புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்திநேர பூபாளம்! Poll_c10அந்திநேர பூபாளம்! Poll_m10அந்திநேர பூபாளம்! Poll_c10 
107 Posts - 49%
heezulia
அந்திநேர பூபாளம்! Poll_c10அந்திநேர பூபாளம்! Poll_m10அந்திநேர பூபாளம்! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
அந்திநேர பூபாளம்! Poll_c10அந்திநேர பூபாளம்! Poll_m10அந்திநேர பூபாளம்! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
அந்திநேர பூபாளம்! Poll_c10அந்திநேர பூபாளம்! Poll_m10அந்திநேர பூபாளம்! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
அந்திநேர பூபாளம்! Poll_c10அந்திநேர பூபாளம்! Poll_m10அந்திநேர பூபாளம்! Poll_c10 
7 Posts - 3%
prajai
அந்திநேர பூபாளம்! Poll_c10அந்திநேர பூபாளம்! Poll_m10அந்திநேர பூபாளம்! Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
அந்திநேர பூபாளம்! Poll_c10அந்திநேர பூபாளம்! Poll_m10அந்திநேர பூபாளம்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
அந்திநேர பூபாளம்! Poll_c10அந்திநேர பூபாளம்! Poll_m10அந்திநேர பூபாளம்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அந்திநேர பூபாளம்! Poll_c10அந்திநேர பூபாளம்! Poll_m10அந்திநேர பூபாளம்! Poll_c10 
2 Posts - 1%
sanji
அந்திநேர பூபாளம்! Poll_c10அந்திநேர பூபாளம்! Poll_m10அந்திநேர பூபாளம்! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்திநேர பூபாளம்! Poll_c10அந்திநேர பூபாளம்! Poll_m10அந்திநேர பூபாளம்! Poll_c10 
234 Posts - 52%
heezulia
அந்திநேர பூபாளம்! Poll_c10அந்திநேர பூபாளம்! Poll_m10அந்திநேர பூபாளம்! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
அந்திநேர பூபாளம்! Poll_c10அந்திநேர பூபாளம்! Poll_m10அந்திநேர பூபாளம்! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
அந்திநேர பூபாளம்! Poll_c10அந்திநேர பூபாளம்! Poll_m10அந்திநேர பூபாளம்! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
அந்திநேர பூபாளம்! Poll_c10அந்திநேர பூபாளம்! Poll_m10அந்திநேர பூபாளம்! Poll_c10 
18 Posts - 4%
prajai
அந்திநேர பூபாளம்! Poll_c10அந்திநேர பூபாளம்! Poll_m10அந்திநேர பூபாளம்! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
அந்திநேர பூபாளம்! Poll_c10அந்திநேர பூபாளம்! Poll_m10அந்திநேர பூபாளம்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அந்திநேர பூபாளம்! Poll_c10அந்திநேர பூபாளம்! Poll_m10அந்திநேர பூபாளம்! Poll_c10 
2 Posts - 0%
Barushree
அந்திநேர பூபாளம்! Poll_c10அந்திநேர பூபாளம்! Poll_m10அந்திநேர பூபாளம்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அந்திநேர பூபாளம்! Poll_c10அந்திநேர பூபாளம்! Poll_m10அந்திநேர பூபாளம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்திநேர பூபாளம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 05, 2010 4:33 pm

அந்திநேர பூபாளம்! Vmalarnews_14355105162


""அப்பா... அந்த சூப்பர் மார்க்கெட் மேனேஜரை பார்த்து பேசினீங்களா...'' சாதத்தை குழம்பில் கலந்து கொண்டே கேட்டான் கோபி...

குழந்தைக்கு சாதம் ஊட்டிக் கொண்டிருந்த மைதிலி, தன் மாமனாரின் பதிலுக்காகக் காதைத் தீட்டிக் கொண்டாள். மாமனார், ஏதும் பேசாமல் சாப்பிட்டுக் கொண் டிருந்தார்.

""என்னப்பா... உங்களைத் தானே கேட்டுட்டு இருக்கேன்! பேசாம இருந்தா எப்படி... போய் சந்திச்சீங்களா... சும்மா வீட்டுலேயே இருக்கறதுக்கு, அப்படி போய் வந்தா, பொழுதும் போகும், பணமும் கிடைக்கும் இல்லே! உங்க மருமக, ரொம்ப டிரை பண்ணி சிபாரிசுடன், வேலையை கேட்டு வாங்கியிருக்கா... சம்பளமும் நல்லாத் தானிருக்கு... இந்த காலத்துலே, ரிடையர்டு பெர்சனுக்கு நாலாயிராம் ரூபா சம்பளம்ங்கறது அதிகம் தானே...'' என்றான் கோபி.

அம்மா, இடைமறித்து, ""முதல்லே சாப்பிட்டு முடி கோபி... பிறகு பேசலாம்,'' என்றாள்.

""என்னம்மா! நீயாவது அப்பாக்கு சொல்லலாம் இல்லே... வெலவாசி ஏற்றமாயிருக்கிற இந்த காலத்துலே, ஒருத்தரும் சும்மாயிருக்கக் கூடாதும்மா... அரிசி விலையை பார்த்தே இல்லே, கிலோ நாப்பது ரூபாயாம்...''

வாயையே திறக்காமல் சாப்பிட்டுக் கொண்டிருந்த மாமனாரை ஓரக் கண்ணால் பார்த்தவளுக்கு, பற்றிக் கொண்டு வந்தது.

""க்கும்... பேசறவங்க பேசிட்டே இருக்க வேண்டியது தான்... வாயத் திறந்தாத்தானே... சின்னவரு, எந்தக் கவலையுமில்லாம, டில்லியில ஹாய்யா இருக்காரு... பெரியவரு, சும்மா வாய் வார்த்தையா அப்பாவை கூப்பிட்டுட்டு இருக்கிறாரு... நடுவுலே நீங்க தான் ஏமாளி! எவ்வளவுன்னு தான் நாம சுமக்க முடியும்... வேலையிலிருந்து ரிடையர்ட் ஆனாலும், ஏதோ அதிர்ஷ்டம் இருந்து திரும்ப கூப்பிடறாங்க... அதுக்கும் மாட்டேன்னு அழிச்சாட்டியம் பண்ணினா எப்படி?'' முணு முணுப்பது போல ஸ்பஷ்டமாகவே பேசினாள் மைதிலி.

""ஆமாம்மா... கிருஷ்ணா தான் கூப்பிட்டுட்டே இருக்கானே... அப்பா அவன்கிட்டே போயிருக்கட்டும்... உங்களுக்கு செய்ய வேண்டிய கடமை அவனுக்கும் இல்லியா என்ன?''

அப்பா நிமிர்ந்து, அம்மாவைப் பார்த்தார்.

""ஏண்டா! கிருஷ்ணா இருக்கறது பெங்களூரு... அப்பாவுக்கு கிளைமேட் ஒத்துக்காது... அவருக்கா ஏதும் கேட்க தெரியாது; செஞ்சுக்கத் தெரியாது...''

""அப்படின்னா எப்படிம்மா... பெங்களூரும் போ மாட்டேன்; வேலைக்கும் போக மாட்டேன்; சும்மா தான் வீட்டிலே இருப்பேன்னு பிடிவாதம் பிடிச்சா எப்படி...''

""என்னடா கோபி இது! பேச்சுக்கு, பேச்சு, சும்மா இருக்கார், சும்மா இருக்கார்ங்கறே... அவரு எங்கடா சும்மா இருக்கார்? காலையிலே 5.30 மணிக்கு எழுந்தார்னா, பால் பூத்துக்குப் போய் வர்றதுல இருந்து, மார்க்கெட் போறது, பாங்க் போறது, டெலிபோன் பில் கட்டறது, உன் பிள்ளையை ஸ்கூல்ல விடறது, அழைச்சிட்டு வர்றதுன்னு, அவரு தானே செய்யறாரு... அவரு ஆபிசுக்கு போயிட்டு இருந்ததை விட, இப்போ தான் அவருக்கு அலைச்சல் அதிகமா இருக்கு...'' என்றாள் அம்மா காட்டமாக.

""இதெல்லாம் ஒரு வேலையா? எல்லா வீட்டிலும், எல்லாரும் செய்யற வேலை தான்,'' என்று நொடித்தாள் மைதிலி.

""ஆமாம்மா... எல்லார் வீட்டிலும் இப்படி தான், ரிடையர்ட் ஆனதுமே, ஸ்கூல் ஆட்டோவை நிறுத்திடுவாங்க... பிறந்த வீட்டு மனுஷா வந்துட்டா, சும்மா தானே இருக்கீங்கன்னு, மட்டுமரியாதை இல்லாமல், மாமனாரை கடைக்கு விரட்டிடுவாங்க... மாமியாருக்கு உதவியா, ஒரு துரும்பைக் கிள்ளி அந்தண்டை போட மாட்டாங்க...

""மாமியார், காலையில காபிக் கலக்கறதிலிருந்து, டிபன், சமையல், வீடு பெருக்க, கழுவ, துடைக்க, பேரப் பிள்ளையோட அவதிபடணும்... மருமகளைக் கேட்டா, உதவியை எதிர்பார்க்க முடியுமா? ஆபீசுக்குப் போற மருமகளாச்சே...!''

முகம் சிவந்து போனாள் மைதிலி.


அம்மா சொன்னதில் இருந்த உண்மை, முகத்தில் அறைந்தது... ஸ்கூல் ஆட்டோவைக் கூட, வம்பு பண்ணி நிறுத்தினாள். வீட்டிலும் துரும்பை கிள்ளிப் போட மாட்டாள். மைதிலி எழுந்து காபி குடிக்க வருகையில், பாதி சமையல் முடிந்திருக்கும். சாயந்திரமும், காபி குடித்து விட்டு, பேப்பர், "டிவி' என்று பொழுதை போக்கி, சாப்பிட்டுவிட்டு, படுத்து விடுவாள். கோபிக்கு முகம் விழுந்து விட்டது...

""இதோ, பாருடா... ஆன வயசுக்கு, நாங்களும் உழைச்சு கொட்டிக்கிட்டு தானிருக்கோம்... சும்மா ஒண்ணும் இல்லே... உட்காரக் கூட நேரமில்லே... நேத்து, வெயில்லே போய் டெலிபோன் பில் கட்டிட்டு, வேர்த்து, விறுவிறுத்து போய் உங்கப்பா வந்து நின்ன நிலைமை, எனக்குத் தான் தெரியும்!

""அவரை, "வேலைக்குப் போ'ன்னு ஆர்டர் போட நீ யாருடா... அவரு ரிடையர்ட் ஆகி இத்தனை மாசமாகியும், நீ வீட்டுக்கு, எப்பவுந்தர்ற மூவாயிரத்தைத் தானே தந்துட்டு இருக்கே... நானோ, அப்பாவோ, உன் சம்பளம் பத்தியோ, உன் பெண்டாட்டி சம்பளம் பத்தியோ வாயத் திறந்திருப்போமா?

""அரிசி விலையை பத்தி நீ பேசுறத கேக்க தமாசாத் தாண்டா இருக்கு... "அப்பா சம்பளம் இல்லையே, பென்ஷனும் இல்லையே... எப்படிம்மா சமாளிக்கிறீங்க?'ன்னு என்னைக் காவது கேட்டு இருக்கியா?

""எங்களை சுமையா நினைக்கிறே... நாங்களும், அந்தக் காலத்துலே உங்களையெல்லாம் சுமையா நினைச்சிருந்தா, இப்படி உட்கார்ந்து சட்டம் பேச முடியுமாடா?''

பொரிந்து தள்ளினாள் அம்மா.

அம்மாவா இது? அதிர்ந்து கூட பேசாத அம்மாவா இப்படியெல்லாம் பேசுகிறாள்? இது தான் சாது மிரள்வதா? கோபி மிரண்டான்!

""இப்போ என்ன கேட்டுட்டோம்... இப்படி படபடன்னு பொரியுறீங்க? அப்பா, அம்மாவை வச்சிக் காப்பாத்தற கடமை, மத்தபுள்ளைகளுக்கு இல்லியா?'' என்று, நேரடியாகவே மோதினாள் மைதிலி.

""இல்லைன்னு சொல்லலையே... ஆனா, வயசான காலத்துலே, எங்களை திசைக்கொருவரா பிரிக்க, உங்களுக்கு உரிமை இல்லைங்கறேன்! வயசு காலத்துலே, உடம்புலே இளம் ரத்தம் ஓடற காலத்துலே கூட பிரிஞ்சு வாழலாம்; ஆனா, வயசான காலத்துலே தான், மனைவியோட அனுசரணை கணவனுக்கு தேவை... அதே மாதிரி தான், கணவனுடைய ஆதரவான அரவணைப்பு, மனைவிக்கும் தேவை. எங்களைப் பிரிக்கிற உரிமையை, உங்களுக்கு யார் குடுத்தது?''

தலையைக் குனிந்து கொண்டான் கோபி. மைதிலியும் வாயடைத்துப் போனாள்.


""இங்க பாரும்மா மைதிலி... நான் தான் அவரை வேலைக்கு போகக் கூடாதுன்னு சொன்னேன்... உழைச்சது போதும்ன்னு தானே ஓய்வு குடுக்கறாங்க... அப்புறம், "வேலைக்கு போ... போ'ன்னா என்ன அர்த்தம்?

""நான் தான் பொம்பளை... மருமக வந்திட்டான்னு, "ஹா'ன்னு காலை நீட்டி படுக்க முடியலை. பொறுப்பை ஏத்துக்கிட்டு, நமக்கு ஓய்வு குடுப்பா மருமகள்ன்னு பார்த்தா, மேல, மேல, ஓய்வு ஒழிச்சல் இல்லாம வேலை வாங்கற மருமகளுக்குத் தான் நான் வரம் வாங்கி வந்திருக்கேன்...

""நாளு, கிழமைன்னு கோவில் குளம் போக முடியுதா... ஊரு, திருநாளுன்னு கிளம்ப முடியுதா... கல்யாணமாகி வந்த அன்னிக்கு கையில பிடிச்ச கரண்டியை, கீழே வைக்க இன்னமும் நேரம் வரலை...''

அலுத்துக் கொண்டாள் அம்மா.

""இதோ பாருங்க... உங்கம்மா ரொம்ப தான் பேசுறாங்க... நல்லா இல்லே... ஆபீசுக்கும் போயிட்டு, வீட்டுலேயும் உழைச்சுக் கொட்ட என்னால ஆகாது...''

சண்டைக்கோழியாய் சிலிர்த்துக் கொண்டாள் மைதிலி.

""கோபி... மைதிலி... வீண் பேச்சு வேண்டாம்... எதுக்கு வீண் மனஸ்தாபம்? நாங்க ஒரு முடிவுக்கு வந்து இருக்கோம்...''

முதன் முறையாய் வாயைத் திறந்தார் அப்பா...

""கோபி... உங்கம்மா தினமும், தோள் வலி, மூட்டு வலின்னு புலம்பறா... அவளுக்கு முடியலை; வயசாகுதுல்ல... நீ சொல்றாப்புல, என்னாலயும் முந்தி மாதிரி அரக்க பரக்கன்னு ஆபீசுக்கு ஓட முடியாது... மனசும், உடம்பும் ஓய்வுக்காக ஏங்குது...

""அதனால, நீ என்ன பண்றே... ஒரு வீடு பார்த்துகிட்டு தனிக்குடித்தனம் போயிடு... ஒரு மாசம் டைம் எடுத்துக்கோ... பாதிப் போர்ஷன் வீட்டை வாடகைக்கு விடறதா தீர்மானிச்சுட்டேன்... துணைக்கு, துணையும் ஆச்சு; செலவுக்கு பணமும் ஆச்சு... எங்களுக்கும், கடைசி காலத்தில் ரெஸ்ட்டும் கிடைக்கும்,'' என்றார் முடிவான தொனியில்.
""அப்... அப்பா, திடீர்னு...''

இந்த அதிரடியை எதிர் பார்க்கவில்லை கோபி; வார்த்தை ஒத்துழைக்க மறுத்தது.

""மேற்கொண்டு பேச ஏதுமில்லை கோபி... இன்னில இருந்து ஒரு மாசம் டைம்... ஆல் ரெடி, குடித்தனம் வர்றவர் கிட்டே அட்வான்ஸ் வாங்கியாச்சு... நீ கிளம்பித் தான் ஆகணும்... ஏன்னா, இது என் சம்பாத்தியத்துலே, நான் உழைச்சு கஷ்டப்பட்டு கட்டின வீடு...''

அழுத்தமாக சொல்லிவிட்டு, வாஷ்பேசினில் கையலம்பினார் அப்பா.

சாப்பிட்டு முடித்த பாத்திரங்களை எடுத்துக் கொண்டு உள்ளே போனாள் அம்மா. அதிர்ச்சியில் சிலையாய் உறைந்து நின்றாள் மைதிலி!


***
ஜே.செல்லம் ஜெரினா




அந்திநேர பூபாளம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Fri Feb 05, 2010 5:01 pm

வயசான காலத்துலே, எங்களை திசைக்கொருவரா பிரிக்க, உங்களுக்கு உரிமை இல்லைங்கறேன்! வயசு காலத்துலே, உடம்புலே இளம் ரத்தம் ஓடற காலத்துலே கூட பிரிஞ்சு வாழலாம்; ஆனா, வயசான காலத்துலே தான், மனைவியோட அனுசரணை கணவனுக்கு தேவை... அதே மாதிரி தான், கணவனுடைய ஆதரவான அரவணைப்பு, மனைவிக்கும் தேவை.



இன்றைய சூழலில் முதியவர்களின் நிலை இதுதான்



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 05, 2010 5:04 pm

ரொம்ப வித்தியாசமான பதில் இதை எதிர்பார்த்திருக்க மாட்டான் அப்பாவிடமிருந்து




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Feb 05, 2010 5:29 pm

நல்ல கருத்துள்ள கதை.. அந்திநேர பூபாளம்! 677196 அந்திநேர பூபாளம்! 677196 அந்திநேர பூபாளம்! 677196

சிலருக்கு அருமை அருகில் இருக்கும் போது உணரபடுவதில்லை...

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 05, 2010 5:51 pm

இளமாறன் wrote:நல்ல கருத்துள்ள கதை.. அந்திநேர பூபாளம்! 677196 அந்திநேர பூபாளம்! 677196 அந்திநேர பூபாளம்! 677196

சிலருக்கு அருமை அருகில் இருக்கும் போது உணரபடுவதில்லை...

இப்படித்தான் போர்க்களம் படத்தில் ஹீரோக்கு பக்கத்துலயே வில்லன் இருப்பான் ஆனால் அவன் உணரமாட்டான் ஏனா ஹீரோக்கு கண்ணு தெரியாது அந்திநேர பூபாளம்! Icon_lol அந்திநேர பூபாளம்! Icon_lol




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக