ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Today at 15:16

» சொல்லிட்டாங்க…
by ayyasamy ram Today at 15:14

» கன மழை நிலவரம்
by ayyasamy ram Today at 9:45

» எம்.ஜி.ஆர் அண்ணன் மகள் லீலாவதி காலமானார்
by ayyasamy ram Today at 9:40

» தங்கம் விலை நிலவரம்
by ayyasamy ram Today at 9:37

» ஆவின் பால் பாக்கெட்டுகளில் மிளிர்ந்த வெண்மைப் புரட்சி நாயகள்
by ayyasamy ram Today at 9:23

» திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைணவ சான்றிதழ் படிப்பு
by ayyasamy ram Today at 9:18

» சர்வதேச விமான சேவை டிச 15ல் தொடக்கும்
by ayyasamy ram Today at 9:16

» வாட்ஸப் நகைச்சுவை
by ayyasamy ram Today at 0:00

» நாட்டு நடப்பு - கருத்துப் படம் 11/11/2021
by mohamed nizamudeen Yesterday at 22:37

» பெயரின் முதல் எழுத்தை வைத்து நீங்கள் எப்படிபட்டவர் என்று தெரிந்து கொள்ளலாம்
by T.N.Balasubramanian Yesterday at 17:52

» அம்மா – கவிதை
by ayyasamy ram Yesterday at 17:15

» சீதனச்சீரழிவு – கவிதை
by ayyasamy ram Yesterday at 17:14

» திருப்தி – கவிதை
by ayyasamy ram Yesterday at 17:13

» கன்னியர் எல்லாம் கற்பூக்கள் – கவிதை
by ayyasamy ram Yesterday at 17:12

» உன்னதம் உயிரோட்டம்…(கவிதை)
by ayyasamy ram Yesterday at 17:11

» அதேபோலொரு மழைக்காலம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 17:10

» இயலாமை – கவிதை
by ayyasamy ram Yesterday at 17:09

» அவளா இவள் – கவிதை
by ayyasamy ram Yesterday at 17:08

» புரிதல் வேண்டும் – கவிதை
by ayyasamy ram Yesterday at 17:07

» ஆசையாய்க் குடித்த தண்ணீர் – கவிதை
by ayyasamy ram Yesterday at 17:07

» காந்த தத்துவம்-வேதாத்திரி மகரிஷி
by safetypartha Yesterday at 16:20

» ஒரு குறளுக்கு 1 டாலர் பரிசு! :அமெரிக்காவில் அசத்தும் புதுகை இன்ஜினியர்
by Dr.S.Soundarapandian Yesterday at 16:00

» கன்னட நகைச்சுவைகள் (49 - 51)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:57

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 15:34

» பாதுகாப்பான புரத உணவு பாசிப்பருப்பு
by ayyasamy ram Yesterday at 14:34

» மாபெரும விமான நிலையம்
by ayyasamy ram Yesterday at 14:32

» ஓட்டுநர் இல்லா ரயில்
by ayyasamy ram Yesterday at 14:32

» தேசிய குடும்ப நல ஆய்வு
by ayyasamy ram Yesterday at 14:31

» தேசிய அரசியல் சாசன தினம்
by ayyasamy ram Yesterday at 14:30

» தினமும் சிக்கன் சாப்பிட கூடாது...!
by ayyasamy ram Yesterday at 14:30

» சிறைச்சாலை - பளிச் 10
by ayyasamy ram Yesterday at 14:29

» கஷ்ட காலங்களில் கடவுள் நம்முடன்தான் இருக்கிறார்
by T.N.Balasubramanian Yesterday at 13:55

» அரசு ஊழியர்களுக்கு பெற்றோரை குஷிப்படுத்த 4 நாள் தொடர் விடுமுறை
by ayyasamy ram Yesterday at 13:08

» மெகா சீரியல்களில் இது தான் நம்பர் ஒன்
by ayyasamy ram Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:32

» நடிகை கங்கனா ரனாவத்துக்கு டெல்லி பேரவை குழு சம்மன்
by ayyasamy ram Yesterday at 11:28

» ரயில்வே நடை மேடை க்கடணம் குறைப்பு
by ayyasamy ram Yesterday at 11:15

» மழைநீர் குழாயில் மழை போல் விழுந்த பணம்; கர்நாடக பொறியாளர் வீட்டில் கத்தை கத்தையாய் பறிமுதல்
by T.N.Balasubramanian Thu 25 Nov 2021 - 22:56

» மனித உடலைப் பற்றிய அறியாத ரகசியங்கள்
by T.N.Balasubramanian Thu 25 Nov 2021 - 22:44

» முருங்கைக்காய் ஊறுகாய்
by T.N.Balasubramanian Thu 25 Nov 2021 - 22:42

» பிரெட் ரசமலாய்
by T.N.Balasubramanian Thu 25 Nov 2021 - 22:35

» மதநல்லிணக்கத்திற்காக இன்னொரு தாஜ்மஹால்!
by mohamed nizamudeen Thu 25 Nov 2021 - 22:21

» உருளைக்கிழங்கு கட்லெட்
by ayyasamy ram Thu 25 Nov 2021 - 21:33

» கத்தரிக்காய் துவையல்
by ayyasamy ram Thu 25 Nov 2021 - 21:32

» மாம்பழ ஜேம்
by ayyasamy ram Thu 25 Nov 2021 - 21:30

» தூக்கி வளர்த்த அன்பு தங்கச்சி…!
by ayyasamy ram Thu 25 Nov 2021 - 21:25

» எல்லாம் தேச நலனுக்காத்தான்…!
by ayyasamy ram Thu 25 Nov 2021 - 21:24

» வேளாண் (வலை) வீச்சு
by ayyasamy ram Thu 25 Nov 2021 - 21:18

» இது தமிழ்க்கோடு (கோட்டுச் சித்திரம்)
by ayyasamy ram Thu 25 Nov 2021 - 21:13

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

4 posters

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Empty திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Wed 29 Jul 2020 - 12:20

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை

தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.

[You must be registered and logged in to see this image.]

Last edited by T.N.Balasubramanian on Fri 4 Sep 2020 - 19:12; edited 1 time in total (Reason for editing : editting)
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Fri 18 Sep 2020 - 13:12

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-13- குறிப்பறிவறுத்தல் -1278

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமு
மெழுநாளே மேனி பசந்து

வாசிக்க
எம் காதலர் சென்றார்நெருநற்று, நாமும் மேனி பசந்து எழு நாளேம்

தெளிவுரை
எம்முடைய காதலர் நேற்றுத்தான் பிரிந்து சென்றார்; யாமும் மேனி பசலை
நிறம் அடைந்து ஏழு நாட்கள் ஆய்விட்ட நிலையில் இருக்கின்றோம்

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Fri 18 Sep 2020 - 13:27

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-13- குறிப்பறிவறுத்தல் -1279

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
தொடிநோக்கி மென்தோளு நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது

வாசிக்க
தொடி நோக்கி, மென்தோளும் நோக்கி, அடி நோக்கி, ஆண்டு அவள் செய்தது அஃது

தெளிவுரை
தன்னுடைய வளையல்களை நோக்கி, மெல்லிய தோள்களையும் நோக்கித் தன்னுடைய அடிகளையும் நோக்கி அவள் செய்த குறிப்பு உடன்போக்காகிய அதுவேயாகும்
.

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Fri 18 Sep 2020 - 13:40

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-13- குறிப்பறிவறுத்தல் -1280

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
பெண்ணினாற் பெண்மை உடைத்தென்ப கண்ணினாற்
காமநோய் சொல்லி இரவு

வாசிக்க
காமநோய் கண்ணினால் சொல்லி இரவு, பெண்ணினால் பெண்மை உடைத்து என்ப

தெளிவுரை
கண்ணினால் காமநோயைத் தெரிவித்துப் பிரியாமலிருக்குமாறு இரத்தல், பெண்தன்மைக்கு மேலும் பெண் தன்மை உடையது என்று கூறுவர்.

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Fri 18 Sep 2020 - 13:56

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-14- புணர்ச்சிவிதும்பல் -1281

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
உள்ளக் களித்தலுங் காண மகிழ்தலுங்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு

வாசிக்க
உள்ளக் களித்தலும், காண மகிழ்தலும், கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு.

தெளிவுரை
நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும்
ஆகிய இந்த இருவகைத் தன்மையும் கள்ளுக்கு இல்லை; காமத்திற்கு உண்டு.

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Fri 18 Sep 2020 - 14:11

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-14- புணர்ச்சிவிதும்பல் -1282

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையுங்
காம நிறைய வரின்

வாசிக்க
காமம் பனைத்துணையும் நிறைய வரின், தினைத்துணையும் ஊடாமை வேண்டும்.

தெளிவுரை
காமம் பனையளவாக நிறைய வரும்போது காதலரோடு தினையளவாகச்
சிறிதேனும் ஊடல் கொள்ளாமல் இருக்க வேண்டும்

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Fri 18 Sep 2020 - 14:24

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-14- புணர்ச்சிவிதும்பல் -1283

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
பேணாது பெட்பவே செய்யினுங் கொண்கனைக்
காணா தமையல கண்

வாசிக்க
பேணாது பெட்பவே செய்யினும், கொண்கனைக் காணாது கண் அமையல.தெளிவுரை
என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Fri 18 Sep 2020 - 17:29

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-14- புணர்ச்சிவிதும்பல் -1284

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
ஊடற்கண் சென்றேன்மற் தோழி அதுமறந்து
கூடற்கட் சென்றதென் நெஞ்சு

வாசிக்க
தோழி ஊடற்கண் சென்றேன்மன், என் நெஞ்சு அது மறந்து கூடற்கண் சென்றது.

தெளிவுரை
தோழி! யான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன்: ஆனால் என்னுடைய
நெஞ்சம் அந்த நோக்கத்தை மறந்து அவரோடு கூடுவதற்காகச் சென்றது.

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Fri 18 Sep 2020 - 18:16

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-14- புணர்ச்சிவிதும்பல் -1285

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
எழுதுங்காற் கோல்காணாக் கண்ணேபோற் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து

வாசிக்க
எழுதுங்கால் கோல் காணாக் கண்ணே போல், கொண்கன் பழி கண்டவிடத்துக் காணேன்

தெளிவுரை
மை தீட்டும் நேரத்தில் தீட்டும் கோலைக் காணாத கண்களைப்போல், காதலனைக் கண்டபோது மட்டும் அவனுடைய குற்றத்தை நினைக்காமல் மறந்து விடுகின்றேன்

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Fri 18 Sep 2020 - 18:37

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-14- புணர்ச்சிவிதும்பல் -1286

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
காணுங்காற் காணேன் தவறாய காணாக்காற்
காணேன் தவறல் லவை

வாசிக்க
காணுங்கால் தவறாய காணேன், காணாக்கால் தவறல்லவை காணேன்

தெளிவுரை
காதலரை யான் காணும்போது (அவருடைய செயல்களில்) தவறானவற்றைக் காண்பதில்லை.அவரைக் காணாத போது தவறு அல்லாத நன்மைகளைக் காண்பதில்லை

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Sat 19 Sep 2020 - 12:22

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-14- புணர்ச்சிவிதும்பல் -1287

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
உய்த்த லறிந்து புனல்பாய் பவரேபோற்
பொய்த்த லறிந்தென் புலந்து

வாசிக்க
உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல், பொய்த்தல் அறிந்து புலந்து என்

தெளிவுரை
வெள்ளம் இழுத்துச் செல்வதை அறிந்திருந்தும் ஓடும் நீரில் பாய்கின்றவரைப்
போல், பயன்படாமை அறிந்திருந்தும் ஊடல் கொள்வதால் பயன் என்ன?

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Sat 19 Sep 2020 - 12:45

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-14- புணர்ச்சிவிதும்பல் -1288

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
இளித்தக்க இன்னா செயினுங் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு

வசிக்க
கள்வ களித்தார்க்கு இளித்தக்க இன்னா செயினும் கள் அற்றே, நின் மார்பு

தெளிவுரை
கள்வ!
இழிவு வரத்தக்க துன்பங்களைச் செய்தாலும் கள்ளுண்டு களித்தவர்க்கு
மேன்மேலும் விருப்பம் தரும் கள்ளைப் போன்றது உன் மார்பு.

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Sat 19 Sep 2020 - 12:58

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-14- புணர்ச்சிவிதும்பல் -1289

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
மலரினு மெல்லிது காமஞ் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்

வாசிக்க
காமம் மலரினும் மெல்லிது, அதன் செவ்வி தலைப்படுவார் சிலர்

தெளிவுரை
காமம் மலரைவிட மென்மை உடையதாகும்; அந்த உண்மை
அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே.

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Sat 19 Sep 2020 - 13:12

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-14- புணர்ச்சிவிதும்பல் -1290

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
கண்ணிற் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினுந் தான்விதுப் புற்று

வாசிக்க
கண்ணின் துனித்தே, புல்லுதல் என்னினும் தான் விதுப்புற்றுக் கலங்கினாள்

தெளிவுரை
கண்பார்வையின் அளவில் பிணங்கி, என்னைவிடத் தான் விரைந்து
தழுவுதலை விரும்பி, (பிணங்கிய நிலையையும் மறந்து) கலங்கிவிட்டாள்.

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Sat 19 Sep 2020 - 13:38

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-15- நெஞ்சொடுபுலத்தல் -1291

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
அவர்நெஞ் சவர்க்காதற் கண்டும் எவனெஞ்சே
நீயெமக்கு ஆகா தது

வாசிக்க
நெஞ்சே, அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும், நீ எமக்கு ஆகாதது எவன்?

தெளிவுரை
நெஞ்சே! அவருடைய நெஞ்சம் (நம்மை நினையாமல் நம்மிடம் வராமல்)
அவர்க்குத் துணையாதலைக் கண்டும் நீ எமக்குத் துணையாகாதது ஏன்?

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by பழ.முத்துராமலிங்கம் Sat 19 Sep 2020 - 13:53

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-15- நெஞ்சொடுபுலத்தல் -1292

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு

வாசிக்க
என் நெஞ்சு, உறாஅதவர்க் கண்ட கண்ணும், செறாஅர் என அவரைச் சேறி.

தெளிவுரை
என் நெஞ்சே!
நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர்
வெறுக்கமாட்டார் என்று எண்ணி அவரிடம் செல்கின்றாயே!

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 37 Empty Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை