புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பாவை - தொடர் - Page 5 Poll_c10திருப்பாவை - தொடர் - Page 5 Poll_m10திருப்பாவை - தொடர் - Page 5 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
திருப்பாவை - தொடர் - Page 5 Poll_c10திருப்பாவை - தொடர் - Page 5 Poll_m10திருப்பாவை - தொடர் - Page 5 Poll_c10 
3 Posts - 8%
heezulia
திருப்பாவை - தொடர் - Page 5 Poll_c10திருப்பாவை - தொடர் - Page 5 Poll_m10திருப்பாவை - தொடர் - Page 5 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
திருப்பாவை - தொடர் - Page 5 Poll_c10திருப்பாவை - தொடர் - Page 5 Poll_m10திருப்பாவை - தொடர் - Page 5 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
திருப்பாவை - தொடர் - Page 5 Poll_c10திருப்பாவை - தொடர் - Page 5 Poll_m10திருப்பாவை - தொடர் - Page 5 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பாவை - தொடர்


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

avatar
Guest
Guest

PostGuest Fri Dec 18, 2020 4:04 pm

First topic message reminder :

திருப்பாவை – 1

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

விளக்கம்:
மார்கழி மாதம் பிறந்து விட்டது முழு நிலவு ஒளிவீசுகிறது. செல்ல வளம் நிறைந்த ஆயர்பாடியில் வசிக்கும் அழகிய மங்கையர்களே! அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! எழுந்திருங்கள். இன்று நாம் அதிகாலையில் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், தாமரை மலரைப் போன்ற சிவந்த கண்களை உடையவனும், சூரிய, சந்திரர்களைப் போல பிரகாசிக்கும் திருமுகத்தையுடையவனும், நாராயணனே கண்ணனாக அவதரித்து நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும் என்று கூறி தோழியரை நோன்பு நோக்க அழைக்கிறாள் ஆண்டாள்.
(Priya Gurunathan)




avatar
Guest
Guest

PostGuest Tue Jan 12, 2021 12:56 am


திருப்பாவை - 28
திருப்பாவை - தொடர் - Page 5 TN_20180111163349391947

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.

பொருள்: குறையே இல்லாத கோவிந்தனே! நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று அவற்றை மேய்த்து, தயிர்ச்சாதம் உண்பவர்கள். எங்களுக்கு அறிவென்பதே இல்லை. ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் எங்களுக்குத் தெரியும். உன்னை தலைவனாக அடைந்ததால் எங்களுக்கு வைகுந்தம் உறுதியென்பதை பிறவிப்பயனாக அடைந்திருக்கிறோம் என்பதே அது. உன்னோடு எங்களுக்குள்ள உறவைப் பிரிக்க யாராலும் முடியாது. விரதம் இருக்கும் முறை பற்றியெல்லாம் அறியாத பிள்ளைகள் நாங்கள்! அதுபோல் கண்ணா! மணிவண்ணா! கருணாகரா! என்றெல்லாம் உன்னிடமுள்ள உரிமையின் காரணமாக ஒருமையில் அழைத்தோம். அதற்காக கோபித்துக் கொள்ளாதே. எங்கள் இறைவனே! எங்கள் நோன்பை ஏற்று அருள் தருவாயாக.

விளக்கம்: குறையொன்றுமில்லாத கோவிந்தா என்ற வார்த்தையைப் படிக்கும் போது, கண்ணனுக்கு ஏதோ குறை இருந்தது போலவும், இப்போது தீர்ந்து விட் டது போலவும் தோற்ற மளிக்கிறது. அவனுக்கு என்ன குறை? ராமாவதாரத்தில், ராமபட்டாபிஷேகம் நடந்த போது, இந்திர லோகத்தில் எட்டு திசை காவலர்கள் பட்டாபிஷேகம் நடத்தியது போல, அயோத்தியில் வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காஷ்யபர், காத்யாயனர், ஸுயஜ் ஞர், கவுதமர், விஜயர் என்ற எட்டு முனிவர்கள் என்று வால்மீகி ஏதோ ஆர்வத்தில் எழுதிவிட் டார். ராமனுக்கு இது ஒரு குறை. இந்திரனை ஜெயித்து இந்திரஜித் என்று பட்டம் பெற்றவனை நாம் நம் தம்பியை வைத்துஜெயித்தோம். அப்படிப் பட்ட கீழான இந்திரனுடன் நம்மை வால்மீகி ஒப்பிட்டு விட்டாரே! அது மட்டுமல்ல, அவன் கவுதமரின் மனைவி அகலிகையுடன் தப்பாக நடந்தவனாயிற்றே! அவனோடு நம்மை ஒப்பிடலாமா? என்ற குறை இருந்ததாம். கிருஷ்ணாவதாரத்தில், அந்த இந்திரன் தனக்கு செய்த பூஜையை ஆயர்கள் நிறுத்தியதால் சீற்றமடைந்து மழை பெய்யச் செய்தான். கோவர்த்தனகிரியை தூக்கி மக்களைக் காத்த கண்ணனின் காலில் அந்த இந்திரன் விழுந்தான். ராமாவதாரத்தில் ஏற்பட்ட குறை கிருஷ்ணாவதாரத்தில் நீங்கிவிட்டதால், ஆயர்குலப் பெண்கள் அவரை இப்படி வர்ணித்தார்கள்.

இன்றைய பாடகர்:- வர்ஷா கிரிஷ்னன்




avatar
Guest
Guest

PostGuest Wed Jan 13, 2021 12:27 am


திருப்பாவை - 29
திருப்பாவை - தொடர் - Page 5 TN_20180112171354148564

சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

இதுவரையிலான பாசுரங்களில் பறை பறை என்று ஒன்றைக் கேட்டு கண்ணனை நோக்கி நோன்பு நோற்பதாகக் கூறிய ஆயர் சிறுமியர், இந்தப் பாசுரத்தில் அதனைத் தவிர்த்து வேறொன்றைக் கேட்கின்றனர். அது, கண்ணனிடம் செய்யும் திருவடிக் கைங்கரியத்தையாம்! உலக மக்களின் பொருட்டு, நோன்பு என்பதையும் அதன் மூலம் பெறும் பறையையும் ஒரு சாக்காக வைத்து, உண்மையில் அவர்கள் வேண்டியது கண்ணனையே! அதனால், அவனுக்கு நித்திய திருவடிக் கைங்கரியம் செய்யும் பேற்றையும், நொடிப்பொழுதும் நீங்காதிருக்கும் பேரருளையும் பிறவா வரம் வேண்டியும் கண்ணனைப் பிரார்த்திக்கிறார்கள் இந்தப் பாசுரத்தில்.
கண்ணபிரானே! முந்தைய பல பாடல்களில் பறை வேண்டும் என்று கேட்ட ஆயர் குலத்துச் சிறுமிகள் இந்த பாடலில் தங்களது வேண்டுகோளை மாற்றிவிட்டதை நாம் உணரலாம்.

பொருள்
உலகத்தவரின் கண்களுக்கு தாங்கள் நோன்பு நோற்பது போன்று தோற்றம் அளித்தாலும், எங்களது உண்மையான நோக்கம், நோன்பு நோற்பதோ, அல்லது அந்த நோன்பிற்காக உன்னிடமிருந்து பறை கொள்வதோ அல்ல என்பதை தெளிவுபடுத்தி, தங்களது உண்மையான வேண்டுகோளை சமர்ப்பிக்கும் பாடல் இது.

காமம் = விருப்பம் கண்ணபிரானுடன் உறவு கொண்டு அவனுக்கு ஆட்பட்டு அவனுக்குப் பணி செய்வதுதான் தங்களது உண்மையான விருப்பம் என்றும் இந்த விருப்பம் இந்த பிறப்பிலும் மற்றும் எடுக்கவிருக்கும் அனைத்து பிறவிகளிலும் தொடர்ந்து ஈடேற வேண்டும் என்பதே ஆயப்படி சிறுமியர்களின் உண்மையான நோக்கம் என்று ஆண்டாள் பிராட்டியார் கூறுகின்றார்.

விளக்கம்
இந்த விடியற்காலை வேலையில், நாங்கள் அனைவரும் கூடி வந்து உன்னை தரிசனம் செய்து வணங்கி, உனது பொன்னான திருவடிகளை போற்றுவதின் நோக்கத்தினை கூறுகின்றோம் நீ கேட்பாயாக. பசுக்கள் மேய்த்து பராமரித்து பசுக்களிடமிருந்து கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வாழ்க்கை நடத்தும் ஆயர் குலத்தில் பிறந்த கண்ணபிரானே, நாங்கள் உனக்குச் செய்யவிருக்கும் அடிமைத் தொழிலை, நீ மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும், இன்று நீ எங்களுக்கு கொடுக்கவிருக்கும் பறையினைப் பெறுவதற்காக நாங்கள் இங்கே வரவில்லை.

கோவிந்தனே, இந்த பிறவியில் மட்டுமன்றி இனி நாங்கள் எடுக்கவிருக்கும் ஏழேழ் பிறவிகளிலும் நாங்கள் உன்னுடன் உறவு கொண்டவர்களாக இருக்க வேண்டும், மேலும் உனக்கே நாங்கள் அடிமையாகத் தொண்டுகள் புரியவேண்டும். இந்த இரண்டு விருப்பங்களைத் தவிர, எங்களது வாழ்க்கையில் வேறு எந்த விருப்பங்களும் இல்லாதவாறு நீ எங்களுக்கு அருள் செய்ய வேண்டும்

இன்றைய பாடகர்:- மகாநதி சோபனா (Dr.சோபனா விக்னேஷ்)



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 13, 2021 6:39 am

திருப்பாவை - தொடர் - Page 5 1-84

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

avatar
Guest
Guest

PostGuest Thu Jan 14, 2021 1:03 am


திருப்பாவை - 30
திருப்பாவை - தொடர் - Page 5 TN_20191217173918470158

வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

பொருள்: கப்பல்கள் உடைய கடலினைக் கடந்து தேவர்கள் அமுதம் பெறுவதற்கு வழிவகுத்த மாதவனை, கேசி என்ற அரக்கனை அழித்த கண்ணபிரானை, சந்திரன் போன்று அழகிய முகத்தினையும் செம்மையான ஆடைகளையும் உடைய ஆயர் குலத்துச் சிறுமிகள் சென்றடைந்து அவனை வேண்டிப் பறை கொண்ட தன்மையை, அழகிய வில்லிபுத்தூரில் பிறந்தவளும், பசுமையும் குளிர்ச்சியும் உடைய தாமரை மலர்களால் புனையப்பட்ட மாலையினை உடையவளும் பெரியாழ்வார் என்று அழைக்கப்படும் பட்டர்பிரானின் மகளுமாகிய ஆண்டாள் அருளிச்செய்த இந்த முப்பது பாடல்களைக் கொண்ட பாசுரத்தை, சங்கத் தமிழ் மாலையை, தப்பாமல் ஓதுவார்கள், பெரிய மலை போன்ற நான்கு தோள்களை உடையவனும், சிவந்த கண்களை உடையவனும், ஒப்பற்ற செல்வதை உடையவனும் ஆகிய திருமாலின் அருளினால் அனைத்து வளங்களையும் பெற்று வாழ்வினில் இன்பங்களை அடைவார்கள்

விளக்கம்: இந்த பாடலில் திருப்பாவை பாசுரத்தை படிப்பதால் விளையும் பலன் கூறப்பட்டுள்ளது. ஆண்டாள் நாச்சியார் தன்னை ஆயர் குலச் சிறுமியாக உருவகித்துக்கொண்டு பாடிய பாடல்கள் என்ற விவரம் இந்த பாடலில் தெரிவிக்கப்படுகின்றது.  

இன்றைய பாடகர்:-வாணி ஜெயராம்



வனிதா சித்தார்த் கர்நாடக இசையில் பாடிய ஆண்டாள் தியான சுலோகத்துடன் திருப்பாவை முடிவடைகிறது.

அன்ன வயல் புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவை பல்படிய இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை,பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.

சூடிக் கொடுத்த சுடற்கொடியே தொல்பாவை
பாடியருளவல்ல பல்வலயாய் நாடினேன்
வெங்கடவற்கு என்னை விதி என்று இம்மாற்றம்
நான்கடவா வண்ணமே நல்கு.






படித்தவர்கள்,கேட்டவர்களுக்கும், இசைத்தமிழை வெவ்வேறு இசைக் கலைஞர்களின் குரலில் கேட்டு மகிழ்ந்தவர்களுக்கும் ஈகரை நன்றி சொல்கிறது.
திருப்பாவை - தொடர் - Page 5 Q-10


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 14, 2021 10:04 pm

Code:

அருமையான தொகுப்பு.
மார்கழி திங்களில் ஆரம்பித்து  ................................சூடி கொடுத்த சுடர்கொடியாள்
முடிய பல வல்லுனர்களின் தேனினும் இனிய
குரலில் திருப்பாவை அமுதமென காதினுள் பாய்ந்தது.
நல்லதோர் முயற்சி.
திருமாலின் அருள் உரித்தாகுக
சக்தி அவர்களுக்கு


@சக்தி18 அன்பு மலர் அன்பு மலர்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக