ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஜோசப் பிட்சை என்னும் நடிகர் சந்திரபாபு
by சிவா Today at 8:35 am

» ஐ.என்.எஸ் விக்ராந்த்
by சிவா Today at 8:31 am

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:37 am

» வெயிலோடு விளையாடு
by curesure4u Today at 7:33 am

» செய்தி துளிகள் -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:32 am

» காவல் தெய்வம்- குறும்பட விமர்சனம்
by T.N.Balasubramanian Yesterday at 8:52 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm

» டோக்கியோ ஒலிம்பிக் 2020
by T.N.Balasubramanian Yesterday at 6:39 pm

» திரைத்துளிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அஜீத்தின் வலிமை படத்தின் “நாங்க வேற மாதிரி” பாடல் எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» அசோக மரத்தின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» யூ டியூப் ஸ்டார்
by ayyasamy ram Yesterday at 3:04 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 2:50 pm

» சப்பாத்தி மீந்து விட்டால்..
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» ஒரு புதிய ஏற்பாடு
by T.N.Balasubramanian Yesterday at 2:01 pm

» அழிவின் விளிம்பில் உள்ள தேவாங்கு விலங்கை காப்பாற்ற வேண்டும்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:54 am

» நாலடியார் பாடல் 148 - விளக்கம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by aanmeegam Tue Aug 03, 2021 9:23 pm

» பரம(ன்) இரகசியம் அமானுஷ்யன் நாவல்கள்
by shivi Tue Aug 03, 2021 6:49 pm

» கணவன் கையில் காப்பு கட்டப்படுவது…
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 4:37 pm

» அறிவு ஆறு அல்ல, பத்து (திருமூலர் அற்புத பாடல்)
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 4:22 pm

» சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்!
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 4:17 pm

» மலேசிய செய்திகள்
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 4:02 pm

» கடைசியில் இவ்வளவு தானா?
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 3:49 pm

» உங்கள் உடல் தோஷத்தைக் கண்டறிந்து கமெண்ட் செய்யுங்கள் ..
by curesure4u Tue Aug 03, 2021 8:41 am

» என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை
by ayyasamy ram Tue Aug 03, 2021 7:52 am

» இனிப்பான தேங்காய் போளி செய்வது எப்படி
by பழ.முத்துராமலிங்கம் Tue Aug 03, 2021 7:24 am

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Mon Aug 02, 2021 10:14 pm

Admins Online


எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)?

எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)? Empty எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)?

Post by aanmeegam Wed Jun 09, 2021 9:07 pm

1. கண்கள் நீயே காற்றும் நீயே பாடல் வரிகள்

கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ..
வண்ணம் நீயே வானும் நீயே
ஊணும் நீ உயிரும் நீ…

பல நாள் கனவே ஒரு நாள் நனவே
ஏக்கங்கள் தீர்த்தாயே..
எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்
நான் தான் நீ வேறில்லை..

முகம் வெள்ளை தாள் அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே..
இதழ் எச்சில் நீர் எனும் தீர்த்ததால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே..

கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ..
வண்ணம் நீயே வானும் நீயே
ஊணும் நீ உயிரும் நீ…

இந்த நிமிடம் நீயும் வளர்ந்து
என்னைத் தாங்க ஏங்கினேன்..
அடுத்தக்கணமே குழந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்..

தோளில் ஆடும் சேலை
தொட்டில் தான் பாதி வேளை..
சுவர் மீது கிறுக்கிடும் போது

ரவிவர்மன் நீ..
இசையாக பல பல ஓசை
செய்திடும் இராவணன்
ஈடில்லா என் மகன்..

எனைத் தள்ளும் முன் குழி கன்னத்தில்
என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணே..
எனைக் கிள்ளும் முன் விரல் மெத்தைக்குள்
என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே..

என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளிப் போனால் தவிக்கிறேன்..
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்..

போகும் பாதை நீளம்
கூரையாய் நீல வானம்..
பல நூறு மொழிகளில் பேசும்
முதல் மேதை நீ..
பசி என்றால் தாயிடம் தேடும்
மானிட மர்மம் நீ..
நான் கொள்ளும் கர்வம் நீ..

கடல் ஐந்தாறு மலை ஐநூறு
இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை..
உடல் ஜவ்வாது பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை..

கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ..
வண்ணம் நீயே வானும் நீயே
ஊணும் நீ உயிரும் நீ….

படம் : முப்பொழுதும் உன் கற்பனைகள்
பாடலாசிரியர் : தாமரை


Last edited by aanmeegam on Wed Jun 09, 2021 9:14 pm; edited 1 time in total
aanmeegam
aanmeegam
பண்பாளர்


பதிவுகள் : 78
இணைந்தது : 05/06/2021
மதிப்பீடுகள் : 35

https://www.aanmeegam.in/

Back to top Go down

எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)? Empty Re: எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)?

Post by T.N.Balasubramanian Wed Jun 09, 2021 9:12 pm

இடித்த பாடலா ?
பிடித்த பாடல் என்றிருக்கவேண்டுமோ???????????

@aanmeegam


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 29556
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10543

aanmeegam likes this post

Back to top Go down

எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)? Empty Re: எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)?

Post by aanmeegam Wed Jun 09, 2021 9:16 pm

@T.N.Balasubramanian wrote:இடித்த பாடலா ?
பிடித்த பாடல் என்றிருக்கவேண்டுமோ???????????

@aanmeegam
மேற்கோள் செய்த பதிவு: 1346777மன்னிக்கவும்.. மாற்றிவிட்டேன்.. எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)? 1571444738
aanmeegam
aanmeegam
பண்பாளர்


பதிவுகள் : 78
இணைந்தது : 05/06/2021
மதிப்பீடுகள் : 35

https://www.aanmeegam.in/

Back to top Go down

எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)? Empty Re: எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)?

Post by aanmeegam Thu Jun 10, 2021 12:41 pm

2. ஆராரிராரோ நானிங்கே பாட பாடல் வரிகள்

ஆராரிராரோ நானிங்கே பாட
தாயே நீ கண்ணுறங்கு
என்னோட மடி சாய்ந்து..

ஆராரிராரோ நானிங்கே பாட
தாயே நீ கண்ணுறங்கு
என்னோட மடி சாய்ந்து..

வாழும் காலம் யாவுமே
தாயின் பாதம் ஸ்வர்க்கமே..
வேதம் நான்கும் சொன்னதே
அதை நான் அறிவேனே..
அம்மா என்னும் மந்திரமே
அகிலம் யாவும் ஆள்கிறதே..

ஆராரிராரோ நானிங்கே பாட
தாயே நீ கண்ணுறங்கு
என்னோட மடி சாய்ந்து..

வேரில்லாத மரம் போல் என்னை
நீ பூமியில் நட்டாயே..
ஊர் கண் எந்தன் மேலே பட்டால்
உன் உயிர் நோகத் துடித்தாயே..
உலகத்தின் பந்தங்கள் எல்லாம்
நீ சொல்லித் தந்தாயே..
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
வழிநடத்திச் சென்றாயே..
உனக்கே ஓர் தொட்டில் கட்டி
நானே தாயாய் மாறிட வேண்டும்..

ஆராரிராரோ நானிங்கே பாட
தாயே நீ கண்ணுறங்கு
என்னோட மடி சாய்ந்து..

தாய் சொல்கின்ற வார்த்தைகள் எல்லாம்
நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா..
மண் பொன் மேலே ஆசை துறந்த
கண் தூங்காத உயிரல்லவா..
காலத்தின் கணக்குகளில்
செலவாகும் வரவும் நீ..
சுழல்கின்ற பூமியின் மேலே
சுழலாத பூமியும் நீ..
இறைவா நீ ஆணையிடு
தாயே எந்தன் மகளாய் மாற..

ஆராரிராரோ நானிங்கே பாட
தாயே நீ கண்ணுறங்கு
என்னோட மடி சாய்ந்து…
ஆராரிராரோ நானிங்கே பாட
தாயே நீ கண்ணுறங்கு
என்னோட மடி சாய்ந்து…

படம் : ராம்
பாடலாசிரியர் : சினேகன்
aanmeegam
aanmeegam
பண்பாளர்


பதிவுகள் : 78
இணைந்தது : 05/06/2021
மதிப்பீடுகள் : 35

https://www.aanmeegam.in/

Back to top Go down

எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)? Empty Re: எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)?

Post by aanmeegam Fri Jun 11, 2021 7:23 am

3. தீபங்கள் பேசும் இது கார்த்திகை பாடல் வரிகள்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்..
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே..
அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே..

முத்து முத்து விளக்கு முற்றத்திலே இருக்கு
முத்து பொண்ணு சிரிச்ச வேக்கத்தில!
பக்கத்துல நெருப்ப அத்தை மகன் இருக்கான்
முத்தம் ஒன்னு குடுத்த குத்தமில்ல!

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்..
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே..
அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே..

முத்து முத்து விளக்கு முற்றத்திலே இருக்கு
முத்து பொண்ணு சிரிச்ச வேக்கத்தில!
பக்கத்துல நெருப்ப அத்தை மகன் இருக்கான்
முத்தம் ஒன்னு குடுத்த குத்தமில்ல!

முல்லை ஆத்து தண்ணி போல ஆசை அலைகள் அலைய..
கொள்ளை போன கன்னி நெஞ்சு கொஞ்சம் கலைய கலைய..
முல்லை ஆத்து தண்ணி போல ஆசை அலைகள் அலைய..
கொள்ளை போன கன்னி நெஞ்சு கொஞ்சம் கலைய கலைய..

என்னோடு தாலாட்டி.., வந்தாடும் பூங்காற்று
பொன்னான நாள் பார்த்து.., கொண்டாடும் கை கோர்த்து
குயில்கள் கூடி குலவை போடும் நாளும் இன்றுதானோ..?!

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்..
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே..
அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே..

முத்து முத்து விளக்கு முற்றத்திலே இருக்கு
முத்து பொண்ணு சிரிச்ச வேக்கத்தில!
பக்கத்துல நெருப்ப அத்தை மகன் இருக்கான்
முத்தம் ஒன்னு குடுத்த குத்தமில்ல!

நெருப்பில்லாமல் திரியில்லாமல் எரியும் வான விளக்கு
இருக்கும் பொது அருகில் வந்து வெட்கம் கொஞ்சம் விலக்கு..!

கனவை கூட கவிதையாகி புலம்பும் இளைய கவியே
கவிதை என்னும் சிறகு கொண்டு பறக்க வேண்டும் இனியே..!

வெண்ணிலவின் முன்னாலே.., விண்மீன்கள் ஊர்கோலம்
கண்ணிமையே ஓடாதே.., என் கனவை தேடாதே
அரங்கம் பாடி அரங்கம் சேரும் நாளும் இன்றுதானோ..?!

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்..
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே..
அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே..

முத்து முத்து விளக்கு முற்றத்திலே இருக்கு
முத்து பொண்ணு சிரிச்ச வேக்கத்தில!
பக்கத்துல நெருப்ப அத்தை மகன் இருக்கான்
முத்தம் ஒன்னு குடுத்த குத்தமில்ல!

படம் : தேவதை
பாடலாசிரியர் : அறிவுமதி
aanmeegam
aanmeegam
பண்பாளர்


பதிவுகள் : 78
இணைந்தது : 05/06/2021
மதிப்பீடுகள் : 35

https://www.aanmeegam.in/

Back to top Go down

எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)? Empty Re: எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)?

Post by aanmeegam Sat Jun 12, 2021 3:48 pm

உலகினில் மிக உயரம் பாடல் வரிகள்

உலகினில் மிக உயரம்..
மனிதனின் சிறு இதயம்..
நினைவுகள் பல சுமக்கும்..
நிஜத்தினில் எது நடக்கும்..?
விரல் நீட்டும் திசையில்.. ஓடாது நதிகள்
விதி போகும் திசையில்.. நீ ஓடு..
உன்னை வாட்டி எடுக்கும்..
துன்பம் நூறு இருக்கும்..
தடை நூறு கடந்து.. போராடு..

உலகினில் மிக உயரம்..
மனிதனின் சிறு இதயம்..

கடலினில் கலந்திடும் துளியே.. கவலை எதுக்கு?
அலையுடன் கலந்து நீ ஆடு.. வாழ்க்கை உனக்கு
உறவுகள் இனி உனக்கெதுக்கு.. உலகம் இருக்கு
வலிகளை தாங்கிடும் கல்லில்.. சிலைகள் இருக்கு
அலைகள் அலைகழிக்கும் ஓடம் தான்
கடலை தாண்டி வந்து கரை ஏறும்
ஊசி துளைக்கும் துணி மட்டும் தான்
உடுத்தும் ஆடை என்று உருவாகும்
இருளில்.. இருந்தே.. வெளிச்சம்.. பிறக்கும்.. எப்போதும்..

உலகினில் மிக உயரம்..
மனிதனின் சிறு இதயம்..
நினைவுகள் பல சுமக்கும்..
நிஜத்தினில் எது நடக்கும்..?

கனவுகள் சுமந்திடும் மனமே.. உறக்கம் எதற்கு?
இருக்குது உன்னகொரு பாதை.. நடக்க தொடங்கு
தயக்கங்கள் இனி உனக்கெதுக்கு.. துணிந்த பிறகு
நடப்பது நடக்கட்டும் வாழ்வில்.. கடக்க பழகு
இடிகள் இடிக்கும் அந்த வானம் தான்
உடைந்து விழுவதில்லை எப்போதும்
அடியை தாங்கி கொள்ளும் நெஞ்சம் தான்
அடுத்த அடியை வைத்து முன்னேறும்
நினைப்பின்.. படியே.. எதுவும்.. நடக்கும்.. எப்போதும்..

உலகினில் மிக உயரம்..
மனிதனின் சிறு இதயம்..
நினைவுகள் பல சுமக்கும்..
நிஜத்தினில் எது நடக்கும்..?
விரல் நீட்டும் திசையில்.. ஓடாது நதிகள்
விதி போகும் திசையில்.. நீ ஓடு..
உன்னை வாட்டி எடுக்கும்..
துன்பம் நூறு இருக்கும்..
தடை நூறு கடந்து.. போராடு..

படம் : நான்
பாடலாசிரியர் : அண்ணாமலை
aanmeegam
aanmeegam
பண்பாளர்


பதிவுகள் : 78
இணைந்தது : 05/06/2021
மதிப்பீடுகள் : 35

https://www.aanmeegam.in/

Back to top Go down

எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)? Empty Re: எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)?

Post by ayyasamy ram Sat Jun 12, 2021 4:24 pm

உலகினில் மிக உயரம் -பாடல் காணொளி
-
படம்- நான்
பாடல் வரிகள்-அண்ணாமலை
இசை - விஜய் ஆண்டனி
பாடியவர்கள்- அண்ணாமலை, விஜய் ஆண்டனி
-----
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 69519
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13133

https://rammalar.wordpress.com/

aanmeegam likes this post

Back to top Go down

எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)? Empty Re: எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)?

Post by aanmeegam Mon Jun 14, 2021 8:26 am

வைகைக் கரை காற்றே நில்லு பாடல் வரிகள்

வைகைக் கரை காற்றே நில்லு..
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு..
வைகைக் கரை காற்றே நில்லு..
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு..
மன்னன் மனம் வாடுதென்று..
மங்கை தனைத் தேடுதென்று..
காற்றே; பூங்காற்றே..
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்..
காதோரம் போய் சொல்லு..

வைகைக் கரை காற்றே நில்லு..
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு..
வைகைக் கரை காற்றே நில்லு..
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு..
மன்னன் மனம் வாடுதென்று..
மங்கை தனைத் தேடுதென்று..
காற்றே; பூங்காற்றே..
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்..
காதோரம் போய் சொல்லு..

திருக்கோவில் வாசல் அது திறக்கவில்லை..
தெருக்கோடி பூஜை அது நடக்கவில்லை..
தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை..
தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை..
காதலில் வாழ்ந்த கன்னி மனம்..
காவலில் வாடையில் கண்ணிவிடும்..
கூண்டுக்குள்ளே அலைமோதும்..
காதல் கிளி அவள் பாவம்..
கூண்டுக்குள்ளே அலைமோதும்..
காதல் கிளி அவள் பாவம்..
காதல் கிளி அவள் பாவம்..

காற்றே; பூங்காற்றே..
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்..
காதோரம் போய் சொல்லு..

மாக்கோலம் போடுதற்கு வரவில்லையே..
அவள் கோலம் பார்ப்பதற்கு வழியில்லையே..
ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே..
ஜாடையொலி சிந்த அவள் இன்று இல்லையே..
நிலவினை மேகம் வானில் மறைக்க..
அவளினை யாரோ வீட்டில் தடுக்க..
மேகமது விலகாதோ சோகமது நீங்காதோ..
மேகமது விலகாதோ சோகமது நீங்காதோ..
சோகமது நீங்காதோ..

காற்றே; பூங்காற்றே..
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்..
காதோரம் போய் சொல்லு..

வைகைக் கரை காற்றே நில்லு..
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு..
வைகைக் கரை காற்றே நில்லு..
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு..
மன்னன் மனம் வாடுதென்று..
மங்கை தனைத் தேடுதென்று..
காற்றே; பூங்காற்றே..
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்..
காதோரம் போய் சொல்லு..
நீ காதோரம் போய் சொல்லு..
நீ காதோரம் போய் சொல்லு..

படம் : உயிருள்ளவரை உஷா
பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்
aanmeegam
aanmeegam
பண்பாளர்


பதிவுகள் : 78
இணைந்தது : 05/06/2021
மதிப்பீடுகள் : 35

https://www.aanmeegam.in/

Back to top Go down

எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)? Empty Re: எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)?

Post by aanmeegam Tue Jun 15, 2021 7:38 am

கண்ணான கண்ணே பாடல் வரிகள்

கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா..
புண்ணான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா..

நான் காத்து நின்றேன்
காலங்கள் தோறும்
என் ஏக்கம் தீருமா..?

நான் பார்த்து நின்றேன்
பொன் வானம் எங்கும்
என் மின்னல் தோன்றுமா..?

தண்ணீராய் மேகம் தூறும்
கண்ணீர் சேரும்
கற்கண்டாய் மாறுமா..?

ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ

ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ

கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா..
புண்ணான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா..

ஆஆ…ஆஅ…ஆஅ…ஆஅ….
ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ..

அலை கடலின் நடுவே
அலைந்திடவா தனியே
படகெனவே உனையே
பார்த்தேன் கண்ணே….

புதை மணலில் வீழ்ந்து
புதைந்திடவே இருந்தேன்
குறு நகை எரிந்தே
மீட்டாய் என்னை..

விண்ணோடும் மண்ணோடும் வாடும்
பெரும் ஊஞ்சல் மனதோரம்..
கண்பட்டு நூல் விட்டு போகும்
என ஏதோ பயம் கூடும்..

மயில் ஒன்றை பார்க்கிறேன்
மழையாகி ஆடினேன்
இந்த உற்சாகம் போதும்
சாக தோன்றும் இதே வினாடி..

கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா..
புண்ணான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா..

நீ தூங்கும் போது
உன் நெற்றி மீது
முத்தங்கள் வைக்கணும்..
போர்வைகள் போர்த்தி
போகாமல் தாழ்த்தி
நான் காவல் காக்கணும்..
எல்லோரும் தூங்கும் நேரம்
நானும் நீயும் மௌனத்தில் பேசணும்..

ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ

ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ

கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே..

படம் : விசுவாசம்
பாடலாசிரியர் : தாமரை
aanmeegam
aanmeegam
பண்பாளர்


பதிவுகள் : 78
இணைந்தது : 05/06/2021
மதிப்பீடுகள் : 35

https://www.aanmeegam.in/

Back to top Go down

எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)? Empty Re: எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)?

Post by aanmeegam Thu Jun 17, 2021 5:13 pm

கண்ணே கலைமானே பாடல் வரிகள்

கண்ணே கலைமானே
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே..
கண்ணே கலைமானே
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிராரோ ஓராரிரோ ராரிராரோ ஓராரிரோ

கண்ணே கலைமானே
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே..

ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது

கண்ணே கலைமானே
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிராரோ ஓராரிரோ
ராரிராரோ ஓராரிரோ

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி நீதானே என் சன்னதி

கண்ணே கலைமானே
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிராரோ ஓராரிரோ
ராரிராரோ ஓராரிரோ
ராரிராரோ ஓராரிரோ
ராரிராரோ ஓராரிரோ…

படம் : மூன்றாம் பிறை
பாடலாசிரியர் : கண்ணதாசன்
aanmeegam
aanmeegam
பண்பாளர்


பதிவுகள் : 78
இணைந்தது : 05/06/2021
மதிப்பீடுகள் : 35

https://www.aanmeegam.in/

Back to top Go down

எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)? Empty Re: எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)?

Post by aanmeegam Fri Jun 18, 2021 11:43 am

பூங்காற்று புதிதானது பாடல் வரிகள்

பூங்காற்று புதிதானது.. புதுவாழ்வு சதிராடுது..
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்..
உயிரை இணைத்து விளையாடும்..
பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது..

வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும்..
வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும..!
மரகதக்கிள்ளை மொழிபேசும்..
மரகதக்கிள்ளை மொழிபேசும்..!

பூவானில் பொன்மேகமும் உன்போலே
நாளெல்லாம் விளையாடும்..!

பூங்காற்று புதிதானது.. புதுவாழ்வு சதிராடுது..
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்..
உயிரை இணைத்து விளையாடும்..
பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது..

நதிஎங்கு செல்லும்? கடல்தன்னைத் தேடி..!
நதிஎங்கு செல்லும்? கடல்தன்னைத் தேடி..!
பொன்வண்டோடும் மலர் தேடி..
பொன்வண்டோடும் மலர் தேடி..!

என் வாழ்வில் நீ வந்தது விதியானால்
நீ எந்தன் உயிரன்றோ..!

பூங்காற்று புதிதானது.. புதுவாழ்வு சதிராடுது..
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்..
உயிரை இணைத்து விளையாடும்..
பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது..

படம் : மூன்றாம் பிறை
பாடலாசிரியர் : கண்ணதாசன்
aanmeegam
aanmeegam
பண்பாளர்


பதிவுகள் : 78
இணைந்தது : 05/06/2021
மதிப்பீடுகள் : 35

https://www.aanmeegam.in/

Back to top Go down

எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)? Empty Re: எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)?

Post by aanmeegam Wed Jun 23, 2021 8:37 am

புத்தம் புது காலை பாடல் வரிகள்

புத்தம் புது காலை பொன்னிற வேளை ..
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்..
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்..

புத்தம் புது காலை பொன்னிற வேளை..
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்..
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்..

பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ..?
இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ..?

மனதின் ஆசைகள் மலரின் கோலங்கள்..
குயிலோசையின் பரிபாஷைகள்..
அதிகாலையின் வரவேற்புகள்..

புத்தம் புது காலை பொன்னிற வேளை..

வானில் தோன்றும் கோலம் அதை யார் போட்டதோ..?
பனி வாடை வீசும் காற்றில் சுகம் யார் சேர்த்ததோ..?
வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம்..
வளர்ந்தோடுது இசைபாடுது வலி கூடிடும் சுவைகூடுது..

புத்தம் புது காலை பொன்னிற வேளை..
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்..
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்…

படம் : அலைகள் ஓய்வதில்லை
பாடலாசிரியர் : கங்கை அமரன்
aanmeegam
aanmeegam
பண்பாளர்


பதிவுகள் : 78
இணைந்தது : 05/06/2021
மதிப்பீடுகள் : 35

https://www.aanmeegam.in/

Back to top Go down

எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)? Empty Re: எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)?

Post by ayyasamy ram Wed Jun 23, 2021 8:41 am

எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)? 103459460 எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)? 1571444738
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 69519
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13133

https://rammalar.wordpress.com/

aanmeegam likes this post

Back to top Go down

எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)? Empty Re: எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)?

Post by aanmeegam Thu Jun 24, 2021 6:48 pm

நிலா அது வானத்து மேலே பாடல் வரிகள்

நிலா அது வானத்து மேலே..
பல்லானது ஓடத்து மேலே..
நிலா அது வானத்து மேலே..
பல்லானது ஓடத்து மேலே..
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய்..
அது என்னா ஓய்..
பொழுதானா போதும்..
துணை ஒன்னு வேணும்..
இளங்காள ஆட்டம்..
விடிஞ்சாதான் போகும்..

நிலா அது வானத்து மேலே..
பல்லானது ஓடத்து மேலே..
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய்..
அது என்னா ஓய்..

ஓடுர நரியில ஒரு நரி கிழ நரிதான்..
அஜும் அஜும் அஜும்..
இங்கு ஆடுற நரியில பல நரி குள்ள நரிதான்..
அஜும் அஜும் அஜும்..
ஆஹா ஓடுர நரியில ஒரு நரி கிழ நரிதான்..
அஜும் அஜும் அஜும்..
இங்கு ஆடுற நரியில பல நரி குள்ள நரிதான்..
அஜும் அஜும் அஜும்..
பொண்ணுக்கும் பொண்ணுக்கும் அடிதடிதான்..
மண்ணுக்குப் போகிற உலகத்திலே..
பசிக்குது பசிக்குது தினம்தினம்தான்..
தின்னா பசியது தீர்ந்திடுதா..?
அடி ஆத்தாடி நான் பாட்டாளி உன் கூட்டாளி.. ஹோய்!

நிலா அது வானத்து மேலே..
பல்லானது ஓடத்து மேலே..
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய்..
அது என்னா ஓய்..

துடிக்கிற ஆட்டத்த திரையில பார்த்திருக்கேன்..
அஜும் அஜும் அஜும்..
விசில் அடிக்கிற கூட்டத்தில் தரையில ஆடிருக்கேன்..
அஜும் அஜும் அஜும்..
ஆஹா துடிக்கிற ஆட்டத்த திரையில பார்த்திருக்கேன்..
அஜும் அஜும் அஜும்..
விசில் அடிக்கிற கூட்டத்தில் தரையில ஆடிருக்கேன்..
அஜும் அஜும் அஜும்..
காட்டுல மேட்டுல உழைச்சவன் நான்..
ஆடிட பாடிட வேண்டாமா..?
வறுமையின் கொடுமைய பார்த்தவன் தான்..
உன் உடையில வறுமையும் வேண்டாமா..?
அடி ஆத்தாடி நான் பாட்டாளி உன் கூட்டாளி.. ஹோய்!

நிலா அது வானத்து மேலே..
பல்லானது ஓடத்து மேலே..
நிலா அது வானத்து மேலே..
பல்லானது ஓடத்து மேலே..
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய்..
அது என்னா ஓய்..
பொழுதானா போதும்..
துணை ஒன்னு வேணும்..
இளங்காள ஆட்டம்..
விடிஞ்சாதான் போகும்..

நிலா அது வானத்து மேலே..
பல்லானது ஓடத்து மேலே..
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய்..
அது என்னா ஓய்..
ஒய்யா ஓய் அது என்னா ஓய்..
ஒய்யா ஓய் அது என்னா ஓய்..

படம் : நாயகன்
பாடலாசிரியர் : இளையராஜா
aanmeegam
aanmeegam
பண்பாளர்


பதிவுகள் : 78
இணைந்தது : 05/06/2021
மதிப்பீடுகள் : 35

https://www.aanmeegam.in/

Back to top Go down

எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)? Empty Re: எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)?

Post by aanmeegam Mon Jun 28, 2021 8:41 pm

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் பாடல் வரிகள்

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது

ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இது தான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இது தான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது

பாதை எல்லாம் மாறி வரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை…

படம் : நெஞ்சில் ஓர் ஆலயம்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
aanmeegam
aanmeegam
பண்பாளர்


பதிவுகள் : 78
இணைந்தது : 05/06/2021
மதிப்பீடுகள் : 35

https://www.aanmeegam.in/

Back to top Go down

எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)? Empty Re: எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்குதா)?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை