ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:56 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:51 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:22 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:19 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm

» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm

» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:13 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:12 pm

» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:06 pm

» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm

» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm

» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm

» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:01 pm

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm

» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm

» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:38 pm

» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:31 pm

» பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:26 pm

» சீன உளவுக் கப்பல் ஆகஸ்ட் 16 அன்று இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது - இந்தியா ஏன் உன்னிப்பாக கவனித்து வருகிறது
by sncivil57 Sun Aug 14, 2022 2:07 pm

» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:52 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 14/08/2022
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:50 pm

» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:48 pm

» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:56 pm

» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:52 pm

» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:47 pm

» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 6:07 pm

» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 3:18 pm

» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Sat Aug 13, 2022 3:17 pm

» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:16 pm

» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:14 pm

» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 9:00 am

» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:40 am

» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:37 am

» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:33 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm

» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm

» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm

Top posting users this week
ayyasamy ram
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Vote_lcapமருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Voting_barமருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Vote_rcap 
T.N.Balasubramanian
மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Vote_lcapமருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Voting_barமருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்


மருத்துவக் கேள்வி பதில்கள்

+3
sakthi23
amkrkalyan
சிவா
7 posters

மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Empty மருத்துவக் கேள்வி பதில்கள்

Post by சிவா Fri Mar 27, 2009 11:10 pm

First topic message reminder :

ரத்தக்கொதிப்பை எப்படி கண்டுபிடிப்பது? அது ஏன் வருகிறது?


ரத்தக்கொதிப்பை முழு உடல் பரிசோதனையின்போது கண்டுபிடிக்கலாம். இந்த நோய் வருவதற்கான காரணம் இதுதான் என எதையும் பட்டியில் போட்டு உடனே சொல்லிவிட முடியாது. காரணம் தெரியாத எந்த நோயினாலும் ரத்தக் கொதிப்பு வரலாம். இப்படித்தான் 90 பேருக்கு வருகிறது. சிலருக்கு சிறுநீரகத் திற்குச் செல்லும் ரத்த நாளங்களில் குறுக்கம் ஏற்படுவது, நிணநீர் சுரப்பிகளில் கழலைகள் போன்றவற்றைச் சொல்லலாம்.

உங்களுக்கு எதுபோன்ற அறிகுறிகள் தெரிகின்றன என்பதை மருத்துவரிடம் சொன்னால், அது என்ன காரணத்தினால் வந்திருக்கும் என டாக்டர் தெரிய படுத்துவார். எக்ஸ்-ரே, ஈசிஜி, அல்ட்ரா சவுண்டு போன்ற பரிசோதனைகள் தேவைப்படலாம். சிறுநீரகச் செயல் திறன் பரிசோதனையும் தேவை. அப்போதுதான் எந்த வகையான ரத்த அழுத்தம் வந்துள்ளது என்பதை டாக்டரால் கூற இயலும்.

எப்போது ரத்த அழுத்தம் உயரும்? உறக்கத்தின் போது உயருமா? வயதாக வயதாக ரத்த அழுத்தம் உயரும் என்பது உண்மையா?


உறக்கத்தின் போது ரத்த அழுத்தம் குறையும். ஆனால் திகில் கனவுகளின் போது அதிகமாக உயர்ந்துவிடும். உணர்ச்சி வசப்படும்போது, அதிகமாக உழைக்கும்போது, கவலைப்படும்போது ரத்த அழுத்தம் உயரும். பொதுவாக உடல் எடை குறைவாக இருக்கவேண்டும். உடல் பருமன் அதிகமானவர்களுக்கு அதிக ரத்த அழுத்தம் உள்ளது. ரத்த அழுத்தமானது சுவாசிக்கும்போது, வலி மற்றும் உடற்பயிற்சியின்போதுகூட உயர்கிறது. தகுந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down


மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Empty Re: மருத்துவக் கேள்வி பதில்கள்

Post by சிவா Sat Jul 25, 2009 4:18 am

எனக்கு அடிக்கடி வயிற்றுத்தொல்லை வருகின்றது. இப்படி ஏற்படும் வயிற்றுத் தொல்லைக்கு காரணம் என்ன?


வயிற்றில் புண்கள் (அல்சர்) ஏற்பட்டு இருக்கலாம். இது உரிய காலத்தில் ஆகாரம் உட்கொள்ளாது இருப்பவர்களுக்கு வருகிறது. எரிவுக்குக் காரணம் இரைப்பையில் சுரக்கும் ஹைடிரோகுளோரிக் அமிலம் அதிகமாக சுரப்பதே. அதற்கு ஏற்ற அளவு உணவு முறையாக உட்கொள்ள வேண்டும். இவ்வாறு உணவு உட்கொள்ளாதபோது சுரந்த அமிலம் இரைப்பையை அரித்து விடுகிறது. அதனால் புண் ஏற்படுகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Empty Re: மருத்துவக் கேள்வி பதில்கள்

Post by சிவா Fri Jul 31, 2009 8:45 am

ஆண்கள் தலைக்கு ஹேர் டை போடுவதால் பக்க விளைவுகள் உண்டாகுமா?முடி நரைப்பது அறிகுறி என்றாலும் முடி நரைத்தவர்களெல்லாம் மூப்படைந்தவர்களாகி விடமாட்டார்கள். 35 வயதிலே தலை முழுவதும் நரைத்துப் போனவர்களையும், ஐம்பது வயதிலும் ஒரு சிறிதும் நரை இல்லாதவர்களையும் நாம் கண்டிருக்கிறோம்.

நரைப்பது என்பது ஒருவரது மரபு வழிப் பண்பை பொறுத்தது. இந்த நரைமுடியை மறைத்து இளமைத் தோற்றம் பெறுவதற்குப் பல வழிமுறைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் கூந்தல் சாயம்.

பொதுவாக எவருமே தமது முடி வெளுத்துப் போவதை விரும்புவதில்லை. எனவே தங்களது நரைமுடியை மறைக்கக் கூடிய சாதனங்கள் எவையிருப்பி னும் அவற்றை வாங்கி உபயோகிக்க இவர்கள் தயங்குவதேயில்லை. இன்று நேற்று என்றில்லாமல் பன்னெடுங்காலமாகவே கூந்தல் சாயங்கள் பயன்படு த்தப்பட்டு வந்துள்ளன என்கின்றோம்.

ஒரு நல்ல கூந்தல் சாயம் கூடுமானவரை நீடித்து இருக்க கூடியதாகவும், முடியை வறட்சியாக்காதவையாகவும், கூந்தலின் இயல்பான பொலிவையும், மெருகையும் பளபளப்பையும் குலைத்து விடாத தாகவும் இருக்க வேண்டும். கூந்தலையும், கண்களையும், தோலையும் சேதப்படுத்தக் கூடாது. நச்சுத் தன் மையுள்ளதாக இருக்கக் கூடாது. இறுதியாகப் பயன்படுத்த எளிதாகவும், சீராகப் பரவக் கூடியதாகவும், விரைவில் உலரக் கூடியதாகவும் இருக்க வேண்டும். ஆனால் அப்பேர்ப்பட்ட ஒரு இலட்சிய கூந்தல் சாயத்தை இதுவரை யாரும் தயாரிக்கவில்லை. நடைமுறையில் பயன்படுத்தப்படுகின்ற கூந்தல் சாயங்கள் சிற்சில வேளைகளில் அலர்ஜி எனப்படும் ஒவ்வாமையை உண்டு பண்ணக் கூடியவனவாகவும், கண்களில் பட்டால் எரிச்சல் உண்டு பண்ணக் கூடியன வாகவும், மென்மையான சருமத்தைப் பாதிக்கக் கூடியனவாகவும் உள்ளன. இவ்வித தீமைகள் எதையும் செய்யாத கூந்தல் சாயங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றவரையில் ஹேர் டைகளை மிகக் குறைந்த அளவிலும், கவனத்துடனும் பயன்படுத்துவது நல்லது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Empty Re: மருத்துவக் கேள்வி பதில்கள்

Post by சிவா Fri Jul 31, 2009 8:46 am

எய்ட்ஸ் நோய் உள்ளவர்களுக்கு பிறக்கப் போகும் குழந்தையும் எய்ட்ஸுக் கு ஆளாகி இறக்கக் கூடுமா?கருவறையில் இருக்கும் குழந்தையை எச்.ஐ.வி. எப்படி தாக்குகிறது. குழந்தை யை கருவிலேயே எய்ட்ஸ் நோயாளியாக எவ்வாறு மாற்றுகிறது? இதற்கென நடத்திய ஆய்வுகளில் தொப்புள் கொடி வாயிலாக தாயின் உடலில் உள்ள நோய்க் கிருமியானது வயிற்றில் இருக்கும் குழந்தையையும் பாதிக்கிறது. இந் தக் குழந்தையின் இரத்தம் மற்றும் தாயின் இரத்தம் போன்றவற்றை பரிசோதிப்பதன் மூலம் இதனை அறிந்தனர். இவ்வாறு குழந்தைக்கு ஏற்படும் எச்.ஐ .வி. நோய்த் தொற்றை கண்டுபிடிக்கும் பொருட்டு சாத்தியக் கூறுகளை ஆராய்ந்தனர். அதன் மூலம் முதலாவதாக எச்.ஐ.வி. கிருமியானது நோய் எதிர்ப்புப் பாதையில் செல்லும்போது அடையாளம் காண இயலாத திடீர் மாற்றத்தை ஏற்படுத்துவதாலும், இரண்டாவதாக தொப்புள் கொடியில் உள்ள செல்களுடன் கூடி விரைவான இரட்டிப்பு அடைவதாலும் இந்த கிருமிகள் குழந்தைகளைச் சென்றடைவதாகவும் கண்டறியப்படுகிறது. கருவுற்றிருக்கும் போது அதிகமாக கவனித்துக் கொள்வதாலும், அயல் பொருட்களை கண்டுபிடிக்கும் வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் பிறவி எய்ட்ஸ் நோயாளிகளைக் கட்டுப்ப டுத்தலாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Empty Re: மருத்துவக் கேள்வி பதில்கள்

Post by சிவா Fri Jul 31, 2009 8:46 am

பக்கவாதம் வந்து விட்டால் குணப்படுத்தவே முடியாதாமே?காரணத்தைக் கண்டுபிடித்து மருத்துவம் செய்தால் பக்கவாதம் வந்தவர்களை முற்றிலுமாக குணப்படுத்த முடியும். இது பக்கவாதம் எதனால் ஏற்பட்டது என்பதையே பெரிதும் பொறுத்தது. மூளைக்கு இரத்தத்தை எடுத்துச் செல்கின்ற இரத்தக் குழாய்கள் அடைபடுவதால் ஏற்படும் பக்கவாதம் சீரடையப் பல மாதங்கள் அல்லது சில ஆண்டுகள் கூட ஆகலாம். மூளைக் கட்டியால் ஏற்பட்டிருந்தால் அறுவைச் சிகிச்சை மூலம் கட்டியை நீக்குகின்ற போது பக் கவாதம் உடனே சீரடைந்து விடும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Empty Re: மருத்துவக் கேள்வி பதில்கள்

Post by சிவா Fri Jul 31, 2009 8:48 am

அடிக்கடி valium மாத்திரை சாப்பிடுவதால் உடல் எடை கூடுமா?கண்டிப்பாக கூட வாய்ப்புள்ளது. சிலருக்கு valium மாத்திரை சாப்பிட்ட போது உடல் எடை கூடு மென்று அறியப்பட்டுள்ளது. அதாவது மனநிலை யைப் பொறுத்து உண்ணுகிற உணவின் அளவு கூடவோ, குறையவோ செய்கிறது. valium சாப்பிட்டதும் கவலையை மறந்து அதிக உணவு உண்ணுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அடிக்கடி வாலியம் மாத்திரையை சாப்பிடாதீர்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Empty Re: மருத்துவக் கேள்வி பதில்கள்

Post by சிவா Fri Jul 31, 2009 8:28 pm

எனக்கு 26 வயதாகிறது. 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறேன். குழந்தை பிறந்தவுடன் வெயிட் போட்டு, வயதான தோற்றம் ஏற்பட்டுவிடுமோ என பயமாக இருக்கிறது. குழந்தை பிறந்த பின், தாய்மைக்கு முன்பிருந்த உடல் அளவுக்கு வர என்ன செய்ய வேண்டும்?

இந்த பயம் தாய்மை அடையும் பல பெண்களிடம் இப்போது இருக்கிறது. குழந்தை பிறப்பில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், அந்த சமயத்தில் எடுத்துக் கொள்ளும் உணவு மற்றும் வாழ்க்கை முறைதான் உடல் எடை கூடக் காரணம்.

குழந்தைக்கு பால் கொடுக்கும் சமயத்தில் பசி அதிகமாக எடுக்கும். எனவே உணவில் பழங்கள், காய்கறிகள், பால் ஆகியவற்றை கண்டிப்பாக சேர்க்கவும். மூன்று வேளை வயிறு முட்ட சாப்பிடுவதற்கு பதிலாக அதே உணவைப் பிரித்து, நான்கு வேளையில் அளவாக சாப்பிடவும்.

காபி, சாக்லெட் ஆகியவற்றை தவிர்க்கவும். வைட்டமின் சி மற்றும் ஈ சத்து உணவில் அதிகமாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும். இரவில் விழித்து குழந்தைக்கு பால்தர வேண்டியிருப்பதால் அவ்வப்போது ரெஸ்ட் எடுத்துக் கொள்ளவும்.

உடல் எடையைக் குறைக்க நடை பயிற்சி போதும். டாக்டரின் அறிவுரைப்படி வயிற்றுப்பகுதி தசையை சுருக்கவும், தழும்புகள் போகவும் பயிற்சி செய்யலாம். குழந்தை பிறந்த பின் சிலரால் சிறுநீரை கட்டுப்படுத்த முடியாமல் போகலாம்.


இதற்கும் பெல்விக்புளோர் பயிற்சிகள் உண்டு. இதன் மூலம் சிறுநீர் பிரச்னையை தீர்க்கலாம். மேலும் குழந்தை பிறந்த பின் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிகம் எரிச்சலடைவது, குழந்தையை வெறுப்பது போன்ற எண்ணங்கள் வரலாம்.

இதற்கு குடும்பத்தினரின் அன்பான ஒத்துழைப்பு அவசியம். குழந்தை பிறந்த பின் சிலருக்கு மலத்தில் ரத்தம் வெளியேறலாம், சிறுநீரகத் தொற்று போன்ற பிரச்னைகளுக்கு உடனடியாக டாக்டரிடம் ஆலோசனை பெறவும்.

குழந்தைக்கு பால் கொடுக்கும் போது இரண்டு மார்பகங்களிலும் சரி சமமாகக் கொடுக்கவும். ஒன்றில் மட்டும் குழந்தை அதிகமாக குடிப்பதால் அந்த மார்பகம் மட்டும் பெரிதாகவும், மற்றது சிறிதாகவும் தோற்றம் அளிக்க வாய்ப்புள்ளது.

உணவில் கவனம் செலுத்தி டாக்டரின் ஆலோசனைப்படி உடலுக்கு பயிற்சி கொடுத்தால் பழைய இளமையை திரும்பப் பெறலாம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Empty Re: மருத்துவக் கேள்வி பதில்கள்

Post by சிவா Fri Jul 31, 2009 8:29 pm

மஞ்சள் பூசிக்கொள்வதால் பயன் உண்டா?

மஞ்சள் பூசிக் குளிக்கும் வழக்கம் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு இருந்து வருகிறது. மஞ்சள் தோலுக்கு ஆரோக்கியத்தையும் அழகையும் தருகிறது. இந்த காலத்து பெண்களில் பலர் மஞ்சள் பூசிக்குளிப்பதில்லை.

ஆகையால் தான் அவர்களுக்கு மீசையும், தாடியும் வளர்கின்றன என்ற பலர் நினைக்கின்றனர். இது தவறு. மஞ்சள், முடியின் வளர்ச்சியை அடியோடு தடுப்பதில்லை.

ஓரளவுக்குத் தான் தடை செய்கிறது. இதனால் தான் மஞ்சள் பூசிக் குளிக்கும் பெண்களிலும் பலருக்கு முகத்தில் முடி வளர்ந்திருப்பதை காணலாம்.

மஞ்சள் பூசிக் கொண்டால் ஒரு சிறிது தடைபடுகிறது. பிறகு மஞ்சள் பூசுவதை விட்டு விட்டால் மீண்டும் முடி வளர தொடங்கி விடுகிறது.

பெண்களின் உடலின் பெண் சுரப்பிகள் மிகுந்த அளவுக்கு வேலை செய்யாமல் ஆண் சுரப்பிகள் மிகுதியாக இயங்கினால் பெண்களுக்கு ஆணின் தண்மையும் ஆண்களைப் போலவே உடல் முழுவதிலும் முகத்திலும் முடி வளர்கிறது.

இதை உணராமல் மஞ்சள் பூசிக் குளிக்காத பெண்களுக்கு மட்டும் முடி வளர்கிறது என்று எண்ணுவது அறியாமை! மஞ்சள் பூசிக் கொள்ளும் பெண்களுக்கு முடி இருந்தால் அது பளிச்சென்று தெரியாது என்று வேண்டுமானால் கொள்ளலாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Empty Re: மருத்துவக் கேள்வி பதில்கள்

Post by சிவா Tue Aug 04, 2009 12:15 am

வயது 38 ஆகிறது. இரண்டு வருடமாக எனது உடம்பில் ஒரு மாறுதல்! ஆண் தன்மை போல மாற்றம் ஏற்பட்டுள்ளது. உடம்பில் வழக்கத்துக்கு மாறான இடங்களிலும் முடி முளைத்துள்ளது. முகம்கூட பெண்மையை இழப்பதுபோல தென்படுகிறது. இது எதனால்?


நீங்கள் சொல்கிற அறிகுறியை வைத்து பார்த்தால் இந்த பாதிப்பிற்கு பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என்று பெயர். பெண்களின் கர்ப்பப ;பையில் கரு உருவாவதற்குத் தேவையான சினை முட்டையை உற்பத்தி செய்து அனுப்பும் வேலையை செய்கின்ற இரண்டு சினைப்பைகள், கருப்பைக்கு இருபுறமும் பாதாம் பருப்பு சைஸில் இருக்கின் றன. இந்த சினைப்பைகளில் சினை முட்டைகள் மாதம் ஒரு சினை முட்டை மட்டும் வளர்ச்சியடைந்து ஆணின் உயிரணுவோடு சேரத் தயாராக இருக்கும். உயிரணுவோடு சேர முடியாத முட்டைகள் மாதவிடாயாக வெளியேறி விடும்.

லட்சத்தில் ஒருவருக்கு பாலிசிஸ் டிக் ஓவரி என்கின்ற பாதிப்பு இருக் கும். இந்த பாதிப்பு இருப்பவர்க ளுக்கு சினைப்பையின் சுவர்கள் தடிப் பாக இருக்கும். அதனால் உள்ளேயி ருக்கும் சினை முட்டைகளின் வளர்ச் சியானது குறைந்து மாதவிடாயானது ஒழுங்காக வருவதில்லை. இந்நிலையில் பிட்யூட்டரி சுரப்பி யானது இந்த பாதிப்பினை சரிப்படுத்த அதிகப்படியான ஹார்மோன்களை சுரக்க வைக்கும். அதிகப் படியாக பிட்யூட்டரி சுரப்பி சுரக்க ஆரம்பிப்பதனால் வழ வழப்பாக உள்ள பெண்களின் முகத்தில் முடி வளரத் தொடங்கி விடுகின் றது.பெண்மை தன்மை குறைய ஆரம்பிக்கின்றது. இதுதான் இந்த பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோமின் விபரீத விளைவு. இந்த பாதிப்பிற்கு இன்றைய நவீன மருத்துவத்தில் சிறந்த சிகிச்சைகள் உள்ளன. நீங்கள் நல்ல ஹார்மோன் ஸ்பெஷலிஸ்டை அணுகுவது நல்லது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Empty Re: மருத்துவக் கேள்வி பதில்கள்

Post by சிவா Sat Aug 08, 2009 5:39 pm

இளம் வயதில் கனவில் விந்து வெளியேறுதல் எதனால்?


கனவில் குமரப்பருவம் ஆரம்பித்தபின் விந்து வெளியேறுவது இயற்கை. உடல் வலு, ஊட்ட உணவு, உடலுறவு (செக்ஸ்) சிந்தனை, உட லுறவு தூண்டுதல் ஏற்பட்டு உடலுறவு செய்ய முடியாத நிலை, அதிர்ச்சிகள், ஏக்கம் முதலியவற்றால் 14 வயது முதல் கனவில் விந்து வெளியாகவே செய்யும். உடல் நலம் நன்றாக இருந்து வாரம் சில முறை வெளியாவதில் தவறில்லை. விந்து வெளியான மறுநாள் உடல் சோர்வு ஏற்படக் கூடாது. இரவில் தூக்கம் கெடக் கூடாது. இப்படி நேர்ந்தால் மட்டுமே சிகிச்சை பெற வேண்டும். சித்த மருந்து இதற்கு நல்லது.

அமுக்குராப்பொடி (சூரணம்) வல்லாரைப் பொடி (அளவோடு), சர்ப்ப கந்தா என்ற அமல் பொரியன் பொடி இவை மிகவும் சிறந்த மருந்துகள். இத்துடன் சிலாசத்து மற்றும் அன்னபேதி செந்தூரம் உட்கொள்ளலாம். மருத்துவர் மேற்பார்வையில் நல்ல குணம் கிட்டும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Empty Re: மருத்துவக் கேள்வி பதில்கள்

Post by சிவா Sat Aug 08, 2009 5:40 pm

நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் மருந்துகள் சித்த மருத்துவத்தில் இருக்கிறதா?

இதர மருத்துவ முறையில் எல்லாவற்றிலும் சித்த மருத்துவம் மேம்பட்டது. திருமூலர் கூறிய வழிகளில் மூச்சுப் பயிற்சி, தியானம் செய்து வரும்போது நோய் எதிர்ப்பு சக்தி உடலில் சிறந்து துலங்கும். பச்சிலை குடிநீர், அமுக்குரா, நன்னாரி, வல்லாரை போன்ற மூலிகைகளை உண்ணும்போது நல்ல நோய் எதிர்ப்பு சக்தி கிட்டுவதுடன் உடல் எடை, முகப்பொலிவு, சுறுசுறுப்பு போன்றவை கிட்டும். இவை என்றும் தீங்கற்றவை.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Empty Re: மருத்துவக் கேள்வி பதில்கள்

Post by சிவா Sat Aug 08, 2009 5:41 pm

எனக்கு மூட்டுவலி கடந்த ஐந்து வருடமாக உள்ளது. இதற்கு என்னன்னமோ வைத்தியம் செய்து பார்த்துவிட்டேன். ஆனால் எனக்குள்ள நோயானது சிறிதுகூட குணமாகவில்லை. மூட்டுவலிக்கு என்ன காரணம்?

மூட்டுவலி வயதாவதன் காரணமாக வரலாம். நமது மூட்டுப்பகுதிகளில் உள்ள உராய்வு எண்ணெயானது உலர்ந்து போகும்போது மூட்டுவலியானது வரும். ஒரு சிலருக்கு பரம்பரையின் காரணமாகவும்கூட இந்த மூட்டு வலியானது வரலாம். இத்தகைய மூட்டுவலியானது மிகுந்த சிரமத்தை கொடுக்கக் கூடியது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Empty Re: மருத்துவக் கேள்வி பதில்கள்

Post by சிவா Fri Aug 21, 2009 4:07 pm

நான் காலையில் வெறும் வயிற்றில் பால் மற்றும் முட்டை சாப்பிடுவேன். ஆனால் எனக்கு சில நிமிடங்களில் முதுகில் ஒருவிதமான பிடிப்பு தோன்றுகிறது. வெறும் வயிற்றில் முட்டை சாப்பிட்டால் வாயுப்பிடிப்பு தோன்றுமா?


முட்டையிலுள்ள மஞ்சள் கருசெரிக்க சற்று கடிமான ஒன்றாகும். ஆகையால்தான் நமது உணவுமுறையில் முட்டை உட்கொள்ளும்பொழுது அத்துடன் மிளகு, சீரகம், மஞ்சள்தூள் சேர்த்த உட்கொள்ளும் பழக்கம் உள்ளது. மேலும் முட்டையை வேக வைக்காமல் பச்சையாக சாப்பிடும்பொழுது செரிமானப் பாதையில்சில வேதிமாற்றங்கள் நிகழ்வதால் நைட்ரஜன் வாயு அதிகப்பட்டு தசைப்பிடிப்பு தோன்றுகிறது. ஆகவே முட்டையுடன் வெங்காயம், சீரகம், மிளகு, மல்லி, மஞ்சள் ஆகியன சேர்த்து சாப்பிடுவது நல்லது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Empty Re: மருத்துவக் கேள்வி பதில்கள்

Post by சிவா Sat Aug 22, 2009 1:44 am

எனக்கு வயது 31. நீரிழிவு இருக்கிறது. கல்யாணமாகி 5 வருடங்களாகியும் குழந்தை இல்லை. நீரிழிவு இருப்பதுதான் காரணம் என்கிறார்கள். எனக்குக் குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லையா?

நீரிழிவு என்பது ஆண், பெண் இருவரையும், எந்த வயதினரையும் தாக்கலாம். தலையிலிருந்து, கால் வரை அத்தனை பாகங்களுக்கும் பாதிப்பை உண்டாக்கும் விஷயம் அது. நீரிழிவால் பாதிக்கப் பட்டிருக்கும் பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதில் சிக்கல்கள் இருக்கத்தான் செய்கிறது. அப்படியே கருத்தரித்தாலும், பிரசவம் வரை, தாய்க்கும், சேய்க்கும் பல பிரச்னைகளை உண்டாக்கும். நீரிழிவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது முதல் விஷயம். அடுத்து உடல் பருமன் அதிகமாக இருந்தால், அதைக் குறைத்தே ஆக வேண்டும்.

சர்க்கரையின் அளவுக்கேற்ப, உங்கள் மருத்துவரிடம் கேட்டு, மாத்திரைகளோ, இன்சுலினோ எடுத்துக் கொள்ளுங்கள். கர்ப்பம் தரித்தால், வழக்கத்தைவிட சற்று அதிகமாக இன்சுலின் தேவைப்படலாம்.

கர்ப்ப காலம் முடிகிற வரை, மிக மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம். மருத்துவரின் கண்காணிப்பில் இருப்பது நல்லது. பிரசவம் முடிந்ததும், சர்க்கரையின் அளவுக்கேற்ப, அதற்கான மருந்துகளைத் தொடர வேண்டியதும் முக்கியம்.

நீரிழிவு என்பது மரபணு சம்பந்தப்பட்டது என்பதால், உங்களிடமிருந்து, உங்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கும் அது வரலாம்.இது தவிர, சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் மட்டும் நீரிழிவு ஏற்படும். அது தற்காலிகமானது. பிரசவத்துக்குப் பிறகு சரியாகி விடும்.

ஆனாலும் அதை அலட்சியப்படுத்தாமல், பிரத்யேக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். நீரிழிவுக்கான மருந்துகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்து, சரியான எடையுடன், ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறினாலே உங்களுக்கு கர்ப்பம் தரிக்கும். கவலை வேண்டாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Empty Re: மருத்துவக் கேள்வி பதில்கள்

Post by சிவா Fri Aug 28, 2009 1:08 am

மழைக்காலம் வந்தாலே எனக்கு தொண்டைக்கட்டு, இருமல் வந்துவிடுகிறது. இதற்கு ஏதேனும் மூலிகைப் பொடிகள் இருக்கிறதா?

அதிமதுரம், கற்கடாகசிங்கி இரண்டையும் சம அளவு எடுத்து மைய இடித்து, கால் பங்கு கற்கண்டுப் பொடி சேர்த்து கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனை வாயிலிட்டு சப்பி சாப்பிட இருமல், தொண்டைக்கட்டு நீங்கும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Empty Re: மருத்துவக் கேள்வி பதில்கள்

Post by சிவா Tue Sep 15, 2009 10:52 am

நான் காதலிக்கும் பெண்ணின் தாத்தா, அம்மா புற்றுநோயால் இறந்தவங்க. இதனால் அந்தப் பெண்ணை எனக்குத் திருமணம் செய்துவைக்க என் பெற்றோர் மறுக்கின்றனர். புற்றுநோய் பரம்பரை வியாதியா? என் காதலியையும் புற்றுநோய் நிச்சயம் பாதிக்குமா? பரிசோதனை மூலம் புற்றுநோய் வரவே வராது என்று உறுதிப்படுத்த முடியுமா?


புற்றுநோய் என்பது பரம்பரை நோய் கிடையாது. சராசரி ஆரோக்கியத்துடன் இருக்கும் எல்லாரையம் புற்றுநோய் தாக்கும் அபாயம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், பெற்றோருக்கு இருந்தால், குறிப்பாக அம்மாவுக்குப் புற்றுநோய் இருந்தால் மகளைப் புற்றுநோய் தாக்குவதற்கான வாய்ப்பு 0.2 முதல் 0.3 சதவிகிதம் மட்டுமே அதிகம். அதற்கான அந்தப் பெண்ணுக்குக் கட்டாயம் புற்றுநோய் பாதிக்கும் என்று அர்த்தம் கிடையாது.

நீரழிவு நோய் போல நிச்சயம் பாதிக்கும் பரம்பரை நோய் கிடையாது புற்றுநோய். பொதுவாக புற்றுநோய்களுக்கான பரிசோதனை 10 வயதைத் தாண்டியவர்களுக்குத்தான் மேற்கொள்ளப்படும். எனவே பரம்பரைச் சிக்கல் கவலைகளை விட்டுத் தள்ளுங்கள். நீங்கள் உறுதியாக இருந்தால் உங்கள் காதலியைத் தாராளமாக மனைவியாக்கிக் கொள்ளுங்கள். ஆனால் அவருடைய 30 வயதுக்கு மேல் தவறாமல் பரிசோதித்துக் கொள்ளுங்கள்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவக் கேள்வி பதில்கள் - Page 5 Empty Re: மருத்துவக் கேள்வி பதில்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை