புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியலும் - சினிமாவும்!


   
   

Page 1 of 2 1, 2  Next

Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Sun Oct 01, 2017 1:40 pm

மரபை மீறும் சினிமாவும் - மாற்றத்தை தேடும் அரசியலும்!!
- எழுத்ததிகாரன்.

ஆழமானது - அதே நேரத்தில் சாதாரணமானது. தெளிவானது - அதே நேரத்தில் கேலிக்கூத்தையும் கொண்டது. உணர்ச்சி மிக்க பல்வேறு கோணங்களில் அரசியல் ஆய்வு, இவைகளையெல்லாம் ஒருங்கே கொண்டதுதான் திரைப்படக்கலை. சினிமாவின் பிறப்பிடம் பிரான்ஸ் என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம். லூமியரும், ஜியார்ஜ் மீலேவும் அங்குதான் தோன்றினார்கள். ஆனால் இதை ஒரு வெகுஜன பொழுது போக்காக மாற்ற வேண்டும் என்ற தேவை அமெரிக்காவில்தான் உணரப்பட்டது. உலகெங்குமுள்ள ரசிகர்களுக்கு எல்லாவித பொழுது போக்கையும் தரும் பெரிய தொழில்துறையாக இந்த சினிமா அமெரிக்காவில் வளர்ந்தது.

வெள்ளித்திரையில் தோன்றிய இந்த மாயையை ரசிகர்களும் விரும்பிப் பார்த்தார்கள். ஆனால், இரண்டாம் உலகப்போருக்குப் பின் முற்றிலும் புதிய சினிமாவை அவர்கள் எதிர்பார்த்தார்கள். இந்த அடிப்படையில் முதலில் செயல்பட்டது இத்தாலியர்கள்தான். வாழ்க்கையைப் பற்றி நவீன யதார்த்தவாத நோக்கிலான படங்களை எடுத்தார்கள். இவர்களின் முயற்சிகள் வரலாற்றின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. அதே நேரத்தில் பிரெஞ்சுக்காரர்களும் அமெரிக்காவின் அதிவேக விறுவிறுப்பு படங்களுக்கு மாற்றாக தங்கள் படங்கள் அமைய வேண்டுமென விரும்பினார்கள். நவீன சினிமாவின் மேதை என்று கருதப்படும் "ஆந்த்ரே பாஸன்"  (Andre Bazin) அப்போது "காஹியெ து சினிமா" என்ற தீவிர சினிமா பத்திரிக்கையைத் துவக்கினார். இந்தப் பத்திரிக்கையை மையமாகக் கொண்டு சினிமாவில் அதீத ஆர்வம் கொண்ட ஐந்து இளைஞர்கள் ஒரு குழுவாக உருவானார்கள். பிரான்சுவா ட்ரூபோ, ழான் லுக் கோதார், க்ளோத் ஷப்ரோல், எரிக் ரோமர், ழாக் ரிவெத் ஆகியவர்கள்தான் அந்த ஐவர்கள்.

இவர்கள் சினிமாவைப் பார்ப்பதிலும், ஆய்வு செய்வதிலும், புதிய பிரெஞ்சு சினிமாவுக்கான உத்திகளை திட்டமிடுவதிலும் பல ஆண்டுகளைக் கழித்தனர். ஒரு எதிர்க் கலாச்சாரத்தை உருவாக்குவதில் அவர்கள் சிற்பிகளாக திகழ்ந்தனர். இது போன்ற ஒன்று இதுவரையில் உலகில் வேறெங்கும் நிகழ்ந்ததாக தெரியவில்லை. எனவே அதுபோன்ற ஒரு ஐவர் குழுவை இந்திய சினிமாவிலும் உருவாக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்து பல வருடங்களை உதிர்த்து வருகிறோம்.... இந்த ஐவர் குழுவில் மிக முக்கியமாகவும், மூலையாகவும் செயல்படுபவர் யார்? என்பது இந்தக் கட்டுரையை விரும்பிப் படிக்கும் பலருக்கும் நன்றாகத் தெரியும். மற்றவர்கள் விரைவில் தெரிந்து கொள்வார்கள். கோடம்பாக்கத்திற்கு வெளியில் ஒரு கோலிவுட் செயல்பட்டு வருகிறது என்பது பலருக்குத் தெரியாது!!

ஆரம்பம் முதல் இன்றுவரையிலான எல்லா காலங்களிலும் சினிமா என்பது மக்களிடம் தவறாகவே சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம் அரசியல் தலைவர்கள் என்பதை யாராலும் மறுக்கவே முடியாது. ஏனென்றால் சினிமா என்பது அரசியல் சித்து வேலைகளை மக்களுக்கு தோலுரித்துக் காட்டுவதை தனது இயல்பாகக் கொண்டிருந்தது. இதனால் மக்கள் தங்களுடைய சுயத்தை உணரத் தொடங்கினார்கள். இன்று சமூக இணையதளங்களில் பொதுமக்கள் பலரும் அரசியல் விமர்சனங்கள் செய்து வருகிறார்கள் என்றால் அதற்கு சினிமா மிக முக்கிய காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இத்தனை பலம்பொருந்திய இந்த சினிமா அரசியல் சூழ்ச்சியால் கொள்ளைக்காரர்கள், வீரர்கள், பூதங்கள், சொகுசுக்காரிகள், பாடல்கள், வசனங்கள் என்று அழுகையிலும், களியாட்டத்திலும் மூழ்கடிக்கப்பட்டது.

உயர்ந்த பாராட்டுக்களையும், தவறான விமர்சனங்களையும் சரி சமமாக பெற்று வளர்ந்துகொண்டிருக்கும் இந்த சினிமா ஏன் தவறாக சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறது? என்பதில் அதிக கவனம் செலுத்தியபோதுதான் இந்த சினிமாவின் மூலம் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். கெட்ட பெயரை உடனே சம்பாதித்துவிட முடியும். ஆனால் நல்ல பெயரை சம்பாதிப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதிலும் நூறு ஆண்டுகளாக மக்களிடையே மதிப்பிழந்து நிற்கும் சினிமாவால் தன்னை எப்படி நிரூபிக்க முடியும்? தன்னால் எந்த ஒரு மாற்றத்தையும் நிகழ்த்திக்காட்ட முடியும் என்பதை மக்களிடம் எப்படி புரிய வைக்க முடியும்?...

அதன் விளைவாக உருவானதுதான் ஊழலற்ற அரசியல்! என்ற டிஜிட்டல் இந்தியாவுக்கான சினிமாக்காரனின் திட்டம்!! இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட திட்டம் என்றாலும் இது ஒரு சினிமாக்காரனின் சிந்தனை என்பதை வரலாறு சொல்லும்!!

*** சினிமா என்பது வெறும் நுகரப்பட வேண்டிய ஒன்றல்ல. மாறாக அனைவரும் ஈடுபட வேண்டிய ஒன்று. ***

தொடரும்....
- எழுத்ததிகாரன்
on 5th December 2016, 1:25 pm

Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Fri Oct 20, 2017 4:46 pm

இந்திய அரசால் அங்கீகாரம் பெற்ற சென்சார் போர்டால் அனுமதிக்கப்பட்டு, தற்போது வெளிவந்துள்ள ஒரு திரைப்படத்தில் இருந்து முக்கிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று சில அரசியல் பிரமுகர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இப்போது புரிகிறதா சினிமா துறை ஏன் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று? மக்களை பாதுகாக்க வேண்டிய அரசியல்வாதிகள் எல்லா காலங்களிலும் தங்களை மட்டுமே காப்பாற்றிக்கொள்ள முயற்சிக்கிறார்கள்!

இது எப்படி மக்களாட்சியாகும்?

மேலே உள்ள கட்டுரையை படிக்கத் தவறாதீர்கள்...
மரபை மீறும் சினிமாவும் - மாற்றத்தை தேடும் அரசியலும்!! தொடர வேண்டும்...


Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Thu Feb 22, 2018 5:52 pm

சினிமாத்துறையை சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வருவது புதிதில்லை. பல தலைவர்கள் சினிமாவை விட்டுவிட்டும், சினிமாவில் இருந்துகொண்டும் அரசியல் செய்திருக்கிறார்கள். ஆனால் தற்போது வரும் சினிமாக்காரர்கள் எல்லோரும் அரசியலையும் சினிமாவாகவே நினைத்து பஞ்சு டையலாக்கே பேசுகிறார்கள்.

சினிமாவுல முதல்ல மோஷன் போஸ்ட்டர் வெளியிடுவாங்க, அப்புறம் லிரிக்கல் வீடியோ வெளியிடுவாங்க, அப்புறம் டிரைலர், தியேட்டரிக்கல் டிரைலர், புரமோஷன், கோர்ட்டுல கேஸு அதுக்கப்புறம்தான் சினிமாவை ரிலீஸ் பண்ணுவாங்க. அதே மாதிரிதான் இன்னைக்கு அரசியல் கட்சியும் அறிவிக்கிறாங்க. முதல்ல டிவிட்டர், பேஸ்புக்குல அறிவிப்பு, அப்புறம் ரசிகர்கள் சந்திப்பு, அப்புறம் கல்யாண மண்டபத்துல விருந்து, விமர்சனம், பேட்டி கடைசியாத்தான் கட்சி பெயரை அறிவிக்கிறாங்க.

ஆனா, கட்சியோட கொள்கையை மட்டும் ஏன் யாருமே சொல்ல தயங்குறாங்கன்னு தெரியலை.. ரஜினிகிட்ட கேட்டா, நான் கொழந்த.... இப்பதான் பொறந்துருக்கேன் தலை சுத்துதுங்கறார். கமல்கிட்ட கேட்டா, நான் சோறு வடிச்சுகிட்டு இருக்கேன் தொட்டு பார்த்தால் சுட்டுடுவேன்ங்கறார். தமிழ்நாட்டோட அரசியல் களம் என்பது ஸ்டார் கிரிக்கெட்டா? இல்ல ஸ்டார் சமையலறையா? என்றே புரியவில்லை. கொழந்தைங்க எல்லாம் வந்து ஓடி புடிச்சு விளையாடுறதுக்கு இது என்ன பிளே கிரவுண்டும் இல்ல, சமையல் புரோகிராம் பண்ணுறதுக்கு ஸ்டார் சமையலறையும் இல்ல.

இன்னைக்கு இருக்குற அரசியல் நிலைமையில மக்கள் செல்வாக்கு உள்ளவங்க திறமையா செயல்படுவாங்கன்னு பார்த்தா.... வரவங்க எல்லாம் ஓடிப்புடிச்சு விளையாட நினைக்கிறாங்க. ரஜினியும், கமலும் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர்கள், நீண்ட கால நண்பர்களும் கூட. ரெண்டு பெரும் ஒண்ணா சேர்ந்து செயல்படனும் இல்லேன்னா யாராவது ஒருத்தர் விட்டுக்கொடுத்து விலகி இருக்கணும்.. அப்பத்தான் தமிழ்நாட்டை காப்பாத்த முடியும். மாற்று அரசியலை உருவாக்க முடியும். ஆனால், ரெண்டு பேரும் வெவ்வேற கருத்துக்களோடு ஒரே நேரத்தில் போட்டி போட்டா ஓட்டுக்கள் பிரியுமே தவிர ரெண்டு பேருமே வெற்றி பெற முடியாது.

எனவே, ரஜினி தலை சுத்தல்லேருந்து விடுபடனும். கமல் சமையலறையை விட்டு வெளியில வரணும். அதுதான் நல்லது.

அட்வைஸ் கேட்டாங்க அதான் சொல்லிருக்கேன்.
ப்ரீ அட்வைஸ்!
கேட்டா கேளுங்க, கேக்காட்டி போங்க.!!

- எழுத்ததிகாரன்.
அரசியலும் - சினிமாவும்! Writing%2Bof%2Bemphatic

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 22, 2018 9:04 pm

pranav jain wrote:அட்வைஸ் கேட்டாங்க அதான் சொல்லிருக்கேன்.
ப்ரீ அட்வைஸ்!

யார் இப்போ உங்களை கேட்டாங்க ?
இருந்தாலும் நன்றாகவே அலசி இருக்கிறீர்கள். ரசித்தேன்.
நீங்கள் அரசியலில் ஈடுபடுவதாகவும் / உங்கள் சமூக பிரதிநிதியாக நிற்கப்போவதாக சொன்னது எவ்வளவு தூரத்தில் இருக்கிறது. அம்மா வேறு இப்போது இல்லை.

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Thu Feb 22, 2018 10:56 pm

T.N.Balasubramanian wrote:
யார் இப்போ உங்களை கேட்டாங்க ?

இருந்தாலும் நன்றாகவே அலசி இருக்கிறீர்கள். ரசித்தேன்.
நீங்கள் அரசியலில் ஈடுபடுவதாகவும் / உங்கள் சமூக பிரதிநிதியாக நிற்கப்போவதாக சொன்னது எவ்வளவு தூரத்தில் இருக்கிறது.  அம்மா வேறு இப்போது இல்லை.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1260347

கமல்தான் அறிவுரை கேட்டாராம். அதற்காகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது.

மேலும் நாங்கள் அரசியலில் ஈடுபடுவது இன்னும் இறுதி முடிவாகவில்லை. ஆனால், எல்லா புதிய கட்சிகளுக்கும் முன்னோடியாக கட்சி பெயர், கொடி, சின்னம், கொள்கை என்று எல்லாவற்றையும் நாம்தான் முதலில் அறிவித்து வருகிறோம்.
நமது கட்சியின் பெயர் "இந்திய ஜனசமூக கட்சி"
நமது கட்சியின் சின்னம் "இரு விழிகள்"
கொள்கை "சாதி, மத, மொழி வேறுபாடுகளற்ற சமூகம், இலவச கல்வி மற்றும் மருத்துவம், மற்றும் மக்கள் நலனுக்கான எல்லா நடவடிக்கையும் எங்கள் கொள்கையாகும்.
நமது முகநூல் குழு (3500 உறுப்பினர்கள்): https://www.facebook.com/groups/publicpoliticalofindia/

தமிழ்நாட்டில் "தமிழ்நாடு ஜனசமூக கட்சி" என்ற பெயரில் செயல்படுவோம். தேர்தலில் போட்டியிடுவோமா அல்லது வெளியில் இருந்து செயல்படுவோமா என்பது இன்னும் முடிவாகவில்லை. மற்றபடி கிட்டத்தட்ட கமல் மாதிரியேதான். ஆனால் கமலுக்கு முன்பாகவே நாம் செயல்படுகிறோம் என்பது பெருமையாகத்தான் இருக்கிறது. முதலில் நம்மை மக்களிடம் பிரபலப்படுத்த வேண்டும். பிறகு உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். நிதி திரட்ட வேண்டும். எனவே கால அவகாசம் என்பது நமக்கு அதிகம் தேவைப்படும். அதே நேரத்தில் இது விளையாட்டாக போகுமா அல்லது விஸ்வரூபம் எடுக்குமா என்பதும் இன்னும் தெரியவில்லை. காலம் பதில் சொல்லட்டும்... நம்மால் செய்ய முடியவில்லையென்றால் மக்கள் நலனுக்காக செயல்படும் மற்றவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது.

அரசியலும் - சினிமாவும்! Tnj%2Bparty

அரசியலும் - சினிமாவும்! Tnj%2Bparty


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 23, 2018 8:37 am

மிக்க நன்று பிரணவ்,
எங்கள் தொகுதியில் நீங்கள் போட்டி இட்டால்
எங்கள் குடும்பத்தார் ஒட்டு உங்களுக்கே.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sat Feb 24, 2018 12:59 am

தமிழ் நாட்டில் 63 கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் தினகரன் ,ரஜனி,கமல், .....தமிழ்நாடு ஜனசமூக கட்சி என தொடருகிறது. 10 கட்சிகள் செயலிழந்து போய் விட்டன.

Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Sat Feb 24, 2018 4:32 pm

மூர்த்தி wrote:தமிழ் நாட்டில் 63 கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் தினகரன் ,ரஜனி,கமல், .....தமிழ்நாடு ஜனசமூக கட்சி என தொடருகிறது. 10 கட்சிகள் செயலிழந்து போய் விட்டன.
மேற்கோள் செய்த பதிவு: 1260418

'தமிழ்நாடு ஜனசமூக கட்சி' உருவாவதற்கு தாமதமாகலாம். உருவாகிவிட்டால் பின்பு செயல் இழக்காது. உங்கள் ஆதரவுக்கு நன்றி.

Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Sat Feb 24, 2018 4:33 pm

T.N.Balasubramanian wrote:மிக்க நன்று பிரணவ்,
எங்கள் தொகுதியில் நீங்கள் போட்டி இட்டால்
எங்கள் குடும்பத்தார் ஒட்டு உங்களுக்கே.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1260358

கேட்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் ஆதரவுக்கு நன்றி...

Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Sat Feb 24, 2018 11:30 pm



கமல் சார், முதல்ல..... நீங்க ஒரு அரசியல்வாதி மாதரி உக்கார்ந்து பேசுங்க. தெனாவட்டா உக்கார்ந்துக்கிட்டு தினுசா பேசுறதெல்லாம் சினிமாவோட இருக்கட்டும். கூடாது  கூடாது
ஏன்னா, மக்கள் எல்லாம் இது ஏதோ சினிமா புரமோஷன்னு நினைச்சுக்க போறாங்க...  சிரிப்பு  சிரிப்பு

அது சரி, மக்கள் எல்லாம் பொங்கி எழுந்து இப்ப என்ன பண்ணனும்?... கட்சியில மெம்பர்ஷிப் ஆகுறதுக்கு ஏன் பொங்கி ஏழனும்? அதான் தேர்தலுக்கு மூணு வருஷம் இருக்கே...
ஒருவேளை.... ஆட்சி கலையப்போகுதா என்ன?...
தெளிவா சொன்னீங்கன்னா நாங்களும் கேமெராவை தூக்கிடுவோம்ல....

- மக்கள். (வேடிக்கை பார்க்க முடியல அதான்...)

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக