம்

சூதாடு வார்போலச் சொல்ல வேண்டாம்.''

வகார வித்தை என்னும் வாதக்கலை பொய்யென்று சொன்னால் ஞானமும் பொய்தான். ஞானத்தை அடைய வாதமே படிக்கல்லாக அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இரசவாதம் பொய்யென்று சொல்லிவிட்டால் சித்தர் பரம்பரை என்பதும் பொய்தான். அறிவற்றவர் போலப் பேசாதீர்கள் என்று யூகி முனிவர் கண்டிக்கிறார். ‘வாதமுறை யில் தயாரிக்கப்படுகின்ற ‘தங்க மெழுகு’ என்னும் மருந்தை, காலை மாலை ‘இருவேளை’ உண்டுவந்தால், உடல் உறுதியாவது மட்டுமல்ல, நரையும் திரையும் மாறிப் போகும்’ என்று வாத மருந்தின் பயன் கூறப்படுகிறது. ‘செம்பு மெழுகு‘ என்னும் மருந்து நரைதிரையைப் போக்கி, நரம்புகளைப் பச்சையாக்கும் என்பர். நரம்பே மனிதனின் ஆயுளைக் கூட்டுவதும் குறைப்பதுமாக இருக்கிறது. அதனையே, நரம்பு பச்சையாகும் என்பர். நரம்புகள் இளையதாக ஆகி உடலைக்காக்கும் என்று பொருள் கொள்ளலாம். ‘செம்பு மெழுகு’ என்னும் வாத மருந்து, வாத நோய் என்னும் வகை நோய்களைத் தீர்க்கும் என்பர். குறிப்பாக நரம்பின் தொடர்பாக உண்டாகும் நோய்களான வாதவலி, மகோதரம், இசிவு, அண்டவாதம், நரித்தலை வாதம் போன்றவை தீரும் என்பர். ‘பஞ்சலோகச் செந்தூரம்’ என்னும் மருந்து நானூற்றுக்கும் மேற்பட்ட நோய்களைத் தீர்க்கும் என்று கூறப்படுகிறது. இதன் செய்முறைகள் பெரும்பகுதி மறைபொருளாக அமைந்துள்ளன. முறையான பயிற்சியும் முறையான கல்வியும் இல்லாதவர்கள், இதனுடைய உண்மையான செய்முறைகளை அறியாமல் பொருள்களை வீணடித்திருக்கிறார்கள். உண்மைப் பொருளை உணரும் திறனில்லாதவர்கள் வாதம் பொய்யென் பார்கள்’ என்று வாத மருந்தின் நேர்மையை எடுத்துரைக்கக் காண்கிறோம்.

‘வாத முறைகள் ஞான நெறிக்குள் செல்லப் பயன்படும் கருவிகளில் ஒன்றெனக் கூறுவர். ஞானம் கண் என்றால் வாதம் அதன் இமை’ என்று வாதத்துக்கும் ஞானத்துக்கும் உரிய தொடர்பைக் கூறுவர். ‘வாத முறையினால் ஞானத்தை அடைந்து, அதன் பயனைத் தானும் நுகர்ந்து மக்களுக்கும் நுகர்ந்தளிக்கச் செய்யாமல், வாதத்தைக் கருவியாகக் கொண்டு, பெண்களை மயக்கிச் சிற்றின்பத்தில் சிக்கிச் சிதைந்து போகிறார்கள்’ என்பதனால், வாதமுறைகள் தெளிவாக உரைக்கப்படாமல், சில மரபு வழி நுட்பங்களைக் கொண்டு உரைக்கப் பட்டிருப்பதன் உண்மை விளங்குகிறது.

‘பொருள் தேடல்’ என்னும் கொள்கையை மட்டுமே கொண்டு வாத முறையில் மருந்துகளைத் தயாரிக்க எண்ணுகின்றவர்களே மிகுதியாகக் காணப்படுகின்றனர். ஆனால், சித்தர்கள் இதற்கு உடன்பட்டவர் களாகத் தெரியவில்லை. பொருள் என்பது சித்தர்களுக்குப் பொருட் டாகவே தோன்றவில்லை என்பதுடன், ஞானம் என்னும் அறிவு வழிப் பயணமே சித்தர்கள் மேற்கொண்ட பயணத்தின் பாதை என்பது உய்த்துணரத்தக்கது.




தமிழ் மருத்துவம் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 1:14 am


வர்மம்

சித்த மருத்துவத்தின் ஒரு பிரிவாக இயங்குவது வர்மமாகும். வர்மத்தை மர்மம் என்றும் கூறுவர். இது மறைவு என்னும் பொருளை உணர்த்துவதாக இருக்கிறது.

வர்மக்கலை

வர்மம், கலையின் பாற்பட்டது. இது மருத்துவத்துக்கு மட்டும் பயன்படாமல், எதிரிகளிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் தற்காப்புக் கலையாகவும் பயன்பட்டிருக்கிறது.

வர்மத்தின் பெயர்கள்

“உயிரினங்களின் உடலில் பேசிகள், தசிரங்கள், நரம்புகள், என்புகள், பொருந்துகள், விசிகள், ஆகியன எவ்வெவ் விடத்தில் ஒன்றோடொன்று பின்னிக் கிடக்கின்றனவோ அவ்விடங்களில் ‘பிராணன்’ அடங்கி நிற்கும். இதனை, ‘அமிர்த நிலைகள்’ என்றும், ‘மர்ம நிலைகள்’ என்றும் கூறப்படும். இவ்விடங்களில் தாக்கு, காயம், குத்து, வெட்டு, தட்டு, இடி, உதை படும்போது, வலி, விதனம், வீக்கம், இரத்தம் வெளிப்படுதல், மறத்துப் போதல், உறுப்புகள் செயலிழத்த லோடு மரணத்தையும் நேர்விக்கும். இதனைக் காயம் பட்டிருக்கிறது அல்லது மர்மம் கொண்டிருக்கிறது என்று கூறலாம். இத்துன்பத்தை நீக்கும் மருத்துவ முறைகள் ‘வர்ம பரிகாரம்’ அல்லது ‘வர்மானி’ என்று வழங்கப்படுகிறது.” என்று வர்மத்துக்கு வழங்கி வரும் வேறு பெயர்கள் விளக்கப்பட்டிருக்கின்றன.

வர்ம முறைகளால் எலும்பு முறிவு, எலும்பு ஒடிவு போன்ற வற்றுக்குச் செய்யப்படும் மருத்துவம் ‘வர்ம மருத்துவ’ மாகும். வர்மத்தின் துணை கொண்டு பல நோய்களைக் குணப்படுத்த முடியும். நோயாளியின் மர்மப் பகுதிகளில் அடித்தும், தட்டியும், தொட்டும், தடவியும், செய்யப்படும் மருத்துவ முறை வர்மத்தைச் சார்ந்ததாகும். இன்றைய நவீன மருத்துவ முறையில் ஒன்றாகக் கூறப்படும் ‘நரம்பியல் முறையே’ பழங்காலத்தில் வர்ம முறையாக அழைக்கப்பட்டுள்ளது. என்பது வர்மத்தின் அடிப்படைத் தத்துவமாக அமைகிறது.

வர்ம நிலைகள்

வர்மத்தில் கூறப்படும் ‘அமிர்த நிலை’களில் அடி, குத்து போன்றவை ஏற்பட்டால், உறுப்புகள் செயலிழந்து மரணத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிடப்படுகிறது. அதே போல, மருத்துவம் செய்யக் கூடாத நாள் எனக்கூறும் குறிப்பும் காணப்படுகிறது. அது அமிர்த நிலைகள் ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு இடமாக இடம் பெயர்ந்து, முப்பத்திரண்டு இடங்களில் காணப்படும். அது நிற்கும் இடத்தில், நிற்கும் நாளில் அடி–குத்து போன்றவையால் வர்மம் எற்பட்டால் மரணம் ஏற்படும் என்பர். அவ்வாறு கூறப்படுவதனை உற்று நோக்கினால், அமிர்த நிலைகள் நகரும் தன்மை உடையதாகவும், நிலையற்ற தன்மை கொண்டதாகவும் இருக்கக் காண்கிறோம்.

ஜப்பானியரின் ஜுடோ

வர்மக்கலை ஜப்பானியரின் ஜுடோ முறைகளுடன் ஒத்துப் போகும். ஜுடோ முறை தற்காப்புக்காகவும் பிறரைத் தாக்கவும் பயன்படுகிறது. ஆனால், தமிழகத்தின் வர்மக் கலை, தாக்குதலால் காயப்பட்டு அதனால் ஏற்படுகின்ற துன்பங்களுக்கும், கேடுகளுக்கும் சிறந்த பரிகார முறைகளின் உதவி கொண்டு நிவாரணம் அளிக்கப் பயன்படுகிறது. என்பதால், ஜப்பானியக் கலைக்கும் தமிழகத்து மருத்துவக் கலைக்குமுள்ள வேறுபாடு விளங்குகிறது.

வர்மத்தின் தேவை

நரம்பில் அடிபட்டு அதனால் நோய் உண்டானால், மருந்தினால் மட்டும் மருத்துவம் பார்த்துச் சரிசெய்துவிட முடியாது. நரம்பில் ஏற்பட்ட அடியை வர்ம முறையில் சரிசெய்த பின்பு, ஏற்பட்ட நோய்க்கான மருந்தைச் செலுத்திக் குணப்படுத்த வேண்டும்.

"" அரும்பு கோணிடில் அதுமணம் குன்றுமோ

கரும்பு கோணிடில் கட்டியும் பாகுமாம்

இரும்பு கோணிடில் யானையை வெல்லலாம்

நரம்பு கோணிடில் நாமதற் கென்ன செய்வோம்''

என்னும் பழம்பாடல், வர்ம மருத்துவத்தின் தேவையைக் குறிப்பால் உணர்த்துகிறது. அரும்பு கோணினால் அதன் மணம் குன்றாது. கரும்பு கோணினால் பாகாவும் வெல்லமாகவும் பயன்படும் . இரும்பு கோணினால் வேல், ஈட்டி, அம்பு, அங்குசம் போன்ற ஆயுதங்களாகும். உடம்பிலுள்ள நரம்பு கோணினால், நாம் எதுவும் செய்ய முடியாது; பயனற்றுப் போக நேரிடுமே என்று கருத்துரைக்கிறது.




தமிழ் மருத்துவம் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 1:18 am

வர்ம நூலாசிரியர்

வர்மக் கலை மர்மக்கலை என்பது போல, வர்மக்கலை வரலாறும் மர்மம் நிறைந்ததாகவே இருக்கிறது என்பர். வர்மக்கலை நூல்கள், வர்ம பீரங்கி, வர்ம ஆணி, வர்ம சூத்திரம், வர்மக் கண்ணாடி போன்றவையாகும். அகத்தியர், போகர் போன்ற முனிவர்கள் இந்த நூல்களை இயற்றினார்கள் என்பது மரபு. பீரங்கி போன்ற பிற்காலச் சொற்கள் வழங்குவதிலிருந்து, இந்நூல்களை அகத்தியரோ, போகரோ எழுதியிருக்க முடியாது என்பர். ஆனால் சித்தர்கள் தங்கள் உள்ளொளி உணர்வினால் கண்ட உண்மைகள் வாய்மொழியாக, வழி வழியாக வழங்கி வந்து பிற்காலத்தில் ஏட்டுருவம் பெற்றிருக்க வேண்டும். இதனால்தான் சித்தர்களால் போதிக்கப்பட்டு வந்த தமிழ்மருத்துவம், சித்த மருத்துவம் என்றே வழங்கி வருகிறது.

வர்மமும் வடமொழியும்

“வடமொழி நூலாகிய சரகத்திலும் சுசுருதத்திலும் வர்மத்தைப் பற்றிக் காணப்படினும் தமிழ் நூல்களிலே காணப்படும் அளவு விரிவாகவும் நுட்பமாகவும் வழக்கில் உள்ளதாக இல்லை என்று தெரியவருகிறது” என்றதனால், ஒரு கலையைப் பற்றிக் கூறும் தகவலுக்கும், கலையைக் கற்பிக்கும் கல்விக்கும் வேறுபாடு உடையதைப் போல, வர்மத்தைப் பற்றிய தகவலைத் தருகின்ற சரகர், சுசுருதர், ஆகி யோருக்கும், வர்மக்கலையைத் தோற்றுவித்துக் கற்பிக்கும் கல்வி முறையாக உள்ள தமிழ் வர்மத்துக்கும் உள்ள வேறுபாடாக இதனைக் கொள்ளலாம். ஜப்பானிய ஜுடோவைப் பற்றிய நூல் தமிழிலும் இருக்கிறது என்பதற்காக, ஜுடோ முறை தமிழ் நாட்டுக்கு உரியது என்று கூறினால் எவ்வாறிருக்குமோ, அவ்வாறே வடமொழிக்கும் வர்மத்துக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறுவதுமாகும். உலக நாடுகளில் மிகச் சிறந்த இலக்கியங்களெல்லாம் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு, அமெரிக்காவில் சேமிக்கப் படு கின்றன. அதனால் அவற்றை அமெரிக்க இலக்கியங்களாகக் கூற முடியுமா? அது போலத்தான், தமிழகம் அல்லாத பிறமொழிகளில் வர்மத்தின் தகவல்கள் காணப்படுகின்றன என்ற ஒரே காரணத்துக்காக, வர்மத்துக்கும், அம்மொழிக்கும் தொடர்பை ஏற்படுத்துவதுமாகும்.

வர்மங்களின் எண்ணிக்கை

உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரையிலுள்ள உடற்பகுதி களில் காணப்படும் வர்மங்களின் எண்ணிக்கை 108 என்று வர்ம சூத்திரமும், ஆண்களுக்கு 108, பெண்களுக்கு 107 என்று, ஒடிவு முறிவு சாரி நிகண்டகராதியும290 கூறுகின்றன.

"" பாரப்பா படுவர்மம் பன்னி ரண்டும்

பாங்கான தொடுவர்மம் தொண்ணூ<ற் றாறாம்''

என்று, படுவர்மம், தொடுவர்மம் என இரண்டு வகையாகக் கருதப் படும்.

"" மங்கையர்க்கே குறைந்த வர்வம் பீனசக் காலம்

சொந்தமென்ற இந்தவர்மம் ஒன்று நீக்கி

தொகையாக ஒரு நூற்றி ஏழாம் பாரு.''

பெண்களுக்குப் பீனசக் காலமாகிய விரை நீங்கலாக 107 வர்மமாகும்.

வர்ம இடங்கள்

வர்மங்கள் பொதுவாக 108 என்றும், ஆண்களுக்கு 108, பெண்களுக்கு 107 என்றும் கூறப்பட்டாலும், வர்மத்தின் இடங்களைக் குறிப்பிட்டு, எந்தெந்த உறுப்புகளில் எத்தனை வர்மங்கள் ஏற்படும் என்று கூறும் போது, இந்த எண்ணிக்கை மாறுபடுகிறது.

வர்மம் நேரும் உறுப்புகள் எனக் குறிப்பிடப்படுபவை வருமாறு:

கால் இரண்டு 22 ; கை இரண்டு 22; வயிறு3; மார்பு9; முதுகு14; கழுத்தின் மேல்37; தசையில்10; எலும்பில்8; நாடியில்21; பெரு நரம்பில்9; நரம்பில்36; சந்தில்20 என 159 வர்மங்கள்293 கூறப்படுகின்றன.

மேலும், வர்மங்களின் எண்ணிக்கை 122 என, ‘வர்ம சிகிச்சை’ என்னும் நூலில் காணப்படுகிறது.

படு வர்மம்12 (varmam due to violent injury)

தொடுவர்மம் 96 (varmam due to touch injury)

தட்டுவர்மம் 8 (varmam due to blow injury)

தடவு வர்மம் 4 (varmam due to massage injury)

நக்கு வர்மம் 1 (varmam due to licking injury)

நோக்கு வர்மம் 1 (varmam due to sight injury)

மேற்கண்ட வர்ம சிகிச்சை என்னும் நூலின் பட்டியலில் வரைபடத்துடன் வர்மங்களின் எண்ணிக்கை 130 ஆகக் கொள்கிறது.

உடல் அளவுகளில் வர்மம்

உடலின் அளவுப்படி, தலை முதல் கழுத்துவரை, கழுத்து முதல் தொப்புள் வரை, தொப்புள் முதல் மூலம் வரை, கை, கால் என்னும் அளவின்படி வர்மங்கள் உரைக்கப்படும்.

தலை முதல் கழுத்துவரை – 25

கழுத்து முதல் தொப்புள் வரை– 45

தொப்புள் முதல் மூலம் வரை – 9

கைகளில் – 14

கால்களில்– 15

என்று , 108 வர்மங்களை வர்ம பீரங்கி கூறுகிறது



தமிழ் மருத்துவம் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 1:19 am

வர்மத்தில் நாடிகள்

வர்மங்கள் நாடிகளின் வகையாகவும் பிரித்துக் காணப்படுகிறது. இவ்வாறு பிரித்துக் காணப்படுவதனால், வர்மத்தினால் உண்டாகும் நோய்களின் குணங்கள் அறியப்பட்டு, மருத்துவம் செய்ய வழியேற்படும்.

வாத வர்மம்64; பித்தவர்மம்24; ஐய வர்மம்6; உள் வர்மம்6; தட்டு வர்மம்8 = 108 296என்னும் வகைகளாகும்.

வர்மத்தில் இயல்பு

உடம்பில் வர்மம் கொண்டால் உடனே பரிகாரம் செய்து நிவர்த்தி செய்யப்பட்டாலும், ஏற்பட்ட வர்மம், வர்மத்தின் மாத்திரை அளவை விட மிஞ்சிய அளவில் ஏற்பட்டிருக்குமே யானால், நாள் பல கடந்த பின்பும் உடலைப் பாதிக்கும் கடுமையான நோய்களை உண்டாக்கும். கண், காது போன்ற உறுப்புகள் பழுதாகி விடுவதும் உண்டு.

“ கேளேநீ; வர்மமது கொண்டு தானே

கெடிதப்பி காலமது சென்று போனால்

ஆனதுவே நிறமாறி கறுத்துப் போகும்

அன்னமது சிறுத்துவிடும் குன்னிக் கொள்ளும்

நாளதிலே நீர்மலமும் பிடித்துக் கொள்ளும்

நாயகமே தாதுகெடும் தீர்க்க மாக

பாழான சயம் இளகி கொல்லும் கொல்லும்

பண்டிதத்தை அறிந்துநீ செய்யில் மீளும்''297

வர்மம் கொண்டு நாள்கள் சென்ற பின்னர் அன்னம் ஏற்காமை, உடல் கூனுதல், உடல்கட்டுதல், கேடடைதல், சயம், பீனிசம், காச நோய் (ஆஸ்துமா), கண் மயக்கம், காது மந்தம், அஸ்தி சுரம், எலும்புருக்கி போன்ற நோய்கள் உண்டாக வாய்ப்பிருப்பது தெரியவரும்.

வர்ம மரணங்கள்

வர்மங்களில் ஆயுதமோ அடியோ பட்டால் மரணம் நேரும் என்பது பொதுவாக உரைக்கப்படும் கருத்தாக இருப்பினும், எந்தெந்த வர்மங்களில் அடிப்பட்டால், எத்தனை யெத்தனை நாள்களில் மரணம் வரும் என்பதை வர்ம விதி அறிவிக்கிறது.

1. உந்தி2; சங்கம்2; தயமதிபன்1; குதம்1; வத்தி1; சிருங்காடம்4; கிரிகை8; என்னும் பத்தொன்பது வர்மங்களிலும் அடியோ, ஆயுதமோ; புண்ணோ பட்டால் ஏழு நாள்களுக்குள் மரணம் நேரும்.

2. தம்பம்2; தலம்2; இருதயம்4; சந்தி2; சுரோணி5; தனம்2; வத்தி4; சிப்பிரம்4; அபலாபம்2; பிருகிருதி2; நிதம்பம்2; தனரோகி2 எனும் முப்பத்து மூன்று வர்மங்களில் அடி, ஆயுதம், புண்பட்டால் ஒரு திங்களுக்குள் மரணம் நேரிடும்.

3. உற்சேபம்1; தபனி1 ஆகிய இரண்டில் வர்மம் ஏற்பட்டால் சதை அழுகும்.

4. வர்மங்களில் அடியோ காயமோ ஏற்பட்டால் துன்பத்தை மட்டும் தந்து, உயிரைப் போக்காத வர்மங்கள் என நாற்பத்து நான்கு கூறப்படும்.

5. புற்று நோய்க்கு நிகராக கழு நீர் போலப் புண்ணாகிச் சீழ் கொண்டும், உடல் வெளுத்தும் பல வித நோய்களினால் உயிரைப் போக்கும் வர்மமாகத் தசைவர்மம் கூறப்படும்.

6. தசைகளின் தாது தண்ணீர் போல என்புகளில் ஊறி, இரத்தம் பாய்ந்து வலியை உண்டாக்குவதுடன், பதைக்க வைத்துக் கொல்லும் என்று ‘எலும்பு வர்மம்’ உரைக்கப்படுகிறது.

7. மாங்கிஷத்தில் அடங்க, வெறிபட நின்று வேதனை உண்டாக்கிக் கொல்வது ‘சிறுநரம்பு’ வர்மமாகும்.

8. உடலை முடக்குவித்து, மடக்கி, தாதைக் கெடுத்து, தசையில் இரத்தத்தைப் பாய்ச்சி, நடையைக் குன்றச் செய்து, அறிவை வேறொன்றாக்கிக் கொல்லும் பெரு நரம்பு வர்மம்.

9. அதிக அளவு இரத்தம் பாய்ந்து உடலை மெலியச் செய்து காசம், சலிப்பு, இளைப்பு, விக்கல் போன்றவற்றை உண்டாக்கிக் கொல்லும் என்று உறுதிப்பட உரைக்கப்படுவது நாடி வர்மம்.

10. உடலைச் சூடாக்குவதும், குளிரடையச் செய்வதும், வேதனை அடையச் செய்து உடலை வீங்கச் செய்வதும், வீக்கம் வடிந்ததும் உடலின் வடிவத்தை வேறாகக் காட்டுவதும், உடலைத் தளர்ச்சிடையச் செய்வதும் சந்து வர்மமாகும்.298

மேற்கண்ட வர்மங்கள் உடலைக் கொல்வதற்கு முன் மரணத்தை விடவும் கொடுமையான நோய்களையும் துன்பங்களையும் தந்து, பின்னர் மரணத்தைத் தரும் என்று அறியப்படுகிறது. சில நோய்களையும் நோயின் கொடுமைகளையும் காணும் போதும், கேட்கும் போதும் அவை, என்றோ ஏற்பட்ட வர்மத்தினால் வந்த துன்பமாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுவதுபோல் வர்மத்தின் செயல்கள் காணப்படுகின்றன.

மேற்கண்ட வர்மங்களின் தன்மையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வர்மங்களாகக் கீழே குறிப்பிடப்படவிருக்கின்றன. அவை, நோய்களை ஏற்படுத்துவதைத் தவிர்த்து விட்டு, மரணத்தை மட்டும் அதுவும் மிகவும் விரைவாக மரணத்தை உண்டாக்குபவையாகக் கூறப்படுகின்றன.

1. உச்சியின் மத்தியில் உள்ள தூண்டு நரம்பு முறிந்தால், உடனே உயிர் பிரியும்.

2. இதயத்திலிருந்து மூன்று அங்குலத்துக்கு மேலே இருக்கும் பூவலசன் நரம்பு முறிந்தால் ஐந்தாம் நாளில் மரணம்.

3. இடுப்பு சாலத்தில் உள்ள ‘நீர்ப்பிசி‘ நரம்பு முறிவு கொண்டால் மூன்றாம் நாளில் மரணம்.

4. பஞ்வர்ணக் குகையிலிருக்கும் ‘குடகரி’ வர்மம் முறிந்தால் மூன்று நாளில் மரணம்.

5. ‘சுவாசப்பை’ நரம்பு முறிந்தால் மூன்று நிமிடங்களில் மரணம் உண்டாம்.

6. கருவுற்ற மங்கையர்க்குத் துறபேசி நரம்பில் வர்மங் கொண்டால், ஈனும் குழந்தை ஓராண்டில் மரணமடையும்.299

என்று, வர்மத்தின் கடுமை உரைக்கப்பட்டுள்ளது. வர்மத்தால் உடனே மரணம் வரும் என்பதற்கும், கடுமையான நோய்களைத் தந்து துன்பத்துள்ளாழ்த்தி மரணமடையச் செய்யும் என்பதற்கும் மாறான குணமுடைய வர்மமும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

"" நேரப்பா தாருநரம்பு அதிர்கா யங்கள்

நேராக தீருமதில் தீர்ச்சை யுற்றால்

காரப்பா நாற்பத்தி யொன்றா யிரத்தி நாள்

கடந்தே காயசுரம் போல் காயும்''

"" உறுவான தாரை நரம்பதி லெழுந்த

உற்றநோய் தீருமடா வதிர்ச்சி யுற்றால்

மாறாகும் நாள் இருபத்தி ஓராயி ரத்துள்

மறலியினால் உயிர்பிரியும் வண்மையாய்''300

கடைக்கண்ணின் அருகிலுள்ள ‘தாரு” நரம்பு முறிந்தால் கண்பார்வை போகும். மருத்துவத்தால் குணமாகும். முறையான வர்மமுறை மருத்துவம் பார்க்காவிட்டால் தலையில் வலி, வீக்கம், நாக்குத் துடித்தல், மயக்கம் ஆகியவை உண்டாகும். முறையான மருத்துவம் பார்க்கப்பட்டால் 41,000 நாள் கடந்து சுரம், தலைகனம், சிரசு எரிச்சல், வாய் உளறல், தாகம், பொருமல், அதிசாரம் உண்டாகும். மருத்துவம் முறையாகச் செய்யாவிட்டால் 21,000 நாளில் மரணம் நேரும் என்று கூறப்படுகிறது.

21,000, 41,000 நாளுக்குப் பின் நிகழும் நோயையும் மரணத்தையும் ‘தாரு’ நரம்பு முறிவினால் தான் நிகழ்ந்தது என்று குறிப்பிட்டிருப்பது மிகையாகத் தோன்றுகிறது. 58 ஆண்டுக்களுக்குப் பின் வரும் மரணத்தையும், 113 ஆண்டுக்குப் பின் வருகின்ற நோயையும் கணித்திருப்பதாகக் கூறினாலும், அதில் உண்மையிருப்பதாகத் தோன்றவில்லை. மனிதனின் வாழ்நாளே நோயில்லாமலிருந்தாலும் நூறு ஆண்டுதான் என்று சித்த மருத்துவம் கூறியிருக்க, நூறாண்டைக் கடக்க வேண்டுமென்றாலே கற்ப முறைகளை உண்ண வேண்டும் எனத் தெரிகிறது. கற்பம் உண்ட பின்னர், நோய் வரும் என்றால், கற்பம் முறை தவறானவை என்றாகி விடும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

மேலும், வர்ம முறைகளின் மூலம் உடம்பிலுள்ள நரம்புகள் பல கண்டறியப் பட்டிருக்கின்றன. நரம்பும், நரம்பினால் உண்டாகக் கூடிய நோய்களும் விளக்கப் பட்டிருப்பதால், விஞ்ஞான வளர்ச்சிக்கு முன்னரே நரம்பியல் முறை மருத்துவமான வர்மம் தமிழகத்தில் நன்கு வளர்ச்சி யடைந்த நிலையில் இருந்திருக்கிறது என்பது புலனாகிறது.

நரம்பு முறிவினால் உண்டாகும் (பக்க விளைவுகள்) குறிகுணங்கள்

ஆங்கில மருந்துகளினால் பக்க விளைவுகள் ஏற்படுவதைப் போல, நரம்பில் முறிவு ஏற்பட்டால், நோயாளிக்கு உண்டாகும் குறிகுணங் களைப் பக்க விளைவுகள் எனக் குறிப்பிடலாம். அத்தகைய குறி குணங் களாவன:

நரம்பை அறிந்து, நரம்பின் செயலைக் கண்டறிந்து, நரம்பினால் உண்டாகும் விளைவு கூறப்பட்டிருப்பது, நரம்பியல் முறைகளில் ஏற்பட்டிருந்த வளர்ச்சியைக் காட்டுவதாக இருக்கிறது. மனித உடம்பின் அனைத்துச் செயல்களும் மூளை என்னும் தலைமைச் செயலகத்திலிருந்தே இயக்கப்படுகின்றன என்பதை அறிவோம். இங்கே குறிப்பிடும் நரம்பு முறிவினால், மூளையின் கட்டளை மூலங்களில் பாதிப்பை உண்டாக்கிப் பக்க விளைவுகள் தோன்றுவ தாகக் கருதலாம். நரம்புகள் ஒவ்வொன்றும் மூளையின் தலைமை நிலையத்துடன் தொடர்பு கொண்டிருப்பதை உணர்த்துகிறது. மேற்கண்ட கருத்துகள் அனைத்தும் உடலியல் துறை சார்ந்த மருத்துவ அறிவியல் கருத்து என்பதால், அத்துறை சார்ந்த வல்லுநர்கள், வர்மநூல்கள் கூறுகின்ற நரம்புகளையும், நரம்பின் தன்மைகளையும் ஒப்பாய்வு முறையில் விளக்கிக் கூறினால் பயனுடையதாக இருக்கும்.



தமிழ் மருத்துவம் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 1:20 am

வர்ம அடங்கல்

வர்ம இடங்களில் அடிப்பட்டு உயிர் முழுவதும் சலிக்காமல் வர்மங்களில் உள்ளடங்கி நிற்கும். அவ்வாறு வர்மங்களில் அடங்கி நிற்கின்ற இடங்கள் அடங்கல் என்று குறிப்பிடப் படுகிறது.

உயிர் உள்ளடங்கி நிற்கும் வர்ம அடங்கல் என்று 16 இடங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவ்வாறு சொல்லப்பட்ட போதிலும் நூல்களில் குறிப்பிடப்படாமல் கையடக்கமாகவும் கர்ண பரம் பரையாகவும் இருந்து வரும் அடங்கல்கள் ஏராளம் எனத் தெரிகிறது.

பொதுவாக, வர்மங்களில் அடிப்பட்டு மூர்ச்சை அடைந்தவர் களுக்கு, வர்மங்கள் ஒவ்வொன்றுக்கும் உரிய தன்மைகளுக்கு ஏற்ப, மாறுபட்ட குணங்கள் தோன்றும். வர்ம நோயாளியை வர்ம மருத்துவர் சோதிக்கும் போது முதலில் கவனிக்க வேண்டியது, நோயாளியிடத்தில் அபாயக் குறி தெரிகிறதா என்பதே. வர்மத்தில் அடிப்பட்ட நோயாளிக்குக் கண் நட்டு வைத்தது போல் குத்தி நிற்கும். விந்தும் மலமும் கழிந்திருக்கக் காணலாம்.

நாடி, துரிதமான நடையில் அல்லது மிகவும் மெதுவான நடையிலும் காணப்படும். நாடித் துடிப்பில்லாமலும் இருக்கும். இவ்வாறு மூன்று வித நாடிக் குறிக்குணங்கள் அறியப்பட்டால், அந்நோயாளியைத் தொடவே கூடாது. ஒரு சிலருக்கு, ஒலிகுன்றியும், துணிகளைக் கிழிக்கும் குணமும், அசாத்தியமான அலரலும், முகம் அதிகப் பிரகாசத்துடனும், கறுத்தும் காணப்படும். அவ்வாறான வர்ம நோயாளிகள் மிக விரைவில் மரணத்தைச் சந்திப்பார்கள்301 என்று, வர்ம மருத்துவத்தின் பல்வேறு பரிமாணங்கள் கூறப்படுகின்றன.

வர்ம மருத்துவம்

வர்ம மருத்துவம், நூல் வழி அனுபவம் பெறும் மருத்துவமல்ல; மரபு வழியாகப் பயிற்றுவிக்கும் அரிய மருத்துவ மாகும்.

இளமைக் காலங்களில் இளைஞர்கள் மன மகிழ்ச்சிக்காக விளையாடும் போதும், போர் வீரர்கள் போர்புரியும் போதும், வர்ம நிலைகளில் தெரிந்தோ தெரியாமலோ ஏற்படுகின்ற வர்ம அடிகள், அவர்களின் வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிடக் கூடிய கொடுமை நிறைந்ததாக இருப்பதனால், அதற்குரிய வர்ம மருத்துவக் கல்வியால், அறிவால், பயிற்சியால், நுட்பமான உணர்வால் முதிர்ந்த நிலையுள்ள வராக இருக்க வேண்டும் எனத் தெரிகிறது.

“ஒடிவு முறிவுக்குரிய மருத்துவம் செய்பவர் படுவர்மம் 18–ம், தொடுவர்மம் 96உம் சரநிலைகள், இடகலை, பிங்கலை, சுழுமுனை முதலியவற்றின் இயக்கங்களைக் கண்டறிவதில் நன்கு தேர்ந்தவராக இருக்க வேண்டும்.

வர்மத்தின் நிலைகளை அறிவதுடன், மயக்கம், கபம், சீதம், வியர் வை, சுவாசம் முதலிய குறிகுணங்களையும் கண்டறிய வேண்டும”302

என்று, வர்ம மருத்துவம் செய்யத் தொடங்குமுன், மருத்துவன் கண்டறிய வேண்டிய தேர்வுமுறை அடிப்படைகள் எடுத்துரைக்கப் படுகின்றன.

படுவர்மங்களுக்கு, வர்மம் கொண்ட நேரத்திலிருந்து எவ்வளவு நேரத்துக்குள் மருத்துவம் பார்க்க வேண்டும் என்னும், ‘அவசரச் சிகிச்சை’ முறை குறிப்பிட்டுக் காட்டப் பட்டுள்ளது. அக்காலத்தைக் கடந்து விட்டால் நோயாளியைக் காப்பாற்ற முடியாது எனத் தெளிவாக உரைக்கப்படுகிறது.

பருவத்தைப் பாழாக்கும் வர்மம்

வர்மங்களில் சில மரணத்தைத் தரும். சில கடுமையான நோயையும் துன்பத்தையும் தரும் என கூறப்பட்டது. ஆண்களை அலியாகவும், பெண்களை மலடியாகவும் ஆக்கக் கூடிய வர்மம் ஒன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

"" கருவூன்றி பூக்காத மங்கை யர்க்கு

மாயமாய் கொண்டாலோ பூப்பு ஏது

மாதவிடாய் ஒருநாளும் வாரா தப்பா

ஓயுமிடை காணா திருளி யாவாள்.''303

இடுப்பு சாலத்தில் உள்ள நீர்ப்பிசி நரம்பு முறிந்தால், மூன்றாம் நாளில் மரணம் வரும். மதி மயக்கம் உண்டாகும். கண் ஒளி போகும். உடலில் குத்தல் உண்டாகும். சிறுநீரோடு சீழ் கலந்து போகும். இந்தக் குணங்களே ஆண்களுக்கும், பெண்களுக்கும் உண்டாகும் என்றாலும், இளம் பெண் பூப்படைய மாட்டாள். பருவடைந்தவள் மாதவிடாய் அடைய மாட்டாள். கருத்தரிப்பு உண்டாகாது. அதே போல், ஆண்களுக்கு ஆண்மை குன்றிப் போகும்304 என்று, உரைக்கப் பட்டுள்ளது.



தமிழ் மருத்துவம் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 1:23 am


எலும்பு முறிவு வகைகள்

1. சாதாரண முறிவு (Simple Fracture).

2. கலப்பு முறிவு (Compound Fracture).

3. சிக்கலான முறிவு (Complicated Fracture).

4. நொறுக்கப் பட்ட முறிவு (Comminuted Fracture).

5. முறிந்த பாகம் இன்னொரு பாகத்துடன் மாட்டிக் கொண்டு

அசையாதிருப்பது (Impacted Fracture).

6. பச்சைக் கொம்பு முறிவு (Green Stick Fracture).

7. தன்னில் தானே முறிவது (Spontancous Fracture).

8. பள்ளம் ஏற்படும் முறிவு (Depressed Fracture).

எனப்படும். இத்தகைய வர்ம முறைகளால் நரம்பு முறை மருத்துவமும், எலும்பு முறை மருத்துவமும், ஒருங்கிணைந்து தமிழ் மருத்துவத்தில் இடம் பெற்று ‘வர்ம மருத்துவம்’ என்று போற்றக் கூடியதாக அமைந்திருக்கிறது.

மருத்துவமும் காலமும்

காலம் என்பது தாம் செய்யக் கருதிய செயலுக்கு ஏற்ப அமையும். காலத்தைக் கருத்திற் கொண்டு செய்கின்ற செயல், காலத்தைப் போலச் சிறப்பிற்குரியதாக அமையும். காலத்தைக் கருதிச் செய்கின்ற செயலைப் போலச் சிறந்த செயல் ஒன்றிருப்பதில்லை.

"" அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.''

என்னும் குறள், காலத்தை அறிந்து செய்கின்ற செயலின் சிறப்பை அறிவிக்கும். செய்கின்ற செயலின் வெற்றிக்கும் தோல்விக்கும் ஆதாரமாகக் காலம் அமைகிறது.

மருத்துவ நூலில் பல்வேறு காலங்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. மனிதனின் சராசரி ஆயுளைக் குறித்தும், மருந்து செய்வதற்கு ஏற்றகாலம் எது என்பதும், மருத்துவன் நோயாளியின் நாடியை அறியத் தேர்வு செய்வதற்குரிய காலமும், நோயின் வன்மையினால் நோயாளியின் இறுதியை அறிவிக்கும் காலமும் காலக் குறிப்புகளாகக் காணப்படுகின்றன. இவை, ஆயுள், ஆண்டு, பெரும்பொழுது, சிறு பொழுது, கிழமை, நாள், நட்சத்திரம், வாரம், நாழிகை, திதி, கணம் எனப்படும்.

முறையாகப் பிறந்த பிள்ளைக்கு ஆயுள் 100 ஆண்டுகள் ஆகும். அதில் ஒன்று முதல் 10 வயது வரை பாலப்பருவம். 20 வயது வரை வளர்ச்சிப் பருவம். முப்பதாம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஒளி குறையத் தொடங்கி, 40 வயதுக்குள் அழகு குன்றி, 50–ஆம் வயதில் நிலம், நீர் இவற்றின் தன்மை மிகுந்து நெருப்பின் தன்மையால் நரை உண்டாகி உடல் தளர்ச்சியுறும். 60–ஆம் வயதில் நீர், மண் இவற்றின் தன்மை மிக அதிகரிக்கும். கண்ணின் ஒளி குறையும். நடையில்

தடைகள் காணப்படும். 70–ஆம் வயதில் உடல் ஒடுங்குவ துடன் நீர்ச்சத்து குறைந்து தாதுவில் தீத்தன்மை அதிகரிக்கும். தாதுக்கள் உலர்ந்து அறிவும் குன்றும். 80–ஆம் வயதில் வாய்வு அதிகம் வெளியாவதுடன் மேல் மூச்சு வாங்கும். தொண்ணூ<றாமாண்டில் புலன்கள் ஐந்தும் சீவனோடு பொருந்தும். விந்து மறைந்து போகும். 100 –ஆவது வயதில் நலம் எதுவுமே இல்லையாய் மரணம் உண்டாகும். என்று இயல்பாக மனிதனின் வாழ்க்கையைப் பற்றிக் கூறப்படுகிறது.

மனிதன் கருவாக உருவான போதே வாழ்நாள் இவ்வளவு என்பதும், சாகும் நாள் இன்னது என்பதும், நற்குணம், தாழ்குணம், புகழ் இன்னவை என்பதும் கருவில் பதிப்பிக்கப்படுவதாகும்.

"" விட்டபின், கர்ப்ப வுற்பத்தி வீதியிலே
தொட்டுறுங் காலங்க டோன்றக் கருதிய
கட்டிய வாணாள்சா நாள்குணங் கீழ்மை சீர்
பட்டநெறி யீதென் றெண்ணியும் பார்க்கவே''

எனப்படுவதனால், எல்லா நன்மை தீமைகளும் கருவில் பதியப் பெற்றவை என்பதை அறியலாம்.

இன்றைய அறிவியல் வல்லார்கள் கண்டறிந்த “ஜீனோம்” பற்றிய கருத்துகள் இதனோடு ஒத்திருப்பதைக் காணலாம். அணுவின் உள்ளே எல்லாம் பதியப் பெற்றவை என்பதே ஜீனோம் கண்டறிந்தவர்கள் கூற்றாகும்.

ஒவ்வொருவரின் உடல் அமைப்பு கருவில் இயல்பாக எப்படி அமைந்திருக்கின்றதோ, அப்படியே அவரின் ஆயுட்காலமும் அமைந்திருக்கும் என்பதை அறியும் முறை கூறப்படும்.

மனிதன் விடுகின்ற மூச்சுக் காற்றானது 6 விரல் அளவு வெளியே சென்றால் 80 ஆண்டும், ஏழுவிரல் அளவு வெளியே சென்றால் 62 ஆண்டும், எட்டுவிரல் அளவு வெளியே சென்றால் 50 ஆண்டும், ஒன்பது விரல் அளவு வெளியே சென்றால் 32 ஆண்டும், ஆயுளாக அமையும்.

"" ஏறிய வாறினில் எண்பது சென்றிருந்
தேறிய ஏழிற் சிறக்கும் வகையெண்ணில்
ஆறொரு பத்தாய் அமர்ந்த இரண்டையும்
தேறியே நின்று தெளியிவ் வகையே''

என்றதனால், வெளிவிடும் சுவாசம் அளவுக்கு அதிகமானால் ஆயுள் குறையும். குறைவாக வெளியே விட்டால் ஆயுள் அதிகரிக்கும் என்பது அறியலாம்.




தமிழ் மருத்துவம் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 1:24 am


காலமும் மருத்துவ நூலாரும்

காலத்தைக் கணிப்பதில் மருத்துவ நூலார் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்கள் என்பதற்கோர் எடுத்துக் காட்டாகப் பின்வரும் செய்தி அமையக் காணலாம். அதாவது, பொழுதைப் பெரும்பொழுது என்றும், சிறுபொழுது என்றும் வகுத்தனர் முன்னோர். அதனையே ஏற்று மருத்துவ நூலாரும் தங்கள் மருத்துவக் காலங்களைக் கூறாமல், அதிலுள்ள சிறு சிறு குறைகளையும் நீக்க முயன்றிருப்பது தெரிய வருகிறது.

தென்தமிழ் நாடானது, சூரியனுடைய செங்குத்தான கிரணங் களால் வெப்பமும் ஒளியும் பெறுவதான வெப்ப மண்டலம் எனப்

பட்ட, பூமியின் நடுப்பாகத்துக்கு மிக அருகில் அமைந்திருக்கும் காரணத்தால், ஆறு பெரும்பொழுதுகளும் காலக் கணிதத்தில் கூறப்பட்ட நாள்களுக்கு முன்னதாகவே தொடங்கிவிடும் என்பதை அறிவாயாக. இக்கூற்று உண்மை என்பது கார்த்திகை பதினைந்து தேதிக்குப் பின் பனி பெய்வதையும், பங்குனி பதினைந்து தேதிக்கு மேல் சூரியனுடைய வெப்பம் அதிகரித்து வருவதையும் கண்ட பெரியோர்கள் ,மேற்படி ஆறு பெரும்பொழுதுகளையும் காலக் கணிதத்தில் கூறப்பட்ட தேதிக்கு 15 நாள் முன்னதாகவே மருத்துவப் பெரும் பொழுதாகக் கொண்டு, அவ்வக் காலத்து ஒழுக்கங்களைத் தவறாமல் ஏற்று வந்தாலே காலத்தின் மாறுபாடுகளால் ஏற்படும் நோய்களைத் தடுத்துக் கொள்ள இயலுமென்பதை அனுபவத்தால் கண்டறிந் துள்ளனர். இவ்வகைக் கணிப்பு தென்கீழ்த் தமிழ் நாட்டுக்கு ஒவ்வும் என்க.309

"" ஆதித்தர்க் குச்சமோ டாட்சிக்குட் பட்டதென்
றோதிடும் பூமத்திக் குத்தரத்தே பூதிசார்
தென்றமிழ்நா டுள்ளதால் செப்பாறு போழ்துசற்று
முன்னதாகத் தோன்று முணர்''

என்று பெரும்பொழுதைத் துல்லியமாகக் குறித்துள்ளதால் மருத்துவ நூலின் தோற்றம் தென்தமிழ்நாடு என்பதை விளக்குவதாகத் தெரிகிறது.

காலமும் மருந்தும்

மருந்துகளைச் செய்ய எந்த எந்த மாதங்களில் எந்த எந்த மருந்துகளைச் செய்ய வேண்டுமென்று உரைக்கப் பெற்றுள்ளனவோ, அந்த அந்த மாதங்களில்தான் அந்த அந்த மருந்துகைளைச் செய்ய வேண்டுமென்று கட்டளை பிறப்பிக்கப் பட்டுள்ளதால் மாதங்களின் முக்கியத்துவம் விளங்குகிறது.

அதாவது, பங்குனி முதல் மாசி ஈறாக வரும் மாதங்கள் பன்னிரண்டில் இரண்டு இரண்டு மாதங்களாகப் பெரும் பொழுது காலத்தைக் கவனத்தில் கொண்டு, ஒவ்வொரு மருந்தை ஒவ்வொரு பொழுதில் முடித்திடுமாறு கூறப்படுகிறது.

பங்குனி, சித்திரை – குரு மருந்து; தை, மாசி – செயநீர்;

ஐப்பசி, கார்த்திகை – உருக்கு வகை; ஆடி, ஆவணி – திராவகம்;

வைகாசி ஆனி – சாரணை; புரட்டாசி, மார்கழி – செந்தூரம்;

ஆகியவை செய்திட வேண்டும். இதில் ஏதோனும் தவறுகள் நேர்ந்தால் செய்யும் மருந்து சரியான பாகமாக அமையாது. கவனமாகப் பார்த்துச் செய்யவும் என்ற கண்டிப்பும் காணப்படுகிறது.

காலமும் வெப்பமும்

இதனால், இயற்கையின் வெப்பமும், மருந்திற்குத் தேவைப்படும் வெப்பமும் ஆராயப்பட்டிருப்பது தெரிய வரும். இளவேனில் காலத்தில் செய்ய வேண்டிய குரு மருந்தைக் கூதிர் காலத்தில் செய்ய நேர்ந்தால், நூறு வறட்டிகளினால் இளவேனில் காலத்தில் கிடைக்கும் வெப்பத்தை விடவும் குறைவாகக் கூதிர் காலத்தில் கிடைக்கக் கூடும். காரணம், இயற்கையாகவே இளவேனில் காலமும் கூதிர் காலமும் வெப்பத்தால் வேறு வேறானவை. ஒரு மருந்து, வேதியல் முறையில் ஒரு மாற்றத்தைப் பெற வேண்டுமானால், குறிப்பிட்ட அளவு வெப்ப நிலையில் அம்மருந்து வைக்கப்பட்டால்தான் நிகழும் என்பதே அறிவியல் உண்மை. அத்தகைய வேதியல் மாற்றம் நிகழாமல் செய்யப்படும் மருந்து நோயைத் தீர்க்கக் கூடியதாக அமையாது. நோயின் தன்மையை மாற்றவும் கூடும். அவ்வாறானால் மருத்துவரின் நற்பெயர் கெட நேரிடும். காலம் கருதினால் அவ்வாறு நிகழாமல் போகலாம்.




தமிழ் மருத்துவம் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 1:25 am


காலமும் நாடியும்

எந்த நோயையும் நாடியின் துடிப்பு கொண்டு கண்டறிய முடியும். இந்நாடியைக் கணிக்க காலம் பார்த்தல் வேண்டும். இந்தெந்த மாதங்களில் தான் நாடியைப் பார்க்க வேண்டும் என்பது விதியாகக் கூறப்படுகிறது.

“ சித்திரை, வைகாசிவைகறை; கார்த்திகைநண்பகல்;
ஆனி, ஆடி, ஐப்பசி, மார்கழி, தை, மாசி மாலை;
பங்குனி, ஆவணி, புரட்டாசி இரவு''

என்னும் நான்கு சிறுபொழுதுகளில் நாடி பார்க்க வேண்டும்.

இதில் குறிப்பிட்டுள்ள சிறுபொழுதுக்கும் இயற்கையின் வெப்பத்துக்கும் ஏற்ப நாடிகள் இயங்கும். சித்திரை, வைகாசி மாதங்களில் நண்பகலில் ஏன் நாடி பார்க்கக் கூடாது எனச் சிந்தித்தால் அதன் பொருள் விளங்கும்.

காலமும் மருத்துவனும்

மருந்துகளைச் செய்ய மாதத்தையும் பருவத்தையும் அறிந்து அதன் வழிச் சென்று, அதற்குரிய மருந்துகளைச் செய்து சேகரிக்கப் படுவதுடன், நோயாளியைக் கண்டவுடன் மருத்துவம் பார்ப்பதும் கூடாதென்பது கூறப்படும்.

"" நாள்களின் பேதம் பாரு நடவடி யின்ன தென்று
கோள்பாரு உச்சம் பாரு குணம்குறி வந்த குற்றம்
ஆள்பாரு நடக்கை பாரு அவரவர் செய்கை பாரு.''

நோயாளியைக் காணுகின்ற நாளின் பேதா பேதங்கள்; கோள்களின் நிலை; அவற்றின் உச்சம்; அதனால் உண்டாகும் விளைவு; நோய்க்கும் காலத்துக்கும் உள்ள தொடர்பு; நோயாளிக்கும் கோள்களுக்கும் உள்ள நட்பு, பகை என்னும் உறவு; நோயாளிக்கு வந்த நோய்க்கு மருந்து தயாரிக்கும் காலம் என்பன கண்டறியப்பட்ட பின்பே, மருத்துவம் பார்க்க வேண்டும்.

"" நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்''

"" உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்''

என்னும் குறள்களின் பொருள் மேற்கண்டவற்றை உறுதி செய்ய அரணாக அமைவது கருதத்தக்கது.

காலமும் உணவும்

உணவை எந்த முறையில் உண்ண வேண்டும். உணவின் அளவு, உணவுண்ணும் நேரம் முதலியவற்றை நன்கு அறிந்திருந்தனர் நம் முன்னோர். “உண்பது நாழி, உடுப்பவை இரண்டே“315 என்று பழந்தமிழ் மக்கள் கருதினர்.

“நுதல் வியர்க்கும் படியாக உணவை உண்டனர்“316 என்னும் செய்தியும் சங்க நூல்களில் காணப்படுகிறது.

"" விலாப்பக்கம் புடைக்கும் அளவிற்கு உணவுண்டனர்''317

என்பவற்றிலிருந்து உணவை எவ்வாறு உண்டனர் என்பது தெரியவரும். ஆனால், மருத்துவ நோலோர் மேற்கண்ட முறை யிலிருந்து மாறுபட்டிருக்கின்றனர்.

"" இரும்புறு பசியே யாகில்
இதயமே மலர்ந்து தோன்றும்
இரும்புறப் பசித்த ஊணும்
மிகுந்தஇன் பத்தைக் காட்டும்.''

பசி உண்டான பின்னர் உண்ணும் உணவே உடலுக்கு இன்பத்தைத் தரவல்லதாகும் என்று கண்டனர்.

"" அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.''

முன்னர் உண்ட உணவு செரிப்புண்டானதை அறிந்தும், பின்னர் மிக்க பசி உண்டான பின்பும், உடலுக்கு எந்தவித ஒவ்வாமையையும் உண்டாக்காத உணவை அறிந்தும் உண்க என்றனர். அதுவே, ‘நெடிதுய்க்குமாறு’ 320 என்றதைப் போல, நீண்ட நாள் வாழ வழி வகுக்கும் என்று வாகட மறையோர் வகுத்த முறையாம்.

அதே போல், உணவை எத்தனை பொழுது உண்பது என்பதும் கேள்விக்குரியது. சராசரியாக நாளொன்றிற்கு மூன்று வேளையை விடவும் அதிகமாக உண்ணுபவர் உண்டு. என்ற போதிலும் மூன்று வேளை உணவு என்பதே முறையானது என்பது பொதுவான கருத் தாகும். ஆனாலும், மருத்துவ வல்லார் உரைப்பது வேறாக உள்ளது.

"" உண்பதே ஒருபொழு தாகில் உடலுக்கு உறுதி யாகும்

உண்பதே இருபோ தாகில் உயர்பெலம் எழுதாது எய்தும்

உண்பது மூன்று காலம் உண்டிடில் பிணிஉண் டாகும்

உண்பதும் இரண்டு காலம் உரைத்ததாம் உலகத் தோர்க்கே

உரைத்திடும் காலம் ஆறும் உயர்நிலம் ஐந்தும் ஒக்கும்

நெறியுறு காலம் தப்பா நேர்மையாய்ச் சமைத்த அன்னம்

நெறியுற உண்பார்க்கு இல்லை நீள்நிலம் மீதில் நோயே.''

ஒரு வேளை உணவினால் உடலுக்கு உறுதியும், இருவேளை உண வினால் உடலுக்கு வலுவும் உண்டாகும். மூன்று வேளை உணவு உண்டால் நோயும் உண்டாகும். இது உலகத்தோர்க்கு உரைத்தது. ஆறு காலத் திலும் ஐவகை நிலத்திலும் வாழும் மக்கள் அனைவர்க்கும் இது பொருந்தும்.

இவ்வாறு காலமாறுபாடு இல்லாமல் குறித்த காலத்தில், முறை யாகச் சமைக்கப் பெற்ற உணவை உண்ணுகின்றவர்களுக்கு நோய் என்பதே வராது என்று வகுத்துரைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.




தமிழ் மருத்துவம் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக