ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Guest Today at 6:39 am

» டோக்கியோ ஒலிம்பிக் 2020
by சிவா Today at 5:56 am

» ஔவையே எது எது கெடும்?
by சிவா Today at 4:29 am

» மலேசிய செய்திகள்
by சிவா Today at 12:31 am

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Today at 12:22 am

» பெகாசஸ் - செய்திகள்
by சிவா Today at 12:14 am

» மனோவசிய ரகசியம்
by சிவா Yesterday at 11:52 pm

» உள்ளத்தில் நல்ல உள்ளம்
by vandhiyathevan Yesterday at 10:01 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம் (564)
by Dr.S.Soundarapandian Yesterday at 8:14 pm

» தமிழ் நூல்கள் தரவிறக்கம் செய்ய.........
by T.N.Balasubramanian Yesterday at 12:36 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 11:31 am

» மீரான் மைதீன் - அஜ்னபி புத்தகம் தேவை
by rajabhai Thu Jul 22, 2021 9:58 pm

» நாகரிகமாக இருப்பதாக நினைக்கும் பெண்கள் உணர்ந்து கொள்வதற்காக...
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 9:41 pm

» உலகச் செய்திகள்!
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 9:30 pm

» பெகாசஸ் என்றால் என்ன?
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 9:07 pm

» எடியூரப்பா கர்நாடக முதல்வர் --பதவி விலகல் ?
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 8:59 pm

» இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 5:05 pm

» பரம்பரை வீட்டு வைத்தியம்
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 4:58 pm

» தமிழ் சரித்திர நாவல்களின் பட்டியல்
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 4:31 pm

» திரு ரமேஷ்குமாரை பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 4:26 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by nsatheeshkumar Thu Jul 22, 2021 1:43 pm

» முடக்குவாதத்தை முறிக்கும் முக்கிய மருந்து
by curesure4u Thu Jul 22, 2021 11:57 am

» ஜெயந்தி ராஜன்
by சிவா Thu Jul 22, 2021 11:48 am

» வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
by ரா.ரமேஷ்குமார் Thu Jul 22, 2021 8:40 am

» பூமியை நோக்கி வரும் பிரம்மாண்டமான சிறுகோள்: நாசா கண்காணிப்பு
by ayyasamy ram Thu Jul 22, 2021 5:41 am

» நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
by சிவா Wed Jul 21, 2021 11:16 pm

» எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே..
by aanmeegam Wed Jul 21, 2021 9:56 pm

» 'ஆஷாட ஏகாதசி' தினத்தில் தென்னாங்கூர் மற்றும் பண்டரீபுரம் !
by krishnaamma Wed Jul 21, 2021 9:02 pm

» பறக்கும் பட்டம் !
by krishnaamma Wed Jul 21, 2021 8:43 pm

» இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு !
by krishnaamma Wed Jul 21, 2021 8:29 pm

Admins Online

எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே..

எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே.. - Page 2 Empty எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே..

Post by aanmeegam Wed Jun 09, 2021 9:07 pm

First topic message reminder :

1. கண்கள் நீயே காற்றும் நீயே பாடல் வரிகள்

கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ..
வண்ணம் நீயே வானும் நீயே
ஊணும் நீ உயிரும் நீ…

பல நாள் கனவே ஒரு நாள் நனவே
ஏக்கங்கள் தீர்த்தாயே..
எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்
நான் தான் நீ வேறில்லை..

முகம் வெள்ளை தாள் அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே..
இதழ் எச்சில் நீர் எனும் தீர்த்ததால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே..

கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ..
வண்ணம் நீயே வானும் நீயே
ஊணும் நீ உயிரும் நீ…

இந்த நிமிடம் நீயும் வளர்ந்து
என்னைத் தாங்க ஏங்கினேன்..
அடுத்தக்கணமே குழந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்..

தோளில் ஆடும் சேலை
தொட்டில் தான் பாதி வேளை..
சுவர் மீது கிறுக்கிடும் போது

ரவிவர்மன் நீ..
இசையாக பல பல ஓசை
செய்திடும் இராவணன்
ஈடில்லா என் மகன்..

எனைத் தள்ளும் முன் குழி கன்னத்தில்
என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணே..
எனைக் கிள்ளும் முன் விரல் மெத்தைக்குள்
என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே..

என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளிப் போனால் தவிக்கிறேன்..
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்..

போகும் பாதை நீளம்
கூரையாய் நீல வானம்..
பல நூறு மொழிகளில் பேசும்
முதல் மேதை நீ..
பசி என்றால் தாயிடம் தேடும்
மானிட மர்மம் நீ..
நான் கொள்ளும் கர்வம் நீ..

கடல் ஐந்தாறு மலை ஐநூறு
இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை..
உடல் ஜவ்வாது பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை..

கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ..
வண்ணம் நீயே வானும் நீயே
ஊணும் நீ உயிரும் நீ….

படம் : முப்பொழுதும் உன் கற்பனைகள்
பாடலாசிரியர் : தாமரை

Last edited by aanmeegam on Wed Jun 09, 2021 9:14 pm; edited 1 time in total
aanmeegam
aanmeegam
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 05/06/2021
மதிப்பீடுகள் : 30

https://www.aanmeegam.in/

Back to top Go down

எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே.. - Page 2 Empty Re: எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே..

Post by T.N.Balasubramanian Tue Jun 29, 2021 6:46 pm

Code:
நிலா அது வானத்து மேலே பாடல் வரிகள்

இதன் பாடலாசிரியர் இளையராஜா என்று பதிவு செய்துள்ளீர் .

இசை அமைப்பாளர் என்று இருக்கவேண்டுமோ?

@aanmeegam

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 29458
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10517

aanmeegam likes this post

Back to top Go down

எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே.. - Page 2 Empty Re: எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே..

Post by T.N.Balasubramanian Tue Jun 29, 2021 6:49 pm

நிலா அது வானத்து மேலே பாடல் வரிகள்

ஆன்மீகத்திற்கு பிடித்தது. ரசனை ரசனை

புன்னகை புன்னகை புன்னகை

@aanmeegam

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 29458
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10517

aanmeegam likes this post

Back to top Go down

எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே.. - Page 2 Empty Re: எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே..

Post by aanmeegam Tue Jun 29, 2021 7:08 pm

@T.N.Balasubramanian wrote:
Code:
நிலா அது வானத்து மேலே பாடல் வரிகள்

இதன் பாடலாசிரியர் இளையராஜா என்று பதிவு செய்துள்ளீர் .

இசை அமைப்பாளர் என்று இருக்கவேண்டுமோ?

@aanmeegam
மேற்கோள் செய்த பதிவு: 1347618 இசை மற்றும் பாடல் வரிகள் இரண்டுமே இளையராஜா தான்..
aanmeegam
aanmeegam
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 05/06/2021
மதிப்பீடுகள் : 30

https://www.aanmeegam.in/

Back to top Go down

எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே.. - Page 2 Empty Re: எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே..

Post by T.N.Balasubramanian Tue Jun 29, 2021 9:37 pm

@aanmeegam wrote:
@T.N.Balasubramanian wrote:
Code:
நிலா அது வானத்து மேலே பாடல் வரிகள்

இதன் பாடலாசிரியர் இளையராஜா என்று பதிவு செய்துள்ளீர் .

இசை அமைப்பாளர் என்று இருக்கவேண்டுமோ?

@aanmeegam
மேற்கோள் செய்த பதிவு: 1347618 இசை மற்றும் பாடல் வரிகள் இரண்டுமே இளையராஜா தான்..
மேற்கோள் செய்த பதிவு: 1347621

அப்பிடியா? !!!!! ராஜா சோக்காக எழுதி இருக்காரே.
தகவலுக்கு நன்றி

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 29458
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10517

aanmeegam likes this post

Back to top Go down

எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே.. - Page 2 Empty Re: எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே..

Post by aanmeegam Fri Jul 02, 2021 7:37 am

மஞ்சப் பொடி தேய்க்கையிலே பாடல் வரிகள்

மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..

தண்ணி தொட்ட பாகம் எல்லாம்
இந்தக் கண்ணன் தொடும் காலம் எப்போ..
கண்ணனுக்கு நல்ல பதில் சொல்லு புள்ள…

மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..

குத்தாலச் சாரலுக்கு யோகமடி..
குண்டு மல்லிப் பூவுக்கொரு நேரமடி..
விட்டாக்கா ஏறுதொரு பாரமடி..
தொட்டுத் தொட்டு சேர்ந்த பின்பு தீருமடி..

ஒன்னோட கையாக நானும் மாறி..
பொன்னோட பூவோட கூடி..
கண்ணாடி பாராத காயம் தேடி..
கண்ணே நான் தெம்மாங்கு பாடி..

ஒண்ணாச் சேர வந்தா போதும்
ஏறும் மோகம் தானாத் தீரும்..

மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..

மொட்டான மொட்டு ஒண்ணு பூத்ததென்ன..
பூவுக்குள்ள தேனு வந்து சேந்ததென்ன..
தேனாறு உன் உதடு வந்ததென்ன..
தேனெடுத்து நான் அருந்த நேரம் என்ன..

ஒன்னோட பூ மேனி ஓடும் தேரு..
எப்போது ஊர்கோலம் கூறு..
பன்னீரு பூவாகத் தூவும் போது..
பஞ்சாங்கம் நாளென்ன கூறு..

கையும் கையும் கூடும் நேரம்
காதல் ராகம் காத்தும் பாடும்…

மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..

தண்ணி தொட்ட பாகம் எல்லாம்
இந்தக் கண்ணன் தொடும் காலம் எப்போ..
கண்ணனுக்கு நல்ல பதில் சொல்லு புள்ள…

மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..
மஞ்சப் பொடி தேய்க்கையிலே
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள..

படம் : செண்பகமே செண்பகமே
பாடலாசிரியர் : கங்கை அமரன்
aanmeegam
aanmeegam
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 05/06/2021
மதிப்பீடுகள் : 30

https://www.aanmeegam.in/

Back to top Go down

எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே.. - Page 2 Empty Re: எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே..

Post by aanmeegam Wed Jul 07, 2021 8:42 pm

கண்ணில் அன்பைச் சொல்வாளே பாடல் வரிகள்

கண்ணில் அன்பைச் சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னைத் தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே

கண்ணில் அன்பைச் சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னைத் தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே

சில நேரம் புன்னகையாலே பூக்கள் தந்திடுவாள்
சில நேரம் சண்டைகளாலே என்னை வென்றிடுவாள்
பேசாமல் போன பின்னாலே மனதைச் சொல்லிடுவாள்
இவள் சொந்தம் போதும் என்னும் எண்ணம் தந்திடுவாள்

கண்ணில் அன்பைச் சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னைத் தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே

உலகம் எந்தன் உலகம் எங்கும் இவளே வந்திடுவாள்
உயரம் கொஞ்சம் வளர்ந்த போதும் குழந்தை என்றிடுவாள்

உள்ளங்கையில் பாசம் வைத்து உணவைத் தந்திடுவாள்
உறங்கும் போதும் உறங்காமல் என் அருகில் நின்றிடுவாள்

இவள் போலே இவளைப் போலே வாழ்வில் நண்பர்கள் இல்லை
மறு ஜென்மம் வந்தால் கூட நான் தான் இவளின் பிள்ளை
என்றும் என்றென்றும் இவள் சொந்தம் வேண்டும்

கண்ணில் அன்பைச் சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னைத் தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே

கண்ணீர்த் துளிகள் வேண்டும் என்று கண்ணைக் கேட்கின்றேன்
கண்ணீர்த் துடைக்க இவளும் வந்தால் தினமும் அழுகின்றேன்

என்னை நானே காண்பது போலே இவளைப் பார்க்கின்றேன்
என்றும் எங்கும் வழித் துணையாக இவளைக் கேட்கின்றேன்

உறவென்னும் வார்த்தைக்குத்தான் அர்த்தம் இங்கே கண்டேன்
இவள் அன்பின் வெளிச்சம் முன்னே இரவும் பகல்தான் என்பேன்
என்றும் என்றென்றும் இவள் சொந்தம் வேண்டும்

கண்ணில் அன்பைச் சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னைத் தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே

சில நேரம் புன்னகையாலே பூக்கள் தந்திடுவாள்
சில நேரம் சண்டைகளாலே என்னை வென்றிடுவாள்
பேசாமல் போன பின்னாலே மனதைச் சொல்லிடுவாள்
இவள் சொந்தம் போதும் என்னும் எண்ணம் தந்திடுவாள்

கண்ணில் அன்பைச் சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னைத் தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே…

படம் : ஈசன்
பாடலாசிரியர் : நா.முத்துக்குமார்
aanmeegam
aanmeegam
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 05/06/2021
மதிப்பீடுகள் : 30

https://www.aanmeegam.in/

Back to top Go down

எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே.. - Page 2 Empty Re: எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே..

Post by சிவா Wed Jul 07, 2021 10:10 pm

எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே.. - Page 2 362953131029211

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86623
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10922

http://www.eegarai..net

aanmeegam likes this post

Back to top Go down

எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே.. - Page 2 Empty Re: எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே..

Post by aanmeegam Tue Jul 13, 2021 10:15 pm

பிறக்கும் போதும் அழுகின்றாய் பாடல் வரிகள்

பிறக்கும் போதும் அழுகின்றாய்..
இறக்கும் போதும் அழுகின்றாய்..
பிறக்கும் போதும் அழுகின்றாய்..
இறக்கும் போதும் அழுகின்றாய்..

ஒரு நாளேனும் கவலையில்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே..
ஒரு நாளேனும் கவலையில்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே..

பிறக்கும் போதும் அழுகின்றாய்..
இறக்கும் போதும் அழுகின்றாய்..

இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்..
முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார்..
இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்..
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்.. இயற்கை சிரிக்கும்..

பிறக்கும் போதும் அழுகின்றாய்..
இறக்கும் போதும் அழுகின்றாய்..

அன்னையின் கையில் ஆடுவதின்பம்..
கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்..
அன்னையின் கையில் ஆடுவதின்பம்..

கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்..
தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்..
தன்னலம் மறந்தால் பெரும்பேரின்பம்.. பெரும்பேரின்பம்..

பிறக்கும் போதும் அழுகின்றாய்..
இறக்கும் போதும் அழுகின்றாய்..
ஒரு நாளேனும் கவலையில்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே…

படம் : கவலை இல்லாத மனிதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
aanmeegam
aanmeegam
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 05/06/2021
மதிப்பீடுகள் : 30

https://www.aanmeegam.in/

Back to top Go down

எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே.. - Page 2 Empty Re: எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே..

Post by aanmeegam Wed Jul 21, 2021 9:56 pm

கடவுள் ஏன் கல்லானான் பாடல் வரிகள்

கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே..
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே..

கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான்..
அதை கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான்..

இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்..
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்..
இங்கு எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்..
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்..

கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே..

நெஞ்சுக்கு தேவை மனசாட்சி
அது நீதி தேவனின் அரசாட்சி..
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி..
அரங்கத்தில் வராது அவன் சாட்சி…

கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே..

சதி செயல் செய்தவன் புத்திசாலி
அதை சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி

உண்மையை சொல்பவன் சதிகாரன்
உண்மையை சொல்பவன் சதிகாரன்
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்..

கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே..
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே..

படம் : என் அண்ணன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
aanmeegam
aanmeegam
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 05/06/2021
மதிப்பீடுகள் : 30

https://www.aanmeegam.in/

Back to top Go down

எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே.. - Page 2 Empty Re: எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை