புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 9 I_vote_lcapபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 9 I_voting_barபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 9 I_vote_rcap 
25 Posts - 69%
heezulia
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 9 I_vote_lcapபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 9 I_voting_barபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 9 I_vote_rcap 
10 Posts - 28%
mohamed nizamudeen
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 9 I_vote_lcapபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 9 I_voting_barபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 9 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 9 I_vote_lcapபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 9 I_voting_barபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 9 I_vote_rcap 
361 Posts - 78%
heezulia
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 9 I_vote_lcapபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 9 I_voting_barபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 9 I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 9 I_vote_lcapபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 9 I_voting_barபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 9 I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 9 I_vote_lcapபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 9 I_voting_barபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 9 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 9 I_vote_lcapபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 9 I_voting_barபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 9 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 9 I_vote_lcapபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 9 I_voting_barபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 9 I_vote_rcap 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 9 I_vote_lcapபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 9 I_voting_barபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 9 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 9 I_vote_lcapபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 9 I_voting_barபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 9 I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 9 I_vote_lcapபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 9 I_voting_barபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 9 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 9 I_vote_lcapபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 9 I_voting_barபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 9 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய தமிழ் திரைப்படங்கள்


   
   

Page 9 of 17 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 13 ... 17  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Dec 03, 2017 5:13 pm

First topic message reminder :

தமிழ்  சினிமாவை  பற்றியும், பாட்டுக்களை பற்றியும் எழுதலாமா? எங்கிட்ட நிறைய நிறைய விஷயங்கள்  இருக்கு. அனுப்பலாமா?

நன்றி Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 28, 2018 11:09 am

பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 9 3838410834 பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 9 103459460 பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 9 1571444738

avatar
Guest
Guest

PostGuest Sun Jan 28, 2018 12:01 pm

அனிமேஷன் முறை சலனப் படத்திலேயே வந்து விட்ட்து. இந்திப் படத்திலும் பாவித்துள்ளார்கள்.ஆனால் SFE இல் செய்திருப்பது அவரின் திறமையைக் காட்டுகிறது. பழைய படங்கள் பல அழிந்து விட்டன . பார்க்க முடியாது.இப்படி எழுதுவதை வைத்து தெரிந்து கொண்டால் சரி.நன்றி பல. தொடருங்கள்.

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jan 28, 2018 4:50 pm

28.01.2018 

முத்து சாரும், மூர்த்தி சாரும் நான் எழுதுறதை படிக்கிறது சந்தோ................ஷமா இருக்கு. பூஸ்ட் குடிச்ச மாதிரி தெம்பு வருது. 


நன்றி. 

Heezulia

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jan 28, 2018 4:50 pm

28.01.2018 

முத்து சாரும், மூர்த்தி சாரும் நான் எழுதுறதை படிக்கிறது சந்தோ................ஷமா இருக்கு. பூஸ்ட் குடிச்ச மாதிரி தெம்பு வருது. 


நன்றி. 

Heezulia

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 29, 2018 7:52 am

நீங்கள் ஒவ்வொரு பதிவுகளை எவ்வளவு நேர்த்தியாக சிரத்தை எடுத்துக் கொண்டு
அதிக நேரம் கவனமாக பதிவு செய்கிறீர்கள்
பாராட்டுக்கள் தொடருங்கள்.
நன்றி
பேபி

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Feb 08, 2018 4:38 pm

08.02.2018

25. சேது பந்தனம் 1937


பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 9 T48MNFXMQ5mjFKBq7lis+SethuBandhanam1937

R பத்மநாபன் - டைரக்டர் 
MD பார்த்தசாரதி - இசை 
சிதம்பரம் வைத்தியநாத சர்மா - பாடல்கள் 

MS மோகனாம்பாள் - மண்டோதரி 
KS அங்கமுத்து - அசோக வனத்ல சீதாவுக்கு அரக்கி காவலாளி 
PB ரங்காச்சாரி - ராவணன் 
நாட் அண்ணாஜிராவ் - ராமன் 
MD பார்த்தசாரதி  -  ஹனுமான் 

TK கண்ணம்மாள், பாகிரதி, MA சாண்டோ, குலத்து மணி, 
MR சுப்பிரமணியம்


1950களில, பத்மநாபன் தமிழிலயும்,  தெலுங்கிலயும் சில நல்ல நல்ல படங்களையா ................ எடுத்தார். பாம்பேல ராஜா சாண்டோ........... ன்னு ஒருத்தர். இவரை பத்மநாபன்தான் இந்திய சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினாராம். சாண்டோ, சென்னையில  சினிமா எடுக்க ஆரம்பிச்சுட்டாராம். இன்னொருத்தரையும் சினிமாவுக்கு கொண்டு வந்தவர், பத்மநாபன்.  கே.சுப்பிரமணியம். இவர், பத்மநாபன் எடுத்த பேசாத படங்களுக்கு திரைக்கதை எழுதினார். 

பத்மநாபன் எடுத்து, வெற்றிகரமாக ஓடிய படங்கள்ல, சேது பந்தனமும் ஒண்ணாம். இந்தப் படத்துக்கு 'சேது பந்தம்'னும் இன்னொரு பேர்  இருந்துச்சாம். இந்தப் படம் என்னான்னா,  சீதா, ராமன், ஹனுமான் இவங்க சம்பந்தப்பட்ட  கதை.  ஆனா முழு கதையில்ல. ராமாயணத்தின் ஒரு பகுதி. 

ஹனுமான் இலங்கையை எரிச்சதுக்கு பின்னால, சீதாவிடம்  இருந்து அடையாள மோதிரத்தை வாங்கிட்டு, ராமர்ட்ட போய் காட்றாருல? இதுக்கப்புறமா நடக்கிறதுதான் இந்தப் படம்.  ராமர்  படையெடுத்துட்டு  போயி,  சீதாவை மீட்டு வருவார்ல, இதுதான் இந்தப் படத்தின் கதை. 

மண்டோதரியாக நடிச்ச மோகனாம்பாளின் தங்கச்சி, 
MS சரோஜினியாம். மோகனாம்பாள் நடிச்ச படங்கள்ல்லாம், இவர் தங்கச்சி குட்டி குட்டி.................... ரோல்ல நடிச்சார். 1940கள்ல சரோஜினி பெரிய நடிகை ஆகிட்டாராம். தயாரிப்பாளர் ஸ்ரீராமுலுவின் பட்சிராஜா ஸ்டூடியோஸ் படங்களில நடிச்சிட்டு இருந்தார். 

ஹனுமானாக நடிச்ச பார்த்தசாரதிக்கு, கர்னாடக சங்கீதம் நல்லா படிச்சவரு. அவர்  சுகுண விலாஸ் சபா நடத்திய தமிழ்   நாடகங்களுக்கு  ம்யூசிக் போட்டுட்டு இருந்தாராம்.  ம்யூஸிக் போட்டுட்டு சும்மாவா இருந்தாரு? அந்த காலத்தில வந்த நிறைய படங்களில நடிச்சிட்டு இருந்திருக்கார் மனுஷன். ஆனா அவருக்கு நடிப்பை விட, ம்யூஸிக்தான் கை குடுத்துச்சாம். அப்புறமா ஜெமினி ஸ்டூடியோல ம்யூஸிக் டைரக்டரா இருந்த  ராஜேஸ்வர ராவ் கூட சேர்ந்து, அங்கேயே ஆஸ்தான ம்யூஸிக் டைரக்டராகிட்டாராம். 

பார்த்தசாரதி  இந்தப் படத்தில ஹனுமானாக அட்டகாசமாக நடிச்சு, படம் ஓஹோ.........................ன்னு ஓடுறதுக்கு ஒரு காரணமாக இருந்தாராம்.  

அரக்கியாக நடிச்ச அங்கமுத்து பற்றி ஒரு விஷயம் சொல்லோணும். அவர் நடிக்க ஆரம்பிச்சதுலே இருந்து, ஸ்டூடியோவுக்கு போனது  மாட்டு வண்டீலதான். அவருடைய நடிப்பு காலம் முழூ............சும் மாட்டு வண்டீலதான் ஷூட்டிங்குக்கு  போனாராம். 

தனது ஓரியண்ட்டல் ஃபிலிம்ஸுக்காக, பத்மநாபன், இந்தப் படத்தை தயாரிச்சு, டைரக்ட் செஞ்சிருந்தார்.   

அநேகமாக, இந்த படத்தில நடிச்சவங்க எல்லாருமே பாடியிருந்தாங்க. ஏன், ராவணன் ரங்காச்சாரி, அரக்கி அங்கமுத்து இவங்கல்லாம்  கூட பாடியிருந்தாங்களாமே.  படத்தில ராவணன்ட்ட வேல  செஞ்ச அரக்கீங்கல்லா....................ரும்  சேர்ந்துகிட்டு, ஜா.....லியா பாட்டு பாடி, டான்ஸ் ஆடினாங்களாம். அந்த பாட்டுல, 'புல்லாக்கு', 'சுங்குடி புடவை' ன்னு வார்த்தைங்கல்லாம் இருந்துச்சு. 

சுங்குடி சேலை அப்பவே..................... இருந்துச்சா?   ஆமா...............,  இந்த அரக்கீங்க, பாட்டு பாடி டான்ஸ் ஆடறதுக்கு, ராவணன்ட்ட பர்மிஷன் வாங்கினாங்களா? 

வழக்கம் போல அந்த கால படங்கள்ல இருந்துச்சாமே,  இடைச்செருகல் காமெடி ட்ராமா, அது போல இந்த சேது பந்தனம் படத்திலேயும் ஒரு காமெடி ட்ராமாவாம். இந்த ட்ராமா பேர் 'ஆசை'. இதுல முக்கியமான ரோல்ல நடிச்சவங்க, TN கமலவேணி & புலியூர் துரைசாமி அய்யா. 

இந்தப் படம் சம்பந்தமான ஒண்ரெண்டு போட்டா, பார்த்தசாரதி குடும்பத்தார்ட்ட   இருந்துச்சாம்.  படத்தின் பிரிண்ட் எங்கயும் இல்லியாம்.  

இந்தப்பட ஆரம்பத்ல, ராம காவியத்தை பற்றி, பார்த்தசாரதி அழக்.............................கா சொல்வாராம். மோகனாம்பாள்,  பார்த்தசாரதி, ரங்காச்சாரி  இவங்க நடிப்பெல்லாம் ரொம்ப நல்லா இருந்துச்சாம்.

 
Heezulia

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Feb 08, 2018 5:03 pm

சூப்பருங்க



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Feb 10, 2018 5:23 pm

10.02.2018

வித்தியாசமான படங்கள் 

9. எதிர்பாராதது 1954 

ஜெயரவி என்கிறவர் ஈகரையில 2014  பெப்ருவரி 11ஆம் தேதி ஆரம்பிச்சு 14ஆம் தேதி வரை இந்தப் படத்தை பத்தி வெளா.....................வாரியா எழுதியிருக்கார், அதுவும் 22 பதிவுகளில, 1, 3, 6, 8 – 26. சரி, இருக்கட்டுமே, நாமும் நம்ம பாணீல எழுதி வைப்போமே.................ன்னு எழுதுறேன். ஏன்னா இந்தப் படம் என் லிஸ்ட்ல இருக்கே. அதை எப்டீ மிஸ் பண்றது? படிச்சுதான் பாருங்களேன்.

கிட்டத்தட்ட இந்தப் படத்தின் கதை மாதிரிதான், ரஜினி & கமல் நடிச்ச ‘மூன்று முடிச்சு’ படத்தின் கதையும். கொஞ்சூண்டு கதை மட்டும் மாறி இருக்கு.

மூன்று முடிச்சுல கதாநாயகியை வில்லன் ஒருதலையாய் லவ்வுறான். சந்தர்ப்ப வசத்தால் கதாநாயகி, வில்லனின் அப்பாவை கல்யாணம் செஞ்சுக்கிற நிலைமை. இந்த கல்யாணத்துக்கப்புறமாத்தான் வில்லனுக்கு விஷயம் தெரியுது. தன் மகன், தன்  மனைவியை ஒருதலையாய் காதலிச்சவன்னு அப்பாவுக்கு அப்புறமா தெரிய வருது. கொஞ்சம் வேதனைப்பட்றார். வில்லன் திருந்துறான். அப்டீ இப்டீன்னு, கதாநாயகியும், அவள் கணவனும், மகன் வில்லனாக இருந்தப்போ, அவனால் ஏமாற்றப்பட்டவளை, அவனுக்கு கல்யாணம் செஞ்சு வச்சுர்றாங்க.

ஆனா எதிர்பாராதது படத்தில, கொஞ்சம் கதை மாறுது. கதாநாயகனும், கதாநாயகியும் லவ்வுறாங்க. என்ன சந்தர்ப்பம்னு தெரியல, கதாநாயகி கதாநாயகனின் அப்பாவை கல்யாணம் செய்துகிறாளாம்.

மூன்று முடிச்சு படம் பார்த்தேன். எதிர்ப்பாராதது படம் வந்ததே தெரியாது. இப்பதான் கிளைமாக்ஸ் ஸீன் மட்டும் பார்த்தேன்.
எதிர்பாராதது படத்தில சிவாஜியும், பத்மினியும் காதலர்கள். இது சிவாஜியின் அப்பா நாகையாவுக்கு தெரியாது. சிவாஜி வெளிநாட்டுக்கு படிக்கப் போறார். போகும்போது விமான விபத்து. சிவாஜி இறந்து போறதாக ந்யூஸ் வருது.

பதிமினியும், நாகையாவும் சோகமே உருவாகிறாங்க.  
நாகையாவுக்கு ஒரு friend. அவர் நாகையாவ, மறுமணம் செஞ்சுக்க சொல்றார். சொல்றார் இல்ல, வற்புறுத்துறார். இவரும் பெண் தேட ஆரம்பிக்கிறாரு. பத்மினி மாட்டிக்கிறாரு. சிவாஜி வேற செத்து போயிட்டதாக பத்மினி நம்பிட்டு இருக்காங்களே.

முதல் இரவு. நாகையா பத்மினியை நெருங்குறார். அவர் வயசா.............னவரா இருந்ததால, “அப்பா......”னு அலறிட்டே நாகையா கால்ல தடா..................ல்னு  விழுந்துர்றார், பதிமினி. நாகையா தெகச்சு நிக்கிறாரு. பதிமினி சும்மா இல்லாம, சிவாஜி கூட தான் எடுத்துகிட்ட போட்டா, சிவாஜி எழுதின லெட்டர் எல்லா.............த்தையும் நாகையாட்ட காட்ட, நாகையாவுக்கு அதிர்ச்சி. “இன்னாங்கடா இது, நம்ம பையன் காதலிச்ச பொண்ணையா நாம கண்ணாலம் செஞ்சுகிட்டோம்”னு ஒரே ................சோகம்.

ஆமா, இந்த பதிமினி என்ன, அம்மா வீட்ல இருந்து வரும்போதே, போட்டா, லெட்டர் எல்லாம் எடுத்துட்டு வந்தாரா? நாகையாட்ட காட்னதே காட்னாரு, கண்ணாலம் செஞ்சுக்கிறதுக்கு முன்னாலேயே காட்டியிருக்கலாம்ல. சரி என்னவோ போங்க, ஸ்ரீதர் அப்டி ஒரு திரைக்கதை எழுதிட்டாரு. விடுங்க.

அதுக்கப்புறமா என்ன செய்யலாம்னு நாகையா யோசிச்சார். மனைவி கூட வாழ மனசு ஒத்துக்கல, ஒட்டல. வீட்டை விட்டு போக முடிவு செஞ்சுட்டார். எங்........................க போவாரு? வயசானவராச்சே. தீர்த்த யாத்திரைக்குத்தான். பதிமினியை, வேற யாரையாவது கல்யாணம் செய்ய சொல்லிட்டு, தீர்த்த யாத்திரைக்கு புறப்பட்டு போய்ட்டா............ர்.

தீர்த்த யாத்திரை போன இடத்தில, நாகையா சிவாஜியை சந்திக்கிறாரு. ஆனா எப்படி? ஒரு குருடனாக. பெத்த புள்ளைய, அப்படி ஒரு நெலமைல பார்த்தா, ஒரு அப்பாவுக்கு எப்..............புடி இருக்கும், இல்ல? அப்படி ஒரு நெலமைல இருந்தார் நாகையா. அதுலேயும், மகனை பார்த்த ஒடனே, என்ன ஞாபகம் வந்திருக்கும்? மகனுடைய காதலியை கல்யாணம் செஞ்சுகிட்டதுதானே ஞாபகத்துக்கு வரும். அவர் என்ன செயரார்னா, அவர் செத்து போயிட்டதாக பொய்யான ஒரு தகவலை பத்மினிக்கு  லெட்டர்  அனுப்புறாரு. பாவம் பதிமினி, அந்த இளம் வயதில விதவைக்கோலம்.

ஆனா சிவாஜிக்கு, தன் காதலியைத்தான் அப்பா கல்யாணம் செஞ்சுகினாருன்னு அதுவரை தெரியாது.  நாகையா சிவாஜியை ஊருக்கு போக சொல்றார். பதிமினியை கல்யாணம் செஞ்சுக்க சொல்றார். சிவாஜியும் ஊருக்கு போறார்.  மகனை பற்றிய சிந்தனையும், அவர் தெரியா...........ம செஞ்சுட்ட தப்பும், அவர் மனசை அரிச்சு, அரிச்சு, உயிரை விட்டுர்றார்.

பத்மினியை தேடி சிவாஜி அலைறார். கண்ணு தெரியாதுல்ல. பின்ன என்ன செய்வார்? அப்போல்லாம், குடும்பம் சேர ஒரு குடும்ப பாட்டூன்னு ஒண்ணு  இருக்குமே. அதை எம்புட்டு தூரத்திலிருந்து பாடினாலும், foreignல இருந்து பாடினா கூட, குடும்பத்தாருக்கு கேட்குமே, அதே................ மாதிரிதாங்க. இங்கயும் நடக்குது. பதிமினி மொதல்ல ஒரு பாட்டு பாடியிருக்காங்க போல. “சிற்பி செதுக்காத பொற்சிலையே” னு ஒரு பாட்டு. இப்...............ப அதே..... பாட்டை, சிவாஜி பாடறார். “அட நம்மாளு போல இருக்கே. நாம பாடின பாட்டாச்சே” ன்னு பதிமினிக்கு நினைவோ....... ஒரு பறவைன்னு, நினைவு சிறகடிக்குது.

என்னவோ, ஒரு காலத்தில காதலனாக இருந்தவனாச்சே, ஓ.................டி வர்றார். சிவாஜி பக்கத்தில நிக்கிறார். வந்தது தன் காதலி பத்மினிதான்னு சிவாஜியும் தெரிஞ்சுகிட்டார், ரெண்டு பேரும் அழுறாங்க, பேசுறாங்க. ரெண்டு பேரும் சேர்ந்து வாழலாம்னு சிவாஜி சொல்றார். அம்புட்டுதான். சிவாஜிக்கு பொறி கலங்…………….கிர்ச்சு. பளா................ர் பளார்னு ஓ...............ங்கி சிவாஜி கன்னங்கள்ல அடிச்சுட்டார் பதிமினி.

பத்மினி கொடுத்த அறைக்கு பின்னால ஒரு சமாச்சாரம் இருக்கு. அப்புறமா சொல்றேன், படிங்க.

பத்மினிக்கு ஒரு அண்ணனும், அண்ணியும் இருக்காங்க. அண்ணன் டாக்டர். சிவாஜிக்கு வைத்தியம் பார்த்து, அவருக்கு கண்பார்வை வந்துருச்சு. பத்மினியும், சிவாஜியும் ரொம்ப நா.............ள் கழிச்சு பாக்குறாங்க. ரெண்டு பேருக்குமே feelings. அண்ணனும், அண்ணியும் இவங்க ரெண்டு பேரையும் சேத்து வச்சுறலாமே................ன்னு ஆசைப்பட்றாங்க.

பார்வை வந்த சிவாஜி பத்மினியின் வீட்டுக்கு வந்தார். பயங்கரமான திகைப்பு அவருக்கு. அவர் ஒரு போட்டாவ பதிமினியின் ரூம்ல பார்க்குறார். யார் போட்டான்னு நெனக்கிறீங்க? அப்பா நாகையாவின் போட்ட, அதுவும் மாலை போட்டு. “இது யார்?” ன்னு தயங்கி தயங்கி பத்மினிட்ட சிவாஜி கேட்க, “என் கணவர்” னு அமைதியாக சொல்றார், பத்மினி. இப்பதான் விஷயம் முழ்சும்  தெரியுது, சிவாஜிக்கு. அலர்றார், கதர்றார். என்ன செய்ய முடியும்.

கணவன் இறந்துட்டானே, காதலனையே கட்டிக்கலாம்னு பத்மினி நெனச்சாரா? இல்ல. பத்மினியும், சிவாஜியும் அம்மா புள்ள ஆயிட்டாங்க.

சு ப ம்.

அன்னிக்கி சிவாஜியை பத்மினி அடிக்கிற ஸீன் ஷூட்டிங்னு பத்மினிட்ட சொல்றாங்க. பத்மினி முடியாதுன்னுட்டார். அதுதான் முக்கியமான ஸீன்னு டைரக்டர் CH நாராயணமூர்த்தி சொல்றார். சிவாஜியின் ரசிகர்கள் இந்த ஸீனை விரும்பமாட்டாங்கன்னு பத்மினி ஊஹும்னுட்டார்.

டைரக்டர் இத பத்தி சிவாஜிட்ட சொல்லி, இந்த ஸீனை பத்மினிட்ட விளக்கி சொல்ல சொல்றார். சிவாஜியும் அவரால முடிஞ்..............ச வரைக்கும் சொல்லிப் பார்க்கிறார். அது ஏன், மத்த பாஷைல உள்ள படங்கள்ல ஹீரோயின் ஹூரோவ அடிக்கிற ஸீனை போட்டு காட்டியிருக்கார். ஹாலிவுட் படங்களை கூட விடல. எல்லா....................த்தையும் பத்மினி பார்த்தார். அதுக்கப்புறமா உம் சொல்லிட்டார்.

ஹீரோ ஹீரோயின்ட்ட அடி வாங்குற படங்களை அவங்க எப்படி கலெக்ட் செஞ்சாங்க? அடி வாங்குற ஹீரோவே, ஹீரோயின் தன்னை அடிக்க எப்டீல்லா...............ம் ஏற்பாடு செஞ்சிருக்கார்!!!

சரி, அந்த ஸீனுக்கு வர்றேன். ரெண்டு பெரும் கண்ணாலம் கட்டிகினு சந்தோஷமா வாழலாம்னு சிவாஜி சொல்றார்ல. வந்துச்சே...................... பத்மினிக்கு கோவம். சிவாஜியின் ரெண்டு கன்னங்களிலும், மாறி, மாறி, மாறிமாறிமாறி அடிச்சார். சிவாஜிக்கு பயங்கரமா வலிச்சுதாம். அதையும் பொறுத்துக்கிட்டு, அடி வாங்கிட்டே............... இருந்தார், பத்மினியும் அடிச்சுட்டே...................... இருந்தாங்க. 

ஒரு கட்டத்தில சிவாஜி மூக்கில ரெத்தம் இல்ல ரெத்தம், அது வந்துருச்சாம். அந்த டைரடக்கர் இருக்காஹளே, அவுஹ ‘கட்’ சொல்வார், சொல்வார்னு சிவாஜி எதிர்ப்பார்த்தா, ‘கட்’டே............ சொல்லக்காணோம். பொருத்தது போதும், பொங்கி எழு, எரிமலை எப்படி பொறுக்கும், என்கிற நிலை ஆயிருச்சு சிவாஜிக்கு. 

பதிமினி கையை புடிச்சு, “கட், கட்” ன்னாராம். ன்னாராம் இல்ல கத்திட்டாராம். அப்பதான் சுயநினைவு வந்த மாதிரி, டைரக்டக்...............கர் “கட்” சொன்னாராம்.

ஆமா............... அந்த டைரடக்கர் பத்மினியின் நடிப்பில தன்னை மறந்து உக்காந்திருந்தாரா, இல்ல ................ சிவாஜியை நல்லா அடிக்கட்டும்னு வேணும்னுக்கே சும்மா இருந்துட்டாரா? சிவாஜியை என்னாத்துக்கு இப்படி பழி வாங்கினார்? சரி, அது அவங்களுக்குள்ள.

அந்த ஸீன் முடிஞ்சுது. ஆனாலும் பத்மினி அந்த நடிப்பிலிருந்து வெளிய வரல. அம்புட்டு உணர்ச்சிபூர்வமா நடிச்சிருந்தார். போர்வையால அவரை போர்த்தி, கைய காலை தேச்சு விடுற நெலமைல இருந்தாராம், பத்மினி. அதுமட்டுமில்லீங்க, டாக்டரு வந்தாராம், ஊசியும் போட்டாராம்.

நல்லா இருக்கூங்க. அடி வாங்கி, ரத்தம் வந்த சிவாஜி, ரத்தத்தை தொடச்சுட்டு, அப்பா..............வியாக நின்னாராம். அடிச்ச பத்மினி? அதுக்கப்புறமா ரெண்............டு  நாள் ஷூட்டிங் இல்ல. பத்மினியால வர முடியல, ரெண்டு நாள் லீவு.

இன்னொரு விஷயம் என்னான்னா, விமான விபத்துல சிவாஜி மாட்டிகிட்டார்ல? அட படத்திலேங்க. அப்போ அவர் காட்டில மயங்கி கிடக்கிறார். காட்டுவாசீங்க அவரை தூக்கிட்டு போயி சிகிச்சை கொடுக்கிறாங்க. அப்ப அவரை கவனிச்சுக்க ஒரு சின்ன பொண்ணு இருந்தா.  அந்த சின்ன பொண்ணு, பின்னால சூப்பர் காமெடி நடிகை. சச்சு. அதாங்க காதலிக்க நேரமில்லைல நடிச்சாங்களே, நாகேஷுக்கு ஜோடியா, அவங்கதான்.  
   
நூ.....................று நாள் ஓஹோன்னு ஓடிய படமாம். பத்மினியின் அண்ணனாக சகஸ்ரநாமம், அண்ணி எஸ்.வரலட்சுமி. கதை & வசனம் ஸ்ரீதர். நாலு பேர் பாட்டு எழுதியிருந்தாங்க, பாபநாசம் சிவன், KP காமாட்சி சுந்தரம், KS கோபாலகிருஷ்ணன் & சுரபி. பாண்டுரங்கன் ம்யூசிக். CH நாராயணசாமி டைரக்டர்.

KSG இந்தப் படத்துக்குத்தான் முதல் முதலாக பாட்டு எழுதினாராம், ஸ்ரீதரின் ரெக்கமண்டேஷன்ல.

- ரமணி

இது எப்படி இருக்குன்னு சொல்லுங்க.

Heezulia  மீண்டும் சந்திப்போம்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Feb 10, 2018 5:53 pm

சொல்லமுடியாது

பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Feb 10, 2018 6:40 pm

10.02 .2018

பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 9 3838410834 பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 9 103459460 பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 9 1571444738 சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி புன்னகை சிரி நன்றி சியர்ஸ் சிரி சிரி பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 9 676261 ஓகே!!!! மப்பு ஏறிப்போச்சு குதூகலம் நக்கல் நாயகம் ஜொள்ளு நடனம் சிரிப்பு சிப்பு வருது

Heezulia

Sponsored content

PostSponsored content



Page 9 of 17 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 13 ... 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக