புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மருத்துவம் - Page 3 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 3 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 3 Poll_c10 
68 Posts - 41%
heezulia
தமிழ் மருத்துவம் - Page 3 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 3 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 3 Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
தமிழ் மருத்துவம் - Page 3 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 3 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 3 Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
தமிழ் மருத்துவம் - Page 3 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 3 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 3 Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
தமிழ் மருத்துவம் - Page 3 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 3 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
தமிழ் மருத்துவம் - Page 3 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 3 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
தமிழ் மருத்துவம் - Page 3 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 3 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தமிழ் மருத்துவம் - Page 3 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 3 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
manikavi
தமிழ் மருத்துவம் - Page 3 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 3 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மருத்துவம் - Page 3 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 3 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 3 Poll_c10 
319 Posts - 50%
heezulia
தமிழ் மருத்துவம் - Page 3 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 3 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 3 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
தமிழ் மருத்துவம் - Page 3 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 3 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 3 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
தமிழ் மருத்துவம் - Page 3 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 3 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 3 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ் மருத்துவம் - Page 3 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 3 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 3 Poll_c10 
21 Posts - 3%
prajai
தமிழ் மருத்துவம் - Page 3 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 3 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தமிழ் மருத்துவம் - Page 3 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 3 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 3 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
தமிழ் மருத்துவம் - Page 3 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 3 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
தமிழ் மருத்துவம் - Page 3 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 3 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தமிழ் மருத்துவம் - Page 3 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 3 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் மருத்துவம்


   
   

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 27, 2021 11:51 pm

First topic message reminder :



கோட்பாடு விளக்கம்

சித்த மருத்துவக் கோட்பாடு என்பது, அம்மருத்துவம் எந்தக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு மருத்துவம் செய்யப் படுகின்றதோ அக்கொள்கையின் அடிப்படையைக் குறிப்பிடுவதாகும்.

மருத்துவக் கோட்பாடு

உடலைப் பற்றி அறிவது; உடலில் தோன்றும் நோய்களைக் கண்டறியும் கருவிகளை உருவாக்குதல்; நோய்களுக்கான காரணங் களைக் கூறல்; நோய்களுக்குரிய மருந்துகளை உடலியலுக்கு ஏற்றவாறு அமைத்தல்; மருந்துகளால் நோய்களைத் தீர்க்கும் முறைகளை வகுத்தல்; நோயிலிருந்து விடுபடல்; தடுத்தல்; பாது காத்தல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மருத்துவக் கோட்பாடு உருவாக்கப்படும்.

சித்த மருத்துவக் கோட்பாடு

சித்த மருத்துவக் கோட்பாடு ஐம்பூதக் கொள்கையை அடிப் படையாகக் கொண்டது. இந்த உலகம் ஐம்பூத மயமானது; இந்த உலகத்திலுள்ள உயிர்கள் அனைத்தும் அவற்றால் உருவானவையே; மனித உடலும், உடல் உறுப்புகளும் ஐம்பூதங்களை ஆதாரமாகக் கொண்டு உருவானவை; உடலில் தோன்றும் நோய்களுக்குக் காரணமாக அமைவதும், அந்நோய்களைத் தீர்க்கும் மருந்துப் பொருள்களும், மருந்தும் பஞ்சபூதச் சேர்க்கையினாலேயே உருவா கின்றன. இயற்கையாகத் தோன்றிய பஞ்சபூத முறைக்கு மாறாக அமையும் மருந்துகள், பயன் தர மாட்டா என்னும் கருத்துகளின் அடிப்படையில் வகுக்கப் பெற்றதாகும்.

பஞ்சபூதம்

பஞ்சபூதம் என்பது, நிலம், தீ, நீர், காற்று, ஆகாயம் என்னும் ஐந்தாகும். இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லா விட்டாலோ, குறைந்தாலோ உயிர்கள் தோன்றவும் வாழவும் வழியில்லை. உயிர்கள் தோன்றவும் உய்யவும் காரணமாக அமைவது பஞ்ச பூதமாகும்.

"" நிலம், தீ, நீர், வளி, விசும் பொடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்''1

இந்த உலகம், பஞ்சபூதங்களின் கலவையால் உருவானதே என்று, தொல்காப்பியம் உரைக்கிறது.

உலகமும் பஞ்சபூதமும்

உலகம் பஞ்சபூதங்களின் கலவையினால் உருவாகியிருப்பதைப் போல, நிலவுலகில் உருவாகி யிருக்கும் பொருள்களும் பஞ்சபூதங் களின் கலவையால் அல்லது சேர்க்கையால் உருவானவை.2 பஞ்ச பூதங்களின் தொகுதியே உயிரினங்களை உருவாக்கின என்பதால், உயிர்த் தோற்றத்திற்குப் பஞ்சபூதங்களே ஆதியாக அமைவது தெரிய வருகிறது.3

“ வாறான சனங்களுக்கும் ஐந்து பூதம்
மருவியதோர் தேவதைக்கும் ஐந்து பூதம்
தாறான அண்டமெலாம் ஐந்து பூதம்
சதாசிவமாய் நின்றதுவும் ஐந்து பூதம்
கூறான யோனியெல்லாம் ஐந்து பூதம்
குரும்பனே ஐந்தினால் எல்லாம் ஆச்சு''4

என்று, சட்டைமுனி உரைக்கின்றார். ஐம்பூதங்களால் உருவானவை மனிதர் மட்டுமல்ல, தேவதைக்கும் அவைதாம். சதாசிவமாய் நின்ற தெய்வத்துக்கும் அவைதாம். உயிரினங்கள் அனைத்துக்கும் அவைதாம். அவற்றால்தான் அனைத்துமே உருவாயிற்று என்று தெளிவுபடுத்துவர்.

உயிரினங்கள் பஞ்சபூதங்கள் அல்லாமல் வேறு முறையில் உருவானவை அல்ல என்பதே இதன் அடிப்படைக் கருத்து.

ஒரு பொருளின் மூலத்தைக் கண்டுரைப்பதைப் போல, உயிரினங்கள் அனைத்திற்கும் மூலமாய் நிற்பது பஞ்சபூதங்கள் என எண்ணினர்.




தமிழ் மருத்துவம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 12:34 am


நாடி நடை

நோய் அற்றபோது ஒரு வகை நடையும், நோய் உற்ற போது ஒருவகை நடையும், நோயின் வேறுபாட்டிற்கு ஏற்ப நாடியின் நடையும் வேறுபட்டிருக்கும். இந்த நாடியின் நடை இம்மாதிரியிருந்தால் இந்த நோய் அல்லது இந்த நோய் வருவதற்குரிய அடையாளம் என அனுபவத்தின் மூலம் உணர்வர். இதைப் பயில்வதற்கு ஏற்றவாறு விலங்குகள், பறவைகள், ஊர்வன, பூச்சி, புழுக்கள் போன்றவற்றை எடுத்துக்காட்டி உவமைகள் மூலமாக உணர்த்தப்பட்டுள்ளன.

வாத நாடி

"" வாகினில் அன்னங் கோழி மயிலென நடக்கும் வாதம்''

வாத நாடியானது இயல்பினில் அன்னம், கோழி, மயில், போல நடக்கும். உடலின் தன்மை மாறி நிற்குமானால் இந்நடையில் மாற்றம் ஏற்பட்டு நோயின் தன்மைக்கு ஏற்பச் செயல்படும். அவை, மண்டூகம் தாவுவது போலும், ஓணான் போலும், பாம்பு, அட்டை, வேலிக்குருவி, ஆமை போலவும் நடக்கும்.

பித்த நாடி

"" ஏகிய ஆமை அட்டை இவையென நடக்கும் பித்தம்''

பித்த நாடியானது இயல்பினில் ஆமை, அட்டை போல நடக்கும். பித்த நோய்க்குறி தோன்றும் போது அந்நோய்க்கு ஏற்ப நடையில் மாற்றம் ஏற்படும். அவை, நாகரிகமான அன்ன நடை போலும், மயில் போலும், தாரா போலும், மாடப் புறா, ஊர்க்குருவி போலும் , கருடப் போத்து, சிங்கம், பாம்பு, பிள்ளை குதிப்பது போல, மதயானை போல, சிறு காக்கை தூங்குவது போல, நடக்கும்.

ஐய நாடி

"" போகிய தவளை பாம்பு பொல்லாத சிலேட்டுமந்தானே''

ஐய நாடியானது இயல்பினில் தவளை, பாம்பு போல நடக்கும். ஐய நோய் தோன்றும் போது அந்நோய்க்கு ஏற்ப நடையில் மாற்றம் ஏற்படும். அவை கோழியின் நடை, கொக்கினது உறக்கம், ஊர்க் குருவி, சிலந்திவலையினில் பூச்சி போல நடக்கும்.

பாம்பு நடையெனப் பதுங்கியும், அரணையினது வால் போலவும் ஐயநாடி நடையிருக்கும்.

பூத நாடி

பூத நாடியானது இயல்பினில், கல்லெறிதல், ஆட்டுக்கிடா பாய்ச்சல், செக்கிடை திருகல், சீறுகின்ற மூஞ்சூறு, பந்தடித்து எழும்புதல், ஏற்றம் போல் ஏறி இறங்குதல் போல இருக்கும். இதிலிருந்து மாறுபடும் போது,

பூனைபோல நடக்கும், வெள்ளெலி போல குன்றியும்

வண்டுபோல ஊர்ந்தும் , பாம்பு போல நெளிந்தும்

சங்கு போல ஊர்ந்தும், கார்வண்டு போல ஊர்ந்தும்

பூதத்தைப் போல ஊர்ந்தும், தேரை போல தாண்டியும்

காக்கைபோலக் குதித்தும் , நெருப்பு போல சுட்டும்

செக்குபோலச் சுற்றியும் , நடக்கு மென்றறியலாம்

என்பதனால், மருத்துவ நாடி நூலார் நாடித் தேர்வின் வளர்ச்சியையும், முதிர்ந்த நிலையையும் காட்டுவதாக அமைந்திருக்க காணலாம். பல்வேறு வகைகளைக் கொண்ட நாடியின் நடைகளை மிகவும் துல்லியமாக, வளர்ச்சியடைந்த நிலையிலுள்ள அறிவியல் கருவி களுக்கு ஈடாக, விரலைக் கொண்டு தொடு உணர்வினால் நோய்த் தன்மை, நோயுற்ற காலம், முதிர்ச்சி, மரணத்தின் எல்லை என்பவற்றை யெல்லாம் அறியும் வகையாக நாடித் தேர்வு அமைந்திருக்கிறது.

நாடிகளும் அளவுகளும்

நாடிகளை ஆராயும் போது அவற்றுக்கு உரிய அளவுகளின்படி அமையாமல் குறைந்தோ கூடியோ தோன்றுகின்றனவா என்று அறிவதற்கு நாடிகளின் இயல்பான அளவுகள் குறிப்பிடப் படுகின்றன.

வாத நாடி ஒரு மாத்திரை அளவும், பித்த நாடி அரை மாத்திரை அளவும், ஐயநாடி கால் மாத்திரை அளவும் என மூன்று நாடிகளின் அளவும் குறிப்பிடப் படுகின்றது. இந்த அளவுகளில் மூன்று நாடிகளும் தோன்றினால் உடலில் ஒரு குற்றமும் இல்லை என்று உறுதியாகக் கூறலாம். ஒரு மாத்திரை என்பது ஒரு கை நொடி அல்லது கண்ணிமைக்கும் கால அளவு ஆகும்.




தமிழ் மருத்துவம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 12:36 am


நாடிகளுக்குரிய காலங்கள்

நாடிகளை எல்லா வேளையிலும், எல்லாக் காலங்களிலும் பார்த்தால் அதற்குரிய இயல்புகள் அறிய முடியாமற்போகும் என்பதால், நாடிகளுக்குரிய காலங்களாகச் சிறுபொழுது, பெரும்பொழுது ஆகியவற்றில் உரிய காலத்தை உரைத்துள்ளனர்.

"" காலமே சேத்தும நாடி கட்டுச்சிப் பித்த நாடி
மாலையில் வாத நாடி வகை தப்பிப் பிதறி நின்றால்
... ... ... ... ... ... ... ...
நாலஞ்சில் மரணமென்று நன்முனி யருளிச் செய்தார்.''

நாடித் தேர்வினால் அறியக் கூடிய நோய்கள்

நாடிகள் நடக்கும் இயல்பைக் கொண்டு உடலில் தோன்றிய நோய்களைக் கண்டறிவது மருத்துவத்தில் இயல்பானதாகும். நாடிகளைக் கொண்டு அறியப்படும் நாடிகள், இயல்புக்கு மாறாக நடந்தால் அது, தொந்தம் என்று குறிக்கப்படும்.

(டி) வாதம் கால், பித்தம் ஒன்று என்னும் அளவில் நாடிகள் தோன்றினால், வாந்தி, மந்தம், வயிற்றெரிச்சல், சுரம், கண்ணில் காந்தல், பாண்டு, மூலம் ஆகிய நோயும்,

செவி அடைப்பு, உடல் வெதுப்பு, உடல்வலி, உடல் நடுக்கம், மூத்திர எரிச்சல், போன்று உடலில் குணங்களும் காணப்படும்.

(டிடி) வாதம் முக்கால், பித்தம் அரை, ஐயம் கால் என்னும் அளவில் நாடிகள் தோன்றினால், உடல் வேர்க்கும்; சீதளம் உண்டாகும்; மேகம் உண்டாகும்; உடல் தடிக்கும்; காலில் வெடிப்பு உண்டாகும்.

(டிடிடி) பித்தம் அரை, ஐயம் அரை, வாதம் கால் என்னும் அளவில் நாடிகளின் நடை தோன்றினால், வாய் காந்தும்; வாயில் நீரூரும்; கண்ணுழலும்; இருமல் உண்டாகும்; கால்களில் வெடிப் புண்டாகும்.

(டிதி) வாதம் ஒன்று, பித்தம் ஒன்று, ஐயம் ஒன்று என நாடி நடையிருந்தால்,

“சாவில்லை சாகாம லிருக்கலாகும்
சாத்தியத்தில் குணங்களப்பா யிதுகளெல்லாம்
சாவில்லை நோயில்லை வறுமையில்லை''

என்றதனால், மரணமில்லாப் பெருவாழ்வுக்குரிய உடலினர்க்கு இவ்வாறான நாடி நடை அமையுமென்று தெரிகிறது.

(தி) ஐயம் ஒன்று, பித்தம் கால், வாதம் கால் என்னும் அளவில் நாடி நடை அமைந்தால் காது அடைக்கும்; தலையில் வியர்வை உண்டாகும்; கண் மூக்கில் நீர் வடியும்; மயக்கம் உண்டாகும்.

(திடி) வாதம் கால், பித்தம் ஒன்று என்னும் அளவில் நாடி நடை அமைந்தால், வாய்வு தொடர்பான நோய்கள் உண்டாகும்.

(திடிடி) வாதம் ஒன்று, பித்தம் முக்கால், ஐயம் ஒன்று என்னும் அளவில் நாடி நடந்தால் தொப்புளுக்கும், தொண்டைக்கும் மூச்சிழுக்கும்; நெஞ்சடைக்கும்; உடல் முழுவதும் நோவும்; மரணம் நெருக்கத்தில் வந்து விட்டதென்று அறியலாம்.

என்று நாடிகளின் தொந்தத்தால் பல நோய்களைக் கண்டறியும் குறிப்புகள் காணப்படுகின்றன. பெரும் பகுதி நாடிகள் மரணத்தின் அறிவிப்பைத் தெரிவிக்க கூடியதாகக் காணப்பட்டாலும், அவற்றின் அறிகுறியை அறிந்த பின்பு அதற்கான மருந்துகளைக் கொண்டு மரணத்திலிருந்து மீளுகின்ற வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது.

நாடிமுறைத் தேர்வின் மூலம் அறியக் கூடிய நோய்களாக மருத்துவ நூலார் குறிப்பிடுகின்ற வாத நோய்த் தொகை, பித்த நோய்த் தொகை, ஐய நோய்த்தொகை, தொந்த நோய்த் தொகை என்னும் நோய்கள் அனைத்தும் அறியலாம் எனத் தெரிகிறது.

நாடிகளை அறிக்கூடிய முறை, வகுப்பு, பயிற்சி, அடிப்படைகள் என எதுவும் நாடி நூல்களில் காணப்பட வில்லை. அல்லது கிடைத் துள்ள நாடி நூல்களில் அவ்வாறான பாடல்கள் இணைக்கப் பெற வில்லை.

நோயறியும் முறைகளில் நாடி முறை மிகவும் துல்லியமாகக் கணிக்கப்படுவதாகக் கருத்து நிலவுவதால், அவை பற்றிய அறிவியல் ஆய்வுகள் தேவைப்படுகின்றன. சித்த மருத்துவத்துக்கு மட்டுமல்லாது உலக மருத்துவத்துக்கே அது உதவியாக இருக்கும்.

நோயாளிக்கு உற்ற நோயின் தன்மையை அறியவும், நோயின் வகையை அறியவும் எண்வகைத் தேர்வுகள் பயன்படுகின்றன. அவ்வாறான தேர்வுகள் மூலம் நோயாளியின் நிலையை அறிய முயல்கின்றனர். அவ்வகையில் ஒலி, உணர்வு, வடிவம், சுவை, நாற்றம், மலம், மூத்திரம், எச்சில், விந்து ஆகிய ஒன்பதைத் தேரையர் நூல் விவரிக்கக் காண்கிறோம். அந்நூல் காட்டும் முறைகள் வருமாறு:




தமிழ் மருத்துவம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 12:37 am


ஒலித்தேர்வு

நோயுற்றவர் பேசுகின்ற போது அவரின் பேச்சு அவரின் இயல்பு நிலையினிலிருந்து மாறுபட்டு, வீணையினது நாதத்தைப் போலும், கின்னரி இசைப்பது போலவும், குழல் இசைப்பது போலவும் சன்னமாகவும், நாயின் சத்தத்தைப் போலவும், ஈச்சு கொட்டுகின்றதைப் போலச் சத்தமும், மலை எதிரொலிப்பதைப் போன்ற ஓசையும், கிணற்றில் பேசுவது போலவும், எக்காளம் போன்ற ஓசையும், பேரியம் கொட்டுகின்றதைப் போன்ற முழக்கமும் இருக்குமேயானால் வீணை யிசைக்கு ஒரு நாழிகையிலும், கின்னரத்திற்கு பத்து நாழிகையிலும், குழலோசைக்கு நூறு நாழிகையிலும், நாயோசைக்கு ஆயிரம் நாழிகையிலும், ஈச்சு கொட்டுகின்ற ஓசைக்கு இரண்டாயிரம் நாழிகையிலும், மலையோசைக்கு மூவாயிரம் நாழிகையிலும், எக்காளத்திற்கு நாலாயிரம் நாழிகையிலும், கிணற்றோசைக்கு ஐயாயிரம் நாழிகையிலும், பேரிய வோசைக்கு ஆறாயிரம் நாழிகையிலும், இறுதி வரும் என்று உரைக்கலாம்.

"" வீணையிசை நத்தோசை வேயோசை நாயோ
வீணையிசை நத்தோசை வெற்போசைவீணையி
தாரையியம் பேரியியந் தப்பாதொன் றாதிலக்கந்
தாரையியம் பேர்கலைவி தான்''

என்பதனால், ஒலித்தேர்வு முறையினால் நோயைக் காணாமல் நோயாளிக்கு இறுதி நாள் எத்தனை நாழிகையில் வரும் என்பது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடற்குரியது.

உணர்வுத் தேர்வு

நோயாளியை மருத்துவன் தொடுகின்ற போது, மருத்துவனின் உணர்வில் நோயாளியின் உடல், முதலையினது முதுகைப் போல இருக்குமானால் பன்னிரண்டு நாளிலும், ஆமையினது முதுகு போல இருக்குமானால் ஐம்பத்தாறு நாளிலும், மீனினது வால்புறம் போல இருக்குமானால் நாற்பத்தைந்து நாளிலும், குளிர்ச்சி அதிகமாயிருக்கு மானால் பன்னிரண்டு சாமத்திலும், வெப்பமும் சீதளமும் தொந்தித்து இருக்குமானால் ஐம்பத்தாறு சாமத்திலும், அதிக காங்கை இருக்கு மானால் நாற்பத்தைந்து சாமத்திலும், மறைவிடத்தைப் பார்க்கும் போது யானைத் தோலைப் போல வன்மையாயிருந்தால் பன்னிரண்டு நாழிகையிலும், மரத்தைப் போன்றிருந்தால் ஐம்பத்தாறு நாழிகை யிலும், கல்லைப் போன்றிருந்தால் நாற்பத்தைந்து நாழிகையிலும் இறுதிவரும். இரத்த நாளமானாது தாமரைக் கொடியின் முள்ளைப் போலிருக்கு மானால் பன்னிரண்டு விநாடியிலும், தச்சு உளிபோல கூர்மையாக இருக்குமானால் ஐம்பத்தாறு விநாடியிலும், ஆரம்போலக் கருக்குடன் இருக்குமானால் நாற்பத்தைந்து விநாடியிலும் இறுதி வருமென்று உரைக்கலாம்.

உணர்வுத் தேர்வு முறைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்ற தோலில் தோன்றும் வேறுபாடுகள் அனைவராலும் அறியக் கூடியதாக இருந்தாலும், அவ்வாறு தோன்றுவதற்குரிய அடிப்படைகள் என்னவென்னு அறியமுடியவில்லை. அறிவியல் அடிப்படையாக அமைகின்றனவா அல்லது அனுபவம் அடிப்படையாக அமை கின்றனவா என்பது கண்டறியப்பட வேண்டிய தெனலாம்.

வண்ணத் தேர்வு

நோயாளியைக் காணுகின்ற மருத்துவன் கண்களுக்கு, நோயாளி யின் வடிவம் சூரியனைப் போலச் சிவந்த வண்ணமும், மினுமினுப் பும் தோன்றுமேயானால் இரண்டு மாதத்திலும், சந்திரனைப் போல வெள்ளை நிறமுமும் மினுமினுப்பும் தோன்றுமேயானால் மூன்று மாதத்திலும், செவ்வாயைப் போலச் சிவந்த நெருப்பு நிறமும் மினுமினுப்பும் தோன்றுமேயானால் நான்கு மாதத்திலும், வியாழனைப் போல பொன்னிறமென்னும் மஞ்சள் நிறம் தோன்று மேயானால் ஐந்து மாதத்திலும், வெள்ளியைப் போல வெண்ணிறமும் மினுமினுப்பும் தோன்றுமேயானால் ஆறு மாதத்திலும், காரியைப் போலக் கருமை நிறமும் மினுமினுப்பும் தோன்றுமேயானால் ஏழு மாதத்திலும், உமையாள் போலக் கறுத்த பச்சை நிறமான நீலச் சாமள நிறத்துடன் மினுமினுப்பும் தோன்றுமேயானால் எட்டு மாதத்திலும், வண்ணம் தோன்றாமல் மினுமினுப்பு மட்டும் தோன்றுமேயானால் அந்த நிமிடமே இறுதி வரும் என்று உறுதியாகக் கூறலாம்.

“ என்றுமதி செவ்வாய் இரணியன்சுங் கன்காரி
யென்றுமதி செவ்வாய் இவையோடுமைஎன்றுமதி
அஞ்சுமா தக்கணமேல் ஆறுதிங்க ளாமினுக்கே
அஞ்சுமா தக்கணமே யாம்.''

இச் செய்யுளில் கிழமைகளையும் அவற்றிற்குரிய கோள்களின் வண்ணத்துடன் ஒப்பிட்டுக் காட்டி, நோயாளியின் இறுதி நாள் எண்ணிக் காட்டப்பட்டுள்ளது. புதன் குறிப்பிடப்படவில்லை. அதற்காக உமை என்று உரைக்கப்பெற்றிருப்பதும் கவனத்திற்குரியது.




தமிழ் மருத்துவம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 12:38 am


சுவைத் தேர்வு

நோயுற்றவர் அறுசுவைப் பொருள்களை உண்ணும் போது அந்தச் சுவை தோன்றாமல் வேறு சுவைதோன்றுவதாகக் கூறினால், அதனால் நோயுற்றவர் என்ன நிலையில் உள்ளார் என்பதைத் தெரிவிப்பதே சுவைத் தேர்வாகும்.

ஒரு சுவைப் பொருளை உண்ணும் போது, அதற்குரிய சுவை தோன்றாமல்,வேறு எந்தப் பொருளை உண்டாலும் அந்தச் சுவை தோன்றுவதாகக் கூறினால், நோயின் முதிர்ச்சியால் எத்தனை நாளில் இறுதிவரும் என்பதை அறியலாம்.

கசப்புச் சுவையை உண்ணும் போது கசப்புத் தோன்றாமல் மற்றெந்தப் பொருளை உண்டாலும் கசப்பதாகக் கூறினால் ஏழு நாளிலும், இனிப்புச் சுவை தோன்றாவிட்டால் ஒரு திங்களிலும், புளிப்புச் சுவை தோன்றாவிட்டால் பதினைந்து நாளிலும், காரச் சுவை தோன்றாவிட்டால் அரை நாளிலும், கரிப்புச் சுவை தோன்றாவிட்டால் ஒரு நாளிலும், துவர்ப்புச் சுவை தோன்றாவிட்டால் ஒரு நாழிகையிலும் இறுதி வருமெனலாம். நோயாளியைப் பற்றிக் கொண்ட நோய் உயிரை வாங்கிக் கொண்டு போக நினைத்திருக்கிற காலத்தை இவ்வாறு அறிய வேண்டும்

இச்சுவைத் தேர்வு மூலம் நோயாளியின் நிலைமையை மருத்துவர் மட்டுமல்ல, மற்றவர்களும் அறியக்கூடியதாக அமைந்திருக்கக் காணலாம். நோயாளியின் அனைத்து நிலைகளையும் ஆராய்ந்து நிலை மையை அறிய உணர்த்தப் பெற்ற இவ்வாறான முறைகள் அரியவை யாக உள்ளன.

நாற்றத் தேர்வு

மலர்களிடத்து எழுகின்ற மணத்தை நோயாளி நுகர்ந்து பார்த்து, அந்த மலருக்குரிய மணம் தோன்றாமல் வேறு மணமாகத் தோன்றுவ தாகக் கூறினால் நோயாளியின் நிலையை அறிவிப்பது நாற்றத் தேர்வாகும்.

மூங்கிற்பூ மணம் அறியாவிட்டால் ஏழு வினாடியிலும்,

வேங்கைப்பூ மணம் அறியாவிட்டால் ஏழு நாழிகைக்குள்ளும்,

தாழம்பூ மணம் அறியாவிட்டால் ஏழு சாமத்திற்குள்ளும்

அத்திப்பூ மணம் அறியாவிட்டால் ஏழு நாளிலும்,

கொன்றைப்பூ மணம் அறியாவிட்டால் ஏழு மாதத்திற்குள்ளும்,

சிறுசண்பகப்பூ மணம் அறியாவிட்டால் பதினான்கு மாதத்திலும்,

மராமரப்பூ மணம் அறியாவிட்டால் மூன்று ஆண்டிற்குள்ளும்

இறுதி வருமென்று அறிந்து பார்த்துத் துணிவுடனே உரைக்க வேண்டும். என்று உறுதியாக உரைப்பதைக் கொண்டு மருத்துவ நூலாரின் ஆழ்ந்த புலமையும் ஆய்வும் தெளிவாகிறது.

மலத் தேர்வு

நோயாளியின் மலம் எந்த வடிவிலும், வண்ணத்திலும், தன்மை யிலும் இருக்கிறது என்றறிந்து நோயாளியின் நிலையை அறிவிக்கிறது.

வெள்ளாட்டுப் புழுக்கையைப்போல உலர்ந்து வரண்டிருந்தால், இறுதி அருகிலுள்ள தெனலாம். சற்றுக் குழம்பு போலிருந்தால் மிக நன்று. போதுமான நீர்த்தன்மையுடையதாய் கடினமுமில்லாமல், தளர்ச்சியு மில்லாமல், வெண்மையாயுமில்லாமலிருந்தால் மிக நன்று. செம்பு நிறம் மத்திமமாகவும், கறுப்பு நிறம் தீயதாகவும் இருக்கும். இத்தேர்வு அதிக ஆய்வும் விளக்கமுமில்லாமல், சாதாரணத் தோற்றத் தைக் கொண்டு பொதுவாக உணரப்படும் கருத்தைப் போலுரைக்கப் பெற்றவையாகும்.

நீர்த் தேர்வு

நோயாளியின் சிறுநீரின் நிறத்தைக் கொண்டு அறியப்படுகின்ற கருத்து இங்கு விளக்கப்படுகிறது.

“ மாணிக்கம் போன்று சிவப்பாக இருந்தால் அசாத்தியம்

வெண்ணிறமானால் பொல்லாங்கு. தேன் போன்றிருந்தால் சாத்தியம்

ஆனாலும் நாளாகும்.

பொன்னிறமானால் சாத்தியம் ஆனாலும் நன்றில்லை''

இங்குக் குறிப்பிடப் பெற்ற நான்கு வகைகளில் இரண்டு அசாத்தியம் இறுதி நிச்சயமென்றும், இரண்டு சாத்தியம் ஆனாலும் நாளாகு மென்று ஒன்றிலும், மற்றொன்றில் சாத்தியம் ஆனாலும் நன்றில்லை என்பதைக் கொண்டு இறுதியாகக் கூறப்பெற்றதும் அசாத்தியம் போலவே தோன்றுகிறது. மூன்றாவதாகக் கூறப்பெற்ற தேன் போன்ற நிறத்தினை மட்டுமே நம்பி மருத்துவம் பார்க்கலாம் என்று அறிவிப்பதாக இருக்கிறது.




தமிழ் மருத்துவம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 12:39 am


நீர்க்குறி

நோயாளியிடமிருந்து பெறப்படுகின்ற சிறுநீர் வண்ணத்தைக் கொண்டு, நோயாளியின் உடல்நிலை எந்த நிலையில் இருந்து வருகிறது என்பதைக் கண்டறியவே இவ்வாறான முறை சித்த மருத்துவத்தில் கையாளப் படுவதாகத் தெரிகிறது. சிறுநீரைக் கொண்டு ஆய்வுக்கூட முறையில் நோயை அறிய (அ) உடலில் இருக்க வேண்டிய சத்துப் பொருள்கள், உயிர்ப் பொருள், தாதுப் பொருள் போன்றவை இருக்கின்ற அளவு என்ன என்று கணித்தறியப் பயன்படுகிறது. இவ்விரண்டு வகையிலும் சிறுநீரைப் பயன்படுத்தினாலும் கண்டறியப்படும் அடிப்படையில் வேறு வேறாகத் தோன்றும்.

சித்த மருத்துவம் ஆராயும் சிறுநீர்த் தேர்வு முறையில், சிறுநீரின் அடிப்படையில் மஞ்சள், சிவப்பு, பச்சை, கறுப்பு, வெண்மை என்னும் ஐந்து வண்ணங்கள் கொள்ளப்பட்டு, இவற்றின் பிரிவுகளாக இருபத்தொறு வண்ணங்கள் ஆராயப்படுகின்றன.

சிறுநீரின் பொதுத் தன்மையாக நிறம், எடை, நாற்றம், நுரை, குறைதல் என்னும் ஐந்தினைக் குறிப்பிடுவர்.

சிறுநீர்த் தேர்வினால், உடலின் வெப்பக் குணங்களும், அதனால் உண்டாகக் கூடிய நோய்களும், வாதம், பித்தம், ஐயம் ஆகியவற்றினால் உண்டாகக் கூடிய உடலின் மாற்றமும் அறிப்படுகிறது.

சிறுநீர்த் தேர்வினால் கருப்பை, ஆண்குறியில் புண், கல்லடைப்புப் போன்றவற்றை அறியக் கூடும்.

“ காணிதில் சீழும் கலந்து இழிமணம் உறின்

கருப்ப நாபிகள் உளும் காமநா ளத்துளும்

விரணமுண்டு இன்றேல் எய்தும் அஸ்மரி யலது

இருத்தலே திண்ணம் எனமனத்து எண்ணே.''

சிறுநீரில் சீழும் நாற்றமும் வீசினால், கருப்பை, கொப்பூழ், ஆண் குறியில் புண்ணும், கல்லடைப்பும் திண்ணம் என்கிறது.

நெய்க்குறி

சிறுநீரில் எண்ணெய் விட்டு பார்த்து சோதிக்கும் முறை வேறு மருத்துவத் துறைகளில் இருப்பதாகத் தெரியவில்லை. இம்முறை சித்த மருத்துவத்துக்கு மட்டுமே உரியது என்பது குறிப்பிடத்தக்கது.

எண்வகைத் தேர்வு முறைகளில் நெய்க்குறி என்னும் தேர்வு முறை சிறப்பானது என்கிறார் தேரையர். சிறுநீரில் ஒரு துளி அளவு நல்லெண்ணெய் விட்டு, எண்ணெய் நீரில் எவ்வாறு பிரிகிறது என்றும், தோன்றுகிறது என்றும் கண்டு, நோயின் குற்றத்தைக் கண்டறிவது இம்முறை. எண்ணெய்த்துளி சிறுநீரில், பாம்பு, மோதிரம், முத்து, சங்கு, ஆசனம் போன்ற வடிவங்களாகக் காணப்பட்டால் அவற்றினால் நோய் கணிக்கப்படும். நோயாளியின் சிறுநீரும் எண்ணெயும் வேறுபாடின்றி இரண்டும் ஒன்றாகக் கலந்தால், உயிர் நீங்கிவிடும் என்று கணிக்கப்படுகிறது.

சிறுநீரின் இயல்பான வண்ணம் தெளிந்திருந்தால் வாத நோயும், மஞ்சளானால் பித்த நோயும்,வெளுத்து நுரைத் திருந்தால் ஐய நோயையும் காட்டுவதாக இருக்கும். சிறுநீரின் இந்த வண்ணம் எக்காலத்திலும் மாறாமல் இருக்குமென்றும் உரைக்கப்படுகிறது.

எச்சில் தேர்வு :

நோயாளியின் உமிழ்நீர் எட்டுவகையாகப் பிரிக்கப்பட்டு, அதனால் அறியப் பெறுவன உத்தமம், மத்திமம், அதமம் என்னும் மூன்று வகையில் கூறப்படுகிறது.

. “உமிழ் நீரானது, இளநீர் போன்றிருந்தால் முதன்மையான உத்தமமென்றும்,

. பால் போன்றிருந்தால் இரண்டாவது உத்தமமென்றும்,

. வெண்ணெய் போல் அழுந்தி வெண்மையா யிருக்குமானால் மத்திமத்தில் முதன்மை யென்றும்,

. தயிரைப்போல் அழுத்தமும் வெண்மையும் இருக்குமானால் மத்திமத்தில் இரண்டாவதென்றும்,

. குதிரை வாயிலிருந்து வெளியாகும் நுரைபோ லிருந்தால் அதன்மத்தில் முதன்மையென்றும்,

. களியைப் போலிருந்தால் அதமத்தில் இரண்டாவ தென்றும்,

. ஓட்டிலே சுடப்படும் ஓட்டடை போலிருந்தால் அதமத்தில் முதன்மையான அசாத்தியமென்றும்,

. மாவைப்போல வறட்சியாக இருக்குமானால் அதமத்தில் அதமமான அசாத்தியமென்றும், இறுதி மிகவும் அருகில் இருக்குமென்றும் எட்டு வகைகள் உரைக்கப்படுகின்றன.”




தமிழ் மருத்துவம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 12:40 am


விந்துத் தேர்வு:

விந்துத் தேர்வும் எச்சில் தேர்வைப் போலவே உத்தமம், அதமம், மத்திமம் என்கிற முறையில் உரைக்கப்படுகிறது. அதாவது நோயாளியின் விந்து,

. “வெண்ணெய் போன்றிருந்தால் உத்தமத்தில் முதன்மை,

. தயிரைப் போன்றிருந்தால் உத்தமத்தில் இரண்டாவது,

. பால்போன்றிருந்தால் மத்திமத்தில் முதன்மை,

. மோர் போன்றிருந்தால் மத்திமத்தில் இரண்டாவது,

. தேன் போன்றிருந்தால் அதமத்தில் முதன்மை,

. நெய்போன்றிருந்தால் அதமத்தில் இரண்டாவது,

. கள் போன்றிருந்தால் அதமத்தில் முதன்மை ஆனாலும் பொல்லாங்கு (தீமை)

. தண்ணீர் போன்றிருந்தால் அதமத்தில் அதமம். முயற்சி வேண்டாம் என்று கைவிடலாம்

என்று கூறப்படுகிறது. நோயாளியின் உயிர் பிரியும் போது இரத்தமும் விந்துவும் நீர்த்துத் தண்ணீரைப்போல வெளியாகும். அவ்வேளையில் நோயாளியைக் காப்பாற்ற முயல்வது வீண் என்று கூறப்படுகிறது.

சித்த மருத்துவ நூல்கள் கூறும் நோய்கள்

மனித உடலுக்கு வயது ஆண்டு நூறு எனக் கணக்கிடப்படுகிறது. அதனை, மூன்று பாகங்களாகக் கொண்டு இளமைக் காலம், வாலிபக் காலம், முதிர்ந்த காலம் என மூன்று காலங்கள் பகுக்கப்படும். ஒவ்வொரு காலத்திற்கும் முப்பத்து மூன்று ஆண்டு, நான்கு மாதம் எனக் கொள்ளப்பட்டு இளமை ஐயகால மென்றும், வாலிபம் பித்த காலமென்றும், முதுமை வாத கால மென்றும் கணக்கிடப்படுகிறது.

இம்மூன்று காலங்களையும் கொண்டு வாழ்வதே மனித உடல் வாழும் வாழ்நாளாகும். இது, நோய் நொடியற்று வாழும் வாழ்க்கை யைக் குறிப்பிடும். வாழும் நாளில் உணவாதிகளாலும், பழக்க வழக்கங் களினாலும், மரபு வழிகளாலும் நோய்கள் உருவாகி மரணம் நேர்வதும் உண்டு.

இயற்கையாக நூறு ஆண்டுகள் வாழக்கூடிய வகையில் உடலின் அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கும்போது, இடையில் மரணம் எற்படுவது ஏன்? எக்காரணத்தினால் மரணம் ஏற்படும்? என்பதற்கு, தாய் தந்தை செய்த வினையால், பல நோய்களால், பஞ்ச பூதங்களால், போர் முறைகளான விபத்துகளினால், கருவிகளினால், வெட்டுக் குத்துக் காயங்களினால், நஞ்சினால், கடிகளினால், மிருகங்களால், புழுப்பூச்சிகளால், மேலும் பல காரணங்களினால் வயது குறைய மரணம் நேரும் என்பர்.

நூறு வயதை அடையாமல் மரணத்தைச் சந்திக்கின்ற அனைவரும் இயற்கை மரணத்தை அடைந்தார்கள் எனக் கருத முடியாது. அவர்கள் அனைவரும் செய்வினைகளினாலும், செயற்கையாகவும் மரணத்தை அடைந்தவர்கள் என்று சித்த மருத்துவம் கருதுகிறது.

நோய்களுக்குக் காரணங்கள்

காரண காரியத் தத்துவத்தின்படி வினைகள் என்னும் காரணத்தி னால் நோய்களென்னும் காரியம் தோன்றுகின்றன என்பது சித்த மருத்துவச் சிந்தனையாகும். எந்த நோயும் இயற்கையாக வந்ததில்லை என்பர்.

மனித உடல், ஏழுவகையான உடற் தாதுக்களால் அமைந்தது. அவற்றுக்கு, ஒழுங்கீனமான உணவு வகைகளை உணவாக அளிப்பது; வளி, அழல், ஐயம் என்னும் மூன்று உடல்சக்திகள் குறையவும், மிகவும் காரணமாகின்ற தொழில்களைச் செய்தல்; உணவு முறைகளால் உடல் சக்திகள், உடலுக்குள்ளிருந்து போராடச் செய்தல்; ஆகாத உணவு முறைகளால் தாதுக்களையும், உடல் சக்திகளையும் பழுதடைய செய்தல்; தாதுக்களின் செயலையும் சக்திகளின் செயலையும் மாறுபடச் செய்தல் போன்ற குற்றங்களினால் உடலில் தோன்றும் குணங்களின் காரியமே ‘நோய்’ எனப்படுகிறது.

"" தன்வினை புறவினை தாழினும் மிகினும்

உடலைப் பிணிக்கும் உண்மையிது தாமே''

என்னும் மருத்துவக் குறிப்பும் இதனையே வலியுறுத்தும்.




தமிழ் மருத்துவம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 12:41 am


விந்து கெட்டால் வரும் நோய்கள்

உடல் தாதுகளில் ஒன்றான விந்து, மனித உடலைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ‘விந்து கெட்டால் நொந்து போவான்’ என்னும் பழமொழி விந்தின் சிறப்பைக் குறிப்பிட்டுக் காட்டும். விந்து உடலில் இருக்கும் வரை உடலில் உயிரும் இருக்கும் என்பர். அத்தகைய விந்து அழிந்து விட்டாலோ அல்லது ஆற்றல் குறைந்து நீர்த்துப் போனாலோ மேக நோய் வந்தடையும். விந்து அழிந்தால் உடல் மிகுந்த வெப்பத்தை அடையும். அதனால் வாயு வரும். பின்னர் வாயு நோய் வரும். அதனைத் தொடர்ந்து சூலை, குட்டம், கிரந்தி, புற்று, ஒட்டியப்புண், கரப்பான், சிரங்கு, குன்மம், நீர்க்கட்டு, மலக்கட்டு, இளைப்பு நோய், இருமல், கொடிய பேதி, கிராணி, பாண்டு, காமாலை, பீனிசங்கள் ஆகியவற்றுடன் மேலும் பல நோய்களும் வந்து சேரும். அல்லது உடலைத் தாக்கி அழிக்கும். மேக நோயுடன் கபமும் பித்தமும் சேர்ந்தால் கண்களைத் தாக்கக் கூடிய கண்ணோய்கள் அனைத்தும் உண்டாகும். பித்தம் அதிகமானால் காய்ச்சல் வரும். மேகநோய் வந்தடைந்தால் அதன் துணை நோய்களான குடல் வாதம், திமிர்வாதம், குண்டல வாயு, கழல் வாதம், பச்சை வாதம், உள் நடுக்கம், நரித்தலை வாயு, பலவித புண்கள் எல்லாம் வந்தடையும்.

வாத பித்த ஐய நோய்கள்

வாதம், பித்தம், ஐயம் என்னும் மும்மூலங்களினால், பொறியிலும் சிரசிலும் சூடுண்டாகும். அதனால் கனன்று எழுகின்ற வாயுவினால் சூலை நோய் உண்டாகும். வாதத்தினால் மேகநோய், விரணம், சுரமும் வரும்; பித்தத்தினால் கிராணி நோய் வரும்; வாய்வினால் குன்ம நோய் உண்டாகும். போதைப் பொருள்களினாலும், அளவு கடந்த போகத்தாலும் மேக நோய் தோன்றும். மேக நோய் இருபத்தொன்றும் அதனைத் தொடர்ந்து பிறநோய்களும் நீரிழிவு நோயும் உண்டாகும். பித்தம், வெப்பமான நோய்களும் வாதம், சீதளம் தொடர்பான நோய்களும் ஐயம், கபம் தொடர்பான நோய்களும் வாயுவின் விகற்பத்தினால் இம்மூன்று வகை நோய்களும் உண்டாகும் என்றதனால், நோய் உண்டாவதற்கான அடிப்படையாக அமைகின்ற காரணங்கள் உரைக்கப் பட்டுள்ளன. இதன் தொடர்பால் தொடரும் பெரு நோய்த் தொகைகள் அறியப்பட்டன.




தமிழ் மருத்துவம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 12:42 am


நோய்களின் எண்ணிக்கை

வாத, பித்த, ஐயங்கள் அவற்றினால் உண்டாகும் நோய்களும் அவை அல்லாத வேறு பல காரணங்களினால் உண்டாகும் நோய்களும் தொகுத்துக் கூறப்படுகின்றன.

"" குறியுல கேத்தி தானே குறித்தநா லாயிரத்தி
நறிவரு நானூற்று நாற்பத் தெட்டன""

என்று, மனித உடலில் தோன்றக் கூடிய நோய்களின் தொகை, என சித்த மருத்துவம் கண்டறிந்துள்ளது.

உடம்பின் நீளம் எட்டுச் சாண் அளவு, அல்லது தொண்ணூ<ற்று ஆறு அங்குலம் எனவும், உடம்பில் அமைந்துள்ள நாடிகள் எழுபத்திரண் டாயிரம் எனவும் உடம்பில் உற்ற நோய்களின் சுருக்கம் எண்ணூ<ற்றுத் தொண்ணூ<று எனவும் அதை ஐந்தால் பெருக்கினால் ( து = ) நாலாயிரத்து நானூற்று ஐம்பது என நோயின் தொகையும் உரைக்கப்பட்டுள்ளன.

உறுப்புகளும் நோய்களும்

மருத்துவ நூலார் கண்டறிந்த நோய்கள் . அவை, உடல் முழுவதும் தோன்றுவதாகும். உடலிலுள்ள உறுப்புகள் சிலவற்றில் இந்த நோய்கள் உண்டாகுமென்றும், நோய் உண்டாகும் உறுப்புகளாகப் பத்தொன்பதைக் கூறி, அவை ஒவ்வொன்றிலும் தோன்றக் கூடிய நோய்களின் எண்ணிக்கை பிரித்துக் கூறப்படுகிறது.

. தலை . குதம்

. வாய் . தொடை

. மூக்கு . முழங்கால் கெண்டை

. காது . இடை

. கண் . இதயம்

. பிடரி . முதுகு

. கன்னம் . உள்ளங்கால்

. கண்டம் . புறங்கால்

. உந்தி . உடல்உறுப்பு எங்கும்

. கைகடம் ஆக

என்பனவாகும். இவ்வாறு உறுப்புகள் தோறும் உண்டாகும் நோயின் எண்ணிக்கையைப் பிரித்துத் தொகைப்படுத்திக் கூறியிருப்பது, சித்த மருத்துவத்தின் தொன்மை, வளர்ச்சி ஆகிய இரண்டையும் காட்டுவதாகக் கொள்ளலாம்.

உலக மருத்துவம், இவ்வாறு நோய்களைத் தொகையாக்கிக் கூறுவது இல்லை என்பது கருதுதற்குரியது.

கிருமிகளினால் உண்டாகும் நோய்கள்

குடலில் உருவாகும் பூச்சிகள் நோய்களை உண்டாக்கும் கிருமிகள் என்று குறிப்பிடப் படுகின்றன. அவை, குடலில் உண்டாகும் நோய்களின் மூலமாகவும், கெட்ட உணவுகளின் மூலமாகவும் உண்டாகும். அவை, பூ நாகம், தட்டைப்புழு, கொக்கிப்புழு, சன்னப்புழு, வெள்ளைப் புழு, செம்பைப் புழு, கீரைப்புழு, கர்ப்பப் புழு, திமிர்ப்பூச்சி எனப் பலவாகும். இவை துர்நாற்றமடைந்த மலத்தினாலும், சிறுநீர், இரத்தம், விந்து, சீழ், சளி, வியர்வை ஆகியவற்றிலும் உற்பத்தியாகும்.

கிருமிகளால் உண்டாகும் நோய்க்குறி குணங்கள்

குடலில் உண்டாகும் கிருமிகளினால் உடல் நிலை பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக நோய்க்குரிய குணங்கள் புறத்தே தோன்றுமாறு குணங்களை ஏற்படுத்தும். அவை, உடல் நிறம் மாறும். சுரம், வயிற்றுவலி, மார்பு நோய், வெளுப்பு நோய், ஊதல் நோய், இருமல், வாந்தி, சயநோய், அருசி, அசீரணம், பேதி, வாய் நீரூறல், பிரேமை, சூலை, தொப்புள் சுற்றி வலி, வயிறு உப்பல், தூக்கத்தில் பல் கடித்தல், மாலைக்கண், குழந்தைகளுக்குத் தெற்கத்திக் கணை, குழந்தை இசிவு, மூக்கில் புண் ஆகிய குணங்களை விளைவிக்கும்.

குடற் கிருமிகளினால் கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை, சுரம், மயிர் உதிர்தல், குட்டம், சொறி சிரங்கு, படை, கரப்பான் முதலிய நோய்களை உண்டாக்கும் என்று, கிருமிகளினால் உண்டாகக் கூடிய உடல் பாதிப்பு விரித்துரைக்கப்படுகிறது.




தமிழ் மருத்துவம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 12:43 am


கிருமிகள் உருவாகக் காரணம்

கரப்பான், கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை முதலிய நோய்கள் உண்டாகும் வழிகளை ஆராய்ந்தால், அவை, உடலின் சூட்டினாலேயே உருவானவை எனத் தெரியும்.அதிகமான உடலுறவின் காரணத்தினால் உடல் சூடுண்டாகி, அச்சூடு கொழுப்பு, தசை யாவற்றையும் தாக்கி, கிருமிகளை உண்டாக்கும். அக்கிருமிகள் உடலைத் துளைத்துக் கொண்டு எங்கும் பரவி விஷ கரப்பான் என்னும் நோயை உண்டாக்கித் தினவை விளைவிக்கும்.

அதே மாதிரியான உடற்சூடு மலத்தைத் தீய்த்து, கட்டுண்டாக்கித் துர்நாற்றமுண்டாக்கும். மலம்அழுகிக் கிருமிகளை உண்டாக்கும். அவை குடலுக்குள், உண்ணும் உணவை உண்டு வளர்ந்து குட்டம், வெடிப்புண், சொறி, கரப்பான், கிராணி, பவுத்திரம், சுக்கிலப் பிரமேகம் போன்ற நோய்களை உருவாக்கும். மேலும் குடற்புழுக்களால் மலத்துவாரத்தில் இரத்தம், சீழ், நீர்க் கசிவு, முளைமூலம், வயிறு பொருமல், வாய்வு, புழுக்கடி, சோகை, குன்மம், சயநோய், மலடு, பெருவயிறு, சுக்கில நட்டம், உடல் தடிப்பு போன்ற நோய்களும் உண்டாகும்.

நோய்க் கிருமிகளால் உடலுக்கு நேரக் கூடிய விளைவுகளை விவரித்துள்ளது, நோய் வரும் வழிகளை யெல்லாம் கண்டறிந்ததின் விளைவாகவே எனலாம். எவையெவை நோயைத் தரவும், உண்டாக்கவும் வல்லவை என்பதை உணர்ந்து உணர்த்தினால் மட்டுமே நோயிலிருந்து விலகவும், நோயிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளவும் இயலும் என்பதை அறிந்தே சித்த மருத்துவத்தின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன எனல் பொருந்தும்.

கண் நோய் :

கண் மருத்துவம் என்பது இன்றைய காலத்தில் சிறந்த இடத்தைப் பிடிப்பதைப் போலவே, தமிழ் மருத்துவ நூலாரும் கண் மருத்துவத்தைச் சிறந்த மருத்துவமாக வளர்த்தனர் எனலாம்.

பொதுக் காரணங்கள் :

வேகங்களின் வழியே உண்டாகும் தீவினையாகிய நோய்களையும், வெம்மையால் உண்டாகும் எரிச்சலையும், புவன போகங்களின் மேல் கொண்ட பெருத்த ஆர்வத்தால் உண்டான பற்பல நோய்களும், அதனால் மெய்யிலும், உள்ளத்திலும் ஏற்படும் தளர்ச்சிகளும், உலக வாழ்க்கை என்று கூறப்படும் இருநூறு துக்க சாகரங்களும் கண்நோய் உண்டாவதற்கான பொதுக் காரணங்கள் என்றும், மனிதன் பிறந்தபோதே உடன்தோன்றி வருத்துகின்ற வேகம் என்னும் பதினான்கு நோய்களும் குறிப்பால் உணர்த்தப் பட்டுள்ளன. அவை : சுவாசம், விக்கல், தும்மல், இருமல், கொட்டாவி, பசி, தாகம், சிறுநீர், மலம், இளைப்பு, கண்ணீர், விந்து, தூக்கம், கீழ்நோக்கிச் செல்லும் வாயு (அபான வாயு என்பர் சிலர்). பொதுவாக ஆராய்ந்தால் மேற்கண்ட பதினான்கும் உடலில் தோன்றும் எல்லா நோய்களுக்கும் அடிப்படையாக உள்ளன என்பது தெளிவாகும். அவை இல்லா மனிதன் தேவனெனப் படுவான்.

சிறப்புக் காரணம் :

சிசுவானது தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போது, தாயின் வயிற்றில் கிருமிகள் சேர்ந்திருந்தாலும், தாயானவள் பசியால் வருந்தினாலும், தாயானவள் திகிலடைந்தாலும், மாங்காய், மாம்பழம் இவற்றை விரும்பித் தின்றாலும் சிசு பிறந்தவுடன் சிசுவின் கண்களில் நோய்கள் உண்டாகும்.

காசநோய் :

கண்ணில் உண்டாகும் காசநோய், நீலகாசம், பித்தகாசம், வாதகாசம், வாலகாசம், மந்தாரகாசம், ஐயகாசம், வலியுங்காசம், விரணகாசம் என எட்டாகும்.




தமிழ் மருத்துவம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 12:44 am


வெள்ளெழுத்து

கண்பார்வை மயக்கம் என்று கூறப்படும் ‘திமிரம்’ ஏழாகும். அவை வெள்ளெழுத்து, மந்தாரம், மூளை வரட்சி, பித்தம், சேற்பம், நீர் வாயு, மேகம் என்பன.

முப்பத்தேழு வயது வரை கண் பார்வை தெளிவாகத் தீங்கின்றி இருக்கும். நாற்பத்தைந்தில் கண்பார்வை சற்று இயற்கைக்கு ஒதுங்கியும், தெளிவின்றி சற்றுப் புகைச்சலாய்த் தோன்றும். ஐம்பத்தேழாம் வயதிலிருந்து சிறிது சிறிதாகக் கண்பார்வை இருளத் தொடங்கும். கண்பார்வை அறவே நீங்கி இருண்டிடும் நூறாமாண்டில். கூர்மையான பார்வை தரத்தக்க கருவிழியில் அடர்ந்த புகை கப்பியது போலவும், மேகக் கூட்டம் போலவும், பார்வை தடைப்பட்டு, நேராய்க் காணத்தக்க பொருள் சற்று ஒதுங்கிக் காணப்பட்டாலும், பொருள்கள் சற்று மஞ்சளாகவும் நேர்ப்பார்வை சற்று தப்பியும் காணும். இத்தகைய குறிகள் கண்ணில் தோன்றினால் அதனை வெள்ளெழுத்து (திமிரம்) என்று அறியவும். கண்பார்வை வயது ஏறயேறக் குறைவதின் விவரத்தைக் குறிப்பதுடன், பார்வைத் திறன் ஒடுங்குவது இயற்கை என்பதையும் இக்கருத்து விவரிக்கிறது.

கண்ணின் நோய்களைக் குறிப்பிட்டு அதன் தோற்றத்தையும் வண்ணத்தையும் குறிப்பிட்டுக் காட்டியிருப்பது மருத்துவ நூலாரின் ஆழ்ந்த மருத்துவப் புலமை நன்கு விளங்கக் கூடியதாக இருக்கிற தெனலாம்.

தலைநோய் :

உடம்பு எண் சாண் அளவு, அவ்வுடம்பில் உண்டாகும் நோய்கள் , அவற்றில் தலையில் தோன்றும் நோய்கள் என்று குறிப்பிடுவர். ஒவ்வொரு உறுப்பிலும் உண்டாகும் நோய்கள் என்று குறிப்பிடும் அங்காதி பாதம், தலையின் உறுப்புகளாகக் கொண்ட கபாலம் வாய், மூக்கு, காது, கண், பிடரி, கன்னம், கண்டம் ஆகிய எட்டுப் பகுதிகளில் வரும் நோய்கள் மொத்தம் என்கிறது. ஆனால், தலை நோயைக் குறிப்பிடும் நாகமுனிவர் என்கிறார். இதனால் நாக முனிவர் தலைநோய் மருத்துவத்தில் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடும், ஆய்வும் புலப்படும். மேலும், அம்முனிவர் எண்ணூ<ற்று நாற்பத்தேழு நோய்களைத் தன்னுடைய அனுபவத்தினால் உணர்ந்ததாகக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.

தலை உறுப்புகளில் உண்டாகும் நோய்களின் எண்ணிக்கை

ஒவ்வொரு உறுப்பிலும் எத்தனை நோய்கள் உண்டாகும் என்ற குறிப்பினைத் தருகின்றபோது, தலையின் உச்சியில் நாற்பத்தாறு மூளையில் (அமிர்த்தத்தில்) பதினாறு, காதில் நூறு, நாசியில் எண்பத்தாறு, அலகில் முப்பத்தாறு, கன்னத்தில் நாற்பத் தொன்பது, ஈறில் முப்பத்தேழு, பல்லில் நாற்பத்தைந்து, நாக்கில் முப்பது நான்கு, உண்ணாக்கில் இருபது, இதழில் பதினாறு, நெற்றியில் இருபத்தாறு, கண்டத்தில் நூறு, பிடரியில் எண்பத் தெட்டு, புருவத்தில் பதினாறு, கழுத்தில் முப்பத்தாறு, என, தாம் அனுபவத்தினால் உணர்ந்தவற்றை மட்டும் குறிப்பிடு கின்றார். ஆனால், எந்த முறையைக் கொண்டு என்ற எண்ணின் தொகையைக் கூறினார் என்பது குறிப்பிடப் படவில்லை.

கபால நோயின் வகை :

வாதம் முதலாகக் கொண்ட முக்குற்றங்களினால் வரும் நோய்கள், கபாலத் தேரை, கபாலக் கரப்பான் , கபாலக் குட்டம் , கபாலப் பிளவை , கபாலத் திமிர்ப்பு, கபாலக் கிருமி, கபாலக் கணப்பு, கபால வலி, கபாலக் குத்து, கபால வறட்சி, கபால சூலை, கபால தோடம் ஆக –ம் உச்சியில் தோன்றும் வகையாகக் குறிப்பிடுவர்.

தலையில் தோன்றும் நோய்களில் கண், காது, தொண்டை, மூக்கு, ஆகியவையும் அடங்கும். தற்காலத்தில் கண் மருத்துவம் எனத் தனியாகவும், காது, தொண்டை, மூக்கு ஆகியவை தனியாகவும், மூளை மருத்துவம் தனியாகவும்–சிறப்பு மருத்துவமாகவும் கொள்ளப் படுகின்றன. ஆனால் சித்த மருத்தவம் அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதால் தனித்தனியே கருதாமல் ஒன்றாகவே கருதியிருக்கக் கூடும். அறிவியல் வளர்ச்சி என்பது தலைக்காட்டாத காலத்திலேயே அறிவியல் முறைக்கு உகந்ததாகச் சித்த மருத்துவத்தை வளர்த்தனர். மூளையில் உருவாகும் குற்றங்களைக் கண்டறிந்து அவை பதினாறு வகை நோயென உரைத்திருப்பது கருதுதற்குரியதாகும்.




தமிழ் மருத்துவம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக