புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_c10வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_m10வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_c10 
107 Posts - 49%
heezulia
வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_c10வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_m10வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_c10வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_m10வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_c10வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_m10வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_c10வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_m10வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_c10 
9 Posts - 4%
prajai
வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_c10வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_m10வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_c10வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_m10வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_c10 
2 Posts - 1%
Barushree
வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_c10வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_m10வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_c10வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_m10வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_c10வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_m10வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_c10வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_m10வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_c10 
234 Posts - 52%
heezulia
வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_c10வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_m10வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_c10வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_m10வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_c10வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_m10வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_c10வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_m10வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_c10 
18 Posts - 4%
prajai
வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_c10வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_m10வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_c10 
5 Posts - 1%
Barushree
வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_c10வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_m10வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_c10வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_m10வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_c10வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_m10வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_c10வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_m10வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வ.உ.சி பிறந்த நாள் செப்.5


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 05, 2011 12:59 pm

வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Studentcalender_49033755065

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வ. உ. சிதம்பரம்பிள்ளை

வ. உ. சிதம்பரம்பிள்ளை (செப்டம்பர் 5, 1872 - நவம்பர் 18, 1936) கப்பல் ஓட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்றெல்லாம் தமிழர்களால் அறியப்பட்டவர். இந்திய விடுதலைப் போராட்ட வீரர். "ஒருநாடு உரிமையோடு விளங்க வேண்டுமென்றால் முதலில் அதன் பொருளாதாரச் சுரண்டலைத் தடுக்க வேண்டும்; இரண்டாவதாகத் தாய்மொழியின் வாயிலாக அறிவை வளர்க்க வேண்டும். இந்த இரண்டும் எல்லா நாடுகளுக்கும் பொதுவான உணமை. இதனை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே நன்றாக உணர்ந்து வாழ்க்கையில் காட்டித் தொண்டு செய்தவர் வ.உ.சி" என்று டாக்டர் மு.வ. அவர்கள் சொன்னது போல் நாடு மொழி இரண்டிற்கும் பெருந்தொண்டாற்றிய பெருமகன்.

தமிழ் நாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் [[(வன்தனம் என்கிற குட்டி கிராமம், ஒட்டப்பிடாரம் அருகில் உள்ளது. இது தான் வ.உ.சி. பிறந்தார்) - ஒட்டப்பிடாரம்]] எனும் ஊரில் உலகநாதன் பிள்ளை - பார்வதி அம்மை தம்பதியர்களுக்கு மூத்த மகனாக இவர் பிறந்தார். அடிப்படைக் கல்வியை ஓட்டப்பிடாரத்திலும், உயர்நிலைக் கல்வியை தூத்துக்குடியிலும், சட்டக்கல்வியைத் திருச்சியிலும் பெற்று 1895-ல் வழக்கறிஞரானார்.
[தொகு] தொழில்

உரிமையியல், குற்றவியல் ஆகிய இரண்டு சட்டத் துறைகளிலுமே சிறந்து விளங்கிப் பொருள் குவித்தார். தமிழாராய்ச்சி, தத்துவ ஆராய்ச்சி ஆகியவற்றிலும் ஆர்வம் கொண்டிருந்தார். விவேகபானு என்கிற மாத இதழை நடத்தி வந்தார். சைவ சித்தாந்த சபை, மதுரைத் தமிழ்ச் சங்கம், வாலிபர் சங்கம், பிரம்ம சங்கம் போன்ற சங்கங்களில் உறுப்பினராகித் தன் அறிவுப் பசிக்குத் திசைதோறும் உணவு தேடினார்.

விடுதலைப் போராட்ட ஈடுபாடு

முதல்கட்டம்

சென்னையில் விவேகானந்தர் மடத்தைச் சேர்ந்த இராமகிருஷ்ணானந்தரின் சந்திப்பு வ.உ.சியின் உள்ளத்தில் விடுதலைக் கனலை ஓங்கச் செய்தது. அதன்பிறகே அவர் வாழ்வில் புது அத்தியாயம் தொடங்கியது. தூத்துக்குடி திரும்பியதும், கைத்தொழில்சங்கம், தருமசங்கம், நூல்நூற்பு நிறுவனம், தேசியப் பண்டகசாலை ஆகியவற்றை நிறுவி சுதேசியம் வளர்க்க ஆரம்பித்தார். வந்தே மாதர முழக்கங்களைத் துணிகளில் எழுதச் செய்து வீதிகள் தோறும் வீடுகள் தோறும் தேசிய உணர்வை வளர்த்தார். பாலகங்காதர திலகரின் விடுதலைப் போராட்டத்தில் மனதைபறிகொடுத்து, இந்திய சுதந்திரப் போராட்டத்தி்ற்காகப் பாடுபட்டார்.

கப்பலோட்டிய தமிழன்

ஆங்கிலேய ஆதிக்கம் கடல்வழி வணிகத்தினால் தான் வளர்ந்தது என்கிற அடிப்படையில், அவர்களை விரட்ட, அவர்களுடைய கப்பல் கம்பெனிக்குப் போட்டியாக, 1906-ஆம் ஆண்டு "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்கிற சங்கத்தை நிறுவி அதன் செயலாளர் ஆனார். (அதன் தலைவர் மதுரை தமிழ்ச்சங்கத் தலைவர், வள்ளல் பாண்டித்துரைதேவர்; சட்ட ஆலோசகர் சேலம் சி.விஜயராகவாச்சாரியார்). அந்தக் கம்பெனியின் சார்பில் காலியா, லாவோ ஆகிய இரண்டு கப்பல்களை வாங்கி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இயக்கத் தொடங்கினார். அதனால் கப்பலோட்டிய தமிழன் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.
[தொகு] செக்கிழுத்த செம்மல்

தொடர்ந்த இவருடைய சுதந்தரப் போராட்ட நடவடிக்கைகளால் எரிச்சலடைந்திருந்த ஆங்கிலேய அரசு, 1908-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் நாள் விபின் சந்திரபாலர் விடுதலைக் கொண்டாட்டத்தின் போது அரசாங்கத்தை அவமதித்ததாகவும், சுதந்திரத்திற்காக பொதுமக்களைத் தூண்டியதாகவும் இவர்மேல் வழக்குப் பதிவு செய்து, இவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்தது. (அரச நிந்தனைக்கு 20 ஆண்டுகள், சுப்ரமணிய சிவாவுக்கு உடந்தையாக இருந்ததற்கு 20 ஆண்டுகள். மொத்தம் 40 ஆண்டுகள். அதுவும் அந்தமான் சிறையில்). தீர்ப்பளித்தவர் திருநெல்வேலி ஜில்லா செஷன்ஸ் நீதிபதி ஏ.எஃப்.ஃபின்ஹே.

அந்தத் தீர்ப்பினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. முறையீட்டின் போது அந்தமான் அனுப்ப இயலாது என்பதால் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டார் வ.உ.சி. அங்கே தான் செக்கிழுக்க வைக்கப்பட்டார். செக்கிழுத்த செம்மல் என்ற பெயரும் இவருக்கு உண்டு. சென்னை உயர் நீதிமன்றம் அவருடைய தண்டனைக் காலத்தைப் பத்தாண்டுகளாகவும், லண்டன் பிரிவியூ கவுன்ஸில், ஆறு ஆண்டுகள் கடுங்காவலாகவும் குறைத்தன.

அரசியல் துறவு

அவர் சிறையில் இருந்த காலத்திலேயே சுதேசிக் கப்பல் கம்பெனி நொடித்துப் போனது. 1912 ஆம் ஆண்டு டிசம்பரில் அவர் விடுதலை ஆகி வெளியே வந்தார். தூத்துக்குடி செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்ததால் சென்னை செல்ல வேண்டியவரானார். வழக்கறிஞர் பட்டயமும் பறிக்கப்பட்டிருந்தது. சென்னையில் மயிலை, சிந்தாதிரிப்பேட்டை, பெரம்பூர் ஆகிய பகுதிகளில் அரிசி வியாபாரம் செய்து வாழ்ந்தார். விடுதலை வரலாற்றில் அந்தக் காலகட்டத்தில் திலகரின் சகாப்தம் முடிந்து காந்தியின் சகாப்தம் வேகம் பெற்றிருந்தது. அதில் வ.உ.சி.க்கு ஈடுபாடு இல்லை என்பதால் கிட்டத்தட்ட அரசியல் துறவு நிலையில் தான் இருந்தார்.

தமிழ்ப்பணி

சிறையில் இருந்த நாட்களிலேயே தமிழ் இலக்கிய இலக்கணங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிய வ.உ.சி. அவர்களால் தமிழன்னைக்குக் கிடைத்த அணிகலன்கள் பல.

* வ.உ.சிதம்பரம் பிள்ளை தற்சரிதம் (சுயசரிதம்)
* திருக்குறள் மணக்குடவர் உரைபதிப்பு
* மனம் போல் வாழ்வு (மொழி பெயர்ப்பு தத்துவ நூல்)
* அகமே புறம் (தத்துவம்)
* மெய்யறம் (ஆன்மீகப்புரட்சி நூல்)
* திருப்பொய்கையார் இன்னிலை (பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. அதன் உரைநூல்)
* தொல்காப்பியம் இளம்பூரணர் உரைபதிப்பு
* வலிமைக்கு மார்க்கம் (மொழிபெயர்ப்பு நூல்)
* சாந்திக்கு மார்க்கம் (தத்துவம்)
* சிவஞானபோத உரை (சைவ சித்தாந்த உரை நூல்)
* மெய்யறிவு (அற நூல்)

சான்றிதழ்

"சிதம்பரம்பிள்ளையின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்"

1908ஆம் ஆண்டு சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்த தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே எழுதியுள்ள வரிகளே இவை. வ.உ.சி.யின் விடுதலை வேட்கைக்கும் வேகத்துக்கும் இதனை விடச் சிறந்த அங்கீகாரத்தை வேறு எவரும் தந்துவிட முடியாது.

நினைவு போற்றல்கள்

* இவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டது. அந்தத் திரைப்படத்தில் வ.உ.சி பாத்திரத்தில் மறைந்த தமிழ்த் திரைப்பட நடிகர் சிவாஜி கணேசன் நடித்தார்.

* தூத்துக்குடியைத் தலைநகராகக் கொண்டு 1986-ல் மாவட்டம் உருவாக்கப்பட்ட போது இவருடைய பெயர் அந்த மாவட்டத்துக்கு வைக்கப்பட்டது.

* இந்திய அரசும் இவரைக் கவுரவித்து அஞ்சல் தலை வெளியிட்டிருக்கின்றது.

* இந்திய அரசு தூத்துக்குடி துறைமுகத்திற்கு வ. உ. சிதம்பரனார் துறைமுகம் என்று பெயர் வைத்து சிறப்பு செய்துள்ளது.

வ.உ.சிதம்பரனார் இல்லம்

தமிழ்நாடு அரசு வ.உ.சிதம்பரனார் பிறந்த தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் ஊரில் வ.உ.சிதம்பரனார் இல்லம் அமைத்துள்ளது. இதில் நூலகம் ஒன்று அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இங்கு வ.உ.சி. அவர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Sep 05, 2011 1:06 pm

வ. உ. சிதம்பரம்பிள்ளை வாரிசுகள் ஏழ்மையில் கஷ்டபடுகிறார்களாம் .இது உண்மையா????



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
வ.உ.சி பிறந்த நாள் செப்.5  1357389வ.உ.சி பிறந்த நாள் செப்.5  59010615வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Images3ijfவ.உ.சி பிறந்த நாள் செப்.5  Images4px
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Mon Sep 05, 2011 1:06 pm

பணக்காரனாய் பிறந்து
நாட்டிற்காக செக்கிலுத செம்மலே
உம்மை :வணக்கம்: வணங்குகிறோம்



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Mgr
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 05, 2011 1:23 pm

pkesavanmca wrote:வ. உ. சிதம்பரம்பிள்ளை வாரிசுகள் ஏழ்மையில் கஷ்டபடுகிறார்களாம் .இது உண்மையா????

ஆமாம் சோகம் பேப்பரில் பார்த்தேன் அழுகை அழுகை அழுகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Sep 05, 2011 1:35 pm

பகிர்வுக்கு நன்றி அக்கா...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Sep 05, 2011 1:35 pm

krishnaamma wrote:
pkesavanmca wrote:வ. உ. சிதம்பரம்பிள்ளை வாரிசுகள் ஏழ்மையில் கஷ்டபடுகிறார்களாம் .இது உண்மையா????

ஆமாம் சோகம் பேப்பரில் பார்த்தேன் அழுகை அழுகை அழுகை

சோகம் சோகம் சோகம்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 05, 2018 2:26 pm

இன்று கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பிறந்த தினம்


சுதந்திர போராட்ட வீரர், மொழி பெயர்ப்பாளர், நுாலாசிரியர், பத்திரிகையாளர் என பல பரிணாமங்களை கொண்டவர் வ.உ.சிதம்பரம். அரசியல் வாழ்விலும், தமிழ்ப்பணியிலும் தன்னிகரற்று திகழ்ந்தார்.

'கப்பலோட்டிய தமிழன்', 'செக்கிழுத்த செம்மல்' என புகழப்படும் இவர் துாத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் 1872 செப்.5ல் பிறந்தார். சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றினார்.

பின் 1890களில் பாலகங்காதர திலகரால் கவரப்பட்டு, சுதேசி இயக்கங்களில் ஈடுபாடு காட்டினார். கைத்தறி ஆடைகளுக்காக 'தர்ம சங்க நெசவுச்சாலை'யையும், சுதேசி பொருட்களை ஊக்குவிக்கும் வகையில் 'சுதேசி கடைகளை'யும் துவக்கினார்.

கப்பல் நிறுவனம் :

துாத்துக்குடி - கொழும்பு போக்குவரத்தில் ஆங்கிலேயரின் கப்பல் நிறுவனம் ஏகபோக உரிமையை அனுபவித்து வந்தது. இதை எதிர்த்து ஆங்கிலேயர்களுக்கு போட்டியாக இரண்டு புதிய கப்பல்களுடன் 1906ம் ஆண்டு களத்தில் இறங்கினார். உள்ளூர் வணிகர்களின் ஆதரவு இருந்ததால், சுதேசி நீராவி கப்பல் போக்குவரத்து கம்பெனி சிறப்பாக செயல்பட்டது.

பாரதியாருடன் நட்பு பாரட்டிய இவர், 1907ல் நடந்த சூரத் காங்., மாநாட்டில் அவருடன் கலந்து கொண்டார். இது தவிர துாத்துக்குடியில் கோரல்மில் தொழிலாளர் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு கொடுத்தார். இவரது நடவடிக்கைகள் ஆங்கிலேயருக்கு எரிச்சலை ஏற்படுத்தின. இதனால் கலகம் விளைவித்தார் என குற்றம் சாட்டி 1908ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இரட்டை ஆயுள் தண்டனை பெற்றார். வழக்கறிஞர் உரிமமும் பறிக்கப்பட்டது.

சிறையில் அவர் அரசியல் கைதியாக நடத்தப்படவில்லை. செக்கிழுத்தல் உள்ளிட்ட கடும் சித்ரவதைகளுக்கு ஆளானார். 1912ல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவர் சிறையிலிருந்த காலத்தில் அவரது கப்பல் நிறுவனம் ஆங்கிலேயரால் முடக்கப்பட்டது. விடுதலைக்குப்பின் சிறிது காலம் வணிகம், பின் அரசியல், வழக்கறிஞர், நுால் எழுதுதல் போன்ற பணிகளை மேற்கொண்டார்.



வ.உ.சி பிறந்த நாள் செப்.5  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 05, 2018 3:37 pm

சிதம்பரம் பிள்ளை மறுபடியும் எப்படியாவது பறிமுதல்
செய்யப்பட்ட தனது வக்கீல் சன்னத்தைத் திரும்பப் பெற
முயன்றார்.

அப்போது அவருக்கு இ.எச்.வாலஸ் என்ற வெள்ளைக்கார
நீதிபதி உதவி செய்தார். வெள்ளை மனிதர்களிலும்
சில கண்ணியவான்கள் இருக்கிறார்கள் என்பதை
மெய்ப்பிக்கும் வகையில், அந்த நீதிபதியின் பேருதவியால்
சிதம்பரம் பிள்ளைக்கு மீண்டும் வக்கீல் சன்னத்து கிடைத்தது.

நன்றியின் திலகமாக நடமாடிய சிதம்பரம், தனது மகன்
ஒருவருக்கு அந்த நீதிபதியின் பெயரான வாலஸ் என்பதின்
அடையாளமாக, வாலீஸ்வரன் என்ற பெயரை வைத்துப்
போற்றினார். அதுபோலவே, அடிக்கடி பொருள் உதவி
செய்த தூத்துக்குடி,ஆறுமுகம்பிள்ளையின்பெயரை
மற்றொருமகனுக்கு ஆறுமுகம் என்று பெயரிட்டு நன்றி
மறவா நாயகரானார்.

சிதம்பரம் பிள்ளை சென்னையில் இருக்கும்போது வறுமை
நெருப்போடு வாழும் நிலையிலே நாட்களை நகர்த்தினார்.
அப்போதும், இவ்வளவு கஷ்ட நிலையிலும், அவர் பொது
வாழ்க்கைப் பணி மீது வெறுப்புக் கொள்ளவில்லை.

சென்னை பெரம்பூர் ரயில்வே தொழிலாளர்கள் சங்கத்தின்
துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுத் தீவிரமாகப் பணி
புரிந்தார். இந்தப் பதவியிலும் தனது தீவிரத்தைக் காட்டி
பல ஆண்டுகள் உழைத்தார்.

வாலஸ் பெருமகன் செய்த உதவியால், சிதம்பரம் பிள்ளை
வக்கீல் சன்னத்து சற்றுத் தாமதமாகவே கிடைத்தது.
அதைப் பெற்ற சிதம்பரனார் நேரே தனது ஊரருகே உள்ள
நகரமான கோயில்பட்டிக்குச் சென்றார்.

அங்கே மீண்டும் வக்கீலானார்! மறுபடியும் துத்துக்குடி
நகருக்கே சென்றார்.
-
----------------------------
மூலம்-தமிழ் விக்கி சோர்ஸ்

கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Wed Sep 05, 2018 5:17 pm

செக்கிழுத்த செம்மலின் நினைவை போற்றுவோமாக...அவரின் தியாக உணர்வில் ஆயிரத்தில் ஒரு பங்கேனும் நமக்கு வர வேண்டும் என்று இறைவனை வேண்டுவோம்...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 05, 2018 8:59 pm

கோபால்ஜி wrote:செக்கிழுத்த செம்மலின் நினைவை போற்றுவோமாக...அவரின் தியாக உணர்வில் ஆயிரத்தில் ஒரு பங்கேனும் நமக்கு வர வேண்டும் என்று இறைவனை வேண்டுவோம்...
மேற்கோள் செய்த பதிவு: 1276481

நல்ல தேசிய சிந்தனை. நன்றி கோபால்ஜி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக