புதிய பதிவுகள்
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 3 Poll_c10கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 3 Poll_m10கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 3 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 3 Poll_c10கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 3 Poll_m10கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 3 Poll_c10 
61 Posts - 42%
mohamed nizamudeen
கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 3 Poll_c10கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 3 Poll_m10கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 3 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 3 Poll_c10கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 3 Poll_m10கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Kavithas
கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 3 Poll_c10கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 3 Poll_m10கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
bala_t

prajai

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 3 Poll_c10கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 3 Poll_m10கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 3 Poll_c10 
292 Posts - 42%

287 Posts - 41%
Dr.S.Soundarapandian
கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 3 Poll_c10கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 3 Poll_m10கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 3 Poll_c10 
52 Posts - 7%

26 Posts - 4%
sugumaran
கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 3 Poll_c10கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 3 Poll_m10கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 3 Poll_c10 
16 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

5 Posts - 1%

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 15, 2021 11:06 pm

First topic message reminder :

உலகம் முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்று;

கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை உலகைக் கடந்துவிட்டது, தற்போது பொதுமுடக்கங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை திரும்புவதாக நாம் நம்பிக்கொண்டிருந்தால், அது மிகப்பெரிய தவறு என்கிறது இந்தச் செய்தி.

இயல்பு வாழ்க்கை திரும்புவதாக நாம் கருதினாலும், விரைவில் நாட்டில் கரோனா மூன்றாம் அலை தாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் அவ்வப்போது எச்சரிக்கை மணியை அடித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். அதுதான் உண்மைபோலும். ஆம், பொதுமுடக்கம் மற்றும் இயல்பு நிலை திரும்பியதாக மக்களின் மனநிலை ஆகியவை காரணமாக உலகம் முழுவதும், கரோனா பாதிப்பும், பலி எண்ணிக்கையும் மீண்டும் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இயல்பு நிலை திரும்பும் என்ற நம்பிக்கை தவிடுபொடியாகியுள்ளது.

9 வாரங்களாக கரோனா பெருந்தொற்று காரணமாக பலியாவோர் எண்ணிக்கை சரிந்து வந்த நிலையில், அந்த நிலை கடந்த வாரம் மாறியிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.கடந்த வாரம் மட்டும் 55,000 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இது அதற்கு முந்தைய வாரங்களோடு ஒப்பிடுகையில் 3 சதவீதம் அதிகமாகும்.புதிதாக கரோனா பாதிப்பும் சுமார் 10 சதவீதம் அதிகரித்துள்ளது, கடந்த வாரத்தில் மட்டும் 30 லட்சம் பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. குறிப்பாக, பிரேசில், இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிரிட்டன் நாடுகளில்தான் இந்த அதிகரிப்பு பதிவாகியிருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்படி, கரோனா பரவலின் சரிவுநிலை திரும்புவதற்குக் காரணிகளாக, தடுப்பூசி செலுத்துவதில் மெத்தனம், முகக்கவசம் அணிவதிலிருந்து விலக்கு உள்ளிட்ட கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு, அதிகம் பரவும் திறன் கொண்ட டெல்டா வகை உருமாறிய கரோனா, போன்றவை இருக்கின்றன. டெல்டா வகை உருமாறிய கரோனா தற்போது 111 நாடுகளில் பரவி வருவதாகவும் வரும் மாதங்களில் இது உலகளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.உலகம் முழுவதும் கரோன பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், அர்ஜென்டினாவில் கரோனா பலி எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டியிருக்கிறது. ரஷியாவில் இந்த வாரம், பலி எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. பெல்ஜியத்தில் டெல்டா வகை கரோனா வைரஸ் இளைஞர்களை பாதிப்பதும் கடந்த வாரத்தில் கிட்டத்தட்ட இரண்டு மடங்காகியுள்ளது.

கடந்த ஆறு மாதங்களில் இல்லாத வகையில் பிரிட்டனில் ஒரு நாள் புதிய கரோனா பாதிப்பு 40 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. மியான்மரியில் உள்ள மயானங்கள் காலை முதல் இரவு வரை இடைவிடாமல் இயங்கி வருகின்றன.கடந்த மாதம் ஒரு நாளைக்கு 8 ஆயிரம் புதிய கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்த இந்தோனேசியாவில் புதன்கிழமை 54,000 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு, கிட்டத்தட்ட ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஜகார்த்தா அருகே இடுகாடுகளில் குழிகளைத் தோண்டும் பணியில் ஊழியர்கள் தேவை அதிகரித்ததால், பொதுமக்களும் அப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவ்வாறு மக்கள் இப்பணியைச் செய்யாவிட்டால், உடல்களைப் புதைக்க பல நாள்கள் காத்திருக்கும் நிலை ஏற்படும் என்கிறார்கள் அங்குள்ள மக்கள்.

அமெரிக்காவிலோ, கடந்த இரண்டு வாரங்களில் கரோனா பாதிப்பு உறுதியாகும் எண்ணிக்கை இரண்டு மடங்காகியுள்ளது. ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராகிவிரும் டோக்கியோவில் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து, மருத்துவமனைகளில் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருவதால், அங்கு அவசரநிலையே அறிவிக்கப்பட்டுவிட்டது.கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக சிட்னியில் பொதுமுடக்கத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சியோலில் கடுமையான கட்டுப்பாடுகள் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதுமுள்ள பல நாடுகளில் அதிகரித்திருக்கும் கரோனா பரவல் பற்றிய இந்தப் பட்டியல் மேலும் நீண்டுகொண்டேதான் இருக்கிறது. உலகம் முழுவதும் அச்சமூட்டும் வகையில் எண்ணிக்கை அமைந்திருந்தாலும், இந்த ஆண்டின் துவக்கத்தில் ஏற்பட்டதைப் போன்ற அபாய எண்ணிக்கையை இன்னும் எட்டவில்லை என்றும் கூறுகிறார்கள்.கடந்த ஏப்ரல் மாத ஒரு நாள் பாதிப்போடு ஒப்பிடுகையில் பாதியளவாக, உலகம் முழுவதும் ஒரு நாள் பாதிப்பு 4,50,000 ஆகவே உள்ளது. பல நாடுகளும், கரோனா பொதுமுடக்கத்தில் தளர்வுகளை அறிவிக்க வேண்டிய கட்டாய நிலையில் இருந்தாலும், இது கரோனா வைரஸ் பரவலுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்து விடும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 02, 2021 9:46 pm

கொரோனா 3வது அலை ஆகஸ்டில் தொடங்குமா; நிபுணர்கள் கூறுவது என்ன..!!

இந்தியாவில் #கொரோனா மூன்றாவது அலையில் நாள் ஒன்றுக்கு 100,000 முதல் 1,50,000 என்ற அளவிற்கு புதிய கொரோனா #வைரஸ் தொற்று பாதிப்புகள் பதிவாக வாய்ப்புள்ளது என #நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் இரண்டாவது அலை கட்டுக்குள் வந்து விட்ட போதிலும், மூன்றாவது கோவிட் -19 அலை தொடர்பான அச்சுறுத்தல் மக்கள் மத்தியில் நிலவுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் COVID -19 தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ள ப்ளூம்பெர்க் அறிக்கை எச்சரித்துள்ளது.

ஐஐடி ஹைதராபாத் மற்றும் கான்பூரை சேர்ந்த ஆராய்ச்சியாளரின் கருத்தை மேற்கோள் காட்டி, இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையில் நாள் ஒன்றுக்கு 100,000 முதல் 1,50,000 என்ற அளவிற்கு புதிய கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் பதிவாக வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது

இதற்கிடையில், பல ஆராய்ச்சியாளர்கள் மூன்றாவது COVID-19 அலை இரண்டாவது அலை போல் தீவிரமாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளனர்,. இரண்டாவது அலையின் போது நாட்டில் 400,000-க்கும் அதிகமான தினசரி தொற்று பாதிப்புகள் பதிவாகின.

எனினும், ஜுலை மாதம் நடுவில் கோவிட் -19 அலை உச்சத்தை எட்டும் என்று ஏப்ரல் மாதம் வித்யாசாகர் கூறிய கணிப்பு தவறானது என்பதையும் அந்த அறிக்கையில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக, மருத்துவ வல்லுநர்கள் COVID-19 டெல்டா திரிபு வைரஸ், தடுப்பூசி போடப்பட்ட மக்கள் மூலமாகாவும் பரவும் என்றும் எச்சரித்தனர்.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 41,831 புதிய COVID-19 தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்றும், நாட்டினல் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை இப்போது 4.10 லட்சமாக அதிகரித்துள்ளது என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை மொத்த தொற்று பாதிப்பில், 1.30 சதவிகிதம் என்று சுகாதார அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 541 பேர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்தனர். 39,258 பேர் குணமடைந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை 4,24,351 ஆக உயர்ந்துள்ளது, மொத்தம் 3,08,20,521 பேர் தொற்றுநோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 02, 2021 9:54 pm

அதிகமாக முடி உதிர்கிறதா? கொரோனா சிகிச்சை பெற்றவரா? இது உங்களுக்கான தீர்வு

முடி கொட்டுதல் என்பது பலருக்கும் கவலையளிக்கும் விஷாயம். அதிலும் தற்போது கொரோனா தொற்றால் பாதித்து, குணமடைந்தவர்களுக்கு தலைமுடி உதிர்வது அதிகமாக இருக்கிறது. இதற்கான காரணங்கள் என்ன? இதை தடுப்பதற்கான வழிமுறைகளை என்ன?

மன அழுத்தம், அழற்சி எதிர்வினைகள் போன்றவையே முடி உதிர்தலுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. முடி இழப்பு என்பது கோவிட் -19 க்குப் பிந்தைய ஒரு சிக்கலான சிக்கலாகும், இது பலரால் அறிவிக்கப்பட்டது. தொற்றுநோய்களின் இரண்டாவது அலையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

கோவிட் பாதித்து குணமானவர்களுக்கு அதன் பிறகு ஏற்படும் சில பிரச்சனைகள் பொதுவானதாக இருக்கிறது. அதில் முக்கியமானவை, தொடர்ச்சியான தோல் ஒவ்வாமை, தடிப்பு, கண்களில் வறட்சி, உடல் பலவீனம் - சோர்வு மற்றும் முடி உதிர்தல் கோவிட் -19 க்குப் பிந்தைய சிக்கல்களாக உருவெடுத்துள்ளன.  

கோவிட் நோயிலிருந்து குணமடைந்த 30 நாட்களுக்குப் பிறகு நோயாளிகளுக்கு இந்த பிரச்சனைகள் தோன்றுகின்றன. ஆனால் சில நோயாளிகளில், இது கோவிட்  பாதித்தபோதும் ஏற்பட்டது.

உணவுப் பழக்கவழக்கங்கள், நோய்த்தொற்றின் போது காய்ச்சல், வைரஸால் பாதிக்கப்படும் மன அழுத்தம், எடை இழப்பு, தொடர்புடைய கவலை, திடீரென ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் தொடர்ச்சியான கோவிட் -19 அழற்சி எதிர்வினைகள் ஆகியவற்றால் ஏற்படும் பல்வேறு குறைபாடுகள் கோவிட் பாதித்தவர்களுக்கு பக்க விளைவாக ஏற்படுகிறது.

முடி உதிர்தல் தொடர்பான பிரச்சனைகள் வழக்கத்தை விட இருமடங்கு அதிகமாக உள்ளது. சரிவிகித ஊட்டச்சத்து எடுத்துக்கொள்ளாதது, உடல் எடையில் திடீர் மாற்றங்கள், ஹார்மோன் தொந்தரவுகள் மற்றும் வைட்டமின் டி மற்றும் பி 12 ஆகியவற்றின் அளவு குறைவது என கோவிட்டிலிருந்து குணமானவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.  

ஆனால் கோவிட் பாதிப்புக்கு பிந்தைய முடி உதிர்தல் தற்காலிகமானது தான். அதற்கு டெலோஜென் எஃப்ளூவியம் (Telogen Effluvium) என்ற நிலை காரணமாக உள்ளது. இது கோவிட் பாதிப்பின்போது ஏற்பட்ட காய்ச்சல் மற்றும் பிற பாதிப்புகளால் உடலில் நீடிக்கும் அதிர்ச்சியின் விளைவாகும்.

பொதுவாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 100 முடியை இழக்கலாம், ஆனால் டெலோஜென் எஃப்ளூவியம் காரணமாக, முடி உதிர்தல் நாளொன்றுக்கு 300-400 என்ற விகிதத்தில் அதிகரிக்கலாம். எனவே, கோவிடால் பாதிக்கப்பட்டவர்கள் வைட்டமின்கள் மற்றும் இரும்பு சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்.

அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன, ஏனெனில் இரும்புச்சத்து குறைபாடு முடி உதிர்தலை மேலும் துரிதப்படுத்தும், மேலும் புரதம் நிறைந்த மற்றும் சீரான உணவு உட்கொள்வது தற்காலிகமாக முடி உதிர்தலைக் குறைப்பதற்கான ஒரு தீர்வாகும்.

ஊட்டச்சத்துள்ள உணவை உட்கொள்ள தொடங்கிய 5-6 வாரங்களுக்கு பிறகும் முடி உதிர்வது குறையவில்லை எனில் பிறகு மருத்துவரிடம் சென்றால் போதுமானது.

மேலும், அதிகப்படியான முடி உதிர்தலைத் தவிர்க்க பொதுவாக கடைபிடிக்கப்படும் முடி பராமரிப்பு தீர்வுகளை கடைபிடித்தால் போதும். லேசான, பாராபென் மற்றும் சல்பேட் இல்லாத ஷாம்பூக்களைப் (mild, paraben, and sulphate free shampoos) பயன்படுத்த வேண்டும்.

உச்சந்தலையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வதைத் தவிர்க்கவும், அதிக இடைவெளியில் பற்கள் கொண்ட சீப்பை மட்டுமே தலைமுடிக்கு பயன்படுத்தவும்.

இந்த தற்காலிக முடி உதிர்தலை நினைத்து மனதில் கவலையோ அழுத்தமோ ஏற்பட தேவையில்லை.  தியானம் செய்யலாம், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடலாம்.

ஊட்டச்சத்து சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும், சிகை அலங்காரத்திற்கு பயன்படுத்தப்படும் ரசாயனங்களை பயன்படுத்த வேண்டாம். தலையை காய வைக்க மின்சார ஹீட்டரையும் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

தலையில் வழுக்கைத் திட்டுகள் உருவாகினாலும், முடி கொட்டுதலின் அளவு மிக அதிகமாக இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகவும்.  ஊட்டச்சத்துள்ள உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டு மன அழுத்தத்தைக் குறைத்தாலே கோவிடுக்கு பிந்தைய சிக்கல்களை சமாளிக்கலாம். முடி உதிர்வதையும் தவிர்க்கலாம்.

கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 02, 2021 10:14 pm

டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு எதிராக கோவாக்சின் சிறப்பாக செயல்படுகிறது என ஐசிஎம்ஆர் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் கண்டறிந்துள்ள கோவேக்சின் தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்படுள்ளது. கோவேக்சின் தடுப்பூசியானது, டெல்டா வகை கொரோனாவுக்கு அறிகுறிகள் இல்லாமல் தடுப்பதில் 77.8 சதவீதம் செயல் திறன் மிக்கது ஆகும்.

இந்த நிலையில், டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு எதிராகவும் கோவாக்சின் சிறப்பாக செயல்படுகிறது என ஐசிஎம்ஆர் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்டா வைரஸ் மரபணு மாறி டெல்டா பிளஸ் என்ற வைரஸ் உருவாகி உள்ளது.

இது மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி உடலுக்குள் செல்லும் திறன் கொண்டது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இதனால் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டுள்ளனர். இதுகுறித்த ஆய்வும் தீவிரமடைந்து வருகிறது. இந்த வகை டெல்டா பிளஸ் வைரஸுக்கு எதிராக கோவாக்சின் சிறப்பாக செயல்படுவதாக ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் முதன் முதலாக கண்டறியப்பட்ட டெல்டா பிளஸ் கொரோனா 20 நாடுகளில் பரவியுள்ளது.

கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 05, 2021 10:06 pm

கோவிட் பாதிப்புக்கு பிந்தைய பிரச்னைகள்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனிவா: 'கோவிட் தொற்றிலிருந்து மீண்ட பிறகு எழும் உடல்நல பிரச்னைகள் கவலை அளிக்கும் விதமாக உள்ளது' என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் தெரிவித்து உள்ளதாவது: உலகம் முழுவகும் 20 கோடிக்கும் அதிகமானோர் கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது தொற்றில் இருந்து மீண்ட பிறகு எழும் உடல் நில பிரச்னைகளால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறித்த விவரங்கள் எங்களிடம் இல்லை. ஆனால் தொற்றிலிருந்து மீண்ட பிறகு எழும் உடல்நல பிரச்னைகள் கவலை அளிக்கும் விதமாக உள்ளது.

நீண்ட நாள் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொற்றிலிருந்து மீண்ட பிறகு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால் அவர்கள் மருத்துவ உதவி பெற்றுக் கொள்ள வேண்டும். எவ்வளவு நாட்கள் வரை இப்பிரச்னைகள் நீளும் என, எங்களுக்கு தெரியாது. இதுகுறித்து மேலும் புரிந்து கொள்ள, ஆராய்ச்சிகளை தீவிரப்படுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 05, 2021 10:07 pm

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு; மத்திய அரசு

புதுடில்லி: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் (என்.சி.பி.சி.ஆர்) அறிக்கையின்படி நடப்பு ஆண்டு ஜூன் 30 வரை 30 ஆயிரத்து 71 குழந்தைகள், கொரோனாவால் பெற்றோரை இழந்துள்ளனர். இதற்கிடையே பிஎம் கேர்ஸ்-ல் குழந்தைகளுக்கான நலத்திட்டம் கடந்த மே 29-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் நோக்கம், கொரோனாவில் தாய், தந்தை இருவரையும் இழந்த அல்லது காப்பாளரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளின் நலன் காக்கும் திட்டமாகும். மேலும் இவர்களுக்கு 23 வயதை எட்டும்போது ரூ.10 லட்சம் வழங்குதல், மாதந்தோறும் உதவித்தொகை என்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: கொரோனா தொற்றால் பெற்றோரை அல்லது காப்பாளர்களை இழந்து ஆதரவற்ற நிலையில் இருக்கும் குழந்தைகள் நலனைப் பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கு 18 வயதுவரை ரூ.5 லட்சம் வரையிலான இலவச மருத்துவக் காப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் ஆயுஷ்மான் பாரத் மூலம் செயல்படுத்தப்பட்டு அதற்கான காப்பீடு தொகை பி.எம்.கேர்ஸ் நிதி மூலம் செலுத்தப்படும். கொரோனாவால் பெற்றோரை அல்லது காப்பாளரை இழந்த ஆதரவற்ற குழந்தைக்கு 18 வயது வரை மாத உதவித்தொகையும், 23 வயது அடையும்போது ரூ.10 லட்சம் நிதியும் வழங்கப்படும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 05, 2021 10:08 pm

மாநிலங்களின் கையிருப்பில் 2.69 கோடி தடுப்பூசி: சுகாதாரத்துறை தகவல்

புதுடில்லி: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் 2.69 கோடி கோவிட் தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று (ஆக., 5) வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது:நாடு முழுவதும் ஜூன் 21ம் தேதி முதல் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திருத்தப்பட்ட கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தியது.அதன்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இதுவரை 51,01,88,510 தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. அதில், 48,60,15,232 தடுப்பூசிகளை மாநிலங்கள் உபயோகித்துள்ளன. மேலும், 2,69,06,624 தடுப்பூசிகளை கையிருப்பில் வைத்துள்ளன.

கூடுதலாக 7,53,620 தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தரப்பிலிருந்து அனுப்பப்பட்டு உள்ளன. மேலும், நாடு முழுவதும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு இதுவரை 48.93 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளன.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 05, 2021 10:13 pm

கொரோனாவால் நாடு திரும்பிய தொழிலாளர்கள்; மலேசியா, சிங்கப்பூரிலும் பாதிப்பு

தமிழகம் திரும்பிய தொழிலாளர்களால் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் முடி அலங்காரம் மற்றும் உணவகத் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.உலகையே புரட்டி எடுத்துள்ள கொரோனாவால் பலரும் பாதித்துள்ளனர். பல தொழிலாளர்கள் புலம் பெயர்ந்துள்ளதால் தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றால் பல கம்பெனிகளில் பணியிடங்களை குறைத்து விட்டனர். பலரும் பணியிழந்து நாடு திரும்பியுள்ளனர். கொரோனா அச்சத்தால் தாமாகவே நாடு திரும்பியவர்களும் பலர். குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் முடி அலங்காரம் மற்றும் பரோட்டா மாஸ்டர் உள்ளிட்ட செட்டிநாடு, தென்னிந்திய சமையல் கலைஞர்கள் பலரும் கொரோனாவால் நாடு திரும்பினர். 30 ஆயிரம் தொழிலாளர்கள் தமிழகம் திரும்பியுள்ளனர்.

இவர்கள் வெளிநாடுகளுக்கு பணிக்கு திரும்ப முடியாமல் உள்ளூரிலேயே முடங்கியுள்ளனர். சிலர் விவசாயப் பணிகளில் இறங்கினர். வேறு சிலர் உள்ளூரில் உணவகங்களைத் துவக்கியும் சமாளிக்கப் பார்க்கின்றனர். இவர்கள் பணி புரிந்த மலேசியா,சிங்கப்பூரிலும் இவர்கள் இல்லாத பாதிப்பு எதிரொலிக்கிறது. அங்கும் திறமையான உணவக,முடிதிருத்த தொழிலாளர்கள் இல்லாமல் இத்தொழில்களை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 06, 2021 12:06 pm

தலை அலங்காரத்தை கூட பாதித்துள்ளதே இந்த கொடூர கொரோனா!

இதுதான் தலைவிதி என்பதோ!!

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 07, 2021 9:25 pm

ஜான்சன் அண்டு ஜான்சனின் ஒரு டோஸ் தடுப்பூசிக்கு ஒப்புதல்

புதுடில்லி: 'ஜான்சன் அண்டு ஜான்சன்' நிறுவனம் தயாரித்துள்ள ஒரு 'டோஸ்' மட்டும் செலுத்தக்கூடிய தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.

நம் நாட்டில் '#கோவிஷீல்டு, #கோவாக்சின்' #தடுப்பூசிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. ரஷ்யாவை சேர்ந்த '#ஸ்புட்னிக் - வி' தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து கொரோனா #தடுப்பூசி தயாரிக்கும் பல்வேறு நிறுவனங்களும் அனுமதி கோரி விண்ணப்பித்து வருகின்றன.

சர்வதேச மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜான்சன் அண்டு ஜான்சன், ஒரு டோஸ் மட்டும் செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசி 85 சதவீத செயல்திறனுடன் இருப்பது, பல்வேறு நாடுகளில் நடத்திய சோதனையில் தெரியவந்தது. செயல்திறன் மட்டுமின்றி பக்க விளைவுகள் இன்றி பாதுகாப்பானதாகவும் இது செயல்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அந்த தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கும்படி ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் மத்திய அரசிடம் விண்ணப்பித்து உள்ளது.

இந்நிலையில், 'ஜான்சன் அண்டு ஜான்சன்' நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளதாக மத்திய #சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 07, 2021 9:27 pm

50% மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி அமெரிக்கா சாதனை

வாஷிங்டன்: அமெரிக்க மக்கள் தொகையில் 50 சதவீதத்தினர் இரண்டு தவணை கோவிட் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டுள்ளதாக என அமெரிக்க தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகையின் கோவிட் தரவுகள் இயக்குநர் சைரஸ் ஷாபார் தெரிவித்து உள்ளதாவது:வயது வந்தோரில் 50 சதவீத அமெரிக்கர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற இலக்கு, கடந்த மே மாதம் எட்டப்பட்டது. அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதிலிருந்து தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். இருப்பினும், பழமைவாதிகள் அதிகம் வாழும் பகுதிகளில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், தடுப்பூசி விநியோகம் ஏப்ரல் மாதம் சுணக்கம் கண்டது.

இருந்தும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது 50 சதவீத அமெரிக்கர்கள் முழுவதுமாக தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதை நாம் தொடர வேண்டும். இரண்டு தவணை மாடர்னா அல்லது பைசர் தடுப்பூசிகள் அல்லது ஒரு தவணை ஜான்சன் அன்ட் ஜான்சன் தடுப்பூசிகளை 16.5 கோடி அமெரிக்கர்கள் செலுத்தியிருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தினால், விரைவில் இயல்பு வாழ்க்கை திரும்பும் என, அமெரிக்க அரசு எதிர்பார்த்தது. ஆனால், அங்கு டெல்டா வகை வைரஸ் தீவிரமாக பரவி அரசின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக