புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 5 Poll_c10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 5 Poll_m10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 5 Poll_c10 
85 Posts - 79%
heezulia
தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 5 Poll_c10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 5 Poll_m10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 5 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 5 Poll_c10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 5 Poll_m10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 5 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 5 Poll_c10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 5 Poll_m10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 5 Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 5 Poll_c10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 5 Poll_m10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 5 Poll_c10 
250 Posts - 77%
heezulia
தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 5 Poll_c10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 5 Poll_m10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 5 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 5 Poll_c10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 5 Poll_m10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 5 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 5 Poll_c10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 5 Poll_m10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 5 Poll_c10 
8 Posts - 2%
prajai
தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 5 Poll_c10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 5 Poll_m10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 5 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 5 Poll_c10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 5 Poll_m10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 5 Poll_c10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 5 Poll_m10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Barushree
தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 5 Poll_c10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 5 Poll_m10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 5 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 5 Poll_c10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 5 Poll_m10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 5 Poll_c10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 5 Poll_m10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 5 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை


   
   

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

PostANUBAMA KARTHIK Mon Nov 26, 2018 1:05 pm

First topic message reminder :

தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை 
முதல் அத்தியாயம்
எனக்கு பிடித்த கவிதை
                                                                யாரோவாய் அறிமுகமாகி யாதுமாகி நின்றவனே
உன்னுள் என்னை காண ஓரு நொடி திகைத்தேனே
       என் இதயதுடிப்பின் சத்தம் கூட உன் பேரை சொல்லிட
       உன்னுள் கரைந்து நானோ என் சுயம் தொலைத்தேனே
 
 
                               கூடல் மாநகர் தூங்கா நகரம் சொக்கனும் மீனாட்சியும் அரசாட்சி செய்யும் பெருமைக்கும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சிறப்புக்கும் உரிய ஊர்
 
 
 நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே வாதம் பண்ணிய நக்கீரர் வாழ்ந்த ஊர் அட அது தாங்க நம்ம மதுரை இந்த கதையின் களமும் மதுரைதாங்க
 
 
சுற்றிலும் புதிய ரக கார்கள் அணிவகுத்து நிற்க மிக பிரம்மாண்டமாக நகரின் நடுவில் இருக்கும் அந்த திருமண மண்டபத்தில் உறவினர்கள் புடைசூழ மங்கல வாத்தியம் முழங்கிட குறிப்பிட்ட முகூர்த்தவேளையில் வெட்கம் மேலிட சிவந்த முகத்துடன் அழகின் சொரூபமாக தன் அருகில் அமர்ந்து இருக்கும் மனையாளின் சங்குகழுத்தில் மங்கலநாண் பூட்டிவிட்டு  பெருமையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் நம்ம ஹுரோ.
 
 
 
தங்களிடம் ஆசி பெற வந்த இளவல்களை  இன்முகத்தோடு அருகிலிருத்தி கணவருடன் சேர்ந்து நின்று வாழ்த்திட தயாராக
நின்றாள் நம்ம ஹுரோயின்
 
 
 என்னங்க ஒரே குழப்பமா இருக்கா?  இருக்காதா பின்னே இங்கே நடக்குறது  மீனாட்சி எண்டர்பிரைசஸ்  நிறுவனங்களின் உரிமையாளர்கள் குடும்ப தலைவர் ஷேஷகிரி -லக்ஷ்மி தம்பதிகளின் மணிவிழாவாச்சே
 
குடும்ப உறுப்பினர்கள் அலுவலக ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் என அனைவரிடமும் நல்லுறவு  பேணிவரும் அவருக்கும் அவருடன் பலவருடமாக இணை பிரியாமல் அன்பும் காதலும் குறையாமல் வாழ்ந்துவரும் அவர் மனைவிக்குக்கும் நடக்கும் மணிவிழா
வாங்க நாமும் அவர்களிடம் ஆசி பெற்று வரலாம்


ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

PostANUBAMA KARTHIK Thu Dec 27, 2018 5:59 pm

தோல்வி நிலையென நினைத்தால்
அத்தியாயம்-16
எனக்கு பிடித்த கவிதை
 
பிரிவு இல்லா உறவு ஒன்று உண்டென்று
முடிவு இல்லா கனவு கண்டேன்
கண்விழித்து எழும் முன்னே
காணாமல் போனவளே உன்னை
காணும்வரை விழிமூட மறுக்குதடி
 
தன் மகளின் கடைசியாக இப்படி ஒரு நிலையிலா பார்க்கவேண்டும் கதறி துடித்த  ப்ரபாவின் பெற்றோரை தேற்றுவதிலும்,  இறுதி காரியங்கள் அனைத்தும் குறைவின்றி நடப்பதிலும்  பாஸ்கருக்கு துணை நின்றான் ஷேஷகிரி
 
தன் வாழ்வில் சாரதாவின் உறுதியற்ற காதலால் நடந்த சம்பவங்களின் பாதிப்பால் காதல் என்ற சொல்லே வெறுத்து போய் இருந்தது பாஸ்கருக்கு இது தெரியாத லக்ஷ்மியும் ஷேஷகிரியும் மெல்ல காதல் வயப்பட்டனர்
 
நாட்கள் செல்ல செல்ல மூத்த மகள் மறைந்து விட்ட சோகத்தில் இருந்து மனதை தேற்றி கொண்ட ப்ரபாவின் பெற்றோர் தன் இளைய மகளின் வளைகாப்பு வைபவத்திற்க்காக தயாராகினர்
 
வளைகாப்பு நாளும் வந்தது பட்டு சேலை உடுத்தி அழகின் உருவமாய் தாய்மையின் சோபையோடு மிளிர்ந்த  தன் மனைவியை விட்டு கண்ணை எடுக்கவில்லை பாஸ்கர்
 
எளிமையான அலங்காரத்திலும் ஒரு தேவதை பூமியில் இறங்கி வந்தது போல இருந்த லக்ஷ்மியை பின் தொடர்ந்தன ஷேஷகிரியின் கண்கள்
 
லக்ஷ்மியின் அழகை கண்டு அங்கு வந்த ஒரு குடும்பத்தினர் தங்கள் வீட்டு வரனுக்கு லக்ஷ்மியை பெண் கேட்க அதை காதில் வாங்கிய காதலர்கள் இருவருமே அதிர்ந்தனர் அப்போதைக்கு பாஸ்கரோ தான் யோசித்து சொல்வதாக சொல்லிவிட சற்றே நிம்மதியடைந்தனர்
 
தன் தாய் வீட்டுக்கு மனைவி சென்றுவிட அவளின் பிரிவால் பாஸ்கர் சோர்வாக இருந்தான் மனைவியின் பிரசவம் நல்லபடி நடந்தேற வேண்டி கோவிலுக்கு சென்ற ஒரு மாலை வேளையில் அதே கோவிலில் ஒரு ஓரமாக நின்று கண்களில் காதல் மின்ன எதிர்க்காலத்தை குறித்து பேசிக்கொண்டிருந்த காதல் ஜோடிகள் கண்ணில் பட்டனர் அவன் கூடவந்தவர்களும் அதை பார்த்து அதிர்ந்து போனார்கள்
 
ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவுக்கு அமைதியாக இருந்ததது வீடு எதிர்பாராது பாஸ்கரின் கண்களில் சிக்கிவிட்ட காதல் ஜோடி திகைப்பூண்டை மிதித்தது போல ஸ்தம்பித்து நின்றனர் எதுவும் பேசாது வீட்டுக்கு இருவரையும் அழைத்து வந்த பாஸ்கரின் கோபத்தில் மிரண்டாள் லக்ஷ்மி
 
மிரண்டு நின்ற லக்ஷ்மிக்கு  கண்களால் தைரியம் சொன்னான் ஷேஷகிரி மூவரில் முதலில் பேச ஆரம்பித்த பாஸ்கர் லக்ஷ்மியை நோக்கி  இந்தோ பாரு லக்ஷ்மி என் வாழ்க்கையில உறுதி இல்லாத காதலால எத்தனை பிரச்சனை வந்தது நு உனக்கு தெரியும்
 
அப்பலேர்ந்து எனக்கு காதலே பிடிக்கல ஆனாலும் நீ இவன விரும்பறனு தெரிஞ்சதுக்கு அப்புறம் வேற ஒருத்தனுக்கு உன்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வெக்கவும் மனசு வரல இப்பொ உனக்கு 2 வாய்ப்பு தரேன் ஒன்னு நீயா மனசை மாத்திக்கிட்டு  இவனை மறந்திட்டு நாங்க பாக்குற மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணிக்கனும் இல்ல அடுத்த முகூர்த்ததுல இவனோட உனக்கு கல்யாணம்  நடக்கும் அதோட எங்க உறவ நீ மறந்திடனும் எங்களுக்கு எப்பொ உன் காதல் மேல நம்பிக்கை வருதோ அப்போதான் உங்கிட்ட பேசவே செய்வேன் எது உன் முடிவுனு யோசிச்சு சொல்லு என்றான்
 
ஒரு நிமிடம் கூட தாமதிக்காத லக்ஷ்மி அண்ணா அடுத்த முகூர்த்தத்துல கோவில் ல  வெச்சு கூட எங்களுக்கு கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்ணு அண்ணா என்றாள்
 
ஒருகணம் திகைத்த பாஸ்கர்  சரிம்மா நான் இன்னைக்கு ராத்திரி உன் அண்ணிய பாத்து சொல்லிட்டு அவங்களை கல்யாணத்துக்கு கூட்டிட்டு வரேன் பத்திரம்மா நீ இருந்துக்கோ என்றான்
பிறகு ஷேஷகிரிய பாத்து மாப்பிள்ளை நீங்க உங்க வீட்டுல தகவல் சொல்லி வரசொல்லிடுங்க வர வெள்ளிக்கிழமை கோவிலுல வெச்சு உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் என்றான் அதற்கு ஷேஷகிரியோ பாஸ்கர் எனக்கு கல்யாணம் ஆகாத ஒரு தங்கச்சி இருக்கா அவளுக்கு முன்னாடி எனக்கு கல்யாணம் பண்ண எங்க அம்மா சம்மதிக்க மாட்டாங்க
 
அதனால உங்க தங்கைய கல்யாணம் பண்ணிக்கிட்டுதான் நான் அவங்களுக்கு சொல்லணும் ஆகையால நீங்க கல்யாண வேலைய ஆரம்பிங்க எங்க வீட்டு பிரச்சனையை நான் பாத்துக்கறேன் என்றான்
 
லக்ஷ்மியின் முடிவால் மனம் வெதும்பிய பாஸ்கர் தன் மனைவியைத் தேடி அவன் மாமனார் வீட்டுக்கு வந்தான் மெல்ல மனைவியிடம் விஷயத்தை சொன்ன போது அவளின் அதிர்ச்சியோ அளவிட முடியாததாக இருந்தது
 
பிறகு கல்யாணத்துக்கு வேண்டிய ஏற்பாடு செய்ய வேண்டி இருப்பதால் காலை கிளம்புவதாக கூற அவளும் தானும் உதவிக்கு வருவதாகவும் திருமணம் முடிந்த பின்னர் தமது வீட்டிலேயே இருக்க போவதாகவும் கூற பாஸ்கரும் அவளது பெற்றோரும் மறுத்தனர் முடிவில் ப்ரபாவின் பிடிவாதமே வென்றது
 
திருமணத்துக்கு வரும் ப்ரபா அதற்கு பின் தன் பெற்றோருடன் பாஸ்கரின் வீட்டில் தங்கி பிரசவம் பார்த்து கொள்வது என்று முடிவாயிற்று திருமண நாளும் நெருங்கியது நல்லபடியாக நகைகளாகவும் ரொக்கமாகவும் சீர் செய்து தன் தங்கையை  அவளின் மனதுக்கு பிடித்தவனுடன் மனைவியாக அனுப்பி வைத்தார் பாஸ்கர்
 
பிரசவ தேதி நெருங்கி விட்ட நிலையிலும் தன் மனதின் துயரம் அறிந்து பிடிவாதம் பிடித்து தன்னுடனே தங்கிவிட்ட மனைவியை நினைத்து பெருமை கொண்டார் இந்நிலையில்  பாஸ்கரின் வாழ்வில் மற்றோர் நீங்கா  துயரை கொடுக்க அந்த பொல்லாத நாளும் வந்தது
 
(தொடரும்)

ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

PostANUBAMA KARTHIK Mon Dec 31, 2018 4:40 pm

தோல்வி நிலையென நினைத்தால்
அத்தியாயம்-17
எனக்கு பிடித்த கவிதை

நீங்கா ரணங்களுடன் நிமிடங்கள் கடந்து செல்ல
இனி நிம்மதி என் வாழ்வில் கனவென நான் நினைத்திருக்க
நிழல் போல் வந்தவனே உன் தோள்கள் தருவாயா ?
என் துயர்களை தீர்த்துக்கொள்ள

காலையில் இருந்து அன்று ஏனோ மனது சரியில்லை பாஸ்கருக்கு ஒரு ஆயிரம் முறை பத்திரமாக இருக்கும் படி ப்ரபாவிடம் சொல்லிவிட்டு வெளிவேலையாக சென்ற பாஸ்கருக்கு சிறிது நேரத்தில் குளிக்க சென்ற மனைவி குளியலறையில் தவறி விழுந்து விட்டதாகவும் தலையிலும் வயற்றிலும் அடிபட்டிருப்பதாகவும் தகவல் வந்தது

பதறி அடித்துகொண்டு ஓடினால் மருத்துவர்களோ ப்ரபாவின் உயிரை பிடித்து வைக்க போராடினர் பனிக்குடமும் உடைந்து விட்டதால் உடனே பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்க கூறினர் விரைந்து ஆஸ்பத்திரியில் சேர்த்தாலும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமெனெவும் அப்போதும் தாய் அல்லது குழந்தை இருவரிலொருவர் தான் பிழைப்பார் எனவும் கூறிவிட்டனர்

அறுவை சிகிச்சை முடிந்து வந்த மருத்துவரின் கைகளில் பாஸ்கரின் மகன் இருந்தான் ஆம் தாயை காப்பாற்றி விட்டு தன்னை படைத்த கடவுளிடமே சென்றிருந்தது அந்த சிசு

24 மணி நேரம் சென்ற பின் கண்விழித்து கொண்டாள் ப்ரபா குழந்தை இறந்து விட்டாலும் மனைவி பிழைத்து விட்டதால் சற்றே ஆறுதலுற்றான் பாஸ்கர்.செய்தி தெரிந்த லக்ஷ்மியோ ப்ரபாவின் நிலை அறிந்து கண்ணீர் வடித்தாள் கமிஷன் வியாபாரம் செய்ய ஷேஷகிரி வெளியூர் சென்றிருந்ததால் அவளால் ப்ரபாவை சென்று பார்க்கமுடியாமல் போனதும் கொடுமையே

கல்யாணம் முடிஞ்சு ஊரை விட்டு வந்த லக்ஷ்மியும் ஷேஷகிரியும் வீட்டுக்கு வந்த போது ஷேஷகிரியோட அம்மா ஜானகி ய சமாதான படுத்த யாராலயும் முடியல
கோவத்துல அவங்க லக்ஷ்மிக்கிட்டயும் ஷேஷகிரிகிட்டயும் முகம் கொடுத்து கூட பேசல இருந்தாலும் இருவரையும் வீட்டுக்குள்ள சேத்துகிட்டாங்க

ரங்கனாதனும் ராதாவும் ஆரம்பத்துல கோபமா இருந்தாலும் போக போக லக்ஷ்மிகிட்ட சகஜமா பேச ஆரம்பிசிட்டாங்க அவங்க மெஸ்சுல உதவியா இருந்த பசுபதியோட மகளான கௌசல்யாவ ரங்கனாதனுக்கு நிச்சயம் பண்ணி இருந்தாங்க

பசுபதியோட மகன் பேர் விஸ்வநாதன் இந்த குடும்பமும் மெஸ்ஸுக்கு பக்கத்துல தான் குடி இருந்தது ராதாவுக்கு தரகர்கள் மூலமா வரன் வேட்டை நடந்துக்கிட்டு இருந்தது வரும் வரன்கள் எல்லாம் தட்டி தட்டி சென்றுவிட மகளின் திருமணம் குறித்த கவலையில் இருந்தார் ஜானகி

அன்று வெளி வேலையாய் ரங்கநாதனும் விஸ்வநாதனும் சென்றிருக்க ஜானகியும் லக்ஷ்மியும் கௌசல்யாவும் சமையலறையில் இருக்க பசுபதியோ உணவை பரிமாற கல்லாவில் இருந்தாள் ராதா .

மருத்துவ விடுப்பில் சென்றிருந்த ஒரு ஊழியரின் இடத்தில் பணியாற்ற தான் பணி புரியும் பக்கத்து ஊரின் வங்கி கிளையில் இருந்து தற்காலிக பணியில் வந்திருந்த ஆனந்தின் கண்களுக்கு ராதா தேவதையாக பட தரகரிடம் பேசி பிடிவாதம் பிடித்த பெற்றோரை சரிகட்டி பெண் பார்க்க வந்து விட்டான் ஆனந்த் .

ஆனந்தின் பெற்றோரின் முகசுழிப்பில் இருந்தே அவர்களுக்கு இது பிடிக்கவில்லை என ஊகித்த ஜானகி தன் மூத்த மகன் வெளியூர் சென்றிருப்பதால் அவன் வந்த உடன் கலந்து பேசி பதில் சொல்வதாக சொல்லி விட்டார் வெளியூர் சென்றிருந்த ஷேஷகிரி திரும்பிய பின் இது குறித்து பேசினார் தன் தாய் தன்னிடம் பேசியதில் மகிழ்ச்சியில் இருந்த ஷேஷகிரியோ அம்மா ராதாவுக்கு பிடிச்சிருந்தா மேல் கொண்டு பேசி முடிக்க பாருங்க அம்மா அது மட்டுமில்ல ரங்கனுக்கும் நிச்சயம் பண்ண பெண் இருக்கா அவன் கல்யாணத்தையும் முடிஞ்சா விஸ்வநாத அண்ணன் கல்யாணத்தையும் சேத்தே முடிச்சிறலாம் அத்தை என்றாள் உடன் இருந்த லக்ஷ்மி

(தொடரும்)


விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Dec 31, 2018 9:17 pm

அழகாய் துவங்கி இருக்கிறீர்கள். தொடருங்கள். படிக்கவேண்டும். முழுதுமாய் படித்து விட்டு மறுபடி வருகிறேன்.



தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

PostANUBAMA KARTHIK Thu Jan 03, 2019 9:25 am

தோல்வி நிலையென நினைத்தால்
அத்தியாயம்-18
எனக்கு பிடித்த கவிதை
எனை நீ கடந்து செல்லும் நேரத்தில்
கண் வழியே கணநேரம் வீசும் புன்னகை
என்னுள் இறங்குதடி இனிக்கின்ற விஷமாய்
சுடுகின்ற நிலவொளியாய் குளிர்கின்ற சூரியனாய்

நல்ல யோசனை மா கண்டிப்பா செய்யலாம் என்று மருமகளை மனது விட்டு பாராட்டினார் ஜானகி

லக்ஷ்மியின் யோசனைப்படி திட்டமிடப்பட்டு கல்யாண ஏற்பாடுகள் நடந்தேறின ஆனந்தின் பெற்றோரின் பேராசையால் திருமண செலவுகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டபோது தன் தாய் வீட்டு சீதனத்தையும் தந்தாள் லக்ஷ்மி இது குறித்து ஷேஷகிரியும் ஜானகியும் வருத்தப்பட்ட போதோ அத்தை நான் இந்த வீட்டு பொண்ணு எனக்கு என் பிறந்த வீட்டுல குடுத்தது என் பொருள் அதை நான் என்ன செஞ்சாலும் யாரும் ஒண்ணும் கேட்க மாட்டங்க தவிர இப்போ நம்ம வீட்டு பொண்ணு கல்யாணம் நல்லபடியா நடக்கணும் அதனால இத நினைச்சு வருத்தபடாம கல்யாண வேலைய மட்டும் பாப்போம் வாங்க என்று சமாதானபடுத்தி அழைத்து சென்றாள்

ஒரே முகூர்த்ததில் ஆனந்த் -ராதா திருமணமும் சகுந்தலா -விஸ்வநாதன் திருமணமும் நடந்தேறியது

அடுத்த ஆறு மாதங்களுக்குக்குள் ரங்கனாதன் கௌசல்யா திருமணம் நடக்க நாள் குறித்து நிச்சயம் செய்தனர். திருமணம் முடிந்து புகுந்த வீடு சென்றாள் ராதா

இங்கே சகுந்தலாவின் வரவும் நடந்தேறியது . மேலும் ஒரு மாதம் ஓடி இருந்த நிலையில் ஆனந்த்துக்கு அருகில் இருந்த ஊருக்கு பணி மாறுதல் கிடைத்தது சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இருந்த ஆனந்தின் தாய் மகன் ஊருக்கு சென்ற உடன் ராதாவை படுத்த துவங்கினார்
சாதாரணமாக செய்த செயல்களுக்கு எல்லாம் சண்டை போட்டார்
தனக்கு பிடிக்காது என்பதால் ராதாவிற்க்கு அவர் செய்யும் கொடுமைகளை மாமனாரும் தட்டிகேட்கவில்லை வாரம் ஒருமுறை வாரவிடுமுறை அன்று மட்டுமே வீட்டுக்கு வரும் கணவனிடம் அவனுடைய நிம்மதிக்காகவே தான் சந்தோஷமாக இருப்பதாக நடித்தாள் ராதா .

ரங்கனாதனின் திருமணத்திற்கு ராதா குடும்பத்தினரை அழைக்க சென்ற ஜானகியின் கூரிய கண்களுக்கு மகளின் நிலை பட்டது மெல்ல மகளை விசாரித்து விபரங்களை அறிந்து கொண்டார்.

திருமண நாளும் வந்தது.திருமணத்துக்கு வந்த ஆனந்திடம் மகளின் நிலை குறித்து பேசினார் அந்த தாய் தான் சொல்வதை வைத்து மட்டுமே நம்பி முடிவெடுக்க வேண்டாம் எனவும் உண்மை நிலை விசாரித்து தெரிந்து கொள்ளும்படியும் கேட்டுகொண்டார்

முதலில் தன்னை பெற்றவர்களை குறை கூறுவதாக ஆனந்த் கோபித்து கொண்டாலும் முடிவில் ஜானகியின் குரலில் இருந்த ஏதோ ஒன்று மனதைத்தொட சரியென ஒப்புக்கொண்டான் ஆனந்த்

மாமியார் சொன்ன விஷயங்கள் மனதை உறுத்தியதாலும் அன்றைய அலுவலக பணியில் கவனம் செல்லாததாலும் வார இறுதிநாள் என்பதாலும் விடுப்பு எடுத்து கொண்டு யாருக்கும் சொல்லாமல் வீட்டுக்கு திடீர் என வருகை தந்த ஆனந்துக்கு தாய் தன் மனைவியை திட்டிக்கொண்டிருப்பது வித்தியாசமாக பட்டது

தன் மகனை பார்த்த அவரும் சுதாரித்து கொண்டார் எதோ சாதாரணமான சண்டை என நினைத்தாலும் கண்களில் நீருடன் ராதாவை பார்த்தது மனதை பிசைய அவளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டி கோவிலுக்கு அழைத்து சென்றான்

முதன் முறையாக தன் கணவனுடன் வெளியே செல்லும் ஆனந்தம் மனதை நிறைக்க தன் இயல்பான கலகலப்புடன் கோவிலுக்கு சென்றாள்
ராதா அங்கு வந்த பக்கத்து வீட்டுகார தம்பதிகளுடன் இயல்பாக பேசியபடி பிராகாரத்தை வலம் வந்த வேளையில் பெண்கள் இருவரும் அமர்ந்துவிட ஆண்கள் மேலும் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தனர் பேச்சின் இடையே இயல்பு போல ஆனந்த் தன் வீட்டில் நடக்கும் விபரங்களை கிரகித்து கொண்டான்
கோவிலில் மனமுருக தனக்கு குழந்தை வரம் தர வேண்டிக் கொண்டாள் ராதா வீட்டுக்கு வரும் வழியில் தன் கணவனின் முகம் சரியில்லாது இருப்பதை கண்டு எதுவும் பேசவில்லை வீட்டுக்கு வந்தவுடனோ ஆனந்த் ராதாவுடன் முகம் குடுத்து பேசவில்லை

மேலும் உடம்பு சரி இல்லை என சொல்லி விடுப்பை நீட்டித்தான் ஆனந்த் பக்கத்துவீட்டுக்காரர்கள் தவிர நண்பர்களிடமும் விசாரித்து உண்மை அறிந்த ஆனந்த் ராதாவிடம் கோபப்பட்டது தன்னிடம் இருந்து மறைத்ததற்க்காகவே.கணவனின் பாராமுகம் மனதை உறுத்த நிலைகுலைந்து போனாள் ராதா

ஆனந்த் ஊருக்கு கிளம்பியபின் ராதாவின் வாழ்வு எப்போதும் போல செல்ல வங்கிக்கு சென்றவுடன் சொந்த ஊருக்கு மாறுதல் வேண்டி விண்ணப்பித்தான் அந்த வார இறுதியில் வீட்டுக்கு வந்த ஆனந்திடம் பாராமுகத்தை விட்டுவிடும்படி ராதா கெஞ்ச மனம் தாங்காத ஆனந்த் இயல்பாக பேச துவங்க அங்கே அன்று இல்லறம் இனியதானது

நாட்கள் நகர ஊர் மாறுதல் பெற்று ஆனந்த் வந்தபின் வாழ்க்கை இனிமையானது ராதாவுக்கு சூர்யா அவர்கள் வாழ்வில் வந்தபின் வசந்தமும் வந்தது இரண்டாவது முறையாக ராதா கருவுற்ற போது சகுந்தலாவும் பிரசவித்திருக்க கௌசல்யாவின் வளைகாப்பும் நடந்தது வளைகாப்புக்கு வந்திருந்த ஆனந்தின் தாய் லக்ஷ்மி குழந்தை இல்லாதிருப்பதை குறித்து சபையில் பேசிவிட தன் தாயை கண்டித்தான் ஆனந்த் வாய் தகராறு முற்றிவிட தன் மகனிடம் சண்டை போட்டார் ஆனந்தின் தாய்

தாயை வழி அனுப்பிவிட்டு வந்த ஆனந்த் முகம் கருக்க நின்றிருந்த லக்ஷ்மியிடமும் ஷேஷகிரியிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டு சூழ்நிலையின் கனம் தாங்காது வெளியே உலாவ சென்றான் கவனமில்லாது ரோட்டை கடந்து சென்ற ஆனந்த்தின் மீது லாரி மோத உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க பட்டான் ஆனந்த்


(தொடரும்)


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 03, 2019 2:13 pm

கண் வழியே கணநேரம் வீசும் புன்னகை
என்னுள் இறங்குதடி இனிக்கின்ற விஷமாய்
சுடுகின்ற நிலவொளியாய் குளிர்கின்ற சூரியனாய்

மிகவும் ரசித்தேன். தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 5 3838410834


ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

PostANUBAMA KARTHIK Fri Jan 04, 2019 3:11 pm

T.N.Balasubramanian wrote:
கண் வழியே கணநேரம் வீசும் புன்னகை
என்னுள் இறங்குதடி இனிக்கின்ற விஷமாய்
சுடுகின்ற நிலவொளியாய் குளிர்கின்ற சூரியனாய்

மிகவும் ரசித்தேன். தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 5 3838410834


ரமணியன் 
மேற்கோள் செய்த பதிவு: 1290525 நன்றி

ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

PostANUBAMA KARTHIK Fri Jan 04, 2019 3:12 pm

தோல்வி நிலையென நினைத்தால்
அத்தியாயம்-19
எனக்கு பிடித்த கவிதை
தோழனாய் வந்து விட்டேன் தோள்மீது சாய்த்து கொள்ளு
ஆறுதலாய் நானிருக்க ஆசுவாச படுத்திக் கொள்ளு
தூயவளே துயர் நீங்கும் நாட்கள்
இனி தொலைவில் இல்லை நம்பிவிடு

நிறை மாத கர்ப்பிணியான ராதாவுக்கு மெல்ல செய்தி சொல்லபட்டு ஜானகியின் துணையுடன் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர் விபத்தில் ரத்த சேதம் அதிகமாக இருந்ததால் உயிர் காக்க ரத்தம் தேவைப்படுமென டாக்டர்கள் சொல்லிவிட ரத்தம் கிடைக்காமல் அலைந்தனர் ஷேஷகிரியும் ரங்கநாதனும். ஆனந்தின் பெற்றோரோ தகவல் கிடைத்தவுடன் கோபத்தில் தங்களுக்கு அப்படி ஒரு மகனே இல்லை என சொல்லிவிட்டார்கள். எதிர்பாராதவிதமாக லஷ்மியின் ரத்தபிரிவும் ஆனந்தின் ரத்தபிரிவும் ஒன்றாக அமைந்துவிட சரியான நேரத்தில் ரத்ததானம் கிடைத்து உயிர் பிழைத்தான் ஆனந்த்

ஆனந்த் கண் விழித்து நன்றி சொல்ல முனைந்த போது தடுத்த லக்ஷ்மி ராதாவிடமும் ஆனந்திடமும் எதுக்கு இதெல்லாம் எனக்கு கூட பிறந்த பாஸ்கர் அண்ணாவ போலதான் ஆனந்த் அண்ணாவும் இவங்களுக்குள நான் எந்த வித்தியாசமும் பாக்குறது இல்ல அதனால தயவுசெஞ்சு நீங்க ரெண்டுபேரும் நன்றி சொல்லறத நிறுத்தரீங்களா என கேட்டாள்

அன்றிரவே ஸ்ரீருத்ரா பிறந்து விட குழந்தை வந்த சந்தோஷத்தில் அனைவரும் இயல்புக்கு திரும்பினர் சகுந்தலா பச்சை உடம்புகாரியாக பிறந்த வீட்டில் இருக்க கௌசல்யாவின் பிரசவமும் லக்ஷ்மி ,ஜானகியின் பொறுப்பிலேயே நடந்தது

ஒரு குழந்தை வீட்டில் இருந்தாலே நேரம் போவது தெரியாது இங்கோ மூவரின் சேட்டையால் வீடே களைகட்டியது மேலும் ஒரு வருடம் ஓடிப்போக இன்னமும் குழந்தை பாக்கியம் லக்ஷ்மிக்கு கிட்டாத்தால் உறவுகளின் கேலிப்பேச்சுக்கு ஆளானாள் அம்மாதிரி நேரங்களில் இறுக்கமான முகத்துடன் வளையவரும் ஜானகியை புரிந்து முடியாமல் கொள்ள தடுமாறினாள்
கேலிகுத்தல்கள் தாங்க முடியாமல் மருத்துவ பரிசோதனைக்கு தம்பதிகள் சென்ற போதோ கர்பப்பை பலகீனமாக இருப்பதால் லஷ்மியால் ஒரு குழந்தைக்கு தாயாக முடியாதென மருத்துவகள் கைவிரித்துவிட லக்ஷ்மியோ நொந்துபோனாள்

சகோதர்களின் அயராத உழைப்பால் தொழில் விரிவடையத்துவங்க அந்தஸ்து பார்த்து முன்னர் ஒதுக்கிய சொந்தங்கள் யாவும் இப்போது ஒட்டிக்கொள்ள துவங்கின அதிலும் ஷேஷகிரியின் அத்தை ஒருவர் அவருடைய பெண்ணை இரண்டாம் தாரமாக திருமணம் செய்துதர முன்வந்தார் இன்னமும் கொஞ்ச நாளில் தாங்கள் நடத்தும் புதுமனை புகுவிழாவுக்கு பிறகு இது குறித்து பேசலாமென ஜானகி சொல்லிவிட இதை கேட்ட லக்ஷ்மியோ துடித்துவிட்டாள்

புதுமனை புகு விழாவுக்கான வேலைகள் வேகமாக நடந்தன வேலைகளின் நடுவே ஒருநாள் லக்ஷ்மியை தவிர அனைவரும் எங்கோ சென்றுவர இது எதுவுமே மனதில் பதியாமல் நடைபிணம் போல் ஆனாள் லக்ஷ்மி எதோ ஒரு நம்பிக்கையில் இரவின் தனியான வேளையில் தன் கணவனிடம் என்னங்க எல்லாரும் எங்க போய் இருந்தீங்க என கேட்க அவனோ சரியாக பதில் சொல்லாது மழுப்ப கோபத்தில் எனக்கு தெரியும் எல்லாரும் பொண்ணு பாக்கதேனே போய் இருந்தீங்க? என கேட்டாள்

லக்ஷ்மியை சீண்டும் எண்ணத்துடன் இருந்த ஷேஷகிரியோ ஆமாம் நானும் அம்மாவும் நம்ம குடும்பத்துக்கு வரவேண்டிய ஒரு வயசு பொண்ணைத்தான் பாக்கபோனோம் எங்க எல்லாருக்கும் அவளை பிடிச்சுபோச்சு உனக்கு பிடிச்சுருந்தா போதும் முறைப்படி அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடலாம் என்ன சொல்ற?தாளாத துக்கத்தில் இருந்த லக்ஷ்மியோ உங்களுக்கு பிடிச்சா போதுங்க நீங்க பாத்து கூட்டிட்டு வந்திடுங்க நான் எப்போதும் உங்க சந்தோஷத்துக்கு தடையா இருக்கமாட்டேன் என்றாள்

அப்போ கண்டிப்பா நீ நம்ம வீட்டு புதுமனை புகுவிழா அன்னைக்கு அவளை பாக்கலாம் ஆரத்தி எடுக்க ரெடியா இருந்துக்க என்றான் அந்த நாளும் வந்தது பொழுது விடியும் போதே எங்கோ வெளியே போய் விட்டு வந்த ஆனந்தும் ராதாவும் ஆரத்தி தட்டுடன் வாசலுக்கு வரும்படி லக்ஷ்மியை வற்புறுத்தி அழைத்து வந்தனர்

வாசலுக்கு வந்த லக்ஷ்மியோ ஜானகியுடன் நின்றிருந்த அந்த ஒரு வயசு பெண்ணை பாத்து திகைத்து நின்றாள் ரோஜா பூவை பிரதி எடுத்ததுபோல பால்வண்ண நிறத்துடன் தன் கோலிகுண்டு கண்களால் சுற்றி இருந்தவர்களை பார்த்தவண்ணம் மலங்க மலங்க விழித்தாள் அந்த குட்டி இளவரசி

என்னம்மா வந்தவங்கள வாங்கனு கூப்பிட மாட்டாயா? ஆரத்திய வாங்கி சீக்கிரம் எடுத்து அனுப்பு ப்ரபா ராதாவையும் கூப்பிட்டுகோ என்றாள் ஜானகி ஆமாம் அந்த விழாவுக்கு பாஸ்கரும் தன் மனைவியுடன் வந்திருந்தான் புதுமனை புகுவிழாவும் ஒரு குழந்தைய தத்தெடுக்கும் விழாவும் இனிதே முடிய எல்லாரும் சேர்ந்து கொடுத்த அதிர்ச்சிய தாங்க முடியாம நடந்தத நம்பவும் முடியாம அமர்ந்திருந்தாள் லக்ஷ்மி அவளை தேற்றிய ஜானகியும் ஷேஷகிரியும் நடந்ததை சொல்ல துவங்கினர் முதலில் இரண்டாம் திருமண பேச்சு வந்ததே அதிர்ச்சி என்றாலும் மறுப்பை யாருக்கும் தெரியாமல் தன் நாத்தனாரிடம் சொல்லி இருந்தார் லக்ஷ்மி மேல் கொண்டு தன் மக்களின் வாழ்வில் பிடிப்பு ஏற்பட ஒரு குழந்தையை தத்து எடுப்பது ஒன்றே நல்ல வழி என முடிவு எடுத்தார் ஜானகி பின்னர் தன் எண்ணத்தை ஆனந்த் ஷேஷகிரி ரங்கநாதனிடமும் சொல்ல அவர்களின் ஆதரவுடன் அதற்க்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது

பாஸ்கரை பற்றி ஷேஷகிரி மூலம் அறிந்த ஜானகி ஒரு நல்ல நாளில் தன் குடும்பம் புடை சூழ அங்கு சென்று பாஸ்கரை சமாதானப்படுத்தி விட்டு வந்தார் அன்றே பாஸ்கருக்கு தெரிந்த அனாதை இல்லத்தில் இருந்து ஒரு குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்தனர் புதுமனை புகுவிழாவில் இதை அறிவிக்க நினைத்திருக்க ஷேஷகிரியோ அன்றே தத்தெடுப்பதும் நடைபெறவேண்டுமென கூறிவிட்டான் ஷேஷகிரியின் விருப்பபடி லக்ஷ்மிக்கு இன்ப அதிர்ச்சி தர வேண்டி ரகசியம் காத்தனர் அனைவரும்.

தன் வாழ்வில் வற்றாத இன்பமாக ஜீவநதியென வந்த தன் மகளுக்கு சரயு என பெயரிட்டாள் லக்ஷ்மி தன் காதல் கணவனை தவறாக நினைத்தை அவனிடமே சொல்லி மன்னிப்பும் கேட்டாள் அதற்க்கு அவனோ அட அசட்டு பொண்டாட்டியே உன்னை விட்டு இன்னொருத்தி கூட எனக்கு கல்யாணமா? என் குடும்பத்த இவளோதான் நீ புரிஞ்சு கிட்டயா வெளில சொல்லிறாதே எல்லாரும் உன்னை புத்திசாலினு நினைச்சுகிட்டு இருக்காங்க தயவு செஞ்சு கெத்த காப்பாத்திகோ தாயே என கலாய்க்க அங்கே ஆனந்ததின் சாரல் வீச துவங்கியது
(தொடரும்)



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 04, 2019 3:53 pm

Code:
தோழனாய் வந்து விட்டேன் தோள்மீது சாய்த்து கொள்ளு[size=19][/size]
ஆறுதலாய் நானிருக்க ஆசுவாச படுத்திக் கொள்ளு[size=19][/size]
தூயவளே துயர் நீங்கும் நாட்கள் [size=19][/size]
இனி தொலைவில் இல்லை நம்பிவிடு

எனக்கும் பிடித்தது.
புன்னகை புன்னகை
ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

PostANUBAMA KARTHIK Sat Jan 05, 2019 2:17 pm

தோல்வி நிலையென நினைத்தால்
அத்தியாயம்-20
எனக்கு பிடித்த கவிதை

மசக்கை உணரவில்லை மணிவயிற்றில் தாங்கவில்லை
அன்னமென வந்து என்னை அன்னையென அழைத்தவளே
சிட்டுகுருவியென குட்டி குட்டிகுறும்பு செய்து
சிந்தை மகிழவைத்தாய் கட்டிகரும்பே கைமாறு செய்திடவே
காலம் கனிந்திட காத்திருப்பேன் கண்மணியே

புதிய வீட்டுக்கு வந்தபின் தொழிலில் இருந்து ஜானகி விலகி கொண்டார் வீட்டிலும் பொறுப்புக்களை லக்ஷ்மியிடம் கொடுத்துவிட்டார் குழந்தைகளை வளர்ப்பதிலேயே கவனம் செலுத்தினார். ஜானகி தெய்வமாகி விட்டபின் குடும்ப பொறுப்புக்களை லக்ஷ்மியும் குழந்தைகளின் பொறுப்பை ராதாவும் தொழில் பொறுப்புக்களில் ஆண்களுடன் உதவியாக கௌசல்யாவும் இருந்தனர்

தொடர்ந்து பருவமழை பொய்த்ததாலும் விவசாய இடுபொருட்களின் விலை ஏற்றத்தாலும் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட வீட்டு பெண்களின் நகையையும் நிலங்களையும் வங்கியில் அடமானம் வைத்தார் பாஸ்கர் எதிர்பாராவிதமாக திருப்ப முடியாது போய் விட ஷேஷகிரியிடம் உதவிகோரினார்

தமையனின் நிலைக்கு வருந்தி அழுத கண்களுடன் லக்ஷ்மி நிற்க ஷேஷகிரி அனைவரிடமும் தயங்கி தயங்கி ஆலோசனை கேட்க யோசித்து முடிவெடுக்கலாமென முடிவு செய்யப்பட்டது அடமானம் வைக்கப்பட்டிருந்தது

ஆனந்த் வேலை செய்யும் வங்கி என்பதால் தன்னால் ஆனவற்றை செய்ய நினைத்த ஆனந்த் வங்கிக்கு சென்ற போது தன் சேமிப்பிலிருந்தும் தன் அண்ணன் விஸ்வநாதனின் உதவியுடன் பாஸ்கரின் கடன் களை கட்டிமீட்க வந்திருந்தாள் கௌசல்யா

அனைவரும் குடும்பத்துடன் பாஸ்கரின் வீட்டுக்கு சென்று நகைகளையும் நில பத்திரங்களையும் ஒப்படைத்தனர் நா தழுதழுக்க நன்றி சொல்ல பாஸ்கர் முனைந்த போது குறுக்கிட்ட கௌசல்யாவும் ஆனந்தும் என்ன அண்ணா நீங்க லக்ஷ்மி மட்டும் இல்லேனா என்னை யாரும் இப்போ உயிரோட பாத்திருக்க முடியாது அதே மாதிரி கௌசல்யாவோட பிரசவமும் நல்லா நடந்திருக்காது எங்களுக்கு லக்ஷ்மி செஞ்சதவிடவா நாங்க செஞ்சிருக்கோம் லக்ஷ்மியோட அண்ணன் எங்களுக்கும் அண்ணன் தான் முதல்ல கண்ணை துடைச்சுகிட்டு வேற வேலை இருந்தா பாருங்க என்றனர்

இப்படிஒருத்தருக்குஒருத்தர் கை கொடுத்து தூக்கி விட்டுதான் இந்த தொழில் சாம்ராஜியம் வளர்ந்தது. இன்னைக்கு நாம இவளோ நல்லபடியா இருக்கோமின்னா லக்ஷ்மியோட தியாகமும் கௌசல்யாவோட அனுசரணையும் ஆனந்தோட புரிதலும்தான் காரணம் ஏன்னா நான் ரங்கநாதன் ராதா மூணு பேரும் ஒண்ணா பிறந்தவங்க நாங்க ஒத்துமையா இருக்குறது பெரிய விஷயம் இல்ல ஆனா வேற வேற இடத்திலேர்ந்து இந்த வீட்டுக்கு வாழ வந்த மருமகள்களாகட்டும் அவங்க கூட பிறந்தவங்களும் தாங்கி நின்னுதான் இந்த குடும்பம் வளந்திருக்கு இதோ இது வரைக்கும் சரயூ தத்தெடுத்த பொண்ணுங்கறது அவளுக்கு தெரியாது அவளுக்கு தான் இந்த வீட்டுக்கு வர காரணம் பாஸ்கர்னும் தெரியாது

ஏம்பா ஸ்ரீருத்ரா அவ எதோ தெரியாம பேசுனதுக்காக சட்டுனு அவ மேல கோபபட்டியே இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் நாங்களும் கோபபட்டிருந்தா இந்த சந்தோஷம் நமக்கு வாழ்க்கையில கிடைச்சிருக்குமா? இல்ல இத்தனை கஷ்டத்தை தாண்டி வந்திருக்க தான் முடியுமா ?

இந்தோ இன்னமும் கொஞ்ச நாளுல கிருஷ்ணா -பூர்ணா கல்யாணம் முடிஞ்ச பின்னால தொழில உங்க கிட்ட ஒப்படைக்க போறோம் இனியும் நீங்க சின்ன பிள்ளைங்க கிடையாது நாங்க காப்பத்தி வந்த இந்த ஒத்துமை எப்போதும் நீடிச்சு இருக்கணும் என ஷேஷகிரி சொல்ல கண்ணீர் நிறைந்த கண்களுடன் தலையாட்டின இளவல்கள் நாமும் அவர்களின் ஒற்றுமை நீடிக்க வாழ்த்தி விடை பெறுவோம் தோழியரே

முற்றும்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 05, 2019 7:15 pm

எனக்கு பிடித்த கவிதை தலைப்பில் பதிவிட்ட கவிதைகள் எனக்கும் பிடித்தது.

கதைகள், பொதுவாக, நான் தவிர்க்கும் ஒன்று. ஆகவே மன்னிக்கவும்.

அறிமுகமாகி ஒரு மினி தொடர் கொடுத்ததற்கு நன்றி.


ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக