புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 5 Poll_c10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 5 Poll_m10மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 5 Poll_c10 
59 Posts - 55%
heezulia

31 Posts - 29%
mohamed nizamudeen

5 Posts - 5%
dhilipdsp

4 Posts - 4%
வேல்முருகன் காசி

3 Posts - 3%
Guna.D

1 Post - 1%
T.N.Balasubramanian

D. sivatharan

Abiraj_26

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

54 Posts - 55%

29 Posts - 29%

2 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்...

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 12, 2020 11:57 am

First topic message reminder :

இது என்னுடைய முதல் குறுங்கதை.... படித்து உங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள் உறவுகளே ! புன்னகை...படிப்பவர்கள் குறைந்த பக்ஷம் ஒரு ஸ்மைலியாவது பதிலாக போடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.....புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

காலை இல் எழுந்திருக்கும்பொழுதே எங்கோ மெல்லிய அழுகுரல்களும் பேச்சுக்குரல்களும் கேட்டது. ஆனால் கண்களைத் திறந்ததுமே அந்த சப்தங்கள் மெல்ல மெல்ல அடங்கிவிட்டன. ஆழ்ந்து சுவாசித்தேன், இதுவரை நான் நுகர்ந்து அறியாத சுகந்தம். ஆழ்ந்து மூச்சை இழுத்து, அந்த வாசத்தை நன்கு நுகர்ந்து சுவாசத்தை வெளியே விட்டேன். ஆனாலும் என்னால் அது இன்ன வாசனை என்று சொல்லத்தெரியவில்லை. அதே போல குளிரும் அல்லாத வெயிலும் அல்லாத இதமான ஒருவித தட்பவெட்ப நிலை என்னை சூழ்ந்து  இருந்ததை என்னால் உணரமுடிந்தது.

நான் எங்கேயோ போவது போல இருந்தது. போவது என்று கூட சொல்ல முடியாது, பறப்பது போலிருந்தது. இது கனவு என்றே எண்ணுகிறேன். நானாவது பறப்பதாவது. போன வாரம் என்னவரின் சதாபிஷேகத்தின் போது நடக்கவே நான் சிரமப்பட்டேன். மேடை இல் நாற்காலி தான் போட்டுக்கொண்டு உட்கார்ந்து கொண்டேன். இதோ நேற்று நடந்த என் பேரனின் ஸீமந்ததிற்கும் என்னால் ஓடியாடி வேலை செய்யமுடியவில்லை. உட்கார்ந்த படிக்கு ஆட்களை ஏவிக்கொண்டிருந்தேன். நானாவது பறப்பதாவது. ஆனாலும் அப்படித்தான் தோன்றியது. கண்களை நன்கு திறந்து பார்த்தேன். என்னுடைய இரண்டு பக்கத்திலும் மிக மிக அழகிய பெண்கள், வெள்ளை  வெளேர்  என்கிற மிக அழகிய உடையுடன்,  கருணை வழியும் கண்களுடன் என்னை பார்த்து புன்சிரிப்பு சிரித்தனர். என் கைகளை அவர்கள் ஆதுரத்துடன்  பிடித்துக்கொண்டிருந்தனர்.

ஓ, இவர்கள் பிடித்துக்கொண்டிருப்பதால் தான் என்னால் வலி இல்லாமல் நடக்க முடிகிறதா... இல்லை இல்லை பறக்க முடிகிறதா என்று எண்ணிக் கொண்டேன். இவர்கள் யாராக இருக்கும் ...கேட்கலாமா என்று நினைத்தேன். ஆனால் சுற்றுப்புறத்தில் நான் பார்த்த காட்சிகள் என்னை கேள்விகேட்க விடாமல் என் வாயை அடைத்து விட்டன. ஆம் அத்தனை அழகான கண் கவர் காட்சிகள். எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என மரங்கள். நான் முன்பின் பார்த்திராத பூ மற்றும் காய்கனி வர்க்கங்கள். ஆச்சர்யமான பாதை. ஆனால் வெகு நீளமான பாதை.

பறப்பது என்று சொல்கிறேனே தவிர, அது வான் வெளி இல் பறப்பது போல தோன்றவில்லை. கொஞ்சமும் சிரமம் இல்லாமல் நகர்வது அல்லது ஊர்ந்து செல்வது போல இருந்தது எனக்கு. நன்றாக பராக்கு பார்த்துக்கொண்டே அவர்களுடன் சென்றேன். என் வீட்டு மனிதர்கள் ஏன் என்னுடன் இல்லை என்கிற பிரக்ஞையே எனக்கு அப்பொழுது இல்லை. ஏதோ பிகினிக் செல்லும் குழந்தை யைப் போல குதூகலமான மனத்துடன் சென்றுகொண்டிருந்தேன் அவர்களுடன். முடிவில்லாத பயணமாக அது இருந்தாலும் அதில் எனக்கு சம்மதமே என்று தோன்றியது . அத்தனை அழகான வழி அது.

தொடரும்....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 27, 2020 7:58 pm

அதாவது, நமக்கு யாராவது காரியங்கள், ஸ்ரார்த்தங்கள் செய்து நம் கணக்கில் வரவு வைத்தால் மிகவும் நல்லது. அப்படி இல்லாத பக்ஷத்தில், நாம் முன்பு செய்த தானத்தைப் பற்றி பேசினாலோ அல்லது நம்மை நினைவிலே வைத்துக் கொண்டு, 'ஆஹா என்னமாதிரி மனிதன் , இப்படி ஒருவரை மறுபடி பார்க்க இயலாது. ' என்று சிலாகித்து சொல்லும் பொழுதோ, ‘அந்த அம்மா செஞ்ச உதவியால் தான் நான் இன்றைக்கு இந்த அளவுக்காவது இருக்கிறேன்’ என்று நெகிழ்வுடன் சொல்லும் பொழுதோ அல்லது நாம் நட்ட மரத்தின் கீழே அமர்ந்த வண்ணம், ‘எந்த புண்ணியவான் வெச்சது, இப்போதைக்கு உபயோகமாய் இருக்கு...அவரு நல்லா இருக்கணும்’ என்று சொல்லும்பொழுதோ அல்லது வெட்டிய குளம், கட்டிய கோயில் என்று நாம் செய்த ஏதாவது ஒரு நன்மையை பற்றி பேசும்பொழுதோ கூட நமக்கு இங்கே புண்ணியக்கணக்கில் என்ட்ரி விழும் என்று வைத்தார். அதேபோலத்தான் திட்டினாலும் நம் பாவக கணக்கில் வரும். அதனால் நாம் வாழும் காலத்தில் நம்மால் முடிந்த நன்மைகள், சின்ன சின்ன தாக செய்தால் கூட நம் கணக்கில் அவை வரவு வைக்கப் படும்.

அதனால் தான் கடவுள் தொடுத்த மனிதப்பிறவியை உபயோகித்து, ஒருவன் பாவங்களைப் போக்கி, புண்ணியத்தை தேடிக் கொள்ள முடியும் என்று சொல்கிறார்கள்.

மனிதனாகப் பிறந்தவர்களுக்கு, பாவத்தைப் போக்கிக் கொள்ளவும், புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளவும் பல வழிகள் உள்ளன. தீர்த்த யாத்திரை, ஷேத்ர தரிசனம் போன்றவைகளால் பாவங்கள் விலகும் என்பர். அவ்வப்போது, வசதிக்கு ஏற்ப, சிறு, சிறு தான தர்மங்களைச் செய்து கொண்டே வந்தால், வாழ்நாளில், செய்த புண்ணியம் குவியலாகி விடும்.

ஒருவன், ஏதோ ஒரு இடத்தில், ஒரு கிரவுண்டு வாங்கிப் போடுகிறான். நாலைந்து வருஷம் கழித்து, வீடு கட்டலாம் என்று அங்கே போய் பார்க்கிறான். இவனுடைய கிரவுண்டில், ஆள் உயரத்துக்கு ஒரு புற்று உண்டாகியிருக்கிறது. இது எப்படி ஏற்பட்டது? கரையான், ஒவ்வொரு மணலாக, கொஞ்சம் கொஞ்சமாக, இந்தப் புற்றைக் கட்டி விட்டது.

இப்போது, இதை இடிக்க வேண்டுமானால், நாலு ஆள், கடப்பாரை எல்லாம் வேண்டும். இடித்த மண்ணை அப்புறப்படுத்த ஒரு லாரியே வேண்டியிருக்கும். எத்தனைக் குட்டிக் கரையான் சுலபமாக இவ்வளவு பெரிய புற்றை கட்டி விட்டது ஆச்சரியமாக இல்லையா?

இதே போலத் தான் மனிதனும், வாழ்நாளில் பிரதி பலன் எதிர் பாராது, சிறுசிறு தர்மங்களைச் செய்து கொண்டே வந்தால், அதுவே ஒரு பெரிய புண்ணிய மூட்டையாகி விடும். இந்த புண்ணிய மூட்டை தான் பரலோகத்திலும் சரி... அடுத்த பிறவியிலும் சரி, இவனுக்கு உதவும்.

மீனைத் தின்னத்தராதே, மீன் பிடிக்க கற்றுக்கொடு, எழுத்தறிவித்தவன் இறைவனாவான் என்பது போன்ற பழ மொழிகளை உண்மையாக்கினார். ஆமாம் அதெல்லாம் இங்கே வரவு வைக்கப்பட்டு இங்குள்ளவர்களுக்கு உதவுகிறது.
நாம் வேறு பிறப்பெடுத்து பூலோகத்துக்கு சென்றால், அங்கே நம் கர்மா தொலைய செல்கிறோமே தவிர வேறு பலப் பல புதிய பாவங்களையும் சேர்த்துக் கொள்கிறோம். என்று நம் பாவக்கணக்கும் புண்ணியக் கணக்கும் NIL என்று வருகிறதோ அன்று தான் நமக்கு வைகுந்தம் கிடைக்கும். ஆனால் அது வரை பல முறை பிறந்து பிறந்து புண்ணியம் சேர்க்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக கொஞ்சமாவது பாவம் சேர்க்கிறோம். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியாவிட்டாலும் கமா போட்டார் அவர்.

ஆமாம், இங்கே நீங்கள் உங்கள் புண்ணியக் கணக்கை மட்டும் அதிகரித்துக் கொள்ள முடியும். பழைய பாவக்கணக்கு அப்படியே இருக்கும் என்றாலும்
புதிதாக எதுவும் அதில் சேராமல் ஆனால் புண்ணியம் மட்டும் சேர்த்துக்கொண்டு, உங்களுக்கு விருப்பமான பிறவி எடுக்கலாம். என்று கொண்டுவந்தார்.

தொடரும்.....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 27, 2020 7:58 pm

அதன் மூலம் தான் நானெல்லாம் இங்கேயே பிறப்பெடுத்தேன். இரண்டே வருடங்களில் இந்த நிலைக்கு உயர்ந்தேன் என்றாள் .  இந்த நிலை என்றால் என்று கேட்டேன். அது தான் உங்களை போல VIP க்களுக்கான தேவதை நான் என்றாள். எனக்குத் தூக்கி வாரி போட்டது.

என்ன சொல்கிறாய் மீரா, நானாவது VIP யாவது... என்று சிரித்தேன்.
‘என்ன உங்களுக்குத்தெரியாதா.. மன்னிக்கணும்...  உங்களுக்குத்தெரிய வாய்ப்பு இல்லை தான். யாரும் சொல்லாமல் எப்படித்தெரியும். என்றாலும் நீங்கள் சிலவற்றை கவனித்திருக்கலாம் என்றாள் . அதாவது, அந்த ஹாலில் இருந்து வெளியே போனவர்கள் யாரும் மீண்டும் வரவில்லை. நீங்கள் மட்டுமே மீண்டும் வந்து அமர்ந்தீர்கள்’ என்று பார்த்தது போல சொன்னாள் . நானும் ‘ஆமாம்’ என்றேன். ‘அதே போல அங்கிருந்து வெளியேறியதும் வாசல் வழியாகத்தானே’  என்றாள் . ‘ஆமாம்’ என்றேன்.

‘ம்ம்.. இதெல்லாம் எல்லோருக்கும் நடக்காது’ என்றாள் புன்னகையுடன். மேலும் என்னை போல இந்த நீல நிற உடை அணிந்து வரும் எல்லோருமே VIP கானவர்கள். அதிலும் நான் அவர்களின் தலைவி அதனால் தான் இது என்று தன்  தலை இல் இருந்த கிரீடத்தைக் காட்டினாள் .

இந்த VIP க்கு என்ன அர்த்தம் மீரா, சீக்கிரம்  சொல் . நாம் எப்போ எப்படி என் மாமாவைப் பார்க்கலாம் என்று நீ இன்னும் சொல்லவில்லை என்றேன். அதற்கு அவள் , 'இந்த VIP க்கான காரணத்துக்காகத்தான் நான் காத்திருக்கிறேன். உங்களுக்கு இந்த உயர்வைத்தந்தவர் இங்கு வருவார் அவரை நாம் சந்தித்தபின் தான் வெளியே போக முடியும். அது தான் நான் இந்த விவரங்களை சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
பாவ புண்ணிய கணக்கை பார்க்க உங்களுக்கு இப்பொழுது அவசரம் இல்லை என்று சொல்கிறீர்களே அதை பார்த்தலாவது நேரம் போவது உங்களுக்குத் தெரியாது என்று சொன்னாள் .

'இல்லை மீரா, உன்னுடன் பேசிக்கொண்டிருக்கிறேனே தவிர மனம் எல்லாம் இங்கு இல்லை மா' என்றேன். அவளுக்கும் என் நிலமை புரிந்தது என்றாலும் அவளாலும் ஏதும்  செய்ய முடியாத நிலைமை. எங்கள் இக்கட்டைப் போக்குவது போல அவளின் வாட்ச் லிருந்து ஒரு வினோத ஒலி வந்தது. அதைக் கேட்டதும் துள்ளி  எழுந்தாள் மீரா.

'என்ன ஆச்சு மீரா' என்றேன். தலைவரிடமிருந்து எனக்கு அழைப்பு, அதுவும் நாம் வேறு ஒருவருக்காக காத்திருக்கும் பொழுது. என்றாலும் நான் இதற்குத்தான் அடிபணிய வேண்டும் ... நான் சென்று வருகிறேன் மிகவும் அவசரம் என்றாள் . அவள் சொன்னது எனக்கு கெஞ்சுவது போல் இருந்தது. அடடா என்ன மீரா இது, முதலில் சென்று வா, நான் எப்படியும் இங்கே தானே இருக்க வேண்டும் இருக்கிறேன் என்றேன். நீங்கள் தனியாக உங்கள் கணக்கையும் பார்க்க முடியாது என்றாள் இட் ஐஸ் ஓகே...  கடவுளை பிரார்த்தித்தபடி நான் காத்திருக்கிறேன்; நீ பதட்டம் இல்லாமல் போய் வா' என்றேன். வாசல் வரை போனவள் அதிர்ச்சியுடன் திரும்பி என்னைத் திரும்பிப் பார்த்தாள் .....

என்ன மீரா என்றேன். உடனே அவள் நீங்கள் யார் , இங்கு எப்படி வந்தீர்கள் என்றாள் .

தொடரும்....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
lakshmi palani
lakshmi palani
பண்பாளர்

பதிவுகள் : 90
இணைந்தது : 21/10/2018

Postlakshmi palani Mon Sep 28, 2020 1:40 pm

சூப்பருங்க krishnamma

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 28, 2020 9:23 pm

lakshmi palani wrote: சூப்பருங்க krishnamma
மேற்கோள் செய்த பதிவு: 1332229

நன்றி லக்ஷ்மி, உங்களின் தனிமடல் பாருங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 28, 2020 9:24 pm

இது என்னடா வம்பாக போச்சு என்று மீரா என்ன கேட்கிறாய், என் உயிர் பிரிந்து நான் இங்கு வந்துள்ளேன் மற்றபடி எனக்கு என்ன தெரியும் என்ன கேட்கிறாய் நீ எனக்குப் புரியவில்லை என்றேன்.

இல்லை, இந்தக் கதவு திறக்கவில்லை, அப்படி என்றால் நான் என்னுடன் உங்களையும் அழைத்துக் கொண்டு தான் போகவேண்டும் அப்படியானால்....உங்களை இங்கு அழைத்துக் கொண்டுவந்த VIP யார்.... எதற்கு அவர் வராமல் நம்மை அங்கு வரச்சொல்லுகிறார்கள், அவர் அத்தனை பெரிய போஸ்ட் இல் இருக்கிறாரா என்றெல்லாம் பல கேள்விகள் என்னுள் எழுகின்றன . இல்லை நான் உங்களை பார்த்துக் கொள்வதில் குறை ஏதும் வைத்துவிட்டேனா, என் மீது ஏதும் குறையா ஒன்றும் புரியவில்லை என்று தவித்தாள் .சரி உங்களை இங்கு அழைத்து வந்த தேவதைகள் எப்படி இருந்தார்கள் என்று கேட்டாள் . நானும், அவர்களா, மிக மிக அழகாக வெள்ளை வெளேர் என்று உடை உடுத்திக் கொண்டு இருந்தார்கள் என்று சொன்னது தான் தாமதம். அவள் அப்படியே தரை இல் அமர்ந்து விட்டாள் .

நீங்கள் மிக மிகப் பெரிய VIP எங்கோ ஏதோ தவறு நடந்திருக்கிறது அது தான் இந்த அழைப்பு தலைவரிடமிருந்து.எதானாலும் என்னை மன்னியுங்கள் அம்மா, என்று சொல்லிக்கொண்டே என் கைகளை பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள் ... ஆஹா இப்பொழுது என்னால் என் காலுக்கு கீழே இருந்த ரத்தினக் கம்பளம் மிக மிக மெத் மெத் என்று இருந்ததை உணர முடிந்தது. சந்தோஷமாக நடந்தேன், என்றாலும் நடந்து கொண்டே,எது அந்த மாயக்கதவு என்று பார்த்துக் கொண்டே போனேன். மீரா தன் வசத்தில் இல்லை என்பது அவள் நடையிலேயே தெரிந்தது. ஆனாலும் அவள் சொன்னாள் , நாம் அவரைப் பாக்க போகும்பொழுது அங்கு போக எப்படிப் போகவேண்டுமோ அந்தக் கதவுகள் மட்டுமே திறக்கும் நாம் வேறு எங்கும் போக முடியாது என்று சொன்னாள் .

ம்ம் ..மீரா, நீ சொல்வது போல அப்படி எனக்காக வெள்ளை தேவதைகளை அனுப்புவது தன் பவரை தவறாக உபயோகப்படுத்துவது போல் ஆகாதா என்று கேட்டேன். அதற்கு அவள் இது பூலோகம் என்று நினைத்தீர்களா, இங்கு கரப்ஷன் கிடையாது. இப்பொழுது நீங்கள் அமெரிக்காவில் இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் அம்மா வருகிறார் தனியாக, உங்களால் அவரை வரவேற்க போக முடியவில்லை என்றால், அதாவது நீங்கள் போகவேண்டும் என்றால் 1008 செக்யூரிட்டி வேண்டும் என்று இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம் அந்த மாதிரி சமயத்தில் நீங்கள் உங்களுக்கு நெருங்கின நண்பரிடம், ஏய் நீ போய் கொஞ்சம் என் அம்மாவைக் கூப்பிட்டுக் கொண்டு வருகிறாயா என்று கேட்டு அனுப்பினால் அது பவர் miss use ஆ என்று எதிர் கேள்வி கேட்டாள் ... ம்ம்.. சரிதான் நீ சொல்வது என்று சொன்னேன் நான். ஸோ , அது போல யாருடைய அன்பினாலோ நான் அத்தனை சுகமாக அழைத்து வரப்பட்டேன், இத்தனை மரியாதையும் எனக்கு கிடைத்துள்ளது என்று நினைத்தேன் இதற்கு காரணமானவர் யார் என்று கேள்வி எழுந்ததுமே பதிலும் எனக்குத்தெரிந்து விட்டது....

தொடரும்....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 28, 2020 9:25 pm

என்னுடைய இருதயத் துடிப்பு எனக்கே தெரிந்தது. அவனைப்பார்க்கும் ஆவல் மிகுந்தது. எனக்கு கண்டிப்பாக தெரிந்துவிட்டது அது என் மாமா தான் என்று. ஆனாலும் நான் மீராவிடம் எதுவும் சொல்லவில்லை. ஏனென்றால் அவள் ஏற்கனவே பட படப்பாக இருந்தாள் .

நாங்கள் ஒரு மிகப்பெரிய மண்டபம் போல் இருந்த இடத்திற்கு வந்தோம். அங்கு IT ஆபீஸ் போல நிறைய க்யூபிகல்கள் இருந்தன. நிறைய பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். நாங்கள் அங்கு சென்றதும் வேறு ஒரு தேவதை எங்களை வரவேற்றாள். அவளுடன் உள்ளே சென்றோம். மீரா மிகவும் பதட்டமாகி என்னைப் பார்த்தாள். என்ன என்றேன், நான் இங்கெல்லாம் வந்ததில்லை. யாருமே அவரை அது தான் CEO வை அவரது அலுவலகத்தில் பார்க்க அனுமதி இல்லை என்றாள். அது எனக்கு நன்றாக புரிந்தது. ஏன் என்றால் அங்கிருந்த எல்லோரும் எங்களைக் கொஞ்சம் ஆச்சர்யமாய் பார்த்தனர். நாங்கள் CEO என்று போட்டிருந்த அறைக்குள் நுழைந்தோம்.

நுழைந்ததும் நான் கண்ட காட்சி .... வாவ்..... ஓடிப்போய் கட்டிக்கொண்டேன் .... மிகவும் சத்தமாக சிரித்தேன்.... அழுதேன்.... அவன் கால்களைத்தொட்டு வணங்கினேன்........அன்றைக்கு பார்த்தது போலவே இன்றும் இருந்தான் என் அருமை மாமன்.......ஆனால் தான் தான் 75 வயது கிழவி.... என்றாலும் எங்கள் மனம் என்னவோ பழயபடிக்குத்தான் இருந்தது..... அவனும் சிரித்தபடி என்னை எதுவும் சொல்லாமல் அமைதியாக, நான் தன் நிலைக்கு வரக் காத்திருந்தான் அது தான் அவன்....'இனி நான் செத்தாலும் பரவாயில்லைடா' என்றேன்..........அவன் இப்பொழுது தான் சிரித்தான்.... 'செத்துத்தாண்டி நீ இங்கே வந்திருக்கிறாய்' என்றான்....' அப்பா, உன்னை பார்க்க எத்தனை ஆவலாக இருந்தேன் தெரியுமா' என்றான்.

மீரா வின் கதி என்ன என்று கூட நான் பார்க்கவில்லை. இவன் முகத்தையே பார்த்திருந்தேன். கிருஷ்ணருக்கு அருகில் நிற்குமே கன்றுக்குட்டி அது போல.....

சினிமா போல இருந்தால், பின்னணி இசை மிக அருமையாக அமைத்து பார்வையாளர்களைக் கவர்ந்து இருப்பார்கள். மேலும் இந்த இடத்தில் இண்டெர்வெல் விட்டிருப்பார்கள் என்று எனக்குத் தோன்றியது.

நான் அவனுடன் அமர்ந்து வாய் வலிக்க பழைய கதைகளில் பேசினேன். பலப்பல கேள்விகள் கேட்டேன். ‘இத்தனை வயசாகியும் இன்னும் நீ மாறவே இல்லை, அதே பட பட பேச்சு..ஒரே மூச்சில் எல்லாவற்றையும் அறிந்து கொள்ள ஆசை...ம்ம்... இரு ஒவ்வொன்றாக சொல்கிறேன்’ என்றான்.
முதலில், எனக்கு அவன் எப்படி இங்கே என்று மிக ஆச்சர்யமாக இருந்தது. அவன் நிச்சயம் முத்தாத்மாக்களுடன் வைகுந்தத்தில் இருப்பான் என்று தான் நான், நான் என்ன என் குடும்பமே நம்பிக்கொண்டிருந்தது. அதை நான் அவனிடமே கேட்டேன். அவன் புன்னகைத்தவாறே பதில் சொன்னான்.

'ம்ம்...இல்லைடி...நான் இறந்ததும், பழைய வழக்கப்படி பாவ புணியங்களைப் பார்த்து , எனக்கு புண்ணியக் கணக்கு நிறைய இருந்ததால் என்னை பிரும்மலோகத்துக்கு அனுப்பினார்கள். நான் அங்கு அவருக்கு சேவை செய்தேன். என்சேவை இல் அவரும் மிக மகிழ்ந்தார். நான் வைகுந்தம் செல்ல ஆசைப்பட்டேன். அதற்கு பாவ புண்ணியங்கள் சமம் ஆகவேண்டும் என்று சொன்னார். சரி, நம் புண்ணியக் கணக்கு ஆகும் மட்டும் இங்கேயே இருக்கவேண்டியது தான் என்று எண்ணி இருந்தேன். ஆனால் அதற்குள் இந்த ப்ராஜெக்ட் அதாவது இந்த அமைப்பை ஏற்பாடு செய்தார்கள். எனக்கு அடுத்த பிறவி எடுக்க விருப்பம் இல்லை. அதனால் இதை என் கை இல் ஒப்படைத்தார்கள். நானும் இதை செவ்வனே செய்து வருகிறேன்" என்றான்.
என்னுடடைய மற்றும் அவனுடைய பெற்றோர் அது தான் என் தாத்தா பாட்டி எல்லோருமே 2004 க்கு முன் திருநாடு அலங்கரிக்க போய்விட்டார்கள். எனவே, என்னை அழைத்துக் கொண்டு வந்தது போல் இவனால் அவர்களை வரவழைக்க முடியவில்லை என்று எண்ணினேன்.

அவர்களையெல்லாம் நீ பார்த்தாயா பேசினாயா, எங்கே இருக்கிறார்கள் ?...பாட்டி ஸுமங்கலியாக போய் சேர்ந்தார். தாத்தா எப்பவும் சொல்வார் ஏதோ எப்பொழுதோ ஜோசியம் பார்த்தாராம், அதில் 3 ஜென்மங்களாக இவர்களே தொடர்ந்து கணவன் மனைவியாக இருக்கிறார்களாம். இது தான் 3 வது என்றும், இத்துடன் தங்களின் ஜென்மம் நீடிக்காது என்றும் அதிலும் பாட்டி ஸுமங்கலியாக முதலில் போய் சேருவார் என்றும் சொல்லி இருக்கிறார். அதே போலத்தான் நடந்தது. தாத்தா, தான் போவதற்கு ஒரு வாரம் முன்பே, 'என்னை என் ஆச்சார்யன் கூப்பிடுகிறார்' என்று சொன்னார். அதனால் தான் கேட்டேன் உன்னால் அவர்களைப் பார்க்க முடிந்ததா என்று.

'ம்ம்.. எனக்கு அவர்கள் வந்ததே வெகு காலம் கழித்துத் தான் தெரியும். உங்க அப்பா அம்மா வந்ததும் எனக்குத்தெரியாது' என்றான். எனக்கு மிக ஆச்சரியமாகிப் போனது. என்ன தெரியாதா என்று கேட்டேன்.
'ஆமாம். தெரியாது ‘இங்கே Face Book, Whatsapp எல்லாம் இருக்கு என்று நினைத்தாயா என்ன, ஸ்டேட்டஸ் பார்க்க’ என்றான்.
மேலும் எங்களுக்கு உங்களை பார்ப்பதைத்தவிர வேறு வேலை இல்லையா என்ன? என்று எதிர் கேள்வி கேட்டான். நாங்கள் இங்கு வந்ததுமே பாவம் புண்ணியம் கணக்கு பார்த்து, அதற்கு ஏற்றாற் போல் அடுத்த பிறவி அல்லது நடுவில் ஏதாவது லோகத்துக்கு அனுப்பப் படுவோம். அங்கு போய் எங்களின் பலா பலனை அனுபவித்துவிட்டு வருவதற்குள் இங்கு யார் வந்தார்கள் என்று எப்படித்தெரியும் ?' மேலும், ஒருவேளை இங்கு வரும் ஆத்மா, உடனடியாக வேறு ஒரு பிறவி எடுக்கிறது என்று கொண்டால், அது திரும்ப வரும் பொழுது, அதற்கு எந்தப்பிறவிக்கான உறவுகளின் லிஸ்ட் ஐ வைத்துக் கொண்டு யார் யார் இங்கு வந்துள்ளார்கள், அவர்களை எப்படிப் போய் பார்ப்பது என்றா எண்ணிக்கொண்டிருக்கும்...சொல்லு...என்றான்.

தொடரும்....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 28, 2020 9:26 pm

அப்போ நம்மை விட்டுப் பிரிந்த உறவுகள் பித்ருக்கள் நம் நினைவாகவே இருக்க மாட்டார்களா என்றேன். ஹேய் , கம் ஆன் ...அதுதானே இப்பொழுது சொன்னேன். மாட்டார்கள். அவரவர்களுக்கு அவரவரின் அடுத்த அடுத்த பிறவிகள் குறித்த வேலைகள் இருக்கும். பாவம் அதிகம் இருந்தால் நரகத்தின்  தொல்லை இருக்கும். இதில் இந்தப் பிறவி எந்தப்  உறவுகள் எப்படி இருக்கிறார்கள், அவர்களுக்கு என்ன வேண்டும் என்று பார்த்து பார்த்து செய்வார்களா என்ன? என்றான்.

நான் சில மணித்துளிகள் அமைதியாய் இருந்து அவன் பேசியதை உள்வாங்கி கொண்டேன். பிறகு, 'அப்போ பித்ருக்கள் நமக்கு அனுகிரஹம்  செய்வார்கள் நாம் அவர்களுக்கான திதிவகைகளை சரிவர செய்யாவிட்டால் தோஷம் ஏற்படும், சபிப்பார்கள் என்றெல்லாம்  கேள்விப்பட்டேனே, அதெல்லாம்?' என்றேன்

'ம்ம்.. அதெல்லாம்.... அதெல்லாம் உண்மைதான்' என்றான். 'என்னடா இது முன்னுக்குப் பின் முரணாக' என்று நான் சொல்லும் முன் ….

'நாம் நம் கர்மாக்களை சரிவர செய்யாவிட்டால் நமக்கு தோஷம் வரும் என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் சபிப்பார்கள் என்பது உண்மை இல்லை, எந்த அம்மா அப்பா தன் குழந்தையை சபிப்பார்கள். நம் கடமையை சரிவர செய்யாவிட்டால் வருந்துவார்கள், அதுவே நம்மை படுத்தும். அப்பா அம்மா மனது கஷ்டப்பட்டால், நாம் நன்றாக இருக்க முடியாது என்று நாம் சொல்வதில்லையா, அது  போலத்தான் இதுவும். மேலும், நீ சொல்வது போல நீ சரிவர செய்யாவிட்டால் அவர்கள் சபித்துவிடுவார்கள் அல்லது நீ தருவது மட்டுமே அவர்களுக்கு உணவு என்று இருந்தால், மூன்று தலை முறைக்கு அப்புறம் என்ன ஆகும் அவர்கள் கதி...யோசி...அதனால், பெரியவர்கள் நம்மை வழிப்படுத்த கொஞ்சம் மிகையாக சொல்வார்கள்.

அப்படி சொன்னாலாவது நாம் நம் கடமைகளை சரிவர நிறைவேற்றுவோம் , இங்கு பரலோகம் வரும்பொழுது நம் புண்ணியக் கணக்கில் தேவையான 'பற்று' இருக்கும். நாம் சௌகர்யமாக வேறு பிறவியை எடுத்துக் கொள்ளலாம். அதற்காகத் தான் நம் அப்பா அம்மா நம்முடன் பூமில் வாழும்காலத்தில் மட்டுமல்லாது இறந்த பிறகும் கஷ்டப்படாமல் இருக்க இத்தனை யோசனையுடன் நம்மை நம் கடமைகளை சரிவர செய்ய நயத்தாலும்  பயத்தாலும் தூண்டுகிறார்கள். அவர்கள் எங்காவது சபிப்பார்களா...நிச்சயமாக இல்லை. அப்படி சொன்னாலாவது நாம் நம் கடமைகளை சரிவர செய்துவிட  மாட்டோமா என்கிற  ஆதங்கம் தான், நப்பாசைதான்.

எதற்கு கருட புராணத்தை அந்த பத்து நாட்களில் படிக்க சொல்கிறார்கள்... அந்த கர்த்தா தான் செய்யவேண்டிய  காரியங்களை சரிவர செய்யாவிட்டால், பாவத்திற்கு ஆளாவான் . போன அந்த ஜீவன் எத்தனை துன்பப்படும் என்று படிக்கும்பொழுது, அவன் மனது எந்த அளவிற்கு பாடுபடும். ஐயோ நம் அம்மா / அப்பா இப்படி அலயக்  கூடாது...

அதற்கு நான் என்னென்னெ செய்ய வேண்டும் சொல்லுங்கள். செய்து விடுகிறேன். என்று மிகவும் பதட்டத்துடன் செய்வான். இதனால் அவனுடைய கர்மாக்களை சரிவர செய்தவனாகிறான். அவனுக்கு பாவக்கணக்கு ஏறாது. அவ்வளவுதான் புரிந்ததா? அந்த கால கட்டங்களில் நாம் செய்யும் தான தருமங்கள் மட்டுமே நம் புண்ணியக் கணக்கில் சேரும். கடமையைச் செய்ய புண்ணியம் சேராது. பாவம் சேராமல் பாதுகாக்கலாம் அவ்வளவுதான்.

‘சரி அப்பொழுது நமக்கும் அதாவது பூலோக வாசிகளுக்கு பித்ரு க்களுக்கும்  தொடர்பே இல்லையா / கிடையாதா ? அவர்களை ஆராதித்தால் நமக்கு நன்மைகள் செய்ய மாட்டார்களா சொல்லு’ என்றேன். 'ஏன்  செய்ய மாட்டார்கள், தாராளமாக செய்வார்கள். அதற்கு நீ தான் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டும். அப்பா/ அம்மா/மாமா என்று கூப்பிட்டு எனக்கு இது கைக்கு மீறின விஷயமாய் படுகிறது நீங்கள் தான் எப்படியாவது இதை நல்லபடி நடத்தித்தர வேண்டும் என்று  வேண்டிக்கொள்ளும்பொழுது அவர்களின் காதுகளில் இவை விழும். வந்து முடிந்ததை செய்து தருவார்கள்.

அது தான்  நம் சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள். ஒருகல்யாணம் என்றால் சுமங்கலி பிரார்த்தனை, நாந்தி, பெருமாள் சமாராதனை என்று செய்கிறோம்.  இது அவர்களின் ஆசிகளை பெற்றுத்தரும். மேலும் நமக்கு ஏதேனும் கண்ணுக்குத்தெரியாத தடங்கல்கள் இருந்தாலும்  அவர்கள் அவற்றை  நீக்கி நல்லபடியாக நம் காரியங்கள் நடக்க அனுகிரகம் செய்வார்கள்.

மீண்டும் சொல்கிறேன் கடமையைச் செய்ய புண்ணியம் சேராது. பாவம் சேராமல் பாதுகாக்கலாம் அவ்வளவுதான். அந்த கால கட்டங்களில் நாம் செய்யும் தான தருமங்கள் மட்டுமே நம் புண்ணியக் கணக்கில் சேரும். அதைத்தான் கர்மா, விகர்மா  மற்றும் அகர்மா என்று சொல்வார்கள்.

அவரவர்களின் திதிகளில் ஸ்ரார்த்தம் செய்கிறோம். காசி கயா சென்று ஸ்ரார்த்தம் செய்கிறோம். இதெல்லாமே நமக்கு விதித்துள்ள கடமைகள். அதையெல்லாம் நாம்  செவ்வனே செய்தாலே போதும் .நான் இதெல்லாம் செய்தால் தான் எங்க அம்மா அப்பாக்கு சாப்பாடு என்கிற ஆணவம் கொள்ளக் கூடாது. அவர்கள்  கணக்கை பார்த்துக் கொள்ள அவர்களுக்குத் தெரியும். நீ தருவது உபயோகமாக இருக்குமே தவிர அது மட்டுமே அவர்களுக்கான வரவு இல்லை என்று புரிந்து கொள்ள வேண்டும்.  இதன்  மூலம் அவர்களுக்கு என்ன நன்மை  ஏற்படும் என்று நாம் கவலை கொள்ள வேண்டாம், நமக்கு பாவம் ஏற்படாமல் தடுக்கும். அதற்காக செய்யவேண்டும்.

இது சுயநலமாகாதா என்று நீ கேட்கலாம். ஓரளவு ஆமாம், என்றாலும் தான தருமம் எப்படி சுயநலமாகும். ‘எனக்கு புண்ணியம் வேண்டும் என்று தான தருமம் செய்தால் அதற்கு 'மாற்று' கொஞ்சம் கம்மிதான் என்றாலும், உனக்கு புண்ணியம் சேரும். அப்படி பிரதி பலனே எதிர்பார்க்காமல் தான தருமங்கள் செய்தால் அதன் பலனே வேறு. ‘ என்று புன்னகையுடன் சொன்னான்.

"இங்குள்ளவர்களுக்கு தங்களின் பாவ புண்ணிய கணக்கு தெரியும். அது பூஜ்ஜியமானால் தான் அவர்கள் வைகுந்தத்தை அடையமுடியும் என்றும் தெரியும். இங்கு அவர்கள் உல்லாசமாய் இருப்பது போலத்தோன்றினாலும், தங்கள் கணக்கில் கண்ணாக இருப்பார்கள். தேவையான பொழுது, தேவையான பிறவியை எடுத்து இரண்டையும் சமன் செய்துவிட்டு, மேலே போய்விடுவார்கள்" என்றான்.

தொடரும்.....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
lakshmi palani
lakshmi palani
பண்பாளர்

பதிவுகள் : 90
இணைந்தது : 21/10/2018

Postlakshmi palani Tue Sep 29, 2020 2:54 am

மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 5 3838410834 krishnamma

krishnaamma இந்த பதிவை விரும்பியுள்ளார்

lakshmi palani
lakshmi palani
பண்பாளர்

பதிவுகள் : 90
இணைந்தது : 21/10/2018

Postlakshmi palani Tue Sep 29, 2020 4:29 am

நன்றி க்ரிஷ்னாம்மா. என்னுடைது மாக் என்பதால் கீ போட்டில் தமிழ் அடிக்கிரேன். தனி மடலுக்கு நன்றி. கதை அருமையாக இருக்கு. இன்று தான் தமிழ் அடிக்க பழகினேன்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 29, 2020 8:41 pm

lakshmi palani wrote:மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... - Page 5 3838410834 krishnamma
மேற்கோள் செய்த பதிவு: 1332274

மிக்க நன்றி லக்ஷ்மி புன்னகை... அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக