ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ஜாஹீதாபானு Today at 2:51 pm

» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Today at 2:50 pm

» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Today at 2:47 pm

» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by ayyasamy ram Today at 10:10 am

» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Today at 10:04 am

» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:45 am

» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Today at 9:36 am

» மச்சு பிச்சு
by ayyasamy ram Today at 9:35 am

» அழும் கடலாமை
by ayyasamy ram Today at 9:35 am

» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Today at 9:33 am

» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Today at 9:32 am

» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Today at 9:31 am

» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:30 am

» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am

» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022
by mohamed nizamudeen Today at 8:02 am

» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 5:38 am

» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am

» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am

» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am

» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am

» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am

» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm

» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am

» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am

» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am

» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am

» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am

» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am

» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am

» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


நீரின் பல வகைகள்

நீரின் பல வகைகள் Empty நீரின் பல வகைகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 29, 2018 1:26 pm

"நீரின் வகைகள் "

1.மழைநீர், 2.ஆலங்கட்டிநீர், 3.பனிநீர், 4.ஆற்றுநீர், 5.ஊற்றுநீர், 6.பாறைநீர்,7.அருவிநீர், 8.அடவிநீர், 9.வயல்நீர், 10.நண்டுக்குழிநீர், 11.குளத்துநீர், 12.ஏரிநீர், 13.சுனைநீர், 14.ஓடைநீர், 15.கிணற்றுநீர், 16.உப்புநீர், 17.சமுத்திரநீர், 18.இளநீர் என தண்ணீரை 18 வகையா 'பதார்த்த குண சிந்தாமணி’ என்ற நூலில் தெளிவுபடுத்திச் சொல்லி வெச்சிருக்காரு 'தேரையர் சித்தர் '.

இந்த 18 வகையான நீரோட குணத்தை காண்போம் :

1. மழைநீர்
"சீதமுறுங் குளிர்ச்சி சேருமே சித்தத்துட
போதந் தெளிவாய்ப் பொருந்துங்கா ணாதமோடு
விந்தும் வளர்ந்துவரு மேதினியி லெவ்வுயிர்க்குஞ்
சிந்துமழை நீராற் றெளி"

அதாவது, மழை நீர் தான் உலகத்துல இருக்கிற தண்ணியிலேயே உயர்ந்தது. பூமியில வாழற எல்லா ஜீவராசிகளுக்கும் தேவையான உயிர்ச்சத்து மழை நீர்ல அடங்கியிருக்கு.

இதைத் தொடர்ந்து குடிச்சு வந்தா அறிவு விருத்தியாகும், உடல் சூடு நீங்கும்னு தேரையர் சொல்லியிருக்காரு. இந்தத் தண்ணியைத்தான், முதல் நீராவும் தொகுத்திருக்கார்.

2. ஆலங்கட்டிநீர்
சில சமயம், மழை பெய்யும்போது, வானத்துல இருந்து பனிக்கட்டிங்க விழும். இந்த ஆலங்கட்டி நீரை, சேமிச்சு வெச்சு குடிச்சா மேகம், பெரும்பாடு, கண்மாசி, காந்தல், விக்கல், சுவாச நோய்கள், மெய்மயக்கம் எல்லாம் நீங்கும்.

3. பனிநீர்
அதிகாலை நேரத்துல, வெட்டவெளியில பாத்திரத்தை வெச்சா அதுல நீர் சேகரமாகியிருக் கும். இதுதான் பனிநீர்.

இதைத் தொடர்ந்து குடிச்சா. சொறி, சிரங்கு, குஷ்டம், தாபம், சயம், வாய்வு, முத்தோஷம், நீரிழிவு (சர்க்கரை நோய்தாங்க), அழல் கிராணி இப்படி பல நோய்ங்க காணாமப் போகும்.

இந்தப் பனிநீரை உடனே குடிக்கணும். காலம் தாழ்த்தி குடிச்சா, மருந்தா வேலை செய்யாம பக்கவிளைவு வந்துடும். சர்க்கரை நோய்க்கு ஆயிரக்கணக்குல மருந்து, மாத்திரை வாங்கி சாப்பிடறவங்க, பைசா செலவில்லாம கிடைக்குற பனிநீரையும் கவனிக்கலாம்.

4. ஆற்றுநீர்
ஆத்துத் தண்ணியில குளிச்சுட்டு வந்தா உடம்புக்குப் புதுதெம்பு வந்த மாதிரி உணரலாம். அதுக்குக் காரணம், மலைப்பகுதியில இருந்து ஓடி வரும்போது, பல மூலிகைங்க மேல பட்டு அந்தத் தண்ணி ஓடிவரும். 'தம்பி, ஒவ்வொரு ஆத்துத் தண்ணிக்கும், ஒவ்வொரு வித குணம் உண்டுப்பா’னு சொல்லிட்டு, 'தினமும் ஆத்து நீரை குடிச்சா, குளிச்சா வாதம், அனல், கபம், தாகம் நீங்கும்.

பொதுவா, நோய்க்கு வரவு சொல்லிக் கூப்பிடறது இந்த நாலு விஷயம்தான்’னு சொல்றாரு தேரையர். நம்ம முன்னோருங்க நோய் நொடியில்லாம, வாழ்ந்ததுக்கு ஆத்து நீரும்கூட ஒரு காரணமா இருந்திருக்கலாம்.

5. ஊற்றுநீர்
ஊத்துத் தண்ணியைக் குடிச்சா, பித்தமும் தாகமும் நீங்கும்.

6. பாறைநீர்
இதை பாறைநீர், சுக்கான்பாறைநீர், கரும்பாறைநீர்னு மூணு வகையா பிரிக்கிறார்.

இதுல சாதாரண பாறைநீரைக் குடிச்சா வாதம், கோபம், சுரம் உண்டாகும்.

சுக்கான் பாறைநீர் குடிச்சா நீர்க்கடுப்பு, நெஞ்சில் சீழ்க்கட்டுனு பலபிணிகளும், பித்தமும் வந்து சேரும்.

கடைசியா இருக்கிற கரும்பாறை நீர்தான் நல்லது. இந்த நீரைத் தொடர்ந்து குடிக்கும்போது வாந்தி, பெரும்பாடு, பித்தசுரம், மயக்கம், நீர்க்கடுப்பு, தாகம் எல்லாம் தீரும், உடலும் பளபளப்பாகும்.

7. அருவிநீர்
மேகம், ரத்தபித்தத்தையெல்லாம் நீக்கி, உடலுக்கு பலத்தையும் கொடுக்கும்.

8. அடவிநீர்
காட்டுப்பகுதியில் தேங்கிக் கிடக்குற இந்த நீரைக் குடிச்சா, ஜலதோஷம், உடல் கனப்பு, இளைப்பு, தலைபாரம், சுரம் உண்டாகும்.

9. வயல்நீர்
மேகம், தாகம், வெட்டை, சுரம், கோபத்தை போக்கும். அத்தோட உடலுக்குக் குளிர்ச்சியையும் கொடுக்கும்.

10. நண்டுக்குழிநீர்
வாந்தி, தாகம், மாறாத விக்கல், காந்தல், தேக எரிச்சல் உள்ளவங்க, நண்டுக் குழிநீரைத் தேடித்தேடி குடிங்கனு தேரையர் சொல்றாரு.

11. குளத்துநீர்
குளத்துல வாழுற நீர்த் தாவரங்களைப் பொறுத்து, அந்த நீரோட குண இயல்புகள் மாறுபடும்.

தாமரை அதிகமா வளர்ந்திருக்கும் குளத்து நீரைக் குடிக்கிறவங்களுக்கு வாதம், பித்தம், வெக்கைநோய், தாகம் ஆகியவை உணடாகும்.

அல்லி அதிகமாக வளர்ந்திருக்கும் குளத்து நீர் அக்கினி, மந்தபேதி, சொறிசிரங்கு, வெப்பு உண்டாகும்.

12. ஏரிநீர்
இந்த நீர், வாதத்தையும் துவர்ப்பையும் உண்டாக்கும்.

13. சுனைநீர்
கல்லுங்க நிறைஞ்ச சுனைநீர், வாதத்தையும் பித்தத்தையும் உண்டாக்கும். ஆனா, இந்த சுனைநீரை ஒருநாள் வெச்சிருந்து குடிச்சா, எந்தக் கெடுதலும் செய்யாது.

14. ஓடைநீர்
இதையும் சுவை அடிப்படையில ரெண்டு வகையா பிரிச்சிருக்காரு. ஒண்ணு துவர்ப்புச் சுவைநீர், ரெண்டாவது, இனிப்புநீர். இந்த இருவகையில் எதைக் குடிச்சாலும், தாகம் ஏற்படும். அதே நேரத்துல உடம்புக்கு பலமும் உண்டாகும்.

15. கிணற்றுநீர்
நிலவளத்தைப் பொறுத்து கிணற்றுநீரை ரெண்டு வகையா, பிரிக்கலாம். உவர்நீர் கிணறு, நன்னீர் கிணறு. இதுல ரெண்டு வகை நீரைக் குடிச்சாலும் தாகம், சூலை, சூடு நீங்கி, உடம்புக்கு வலு உண்டாகும். இத்தோட சிலேத்துமம், வாதம், மயக்கம், சோபை, பித்தமும் நீங்கும்.

16. உப்புநீர்
இதைக் குடிச்சா, குடல்வாதம் மறையும். அதேசமயம், நெஞ்செரிச்சல், பித்தம் உண்டாகும்.

17. சமுத்திரநீர்
கடல் நீரைக் காய்ச்சி குடிச்சா, தொழு நோய், உடல் கடுப்பு, குஷ்டம், நடுக்கு வாதம், பல்லிடுக்கு ரத்தம் கசிதல் நீங்கும்.

18. இளநீர்
இதைக் குடிச்சா வாதம், பித்தம், அனல், கபம், வாந்தி, பேதி, நீரடைப்பு நீங்கும். இத்தோட, மனதில் புத்துணர்ச்சி, பார்வையில தெளிவும், உடம்புக்குக் குளிர்ச்சியும் உருவாகும்.

எக்காரணம் கொண்டும், வெறும் வயித்துல இளநீரைக் குடிக்கக்கூடாது. குடிச்சா, வயிறு புண்ணாகிடும்.
நன்றி
சித்த மருத்துவர் கணபதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை