ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» 'நீட்'டையும் தாண்டி நீண்டுள்ளது உலகம்!
by T.N.Balasubramanian Today at 4:52 pm

» கங்கை நதி நீர் தரம் உயர்வு
by T.N.Balasubramanian Today at 4:41 pm

» தாதா சாகேப் பால்கே' விருது பெற்றார் ரஜினி; குருவுக்கு சமர்ப்பணம்
by T.N.Balasubramanian Today at 4:36 pm

» கழுத்து வலிக்கு சிகிச்சை பெற்ற நோயாளியின் Feedback
by curesure4u Today at 11:41 am

» சமாஜ்வாதிக்கு போட்டியாக பிரதிக்யா யாத்திரை: பிரியங்கா துவக்கி வைத்தார்
by Dr.S.Soundarapandian Today at 10:30 am

» 10 கட்டளைகள் முக்கியம்: காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகச் சேர புதிய விதிகள் வெளியீடு
by Dr.S.Soundarapandian Today at 10:27 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:21 am

» என் குழந்தையைக் களவாடியவன் - கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 9:54 pm

» tamil law books
by T.N.Balasubramanian Yesterday at 8:54 pm

» போச்சு போங்க.. சீனாவில் நடந்த ஹேக்கர்ஸ் போட்டி.. ஜஸ்ட் 1 விநாடியில் ஹேக் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன்
by T.N.Balasubramanian Yesterday at 8:46 pm

» மழைக்குணம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» ஒன்றுமில்லாத எலும்புக்காடு - கவிதை
by ayyasamy ram Yesterday at 6:39 pm

» போப்பை சந்திக்கிறார் பிரதமர் மோடி
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» 4 மாநகராட்சிகள் கவர்னர் ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ரேஷன் கடைகளில் இனி பனை வெல்லம் கிடைக்கும்
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by nagarajanrtc Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by nagarajanrtc Yesterday at 5:51 pm

» கடம்பவனத்துக் குயில் - உதயணன்
by nagarajanrtc Yesterday at 5:41 pm

» கண்டு பிடியுங்கள் 8 வித்தியாசங்கள்
by durfult Yesterday at 4:39 pm

» மறைந்த நடிகர் ஸ்ரீகாந்த் குறித்து சிவகுமார்…
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» நெஞ்சுக்கு நீதி - திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» தீபாவளி ரேஸில் இணைந்த சூர்யா படம்
by ayyasamy ram Yesterday at 3:26 pm

» வடிவேலிடம் கால்ஷீட் கேட்கும் தமிழின் முன்னணி இயக்குனர்கள் ..
by Dr.S.Soundarapandian Yesterday at 9:57 am

» ’கூழாங்கல்’படம் ஆஸ்கார் விருது போட்டிக்கு தேர்வு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 am

» மரக்கிளைக் கிளிகள்- கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» தொற்று - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாளைய நெசவுக்கான இரவுத்தறி
by ayyasamy ram Yesterday at 8:49 am

» ஓட்டு - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:49 am

» எஞ்சியிருக்கும் கேள்வி - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:48 am

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» டில்லி கேரட் அல்வா
by ayyasamy ram Yesterday at 8:45 am

» ஈஸி மதுரா பேடா
by ayyasamy ram Yesterday at 8:44 am

» குரல் வளத்தை மேம்படுத்த ஆயுர்வேதம் கூறும் அறிவுரைகள்
by curesure4u Yesterday at 8:42 am

» கேஸ், ஆயில் நகைச்சுவை
by mohamed nizamudeen Sat Oct 23, 2021 10:53 pm

» சண்டிக்கீரை மரம்
by ayyasamy ram Sat Oct 23, 2021 10:15 pm

» தாடி சிறுத்தாலும் தொப்பை குறையாது..!
by ayyasamy ram Sat Oct 23, 2021 10:11 pm

» நூல் வேண்டும் .கிடைக்குமா ?
by Periya Sat Oct 23, 2021 7:56 pm

» காதலனை மணமுடிக்க பரிகாரம் வரை சென்ற நயன்தாரா...
by T.N.Balasubramanian Sat Oct 23, 2021 7:05 pm

» நடிகர் சுட்டதில் ஒளிப்பதிவாளர் மரணம், இயக்குனர் கவலைக்கிடம்..
by T.N.Balasubramanian Sat Oct 23, 2021 6:53 pm

» எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!! துணி வாங்கினால் ஆடு இலவசம்!!
by T.N.Balasubramanian Sat Oct 23, 2021 6:45 pm

» கட்டம் சொல்லுது – திரைவிமர்சனம் (புதிய முயற்சி )
by T.N.Balasubramanian Sat Oct 23, 2021 6:36 pm

» மாணவன் உருவாக்கிய சோலார் சைக்கிள்
by T.N.Balasubramanian Sat Oct 23, 2021 4:59 pm

» ஒன்பது ஓட்டைகள் இருந்தும்…
by T.N.Balasubramanian Sat Oct 23, 2021 4:47 pm

» உலக கோப்பை போட்டி அட்டவணை
by ayyasamy ram Sat Oct 23, 2021 4:21 pm

» பில்டர் கோல்ட் - சினிமா விமர்சனம்
by ayyasamy ram Sat Oct 23, 2021 4:20 pm

» அம்மா வேடத்தில் சீதா
by ayyasamy ram Sat Oct 23, 2021 4:19 pm

» சவுதியில் பிரபலமாகும் சீனமொழி
by ayyasamy ram Sat Oct 23, 2021 4:16 pm

» தேநீர் கோப்பை கட்டிடம்
by ayyasamy ram Sat Oct 23, 2021 4:15 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Sat Oct 23, 2021 4:12 pm

» டி 20 ஆட்டம்-இந்தியா-பாகிஸ்தான் நாளை மோதல்
by ayyasamy ram Sat Oct 23, 2021 4:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


























பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

+2
SK
heezulia
6 posters

best பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 41 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 41 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 41 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 41 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 41 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2253
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down


best Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Thu Jul 01, 2021 6:50 pm

01.07.2021

பழம்பெரும் டைரக்ட்டர் C ருத்ரய்யா பிறந்த நாள் [1947 - 2014]

மாறுபட்ட ஒரு டைரக்ட்டராக சினிமாவுக்கு வந்தவர். சென்னை திரைப்பட கல்லூரியில திரைக்கதை எழுதவும், டைரக் ஷனும் பிடிச்சார். 1978ல அவள் அப்படித்தான், 1980ல கிராமத்து அத்தியாயம் னு ரெண்டு படம் டைரக்ட் செஞ்சார். வேற எந்த படமும் எடுத்ததா தெரியல.


உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெலாம் சுகமே - ஜேசுதாஸ்

அவள் அப்படித்தான் 1978 - தயாரிப்பு & டைரக் ஷன் - ருத்ரய்யா / இளையராஜா / கங்கை அமரன்

பூவே இது பூஜைக்காலமே இளம் பூவை கானமே
மனம் தாவி வந்த வேகம் தீர்க்க நாளும் வேண்டுமே - சசிரேகா

கிராமத்து அத்தியாயம் 1980 - தயாரிப்பு & டைரக் ஷன் - ருத்ரய்யா / இளையராஜா / கங்கை அமரன்



பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2253
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Thu Jul 01, 2021 7:07 pm

01.07.2021

பழம்பெரும் பின்னணி பாடகர் AM ராஜா அவர்கள் பிறந்த நாள் [1929 - 1989]

ம்யூஸிக் டைரக்ட்டர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல பாடினார். ஒரு சில ஹிந்தி, சிங்கள படங்கள்லயும் பாடினார். பழம்பெரும் பின்னணி பாடகி ஜிக்கி இவரோட மனைவி. இவங்க ரெண்டு பேரும் சேர்ந்துகூட பல பாட்டு படங்கள்ல பாடினாங்க.

கர்னாடக இசையையும், வெஸ்டர்ன் ம்யூஸிக்கையும் கத்துக்கிட்டார். காலேஜ் படிக்கும்போதே பாட்டு போட்டிகளில் ஜெய்ச்சார். இதை கவனிச்ச HMV நிறுவனம் ரெண்டு தெலுங்கு மெல்லிசை பாட்டு பாட ராஜாவை கூப்பிட்டாங்க. ராஜாவே எழுதி ம்யூஸிக் போட்டார். ம்யூஸிக் டைரக்ட்டர் KV மகாதேவன் இசைக்கருவிகள் பகுதிக்கு உதவி செஞ்சார். ஆல் இண்டியா ரேடியோல இந்த பாட்டு ப்ரபலமாச்சு. அதை கேட்ட SS வாசன் 1951ல தான் தயாரிச்ச சம்சாரம் படத்ல தலைப்பு பாட்டை பாட வச்சார்.

ராஜா சில படங்கள்ல நடிச்சார். ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் கல்யாண பரிசு [1959]. தென்னிந்திய ஆண் பின்னணி பாடகர்கள்ல மும்பைல ஹிந்தி பாட்டுக்களை ரெக்காட் செஞ்ச முதல் பின்னணி பாடகர் ராஜா.


AM ராஜா அவர்கள் பாடிய முதல் தமிழ் பாட்டு
சம்சாரம் சம்சாரம் சகல தர்ம சாரம் சுக ஜீவன ஆதாரம் சம்சாரம் சம்சாரம் - AM ராஜா

சம்சாரம் 1951 / எமனி சங்கர சாஸ்த்திரி / கொத்தமங்கலம் சுப்பு

AM ராஜா தன் மனைவி ஜிக்கி கூட பாடிய பாட்டு
ஆசை பொங்கும் அழகு ரூபம் அணைந்திடாத அமரதீபம் யாரோ

ஆசை 1956 / TR பாப்பா


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2253
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Thu Jul 01, 2021 7:36 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 41 Amrajah01
-
ராஜா – ஜிக்கிக்கு ராஜ்கபூர் அழைப்பு

ராஜாவிற்கு 1953ல் நல்ல பாடல்களைத் தந்த இன்னொரு படம் அன்பு. டி.ஆர்.பாப்பாவின் இசை அமைப்பில் சிவாஜி கணேசனுக்கு ராஜா குரல் கொடுத்த இந்தப் படத்தில், ராஜாவிற்குப் பலவிதமான பாடல்கள். இவற்றுள் 45 வயதாகியும் இளமை குன்றாத ஒரு பாடல் ‘எண்ண எண்ண இன்பமே, வாழ்வினில் என்னாளும்‘ பாடியவர்கள் ராஜா – ஜிக்கி. அன்பு வந்த ஆண்டிலேயே இந்தப் பாட்டு ஜோடிக்கு அகில இந்திய அழைபபு வந்தது.

அழைப்பு விடுத்தவர் ராஜ்கபூர். தமிழிலும தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வந்த தன்னுடைய ஆஹ் படத்திற்கு இரண்டு மொழியிலும் பாட ராஜா – ஜிக்கியை அவர் தேர்ந்தெடுத்தார். சங்கர் – ஜெய்கிஷன் இசையில் ராஜ்கபூர் – நர்கீஸ் ஜோடிக்கு இந்தியில் முகேஷும், லதாவும் பாடினார்கள். பம்பாய்க்குப் பறந்து சென்று ராஜாவும் ஜிக்கியும் அதே பாடல்களை தமிழ் / தெலுங்கில் பாடினார்கள்.

நன்றி- லக்ஷமன்ஸ்ருதி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 70837
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13143

https://rammalar.wordpress.com/

Back to top Go down

best Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Fri Jul 02, 2021 1:03 pm

02.07.2021

நடிகை கௌதமி பிறந்த நாள் [1968]


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். TV நாடகம், நிகழ்ச்சிகள்ல பங்கெடுத்திருக்கார். காஸ்ட்யூம் டிசைனர்.
தமிழ்நாடு மாநில விருது, ஃபிலிம்ஃபேர் விருது, சினிமா எக்ஸ்ப்ரஸ் விருது, விஜய் விருது வாங்கியிருக்கார்.

நடிச்ச முதல் தமிழ் படம் 1988ல குரு சிஷ்யன். புற்று நோயாளிகளுக்கு உதவும் வகையில் Life Again Foundation {LAF] என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.


ஏய் மாப்பிள்ளேஹே செல்ல மாப்பிள்ளேஹே அட நீதானய்யா ஆம்பிள வீட்டிலஹ இப்ப ஆளில்ல என்ன தூக்கிக்கய்யா தோளில - சித்ரா

தர்மம் வெல்லும் 1989 / இளையராஜா / கங்கை அமரன்

ஒண்ணும் ரெண்டும் மூணுதான் ஊரறிஞ்ச கணக்குத்தான் - வாணி ஜெயராம்

ராஜநடை 1989 / MS விஸ்வநாதன்

ஊருக்குள்ள வந்த ஒரு சோளக்கொல்ல பொம்ம
மாரு தட்டி காட்டும் ஒரு வக்கணையும் பேசும் மாமன் பேர கேளுங்கடியோ - ஷைலஜா

எங்க ஊரு மாப்பிள்ளை 1989 / இளையராஜா / பிறைசூடன்


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2253
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Fri Jul 02, 2021 1:13 pm

02.07.2021

பானு சந்தர் பிறந்த நாள் [1952]


நடிகர், டைரக்ட்டர், தயாரிப்பாளர். ப்ரபல ம்யூஸிக் டைரக்ட்டர் மாஸ்ட்டர் வேணு அவர்களின் மகன். தமிழ், தெலுங்கு படங்கள்ல வேல செஞ்சிருக்கார். தமிழ், தெலுங்கு, கன்னட படங்கள்லயும், TV சீரியல்கள்லயும் நடிச்சிருக்கார்.

அறிமுகமான முதல் தமிழ் படம் மூடுபனி 1980.


பருவ காலங்களின் கனவு நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு தழுவிச் சேருகின்ற நினைவு இந்த தவிப்பை ஏற்றுகின்ற உறவு உன் நினைவு - ஜானகி & மலேசியா வாசுதேவன்

மூடுபனி 1980 / இளையராஜா / கங்கை அமரன்

ஓ........ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா என் தேகம் உன் தேசம் எந்நாளும் சந்தோஷம் என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே - ஜானகி & SPB

நீங்கள் கேட்டவை 1984 / இளையராஜா / புலமைப்பித்தன்

மல்லி சாமந்தி வித்தான வேள முத்து முத்தான முத்தங்கள் தந்தாயே - மனோ & பிரபாகரன்

எடுத்த சபதம் முடிப்பேன் 1988 / ராஜ்-கோட்டி / உடந்தை மணாளன்


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2253
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sat Jul 03, 2021 6:25 pm

03.07.2021

நடிகை கனிகா பிறந்த நாள் [1982]

சொந்த பேர் திவ்யா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். TV நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டருக்கார். நடிகை ஜெயஸ்ரீயின் சகோதரர் ஷ்யாம் கனிகாவின் கணவர்.

சின்ன வயசிலேயே பாடும் திறன் இருந்துச்சு. ஓவியம், டான்ஸ், பாட்டு பாட்றது எல்லாம் பிடிக்கும். பல இசைப்போட்டிகள்ல கலந்துக்கிட்டார். சென்னைல நடந்த அழகி போட்டீல இவர் மிஸ் சென்னை. இது இவர் சினிமாவுக்கு வர காரணமாச்சு. ஒரு ரெஸ்ட்டாரண்ட் நடத்துறார்.

பின்னணி பாடியிருக்கார். குரலும் கொடுத்திருக்கார். விளம்பரங்கள்ல நடிச்சிருக்கார். ஏசியாநெட் சினிமா சிறப்பு விருது, கேரளா மாநில விருதுகள் வாங்கியிருக்கார்.

மொதல்ல பாய்ஸ் படத்ல நடிக்க சான்ஸ் கெடச்சுது. ஆட்டோகிராஃப் படத்ல ஹீரோயின் ச்சான்ஸ் கெடச்சுது. படிப்பு காரணமாக நடிக்க முடியல.

அதுக்கப்புறமா தமிழ் படம் 2002ல ஃபைவ்5*ஸ்டார்ல இன்ட்ரோ ஆனார். கொஞ்ச காலம் நடிச்சிட்டு, ஒரு இடைவெளிக்குப்பின் மறுபடியும் நடிக்க ஆரம்பிச்சார். விஜய் சேதுபதி கூட யாதும் ஊரே யாரும் கேளிர் படத்தில நடிச்சிட்ருக்கார். டப்பிங் முடிச்சிருச்சு.


திரு திருடா திரு திருடா தீஞ்சுவை நானடா திரு திருடா திரு திருடா தீண்டியே பாரடா கைவாளால் என்னை தொட்டு முத்தத்தால் என்னை வெட்டு - சுஜாதா & ஸ்ரீனிவாஸ்

ஃபைவ்5*ஸ்டார் 2002 / ஸ்ரீராம் பரசுராம்


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2253
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sat Jul 03, 2021 6:36 pm

03.07.2021

பழம்பெரும் நடிகர் SV ரங்காராவ் அவர்கள் பிறந்த நாள் [1918 - 1974]

டைரக்ட்டர், தயாரிப்பாளர். தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சார்.

1951ல பாதாள பைரவி படத்ல இன்ட்ரோ ஆனார். 2013ல இவர் பேர்ல 5 ரூபா ஸ்டாம்ப் வெளியிட்டாங்க. 1963ல இந்தோனேஷியால நடந்த சினிமா விழால, இவர் சிறந்த நடிகருக்கான விருது வாங்கினார்.

நடிகையர் திலகம் சாவித்திரிக்கு தெலுங்கு திரையுலகம் கொடுத்த 'மகா நடிகை' க்கு அடுத்தபடியாக ரங்காராவுக்கு 'விஸ்வ நட சக்கரவர்த்தி' [மா நடிக பேரரசன்] னு பட்டம் கொடுத்துச்சு. மற்ற பழம் பெரும் நடிக, நடிகையர்களை போல இவரும் நாடகங்கள்ல இருந்து சினிமாவுக்கு வந்தவர்.

ஸ்கூல்ல படிக்கும்போதே, நடிப்பு மேல ஆர்வம் வந்துச்சு. ஸ்கூல் நாடகங்கள்ல இவர் முதல் முதலா போட்ட வேஷம் பில்லி சூனிய மந்திரவாதி. படிச்சு முடிச்சிட்டு நாடக குழுல சேந்துட்டார். ஒரு சில தெலுங்கு படங்கள்ல சின்ன சின்ன ரோல்ல நடிச்சார். அதுதான் பாதாள பைரவி படத்ல அவர் நடிக்க அருமையான ச்சான்ஸ் கெடச்சுது. நேபாள மந்திரவாதியாக நடிச்சார். அவரும் அட்டகாசமா நடிச்சு நல்ல பேர் கெடச்சுது. அநேகமா புராண படங்கள்தான் ரங்காராவுக்கு பெரும்புகழ் தேடி கொடுத்துச்சு. ஷூட்டிங்க்ல இவருக்கு ரெண்டாவது ஷாட்டுக்கு அவசியமே இருக்காது.

"கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் ப்ரமாதம்" பாட்டை மறக்க முடியுமா?

ஜனாதிபதி விருதுகள், நந்தி விருது, ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார்.


சர்வர் சுந்தரம் 1964 காமெடி


முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக அன்பாலே இணைந்து வந்தோம் ஒண்ணுக்குள் ஒண்ணாக - கண்டசாலா

அன்பு சகோதரர்கள் 1973 / KV மகாதேவன் / கண்ணதாசன்

வருகவே வருகவே என் இறைவா என் தலைவா - சுசீலா


கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் ப்ரமாதம் அந்த கௌரவப் ப்ரசாதம் இதுவே எனக்கு போதும் - கண்டசாலா

மாயாபஜார் 1957 / கண்டசாலா / தஞ்சை ராமையாதாஸ்


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2253
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sat Jul 03, 2021 6:43 pm

03.07.2021

பழம்பெரும் கர்னாடக இசைப் பாடகி ML வசந்தகுமாரி அவர்கள் பிறந்த நாள்[1928 - 1990]

மெட்றாஸ் லலிதாங்கி வசந்தகுமாரி. கர்னாடக இசைப்பாடகர். செல்லமா எல்லாரும் MLVனு சொல்வாங்க. 'ராகங்களின் அரசி'னு சொல்லப்பட்றார். தமிழ், தெலுங்கு படங்கள்ல பாடினார்.

இவர் காலத்தில உள்ளவங்க DK பட்டம்மாள் அம்மா, MS சுப்புலட்சுமி அம்மா. அந்த காலத்தில சங்கீத கலாநிதி விருது வாங்கினவங்கள்ல வசந்தகுமாரி அம்மா இளையவர்.

தன் ஆசைப்படி டாக்டருக்கு படிக்க போனவர். இவரோட குரு கர்னாடக இசை பாடகர் GN பாலசுப்ரமணியன் அவர்கள் முயற்சியால் இவரும் பாடகியாயிட்டார். சுதா ரகுநாதன் போன்றவர்கள் இவரோட மாணவிகள். அவங்கள்ல முக்கியமானவங்க மகள் நடிகை ஸ்ரீவித்யா.

சங்கீத நாடக அகாடமி விருது, மதிப்புறு முனைவர் பட்டம், இசை பேரறிஞர் விருது, பத்மபூஷன் விருது, சங்கீத கலாசிகாமணி விருது வாங்கினார்.


அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி கந்தன் வர காணேனே மயிலே - MLV

பார்த்திபன் கனவு 1960 / வேதா / விந்தன்

ஆடாத மனமும் உண்டோ நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு - MLV & TMS

மன்னாதி மன்னன் 1960 / விஸ்வநாதன் & ராமமூர்த்தி / மருதகாசி

வருகிறாள் உன்னைத் தேடி உன் வாசலில் உருகி உருகி நின்று மணவாளன் நீ என்று - MLV & சூலமங்கலம் ராஜலட்சுமி

தங்கப் பதுமை 1959 / விஸ்வநாதன் & ராமமூர்த்தி / கண்ணதாசன்


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2253
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sat Jul 03, 2021 7:03 pm

03.07.2021

பழம்பெரும் ம்யூஸிக் டைரக்ட்டர் TR பாப்பா அவர்கள் பிறந்த நாள் [1922 - 2004]

வயலின் கலைஞர். தமிழ், தெலுங்கு, சிங்கள படங்களுக்கு ம்யூஸிக் போட்டார். மெல்லிசை மன்னர் MS விஸ்வநாதன் அவர்கள் குழுல, மாடர்ன் தியேட்டர்ஸ், ஜூபிட்டர் பிக்ச்சர்ஸ் நிறுவனங்கள்ல பாப்பா அவர்கள் வயலின் வாசிச்சார். 1940கள்ல பாப்பாவும், TK ராமமூர்த்தியும் படங்களுக்கு வயலின் வாசிக்க, அதிக சம்பளம் வாங்கினவங்க.

அப்புறமா பாப்பா மலையாள படங்களுக்கு ம்யூஸிக் போட ஆரம்பிச்சார்.

இசைப்பேரறிஞர் விருது வாங்கினார்.


இறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன் அதில் அறிஞனும் மூடனும் உண்டு ஆனால் தொடக்கமும் முடிவும் ஒன்று - SPB

ஏன் 1970 / TR பாப்பா / கண்ணதாசன்

அலைகளிலே தென்றல் வந்து அசைந்தாடும் ஆனந்தம் என்ன உறவா சுகமா - சுசீலா

மறுபிறவி 1973 / TR பாப்பா / கண்ணதாசன்

கனி முத்தம் பதிந்தது கொடி மேலே பனி முத்தம் பதிந்தது மலர்மேலே முகில் முத்தம் பதிந்தது மலைமேலே உன் முதல் முத்தம் பதிந்தது இதழ்மேலே - சுசீலா & SPB

யார் ஜம்புலிங்கம் 1972 / TR பாப்பா / வாலி

அழகு மயில் கோலமென பழகும் மகள் வருக ஆடிவரும் தீபமென தேவமகள் வாழ்க - சுசீலா & சீர்காழியார்

மகனே நீ வாழ்க 1969 / TR பாப்பா / கண்ணதாசன்


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2253
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sun Jul 04, 2021 1:40 pm

04.07.2021

நடிகர் பூர்ணம் விஸ்வநாதன் அவர்கள் பிறந்த நாள் [1921 - 2008]


நாடகம், சினிமா நடிகர். தமிழ், மலையாள படங்கள்ல நடிச்சார். 1945ல ஆல் இண்டியா ரேடியோல செய்தி வாசித்தவர். 1947ல இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தியை ரேடியோல சொன்னது இவர்தான்.

18வது வயசில நாடகத்தில நடிக்க ஆரம்பிச்சார். பூர்ணம் தியேட்டர்ஸ் னு நாடகக் குழுவை நடத்தி ஏகப்பட்ட நாடகங்களை நடத்தினார். அதனால வெறும் விஸ்வநாதனா இருந்தவர் பூர்ணம் விஸ்வநாதன் ஆனார். அவர் நாடகங்களை தானே எழுதியும் நடிச்சார்.

எழுத்தாளர் சுஜாதாவின் 10நாடகங்களை நடத்தினார். டெல்லி, லக்னோ, மும்பை இங்கல்லாம் விஸ்வநாதன் நாடகங்கள்ல நடிச்சார். எழுத்தாளர் உமா சந்திரன் இவரோட அண்ணன்.

சங்கீத நாடக அகாடமி விருது வாங்கினார்.


நினைத்தாலே இனிக்கும் 1979


தில்லு முல்லு 1981


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2253
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sun Jul 04, 2021 1:47 pm

04.07.2021

ம்யூஸிக் டைரக்ட்டர் மரகதமணி பிறந்த நாள் [1961]


நிஜ பேர் கொடுரி மரகதமணி கீரவாணி. தமிழ் சினிமால மரகதமணி. பாலிவுட்ல MMகீரம். பாடகரும், பாடலாசிரியரும். தெலுங்கு இசையமைப்பாளர். தவிர தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார்.

முதல் தமிழ் படம் அழகன் 1991. இந்த படத்தின் சிறந்த ம்யூஸிக் டைரக்ட்டருக்கான தமிழ்நாடு மாநில விருது வாங்கினார். இவரோட ம்யூஸிக்ல அதிகமா பாடினவங்க சித்ரா & SPB.

தேசிய விருது, தமிழ்நாடு சினிமா விருது, நந்தி விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள் இன்னும் சில விருதுகள் வாங்கியிருக்கார்.


மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை ஐந்தில் அறிந்த ச ரி க ம ப த நி மறக்க முடியவில்லை ஆறு வயதில் ஏறிய மேடை மறக்க முடியவில்லை - சித்ரா & SPB

ஜாதிமல்லி 1992 / மரகதமணி / வைரமுத்து

சிப்பி வயிற்றிலே முத்து வளருது முத்தம் கொடுக்கயில் கொஞ்சம் ஒதறுது - சித்ரா & SPB

பாட்டொன்று கேட்டேன் 1991 / மரகதமணி / வைரமுத்து

என் கண்ணனுக்கு காதல் வந்தனம் என் கண்மணிக்கு ஜீவன் அர்ப்பணம் என் பெண்மை எல்லாம் உந்தன் சீதனம் உன் சீதனங்கள் என்ன நூதனம் - சித்ரா & SPB

பிரதாப் 1993 / மரகதமணி / வைரமுத்து

ஏ குப்பா வா குப்பா இந்த ஓட்டை பானைக்குள்ளே காத்தடைச்சு வச்ச பையன் குப்பா சுப்பா யாரப்பா - மரகதமணி

ஜாதிமல்லி 1992 / மரகதமணி / வைரமுத்து


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2253
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Mon Jul 05, 2021 1:20 pm

05.07.2021

நடிகை மும்தாஜ் பிறந்த நாள் [1980]  


மாடல். தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சார். நடிச்ச முதல் தமிழ் படம் 1999ல மோனிஷா என் மோனலிசா. TV சேனல் டான்ஸ் போட்டி ஷோல ஜட்ஜா இருந்திருக்கார்.


ஹலோ ஹலோ ஹலோ பேரை நான் சொல்லவா ரசிகன் நான் அல்லவா காதிலே பேசவா காதலன் ஆகவா ஐ லவ் யூ மோனிஷாஆஆ ஐ லவ் யூ - சுஜாதா & SPB

மோனிஷா என் மோனலிசா 1999 / ம்யூஸிக் & வரிகள் : T ராஜேந்தர்

என் கண்ணாடி தோப்புக்குள்ளே கண்ணா கண்ணா உன் நிழலாட தாக்கு பிடித்தேன் கண்ணா கண்ணா என் வாசலில் நீ தோரணம் நான் வாழவே நீ காரணம் - சித்ரா & ஹரிஹரன்

மலபார் போலீஸ் 1999 / SA ராஜ்குமார் / அறிவுமதி


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2253
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Mon Jul 05, 2021 1:33 pm

05.07.2021

நடிகர் அஸ்வின் ககுமனு பிறந்த நாள்

2011ல மங்காத்தா படம் மூலமா சினிமாவுக்கு வந்து ப்ரபலமானார்.


உயிரே உன் உயிரென நானிருப்பேன் அன்பே இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன் - அனிரூத்

ஜீரோ 2016 / நிவாஸ் K பிரசன்னா / கபிலன்

ஏனென்றால் உன் பிறந்தநாள் உலக பூக்களின் வாசம் உனக்கு சிறை பிடிப்பேன் உலர்ந்த மேகத்தை கொண்டு நிலவின் கரை துடைப்பேன் - விஷ்ணுபிரியா, R மாளவிகா மனோஜ் & ஹரிஹரன்

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2013 / சித்தார்த் விப்பின் / மதன் கார்க்கி


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2253
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Tue Jul 06, 2021 12:38 pm

06.07.2021

நடிகை நிகிதா பிறந்த நாள் [1981]


மாடல். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். 2008ல சரோஜா படத்ல நடிச்சதுக்காக சிறந்த துணை நடிகைக்கான சர்வதேச தமிழ் திரைப்பட விருது வாங்கினார்.


கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி குஷியாகும் பாடி அட இதுபோல் வருமாடி ஒய்யாரி

சரோஜா 2008 / யுவன் சங்கர் ராஜா / கங்கை அமரன்

நீ ரகசியமாக பார்க்கின்ற பார்வை அவஸ்தயடா நீ ராட்சசனாக செய்கின்ற காதல் அவஸ்தயடா - வசுந்தராதாஸ் & கார்த்திக்

சத்ரபதி 2004 / SA ராஜ்குமார் / பா விஜய்


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2253
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Tue Jul 06, 2021 12:56 pm

06.07.2021

டாக்ட்டர் பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் பிறந்த நாள் [1930 - 2016]


"சின்னக் கண்ணன் அழைக்கிறான்"னு கண்ணனை கூப்பிட்டவரை பற்றி சொல்ல "ஒரு நாள் போதுமா?"

ஆந்திரால இசை குடும்பத்தில பிறந்தவர். கர்னாடக இசை பாடகர், ம்யூஸிக் டைரக்ட்டர், குணசித்திர நடிகர். பலவகை வாத்திய கருவிகளை வாசிப்பவர். இவரே புது புது ராகங்களை உருவாக்கினார்.

ஒம்பாதாவது வயசிலேயே இசைக்கச்சேரி செய்ய ஆரம்பிச்சுட்டார். ஆல் இண்டியா ரேடியோல குழந்தை கலைஞராக இருந்தபோது, A Grade லிஸ்ட்ல இவர் பேர சேத்துக்கிட்டாங்க. TV தூர்தர்ஷன்ல வீடியோ பாட்டு "மிலே ஸுர் மேரா தும்ஹாரா" என்ற தேசபக்தி பாட்டுல தமிழ் பகுதியை பாலமுரளிகிருஷ்ணா பாடியிருந்தார்.

முன்னணி கலைஞர்களின் கச்சேரில வயலின் வாசிச்சார். புல்லாங்குழல், வீணை, மிருதங்கம் வாத்திய கருவிகள் வாசிக்க தெரியும்.
மெய்யப்ப செட்டியார் சொன்னதுக்காக, பக்த ப்ரகலாதா தெலுங்கு படத்ல நாரதராக நடிச்சார். அதுக்கப்புறம் நடிக்காம இருந்தார். அப்புறமா ஒரு மலையாள படத்ல பாடகராக நடிச்சார்.

முன்னணி ம்யூஸிக் டைரக்ட்டர்கள், ராகம் சம்பந்தமா சந்தேகம் வந்தா பாலமுரளிகிருஷ்ணாவைத்தான் கேட்டாங்க. MS விஸ்வநாதன் இவரை தன் இசையாசிரியராக நெனைச்சார்.

P லீலா, மலையாள ம்யூஸிக் டைரக்ட்டர் சரத், இசை ஆராய்ச்சியாளர் BM சுந்தரம், கமல்ஹாசன், ஜெயலலிதா, வைஜயந்திமாலா, ஷைலஜா இவங்கல்லாம் BMK யின் மாணவர்கள்.

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இத்தாலி ஃப்ரான்ஸ், ரஷ்யா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்பட பல இடங்கள்ல 25000 கச்சேரிகள் நடத்தினார். படங்கள்ல தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், மலையாளம், கன்னட மொழிகள்ல பாடினார்.

பத்மஸ்ரீ விருது, சங்கீத நாடக அகாடமி விருது, சங்கீத கலாநிதி விருது, சங்கீத கலாசிகாமணி விருது, சங்கீத கலாசாரதி விருது, தேசிய விருதுகள், கேரள மாநில விருது, பத்ம விபூஷண் விருது, இசை பேரறிஞர் விருது, செவாலியே விருது, இன்னும் பல விருதுகள் வாங்கினார்.

இவரோட வாழ்க்கை வரலாற்றை ராணி மைந்தன் எழுதியிருக்கார்.


தமிழ்ல பாடிய முதல் பாட்டு
தங்க ரதம் வந்தது வீதியிலே ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே மரகத தோரணம் அசைந்தாட நல்ல மாணிக்க மாலைகள் கவி பாட - சுசீலா & பாலமுரளிகிருஷ்ணா

கலைக் கோவில் 1965 / விஸ்வநாதன் & ராமமூர்த்தி / கண்ணதாசன்

அன்பாலே அழகாகும் வீடு ஆனந்தம் அதற்குள்ளே தேடு சொந்தங்கள் கை சேரும்போது வேறொன்றும் அதற்கில்லை ஈடு - ஷிவாங்கி & பாலமுரளிகிருஷ்ணா

பசங்க 2009 / ஜேம்ஸ் வசந்தன் / யுகபாரதி

ஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா நான் பாட இன்றொரு நாள் போதுமா நாதமா கீதமா அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா - பாலமுரளிகிருஷ்ணா

திருவிளையாடல் 1965 / KV மகாதேவன் / கண்ணதாசன்

High On A Hill Was A Lonely - வாணி ஜெயராம் & பாலமுரளிகிருஷ்ணா

நவரத்தினம் 1977 / குன்னக்குடி வைத்தியநாதன் / நெல்லை அருள்மணி

இது கேட்க திகட்டாத கானம் ஒரு ஈடு இணை இல்லா த்யானம் நல்ல கார்வை விளங்கும் குரல் ஜாலம் இதில் தேவை என்ன பக்க மேளம் - பாலமுரளிகிருஷ்ணா

மிருதங்க சக்கரவர்த்தி 1983 / MS விஸ்வநாதன் / வாலி


பேபி
heezulia
heezulia
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2253
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை