புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேற்று கிரகவாசிகள் உண்டா, இல்லையா? Poll_c10வேற்று கிரகவாசிகள் உண்டா, இல்லையா? Poll_m10வேற்று கிரகவாசிகள் உண்டா, இல்லையா? Poll_c10 
30 Posts - 86%
heezulia
வேற்று கிரகவாசிகள் உண்டா, இல்லையா? Poll_c10வேற்று கிரகவாசிகள் உண்டா, இல்லையா? Poll_m10வேற்று கிரகவாசிகள் உண்டா, இல்லையா? Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
வேற்று கிரகவாசிகள் உண்டா, இல்லையா? Poll_c10வேற்று கிரகவாசிகள் உண்டா, இல்லையா? Poll_m10வேற்று கிரகவாசிகள் உண்டா, இல்லையா? Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
வேற்று கிரகவாசிகள் உண்டா, இல்லையா? Poll_c10வேற்று கிரகவாசிகள் உண்டா, இல்லையா? Poll_m10வேற்று கிரகவாசிகள் உண்டா, இல்லையா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வேற்று கிரகவாசிகள் உண்டா, இல்லையா?


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 14, 2018 9:21 pm

நாம் வாழ்கின்ற இந்த பூமி உருவானது எப்போது, தெரியுமா உங்களுக்கு? 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக இந்தப் பூமி உருவானதாக விஞ்ஞானிகள் கணித்துச் சொல்லி இருக்கிறார்கள்.
இந்த பூமியில் உயிரினங்கள் எப்போது உருவாயின, தெரியுமா? 340 கோடி ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் முதன்முதலாக இந்தப் பூமியில் உயிரினங்கள் உருவானதாக விஞ்ஞானிகள், சரித்திரம் பேசுகிறார்கள். அப்போது முதலில் உருவான உயிரினம் எது என்றால் ஆஸ்திரேலியா கண்டத்தில் உருவான ‘ஸ்டி ரோமடோலிட்ஸ்’ என்ற பாக்டீரியாதான் என்று கை நீட்டுகிறார்கள், விஞ்ஞானிகள். இப்படி எத்தனையோ சுவாரசியங்கள், நம்மைச் சுற்றிலும் புதைந்து கிடக்கின்றன, பிரபஞ்ச ரகசியங்களாக.

இந்த பூமியைப் போன்று ஜீவராசிகள் வாழ்வதற்கான தகுதி படைத்த பிற கிரகங்கள் உண்டா? அந்த கிரகங்களில் நம்மைப்போன்று மனிதர்கள் உண்டா? இது இன்னும் அவிழாத மர்ம முடிச்சாகவே தொடர்கிறது. உலகமெங்கும் இது தொடர்பான ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் இன்னும் மாய்ந்து மாய்ந்து ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
நன்றி
தினத்தந்தி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 14, 2018 9:21 pm

அண்மையில் மறைந்த உலக புகழ் பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கூட இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டது உண்டு. பொதுவாகப் பார்த்தீர்களானால் ஏலியன்ஸ் அல்லது வேற்று கிரகவாசிகள் என்ற வார்த்தையை ஒன்றுக்கு இரண்டு தடவை உச்சரித்துப்பாருங்கள். நம்மை அறியாமல் நமக்குள் ஒரு பரவசம் தொற்றிக் கொள்வதை நாம் உணர முடியும். அத்தனை வசீகரமானவை அந்த வார்த்தைகள்கூட. அதனால்தானோ என்னவோ இது பற்றிய தகவல்கள், எப்போதுமே கவனத்தை கவருவதாகவே அமைந்திருக்கின்றன வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா, இல்லையா என்பது இன்னும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. ஆனாலும்கூட வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதற்கு பல தகவல்கள் சான்று பகர்கின்றன.

வேற்று கிரகவாசிகள் தொடர்பாக பல சினிமா படங்கள் வெளியாகி பிரமிக்க வைத்தது உண்டு. ஹாலிவுட்டில் 1951-ம் ஆண்டு ‘தி டே தி எர்த் ஸ்டுட் ஸ்டில்’ என்றொரு படம் எடுக்கப்பட்டது. இந்தப் படம் 2008-ம் ஆண்டு அதே பெயரில் ஹாலிவுட்டில் ஸ்காட் டெரிசன் இயக்கத்தில் மீண்டும் தயாரிக்கப்பட்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த ‘க்ளாட்‘ என்ற பெயரிடப்பட்ட வேற்று கிரகவாசி பாத்திரம், உலகமெங்கும் பேசப்பட்டது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 14, 2018 9:22 pm

அவ்வளவு ஏன், நமது பாலிவுட்டில் 2003-ம் ஆண்டு, ‘இ.டி. தி எக்ஸ்டிரா டெர்ரஸ்டிரியல்’ என்ற ஹாலிவுட் படத்தை தழுவி, ‘கோய் மில் கயா’ என்ற பெயரில் ராகேஷ் ரோஷன் இயக்கத்தில் வெளிவந்த படத்தில் இடம் பெற்றிருந்த வேற்று கிரகவாசி ஜாடூ நமது இதயங்களை கொள்ளை கொள்வதாக அமைந்தது. அந்தப் படம் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை குவித்தது.

இப்படி இருக்க, வேற்று கிரகவாசிகள் பறக்கும் தட்டின் மூலமாக பூமிக்கு வந்து சென்றார்கள் என்ற தகவல் அவ்வப்போது வெளிவந்தது உண்டு. விஞ்ஞானத்தில் முன்னணியில் உள்ள அமெரிக்காவையும் கூட இந்த வேற்று கிரகவாசிகள் மோகம் விட்டுவைக்க வில்லை. அதனால்தான் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ இன்னும் இதுபற்றிய ஆராய்ச்சியை தொடர்ந்து கொண்டிருக்கிறது.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 14, 2018 9:22 pm

கடந்த ஆண்டு கர்நாடக மாநிலம், குடகு மாவட்டத்தில் அண்டூரில் விவசாய நிலம் ஒன்றில் மிகப் பெரிய காலடி தடங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அந்தக் காலடி தடங்கள் எந்த மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் உரித்தானவை அல்ல என்றும், அந்த காலடி தடங்கள் காணப்பட்ட அன்று அதிகாலை நேரத்தில் ஏதோ வினோதமான ஒரு உயிரினத்தின் குரல் கேட்டதாகவும், அப்போது நாய்கள் இடைவிடாது குரைத்ததாகவும் தகவல்கள் வந்தன. அது வேற்று கிரகவாசிகளின் காலடி தடமாக இருக்க வாய்ப்பு உணடு என்றும் சொல்லப்பட்டது. அந்த காலடி தடங்கள் பூமியில் வாழக் கூடிய எந்தவொரு உயிரினத்தின் காலடித்தடங்கள் போல இல்லை என்று வனத்துறையினர் கூறியதாகவும் வெளியான தகவல் மேலும் சுவாரசியம் கூட்டியது மறக்க முடியாத பதிவு.நிலவில் 6-வது மனிதராக சுவடுகளைப் பதித்து வந்த எட்கர் மிட்செல், ஏலியன்கள் பல முறை நம்மை தொடர்பு கொள்ள முயற்சித்திருக்கின்றன என்று சொல்லி இருக்கிறார். பிரேசில் நாட்டில் விவசாயியாக இருந்து பின்னர் வக்கீலாக மாறிய ஆன்டனியோ விலாஸ் போஸ் என்பவர் தன்னை வேற்று கிரகவாசி 1957-ம் ஆண்டு கடத்திச் செல்ல முயற்சித்ததாக கூறியது உலகளாவிய அதிர் வலைகளை ஏற்படுத்தியது.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 14, 2018 9:23 pm

உலகத்தைக் கட்டிப்போட்டிருக்கிற செஸ் விளையாட்டை கண்டு பிடித்தவர்கள் ஏலியன்ஸ்தான் என்று உலக செஸ் அமைப்பின் தலைவர் கிர்சன் கிலியம் ஜினோவ் கொளுத்திப் போட்ட பட்டாசை மறந்து விட முடியாது.அமெரிக்க நாட்டில் ஏலியன்ஸ் தாக்கினால் அவற்றை எதிர் கொள்வது எப்படி என்று தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தேறி இருக்கின்றன.வேற்று கிரகவாசிகளால் தாங்கள் கடத்தப்படலாம் என்று கருதி 40 ஆயிரம் பேர் அமெரிக்காவில் காப்பீடு செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ‘கிராப் சர்க்கிள்’ என்ற மனிதர்களால் வரைய முடியாத கோலம் போன்ற அமைப்பினை ஏலியன்கள் தான் உருவாக்கி இருக்கக்கூடும் என்ற நம்பிக்கை இன்றளவும் நிலவுகிறது. ‘நாசா’ வின் முன்னாள் விஞ்ஞானி லீ லான்ட் மெல் வின், தனது விண்வெளிப்பயணத்தின்போது தான் ஏலியன்ஸை பார்த்ததாக சொல்லி பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வும் இந்த மண்ணில் அரங்கேறி இருக்கிறது. கடைசியாக, உயிரினங்கள் வாழ்வதற்கு தண்ணீர் அவசியம். எனவே எந்த கிரகங்களில் எல்லாம் தண்ணீர் இருக்கிறதோ அங்கெல்லாம் ஏலியன்ஸ் இருக்கக்கூடும் என்ற கருத்தும் அறிவியல் உலகில் நிலவுகிறது. “செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 14, 2018 9:24 pm

வியாழன் கிரகத்தின் நிலாவான யூரோப்பாவில் தண்ணீர் இருக்கிறதாம். அதுவும் தண்ணீர்ப் பெருங்கடலே இருக்கிறதாம்.சனி கிரகத்தின் நிலாக்களான டைட்டான், என் செலாடஸ் ஆகியவற்றிலும் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன” என்கிறார் வேற்று கிரகவாசிகள் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிற அமெரிக்காவின் சேட்டி இன்ஸ்டிடியூட்டின் விஞ்ஞானி சேத் சொஸ்டாக்.

அதே நேரத்தில் பூமிக்கு அப்பால் எந்தவொரு கிரகத்திலும் மனிதர்களைப்போன்று வேறு யாரும் வாழ்வதற்கு ஆதாரங்கள் இல்லை என்றாலும், மறுப்பதற்கும் எந்த ஆதாரங்களும் இல்லை.வேற்று கிரகவாசிகள் ஒரு புறம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், நம்மில் பலரும் நம்மை சேர்ந்தவர்களுடன் வேற்று கிரகவாசிகள் போல நடந்துகொள்ளாமல் சக மனிதர்களாக நடந்துகொள்வது மனிதம் வளர்க்கும். அப்போதுதான் வேற்று கிரகவாசிகள் இருப்பது கண்டறியப்பட்டால், அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், ஏன், அவர்களே இந்தப் பூமிக்கு வந்தாலும் கூட நாம் அவர்களை நேசிக்க முடியும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 14, 2018 10:03 pm

வேற்றுக் கிரகவாசிகள் இருப்பதாக அமெரிக்கர்கள் மட்டுமே அதிகம் நம்புகிறார்கள்.

பேய் இருக்கா? இல்லையா? என்பதைப் போல் தான் ஏலியன் கதையும்.
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



வேற்று கிரகவாசிகள் உண்டா, இல்லையா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Oct 15, 2018 10:01 am

வேற்று கிரகவாசிகள் என்றாலே பரவசம் தொற்றி கொள்ளும் என்பது முற்றிலும் உண்மை ..அத்தனை படங்கள் பல தொடர்கள்,பல புத்தகங்கள், கட்டுரைகள் வந்திருக்கின்றது அவைகள் தான் முக்கிய காரணம்...
சிவனை கூட ஏலியன் என்று சொல்லும் ஆராய்ச்சியாளர்களும் இருக்கின்றனர்... குதூகலம்






புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 15, 2018 5:07 pm

சிவா wrote:வேற்றுக் கிரகவாசிகள் இருப்பதாக அமெரிக்கர்கள் மட்டுமே அதிகம் நம்புகிறார்கள்.

பேய் இருக்கா? இல்லையா? என்பதைப் போல் தான் ஏலியன் கதையும்.
மேற்கோள் செய்த பதிவு: 1281757
எத்தனை சினிமாவில் இதை பார்த்திருப்போம்
நன்றி தலைவா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 15, 2018 5:09 pm

ரா.ரமேஷ்குமார் wrote:வேற்று கிரகவாசிகள் என்றாலே பரவசம் தொற்றி கொள்ளும் என்பது முற்றிலும் உண்மை ..அத்தனை படங்கள் பல தொடர்கள்,பல புத்தகங்கள், கட்டுரைகள் வந்திருக்கின்றது அவைகள் தான் முக்கிய காரணம்...
சிவனை கூட ஏலியன் என்று சொல்லும் ஆராய்ச்சியாளர்களும் இருக்கின்றனர்... குதூகலம்


மேற்கோள் செய்த பதிவு: 1281791
இதை பற்றிய கதைகள் நிறைய உள்ளது இன்னும் வந்து கொண்டே இருக்கும்.
நன்றி ரமேஷ்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக