புதிய பதிவுகள்
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடவுளோடு தூங்கினேன்! Poll_c10கடவுளோடு தூங்கினேன்! Poll_m10கடவுளோடு தூங்கினேன்! Poll_c10 
61 Posts - 41%
ayyasamy ram
கடவுளோடு தூங்கினேன்! Poll_c10கடவுளோடு தூங்கினேன்! Poll_m10கடவுளோடு தூங்கினேன்! Poll_c10 
59 Posts - 40%
T.N.Balasubramanian
கடவுளோடு தூங்கினேன்! Poll_c10கடவுளோடு தூங்கினேன்! Poll_m10கடவுளோடு தூங்கினேன்! Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடவுளோடு தூங்கினேன்! Poll_c10கடவுளோடு தூங்கினேன்! Poll_m10கடவுளோடு தூங்கினேன்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கடவுளோடு தூங்கினேன்! Poll_c10கடவுளோடு தூங்கினேன்! Poll_m10கடவுளோடு தூங்கினேன்! Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
கடவுளோடு தூங்கினேன்! Poll_c10கடவுளோடு தூங்கினேன்! Poll_m10கடவுளோடு தூங்கினேன்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கடவுளோடு தூங்கினேன்! Poll_c10கடவுளோடு தூங்கினேன்! Poll_m10கடவுளோடு தூங்கினேன்! Poll_c10 
2 Posts - 1%
prajai
கடவுளோடு தூங்கினேன்! Poll_c10கடவுளோடு தூங்கினேன்! Poll_m10கடவுளோடு தூங்கினேன்! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
கடவுளோடு தூங்கினேன்! Poll_c10கடவுளோடு தூங்கினேன்! Poll_m10கடவுளோடு தூங்கினேன்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கடவுளோடு தூங்கினேன்! Poll_c10கடவுளோடு தூங்கினேன்! Poll_m10கடவுளோடு தூங்கினேன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளோடு தூங்கினேன்! Poll_c10கடவுளோடு தூங்கினேன்! Poll_m10கடவுளோடு தூங்கினேன்! Poll_c10 
423 Posts - 48%
heezulia
கடவுளோடு தூங்கினேன்! Poll_c10கடவுளோடு தூங்கினேன்! Poll_m10கடவுளோடு தூங்கினேன்! Poll_c10 
296 Posts - 33%
Dr.S.Soundarapandian
கடவுளோடு தூங்கினேன்! Poll_c10கடவுளோடு தூங்கினேன்! Poll_m10கடவுளோடு தூங்கினேன்! Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
கடவுளோடு தூங்கினேன்! Poll_c10கடவுளோடு தூங்கினேன்! Poll_m10கடவுளோடு தூங்கினேன்! Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
கடவுளோடு தூங்கினேன்! Poll_c10கடவுளோடு தூங்கினேன்! Poll_m10கடவுளோடு தூங்கினேன்! Poll_c10 
29 Posts - 3%
prajai
கடவுளோடு தூங்கினேன்! Poll_c10கடவுளோடு தூங்கினேன்! Poll_m10கடவுளோடு தூங்கினேன்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கடவுளோடு தூங்கினேன்! Poll_c10கடவுளோடு தூங்கினேன்! Poll_m10கடவுளோடு தூங்கினேன்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கடவுளோடு தூங்கினேன்! Poll_c10கடவுளோடு தூங்கினேன்! Poll_m10கடவுளோடு தூங்கினேன்! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
கடவுளோடு தூங்கினேன்! Poll_c10கடவுளோடு தூங்கினேன்! Poll_m10கடவுளோடு தூங்கினேன்! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கடவுளோடு தூங்கினேன்! Poll_c10கடவுளோடு தூங்கினேன்! Poll_m10கடவுளோடு தூங்கினேன்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளோடு தூங்கினேன்!


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 26, 2020 6:56 pm

அகத்தைத் தேடி 41: கடவுளோடு தூங்கினேன்!


ஒருமுறை அல்ல நான்குமுறை சமாதியிலிருந்து உயிருடன் வெளிப்பட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடமாடியவர் குழந்தையானந்த சுவாமிகள். தமது முந்தைய சமாதிகளைப் பற்றி சம்பந்தப்பட்டவர்களிடம் தெள்ளத் தெளிவாக விளக்கியிருக்கிறார். அது மட்டுமல்ல சமாதியில் இருந்தபடியே சூட்சும உடலுடன் தம்மைப் பற்றிய நூலுக்கு முன்னுரையும் வழங்கியிருக்கிறார்.

கைபட்டாலே பொடியாக நொறுங்கும் பழைய பிரதி ஒன்றில் குழந்தையானந்த சுவாமிகளின் சரித்திரம் அச்சிடப்பட்டுள்ளது. அதில் காணப்படும் முன்னுரை ‘மத்யஸ்தர் மாதுஸ்ரீ சாரதாம்பாள் அம்மையார் மூலமாக யோகபீடத்தில் அருளியது’ என்ற குறிப்பு உள்ளது. நூல் வெளியான சில ஆண்டுகளுக்கு முன்னரே மதுரையில் சமாதியான குழந்தையானந்தா, தற்போது முன்னுரை வழங்கியிருப்பது ஆன்மிக உலகில் ஆச்சரியமில்லை. இவ்வாறு சரீரத்தைத் துறந்த பிறகும் மத்யஸதர் மூலம் எழுதுவது யோகசித்திகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.


மதுரை ராமசாமி ஐயருக்கும் தென்காசி திரிபுரசுந்தரிக்கும் பிறந்த குழந்தையானந்த சுவாமிகளின் இயற்பெயர் ராஜகோபாலன். செல்வச் செழிப்பான குடும்பம். அதீத தெய்விக நம்பிக்கை. அன்னதானம், ஏழை எளிய மக்களுக்கு வாரிவழங்கும் சுபாவம் கொண்ட தம்பதிக்கு குழந்தை பாக்கியம் இல்லை.

ஆலயத்தில் வளர்ந்த குழந்தை
ஒருநாள் மீனாட்சி அம்மையின் சந்நிதியில் நின்று, எங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தால் போதும், அந்தக் குழந்தையை உன்னிடமே கொண்டுவந்து விட்டுவிடுகிறோம் என்று வேண்டிக்கொண்டனர். அவ்வாறே குழந்தை பிறந்தது. குழந்தையை கோயிலில் கொண்டுவந்து விட்டனர். குழந்தை ஒன்பது வயதுவரை கோயிலில் வளர்ந்தது. ஆலயத்தில் விளையாடியபடி பக்தர்கள் தரும் பிரசாதத்தைச் சாப்பிட்டு, அங்கேயே உறங்கியது. பின்னாளில் குழந்தையானந்த சுவாமி ‘நான் கடவுளோடு தூங்கியவன்' என்று சிரித்துக்கொண்டே கூறுவது வழக்கம்.

சித்தர்கள் மூலம் யோக மந்திரங்கள், பட்சியோகம், நந்தி வித்தை முதலான சித்திகளைச் சிறுவயதிலேயே கற்றான் சிறுவன் ராஜகோபாலன். இச்சிறுவனை வடநாட்டிலிருந்து கணபதி பாபா என்ற மகான் தனது சீடராக ஏற்று சந்நியாசமும் அளித்தார்.

பின்னர் கணபதி பாபாவுடன் காசிக்குச் சென்று அங்கு பல ஆண்டுகள் வாழ்ந்து சமாதி ஆகி பின்னர் அந்தச் சமாதியிலிருந்து வெளிப்பட்டு த்ரைலிங்க சுவாமிகள் என்ற பெயருடன் 150 ஆண்டுகள் வாழ்ந்ததாகத் தெரிகிறது.

குழந்தை ஆனார்
ஆஜானுபாகுவாக இருந்த சுவாமிகளுக்கு குழந்தை ஒன்று மாலைபோட விரும்பியதால் தன் உருவத்தைக் குறுக்கி குழந்தை எளிதில் மாலை போடும்படியாக ஒன்றே முக்கால் அடி உயரம் உள்ளவரானார். அது முதற்கொண்டு குழந்தையானந்த சுவாமிகள் என்று அழைக்கப்படலானார்.

திருவண்ணாமலையில் குழந்தையானந்த சுவாமிகள் இரண்டாவது சமாதி அடைந்தார். பின்னர் அந்தச் சமாதியிலிருந்து குறுகிய குழந்தை வடிவிலேயே வெளிப்பட்டு மக்களிடையே உலவ ஆரம்பித்தார். பின்னர் அங்கிருந்து காஞ்சிபுரம் சென்று அங்கு பல ஆண்டுகள் இருந்தார். மக்களின் நோய் தீர்ப்பதும், ஆன்மிகக் கருத்துக்களை தம்மை அண்டியவருக்கு உபதேசிப்பதுமாக இருந்தார்.

தென்காசியில் தன் பக்தரான கதிர்வேலன் வீட்டில் மூன்றாவது சமாதியை அடைந்தார். பின்னர் அங்கிருந்து மதுரைக்கு வந்து 1932-ம் ஆண்டு நான்காவது சமாதி கொண்டார்.

தொடர்கிறது
நன்றி தமிழ் ஹிந்து



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 26, 2020 6:57 pm

குள்ளமான உருவம், எப்போதும் வாயில் சாளவாய் ஒழுகும். பருத்த தொந்தி. கால்களைப் பரப்பியபடி இருகைகளையும் முன்புறம் ஊன்றிக் கொண்டுதான் உட்காருவார். யாரையாவது பார்க்க விரும்பவில்லை என்றால் குப்புறப் படுத்துக்கொண்டு விடுவார். பேச்சிலும் மழலை இருக்கும்.
கடவுளோடு தூங்கினேன்! 614965
கஞ்சியே உணவு. காப்பி விரும்பிச் சாப்பிடுவார். இப்போதும் அவர் பக்தர்கள் அவர் படத்துக்கு முன்னால் காப்பியை நிவேதனம் செய்து பருகும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

சலவைத் தொழிலாளிக்கு உபதேசம்
சுவாமிகள் சாப்பிட்டானதும் அவர் உத்தரவுப்படி பக்தி சிரத்தையோடு பெரிய ஞானக் குதம்பை அழுகுணிச்சித்தர், குதம்பைச் சித்தர் பாடல்களை சின்னப்பயல் என்கிற சலவைத் தொழிலாளி படிப்பது வழக்கம். கஞ்சி கொடுத்தால் என் பிள்ளைக்கு முதலில் கொடு என்று சலவைத் தொழிலாளி சாப்பிட்ட பின்னரே அவர் சாப்பிடுவார்.

பக்த சிரோன்மணிகள், பண்டிதர்கள், வேதவிற்பன்னர்கள் என்று பலரும் தமக்கும் இந்த வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்குவார்கள்.
சின்னப்பயலுக்கு மஹாவாக்ய உபதேசம் செய்தார் சுவாமிகள். மஹாவாக்ய உபதேசம் என்பது கிடைத்ததற்கு அரிதானது. குருவிடம் பன்னிரண்டு ஆண்டுகள் பயின்று பக்குவம் பெற்றவர்களுக்கு மட்டுமே மகான்களால் உபதேசிக்கப்படுவது.

எப்போதும் மழலைப் பேச்சு பேசும் குழந்தையானந்த சுவாமிகள், அம்மந்திரத்தை அட்சர சுத்தமாக கணீரென்று உச்சரித்து சின்னப்பயலுக்கு உபதேசம் செய்தார். அவருடன் இருந்த செல்லப்பா சுவாமிக்கும், பரசுராம் அய்யருக்கும் வேறு சில ஓம்கார மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்து, இதை வீண்செலவு செய்துவிடாதீர்கள். ஆத்ம சாட்சாத்காரத்தை வளர்த்துக்கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்கினார்.

நாளைக்குச் சொல்கிறேன்
அரிய வகை மூலிகைகளையும் அவை காணப்படும் இடங்களையும் நன்கறிந்தவர் சுவாமிகள். ஒரு முறை சுருளிமலையில் தான் பார்த்த கொடியின் விசித்திர அமைப்பை சுவாமிகளிடம் விவரித்தார் செல்லப்பா என்கிற சித்த வைத்திய சுவாமிகள்.

‘ஓ அதுவா? அதைக் கிள்ளினால் வருகிற பாலை உண்டாயா?’
‘ஐயோ ஒரே கசப்பாக இருந்ததால் துப்பிவிட்டேன்’.
‘அடடா சாப்பிட்டிருந்தால் 200 வயது வாழலாமே’ என்றார் சுவாமிகள் சிரித்தபடி.
அதை எனக்கு மறுபடி காட்ட முடியுமா என்று கேட்டார் சித்த மருத்துவர்.
நாளைக்குச் சொல்கிறேன் என்று நாள்களைக் கடத்திவிட்டு, பிறகு சித்த மருத்துவர் மனதில் அந்த சிந்தனையே இல்லாமல் பண்ணிவிட்டார்.

பத்தாவது ஓட்டை

ஒரு முறை மதுரையில் ஒரு லாட சன்னியாசி, சுவாமிகளைப் பார்த்துக் கேட்டார்.

ஏன் இப்படி சமாதிகளில் மறைந்த பிறகும், மறுபடி தோன்றுகிறீர்கள்?
‘நான் என்னடா? உன்னைப்போல் ஒன்பது ஓட்டைகளில் அடங்கியவனா? பத்தாவது ஓட்டை செய்துகொண்டு தப்பித்து விடுவேன்' என்றார் சுவாமிகள்.
பிறப்பும் இறப்புமாய் தோன்றி மறையும் மானுடப் பெருங் கூட்டத்தில் எங்கே பிறந்து எந்தப் பெயரில் சுவாமிகள் இப்போது உலவுகிறாரோ யார் அறிவார்?



தஞ்சாவூர்க்கவிராயர்
நன்றி தமிழ் ஹிந்து



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sat Dec 26, 2020 7:05 pm

கடவுளோடு தூங்கினேன்! 1571444738 ஐயா. முதல்முறையாகப் படிக்கிறேன்.



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82732
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 26, 2020 8:50 pm

-ஸ்ரீ குழந்தையானந்தர் என்ற பெயரில் மதுரையில் உலாவி
வந்து ஏராளமானோருக்கு அருள் பாலித்த பெரும் மகானின்
வரலாறு மெய்சிலிர்க்க வைக்கும் ஒன்று.

சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையை அடுத்த
சமயநல்லூரிலே அவதரித்த மஹான் ஸ்ரீ குழந்தையானந்தர்.
அங்கு ராமஸ்வாமி ஐயர் – திரிபுரசுந்தரி என்ற அம்பிகையைப்
போற்றி வணங்கும் பக்த குடும்பம் வாழ்ந்து வந்தது.

குழந்தைப் பேறு இல்லாத தன் நிலையை எண்ணி வருந்திய
அந்த தம்பதியினர் குழந்தை வரம் வேண்டி அம்பிகையை
உருக்கமாக வேண்டியதோடு குழந்தை பிறந்தால் அதை
அம்பிகைக்கே அர்ப்பணித்து விடுவதாகப் பிரார்த்தனையும்
செய்து கொண்டனர்.

ஒரு நாள் தம்பதிகள் அம்மனுக்கு அபிஷேகம் செய்ய
, பழம்,புஷ்பம் உள்ளிட்ட தேவையான அனைத்தையும்
நைவேத்திய பிரசாதத்துடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு
எடுத்துச் சென்றனர்.

அபிஷேகத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக ஐயர்
உள்ளே சென்றார். மேலக்கோபுர வாசலில் சர்க்கரைப்
பொங்கல், வடை போன்ற நிவேதனப் பொருள்களுடன்
பின்னால் தொடர்ந்து கொண்டிருந்த திரிபுரசுந்தரியிடம்
இரு பிச்சைக்கார சிறுவர்கள் வந்து,
“ரொம்பப் பசியாய் இருக்குதம்மா” என்று கூறினர்.

“கொஞ்சம் பொறுங்கள். அம்மனுக்கு நைவேத்யம் செய்து
விட்டு தருகிறேன்” என்றார் திரிபுரசுந்தரி.

“அவ்வளவு நேரம் பசி பொறுக்க முடியாதம்மா” என்ற
அவர்களின் உருக்கமான வேண்டுகோளைக் கேட்ட அவர்
நிவேதனப் பொருள்களை வயிறார பிச்சைக்காரச்
சிறுவர்களுக்குக் கொடுத்தார். பசி தீர்ந்த மகிழ்ச்சியில்
அவரை அவர்கள் வாழ்த்தினர்.

நடந்ததைக் கேட்ட ஐயருக்குக் கடுங்கோபம் வந்தது.
நிவேதனப் பொருள்களை அம்மனுக்கு நைவேத்யம்
செய்யாமல்; மனைவி செய்த காரியத்தை அவரால் மன்னிக்க
முடியவில்லை. கோபத்துடன் வீடு திரும்பி விட்டார்.

அம்பாளை மனமுருகப் பிரார்த்தித்த திரிபுரசுந்தரி,
“எப்படியோ, பிரசாதப் பொருள்களை என் வீட்டிற்கே
நீ தான் அனுப்ப வேண்டும்” என்று மீனாட்சியம்மனை
வேண்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.

உள்ளே பயந்து நடுநடுங்கிக் கொண்டு திரிபுரசுந்தரி
தவிக்க கோபம் ஆறாத ஐயர் திண்ணையில்
உட்கார்ந்திருந்தார்.

அப்போது, ஒரு சிறுவன் வந்து அவரிடம்,
” ஐயா, அம்பாள் பிரசாதம் இதோ” என்று புஷ்பம்,
பழம்,சர்க்கரைப் பொங்கல், வடை ஆகியவற்றைத் தந்தான்.

ஒன்றும் புரியாத ஐயர் விழிக்கவே, உள்ளேயிருந்து ஓடி வந்த
அவர் மனைவி, “ஒன்றும் பேசாமல் அதை வாங்கிக்
கொள்ளுங்கள். அந்தப் பையன் எங்கிருந்து வருகிறான்”
என்பதைத் தொடர்ந்து சென்று பாருங்கள்” என்றாள்.

ஒன்றும் புரியாத நிலையில் பையனைத் தொடர்ந்து
சென்ற ஐயர் அந்தப் பையன் பிச்சைக்காரர்களுக்கு
பிரசாதப் பொருள்க்ளைத் தந்த அதே இடத்தில் திடீரென்று
மறைந்து விட்டான்.

எவ்வளவு தேடியும் அவனைக் காண முடியவில்லை.
ஊர் திரும்பி வந்த ஐயர் நடந்ததைச் சொல்ல திரிபுரசுந்தரி
அது அம்பிகையின் திருவிளையாடலே என்று உறுதி படக்
கூறினாள்.

சரியாக பத்து மாதம் கழித்து தம்பதிகளுக்கு இரட்டைக்
குழந்தைகள் பிறந்தன.

ராமன் லட்சுமணன் என்று அவர்களுக்குப் பெயரிடப்பட்டது.
இருவரின் ராமன் மட்டும் தாய்ப்பாலை அருந்தவே இல்லை.

இது எதனால் என்று குழம்பி இருந்த் திரிபுரசுந்தரி
அம்மாளுக்கு கனவில் அம்மன் தோன்றி, ‘பிரார்த்தித்தபடி
குழந்தையைக் கொடு’ என்று கேட்டாள்

இருவரில் எந்தக் குழந்தையைக் கொடுப்பது?
தம்பதிகள் குழந்தைகளுடன் மீனாட்சியம்மன் ஆலயம்
சென்றனர்.

அங்கு பட்டருக்கு அருள் வந்து எந்தக் குழந்தைக்கு காலில்
சங்கும் சக்கரமும் உள்ளதோ எதன் நாவில் நாராயண நாமம்
இருக்கிறதோ அந்தக் குழந்தையை விடு என்று உத்தரவு
பிறந்தது.

அதுவரை கவனிக்காத சங்கு சக்கர அடையாளங்களைக்
குழந்தை ராமனின் காலில் அனைவரும் கண்டனர்.

அங்கு குழந்தை ராமன் அம்மா என்று கூறியவாறே
மீனாட்சியம்ம்னை நோக்கித் தவழ்ந்து சென்றது.

பிரிய மனமின்றி ராமனை கோவிலில் விட்டு விட்டு தம்பதியினர்
வீடு திரும்பினர்.
-
---------------------------எஸ்.நாகராஜன்
நன்றி- தமிழன் வேதா
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 26, 2020 9:25 pm

நன்றி ராம்
அறியாத அரிய தகவல் .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக