புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாரு இவரு கண்டுபுடிங்க  - Page 11 I_vote_lcapயாரு இவரு கண்டுபுடிங்க  - Page 11 I_voting_barயாரு இவரு கண்டுபுடிங்க  - Page 11 I_vote_rcap 
25 Posts - 69%
heezulia
யாரு இவரு கண்டுபுடிங்க  - Page 11 I_vote_lcapயாரு இவரு கண்டுபுடிங்க  - Page 11 I_voting_barயாரு இவரு கண்டுபுடிங்க  - Page 11 I_vote_rcap 
10 Posts - 28%
mohamed nizamudeen
யாரு இவரு கண்டுபுடிங்க  - Page 11 I_vote_lcapயாரு இவரு கண்டுபுடிங்க  - Page 11 I_voting_barயாரு இவரு கண்டுபுடிங்க  - Page 11 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாரு இவரு கண்டுபுடிங்க  - Page 11 I_vote_lcapயாரு இவரு கண்டுபுடிங்க  - Page 11 I_voting_barயாரு இவரு கண்டுபுடிங்க  - Page 11 I_vote_rcap 
361 Posts - 78%
heezulia
யாரு இவரு கண்டுபுடிங்க  - Page 11 I_vote_lcapயாரு இவரு கண்டுபுடிங்க  - Page 11 I_voting_barயாரு இவரு கண்டுபுடிங்க  - Page 11 I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
யாரு இவரு கண்டுபுடிங்க  - Page 11 I_vote_lcapயாரு இவரு கண்டுபுடிங்க  - Page 11 I_voting_barயாரு இவரு கண்டுபுடிங்க  - Page 11 I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
யாரு இவரு கண்டுபுடிங்க  - Page 11 I_vote_lcapயாரு இவரு கண்டுபுடிங்க  - Page 11 I_voting_barயாரு இவரு கண்டுபுடிங்க  - Page 11 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
யாரு இவரு கண்டுபுடிங்க  - Page 11 I_vote_lcapயாரு இவரு கண்டுபுடிங்க  - Page 11 I_voting_barயாரு இவரு கண்டுபுடிங்க  - Page 11 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
யாரு இவரு கண்டுபுடிங்க  - Page 11 I_vote_lcapயாரு இவரு கண்டுபுடிங்க  - Page 11 I_voting_barயாரு இவரு கண்டுபுடிங்க  - Page 11 I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
யாரு இவரு கண்டுபுடிங்க  - Page 11 I_vote_lcapயாரு இவரு கண்டுபுடிங்க  - Page 11 I_voting_barயாரு இவரு கண்டுபுடிங்க  - Page 11 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
யாரு இவரு கண்டுபுடிங்க  - Page 11 I_vote_lcapயாரு இவரு கண்டுபுடிங்க  - Page 11 I_voting_barயாரு இவரு கண்டுபுடிங்க  - Page 11 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
யாரு இவரு கண்டுபுடிங்க  - Page 11 I_vote_lcapயாரு இவரு கண்டுபுடிங்க  - Page 11 I_voting_barயாரு இவரு கண்டுபுடிங்க  - Page 11 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
யாரு இவரு கண்டுபுடிங்க  - Page 11 I_vote_lcapயாரு இவரு கண்டுபுடிங்க  - Page 11 I_voting_barயாரு இவரு கண்டுபுடிங்க  - Page 11 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரு இவரு கண்டுபுடிங்க


   
   

Page 11 of 13 Previous  1, 2, 3 ... 10, 11, 12, 13  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Dec 19, 2017 1:03 am

First topic message reminder :

19.12.2017

இவர் உண்மையான பேர் ரத்னகுமாரி. ஆந்திரா நெல்லூரில் பொறந்தாராம்.

1965 லேயிருந்து 1980 வரை தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் கொடி கட்டி பறந்திருக்காராம். கல்யாணத்துக்கப்புறம் அம்மா வேஷத்தில நடிக்க ஆரம்பிச்சாராம். மோசமான மாமியாராவும், ஆண்ட்டியாவும் வேற நடிச்சாராம். TV சீரியல்லேயும் நடிச்சிருக்காராம். இப்போ தெலுங்கில குணசித்திர வேஷத்தில் நடிச்சிட்டு இருக்காராம்.

இவர் யாரூ ......................... ன்னு சொல்லுங்க பார்க்கலாம்? கண்டுபிடிச்சிருப்பீங்களே. சீக்கிரமா சொல்லுங்கப்பா.

Heezulia மீண்டும் சந்திப்போம்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 15, 2020 5:11 pm

வரலக்ஷ்மி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 15, 2020 6:05 pm

யாரு இவரு கண்டுபுடிங்க  - Page 11 S.Varalakshmi
-
1938-ம் ஆண்டு முன்னோடி இயக்குநர் [^] கே. சுப்பிரமணியம் (நடன கலைஞர் [^] பத்மா சுப்பிரமணியத்தின் தந்தை) தயாரித்த “சேவாசதனம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எஸ். வரலட்சுமி. இவர் மிகச் சிறந்த பாடகியும் கூட.

சக்கரவர்த்தி திருமகள், வீரபாண்டிய கட்ட பொம்மன், ராஜராஜ சோழன், கந்தன் கருணை, நீதிக்குத் தலைவணங்கு, பூவா தலையா, குணா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்தவர் எஸ் வரலட்சுமி.

இவர் பாடிய ‘இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டிவைத்தேன்….’ என்ற பாடல் மிகப் புகழ்பெற்றது, கேட்போரை உருக வைப்பது.

அதேபோல குணா படத்தில் கமல்ஹாசனின் தாயார் வேடத்திலும் நடித்து ஒரு பாடலையும் பாடியிருந்தார் வரலட்சுமி.

திருடாதே, கந்தன் கருணை, சினிமா பைத்தியம் உள்ளிட்ட ஏராளமான படங்களின் தயாரிப்பாளரும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவருமான ஏ.எல். சீனிவாசனின் மனைவி வரலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.

கலைமாமணி, கலைவித்தகர், கண்ணதாசன் விருது [^] உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், தான் நடித்த அனைத்து படங்களிலும் சொந்தக் குரலிலேயே பேசி, பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த எஸ். வரலட்சுமிக்கு முருகன் என்ற மகனும், நளினி என்ற மகள், ஒரு பேரன், ஒரு பேத்தி உள்ளனர்.
-
நன்றி-ரேடியோ- கானாபிரபா

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jul 15, 2020 10:18 pm

15.07.2020 

பாலு சார், அய்யாசாமி சார், ரெண்டு பேரும் தப்பா சொல்லிட்டீங்க. 
வரலட்சுமி சிவாஜிக்கு தங்கச்சியா நடிச்சிருக்காரான்னு தெரீலீயே. 
சரி சரி. வேற யாரும் ஒண்ணும் சொல்லலியே. 
நானே சொல்றேன். 
இவரு வந்து.............. வந்து..................
 
 
AG ரத்னமாலா   

ரேடியோவில இவங்க பாட்டை போடும்போது, A ரத்னமாலான்னுதான் சொல்வாங்களாம். G சொன்னதில்லயாமே. AP கோமளா, ஜமுனாராணி, ஜிக்கி, பானுமதி, சரோஜினி, P லீலா, ஞானசரஸ்வதி, TV ரத்னம்,  சந்திரபாபு, திருச்சி லோகநாதன், சிதம்பரம்  எஸ்.ஜெயராமன்  SC கிருஷ்ணன் போன்ற பிரபல பாடகர்கள், பாடகிகள் கூட ஏகப்பட்ட பாட்டுக்களை பாடியிருக்கார்.

MGRஇன் 'இன்பக் கனவு' நாடகத்தில  MGRக்கு ஜோடியா நடிச்சார்.

என் தங்கைன்னு ஒரு படம். இதே பேர்ல நாடகமாக நடத்தப்பட்டுச்சு. அந்த நாடகத்ல ரத்னமாலா சிவாஜிக்கு தங்கையா  நடிச்சார். 

MGR நாடக குழுவில நடிச்சிட்டு இருந்தார். சிவாஜி நாடக மன்றத்தில சேர்ந்து, வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தில, சிவாஜியின் மனைவி ஜக்கம்மாவாக நடிச்சார். 

TR மகாலிங்கத்தின் 'ஓர் இரவு' நாடகத்லேயும் நடிச்சார்.
   
இவர் பாடிய பாட்டுக்கள் சில :  
புரிந்துகொள்ளவில்லை இன்னும் - மங்கையர் திலகம் 1955 - SC கிருஷ்ணனுடன்
பாரு பாரு - அருமை மகள் அபிராமி 1959 – K ராணி கூட 
கண்ணுக்கழகா பெண்களை – அவள் யார் 1959 –ஜிக்கி கூட 
அடிச்சது பார் ஒண்ணாம் நம்பர் – அபலை அஞ்சுகம் 1959 – AL ராகவன் கூட 
பட்டு சேலை வாங்கி தாரேன் – இரு மனம் கலந்தால் திருமணம்  1960 – SCK கூட 
கோபிக்கிறாபோல கோபிக்காதே – உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் 1959 – SCK கூட 
வண்டே நீ வா வா – எல்லாம் இன்ப மயம் 1955
அக்கா மகளே சொக்கி – சுமங்கலி 1959 – SCK
பூமாலை போட்டு போன மாமா – தங்கப் பதுமை 1959 – SCK
அச்சா பஹுத் அச்சா – திருடாதே 1961 – SCK
போடு வெத்தல பாக்கு – நீலமலைத் திருடன் 1957 – SCK
உன் திருமுகத்தை ஒரு முகமா – மகாதேவி 1957 –சந்திரபாபு
கேட்டாலும் கேட்டது இப்படி – கலை அரசி 1963
போகாதே போகாதே என் – வீரபாண்டிய கட்டபொம்மன் 1959
ஆத்துக்குள்ளே ஊத்து வெட்டி – வீரபாண்டிய கட்டபொம்மன் 1959 –திருச்சி லோகநாதன்
ஐ லவ் யூ ஆசையானேனே – அந்தமான் கைதி 1952 –சந்திரபாபு
கும்மாளம் போட்டதெல்லாம் – ஆரவல்லி 1957 – TV ரத்னம்
இது செங்கம்மா அது அங்கம்மா – ஆரவல்லி 1957 – SGR

இன்னொரு விஷயம் படிச்சேன். அது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியல. அத இங்க சொல்லலாமா இல்லியான்னும் தெரீல. தெரிஞ்சவங்க சொல்லுங்க.
  
- இலங்கை வர்த்தக கூட்டுத்தாபனம், வர்த்தக சேவை

Baby Heerajan        


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 16, 2020 8:29 am

யாரு இவரு கண்டுபுடிங்க  - Page 11 Gt8kxF3pRCKUZMUolJmg+e0aeaae0aebee0ae9fe0ae95e0aebf-e0aeb0e0aea4e0af8de0aea9e0aeaee0aebee0aeb2e0aebe
ஏ. ஜி. ரத்னமாலா
---
சிவாஜியின் மனைவி கமலாம்மாள் என்பது அனைவருக்கும்
தெரிந்த விஷயம். ஆனால், சிவாஜிக்கு ரத்னமாலா என்ற
பெயரில் இன்னொரு மனைவி இருந்திருக்கிறார் என்ற செய்தி
வெளியானபோது சினிமாத்துறையினர் அதிர்ச்சியில் உறைந்து
போயினர்...

சிவாஜிக்கும் ரத்னமாலாவுக்கும் பிறந்த பெண் குழந்தையின்
பெயர் லைலா...

...சிவாஜி என்ற ஒரு சகாப்தத்தின் – ஒரு மகாபுருஷனின்
தனிப்பட்ட வாழ்க்கையில் அவருக்கிருந்த பலவீனத்தை யாரும்
சர்ச்சைக்குள்ளாக்க விரும்பவில்லை என்பதே உண்மை...
-
நன்றி
புகைப்படம் & மேலதக தகவல்- ரேடயோஸ்பதி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 16, 2020 8:43 am

யாரு இவரு கண்டுபுடிங்க  - Page 11 DTRXzjJpT9K1y40snfRV+3bf1d74f-cd5f-40c5-a9f2-8ce17b2e60e2
-
ரத்னமாலா பாடிய சினிமாக்க்களின் ஸ்டில் போட்டோ
நன்றி-ஊடகம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 16, 2020 9:21 am


சிவாஜி குறித்து எம்.என்.ராஜம் கூறியதாவது:
-
பராசக்தி திரைப்படமாக வெளி வந்து, வெற்றி பெற்ற பின்,
1953ல், சேலத்தில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில், மீண்டும்
நாடகமாக நடித்தோம்

சிவாஜிக்கும் ரத்னமாலாவுக்கும் காதல் காட்சி,
'புது பெண்ணின் மனதை தொட்டுப் போறவரே...'
என்ற பாடலில்,
'அன்பு கயிரிடுவாய் அறுக்க யாராலும் ஆகாதயா...'
என்ற வரிகளின் போது, எதிர்பாராத வகையில்,
ரத்னமாலா அணிந்திருந்த பூ மாலை அறுந்து விட்டது.

ஒரு வினாடி கூட தாமதிக்காமல், தன் கைகளை மாலை
மாதிரி, ரத்னமாலா கழுத்தில் போட்டு, தொடர்ந்து அந்த
வரிகளை, தன் சொந்த குரலில் பாடி, சமாளித்தார் சிவாஜி.

நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும்,
சிவாஜியின் சமயோஜித புத்தியை பாராட்டி,கைதட்டினர்.
-
-------------------------------நன்றி:
நான் சுவாசிக்கும் சிவாஜி (16) - ஒய்.ஜி. மகேந்திரன்
தினமலர்-வாரமலர் 19-06-2014

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Jul 16, 2020 11:58 am

16.07.2020  

இத இத இதத்தான் எழுதணும்னு நெனச்சேன் சார்.  நீங்க எழுதுவீங்கன்னு நான் எதிர்பாத்தத்துதான். 

ரத்னமாலா, சிவாஜியின் அன்னியோன்ய உறவு வெளியே தெரிஞ்சப்போ, யாரும் நம்பலியாம்.  சினிமா பிரபலங்கள் பத்தி வர்ற கிசுகிசுன்னு நெனச்சுட்டாங்களாம்.

லைலாவின் கணவர் தன்ராஜ் ஒரு நாடக நடிகராம். பிள்ளைங்க இருக்காங்களாம். தன்ராஜ் சினிமாவில டாக்டர், இன்ஸ்பெக்டர்  இது மாதிரி சின்ன சின்ன வேஷங்களில நடிச்சிருக்காராமே. சிவாஜி குடும்பத்தை பற்றி நல்லா தெரிஞ்சவங்க, தன்ராஜை சிவாஜியின் மருமகன்னுதான் சொல்வாங்களாம். 

நன்றி அய்யாசாமி சார்
  

Baby Heerajan  





heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 16, 2020 5:55 pm

A  ரத்னமாலா என்றே போட்டுக்கொண்ட  AG ரத்னமாலா (தகவல் -heezulia )
சிவாஜிக்கு ரத்னமாலா என்ற பெயரில் இன்னொரு மனைவி இருந்திருக்கிறார் ( தகவல் அய்யாசாமி ராம் படத்துடன்  )
இரெண்டு விஷயத்தை ஒப்பிட்டு பார்க்கையில் 
AG ரத்னமாலாவில் G என்பது கணேசனை குறிக்கின்றதோ?




பாவம் சில பெண்கள்.--பெண்களின் இயலாமை --ஆண்களின் இயலாமை 




ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Jul 16, 2020 6:37 pm

16.07.2020

ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் பாலு சார்.

ஓஹோ அப்டியும் இருக்கலாமோ? Gங்கறது கணேசனை குறிக்கிறது போல. ரத்னமாலா கணேசன்னு சொன்னா ரகசியம் அம்பலத்துக்கு வந்துரும்னு இனிஷியலை முன்னால போட்டுக்கிட்டாங்களோ? புதுசா யோசிச்சிருக்கீங்களே.

இன்னொண்ணும் படிச்சேனே. அவர் வீட்டு வாசல்ல 'ரத்னமாலா கணேசன்' னு பேர்பலகை இருந்துச்சாமே. அதோடு சரி, அவர்தான் சிவாஜியின் மனைவீனு பப்ளிக்கா சொல்ல முடியலியே. ஆனா ரத்னமாலா அத சொல்ல விரும்பலியாம்.

அதென்னவோ எல்லாருக்கும்தான் தெரிஞ்சுபோச்சே.

இன்னொரு விஷயம் தெரீமோ? அந்த பேர் பலகய பாத்த சிலர் கணேசன்ங்கிறது ஜெமினி கணேசனா இருக்குமோன்னு சந்தேகபட்டாங்களாம். ஏன்னா, நிஜமாவே அவர் காதல் மன்னனாச்சே. அதான்.

ஆனா எனக்கொரு சந்தேகம் சார். இந்த பாடகிதானா, வேற யாராவது ரத்னமாலானு பேர் உள்ளவங்களா?


Baby Heerajan




heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 16, 2020 9:05 pm

Heezulia wrote:ஆனா எனக்கொரு சந்தேகம் சார். இந்த பாடகிதானா, வேற யாராவது ரத்னமாலானு பேர் உள்ளவங்களா?

அய்யாசாமி அவர்கள் சந்தேகம் தீர்ப்பார் என நம்புகிறேன்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 11 of 13 Previous  1, 2, 3 ... 10, 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக