புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 I_vote_lcapபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 I_voting_barபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 I_vote_rcap 
25 Posts - 69%
heezulia
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 I_vote_lcapபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 I_voting_barபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 I_vote_rcap 
10 Posts - 28%
mohamed nizamudeen
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 I_vote_lcapபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 I_voting_barபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 I_vote_lcapபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 I_voting_barபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 I_vote_rcap 
361 Posts - 78%
heezulia
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 I_vote_lcapபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 I_voting_barபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 I_vote_lcapபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 I_voting_barபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 I_vote_lcapபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 I_voting_barபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 I_vote_lcapபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 I_voting_barபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 I_vote_lcapபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 I_voting_barபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 I_vote_lcapபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 I_voting_barபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 I_vote_lcapபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 I_voting_barபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 I_vote_lcapபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 I_voting_barபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 I_vote_lcapபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 I_voting_barபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய தமிழ் திரைப்படங்கள்


   
   

Page 4 of 17 Previous  1, 2, 3, 4, 5 ... 10 ... 17  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Dec 03, 2017 5:13 pm

First topic message reminder :

தமிழ்  சினிமாவை  பற்றியும், பாட்டுக்களை பற்றியும் எழுதலாமா? எங்கிட்ட நிறைய நிறைய விஷயங்கள்  இருக்கு. அனுப்பலாமா?

நன்றி Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Dec 23, 2017 2:35 pm

சிந்தாமணி கதை அருமை

பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 3838410834 பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 3838410834



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Dec 27, 2017 1:44 pm

27.12.2017 

வித்தியாசமான படங்கள் 

அசோக்குமார் 1941 

பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 WLcMlloTq6aeHLeC7R2Q+Ashok_kumar_1941
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 YqRzg67HSEqetlcNjAVO+Ashokkumar

தயாரிப்பு : மதுரை முருகன் டாக்கி ஃபிலிம் கம்பெனி, சென்னை ந்யூடோன் ஸ்டூடியோ
ராஜா சந்திரசேகர் : டைரடக்கர்
ஆலத்தூர் சிவசுப்ரமண்யம் : இசை
இளங்கோவன் : வசனம்
பாட்டுக்கள் : பாபநாசம் சிவன், பாபநாசம் ராஜகோபால், ஆனை வைத்யநாதன் 

V நாகையா : சாம்ராட் அசோகர்
கண்ணாம்பா : 
திஷ்யரட்சதை, அசோகரின் மனைவி
பாகவதர் : குணாளன், அசோகரின் மகன் 
TV குமுதினி : காஞ்சனமாலா, குணாளனின் மனைவி 
TA மதுரம் : பிரமீளா, திஷ்யரட்சதையின் நண்பி
NS கிருஷ்ணன் : தேரையன், வைத்தியர்
MGR : மகேந்திரன், சேனாதிபதி[இவர் பேர் டைட்டல்ல MG ராம்சந்தர்னு போட்டிருக்கு.]
ரஞ்சன் : புத்தர்

இது ஒரு கேவலமான கதை. இருந்தாலும் வெள்ளி விழா கொண்டாடிய படமாம்.

மகத சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி சாம்ராட் அசோகன். இவருக்கு ரெண்டு மனைவீங்க. இளைய மனைவி திஷ்யரட்சதை. மூத்த மனைவியின் மகன் குணாளன். இவனுடைய மனைவி காஞ்சனமாலா.

போர் நடக்குது. போர்ல குணாளன் ஜெயிச்சுட்டு வர்றான். குணாளன் போருக்கு போயிருந்த சமயத்ல அசோகர் கல்யாணம் செஞ்சுகிட்ட ரெண்டாவது மனைவி திஷ்யரட்சதையை குணாளனுக்கு அறிமுகம் செஞ்சு வைக்கிறான். அந்தப் பாவி சித்தி என்ன செஞ்சா தெரியுமா? மகனா நினைக்கவேண்டியவன, அவனை பார்த்த மாத்திரத்திலேயே அவன் அழகில மயங்கிர்றா. அவன் மேல மோகம் கொள்றா.

அந்த காலத்திலேயே ஏன்தான் இப்படி கதைல்லாம் எழுதுறாங்களோ தெரியல. அதுவும் மாசக்கணக்கா, வருஷக்கணக்கா ஓடுதுல்ல. ஒருவேளை ஜனங்களுக்கு வேற பொழுதுபோக்கு இல்லாததனால கூட இருக்கலாம்.

சரி கதைக்கு வர்றேன். மகன் போர்ல ஜெயிச்சு வந்த கையோட, அவனுக்கு பட்டாபிஷேமும் செஞ்சு வச்சுரலாம்னு சொல்லி, அறிவிப்பும் செஞ்சுர்றார், அசோகர். பட்டாபிஷேகம் முடிஞ்சவுடனே, திஷ்யரட்சதை குணாளனுக்கு ஆரத்தி எடுத்து, பொட்டு வச்சு விடுறா. அவள் எப்போதும் அவனை பார்க்கும் பார்வையே காமப்பார்வைதான்.

குணாளனும், அவன் மனைவியும் ஜாலியா பாட்டு பாடிக்கொண்டிருந்ததை அவள் பார்த்து, அவள் காதுல புகை வருது. அவன் பாட்டை கேட்டு, அவள் மனசு படாத பாடு படுது.

ஒரு நாள் அசோகர் திஷ்யரட்சதையுடன் பேசிக்கொண்டிருக்கார். குணாளனை கூப்ட்டு அனுப்புறார். அவனும் வர்றான். “உன் அம்மா உன் பாட்டை கேட்கணும்னு ஆசைப்படறா. பாடிக்காட்டு”ன்னு மகனிடம் சொல்கிறார். “அதுக்கென்ன பாடிக்காட்றேன் அப்பா” ன்னு சொல்லிட்டு பாடுறான். அவளும் தன்னை மறந்து ரசிச்சு கேக்குறா. பாடி முடுச்ச பிறகு, மந்திரி வந்து அசோகர் காதில ஏதோ சொல்றார். அசோகர் அங்க இருந்து போக வேண்டிய கட்டாயம். அவர், மகனிடம் “நீ வேற ஏதாவது பாடிட்டு இரு. நான் வந்துர்றேன்” ன்னு சொல்லிடு போயிர்றார். அவளுக்கு அது சாதகமா போயிருது. ‘குணாளா, நீ பாடு நான் ஆடுறேன்” ன்னு சொல்றாள். அவன் மறுக்கிறான். அது இது சொல்லி சம்மதிக்க வைக்கிறாள். அவன் பாடுறான். அவள் ஆடுறாள். பாடி ஆடி முடிச்சதும், அவள் ஆசையை அவனிடம் சொல்றாள். அப்போதான் அவனுக்கு அவளுடைய கீழ்த்தரமான நோக்கம் புரியுது. அங்கிருந்து போக நெனச்சாலும், அவள் பேசிப் பேசியே bளேd போட்டுட்டு இருந்தா.

அப்போ அசோகர் வந்துகொண்டிருந்தார். அவர் வர்ற சமயத்தில, அவள் குணாளனின் கையை பிடித்துக் கொண்டிருந்தா. அசோகர் வர்றத பாத்தவுடனே, “குணாளா, என்ன விட்டுவிடு”ன்னு சொல்லி அவனை விட்டு விலகி போறாள். அசோகர் இதைப் பார்த்து கொஞ்சம்கூட யோசிக்காம, மகனை திட்றார். “தாயை தாரமாக்க எப்படியடா மனசு வந்தது?”ன்னு திட்றார். இதுதாண்டா சாக்குன்னுட்டு, அவள் அவனை பற்றி, அவள் பேசிய அசிங்கத்தை எல்லாம், அவன் பேசியதாவும், தன்கிட்ட கேவலமா நடந்துகிட்டான்னும் குணாளனை பற்றி தப்பு தப்பா சொல்றா. ஆனா அவன் தாயை பற்றி களங்கமாக சொல்ல மனசில்லாம பேசாம நிக்கிறான்.

அசோகர் கோவமாகி, அவனை நாடு கடத்த உத்தரவிட்றார். குணாளனிடம் அன்பு வைத்திருந்த மந்திரி அவனிடம் நடந்ததை கேட்கிறார். அவன் சொல்லமாட்டேங்கறான். நாடு கடத்தப்பட்ட குணாளனை, அந்நாட்டின் சேனாதிபதி மகேந்த்ரனுடன் தங்க சொல்லி, அசோகரை சமாதானப்படுத்தி, மறுபடியும் குணாளனை கூப்பிட்டு கொள்வதாக மந்திரி சொல்றார். அதன்படி அவனும் மகேந்திரனுடன் தங்குறான். அந்த சமயத்தில் மகேந்திரனுக்கு ஒரு ஓலை வருது. அதுல குணாளனின் கண்களை குருடாக்கணும், தவறினா, மகேந்திரனையும், அவன் குடும்பத்தையும் எரித்து விடறதா எழுதியிருந்துச்சு. ஆனா அசோகர் கட்டளையின்படி அவர் பாகவதரின் கண்களை குருடாக்கல. அவருக்கு மனசு வரல. அதனால பாகவதரே தன் கண்களை குருடாக்கிகிறார்.

அதுக்குப்பின்னால குணாளன் அங்கிருந்து போயிர்றான். இதற்கிடையில் மூணு மாச கர்ப்பிணியான காஞ்சனமாலாவை, அசோகரின் மனைவி வெளியே வெறட்டிர்ரா. குருடனான குணாளன் பாட்டு பாடிக்கொண்டே தெருவில நடந்து போயிட்டு இருக்கான். அவன் பாட்டு சத்தம் கேட்டு, அவன் மனைவி அவனை சந்திக்கிறாள். அவன் கண்கள் பறிபோன கதையை கேட்டு அழுறா. ரெண்டு பேரும் பிச்சையெடுத்து பிழைக்கிறாங்க.

இப்படி இருக்கும்போது நாட்கள் நகருது. காஞ்சனாவுக்கு கொழந்த பொறக்குது. அவங்க பொழப்பு எப்படியோ போவுதுன்னு வச்சுக்கோங்க. ஆனா, அவங்களுக்கு சோகத்துக்கு மேல சோகம். குழந்தை இறந்து போவுது. இந்த சோகத்தோடும் அவங்க வாழ்க்கை ஓடுது.

நடுவில என்னான்னா, சக்கரவர்த்திக்கு மனைவிமேல ஒரு சின்ன சந்தேகம் வந்துச்சு. ஆனாலும், அவள் அப்படி செஞ்சிருக்கமாட்டான்னு மனசை சமாதனப்படுத்திக்கிறார். மகன் ஞாபகத்திலேயே நோய்வாய்பட்றார். ஒரு நாள் தெருவில பாடிட்டு போற குரல் கேக்குது. இவருக்கு மகன் ஞாபகம் வருது. பாடிட்டு போறது யாரோன்னு நெனச்சு, அவனை கூப்ட்டு வரச்சொல்லி பாடச்சொல்றார். குணாளனும் மனைவியுடன் வந்து பாட்றான். அப்பாவும் மகனும் சந்திச்சுகிறாங்க. மகன் கண்ணிழந்து நிக்கிறதை பார்த்து துடித்து போறார். “நீங்கள் தானே கடிதத்தில் என்னை குருடாக்க சொல்லியிருந்தீர்கள்” ன்னு மகன் சொல்றான். “இல்லியே, உன்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லி, உன்னை கூட்டிட்டு வரும்படித்தானே நான் கையெழுத்து போட்டேன்” ன்னு அரசர் சொல்லியிருக்கார். அப்போதான் அரசருக்கு மனைவிமேல தப்பு இருக்கிறதை நம்புறார். அவளை திட்டுறார். அவர் திட்டுறதை அவர் மனைவி வெளியே இருந்து கேக்குறாள். தன்னை பற்றி உண்மை தெரிஞ்சிருச்சுன்னு, விஷம் சாப்ட்டு தற்கொலை செய்துகிறா.

அரசர் மகனை கூப்ட்டுட்டு புத்தர் கோவிலுக்கு போறார். அங்க ஒரு பாட்டு பாட்றார், குணாளன். புத்தர் நேர்ல தோன்றி அவனுக்கு கண்களை கொடுக்கிறார். எல்லாருக்கும் சந்தோஷம்.

கண்ணாம்பாவுக்கு இரண்டாவது படமாம். இவருக்கு தமிழ் தெரியாததால, தெலுங்கில வசனங்களை எழுதி, கத்துகிட்டு பேசினாராம். கிரேட்ல? “உன்னைக் கண்டு மயங்காத” ன்னு ஒரு பாட்டு இருக்காம். ஆச்சரியம் என்னான்னா, அந்தப் பாட்டை பாகவதர் பாட, கண்ணாம்பா டான்ஸ் ஆடுவாராம். இந்த டான்ஸ் ஆடுறதுக்கு ரொம்ப ப்ராக்டிஸ் செஞ்சாராம். ஒரே ராத்திரியில இந்த டான்சை ஷூட் செஞ்சாங்களாம்.

ரஞ்சன் ஒரு சின்ன ரோல்ல நடிச்சிருந்தாராம். அதுவும் கடைசி ஸீன்ல புத்தரா. இவருக்கு முதல் படம்.

இந்தப் படத்ல 19 பாட்டு. பாகவதரை ஒரு படத்தில புக் செஞ்சாங்கன்னா, அந்தப் படத்தில கண்டிப்பா பாபநாசம் சிவனும், வசனகர்த்தா இளங்கோவனும் இருந்தாகணும்னு பாகவதரின் வற்புறுத்தலாம். பாபநாசம் சிவன் பாட்டுக்களை எல்லாம் எழுதுவது மட்டுமில்லாம, அதை எந்த ராகத்தில பாடணும்னும் சொல்லிருவாராம். 

குறிப்பிடத்தக்க பாட்டுக்கள் :

சத்வகுண போதன் – பாகவதர் 
பூமியில் மானிட ஜென்மமடைந்துமோர் – பாகவதர்
உனைகண்டு மயங்காத பேர்களுண்டோ – பாகவதர்

ப்ரிட்டிஷ் அகோஸ்டிக் த்வனிப்பதிவு முறையில் தயாரிக்கப்பட்டுச்சாம். இது என்ன? ஹிந்தீல வீர் குனால் என்கிற பேர்ல ரிலீஸ் ஆச்சாம். 



Heezulia

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Dec 27, 2017 3:00 pm

27.12.2017

வித்தியாசமான படங்கள் 

5. மங்கம்மா சபதம் 1943

வசுந்தரா – மங்கம்மா [இவர் வைஜயந்திமாலாவின் அம்மாவாம்]
ரஞ்சன் – சுகுணன், ஜெயபாலன் 
NS கிருஷ்ணன், TA மதுரம்,


இசை : MD பார்த்தசாரதி & ராஜேஸ்வரராவ்
பாட்டூஸ் : பாபநாசம் சிவன், கொத்தமங்கலம் சுப்பு
தயாரிப்பு : SS வாசன்
கதை, வசனம் & டைரக்டர் : ஆச்சார்யா


ஒரு ராஜகுமாரன். அவனை சுற்றி அரண்மனையில எப்பவுமே பெண்கள் கூட்டம் இருந்துட்டே இருக்கும். மங்கம்மா ஒரு ஏழை பெண். அழகா இருப்பா. புறாக்கள்னா அவளுக்கு ரொம்ப புடிக்கும். வளர்க்கிறாள். அவளை ஒரு தடவை ராஜகுமாரன் அரண்மனை தோட்டத்தில பார்த்து, அவ அழகில மயங்கி, அவளை அடைய நினைக்கிறான். அவள் இடம் தரல. அவனை அவமானப்படுத்திட்டு தப்பிச்சு ஓடி போயிர்றா.

அரண்மனை தோட்டத்தில அவங்க ரெண்டு பேரும் பேசிகிட்டது இங்க. கேள்வியை எல்லாம் இழுத்து இழுத்து கேக்குறான். 

இந்தப் பட ஆரம்பத்தில, மங்கம்மாவின் புறா ஒண்ணு அரண்மனை தோட்டத்தில பறந்து வந்துர்து. மங்கம்மா அரண்மனை தோட்டத்துக்குள்ள புறாவைத் தேடி வர்றா. அதை சுகுணன் பால்கனிலே இருந்து பார்க்கிறான். அப்பவே அவள் அழகில கிறக்கம் கொள்றான். பால்கனிலே இருந்து அவள் நிக்கிற இடத்துக்கு வர்றான். மங்கம்மா அவன யார்னு கேக்குறா. அவன் தோட்டத்து மேஸ்த்திரின்னு சொல்றான். அவள் புறா தோட்டத்துக்குள்ள வந்துட்டதாக சொல்றாள். 

சுகுணன் : என்ன புறா.................?

மங்கம்மா : மாட புறா

சுகுணன் : அது என்ன மாடம்.................?

மங்கம்மா : ஏய், என்ன புதுர் போட்ற, ம்?

சுகுணன் : எனக்கு புதுர் போட்றதுன்னா ரொம்ப புடிக்கும். ஒனக்கு புடிக்காதோ?

மங்கம்மா : எனக்கும் புடிக்கும். அந்த பொறாவ புடிச்சு குடேன்.

சுகுணன் : புடிச்சு தரே .................. ன். அது என்ன மாடம்..................?

மங்கம்மா : கன்னிமாடம்

சுகுணன் : என்ன கன்னி.....................?

மங்கம்மா : [கோபமா] நாகக்கன்னி. பொறாவ புடிச்சு தறேன்னியே, [மரத்தை பார்த்து] குக்கு

சுகுணன் : அது என்ன நாகம்......................?

மங்கம்மா : [கோபமா அவனை திரும்பி பார்த்து] ஜடநாகம். என்ன ஜட, திரிஜட, என்ன திரி, மே ................... ஸ்த்திரி. பொறாவ புடிச்சு தர்றேன்னு சொல்லிட்டு ............... குக்

புறா அரண்மனைக்குள் பறந்து போகுது. சுகுணன் புறா வேணும்னா அரண்மனைக்குள் வான்னு சொல்லி, மங்கம்மாவை உள்ளே கூட்டிட்டு போறான். அங்கே அவளிடம் தவறா நடக்க முயற்சி செஞ்சு, அவன் அவன்ட்டே இருந்து தப்பிச்சு வந்துர்றா. 

இன்னொரு தடவை அவள களத்து மேட்டில பாட்டு பாடிட்டு இருக்கும்போது பார்க்கிறான். அப்பவும் அவளை அடைய முயற்சி செய்றான். இந்த தடவையும் முடியல. இந்த சமயத்தில்தான் ரெண்டு பேரும் ஆளுக்கொரு புதிரும், சபதமும் போட்டுக்கிறாங்க.

சுகுணன் புதிர் : எள்ளிலே பிறந்து எள்ளிலே வளர்ந்த யவ்வன பெண்ணே, எள்ளிலும் சிறிய இலை என்ன இலை? 

மங்கம்மா பதில் புதிர் :
 பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூமண்டல ராஜாவே, பூவில் இரண்டிதழ் பூ என்ன பூ?

சபதம் வசனங்கள் :

மங்கம்மா : என்ன அவ்ள கேவலமா நெனச்சுடாத. என்ன கல்யாணம் பண்ணிக்கிற புருஷன தவ்ற, வேற யாரும் என்ன தொட்டுக்கொள்ள முடியாது.

சுகுணன் : நீ ஒரு புருஷனை கல்யாணம் பண்ணி உருப்பட போறியோ? அப்டி உட்டுர்வேன்னு நெனக்காதே. நான் ஒரு ராஜ்குமாரன்னு உண்மையானா, நானே உன்ன கல்யாணம் பண்ணி, உன்ன சிறைச்சாலைல வச்சு, ஒங் கர்வத்த ஒழிக்கிறேன். ஒங் கொழுப்ப அடக்கி, உயிருள்ள வரைக்கும், உன்ன வாழாவெட்டியாவே வைக்கிறேன் பார்.

மங்கம்மா : நான் மாத்ரம் ஒரு சரியான பொண்புள்ளையா இருந்தா, அப்படி நீ என்னை கல்யாணம் பண்ணி, வாழாவெட்டி ஆக்கும் பட்சத்தில், உன்னையறியாமல், உனக்கே ஒரு புள்ளைய பெற்று, அந்த புள்ள கையில ஷவுக்க குடுத்து, அந்த ஷவுக்கால ஒன்ன அடிக்க வைக்கிறேன் பாரு.

சுகுணன் : பாக்கலாம்.

மங்கம்மா : பாக்கலாம்.

ராஜகுமாரன் அரண்மனைக்கு வந்து, அவன் அப்பாட்ட மங்கம்மா தன்னை அவமானப்படுத்திட்டதனால, அவளை தனக்கு கல்யாணம் செஞ்சு வைக்க சொல்றான். அதுக்கு அவள் சம்மதிக்கணுமே. ஊஹும், அவளுக்கு பிடிக்கல. மங்கம்மா அவனை கல்யாணம் செஞ்சுக்க மறுத்தாளா? சுகுணனுக்கு வந்துச்சே கோவம். இந்த நாட்டு ராஜகுமாரன் சொல்றத கேக்காத ஒரு பெண்ணான்னு நெனச்சு, அவள சும்மா விடல. பலவந் ............................. தமா, ஆ ஆ ஆ ........அ, நிறுத்துங்க, நிறுத்துங்க சும் .............................. மா கற்பனையை பறக்க விடாதீங்க. பலவந்தமா மங்கம்மாவை தூ ............................. க்கிட்டு போய், கட்டாய கல்யாணம் செஞ்சுகிறான்.

எப்படி கட்டாய கல்யாணம்? மந்திரியை அவள் வீட்டுக்கு அனுப்பி, மங்கம்மா அப்பாட்ட, கல்யாணத்துக்கு சம்மதம் வாங்க சொல்றான். மறுத்தா அப்பாவ ஜெயில்ல போட சொல்றான். மந்திரி வந்து கேட்டபோ, அப்பா சம்மதம் சொல்லல. அவன் கைகளில் வெலங்கு மாட்டி கூட்டிட்டு போற சமயத்தில, மங்கம்மா பொறுக்காம, கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிர்ரா. கல்யாணமும் நடக்குது. இதுதான் கட்டாயக் கல்யாணம். அம்புட்டுதான்.

மங்கம்மா கல்யாணம் முடிஞ்சு அரண்மனைக்கு வர்றா. அவ இருக்கிற இடத்த ரூம்னும் சொல்லமுடியாது, ஹால்னும் சொல்லமுடியாது. அரண்மனையாச்சே, பெரிய இடம். அந்த இடத்தில first nightக்கான சூழ்நிலை. பால் பழங்கள். அலங்கார மெழுகுவர்த்தி ஸ்டாண்டுகள். ஆனா ஒரே ஒரு மெழுகுவர்த்திதான் எரிஞ்சுக்கிட்டு இருக்கு.

மங்கம்மா அழுதுட்டு உக்காந்திருக்கா. சுகுணன் உள்ளே வந்து கதவை சாத்துறான். அவள் அழுதுட்டு இருக்கிறதை பார்க்கிறான். அவன் வர்றதை பார்த்து, இவள் எந்திருச்சு நிக்கிறா. சந்தோஷமா அவன் விசிலடிச்சிட்டு வர்றான். இன்னொரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கிறான். அங்க இருந்த திராட்சையில் ரெண்டை எடுத்து வாயில போட்டுகிட்டான். Bedல படுக்கிறான். அவபாட்டுக்கு தூரத்தில திரும்பி நின்னுட்டு இருக்கா. படுக்கையில படுத்துட்டே, அவளை கூப்பிடுறான்.

சுகுணன் : ஏய்

அவகிட்ட இருந்து பதிலையும் காணோம். திரும்பி பார்க்கவும் இல்ல. அழுதுட்டு நிக்கிறா.

சுகுணன் : ஏய், பேசாமடந்த.

எந்திரிச்சு அவ பக்கத்தில வர்றான்.

சுகுணன் : என்னை கேவலம், கையாலாகாதவன்னு நெனச்சே, இல்லே.

அவளை முரட்டுத்தனமா தன் பக்கம் திருப்புறான்.

சுகுணன் : அடடே, ஹ ஹ ஹ... அழவா அழற? ச்சு ச்சு ச்சு .... அழுதா ....... ஒடம்புக்கு நல்லதுதான். அழு, அழு.

மங்கம்மா அமைதியா : ஒண்ணுமில்ல, நான் ஒண்ணும் அழல.

கண்ணீரை தொடக்கிறா. அந்த எடத்த விட்டு போறாள். சுகுணன் சந்தோஷத்தில ஜா ............... லியா ரெண்டு சுத்து சுத்தி,

சுகுணன் : அப்படி சொல்லுடி என் கோகாகுட்டின்னா.

அவனும் அவள் நிக்கிற எடத்துக்கு போறான்.

சுகுணன் : நீ ஒரு பெரீ ............. ய பாசாங்கு கள்ளி. என்ன ஆட்டம் ஆடினியே. என்ன பேச்சு பேசினே. இப்போ, ஒன்ன என்ன செய்யபோறேன்னு தெரியுமா?

மங்கம்மா : தெரியுமே [அமைதியா பேசுறா] அப்பவே சொன்னதுதானே.

அவன் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்கான். இவள் அழுதுட்டே சட்டென்று அவன் காலை புடிச்சு,

மங்கம்மா : நான் ஒண்ணு சொல்றேன் கேளுங்க. நீங்கள் ஏதோ கோபத்ல, சபதம் பண்ணிட்டேள். நானும் பெண் புத்தியால, பதிலுக்கு பதில் பேசிட்டேன். அப்ப நமக்கு கல்யாணம் ஆகல. இப்ப கல்யாணம் ஆயிருச்சு. போனதெல்லாம் போகட்டும். மறந்துடுங்க. என் வாழ்க்கைய வீணாக்க வேண்டாம்.

சுகுணன் கோபமா : நீலித்தனமா பண்ற.

அவளை காலால் எட்டி உதைத்து தள்ளுறான். அவள் கீழ விழுந்து கெடக்குறா. அவன் எந்திரிச்சு நிக்கிறான். இவளும் எந்திரிக்கிறா.

சுகுணன் : ஷபதம் ஷபதம்தான். நீ வாழாவெட்டி வாழாவெட்டிதான்.

அவள் திராட்சை கொத்திலிருந்து, திராட்சைகளை உதிர்த்து போட்டுக்கொண்டிருக்கா.

சுகுணன் : இந்த பட்டணத்தின் வெளிப்புறத்தில் ஒரு சிங்காரமான அரமன கட்டி, அதில் வேண்டிய சாமான்கள் சேகரிச்சு வச்சு, அதில் ஒன்ன குடியேத்தி, ஒனக்கொரு தாதிய காவல் வச்சு, அந்த அரமனயின் கதவ சாத்தி, பூட்டி முத்ர போட்டு, அந்த சாவிய என் இடுப்ல வச்சுக்கிற போறேன். உன் உயிருள்ளவர அங்கியே இருந்து கெடந்து தவிக்க வேண்டியதுதான்.

மங்கம்மா உதிர்த்த திராட்சையில் ஒன்றை எடுத்து அவனிடம் நீட்றா. அவன் வாங்கிக்கிறான்.

சுகுணன் : ரொம்ப ஆசையா இருக்கியே.

மங்கம்மா : இல்ல, வேகமா பேசி, தொண்ட வறண்டு போச்சே ............ ன்னு பயந்தேன்.

சுகுணன் கோபமா : ரொம்ப வேடிக்கயா பேசுறியோ?

அங்கே இருந்து வேகமா கொஞ்ச தூரத்தில போய் நின்னு திரும்பி பார்த்து,

சுகுணன் : ஒன்னை சிறைல கொண்டு போய் வச்சுட்டு, வெளில நின்னுட்டு கோக்கோன்னு கொக்கரிக்கிறேன் பாரு.

கோவத்தோடு வெளியே போய் கதவை படார்னு சாத்துறான். இவ வேலைய continue பண்றா, அழுறா.

அவன் சொன்னபடியே, தனி அரண்மனை கட்டி, அதில் மங்கம்மாவை அடச்சு வச்சுர்றான். ஆனா அவள் அப்பா மட்டும் அப்பப்போ அவளை வந்து பார்க்க பர்மிஷன் உண்டு. இதுக்கு நடுவில, மங்கம்மா தன் அப்பா கூட சேர்ந்துட்டு ஒரு பயங்கரமான underworld வேல செயறா. மங்கம்மா சொன்னபடி, அவள் அப்பா, இந்த அரண்மனைக்கும், அப்பா வீட்டிற்கும் இடையே சுரங்கப்பாதை தயாராச்சு. இந்த சுரங்கப் பாதை மூலமா, மங்கம்மா அப்பாவுடன் அப்பப்போ வெளியே போய் வர்றா.

மங்கம்மாவின் அப்பா, ஒரு கழைக்கூத்தாடியின் உதவியோடு, மங்கம்மாவுக்கு அவங்க வித்தையெல்லாம் அவளுக்கு சொல்லிகொடுக்க சொல்லி, மங்கம்மாவும் கழைக்கூத்தாடியாகிறா. அவள் ஆடுறதை பார்த்த சுகுணன், அவள் மேல் ஆசைப்பட்டு, அவளிடம் நெருங்கி பழகி, மங்கம்மா கர்ப்பமாகிறா. அவன் என்னவோ அவன் வலையில் கழைக்கூத்தாடி விழுந்துட்டான்னு நெனச்சான். ஆனா உண்மையில் அவன்தானே அவள்ட்ட மாட்டிகிட்டான். அவள் தனி அரண்மனைல இருக்கா. அவளை சுகணன் பார்க்கிறதே இல்ல. அதனால அவள் கர்ப்பமானதும் தெரியாது, அவளுக்கு ஆண் குழந்தை பிறந்ததும் தெரியாது.

மகனும் ரஞ்சன்தான். ரஞ்சனுக்கு ரெட்டை வேஷம்.

அப்பா ரஞ்சன் சுகுணன், மகன் ரஞ்சன் ஜெயபாலன்.

அரண்மனையில் ஒரு திருடன் நுழஞ்சு, தூங்கிட்டு இருந்த சுகுணனின் கழுத்தில் இருந்த நகையை திருடிட்டு, அவன் மூஞ்சியில கரியை தடவிட்டு போயிர்றான். அவனைப் பிடிக்க சுகுணன் ஏற்பாடுகளை செய்றான். எப்படியோ சுகுணன் தன் மகன் ஜெயபாலனை பார்க்கிறான். ஆனா மகன்னு தெரியாம. மகன் அப்பாவை சாக்கில் ஒளிந்து கொள்ள சொல்றான். திருடன் வந்ததும் அவனை புடிச்சு வச்சுட்டு, மூட்டையை அவுத்து விடுவதா சொல்றான், மகன். சுகுணனும் சாக்கில் ஒளிஞ்சுகிறான். ஜெயபாலன் சாக்கின் வாயை கட்டிர்றான். உடனே “திருடன், திருடன் மாட்டிகிட்டான்”ன்னு கத்துறான். பக்கத்தில ஒளிஞ்சுட்டு இருந்த காவலாளிகள் ஓடி வாராங்க. சாக்கு மூட்டையை தூக்கிட்டு அரண்மனைக்கு முன்னால கொண்டு போய் வைக்க, ஊர் ஜனங்கல்லாம் கூடுறாங்க.

ஜெயபாலன் : ஏய், கட்ட அவுத்து விடு.

காவலாளி மூட்டையை அவுக்குறான். மூட்டையிலிருந்து சுகுணன் வேகமாக வெளியே வந்து, ஜெயபாலனை காட்டி,“இவன்தான் திருடன்”.

இப்படி சொல்லிட்டு ஜெயபாலனை நோக்கி பாயறான். காவலாளிகள் சுகுணனை வந்து பிடிக்கிறாங்க.

சுகுணன் : என்னை விடுங்கள். நான் ராஜகுமாரன்.

ஜனங்களுக்குள்ளே சலசலப்பு.

ஜெயபாலன் : பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூமண்டல ராஜாவே, எள்ளிலே பிறந்த பெண்ணின் சபதம். என்ன தெரியுமா?

இப்படி சொல்லி கையிலிருந்த சவுக்கால் சுகுணனை அடிக்க கையை ஓங்குறான், ஜெயபாலன்.

“நிறுத்து” ன்னு ஒரு பெண் அலறிட்டு வர்றாள். மங்கம்மா.

வேகவேகமா வர்றா. சுகுணன் திகைத்து முழிக்கிறான். மங்கம்மாவை அதிர்ச்சியுடன் பார்க்கிறான். மங்கம்மான்னு முணுமுணுக்கிறான். அவளையும், ஜெயபாலனையும் பார்க்கிறான். ஜெயபாலன் அழக் ....................... கா, நக் ........... கலா ஸ்மைல் பண்றான்.

மங்கம்மா : அரஷே, அவன் உமது பிள்ளை.

சுகுணன் : பிள்ளை

ஜெயபாலனையும், மங்கம்மாவையும் மாறி மாறி பார்க்கிறான். ஜெயபாலன் புன்னகைக்கிறான். ஒட்டு மீசையை எடுக்கிறான். மறுபடியும் ஸ்மைல்.

சுகுணன் மங்கம்மாவையே பார்க்கிறான்.


மங்கம்மா : ஆம், உமது பிள்ளைதான். [கொஞ்சம் இடைவெளி] 17 வருஷங்களுக்கு முன், வசந்த மண்டபத்தில், ஒரு கழைக்கூத்தாடிச்சியோடு, 


சுகுணன் அவளை அடையாளம் கண்டுக்காம இருக்க, வேற ஏதோ பாஷையும் பேச சொல்லிக்கொடுத்திருக்கான். மங்கம்மா கழைக்கூத்தாடி வேஷத்தில சுகுணனோடு பழகிட்டு இருக்கும்போது, அந்த பாஷையை பேசுவாள். இப்போ அவள் அந்த பாஷையில் சுகுணன்ட்ட அந்த பாஷையில் ஏதோ சொல்றா. கழைக்கூத்தாடிதான் மங்கம்மான்னு சுகுணனுக்கு தெரியருதுக்காக. 


மங்கம்மா : இந்த நகை, இந்த மோதிரம், [அவள் போட்டிருந்த நகைகளை காட்டி சொல்றாள்.]

சுகுணன் முழிச்சு முழிச்சு மங்கம்மாவையே பார்க்கிறான். 


இந்த சமயத்தில சுகுணனுக்கு மூஞ்சிக்கு முன்னால, கொசுவத்தி சுருள் சுருளா சுத்துச்சு. Flashback

மங்கம்மா உருவத்ல, முதலிரவு நாளன்னிக்கி, மங்கம்மா சுகுணனின் காலை புடிச்சு பேசினது ஞாபகத்துக்கு வருது. “எல்லாத்தையும் மறந்துருங்க, என் வாழ்க்கையை வீணாக்காதீங்க”ன்னு சொன்னாளே, அது.

சுகுணன் சாந்தமாக : மங்கம்மா, உன்னை மங்கையர்க்கரசி என்றுதான் சொல்ல வேண்டும். நீதான் ஜெயித்தது.

மங்கம்மா [அழுதுட்டே]: ஜெயித்தது. ஜெயம். நானா ஜெயித்தேன்? உலகமறிய தோற்றவள் நான். எது ஜெயித்தது? வாழ்நாளெல்லாம் வீணாய், பொய்யாய், மனம் தடுமாறி, பெண்ணாக வாழ்வதை விட்டு பேயை போல வாழ்ந்தேன். இதுவா என் ஜெயம். இந்த இருபது வருஷ காலமாய், தன்னந்தனியாய், உலக வாசனையற்று, ஒரு பட்சி தனிப்பட்டு கூண்டில் அடைந்தது போல், சிறையில் கிடந்து வாடினேன். இதுவா என் ஜெயம்? கொண்ட புருஷனை அடைய, பொய் சொல்லி, மானத்தை விட்டு, கூத்தாடிகளுடன் சேர்ந்து, மாறுவேஷம் போட்டு, பத்து பேருக்கு முன் வெட்கமில்லாமல் ஆடினேன். இதுவா என் ஜெயம்? பெண்ணாய் பிறந்து, புரிந்து கொள்ள முடியாத பேதை நான். வேறு எந்த ஸ்த்ரியாவது, என் நிலையிலிருந்தால், அவளுக்கு பைத்தியம் பிடித்திருக்கும். தன் பிராணனையே விட்டிருப்பாள். ஆனால் என்றைக்காவது ஒரு நாள், நான் உங்களுடன் வாழ்வேன், உங்கள் அன்பை பெறுவேன், என்ற திடமான நம்பிக்கையில், எனக்கு பைத்தியம் பிடிக்கவில்லை. நான் உயிரை மாயத்துக்கொள்ளவில்லை. [அழுதுகிட்டே இத்தனையும் சொல்றா.]

சுகுணன் : மங்கம்மா போதும்.

அவள் அருகில் வந்து

சுகுணன் : என்னை மன்னித்துவிடு. நான் உனக்கு எவ்வளவோ தீமைகள் செய்திருக்கிறேன். நீ மகா உத்தமி. உன்னை நான் தெரிந்து கொள்ளவே இல்லை. மூடத்தனத்தால், அதிகார திமிர் கொண்டு, உன்னை திட்டினேன். காலால் உதைத்தேன். பிரம்பு கொண்டு அடித்தேன். ஆனால் அடித்த கையை நீ அன்புடன் அணைத்தாய். நான் செய்த கொடுமையை மறந்து, இனி நான் [அவள் ரெண்டு கைகளையும் புடிச்சு] ஒரு நாளும் உன்னை விட்டு பிரிந்திருக்க மாட்டேன்.

அவள் கைகளை கண்களில் ஒத்திகிறான்.

அப்புறம் என்ன, ரெண்டு பெரும் ஜா ..................... லியா படகில பாட்டு பாடிகிட்டே போறாங்க.

இந்த வசனம் எல்லாம் எனக்கு புடிச்சிருந்துச்சு. உங்களுக்கும் புடிச்சிருக்கலாமோன்னு எழுதிட்டேன். இப்பதான் ரஞ்சனின் நடிப்பை பார்த்தேன். நல்ல நடிச்சிருக்கார். வசுந்தராவும் நல்ல நடிப்பு. மதுரம், அடையாளமே தெரியல. அவ்வளவு சின்னவங்களா இருக்காங்க. NSK காமெடி நல்லா இருக்கு.

NSK, மதுரம் ஜோடியா நடிச்ச முதல் படமாம். கழைக்கூத்தாடியாக நடிச்ச NSK, அவங்க செய்றதை எல்லாம், மொதல்ல அவர் தனியா ப்ராக்டிஸ் செஞ்சுட்டுதான், ஷூட்டிங்க்கு வந்தாராம்.

ஒரிஜினல் வசனங்களோடு எழுதுறது புடிச்சிருக்ஆஆஆஆஆஆஆ

Heezulia


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Dec 27, 2017 3:58 pm

27.12.2017 

பழைய தமிழ் படங்கள் 


மனோன்மணி 1942


 பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Fv49T2NSA62i44IHr9Y2+Manonmani_Movie_Poster

TR ராஜகுமாரி - மனோன்மணி 
PU சின்னப்பா - இளவரசன் 
செருகளத்தூர் சாமா - ராஜகுரு
TRB ராவ் - மந்திரி குடிலன் 
TS பாலையா - குடிலன் மகன் 
TR மஹாலிங்கம் - சின்ன role 
KK பெருமாள் - ராஜா, இவர் அனேகமாக மாடர்ன் திடேட்டர்ஸ் படங்களிலெல்லாம் நடிப்பவராம். 
L நாராயண ராவ் - காமெடி 
A சகுந்தலா - மனோன்மணியின் தோழி & இளவரசனின் சின்னவீடு 

TA மதுரம், CT ராஜகாந்தம், PR மங்களம், JMG சாரதா, 
G சரஸ்வதி, NS கிருஷ்ணன், காளி N ரத்னம், SS கொகொ, PG வெங்கடேசன், ME மாதவன், Bafoon சண்முகம் 

பாடல் வரிகள் : பாபநாசம் ராஜகோபால் ஐயர் [இவர் பாபநாசம் சிவனின் சகோதரர்] & வேல்சாமி கவி. 

இசை : கல்யாணம் & மகாதேவன் 

திரைக்கதை : DV சாரி 

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிச்ச இந்தப் படத்தை TR சுந்தரம் டைரக்ட்டினார். எக்கச்சக்கமா செலவு செஞ்சு எடுக்கப்பட்ட படம். எம்பூட்டுன்னு நினைக்கிறீங்க, ஒரு நாளைக்கு 2 லட்சம் ரூபாய், அதுவும் அந்தக் காலத்திலேயே. சுந்தரம் ஒரு புதுமையான முறையை கையாண்டாராம். அதா................... வது, படத்துக்கு ஹீரோயின், ஹீரோவை செலெக்ட் செய்றதுக்கு மக்களிடம் கருத்து கேட்டாராம். அதுக்கு ப்ரஸ்ஸுக்கு போயி, விளம்பரம் கொடுத்தாராம். எப்டீன்னு? சினிமா பார்க்கிறவங்கல்லாம் ஹீரோயின், ஹீரோவை செலெக்ட் செய்யுங்கன்னு சொன்னாராம். அந்த விளம்பரத்தை பாத்த ஜனங்க, யாரை சொன்னாங்க தெரீமா? தமிழ் சினிமாவின் அந்தக்கால கனவுக்கன்னி TR ராஜகுமாரிய மனோன்மணியாவும், PU சின்னப்பா ஹீரோவாவும் நடிக்க வைக்கணும்னு எல்லோரும் ஒரு மனதா சொன்னாங்களாம். உலக சினிமா நிகழ்ச்சிகளில, அதுவும் இந்திய சினிமாவில இப்படி நடந்திருப்பது இதுதான் முதல் தடவையா இருக்கும்போல. 

பாண்டிய நாட்டு இளவரசி மனோன்மணி. இவளுக்கு ஒரு கனவு வருது. அதுல ஒரு இளவரசன் வர்றான். அப்புறம் என்ன, லவ்விர்றா. ஒரு அதிசயம் என்னான்னா, வேடிக்கையும் கூட, அதேமாதிரி அந்த இளவரசனும் கனவு கண்டு இவளை பார்க்காமலே லவ்வுறான். ரெண்டு பேருமே மனசுக்குள்ளேயே பலமான காதல் கோட்டை கட்டிட்டாங்க. [காதல் கோட்டை படம், அதாங்க, அஜீத் & தேவயானி, ஞாபகம் வருமே, எனக்கு வந்துச்சுப்பா.] அந்த காலைத்திலேயே இப்படி. மனோன்மணியின் நாட்டையும், அந்த இளவரசன் நாட்டையும் ஒன்று சேர்க்க எண்ணி, ரெண்டு நாட்டுக்கு நடுவிலயும் ரகசிய வழியை உண்டாக்குறார், ராஜகுரு. 

சூழ்ச்சிகள் செய்றதுக்குன்னே யாராவது இருக்கணுமே, அதாவது வில்லன். இங்க, மந்திரி குடிலன். இவன் கைப்பிடில ராஜா. மந்திரியின் மகனுக்கு வழக்கமான கதைபோல, இளவரசி மேல ஒரு இது. 

அப்பனும், மவனும் சே......... ந்து ராஜாவை brainwash செஞ்சுட்டு இருந்தாங்க, ராஜாவின் மகளை மவனுக்கு கட்டி வைக்க. படத்தில நிறைய ட்விஸ்ட்டுங்க. இளவரசியும், இளவரசனும் அப்டீ இப்டீன்னு 
meet பண்றாங்க. கல்யாணமும் பண்ணிக்றாங்க. 

ராஜாக்களின் கதை, 
இளவரசியும் இளவரசனும் 
ராஜகுருவும், கெட்ட மந்திரியும் 
இந்த buildupல, 
TR ராஜகுமாரியும், PU சின்னப்பாவும் நடிக்க, அதுவும் பொது ஜனங்க செலெக்ட் பண்ணவங்க, இந்த காரணங்களால ஓஹோன்னு ஓடுச்சு மனோன்மணி. காமெடிக்கு பஞ்சம் இருந்திருக்காது. NS கிருஷ்ணன் & மதுரம் இருந்தாங்களே. இவங்களோடு நாராயணராவ், இவரும் காமெடி trackல இருந்திருக்கார். 

இதுல நடிச்ச கொகொன்னு ஒருத்தர், முன்னால சர்க்கஸ்ல கழக்கூத்தாடியா இருந்தாராம். இவர் ஒரு விஷயத்துல ஸ்பெஷலிஸ்ட்டாம். எதிலேன்னு நினைக்கிறீங்க. எனக்கு ஒரே ஆச்சரியமா போச்சு. சிகரெட்ட மேல தூக்கி போட்டு உதடுகளில் பிடிக்கிறது. [எல்லாருக்கும் ரஜினி ஞாபகம் வந்திருக்கணும், இல்லேன்னு பொய் மட்டும் சொல்லாதீங்க, ஆ.................மா] என்ன காரணத்தினாலோ இந்த கொகொ suicide பண்ணிகிட்டாராம். 

S வேல்சாமின்னு ஒருத்தர் இந்தப் படத்துக்கு அசிஸ்டண்ட் டைரடக்கராம். சுந்தரம் இயக்கின நிறைய படங்கள்ல இவர் இருந்திருக்காராம். இந்தப் படத்தில ஒரே ஒரு பாட்டு மட்டும்தான் ரசிக்கிற மாதிரி இருக்குமாம். மதுரம் & NSK பாடினதாம். "ஊஊஊஊஊஊஊஊஊஊன்னு ஒரு வார்த்தை" ன்னு வருமாம் அந்தப் பாட்டு. 

ஆக மொத்தத்தில, நடிகை, நடிகர்களின், முக்கியமா TR ராஜகுமாரி, 
PU சின்னப்பாவின் நல்ல நடிப்பு, சிறந்த கதை அம்சம் இதெல்லாம்தான் இந்தப் படத்தின் வெற்றிக்கு காரணமாம். 

Heezulia 


avatar
Guest
Guest

PostGuest Wed Dec 27, 2017 11:28 pm


ப்ரிட்டிஷ் அகோஸ்டிக் த்வனிப்பதிவு என்பது ஒலிப்பதிவு முறையாகும். தொடக்கத்தில் acoustic பின்னர் electrical- அதன் பின் magnetic தற்போது digital முறை கையாளப்படுகிறது.
படச்சுருள் -Qube ,
இசைத்தட்டு-டேப்-CD -DVD -........ என....
தவறானால் திருத்திக் கொள்ளவும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 28, 2017 1:22 am

heezulia wrote: தமிழ்  சினிமாவை  பற்றியும், பாட்டுக்களை பற்றியும் எழுதலாமா? எங்கிட்ட நிறைய நிறைய விஷயங்கள்  இருக்கு. அனுப்பலாமா?

நன்றி Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்
மேற்கோள் செய்த பதிவு: 1252468

மன்னிக்கவும் உங்கள் பதிவை இப்போது தான் பார்த்தேன் ,

மிக அருமையாக உள்ளது ..

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Dec 28, 2017 11:23 am

28 .12 .2017 
 மூர்த்தி  Yesterday[27.12.2017 ]
படச்சுருள் -Qube ,
இசைத்தட்டு-டேப்-CD -DVD -........ என....
தவறானால் திருத்திக் கொள்ளவும்.
அச்சச்சோ மூர்த்தி, இதெல்லாம் என்னான்னே எனக்கு தெரியாதுப்பா. இதுல எப்படி நான் தப்பை கண்டுபிடிக்கிறது. நன்றி மூர்த்தி. 
ராஜா Today[28 .12 .2017 ]
மன்னிக்கவும் உங்கள் பதிவை இப்போது தான் பார்த்தேன் , 
மிக அருமையாக உள்ளது ..
இது வேறயா ராஜா, இப்பதான் பாக்குறீங்கங்கறதுக்காக மன்னிப்பெல்லாம் கேக்கணுமா? 
நன்றி ராஜா.

Heezulia

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Dec 28, 2017 12:24 pm

28 .12 .2017 

பழைய திரைப்படங்கள் 

4. டம்பாச்சாரி 1935 

பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 20gg0up

இயக்கம் : ML டாண்டன் 

நடிச்சவங்க : 

PS ரத்னாபாய் - ஹீரோவின் மனைவி
MR கிருஷ்ணமூர்த்தி - ஊதாரி ஹீரோ 
PS சரஸ்வதிபாய் - மதனசுந்தரி [ஹீரோவின் சின்னவீடு] 
CS ஷாமண்ணா, MS ராகவன், MS முருகேசம் 

ரத்னாபாயும், சரஸ்வதிபாயும் பாளைங்கோட்டை சகோதரிகளாமே. திருவெற்றியூர் காசி விஸ்வநாத ஐயர்னு ஒருத்தராம். இவர் அப்போ பிரபல கதாசிரியராம். நாடகங்களுக்கு கதை எழுதுபவராம். இவர் சொந்தமா தியேட்டர் குழு ஒன்று வச்சு சமூக நாடகங்களை நடத்தி வந்தாராம். அதுல புகழ் பெற்ற நாடகங்களில முக்கியமானது 'தாசில்தார் நாடகம்' & 'டம்பாச்சாரி விலாசம்'.

'டம்பாச்சாரி விலாசம்' நாடகத்த வச்சுதான் இந்த டம்பாச்சாரி படம் உருவாச்சாம். ஹீரோவுக்கு அப்பா வழில இருந்து செல்வம் கிடைக்குது. ஆனா ஹீரோவுக்கு அந்த செல்வத்தை காப்பாத்தி வச்சுக்க தெரியல. கணவன்தான் உலகம்னு நெனச்சுட்டு இருந்த மனைவி ரத்னாபாயை புறக்கணிச்சுட்டு, சின்னவீடு மதனசுந்தரிக்கு அந்த செல்வத்தை செலவழிச்சான். ஒழுக்கமில்லாம நடந்துக்கிட்டான். அவன் அப்பா இறப்பதுக்கு முன்னால, மவன கூப்ட்டு, ஒரு ரகசியத்தை சொன்னான். அது என்னான்னாக்கா, கஷ்டம் வந்தா, அவசியமான நேரத்தில செலவழிக்கிறதுக்காக தன் செல்வத்துல கொஞ்சத்த எடுத்து, அந்த வீட்டின் பொறக்கடைல பொதச்சு வச்சிருக்கதா அப்பா சொல்லியிருக்கார். 

நம்மல்லாம் சின்ன வயசில moral stories படிச்சிருக்கோமே. அதுல என்ன இருக்கும்? ஒருவன் கெட்ட வழியில போவான். அப்புறமா, படாத கஷ்டமெல்லாம் பட்டு, திருந்தி வாழ்வான். அதுபோலத்தான் இந்த ஊதாரி ஹீரோவும். ஒரு கட்டட்டத்தில, அவன் செஞ்ச தப்பை நெனச்சு பார்க்கிறான். திருந்திட்டான். மனசு மாறிட்டான். மனைவிட்ட வந்துர்றான். அவளிடம் மன்னிப்பு கேட்கிறான். அப்புறம் என்ன, சந்தோஷம்தான், மகிழ்ச்சிதான், ஜாலிதான். இதுக்கப்புறம் ஊதாரியா அலைறவங்கள, 'டம்பாச்சாரி' ன்னு சொல்ல ஆரம்பிச்சாங்களாம். அதுமட்டுமில்ல, மதனசுந்தரிங்கிற பேரும் பேசப்பட்டதாம். 

இந்தப் படத்துக்கு 'லட்சிய மனைவி' [உத்தம மனைவி] ன்னும் பேர் வச்சாங்களாம். கொல்கத்தாவில 'Pioneer Film Studios' ன்னு ஒண்ணு இருக்காம். அங்கதான் இந்தப் படம் உருவாச்சாம். AN மருதாச்சலம்னு ஒருத்தர். மத்தவங்க இவரை பிரியமா 'செல்லம்' னு கூப்டாங்களாம். அப்போ இருந்த முன்னணி நபர்கள்ல இவரும் ஒருவராம். கோவையிலிருந்த புகழ் பெற்ற 'செல்லம் டாக்கீஸ்' இவர் கட்டுப்பாட்டுக்குள்ள இருந்துச்சாம். இதுதான் டம்பாச்சாரி படம் எடுக்க பண உதவி செஞ்சுதாம். 

இந்தப் படத்தில 35 பாட்டு போல இருந்துச்சாம். 'டம்பாச்சாரி விலாசம்' நாடகத்தில இருந்த கொஞ்ச பாட்டை இந்தப் படத்துக்கு எடுத்துகிட்டாங்களாம். கொஞ்ச பாட்டு அப்போ ஹிட்டான ஹிந்திப்பாட்டோட ட்யூனை காப்பி அடிச்சாங்களாம். ஆனா எந்த பாட்டும் பிரபலமாகலியாம். 

1931 லே இருந்து காளிதாஸ் படத்தின் மூலம் பேசும் படம் வர ஆரம்பிச்சுதாம். அப்போலேயிருந்து புராணங்களை போலதான் படங்கள் வந்துட்டு இருந்துச்சாம். ஆனா டம்பாச்சாரி படம் அதை விட வித்தியாசமா, முதல் முதலா பேச்சு வழக்கு தமிழ்ல பேசின சமூக படமாம். இந்தப் படத்தின் விளம்பரத்துல 'முதல் சமூக தமிழ் படம்' னு பெருமையா போட்டாங்களாம். இயக்குனர் ML டாண்டன் இந்தியாவின் பிரபலமான இயக்குனர்களில் ஒருத்தராம். 

இந்தப் படத்தில காமெடியனா ஷாமண்ணா நடிச்சாராம். இந்தப் படத்தின் தனிச்சிறப்பு என்னான்னா, இவர் ஏழு வேஷத்தில் நடிச்சிருக்காராம். அப்போ இது நம்ப முடியாத அம்சமாம். இவருடைய மேக்கப், ட்ரெஸ், அது இதுன்னு டக்டக்கென மாத்தி மாத்தி நடிச்சாராம். ஜனங்க இது ஒரே ஆளான்னு சந்தேகப்படும்படியா இருந்துச்சாம். 

இன்னொரு விஷயம் என்னான்னு கேளுங்க. இந்தப் படத்துக்கு எப்டீ விளம்பரம் செஞ்சாங்கன்னு தெரியுமா? Ad நோட்டீஸ் எல்லாம் எப்டீ கொடுத்தாங்கன்னு நினைக்கிறீங்க. கேட்டீங்கன்னா, இல்ல, படிச்சீங்கனா ஆ ............................. ச்சரியப்பட்டு போவீங்க. ஏரோபிளேன்லே இருந்து நோட்டீஸை வீசினாங்களாம். 

ஆக மொத்தத்தில , இந்தப் படத்தின் திரைக்கதை, ஹீரோ, பாளையங்கோட்டை சகோதரிகள் இவர்களின் சிறந்த நடிப்பு இதெல்லாத்தையும் பாராட்டினாங்களாம். 

Heezulia


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Dec 28, 2017 12:34 pm

28 .12 .2017 

பழைய திரைப்படங்கள் 

5. மார்க்கண்டேயா 1935

நடிச்சவங்க : 

மாஸ்டர் VN சுந்தரம் [மார்க்கண்டேயன்] 
'லேடி பாகவதர்' MS கண்ணாபாய் [மார்கண்டேயனின் தாய்]
ராஜபாளையம் குழந்தைவேலு பாகவதர் [மார்க்கண்டேயனின் தந்தை]
SN கண்ணமணி, காமெடிக்காக [நாடோடிப் பெண்] 
KB 'ஸ்ரீனிவாசன் [நாரதர்]

இயக்குனர் : ராம்நாத் & முருகதாஸா 
தயாரிப்பாளர் : MT ராஜென் 


கதையென்னவோ எல்லாருக்கும் தெரிஞ்ச புராண கதைதான். என்றென்றும் 16 வயசுள்ள ஒரு சிவபக்தன் மார்க்கண்டேயன். இவனைப் பத்தின கதைதான் இந்தப் படம். 

பல மொழிகளில் எடுக்கப்பட்ட படம். 1923ல ரெண்டு தடவை பேசாத படமா எடுத்தாங்களாம். யாரால தெரியுமா? சென்னையில சினிமா முன்னோடி R நடராஜ முதலியாராலும், மராட்டிய சினிமா முன்னோடி பாபுராவ் பெயிண்ட்டர் என்பவராலும். அப்புறமா 1935லதான் பேசும்படமா எடுத்திருக்காங்க. 

தயாரிப்பாளர் MT ராஜென் மொதல்ல கிருஷ்ணலீலா போன்ற தெலுங்கு படங்களைத்தான் தயாரிச்சாராம். அப்புறமா துணிஞ்சு முதல் முதலா இந்த மார்க்கண்டேயன் படத்தை தயாரிச்சாராம். இந்தப் படத்தின் விளம்பரத்ல கூட, இந்தப் படம் அவருடைய முதல் தயாரிப்புன்னு பெருமையா போட்டிருந்தாராம். அந்த காலத்தில ஒரு படத்துக்கு ரெண்டு மூணு பேர் வைக்கிறது வழக்கமாம். அப்படித்தான் இந்தப் படத்துக்கும். தமிழ்ல 'பக்த மார்க்கண்டேயா, மார்க்கண்டேயர்' என்கிற பேரையும், இங்கிலீஷுல 'மார்க்கண்டேயா'ன்னும் பேரு வச்சாங்களாம். 

VN சுந்தரம் ஹீரோ. டைட்டில்ல இவர் பேரை 'மாஸ்டர்' VN சுந்தரம் னு போட்டிருந்துச்சாம். இவர் கர்னாடக சங்கீதம் நல்லா தெரிஞ்சவராம். நல்ல குரல் வளம். ஒரு சில படங்கள்ல நடிச்சிருந்தாராம். ஆனா, அந்தப் படங்கள் அவ்வளவா ஓடலியாம். 

இவர் பாடிய பாட்டுக்கள்ல famous ஆனது, பதிபக்தி படத்ல, சந்திரபாபு கூட போட்டி போட்டுட்டு "Rock Rock Rock Rock and Roll" னு பாடுவாரே, இதுவும், மணமகள் படத்தில "சின்னஞ்சிறு கிளியே" பாட்டும்தானாம். 

இந்தப் படத்தில 36 பாட்டாம். இதில நடிச்சவங்க எல்லாருமே பாடியிருக்காங்க. [குறிப்பா, VN சுந்தரம், குழந்தைவேலு பாகவதர், ஸ்ரீநிவாசன், கண்ணாபாய்]. சிதம்பரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருக்கடையூர் போன்ற புண்ணிய ஸ்தலங்களை இந்தப் படத்தில காட்டியிருக்காங்களாம். ராம்நாத் இந்த இடங்களை எல்லாம் மிக அழகாக இந்தப் படத்தில காட்டியிருப்பாராம். இவர் இந்திய சினிமாவில சிறந்த ஒளிப்பதிவாளராம் அப்போ. 

இந்தப் படத்துக்கு பாட்டு எழுதினவங்களை பத்தியும், இசை அமைச்சவங்க பத்தியும் விவரம் கிடைக்கலியாம். 

ஆக மொத்தத்தில், நல்ல ஓடின படமாம். இதற்கு காரணம், நல்ல ஒளிப்பதிவு, சிறந்த பாடல்கள், எல்லாருடைய நல்ல நடிப்பும்தானாம். 


Heezulia


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Dec 28, 2017 12:46 pm

28 .12 .2017 

6. தாசி அபரஞ்சி 1944

பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 4gq3qx
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 11t0wpe
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 4 Oiaz9f

அந்த காலத்தில ராஜாக்களும், பணக்காரங்களும் தாசி வீட்டு போய் வர்றது சாதா .................. ரணமா நடக்கிற விஷயமா இருந்துச்சாம். சில தாசிங்க, இவங்கள மட்டும்தான் வரவிடுவாங்களாம். மத்தவங்கள திரும்.......................... பிகூட பார்க்க மாட்டாங்களாம். 

ஆனா தாசி அபரஞ்சி கொஞ்சம் வேற மாதிரியாம். எப்டீங்றீங்க? அவ அழகும், சிரிப்பும் மத்தவங்கள அப்படியே................... சரண்டர் ஆகுற மாதிரி இருக்குமாம். அந்த திமிர்ல அவர் என்ன செஞ்சா தெரியுமா? அவள யா ......................... ரும் நேருக்கு நேர் பார்க்க கூடாதாம். அவ சிரிச்சா, பேசினா யா .................. ரும் கேக்க கூடாதாம். விக்கிரமாதித்தன் காலத்தில அவள் வாழ்ந்தவளாம். ராஜா ஆட்சியை விட மோசமா இவ நடந்துகிட்டாளாம். எப்படீன்னு படிங்க.

அவள பாத்தாலோ, அவர் சிரிக்கிறத, பேசுறத கேட்டாலோ, அதுக்காக fine கட்டணுமாம். சரிபா, தெரியாத்தனமா அவள பாத்தவங்க, அவ சிரிப்பை கேட்டவங்க அபராதம் கட்ட வசதியில்லாதவங்களா இருந்தாங்கன்னா என்ன செய்றது? அதுக்கும் அவ ஒரு வழி வச்சிருந்தாளாம். அப்படி பணம் இல்லாதவங்க, அவளுக்கு அடிமையா.................... இருந்து, அவ வீட்ல வேலை செய்யணுமாம். என்ன கொடுமை சார் இது. அட, இதை விட கொடுமை இருக்கு பாருங்க. யாரும் அவளை கனவில கூட பார்க்க கூடாதாம். அதுக்கும் அபராதமாம். 

அதெப்படி கனவில பார்த்தா அவளுக்கு தெரியும்னு கேக்குறீங்களா? இதே................. சந்தேகம் எனக்கும் வந்துச்சூங்க. மேல படிச்சதுப்புறமாத்தான் எனக்கும் தெரிஞ்சுது. 

அதனால ஜனங்கள் அபரஞ்சியை பற்றி பேசவே பயப்பட்டாங்களாம். அபராதம் கட்டணுமே. இந்தக் கட்டத்தில என்ன நடந்சுன்னா, ஒருத்தருக்கு அவளை அடையணும்னு ஆச வந்துருச்சு. அது யார்னு நினைக்கிறீங்க? சொல்லிர்வேன், சொல்லிர்வேன். சொல்லிபுட்டேன் சொல்லிடுட்டேன், அந்த ஊர் கோயில் குருக்கள்தான் அபரஞ்சி மேலே ஆசைபட்டுட்டா......................ர். 

அதுக்கு அவர் என்ன செஞ்சார் தெரீமோ? ஒரு வசியப் பொடியை தயாரிச்சாராம். அதை அவர் நேரடியா போய் குடுக்க முடியாது. யார்ட்டயாவது குடுத்து அனுப்பணும். யாரை புடிக்கிறது? அதான் இதுக்குன்னே இருப்பாங்களே, அந்த வீட்டு வேலைக்காரங்க. ஆமாங்க, சிங்காரி, இவ அபரஞ்சி வீட்டு வேலைக்காரி. அவளை காக்காவோ, குருவியோ புடிச்சான். கோயில் பிரசாதம் பொங்கல். அதில அந்த வசிய மருந்தை மிக்ஸ் செஞ்சு, அந்த வேலைக்காரிட்ட குடுத்து அனுப்பி வச்சான். அவளும் வசிய மருந்தை எடுத்துட்டு வீட்டுக்கு போனா.

சரி ................, வசிய மருந்தை வேலைக்காரி அபாரஞ்சிட்ட குடுப்பா, அவளும் சாப்பிடுவா, நம்மள தே ................... டி வருவா, நாம ஜா...............லியா இருக்கலாம்னு ஜொள்ளு விட்டு காத்துட்டு இருந்தார், குருக்கள். 

அப்புறம்தான் காமெடியே. இந்த வேலைக்காரிக்கு பிரசாதத்தில வசிய மருந்து இருக்கிறது தெரியாதுல்ல. அதனால் பிரசாதம்தானேன்னு, அவளே சாப்ட்டுட்டு, மிச்சமிருந்த கொஞ்சத்தை, அவள் வளர்க்கிற ஆட்டுக்கும் கொடுத்துட்டாளாம். அது சரி, அப்புறம் என்ன நடந்துச்சூன்னு தெரிஞ்சுகிட்டீங்கல்ல. அதே, அதே .................. தாங்க. வேலைக்காரியும், அந்த ஆடும் குருக்களை சுத்தி .................. சுத்தி வந்தாங்களாம். 

இன்னாங்கடா இது, நம்ம நெனச்சது நடக்கலியேன்னு நெனச்சுட்டே, குருக்கள் கோயில் குளத்தங்கரைல படுத்து தூங்கிட்டாராம். அபரஞ்சியை நெனச்சுட்டே தூங்கிட்டதால, அவர் கனவில அபரஞ்சி வந்துட்டா. குருக்களின் மடீல அபரஞ்சி படுத்திருக்கா. அந்த சந்தோஷத்தில அபரஞ்சி அபரஞ்சின்னு முனகியிருக்கார், குருக்கள். அந்த வழியா வந்த அபரஞ்சியின் அடியாளுங்க, குருக்கள் கனவில அபரஞ்சி பேரை உளறிட்டு இருக்காரேன்னு, அவரை இழுத்துகினு போயி, அபரஞ்சி முன்னால நிறுத்திட்டாங்க. அப்புறம் என்ன, அபரஞ்சியின் வழக்கப்படி அபராதம் கட்டணும். குருக்களோ ஏழை, பணம் கட்ட வசதியில்ல. அம்புட்டுதான், அபரஞ்சி வீட்டு வேலைக்காரங்களோடு வேலைக்காரனா இவரும் சேர்ந்து, வேலை செய்ய ஆரம்பிச்சுட்டார். அவர் தலையெழுத்து. 

விக்கிரமாத்தனுக்கு கூடு விட்டு கூடு பாயும் வித்தை தெரியும்ல. அந்த சமயத்தில் கிளி உருவம் எடுத்து, அபரஞ்சி வீட்ல இருந்தாராம், விக்கிரமாத்தித்தன். அங்க நடக்கிறத எல்லா ......................... த்தையும்தான் பாத்துட்டு இருக்காரே. அவர் அந்த சமயத்தில, விக்கிரமாதித்தனா உருவெடுத்து, அபரஞ்சியை panish பண்றார். எப்படி? அவள் யார் யார்ட்டே இருந்து சொத்துக்களை, பணத்தை வாங்கினாளோ, அதை அவங்கவங்கட்டேயே திருப்பி கொடுக்க சொல்றார். இப்போ, அவட்ட பணத்தை கொடுத்து ஏழை ஆயிட்டவங்கல்லாம் பணக்காரரா ஆயிட்டாங்க, அபரஞ்சி ஒண்ணுமில்லாதவளா ஆயிட்டா. அவ எழையாகிவிட்டதால, அவ கோயிலோடு போயி தங்கிட்டாளாம். 

என்ன கதை நல்லா இருக்கா? 

இந்தப் படம் ஜெமினி நிறுவனத்தின் தயாரிப்பு. அமோக வசூல் கொடுத்த படமாம். தாசியை பற்றிய கதைங்க்றதால, attractive ஸீன்ல்லாம் நிறைய இருந்துச்சாம். பாத்தவங்க அசந்து போற மாதிரி அபரஞ்சியின் கட்அவுட்டுகள் இருந்துச்சாம். எங்க நின்னு பாத்தாலும், அபரஞ்சி அவங்களையே பாக்குற மாதிரி இருந்துச்சாம். ரெண்டு தடவை சென்சாருக்கு போச்சாம். அதுக்கப்புறம்தான் ரிலீஸ் செஞ்சாங்களாம். 

சம்பூர்ண ராமாயணம் தெலுங்கு படத்தில சின்ன வயசு சீதையாக புஷ்பவல்லின்னு ஒரு பொண்ணு நடிச்சுதாம். இதில அந்தப் பொண்ணு ரொம்ப பிரபலம் ஆயிருச்சாம். ஜெமினி நிறுவனம் இந்த தெலுங்கு பொண்ண புடிச்சு, அபரஞ்சியாக நடிக்க வச்சாச்சு. இந்தப் பொண்ணைத்தான், நம்ம காதல் மன்னன் ஜெமினி கணேசன் லவ் ................ வி, கண்ணாலமும் செஞ்சுகினாரு. இவங்க பொண்ணுதான், பிரபல ஹிந்தி நடிகை ரேகாவாம். 


இந்தப் படத்ல நடிச்சவங்க :

MK ராதா – விக்கிரமாதித்தன் 
கோவில் குருக்கள் – கொத்தமங்கலம் சுப்பு 
SS சுந்தரிபாய் – வேலைக்காரி சிங்காரி 
NS கிருஷ்ணன், மதுரம், காளி ரத்தினம், CT ராஜகாந்தம், சாரங்கபாணி 
ஒலிப்பதிவு – BS ரங்கா 
இசை : MD பார்த்தசாரதி & ராஜேஸ்வரராவ் 
கதை, வசனம், பாட்டுக்கள் – கொத்தமங்கலம் சுப்பு 
டைரக் ஷன் – PN ராவ் 

சுந்தரிபாய், கொத்தமங்கலம் சுப்பு சேர்ந்து அடிச்ச கூத்து, காமெடி ரொம்ப நல்லா இருந்துச்சாம். 

Heezulia


Sponsored content

PostSponsored content



Page 4 of 17 Previous  1, 2, 3, 4, 5 ... 10 ... 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக