புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மருத்துவம் - Page 2 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 2 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 2 Poll_c10 
69 Posts - 36%
heezulia
தமிழ் மருத்துவம் - Page 2 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 2 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 2 Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
தமிழ் மருத்துவம் - Page 2 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 2 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 2 Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
தமிழ் மருத்துவம் - Page 2 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 2 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 2 Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
தமிழ் மருத்துவம் - Page 2 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 2 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 2 Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
தமிழ் மருத்துவம் - Page 2 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 2 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
manikavi
தமிழ் மருத்துவம் - Page 2 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 2 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
தமிழ் மருத்துவம் - Page 2 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 2 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தமிழ் மருத்துவம் - Page 2 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 2 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
தமிழ் மருத்துவம் - Page 2 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 2 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மருத்துவம் - Page 2 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 2 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 2 Poll_c10 
320 Posts - 48%
heezulia
தமிழ் மருத்துவம் - Page 2 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 2 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 2 Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
தமிழ் மருத்துவம் - Page 2 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 2 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 2 Poll_c10 
64 Posts - 10%
T.N.Balasubramanian
தமிழ் மருத்துவம் - Page 2 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 2 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ் மருத்துவம் - Page 2 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 2 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 2 Poll_c10 
23 Posts - 3%
prajai
தமிழ் மருத்துவம் - Page 2 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 2 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
தமிழ் மருத்துவம் - Page 2 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 2 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
தமிழ் மருத்துவம் - Page 2 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 2 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Barushree
தமிழ் மருத்துவம் - Page 2 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 2 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Guna.D
தமிழ் மருத்துவம் - Page 2 Poll_c10தமிழ் மருத்துவம் - Page 2 Poll_m10தமிழ் மருத்துவம் - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் மருத்துவம்


   
   

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 27, 2021 11:51 pm

First topic message reminder :கோட்பாடு விளக்கம்

சித்த மருத்துவக் கோட்பாடு என்பது, அம்மருத்துவம் எந்தக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு மருத்துவம் செய்யப் படுகின்றதோ அக்கொள்கையின் அடிப்படையைக் குறிப்பிடுவதாகும்.

மருத்துவக் கோட்பாடு

உடலைப் பற்றி அறிவது; உடலில் தோன்றும் நோய்களைக் கண்டறியும் கருவிகளை உருவாக்குதல்; நோய்களுக்கான காரணங் களைக் கூறல்; நோய்களுக்குரிய மருந்துகளை உடலியலுக்கு ஏற்றவாறு அமைத்தல்; மருந்துகளால் நோய்களைத் தீர்க்கும் முறைகளை வகுத்தல்; நோயிலிருந்து விடுபடல்; தடுத்தல்; பாது காத்தல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மருத்துவக் கோட்பாடு உருவாக்கப்படும்.

சித்த மருத்துவக் கோட்பாடு

சித்த மருத்துவக் கோட்பாடு ஐம்பூதக் கொள்கையை அடிப் படையாகக் கொண்டது. இந்த உலகம் ஐம்பூத மயமானது; இந்த உலகத்திலுள்ள உயிர்கள் அனைத்தும் அவற்றால் உருவானவையே; மனித உடலும், உடல் உறுப்புகளும் ஐம்பூதங்களை ஆதாரமாகக் கொண்டு உருவானவை; உடலில் தோன்றும் நோய்களுக்குக் காரணமாக அமைவதும், அந்நோய்களைத் தீர்க்கும் மருந்துப் பொருள்களும், மருந்தும் பஞ்சபூதச் சேர்க்கையினாலேயே உருவா கின்றன. இயற்கையாகத் தோன்றிய பஞ்சபூத முறைக்கு மாறாக அமையும் மருந்துகள், பயன் தர மாட்டா என்னும் கருத்துகளின் அடிப்படையில் வகுக்கப் பெற்றதாகும்.

பஞ்சபூதம்

பஞ்சபூதம் என்பது, நிலம், தீ, நீர், காற்று, ஆகாயம் என்னும் ஐந்தாகும். இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லா விட்டாலோ, குறைந்தாலோ உயிர்கள் தோன்றவும் வாழவும் வழியில்லை. உயிர்கள் தோன்றவும் உய்யவும் காரணமாக அமைவது பஞ்ச பூதமாகும்.

"" நிலம், தீ, நீர், வளி, விசும் பொடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்''1

இந்த உலகம், பஞ்சபூதங்களின் கலவையால் உருவானதே என்று, தொல்காப்பியம் உரைக்கிறது.

உலகமும் பஞ்சபூதமும்

உலகம் பஞ்சபூதங்களின் கலவையினால் உருவாகியிருப்பதைப் போல, நிலவுலகில் உருவாகி யிருக்கும் பொருள்களும் பஞ்சபூதங் களின் கலவையால் அல்லது சேர்க்கையால் உருவானவை.2 பஞ்ச பூதங்களின் தொகுதியே உயிரினங்களை உருவாக்கின என்பதால், உயிர்த் தோற்றத்திற்குப் பஞ்சபூதங்களே ஆதியாக அமைவது தெரிய வருகிறது.3

“ வாறான சனங்களுக்கும் ஐந்து பூதம்
மருவியதோர் தேவதைக்கும் ஐந்து பூதம்
தாறான அண்டமெலாம் ஐந்து பூதம்
சதாசிவமாய் நின்றதுவும் ஐந்து பூதம்
கூறான யோனியெல்லாம் ஐந்து பூதம்
குரும்பனே ஐந்தினால் எல்லாம் ஆச்சு''4

என்று, சட்டைமுனி உரைக்கின்றார். ஐம்பூதங்களால் உருவானவை மனிதர் மட்டுமல்ல, தேவதைக்கும் அவைதாம். சதாசிவமாய் நின்ற தெய்வத்துக்கும் அவைதாம். உயிரினங்கள் அனைத்துக்கும் அவைதாம். அவற்றால்தான் அனைத்துமே உருவாயிற்று என்று தெளிவுபடுத்துவர்.

உயிரினங்கள் பஞ்சபூதங்கள் அல்லாமல் வேறு முறையில் உருவானவை அல்ல என்பதே இதன் அடிப்படைக் கருத்து.

ஒரு பொருளின் மூலத்தைக் கண்டுரைப்பதைப் போல, உயிரினங்கள் அனைத்திற்கும் மூலமாய் நிற்பது பஞ்சபூதங்கள் என எண்ணினர்.
தமிழ் மருத்துவம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 12:12 am


சித்த மருத்துவ உறுப்புகள்

மருத்துவ உறுப்புகள் என்பது, உடல் உறுப்புகளைப் போல இயற்கையாக அமைய வேண்டியவை எனலாம். உடல் உறுப்பில் ஏதேனும் ஒன்று குறைந்தாலே ஊனம் என்றாகும். அதிலும் சில உறுப்புகள் குறைந்தால் உடல்தான் இருக்கும்; உயிர் இருக்காது. அதைப் போலவே மருத்துவ உறுப்புகள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று குறைந்தாலும் மருத்துவம் ஊனம் ஆகிவிடும். ஒரு சில உறுப்புகள் குறைந்தால் மருத்துவமே உயிரற்றுப் போகக் கூடும் என்பது உணர்ந்து, மருத்துவம் பார்க்க வேண்டும் எனக் கருதி உறுப்புகள் உரைக்கப் பட்டன.

அவ்வாறு கூறுவது, ஒரு முழுமை நிலையை உணர்த்தவும், முழுமையான மருத்துவமுறை வளர்ந்தோங்கவும் உறுப்புகள் அமைத்துக் கூறப்பட்டது எனலாம்.

உறுப்புகள்

மூன்று கண்கள்; நான்கு தலைகள்; ஐந்து முகங்கள்;

ஆறு கைகள்; எட்டு உடல்கள்; பத்துக் கால்கள் எனும்

முப்பத்தாறும் மருத்துவ உறுப்புகளாகும்.

மூன்று கண்கள் : மருந்து, மருந்தின் சுத்தி, மருந்தின் குணம் ஆகிய மூன்றும் மூன்று கண்கள்.

நான்கு தலைகள் : வாதம், பித்தம், ஐயம், தொந்தம் ஆகிய நான்கும் நான்கு தலைகள்.

ஐந்து முகங்கள் : வாந்தி, பேதி, குடல் சுத்தி, நசியம், இரத்தத்தை வெளியாக்கல் ஆகிய ஐந்தும் ஐந்து முகங்கள்.

ஆறு கைகள் : இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கைப்பு, கார்ப்பு, துவர்ப்பு ஆகிய ஆறும் ஆறு கைகள்.

எட்டு உடல்கள் : எண்வகைத் தேர்வு முறைகள் எட்டு உடல்கள்.

பத்து கால்கள் : நாடிகள் பத்து, வாயுக்கள் பத்து ஆனாலும் அவை பத்துப் பெயர்களால் குறிக்கப்படுவதால் பத்து கால்கள் எனப்படும்.

என்று குணவாகடம் கூறுகிறது.

இவை முப்பத்தாறும் மருத்துவர்க்குரிய செயல்களாகவும், அவை மருத்துவத்துக்கு மிகவும் தேவையான கருவிகளாகவும் கருதி, மருத்துவ உறுப்புகளாகக் கொண்டனர். இவற்றில் எவையேனும் குறைந்து மருத்துவம் செய்யப்பட்டால், அது குற்றமுடையதாக இருக்கும் என்பதால், மருத்துவ உறுப்புக் கோட்பாட்டின் வளர்ச்சி நிலையை அறிந்து கொள்ளலாம்.

சித்த மருத்துவச் செயல்முறை விதிகள்

நோயாளியைக் கண்டவுடன் மருத்துவம் பார்க்க வேண்டும் என்பது சித்த மருத்துவத்தின் செயல்முறை விதிகளில் காணப்பட வில்லை. மாறாக, நோயாளியைக் கண்ட மருத்துவன், நோயாளியின் உடல் பருமன்–மெலிவு இவற்றின் தன்மை, நோயின் தன்மை, நோயின் ஆற்றல், நோய் குணமாகுமா? குணமாகாதா என்னும் கணிப்பு, நோயாளி தூங்கிய தூக்கத்தின் அளவு, நோயுற்ற பின் நோயாளிக்கு உடல் உறவுக்காகப் பெண்ணிடம் உண்டாகும் மயக்கத்தின் அளவு, நான்கு வகையான உடலின் இலக்கணத்தில் நோயாளியின் வகை, ஆள், நாள், குணம், நோய், நாடு, பேதம், நிலை, கோள்களின் ஆட்சி–வீழ்ச்சி ஆகிய அனைத்தும் பார்த்தறிந்து, அதன்பின் மருத்துவம் பார்க்கலாம் என்ற எண்ணம் தோன்றிய பின்னர், வேர்களைக் கொண்டு மருந்துகளைக் கொடுக்கவும், அதன்பின்னர் மூலிகைகளைக் கொண்டு மருந்து செய்து கொடுக்கவும். இவற்றினால் நோயின் குணம் தணியவில்லை என்றால், பற்பம், செந்தூரம் என்னும் மருந்து வகைகளைப் பயன்படுத்தவும் என்று செயல்முறை விதிகள் கூறப்பட்டுள்ளன.53

“ஆரப்பா நாலுலட் சணமும் பாரு

ஆள்பாரு நாள்பாரு குணமும் பாரு

நோய்பாரு தேசபேதங்கள் பாரு

நிலைபாரு கிரக வுச்சம் நீச்சம் பாரு

பேர்பாரு இவனை, நீ பிறகு பாரு

போதிலே கீர்த்திழின் றன்மன் பாரு

வேர்பாரு தழைபாரு மிஞ்சி னாக்கால்

மெல்ல மெல்ல பற்பஞ் செந்தூரம் பாரே.’’54

நோயையும் நோயாளனையும் கணித்தறியாமல் செய்யும் மருத்துவம், முறைப்படுத்தப்பட்ட மருத்துவமாகக் கருதப்பட மாட்டாது. நோயின் வன்மை–மென்மைகளையும், நோயாளியின் உடல் மன உறுதிகளையும் ஆராய்ந்தே மருத்துவ முயற்சிக்கு மருத்துவன் முயல வேண்டும். அதுவும் ஆரம்ப நிலையிலேயே கடுமையான மருந்துகளைத் தந்துவிடாமல், மெள்ள மெள்ளக் கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று செயல்முறை விதிகளில் அடுக்கு முறை கையாளப் படுகிறது.

இதனால் மருத்துவத்தின் பக்குவமும் முதிர்ச்சியும் அறியப் படுகிறது.

“ உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்''

என்று குறள் கூறும் மருத்துவச் செயல் விதி இதனைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் உரைக்கிறது.
தமிழ் மருத்துவம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 12:13 am


சித்த மருத்துவ ஒழுக்கம்

ஒழுக்கம் என்பது தூய்மையான நடைமுறையைக் குறிக்கும். தூய்மையான நடைமுறைகள் உயிரினும் உயர்ந்ததாகக் கடைப் பிடிக்கப்பட்டு வந்திருப்பது தெரியவரும். இது வாழ்க்கை ஒழுக்கத்தைக் குறிப்பிடும். வாழ்க்கையோடு ஒன்றிய மருத்துவ ஒழுக்கமும் அவ்வாறே கடைப்பிடிக்கப்பட்டது.

மருத்துவம் செய்கின்ற மருத்துவன் சாதாரண மனித குணங்களி லிருந்து மாறுபட்டு உயர்ந்த குணமுடையவனாக இருக்க வேண்டும் என மருத்துவ நூலார் கருதுகின்றனர். அதனால்தான் ஒழுக்கமும் ஒழுக்க முறையையும் வகுத்துக் காட்டினர். அவ்வழிமுறைகளைப் பின் பற்றி மருத்துவம் செய்வதே ஒழுக்கமுடைய மருத்துவமாகக் கருத முடியும் என எண்ணினர்.

மருத்துவனின் பற்றற்ற நிலை

மருத்துவன், பொருளின் மீது ஆசையோ பற்றோ கொண்டு அவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்காக மருத்துவத்தைப் பயன்படுத்தக் கூடியவனாக இல்லாமல், பொருளாசை கொள்ளாத வனாக இருக்க வேண்டும்.

மருத்துவனின் அன்புடைமை

மருத்துவத்தின் மீதும், பிணியாளர் மீதும் ஆர்வமும் இரக்கமும் உடைய ‘அன்புடையவனாக’ இருக்க வேண்டும்.

மருத்துவனின் கல்வி

வன்மையான, ஒன்பது வகை உலோகங்கள், ஒன்பது வகைப் பாடாணங்கள், இருபத்தைந்து வகை உப்புகள், நூற்றிருபது வகை உபரசங்கள், முன்னூற்றுக்கும் மேற்பட்ட கற்பவகைகள், ஆயிரத்து எட்டுவகை மூலிகைகள் ஆகிய, இவற்றின் வழிமுறைகளைக் கண்டறிந்தவனாக இருக்க வேண்டும்.

மேற்கண்ட மருந்துப் பொருள்களின் குற்றங்களைத் தீர்க்கும் வழிமுறைகள் அறிந்திருக்க வேண்டும்.

மருத்துவக் கல்வியின் முதிர்ச்சி

மருந்துப் பொருள்களில் இயற்கையாக உள்ள மாசுகளான கசடுகளை நீக்கும் சுத்திமுறைகளை அறிந்து, பல்வேறு வகையான செய்முறைகளால் – புடமுறைகளால் பக்குவப்படுத்தி மருந்துகளாக உருவாக்க வேண்டும். எந்தெந்த மருந்துகள் எந்தெந்த நோய்க்கு உரியதென்று அறிந்தறியும் ஆராய்ச்சி அறிவுடையவனாக இருந்து, மருத்துவ நெறிகளுக்குக் கட்டுப்பட்டு, அதன் வழியில் மருத்துவம் செய்யும் மருத்துவனே மருத்துவ ஒழுக்கமுடைய மருந்துவனாகக் கருதப்படுபவன் ஆவான்56 என்பர்.
தமிழ் மருத்துவம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 12:15 am


மருத்துவனுக்கு வேண்டிய ஈகைக்குணம்

வாதமுறையில் மருத்துவம் செய்யும் மருத்துவர்கள், உலோக மாற்று முறைகளைப் பயன்படுத்திப் பொருள் தேட முயற்சிக்கக் கூடாது. அவ்வாறு செய்ய நேர்ந்தால், தேடிய பொருள்களை ஏழை, எளியோர்க்கும், வறுமையுற்றவர்களுக்கும், நோயாளிகளுக்கும், உதவ வேண்டும். அவர்களுக்குத் தானமாக ஆடை, உணவு, பொருள் முதலிய வற்றால் உதவி புரிய வேண்டும்57 என்று குறிப்பிடுவதிலிருந்து, மருத்துவ ஒழுக்கத்தினால் மருத்துவம் சிறந்தோங்குவதுடன் மருத்துவக்கலை தவறான முறையில் பயன்படுத்தப் படுவதைத் தவிர்க்கும் பொதுநல நோக்கமும் உள்ளடங்கியிருப்பது தெரியவரும்.

மருத்துவரின் சீருடை

வாழ்க்கை வசதியும் செல்வச் செழிப்பும் மிக்கவர்கள் மிடுக்கான ஆடை அலங்காரங்களையும், பொன், முத்து, மணியாரங்களையும் அணிந்து, தங்களின் வளத்தையும் செழிப்பையும் மற்றோர்கள் அறியச் செய்ய அலங்கரித்துக் கொள்வர். அத்தகைய ஆடை அலங்காரங்கள் மருத்துவம் செய்யும் மருத்துவர்களுக்கு உரியதாக ஆகாது என்பதால், மருத்துவர்கள் எவ்வாறிருக்க வேண்டுமென்று சீருடை முறை பரிந்துரைக்கப்படுகிறது.

மருத்துவர்கள் சிவப்பு வண்ணத்தை உடைய ஆடைகளையும், புள்ளிகளை உடைய ஆடைகளையும், மணந்தரும் மணப்பூச்சு களையும், பட்டாடை போன்ற உயர்ந்த ஆடைகளையும், துறவிகள் அணியும் மரவுரிகளையும் அணியக் கூடாது. இவை மருத்துவருக்கு ஆகாத உடைகளாகும். வெண்மையானதும் தூய்மையானதுமான துகிலினாலான ஆடைகளை அணிய வேண்டும்58 என்பர்.

மருத்துவர்கள் அணிகின்ற ஆடைகள், மருத்துவரைக் காணும் நோயாளிகளுக்கு மனத்தளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாமல் நம்பிக்கையூட்டக் கூடியதாக இருக்க வேண்டும். சிவப்பு வண்ணம் மனத்தைப் பாதிக்கும் என்பதால், அந்த வண்ணத்தையும் கண்ணில் உறுத்துதலை ஏற்படுத்தும் என்பதால் புள்ளிகளை உடைய ஆடைகளையும், மரவுரி தரிப்பவர் துறவி என்பதால், துறவி எதையும் எதிர்பார்க்காமல் தான் மேற்கொண்ட வழிப்படியே செல்பவர் என்னும் கருத்து நிலவுவதால், அவர் மருத்துவம் முறையாகப் பார்க்கக் கூடியவர் என்னும் நம்பிக்கை தோன்றாது என்பதனால் இவ்வகையான ஆடைகள் வேண்டாமெனக் கூறப்பட்டது.

வெண்மையான தூய்மையான வெண்ணிற ஆடை அணிந்தவ ரானால், அவரைக் காணும் நோயாளர், அவரைச் சார்ந்தோர் அனை வருக்கும், அவரின்பால் நம்பிக்கையும் நன்மதிப்பும் தோன்றும். நோயைத் தீர்ப்பதற்குத் துணைபுரிவது மனமும் நம்பிக்கையும் காரணம் என்பதனால், தூய வெண்ணிற ஆடை மருத்துவர்க்கு உரியதாகக் கூறப்பட்டது.

சித்த மருத்துவ முன்னோர்கள் விருப்பம்

சித்த மருத்துவம் நின்று நிலைத்திருக்க வேண்டுமானால் சித்த மருத்துவப் பரம்பரை நல்லொழுக்கமும் நல்லெண்ணமும் கொண்டிருக்க வேண்டும். மருத்துவ மரபு சிதைந்து விடாமல் பாதுகாக்கப்பட வேண்டும். அவ்வாறிருந்தால் தான் மருத்துவம் புகழுடையதாக இருக்குமெனக் கருதினர். அதனை அடிப்படையாகக் கொண்டே மருத்துவம் பயில்வோர்க்கு மருத்துவ விதிமுறைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

தான் என்னும் அகந்தையும் செருக்கும் கொண்டவர்கள் மருத்துவத் துறைக்கே இழுக்கானவர்கள் என்பது மருத்துவ முன்னோர்களின் விருப்பமாக இருந்திருக்கிறது.

மருந்துகளைச் செய்யும் போது ஒரு சில தவறுகள் நேர்ந்தால் செய்த மருந்து அனைத்தும் கெட்டுவிடும். அதனைக் கண்டு மனம் கலங்காமல் மீண்டும் தவறு நேராமல் மருந்து செய்யும் பக்குவ மடைந்தவர்களுக்குக் கற்பம், தீட்சை முறைகளைக் கற்பிக்கலாம்.

கற்பம்,தீட்சை முறைகளைக் கற்று அவற்றை முறையாகப் பயன்படுத்தி, பணிவுடன் மருத்துவம் செய்பவர்களுக்கு, பூரணத்தின் கரு, பிரணாயாமத்தின் கரு ஆகியவற்றைக் கற்பிக்கலாம்.

பூரணம், பிரணாயாமத்தைப் பாதுகாக்கின்ற முறையை அறிந்த பின்பே, இரசமுறை, வேதை முறைகளைக் கற்பிக்க வேண்டும்.

கற்பத்தின் வழியில் ஒழுக்கமுடையவர்களாக இருப்பவர்களுக்கு மூதண்ட இளகம், தைல முறைகளைக் கற்பிக்கலாம் என்று, மருத்துவத்தின் அனைத்து முறைகளையும் ஒரே நேரத்தில் ஒருவருக்குக் கற்றுத்தராமல், அவரவர்கள் தகுதியையும் குணத்தையும் கண்டறிந்த பின்னரே ஒவ்வொன்றையும் கற்றுத்தர வேண்டுமென்று, மருத்துவக் கல்வியில் அடுக்கு முறைகளை வைத்திருப்பது போற்றுதலுக்குரியது எனலாம்.
தமிழ் மருத்துவம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 12:19 am


சித்த மருத்துவ முன்னோர்கள்

பண்டைய காலத் தமிழகத்தில் வழங்கப்பட்டு வந்த மருத்துவ முறைகள், ஆயுள் வேதம், ‘மருத்துவம்’ என்னும் இரு பெயர்களால் வழங்கப்பட்டு வந்துள்ளன. இவ்வாறு வழங்கப்பட்டு வந்த மருத்துவ முறைகள் தென்மொழி, வட மொழிகளைக் கற்றவர்களால் கற்பிக்கப் பட்டு வந்தன. கற்பிக்க வந்த ஒவ்வொருவரும் தத்தமக்குத் தெரிந்த வரையில் மருத்துவ முறைகளை விரித்துரைத்தும் நூல்வடிவில் எழுதியும் வந்தனர். இம்முறையில், ஆயுள் வேதம் கற்பித்தவர்கள் வடமொழியைச் சார்ந்தும், மருத்துவத்தைக் கற்பித்தவர்கள் தென் மொழியைச் சார்ந்தும் இருந்தனர். இந்த இருமுறை கல்வியாளர் களுக்குள் ஏற்றத்தாழ்வு கற்பிக்கப்பட்டன. தமிழ் மொழிச் சார்புடைய மருத்துவர்கள் தங்கள் இடையறாத முயற்சியினால் மருத்துவ முறைகளைச் சிறந்த முறையில் மேம்படுத்தினர். மூலிகைகளினால் ஆன மருந்துகள் நோய்களைத் தீர்க்கப் போதுமானவையாக இல்லை என்பதை அறிந்து, அதற்கும் மேலான வழிகளை ஆராய்ந்து உலோகம், உபரசம், உப்பு, பாடாணம் என்பவற்றைக் கண்டறிந்து, அவற்றையும் சிறந்த மருந்துகளாகப் பயன்படுத்தினர்.

"" சூத கந்தி தாதுபற்பஞ் சொன்னநாட் டார்சிகிச்
ஓதரிய மூலியம்மண் ணோர்சிகிச்சை வேதடரும்
சந்திரசா ராக்கினி நி சாசரச்சி கிச்சை யென்றே
முத்தரத்த தாகும் மொழி''

என, தேரையர் உரைக்கக் காணலாம்.

சித்த மருத்துவத்தின் தோற்றம்

சித்த மருத்துவம் கூறும் நூல்களில் தொண்ணூ<று விழுக்காட்டு அளவு நூல்கள், நூலின் முகப்பிலோ இடையிலோ நூலின் வழிமுறைகளை உரைக்கக் காண்கிறோம். அவ்வாறு உரைக்கப் படுபவை அனைத்தும் மருத்துவத்தின் தோற்றம், இறைவனிடமிருந்து அறிந்தது என்றே உரைக்கக் காண்கிறோம்.

சித்த மருத்துவத்தின் அறிவியல் அடிப்படைகள்

சித்த மருத்துவத்தின் அடிப்படைகள் நவீன அறிவியலோடு ஒத்த அமைப்பில் உருவானவை. ஆழ்ந்து நோக்கும் போது அறிவியலின் அளவை இயலிலின்று எந்த விதத்திலும் மாறுபடாதவை. காண்டல், கருதுதல் , கருதுகோள் , என்னும் மூன்று பிரமாணங்கள் அடிப்படையானவை. ஒப்புறை, எதிருறை, கலப்புரை என்னும் மூன்று நிலைகளிலும் சிகிச்சை அளிக்க வல்லதாக அமைந்துள்ளது சித்த மருத்துவம்61 என்று, அறிவியலோடு இயைந்து செல்வது ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

மேலும், சித்த மருந்தியல் தத்துவப்படி, உடலானது ஐம்பூதங் களாலும், அப்பூதங்களின் தொகுதியான மூன்று உயிர்த் தாதுகளாலும் (வாதம், பித்தம், ஐயம்) ஆனது. இம்மூன்று தாதுகளும் இயற்கைப் பிறழ்ச்சியாலும், உணவாதிக் குறைகளாலும், கோள்களின் பேதங் களாலும், தம் நிலை பிறழும் போது முக்குற்ற நிலை அடையும். வாதம், பித்தம், ஐயம் என்னும் மூன்றின் நிலைப்பிறழ்ச்சியால் நோய்கள் தோன்றும். வாதம் இயக்கும் , பித்தம் இயங்கும் , ஐயம் நிறுத்தும் , மூன்றில் எது பழுதடைந்தாலும் வாழ்வின் பயணம் தடைப்படும். இந்நிலைப் பிறழ்ச்சியால் உடலில் ஏற்படும் மாறுதல்களை அனுமானமாகக் கொண்டு நோயின் நிலை கணிக்கப்படும். இந்த அனுமானங்களே இன்ன நோய் என்று தீர்மானிக்க உதவும். மருந்தைத் தீர்மானிக்கும் போதும் இத்தகைய அளவையியல் தத்துவமே பயன்படுத்தப்படுகிறது. மருந்துகளிலும் வாத மருந்து, பித்த மருந்து, ஐய மருந்து என்ற பிரிவுகள் உள்ளன. இக்கருத்து இன்றைய அறிவியலோடு ஒத்ததே. சித்த மருத்துவம் சிறந்த தருக்க நெறியில் அமைந்த அறிவியல் என்பதை அறிவியலாரும் ஒப்புக் கொள்கின்றனர்.

“நஞ்சை அமுதாக்கும் வித்தையை நம் சித்தர்களிடம் காண்கிறோம். நவபாடாணங்களில் ஒன்றான நாபி ஒரு பொல்லாத நஞ்சு. அதனைக் கோமூத்திரத்தில் இடுவதன் முன்னரும், இட்ட பின்னரும் வேதியல் நிலையில் சோதித்துப் பார்த்தனர். 24 மணி நேரம் கோநீரால் சுத்தியடைந்த நாபி இதயத்தை ஊக்குவிக்கிறது. அதற்கு முன், இதயத்துடிப்பை, குருதி அழுத்தத்தைக் குறைத்து உயிரைக் கொன்று விடுகிறது. மாஸ்கர் , காய்ஸ் எனபவர்கள், 1937இல் செய்த சோதனையில், நாபியில் அடங்கிய அக்கோனிடின் கோநீரால் தீமை குறைந்த அக்கோனிடினாக மாறுகிறது என்று கண்டு பிடித்தனர். வேதியல் மாற்றம் கோநீரால் ஏற்படுவதை அறியும் போது, சித்தர்களின் சுத்திமுறை விஞ்ஞான முறையில் அமைந்த ஒன்றே என்று அறிந்து மகிழலாம். பழமையான சித்தர் அறிவியல் இக்கால அறிவியலோடு ஒத்திருக்கிறது என்பது புலப்படுவதுடன், சித்த மருத்துவமும் அறிவியல் மருத்துவமே என்பதும் விளக்கும்.

வெங்காரம் , நவச்சாரம் இரண்டும் முறையே நாத பிந்தாக இணையும். அவற்றின் கூட்டுச் சரக்கு ஆற்றல் மிக்கது. வீரத்தோடு வெண்ணெய் சேர்ந்தால் மருந்து வேலை செய்யாது. ஆனால் மிருதார்சிங் பாதிக்கப்படுவதில்லை. மிளகும் சுக்கும் மித்ரு என்பர். சுண்ணம் தயாரிக்கும் போது சத்ருவால் அழித்து மித்ருவால் எழுப்புவர். ஆங்கில முறையிலும் மருந்தின் கலப்பில் ஒவ்வாமை பற்றி அறிந்திருக்க வேண்டும். தீயகம் அடங்கிய பொருளோடு தீயகம் ஏற்கும் பொருளைக் கலந்துவிடின் வெடித்து விடலாம். சிலபோது ஒன்றோடு ஒன்று கலந்து நச்சுப் பொருள் தோன்றலாம். இது வேதிநிலையில் ஒவ்வாமை. சாராயத்தில் கலந்து செய்த மருந்தில் தண்ணீர் ஊற்றினால் நீரில் கரையாமல் வண்டலாகப் படியும். மேலும் மணம் குணம் முதலியவற்றாலும் பொருந்தாது போகலாம். அது பௌதீக நிலையில் ஒவ்வாமை. மலமிளக்கியுடன் மலத்தைக் கட்டும் பொருளைச் சேர்த்தால், மருந்தியல் விளைவில் ஒவ்வாமை தோன்றும். சிலபோது ஒவ்வாமையும் தேவைப்படலாம். ஒன்றின் செயல்திறனைக் குறைப்பதற்கோ மாற்றுவதற்கோ அவை உதவும். இது போன்ற கருத்து சித்தர்களிடம் மிகுதியாக உண்டு.

ஒப்புறை – ஒத்த குண மருந்து

எதிருறை – எதிர் குண மருந்து

கலப்புறை – இருவித மருந்து

என்னும் வகையில் வேறுபடுத்தி விளக்குதல் சித்தர் முறை.

மனிதருக்கு உண்டாகும் நோய்கள் யாவுமே வாதம், பித்தம், ஐயம் என்ற இம்மூன்றில் அடங்கும். இம்மூன்றும் நோயின் மூன்று முகங்கள். இம்மூன்றினுள், வாத நோய்கள் எண்பது வகைப்படும். பித்தம்

நாற்பது ஐயம், இருபது வாத பித்த ஐய மெனும் இம்மூன்றும் ஒன்றுக்கொன்று கலந்தும், உழன்றும் வேறுவிதமான தொழில்களைச் செய்து பல்வேறு நோய்களைத் தோற்றுவிக்கின்றன.

உடம்பில் தோன்றும் நோய்களின் எண்ணிக்கை 4448. வகைப்படுத்தப்பட்ட நோய்கள் 360. சுர நோய்கள் 108 ஆகும். கொடிய நோய்களாகச் சுட்டப்படுகின்ற நூற்றியெட்டு சுர நோய்களில் முதன்மைப் பெறுவன முப்பது. இம் முப்பது நோய்களுக்கும் தலைவனாக விளங்குவது வாத, பித்த, ஐயம் என்னும் முத்தோட நோயேயாகும்.

பசியின்மை என்பது மிகக் கடும் நோய்களின் ஒன்றென்பது ஆங்கிலேய மருந்துவர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட் டிருக்கிறது. இந்தக் கொடிய நோயானது பொதுவாகச் சொல்லின், ஆங்கில மருத்துவ முறைப்படி பயன்படுத்தப்படும் பெப்சின் , பிஸ்மத் முதலிய பல மருந்துகளுக்கு முற்றும் கட்டுப் படாமலே இருக்கிறது. வைத்தியத் திருப்புகழ் கூறும் இஞ்சி இளகம் என்னும் மருந்தினாலோ பெரும்பான்மையும் பயனுண்டாகி வருகிறது. இந்தச் செரியாமை நோயே குன்ம நோயை உண்டாக்குவது. உண்மையில் இதனைத் தொடக்கக் குன்ம நோயெனச் சொல்லலாம். ஆகையால் தான், இந்தக் கடும் நோயின் சிகிச்சையைத் தொடக்கமாக (வைத்தியத் திருப்புகழ்) எடுத்துச் சொல்கிறது என்பதிலிருந்து, நோயின் ஆரம்ப நிலையை அறிந்து அதற்குரிய முறையில் மருத்துவம் செய்வது சித்த மருத்துவம் என அறியலாம்.
தமிழ் மருத்துவம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 12:21 am


சித்த மருத்துவத்தில் நோய்த் தேர்வு முறை

நோய்த் தேர்வு

சித்த மருத்துவத்தில் ‘நோய் நாடி’–நோயைக் கண்டறியும் தேர்வுமுறை சிறந்து காணப்படுகிறது. நோயாளிக்குச் சிகிச்சை அளிக்கப்படுவதற்கு முன் நோயைக் கண்டறிய வேண்டும் என்பதே மருத்துவக் கொள்கை. நோயைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் முறை ‘நோய்த் தேர்வு முறை’ எனப்படும்.

நோயைக் கண்டறிவதற்காக ஒவ்வொரு வகை மருத்துவத்திலும் வெவ்வேறு முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சித்த மருத்துவத்தில் காணப்படும் நோய்த் தேர்வு முறை, பிற மருத்துவ முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகவும் சிறந்த தேர்வு முறையாகவும் கருதலாம்.

எண்வகைத் தேர்வு முறை

சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்படும் தேர்வு முறைகள் எட்டுவகைப்படும். அவை நாடி, பரிசம், நாக்கு, நிறம், மொழி, விழி, மலம், மூத்திரம் என்பன. இவை எட்டும் மருத்துவனின் கருவிகளாகக் கூறப்படுகின்றன.

"" நாடிப்பரிசம் நாநிறம் மொழிவிழி
மலம் மூத்திரமிவை மருத்துவ ராயுதம்''

என்றும்,

“மெய்க்குறி நிறந்தொனி விழிநா விருமலம் கைக்குறி’’67 என்றும் குறிப்பிடுவர்.

எண்வகைத் தேர்வு என்பது பிணியை அறியும் முறையைக் குறிக்கிறது. உடலைப் பிணிப்பது நோய் என்பதனால், நோயைப் பிணி என்னும் சொல்லாலும் குறிப்பிடுவர். நோயறிதல் என்பது, நோயைப் பற்றித் தெரிந்து கொள்ளும் முறை எனலாம்.

நாடி

நாடி, தாது என்னும் பெயராலும் வழங்கப்படும். நாடி, வாதம், பித்தம், ஐயம் ஆகிய பொருளில் ஆளப்படும். உயிர்த்தாது உடற்தாதுகளைக் குறிப்பிடவும் தாது என்னும் சொல் பயன்படும்.

சுருங்கக் கூறின், நாடியைக் குறிக்கும் தாது, உடலில் உயிர் தங்கி யிருப்பதற்குக் காரணமான ஆற்றல் எதுவோ அதுவே நாடி அல்லது தாது எனப்படும். 68

தாது ஒன்றாயினும் அதன் தொழில் காரணமாக மூன்று பிரிவுகளாக அல்லது ஒன்றாகக் கூடிய மூன்று புரிகளாகக் கருதப்படு கின்றன. அவையே வாதம், பித்தம், ஐயம் எனப்படும். இவையே அண்டரெண்டமெல்லாம் நால்வகைப் பிறப்பு, எழுவகைத் தோற்றம், எண்பத்தி நான்கு நூறாயிரமாகிய எவ்வுயிர்க்கும் பொருந்தும்69 என்பர்.

நாடிகளின் தொகை

உடலில் உள்ள நாடிகளின் எண்ணிக்கை 72,000 ஆகும். அவற்றில் கரு உருவாகும் போதே உடன் தோன்றுகின்ற குண்டலி என்னும் மூலத்தைப் பற்றுக் கோடாகக் கொண்டு தோன்றுகின்ற நாடிகள் பத்து ஆகும்.70

நாடிகளின் எண்ணிக்கை

நாடிகளின் தொகை 72,000 ஆனாலும் அவற்றில் பெருமைதரும் நாடிகள் பத்து. அவை இடகலை, பிங்கலை, சுழிமுனை, காந்தாரி, குகு, சங்கினி, அசனி, அலம்புடை, புருடன், சிங்குவை என்பன.

இப்பத்து நாடிகளிலும் மேலும் சிறந்தனவாகக் கருதப்படுவன மூன்று. அவை இடகலை, பிங்கலை, சுழு முனை என்பன.
தமிழ் மருத்துவம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 12:23 am


நாடிகளும் இயங்கும் இயக்கமும்

நாடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடங்களில் பொருந்தி ஒவ்வொரு முறையில் இயங்கிக் கொண்டிருப்பது தெரியவருகிறது.

1. இடகலை – வலக்காலின் பெருவிரலிருந்து கத்தரிக் கோல் போல இடது மூக்கைச் சென்றடையும்.

2. பிங்கலை – இடதுகாலின் பெருவிரலிருந்து கத்தரிக் கோல் போல வலது மூக்கைச் சென்றடையும்.

3. சுழுமுனை – மூலாதாரத்தைத் தொடர்ந்து எல்லா நாடிகளுக்கும் ஆதாரமாய் நடுநாடியாக சிரசு வரை முட்டி நிற்கும்.

4. சிங்குவை – உள் நாக்கில் நிற்கும்.

5. புருடன் – வலது கண்ணில் நிற்கும்.

6. காந்தாரி – இடது கண்ணில் நிற்கும்.

7. அசனி – வலது காதில் நிற்கும்.

8. அலம்புருடன் – இடது காதில் நிற்கும்.

9. சங்குனி – குறியில் நிற்கும்.

10. குகு – அபானத்தில் நிற்கும்

என்று நாடிகள் ஒவ்வொன்றும் உடலில் பொருந்தி இயங்கும் இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

வாயுக்கள்

நாடிகள் பத்து என்று உரைக்கப் பட்டதைப் போல, வாயுக்களும் பத்து என்பர். நாடிகளின் இயக்கத்துடன் இணைந்து வாயுக்களும் இயங்குவதால், நாடிகளைப் போல வாயுக்களும் சிறப்புடையவை யாகக் கருதப்படும்.

வாயுக்கள் பத்து வருமாறு

பிராணன், அபானன், வியானன், உதானன், கூர்மன், தேவதத்தன், சமானன், நாகன், கிரிகரன், தனஞ்செயன் என்பனவாகும்.

வாயுக்களின் இயக்கம்

நாடிகளைப் போல வாயுக்கள் உடலில் ஒவ்வோர் இடத்தில் அமைந்து இருப்பதுடன் ஒவ்வொரு தொழிலைச் செய்வதாகக் குறிப்பிடப்படுகின்றன.73

வாயுக்களின் இயக்கம் விபரம்

1. பிராணன் – மூலாதாரத்திலிருந்து புறப்பட்டு இடகலை, பிங்கலை இவற்றின் நடுவாகச் சென்று சிரசை முட்டி, மூக்கின் வழியாக வெளியே பாயும். நெஞ்சில் நின்று ஓடும்.

2. அபானன் – மலநீர்களைக் கழிக்கும்.

3. வியானன் – உணவின் சாரத்தை உடல் முழுவதும் பரவச்செய்து வலிமையளிக்கும்.

4. உதானன் – கழுத்தில் நின்று உணவு, நீர் இவற்றின் சாரத்தை உடல் முழுவதும் பரவச் செய்து வளர்க்கும்.

5. கூர்மன் – கண்ணை இமைக்கச் செய்யும்.

6. தேவதத்தன் – கொட்டாவி, உடம்பு முறுக்கலை உண்டாக்கும்.

7. சமானன் – நாடியுடன் கூடிய உணவைச் செரிக்கச் செய்யும்.

8. நாகன் – மனத்தில் கலைகளை உண்டாக்கும்.

9. கிரிகரன் – தும்மலை உண்டாக்கும்.

10. தனஞ்செயன் – உயிர்போன பின்னரும் சிரசில் நின்று உடலை வீங்கச் செய்யும். இதுவே இறுதியில் மண்டை யைக் கிழித்துக் கொண்டு வெளியே போகும்.

பிராணன் என்னும் வாயு மூக்கின் வழியாக உள்ளே சென்று, சிரசில் முட்டி, நெஞ்சின் வழியாக மூலாதாரம் சென்று திரும்பி மீண்டும் மூக்கின் வழியாக வெளியே வரும். மூக்கின் வழியாக உள்ளே செல்லும் போது பன்னிரண்டு அங்குல மூச்சுக் காற்று உள்ளே செல்லும்; வெளியே வரும் போது நான்கு அங்குலம் பாழாகும் என்பர்.

இவ்வாறு, பிராணன் என்னும் வாயு நாழிகை ஒன்றுக்கு முன்னூற்று அறுபது முறையும், நாளொன்றுக்கு இருபத்தோராயிரத்து அறுநூறு முறையும் மூச்சாக இயங்கும். இவ்வாறு இயங்கும் மூச்சுக் காற்றில் 7200 மூச்சு வெளியே வந்து பாழாகிப் போகிறது. இப்பாழ் நிகழாமல் மூச்சுப் பயிற்சியான பிராணாயாமம் மூலம் உள்ளே சென்ற மூச்சுக் காற்றை உள்ளே இருத்திக் கொண்டால் மரணமில்லை என்பர்.
தமிழ் மருத்துவம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 12:26 am


உயிர்த்தாதுகள்

நாடிகள், வாயுக்கள் போலத் தாதுகள் உடலை இயக்கும் ஆற்றல்களாக அமைந்துள்ளன. இத்தாதுகள் உடலில் குறைந்தால் உடலின் இயக்கத்தில் குற்றம் நேரும் என்பதால் இவை உயிர்த்தாதுகள் என அறியப்படும். அவை, இரசம், இரத்தம், தசை, கொழுப்பு, என்பு, மச்சை, விந்து என்பன வாகும். இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையாக உடலில் இயங்குகின்றன.

1. இரசம் – உடலுக்கும் உள்ளத்துக்கும் நிறைவு தரும்.

2. இரத்தம் – உயிரைக் காக்கும்.

3. தசை – உடலைத் தாங்கும், அசைவு, பலந்தரும்.

4. கொழுப்பு – உடலிலுள்ள தசைச் சந்துகளையும் என்புச் சந்துகளையும் தூர்த்து நிரப்பும். நெய்ப்பசை யூட்டும்.

5. என்பு – உடலை உயர்த்தி நிறுத்தித் தாங்கும்.

6. மச்சை – என்புத் துளைகளில் நிரம்பும்.

7. விந்து – இனப் பெருக்கத்தை ஏற்படுத்தும்.

என்று ஏழு தாதுக்களின் இயக்கம் உரைக்கப்பட்டது. இவற்றினால் தாதுகள் உடலுக்கு எந்த அளவுக்குச் சிறந்ததாகக் கருதப்படுகின்றன என்பது விளங்கும்.

நாடி, வாயு, தாது இவற்றுக்குள்ள தொடர்பு

நாடிகள் பத்துள் இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்றும் சிறப்புடையன. வாயுக்களை மேற்கண்ட மூன்று நாடிகளின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இடகலை வாத நாடியாகவும், பிங்கலை பித்த நாடியாகவும், சுழுமுனை ஐய நாடியாகவும் குறிப்பிடப்படும். வாயுக்கள் பத்துள் அபானன், பிராணன், சமானன் ஆகிய மூன்றும் வாதம், பித்தம், ஐயம் ஆகிய நாடிகளுடன் இணைந்திருக்கும். அதேபோல, தாதுகள் ஏழின் குணங்களையும் நலன்களையும் அறிய வேண்டுமானால், வாத பித்த ஐய நாடிகள் எவ்வாறு இயல்பாகவும் இயல்புக்கு மாறாகவும் இயங்குகின்றன என்பதைக் கொண்டே அறிந்திட இயலும்.

எனவே, நாடி, வாயு, தாதுகள் ஆகியவை உடலை இயக்கவும், காக்கவும், தாக்கவும், அழிக்கவும், ஆக்கவும் காரணிகளாக அமைகின்றன என்பது பெறப்படுகிறது. இவற்றின் இயக்கம் சீராகவும், முறையாகவும் அமைந்தால் உடல் நோயற்று இருக்க வகையேற்படும். அவை சீராக அமையாமல் முறை தவறினால் நோயோ நோய்க்குரிய பிற குற்றங்களோ உடலுக்கு நேர வழியேற்படும்.

நாடிகளில் மூன்று

நாடிகளில் வாதம், பித்தம், ஐயம் என்னும் மூன்று நாடிகள் சிறப்பாகக் கூறப்படுகின்றன. இம்மூன்று நாடிகள் உடலுக்கு உற்ற நோய்த் துன்பத்தினைக் கணித்தறிய உதவும்.

"" மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று''75

என்னும் திருக்குறள், மூன்று நாடிகள் குறைந்தாலும் மிகுந்தாலும் நோயை உண்டாக்குமென்று உரைக்கக் காண்கிறோம். அவ்வாறே, மருத்துவ நூல்களும் வாதம் முதலாக உடைய மூன்று நாடிகளாலும் நோய்கள் தோன்றும் என்கின்றன.

மூன்று நாடிகளும் உடம்பிலிருந்து வெவ்வேறு நற்றொழில் களைச் செய்யும் இன்றியமையாக் கூறுகளே யன்றி, நோய்களல்ல. மூச்சும் பேச்சும் உட்பொருள் இட மாற்றமும், வெறியேற்றமும், தனித்தும், பிற தாதுகளோடு கூடியும் நிகழ்த்துவது வாதத்தின் தொழில்கள்; உண்ட பொருளின் செரிமானத்திற்கு உதவுவது பித்த நீர்; தசைகளின் மழமழப்பான இயக்கத்திற்கு உயவு நெய் போல் பயன் படுவது ஐயம். இவை, உணவின் செயல்களினாலும், ஒவ்வாமையாலும், இயற்கை மாறுபாட்டினாலும், மிகுதலும், குறைதலும் நேரும் பொழுது, அவற்றின் விளைவாக நோய்கள் உண்டாகும்.

மேலை நாட்டு மருத்துவர்கள் வாதம் முதலிய மூன்று நாடி களையும் இரத்தம் (ஞடூணிணிஞீ), ஐயம் , பித்தம் , கரும்பித்தம் என நால்வகை நீரகங்களாகப் பகுப்பர் என்றதனால், மேலை நாட்டு அறிஞர்களும் மருத்துவ வல்லுநர்களும் ஏற்றுக் கொள்ளத்தக்க முறையில் சித்த மருத்துவ முன்னோர்களால் நாடிமுறைகள் அறியப்பட்டிருக்கின்றன.
தமிழ் மருத்துவம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 12:28 am


நாடிகளின் செயல்கள்

நாடிகள் மூன்றும் உடலைக் காக்கவும், அழிக்கவும் செய்ய வல்லன என்பதை மருத்துப் பாரதம் விளக்குகிறது.

வாதம் படைப்புத் தொழிலுக்கும், பித்தம் காக்கும் தொழிலுக்கும், ஐயம் அழிக்கும் தொழிலுக்கும் உடையனவாகக் குறிப்பிடுவதை இயைபுடையதாகச் சித்த மருத்துவர் இரா. தியாகராசன் கருதுகிறார்.

"" சூழ்ந்தது சுக்கிலத்திற் சுரோணிதங் கலக்குமன்று
பூந்திடும் வியாதி மூன்றும் பொருந்திய குமிழி போல''78

என்று, மூன்று நாடிகளும் உயிரின் கருதோன்றும் போதே உயிரோடு சேர்ந்தே தோன்றுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

மருத்துவர்கள் நாடிகளைக் கண்டறிந்து, ஆராய்ந்து, நோய்களை அறிந்திடக் கூடிய இடங்களாகப் பத்து இடங்கள் குறிப்பிடப்படுகிறது. அவை மறைவிடம், குதிக்கால், சந்து, உந்தி, கை, மார்பு, கழுத்து, புருவமத்தி, காது, மூக்கு ஆகிய பத்து இடங்களைச் சார்ந்த உறுப்புப் பகுதி நரம்புகளில் மூன்று நாடிகளும் நடந்து கொண்டிருப்பதனால், அவ்விடங்களில் நாடியைக் கண்டு உடலின் குண நலனை ஆராயலாம் என்றுரைக்கப்படுகிறது.

நாடிகளை அறியுமிடங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஏனெனில் நாபிக் கூர்மமானது பெண்களுக்கு மேல் நோக்கியும், ஆண்களுக்குக் கீழ் நோக்கியும் இருக்கின்றமையால், கைகளில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறுபாடு தோன்றும். அதனால், ஆண்களுக்கு வலது கையிலும் பெண்களுக்கு இடது கையிலும் நாடி பார்க்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது. 80 இது, நுட்பமான அறிவியல் உண்மையாகும்.

நாடிகளை ஆராயும்போது, கையின் பெருவிரலுக்குக் கீழே ஒரு அங்குலத்திற்கும் அப்பால் மூன்று விரல்களால் அழுத்திப் பார்க்க, முதல் விரலான ஆள்காட்டி விரலில் வாத நாடியும், இரண்டாம் விரலான நடுவிரலில் பித்த நாடியும், மூன்றாம் விரலான மோதிர விரலில் ஐய நாடியும் அறியச் செய்யும்.

நாடி வேளை நேரம்

வாதம் பகலும் இரவும் 6 10 மணி

பித்தம் பகலும் இரவும் 10 2 மணி

கோழை (ஐயம்) பகலும் இரவும் 2 6 மணி

என்று நாடிகள் நடக்கும் வேளைகள் கணித்தறியப் பட்டுள்ளன. இவ்வாறு நாடிகள் நடைபெறாமல் தொந்தமானாலோ, மாறுபட் டாலோ நோயோ மரணமோ உண்டாகு மென்று உணர்த்தப்படுகிறது.

நாடிகளும் காலமும்:

"" காலையில் வாத நாடி கடிகையில் பத்தாகும்

பாலையில் பித்தநாடி பகருச்சி பத்தாகும்

மாலையாம் சேத்துமநாடி மதிப்புடன் பத்தாகும்''

பகற்பொழுதில் உதயம் முதல் பத்து நாழிகை வாதமும், அதன் பின் பகல் பத்து நாழிகை பித்தமும், மாலை பத்து நாழிகை ஐயமும் இவற்றிற்குரிய காலமாகும். அஃதேபோல், ஞாயிறு மறைவிற்குப்பின் முன்னிரவு பத்து நாழிகை வாதமும், அதன்பின் நல்லிரவு பத்து நாழிகை பித்தமும், பின்னிரவு பத்து நாழிகை ஐயமும் நாடிகள் இயங்கும் காலம் என்பர். இதனை வாத, பித்த, ஐயம் ஆகிய நாடிகளின் சிறப்புக்காலம்’’82 எனவும் கூறுவர்.

நாடிகளும் மாதங்களும்

"" கடக முதல் துலாம் வரையும் வாதமாகும்

கண்ணாடியைப் பசியுமதுவே யாகும்

விட மீன முதல் மிதுனம் பித்தமாகும்

விரைகமழ் பைங்கூனி ஆனியது வேயாகும்

திடமான விருட்சிக முதற்கும்பஞ் சேத்துமஞ்

சேர்ந்த கார்த்திகை மாசியதுவே யாகும்

நடைமேவும் வாதபித்த சேத்துமத்தானும்

நலமாக மாதமுதல் நடக்குங் காணே.''

கடகம் முதல் துலாம் வரை (ஆடிஐப்பசி) வாதம் வளர்ச்சி பெறும். மீனம் முதல் மிதுனம் வரை (பங்குனிஆனி) பித்தம் வளர்ச்சி பெறும். விருச்சிகம் முதல் கும்பம் (கார்த்திகைமாசி) ஐயம் வளர்ச்சி பெறும் என்பர்,
தமிழ் மருத்துவம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 12:28 am


நாடி பார்க்கும் மாதம், வகை:

"" சித்திரை வைகாசிக்குச் செழுங்கதிருதந் தன்னில்

அத்தமான மானி யாடி ஐப்பசி கார்த்தி கைக்கும்

மத்தியானத்திற் பார்க்க மார்கழி தையு மாசி

வித்தகம் கதிரேன் மேற்கில் விழுகின்ற நேரந் தானே''

"" தானது பங்குனிக்குந் தனது நல்லா வணிக்கும்

மானமாம் புரட்டாசிக்கு மற்றை ராத்திரியிற் பார்க்கத்

தேனென்று மூன்று நாடித் தெளிவாகக் காணுமென்று

நானமா முனிவர்சொன்ன கருத்தை நீ கண்டு பாரே.''

சித்திரை வைகாசியில் ஞாயிறு உதயத்திலும், ஆனி, ஆடி, ஐப்பசி, கார்த்திகையில் நண்பகலிலும், மார்கழி, தை, மாசியில் மாலை எற்பாடு வேளையிலும், பங்குனி, ஆவணி, புரட்டாசியில் இரவிலும் நாடி களைக் கணிக்க நவின்ற நேரமாகும் என்பதனால், இயற்கையில் ஏற்படுகின்ற தட்பவெப்பங்களுக்கு ஏற்றவாறு நாடிகளின் இயக்கம் அமைந்திருக்குமென அறிய முடிகிறது. வாத, பித்த, ஐய நாடிகளின் பண்பிற்கு ஏற்றவாறு இரவில் ஐயமும், காலையில் வாதமும் நண்பகலில் பித்தமும் ஆட்சி புரிவதாகக் கருதலாம். அதே போல,

ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி ஆகிய திங்களில், வாதம் வளர்ச்சி பெறும். கார்த்திகை, மார்கழி, தை, மாசி ஆகிய திங்களில், ஐயம் வளர்ச்சி பெறும். பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய திங்களில் பித்தம் வளர்ச்சி பெறும். அவ்வாறே, சிறு பொழுதான ஆறில், வைகறையில் வாதமும், நண்பகலில் பித்தமும் எற்பாட்டில் ஐயமும் சிறப்புறுவதாகக் கூறப்படும்.

இயற்கையும் மாந்தர் தம் உடலும் இயைந்து இயங்கும் தன்மையன. ஆதலின் நாடிகளும் இயற்கைக்கு ஏற்ப இயைந்து இயங்குவதாகக் கருதலாம்.

நாடி தெரியாத பேர்கள்

பெண்போகர், நீண்டகால நோயாளி, குதிரை ஏற்றம் செய்தோர், யானை ஏற்றம் செய்தோர், வழி நடைப்பயணி, பேருண்டி உண்டோர், போதைப் பொருள் கொண்டவர், நீர்ப்பாடு, நீரிழிவு, பெருநோய், வீக்கம் ஆகிய நோய்களுற்றோர், அத்தி சுரத்தால் இளைத்தவர், பயமுற்றோர், துன்பமுற்றவர், விடந் தீண்டியவர், ஓட்டமுற்றவர், அளவுக்கு மிஞ்சிப் புசித்தவர், சூல் கொண்ட பெண், மாதவிடாயான பெண், பெரும்பாடுற்ற பெண், அதிகம் தூங்கியோர், எண்ணெய் தேய்த்து முழுகியவர், சினங்கொண்டோர், மோகங் கொண்டோர், முதிர்ந்த வயதினால் இளைப்புற்றவர், மதங்கொண்டோர், பெருத்த உடலினர், என்பு முறிந்தோர், சோகை நோயினர், பிணத்தைத் தொட்டோர், வாந்தி, விக்கல் எடுத்தோர், விரத மிருப்பவர், மழையில் நனைந்தோர், இசைப் பாடகர், களறி ஆடுவோர், நாட்டியமாடிக் களைப்புற்றோர், மூச்சுப் பயிற்சி மேற்கொண்டோர் ஆகிய இவர்களது நாடி நடை விரைவு கொண்டதாக இருக்குமாதலினால் நாடி நடையைக் கணித்தறிவது அரிதாம்.

மேலே குறிப்பிடப் பட்டிருப்போரில் பெரும்பாலோர் மெய்ப் பாட்டுணர்ச்சியால் அதிவேக இரத்த ஓட்டத்தைக் கொண்டவர்களாக இருப்பர். அவ்வாறு அதிவேக இரத்த அழுத்தம் ஏற்படுகின்ற அந்த வேளையில் நாடியைக் கணித்தறிதல் கூடாது என்றும், கணித்தறிவது கடினம் என்றும் கருதலாம். அந்த வேளையில் நாடித் தேர்வு நடத்துவது முறையற்ற மருத்துவத்திற்கு வழி காட்டியதாக அமையும் என்பதனால், நாடி தெரியதாக பேர்கள் எனச் சுட்டிக் காட்டியுள்ளனர்.
தமிழ் மருத்துவம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 12:29 am


பூத நாடி:

வாதம், பித்தம், ஐயம் என்னும் நாடியைப் போல பூதநாடி என ஒன்றுண்டு. இதைக் கண்டறிவது எளிதல்ல.

“நிறைந்த பரிபூரணத்தோர் காண்பார் தாமே’’

என்பதற்கிணங்க, நாடி நூல்கள் அனைத்தும் பூத நாடியைக் குறிப்பிட வில்லை. ஒரு சில நூல்கள் மட்டும் சிறிய அளவிலேயே கூறிச் செல்கின்றன.

"" சாற்றுவேன் பெருவிரலில் பூத நாடி
தோற்றுகின்ற சிறுவிரல் தான் பூத நாடி''

என்றதனால், ஐந்து விரலாலும் நோயாளியின் கையைப் பிடித்துப் பார்க்கும் போது பெருவிரலாலும் சிறுவிரலாலும் உணரப் பெறுகின்ற நாடிதான் பூத நாடி எனப்படும்.

ஆராயுமிடத்து வாத, பித்த, ஐய நாடிகளுக்கு முன்னும் பின்னுமாக உணரப்படும் நாடி பூதநாடி எனத் தெரிகிறது.

இவ்வாறாக மூன்று உயிர்த்தாது நாடிகளும் சிறப்பாகப் பூதநாடியும் நடக்கின்றவனுக்குச் சுக சன்னிமார்க்கமாகும். அவன் சாகான். காயசித்தி அடைவான். ஆகவே யோக வல்லுனர்கள் காயசித்தி அடைவதால் அவர்களுக்குப் பூதநாடி புலப்படும்.

பூதநாடி நடக்குங்கால் காயசித்தன் சமாதி நிலையை அடைவான். பூதநாடி நடக்கின்ற காலத்தில் சித்தர்கள் சமாதி நிலைக்கு ஏற்ற சமயமென்று பேருறக்க நிலையைச் சாதிக்க முயல்வார்கள் என்பதிலிருந்து, நாடிகளின் சிறப்பும் உயர்வும் எடுத்துக் காட்டப் பட்டிருப்பது உணர்தற்குரியது.

குருநாடி:

வாத நாடியையே குருநாடி என்பர் சிலர். நாடிகள் தோறும் ஊடுறுவிப் பாய்ந்து அவற்றிற்கு இயக்கத் தன்மையைக் கொடுப்பதால் குரு நாடி என்கிறார்கள். எனவே தொழில் பற்றியே நாடிகளை வகுத்த போதிலும் குருநாடி எல்லா நாடிகளின் இயக்கத்திற்கும் காரண நாடியாக உள்ளபடியாலும், காரியத்தைச் செய்கின்றபடியாலும் இதனை உன்னதமாகவும், சிறப்பாகவும் போற்றினார்கள். மற்றும், இந்நாடி குற்றமடைவதில்லை. இதற்குக் குணமுமில்லை. ஆனால் ஐந்து நிலையாகிய விழிப்பு நிலை, கனவு, உறக்கம், துரியம், துரியாதீதம் என்பவற்றைக் கொண்டது. மற்ற நாடிகள் குற்றமடைந்த காலத்து அக்குற்றங்களுக்கேற்ப இந்நாடியின் நிலைமாறும். வாத, பித்த நாடிகளின் தொழிற்கேற்ப முக்கியமாக விழிப்பு நிலை, கனவு, உறக்கம் என்ற தொழில்களால் குருநாடியின் நிலைகள் மாறிக் கொண்டே இருக்கும்.

குருநாடியில் உறக்க நிலை ஏற்பட்டு விட்டால் உடலுக்குச் சலனமில்லை. இந்நிலையைத்தான் பிணம் என்று கூறுகின்றார்கள். ஆனால் உயிர் வெளியாகி விடவில்லை. உயிர் அணுக்கள் உறக்க நிலையை அடைந்து விட்டது என்பது வெள்ளிடைமலை. ஆகவே, குரு நாடியை மருத்துவன் சாதாரணப் பயிற்சியினால் உணர வல்லன் அல்லன். யோக வல்லமையினால் தான் அறியமுடியும்.88 குருநாடி, வாத, பித்த, ஐய நாடிகள் மூன்றும் தராசு முனை போன்றதாகும்.

"" தம்முடன் வாத பித்த ஐய நடுவிலே தான்
தமரகம் போலாடி நிற்கும் குருவி தாமே''

என்பதினால், குருநாடி வாத, பித்த, ஐய நாடிகளின் மத்தியில் தமரகம் போன்றது எனவும் விளங்குகிறது. ‘தமரகம்’ எனும் ‘இதயம்’ உடற்கு எவ்வளவு முதன்மையானதோ அதே போல குரு நாடியானது வாத, பித்த ஐயமாகிய உயிர்த்தாதுவுக்கு முதன்மையானது என்பதை அறிகிறோம். இதனை வேறுபடுத்திக் காண்பது எளிதன்று என்றதனால், குருநாடி, நாடிகளுக்கெல்லாம் தலைமை பெற்ற நாடியாகவும், மூலநாடியாகவும் ஆதிநாடியாகவும் விளங்குகிறது எனலாம்.
தமிழ் மருத்துவம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored contentPage 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக