புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 12:11 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_c10அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_m10அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_c10 
43 Posts - 37%
ayyasamy ram
அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_c10அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_m10அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_c10 
42 Posts - 36%
Dr.S.Soundarapandian
அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_c10அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_m10அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_c10 
17 Posts - 15%
Rathinavelu
அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_c10அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_m10அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_c10அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_m10அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_c10அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_m10அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
mruthun
அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_c10அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_m10அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_c10அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_m10அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_c10அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_m10அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_c10 
118 Posts - 46%
ayyasamy ram
அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_c10அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_m10அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_c10 
87 Posts - 34%
Dr.S.Soundarapandian
அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_c10அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_m10அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_c10அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_m10அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_c10அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_m10அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_c10அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_m10அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_c10அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_m10அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_c10அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_m10அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_c10அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_m10அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_c10அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_m10அனிதாவுக்கு அஞ்சலி ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனிதாவுக்கு அஞ்சலி !


   
   

Page 2 of 2 Previous  1, 2

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Sep 03, 2017 9:22 am

First topic message reminder :

நம்பவைத்துக் கழுத்தறுத்த நாடாளும் கும்பலொன்றின்
...நயவஞ்சக சூழ்ச்சிக்குப் பலியானாய் அனிதா !
எம்பிபிஸ் படிப்பெல்லாம் ஏழைக்கு இல்லையெனும்
...எழுதாத சட்டத்தை ஏனோநீ மறந்தாய் !
நம்பியுனைப் படிக்கவைக்க நல்லவராம் தந்தையினை
...நட்டாற்றில் தவிக்கவிட்டு நீமட்டும் கண்மூட
வெம்பியுளம் வேகுதம்மா ! வேதனையில் தவிக்குதம்மா !
...வெள்ளைமனம் கொண்டவளே ! வெந்துவிட்டாய் கனவுடனே !





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 05, 2017 9:20 pm

தொடர்ச்சி

இப்போ ஆனந்த விகடனில் வந்த  பேராசிரியர் அனில் சடகோபன் பேட்டிக்கு என் பதில்.
ஆனந்த விகடன் முதலில் அவரை இடதுசாரி(கம்யூனிஸ்ட்) ஆதரவாளர் பேராசிரியர் அனில் சடகோபன் என்று சொல்லாமல் மறைத்ததை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
கொஞ்சமாது பத்திரிகை நேர்மை கடைபிடிக்க பழகுங்கள்.
அவர் முன்வைத்த குற்றசாட்டுகளும் பதில்களும்:
1)சமூகநீதியையும், சமத்துவத்தையும் இதனால் கெடும்... மாணவர்களின் திறனை ஆராய ஒற்றைத் தேர்வு என்பது சுத்த அயோக்கியத்தனம்.
 ஒற்றைத் திறனாய்வு தேர்வு கூடாது என்ற நிலைப்பாடு இந்த மருத்துவ தேர்வு முறையில் மட்டுமா இல்லை எல்லா விஷயத்திலுமா என்று எனக்கு புரியவில்லை.  ஏன் என்றால்
IAS IPS நடத்துகிறோம் தேர்வுகள் அதுவும் ஒற்றை திறனாய்வு தேர்வு தான். எல்லோரும் UPSC Civil Services தேர்வுக்கு பொதுவான Syllabus தானே வெளியிடுகிறோம்.. நடத்துகிறோம்..
ஒற்றைத் திறனாய்வு தேர்வு கூடாது என்பது தவறான வாதம்.
இது எனவோ நீட் மூலம் மருத்துவ கல்லூரிக்கு சேர்வதற்கு மட்டும் தான் இந்தியாவில் நடத்தபடுவது போல மாயையை உருவாக்க முயற்சிக்க வேண்டாம். இந்தியாவில் JEE
இன்ஜினியர் சேர்வதற்கு நடக்கிறது இது பிரச்சனை இல்லையா??
Indian Maritime University Common Entrance Test , National Aptitude Test (NATA) என்று எத்தனை தேர்வுகள் நான் காட்டவேண்டும் கூறுங்கள்.
AIIMS , CMC-Vellore , CMC-Ludhiana , JIPMER , Manipal (MBBS), MGIMS-Wardha ,AMU (MBBS) , BHU Medical என்று அவன் அவன் இஷ்டத்துக்கு மருத்துவ தேர்வுகள் வைத்து மாணவர்கள்
சேர்க்கை அறிவித்து பல ஆயிரம் கோடிகள் வாங்கி மருத்துவ படிப்பை விற்கும் பொது இங்கே எவனும் போராட்டம் நடத்தவில்லை.
AIIMS வழிகாட்டுதல் தெளிவின்மையால் , ஒரு நேர்மை இல்லாததால் கோடிகளில் மருத்துவ சீட் விற்ற போது எங்கே இருந்தீர் எந்த போராளிகள்???
இதனால் தான் நான் இந்தியா கொண்டுள்ளது educational system இல்லை Examination system - இதை மாற்றிவிட்டு State Bord மொத்தமாக ஒழித்துவிட்டு அனைத்தையும் CBSE
போர்ட் என்று மாற்றிவிடுங்கள் என்று நான் பல வருடமாக கூறுகிறேன். எவன் காதில் வாங்குறான்.
அனைத்தையும் இந்திய அளவில் ஒற்றை திறனாய்வு தேர்வு மூலம் தேர்வு செய்ய எளிமையாக இருக்கும். மாணவர்கள் அனைவருக்கும் வேறு வேறு பாடத்திட்டம் கொடுக்கமால்
அனைவரும் ஒரே பாடத்திட்டத்தில் படித்து வெளியேறுவர் என்று கூறுகிறேன்.
இதற்கு மத்திய அரசு தயார்... மாநிலங்கள் தான் பிரச்சனை.
இப்போ நான் மாரிதாஸ் கூறுவது என்ன தவறு உண்டு????
2)உலக வர்த்தக அமைப்புக்குச் சில வாக்குறுதிகளை இந்திய அரசு அளித்துள்ளது. அதில், ஒன்று இந்தியச் சுகாதாரத் துறையை முழுவதும் தனியார்மயமாக்குவது. இந்தியப் பொது
சுகாதாரத் துறையைச் சிதைக்க வேண்டும்.
யார் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் வசம் கொடுக்க விரும்புகிறார்???? யார் சிதைக்க விரும்புகிறார்கள்???? இதை யார் பேசுவது என்ற ஒரு வரைமுறையே இல்லாமல் போச்சு.
ஏன் என்றால் பலருக்கு வரலாறு தெரியாது தெரியாது அல்லவா. அந்த தைரியம் தான் கம்யூனிஸ்ட் இப்படி பேச.
Indian Oil , ONGC ,NTPC, Gas Authority of India என்று பொதுதுறை நிறுவனங்கள் மூலம் வரும் திட்டங்கள் அனைத்தையும் எதிர்த்து போரட்டடங்களை தூண்டிவிடும் கம்யூனிஸ்ட் கட்சியா பொது
துறை நிறுவனங்கள் நலன் பற்றி பேசுவது??? நல்ல வேடிக்கை.
உங்கள் கம்யூனிஸ்ட் தொழில் சங்கங்கள் காடிய லட்சணத்தில் HMT இந்தியாவின் கோவில் கோபுரம் என்று அழைக்கபட்ட பொதுத்துறை நிறுவனம் நாசம் ஆனது வேண்டுமானால்
புதிய போராளிகளுக்கு தெரியாமல் இருக்கலாம். அனைவரையும் ஏமாற்ற முடியாது சடகோபன் சார்.
MBBS படிப்பே அந்நிய முதலாளிகளுக்கு அடிமையாக செய்யும் வேலை என்றால் சரி வாங்க சித்தா ஆயுர்வேதா படிக்கலாம்... அதை சொன்னால் சித்தர்கள் ஹிந்துமதம் அய்யோ யோகா
போல இதிலும் ஹிந்துத்துவா திணிப்பு என்று ஆரம்பித்து விடுவீர். உங்களை என்ன சொல்ல???
எனவே இது அடிப்படையில் தவறான குற்றசாட்டு.
3)இப்போதுள்ள மருத்துவக் கல்வி முறையில் மாணவர்கள் சில காலம் கிராமத்தில் பணியாற்ற வேண்டும். அதற்கான ஒதுக்கீடு இருக்கிறது. ஆனால், நீட் தேர்வில்
அதற்கான வாய்ப்பே இல்லை.
இது என்ன விதமான பேச்சு??? உங்களுக்கு சமாளிக்க முடியாமல் எதோ உளறுகிறார்.
உண்மையில் நீட் தேர்வு என்பது வெறும் தேர்வு மட்டுமே. அதாவது வெறும் examination bord. அதில் மதிப்பெண் வாங்கியவர் பட்டியலை மாநில அரசுகளிடம் கொடுத்துவிட்டு
விலகி விடுவர். இது மட்டுமே இவர்கள் பணி.
அந்த பட்டியலை கொண்டு கவுன்சிலிங் நடத்தி மாணவர்கள் சேர்ப்பது முதல் மருத்துவ படிப்புக்கான கொள்கை முடிவு என்பது முழுக்க வேறு. அதற்கும் இதற்கும் என்ன
சம்மந்தம்???? தேர்வு நடத்தும் வெறும் ஒரு அமைப்பு எப்படி நாட்டின் மாநிலத்தின் மருத்துவ கொள்கையில் தலையிடும்???
இது முழுக்க தவாற மக்களை திரிக்கும் உண்மைக்கு புறம்பான பேச்சு.

4) நீட் தேர்வைச் சர்வதேச அரசியல் அல்லாமல் சமூகநீதி கண்ணோட்டத்தில் பார்த்தீர்கள் என்றால், வாய்ப்பு மறுக்கப்பட்ட பின்தங்கிய சமூக மக்களை, மருத்துவத் துறையில்
உள்ளே வரவிடாமல் பார்த்துக்கொள்ளும் அரசியல் தெரியும்.
அப்பாடா தலித் என்று சொல்லாமல் விட்டீர். நல்லது.
இப்போ இந்த பின்தங்கிய சமூக மக்கள் யார்???? ராமநாதபுரம் , சிவகங்கை என்று பின்தங்கி பகுதிகளில் தேவர் , கள்ளர் , பிள்ளை , நாடார் , மருத்துவர் , பிராமணர்,
கோனார் என்று எல்லா ஜாதிய மக்களும் தான் பின்தங்கியவர்கள் என்று கூறினால் - அதாவது ஜாதிய அடையாளம் இல்லாமல் உண்மையில் கல்வி கிடைக்காமல் -
உழைத்து பொருள் சேர்க்க வழி அதிகம் இல்லாத பகுதியை சார்ந்த மாணவர்கள் ஜாதி, மதம் கொண்டு பிரிக்காமல் இந்த கோரிக்கையை கம்யூனிஸ்ட் திமுக திக போன்றவை
முன்வைக்கமுடியுமா??
நான் சவால் விடுகிறேன்...  எனவே சும்மா உதார்விடவேண்டாம்...
உண்மையில் நாம் மாற்றி அமைக்கவேண்டியது கல்வி கொள்கையை தான்.
அதாவது நீட் தேர்வை சந்திக்கும் அளவுக்கு நம் மாநில கல்விதரம் தேவை.  தனியார் பள்ளிகளில் படிக்கவைக்க வசதி இல்லாமல் தான் அரசு பள்ளிக்கு வருகிறார்கள். சரி தானே.
அப்படி வரும் பிள்ளைகள் வாழ்க்கை எதிர்கால என்பது ஒவ்வொருவரும் ஒரு குடும்பத்தின் எதிர்காலம் என்று அக்கரை இருந்தால் அந்த பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை
தனியார் பள்ளிகளுக்கு சென்று கிடைக்கும் அளவுக்கான தரத்தில் கொடுப்பதில் தானே நம் அக்கரை இருக்கவேண்டும்???
எனவே சமூகத்தில் பின் தங்கிய என்று தனியாக எதுவும் பிரித்து பார்க்க தேவை இல்லை. அரசு பள்ளிக்கு வரும் அனைவருமே சமூகத்தில் பின்தங்கிய பிள்ளைகள் தான்.
அவர்களுக்கும் CBSE பள்ளியில் கிடைக்கும் தரமான கல்வி கிடைக்க முன்வருவதுவே நலம்.
படிக்கும் குழந்தை எங்கிருந்தாலும் படிக்கும் சார். சும்மா அரசியல் ஆதாயங்களை பள்ளி வகுப்புக்குள் கொண்டுவராமல் எட்டி நில்லுங்கள்.
5)தகுதி எதைவைத்து நிர்ணயிக்கப்படுகிறது? தாழ்த்தப்பட்ட, பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த ஒரு மாணவன் கடினப்பட்டு படித்து, நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவப்
படிப்பு வாய்ப்புக்காகக் காத்திருக்கும்போது, அவன் மீது நீட் தேர்வைத் திணிக்கிறீர்கள்.
இதற்கு நீங்கள் நான் மேலே கூறிய நீட் என்றால் என்ன என்ற விளக்கத்தை படித்தால் போதும்.
6)முதலாளித்துவ தேசமான ஜெர்மனியும் சரி... கம்யூனிச தேசமான கியூபாவும் சரி... கல்வியை வணிகமாகப் பார்க்கவில்லை. இலவசமாக கொடுக்கின்றன.
இது போல முட்டாள்தனமான பேச்சு எல்லாம் இந்த சீமான் தான் பேசுவார் என்று நினைத்திருந்தேன் இப்போ கம்யூனிஸ்ட்கள் பேச ஆரம்பித்துவிட்டனர்.
ஜெர்மனி மக்கள் தொகை 8,28,00,000....  இந்திய மக்கள் தொகை 132,68,01,576 ....
இந்திய மாநிலங்கள் மூலம் உணவுடன் கூடிய இலவச கல்வி கொடுக்கும் மாணவர்கள் எண்ணிக்கை கூட இந்த நாடுகளின் மொத்த மக்களை தொகையை விட அதிகம்.
எனவே உற்பத்தி , ஆராய்ச்சி , விளையாட்டு என்று ஒப்பிடுங்கள். நான் ஏற்றுகொள்வேன். இப்படி விசயங்களில் ஒப்பிடுவது எந்த அறிவார்ந்த மக்களும் செய்ய விரும்ப
மாட்டார்கள்.
அதை விட நம்ம மக்கள் இப்போ தான் படிச்சு வாரானுக... அரசு பள்ளியில் வேலை செய்யும் ஒரு ஆசிரியருக்கு கூட எப்படி முதலீடுகள் சேர்க்க வேண்டும் என்று கூட தெரியாது.
என்ன மிஞ்சி போனா வீடு நிலம் தங்கம் தான் இன்னும் முதலீடாக வாங்கி போடும் அளவுக்கு தான் இந்த மக்கள் அறிவு உள்ளது.
கொஞ்சம் காலம் ஆகும் இவர்கள் நீங்கள் சொல்லும் மேற்கத்திய நாடுகளில் உள்ள மக்கள் போல வர..  எனவே ஒப்பிடுவது தவறு.
ஆக கம்யூனிஸ்ட் இதில் ஏன் குழப்ப பார்கிறார்கள்????
இதை கம்யூனிஸ்ட் மத்தியில் உள்ளவர்கள் பேச மாட்டார்கள். மாநில கம்யூனிஸ்ட் தலைகள் தான் குரல் கொடுக்கும். அதன் பின்புலம் உள்ள அரசியல் விவரம் பின்னர் அளிக்கிறேன்.
 International Coordination of the Communist Parties (ICOR)  பற்றி தனி பதிவே வெளியிடுகிறேன் நேரம் கிடைக்கும் போது அப்போ இந்த கம்யூனிஸ்ட் லட்சனம் தெரியும்.
-------------------
தொடரும்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 05, 2017 9:22 pm

தொடர்ச்சி

இந்த வகையில் நீட் தேர்வுக்கான தீர்வு :
மாநில அரசு CBSE BORD க்கு மாறிவிடுவது தான். எல்லாருக்கும் ஒரே கல்வி. மாநிலத்தில் உள்ள StateBorad குழு அப்படியே கலச்சுருங்க.. சும்மா மக்கள் காசில் அரசு வேலை பார்க்கிறேன்
என்ற பெயரில் திராவிட கட்சிகளுக்கு சலாம் போட்டு வாழும் இந்த அரசு ஊழியர்கள் மாநில பாடத்திட்டத்தில் செய்த சாதனை
"பெரியார் என்று மக்களால் அன்புடன் அழைக்கபட்டார்; அண்ணா என்று மக்களால் அன்புடன் அழைக்கபட்டார்....." இரு திராவிட புராணத்தை பாடத்திட்டத்தில் சேர்த்து மாணவர்களை
படிக்கவைத்தது தான்..  தான் செய்யாத அனைத்து சாதனைகளும் திராவிட கொள்கை மூலமே நடந்ததாக உண்மையை திரித்து மாணவர்களை படிக்கவைத்தது தான் இவர்கள் செய்த
சாதனை எனக்கு தெரிந்து.
போராட்டங்கள்???
போராட்டம் நடத்துங்கள்
"Tamil Nadu State Board மொத்தமாக கலைத்துவிட்டு CBSE Bord உடன் இணைக்க சொல்லி போராடுங்கள்". நீட் தேர்வு வேண்டாம் என்று திமுக இன்று போராட்டம் நடத்த போவதாக
அறிவிப்பது மாணவர்களை நாசம் செய்யும் வேலை தானே தவிர வேறு ஒன்றும் இல்லை.

உண்மையல் என் வேதனை என்னவென்றால் :

     இறந்த உடலை வைத்து இன்று அரசியல் வாதிகள் ஒருபக்கம் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்; சினிமா பிரபலங்கள் தாங்கள் பிரபலமாக இருக்கும் வரை தான்
தங்களுக்கு பணம் சம்பாரிக்க முடியும் என்று புத்திசாலி தனமாக நான் நல்லவன் என்று இந்த இறந்த உடலில் விளம்பரம் தேடுகிறார்கள் ; பிரிவினை வாதிகள் ஆகா
அனிதா கிடைத்துவிட்டாள் எடுத்து மாட்டி இதையே ஒரு பிராண்டாக பயன்படுத்தி குழப்பி பிரிவினை தூண்டுகிறார்கள்.
மாணவர்கள் எதிர்காலம் , கல்வி தரம் பற்றி அக்கரை கொண்டவன் எல்லாம் வேடிக்கை பார்க்கவேண்டி உள்ளது. ஏதாவது சொன்னால் நீட் தேர்வுக்கு ஆதரவாளன் தான்
அனிதா சாக காரணம் என்று சொல்லிவிடுவர் என்று எல்லோரும் பின்வாங்குகிறார்கள்.
சரி எழுத்தாளர்கள் என்ன சொல்கிறார்கள்???
இப்போ எவன் சார் இங்கே எழுத்தாளன்??? கமலாதாஸ் போல நேர்மை யாருக்கு இப்போ இருக்கு??
விகடன் , தி ஹிந்து போன்ற பத்திரிக்கைகளை எதற்கு பகைத்து கொள்வானேன். அவர்கள் காட்டிய அடையாளம் தானே எழுத்தாளன் என்ற பிரபலம். எனவே நாம் எதற்கு
பேசிக்கொண்டு என்று ஒழுங்கி கொள்ளும் கூட்டமாக தானே இருக்கிறார்கள்.
எல்லோரும் CBSE பள்ளி தேடி பிள்ளைகளை சேர்க்க போவது நிச்சயம்.... இந்த கூட்டத்தை நம்பி ஏமாற போவது ஒன்றும் அறியாமல் உணர்சிவச பட்ட ஏழைகள் தான்.
இறுதியாக:
இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேத்தன் தேசாய் 2010ல் கைதானது நியாபகம் இல்லையா அனைவருக்கும்??? எல்லோரும் மறந்து விட்டீர்களா?
அவரிடம் இருந்து 1,800 கோடி ரொக்கமாகவும், 1,500 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது மறந்துவிட்டதா மக்களுக்கு... அது எப்படி ???? எனவே அரசியல்வாதிகள் நடத்தும்
மருத்துவ கல்லூரிகள் வாங்கி குவிக்கும் ஆயிரம் கோடிகள் கொட்டும் பொது எல்லாம் இந்த பிரச்சனை தெரியவில்லையா இந்த போராளிகளுக்கு, திமுகாவுக்கு??
இன்று மோடி மொத்தமாக அனைத்தையும் பொது கவுன்சிலிங் மூலம் தான் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்றதும் அனைத்து மருத்துவ கல்லூரிகளும் அய்யோ அய்யோ
என்று டொனேசன் மூலம் பணம் சம்பாரிக்க மாற்று வழி தேட தமிழகத்தில் இருக்கவே இருக்கு ஒரு டஜன் போராளிகள் ஆரம்பித்து விட்டனர் போராட்டத்தை.
நான் மாரிதாஸ் , நீட் தேர்வுக்கு ஆதரவளிப்பதை நிறுத்த முடியாது. . . .  எனக்கு அப்படி ஒன்றும் நல்லவன் என்ற பட்டம் தேவை இல்லை.
ஒட்டுமொத்த educational system விவரமும் நான் பேச தயார்.. டெல்லி பேராசிரியர் அல்ல மொத்த கம்யூனிஸ்ட் கட்சியும் வந்தாலும் நான் விவாதம் செய்ய தயார். இங்கே கல்வி தரம்
பேசினால் அண்ணா யுனிவெர்சிட்டி தான் முதலில் இழுத்து மூடிவிட்டு செல்லவேண்டி வரும்.
பள்ளிகூடம் நடத்துறேன் பேர்வழி என்று அரசு பள்ளி மாணவர்கள் தரத்தை கெடுத்தனர். இன்ஜினியர் ஆகுறேன் என்று அண்ணா யுனிவெர்சிட்டி மூலம் பல ஆயிரம் பேர் வாழ்வை
கெடுத்தனர். இப்போ என்ன சாதித்துவிட்டனர் என்று மருத்தவ படிப்பையும் கெடுக்க திராவிட அரசியல்வாதிகள் வாய் கூசாமல் போராடலாம் வாருங்கள் என்கிறார்கள்???
வெக்கமே கிடையாதா?
மாணவர்கள் போராளிகளை நம்பாமல் புத்திசாலிகளை நம்புங்க
#பொய்யர்களைதோலுரியுங்கள்

நன்றி கட்செவி
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Sep 06, 2017 6:16 am

மருத்துவ கல்வியில் தேசிய பொது நுழைவுத்தேர்வு முடிவுகள் தமிழக மாணவர்களை பெரும் துயரத்திற்கு தள்ளியுள்ளது. அவசரம் அவசரமாக நீதிமன்ற உத்தரவால் நடத்தப்பட்ட நீட் நுழைவுத்தேர்வு தமிழகத்தில் மருத்துவக்கனவோடு படித்துவரும் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களுக்கான மாணவர் சேர்க்கையையும் மத்திய அரசு நடத்தும் ‘தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்வு’ ( Ntional Eligibility cum Entrance Test- NEET) அடிப்படையில் மட்டுமே அமைத்திட இந்திய மருத்துவக் கழகமும், மற்றும் மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை எடுத்த முயற்சி எடுத்துவந்தது. இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்காக எண்பதுக்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ராணுவ மருத்துவக் கல்லூரிகள், ஜிப்மர், எய்ம்ஸ் உள்ளிட்ட கல்லூரிகளுக்கு தனித்தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் இதுவரை சேர்ந்துவந்தனர்.

இந்நிலையில் கடந்த 2013 ம் ஆண்டு 'நீட்' (NEET - National Eligibility Entrance Test) என்னும் ஒரே நுழைவுத் தேர்வை கொண்டுவருவதாக மத்திய அரசு அறிவித்தது. இது மாநில அரசின் கல்விக்கொள்கையில் தலையிடுவதாகும் எனக் கூறி அதை எதிர்த்து தமிழகம் உள்ளிட்ட பல மாநில அரசுகள், மற்றும் சில தனியார் மருத்துவக் கல்லூரிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இதையடுத்து தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்விற்கு தடைவிதிக்கப்பட்டது.

இந்நிலையில், ‘தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்வை ‘இந்த ஆண்டே நடத்திட கடந்த ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றம் அதிரடியாக ஒரு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இது தமிழக மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்வி இடங்களுக்கு மத்திய அரசு தனது ‘‘தேசிய தகுதி காண் மற்றும் நுழைவுத் தேர்வை’ப் புகுத்துவது மாநில அரசுகளின் உரிமைக்களுக்கு மற்றும் கூட்டாட்சி கோட்பாட்டுக்கு எதிரானது என்று சமூக ஆர்வலர்கள் கொதித்தனர். இது சமூக நீதிக்கு எதிரானது.இட ஒதுக்கீட்டு உரிமைகளுக்கு எதிரானது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எழுந்த எதிர்ப்புக்கு எந்த பலனுமில்லை. உச்சநீதிமன்றம் உத்தரவின்படி முதல்கட்ட நீட் தேர்வை கடந்த மே மாதம் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தியது. நாடு முழுவதிலும் இருந்து சுமார் ஆறு லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர்.

நீட் தேர்வு குறித்த தெளிவற்ற நிலையால் பலரும் இந்த தேர்வை எழுதவில்லை. அகில இந்திய அளவில் 15 சதவீத இடத்திற்கென அறிவிக்கப்பட்டு நடந்த இந்த முதற்கட்டத் தேர்வில் சுயநிதி கல்லுாரிகளில் சேர திட்டமிட்டிருந்தவர்களும் புறக்கணித்தனர். இதனிடையே நுழைவுத் தேர்வு திணிப்பு பற்றி நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, " இந்த விவகாரத்தில் சுமூக தீர்வை எட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்" என உறுதியளித்தார். ஆனால் மத்திய அரசின் அறிவிப்பு காற்றோடு போனது. இதையடுத்து, விடுபட்டவர்களுக்காக ஜூலை 24-ம் தேதி இரண்டாம் கட்டத் தேர்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் மட்டும் சுமார் 13 ஆயிரம் மாணவர்கள் இந்த தேர்வினை எழுதினர். கடந்த 16-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின.

ஆனால் இந்த தேர்வில் தமிழக மாணவர்கள் 90 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை. காரணம் 90 சதவீத கேள்விகள் சி.பி.எஸ்.இ மற்றும் மத்திய அரசு பாட திட்டத்திலிருந்து கேட்கப்பட்டிருந்ததே. கல்வியாளர்கள் அச்சப்பட்டது போன்றே தமிழக மாணவர்களில் கணிசமான பேரின் மருத்துவக்கனவை 'நீட்' தகர்த்திருக்கிறது. பிளஸ்- டு வில் 1150 ஐ தாண்டி மதிப்பெண் பெற்றவர்களும் நீட் தேர்வில் தகுதி இழந்து ஒரு வருடத்தை வீணாக்கிக்கொண்டு வீட்டில் முடங்கிக்கிடக்கின்றனர். மகனின் மருத்துவக்கனவு தகர்ந்துபோனதில் பெற்றோர்களும் முடிவு தெரிந்தநாளிலிருந்து கண்ணீர் விட்டபடி இருக்கின்றனர்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த சுரேஸ் என்ற மாணவர் 1117 எடுத்திருந்தும் நீட் அவருக்கு சாதகமாக இல்லை. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் கதவை தட்டியிருக்கிறார் அவரது தந்தை.

“என் மகன் பத்தாம் வகுப்பு மாநில பாடத்திட்டத்தில் படித்து 484 மதிப்பெண் பெற்றான். கணிதம் மற்றும் அறிவியலில் சென்டம் எடுத்தான். அதே வேகத்தோடு மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு படித்து பிளஸ் டு விலும் 1117 மதிப்பெண் எடுத்தான். எப்படியும் மகனை மருத்துவராக்கிவிடலாம் என உறுதியாக இருந்தேன்.

தேர்வு எழுதிய சமயம் நீட் தேர்வு நடைமுறையில் இல்லாததால் எந்த பயிற்சி வகுப்புகளுக்கும் அவன் செல்லவில்லை. ஆனால் தேர்விற்குப்பின் நீட் தேர்வு கட்டாயமான சூழலில் அவசரம் அவசரமாக படித்து தயாரானான். ஆனாலும் தேர்வில் பெரும்பாலும் மத்திய பாடத்திட்டத்திலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. மாநில மொழி பாடத்திட்டத்தில் இருந்து வெகு குறைவாகவே கேள்விகள் கேட்கப்பட்டதால் அவன் தகுதி பெறவில்லை. மருத்துவம் கிடைத்துவிடும் என்ற அதீத நம்பிக்கையில் வேறு படிப்புகள் எதற்கும் விண்ணப்பிக்கவில்லை அவன். திட்டமிடாத அதேசமயம் அரசின் அரசின் குழப்பமான கல்விக்கொள்கையால் இப்போது என் மகன் வீட்டில் அடைந்துகிடக்கிறான்.

நாடு முழுவதும் பொதுவான பாடத்திட்டமோ, நிரந்தரமான கல்விக்கொள்கையோ நடைமுறையில் இல்லாத நிலையில் நுழைவுத்தேர்வை மட்டும் அரசு பொதுவான முறையில் நடத்துவது எந்தவிதத்தில் நியாயம்?... என் மகனைப்போன்று ஸ்டேட் போர்டில் படித்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். நீட் தொடர்பான மசோதாவை தாக்கல் செய்த சமயம் எழுந்த சர்ச்சைகளுக்கு ஒரு தீர்வாக நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி நட்டா, மாநில அரசு விரும்பினால் ஸ்டேட் போர்டில் படிக்கும் மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கலாம் என கூறியிருந்தார்.

அமைச்சரின் அறிவுரையை இந்த நேரத்தில் தமிழக அரசு செயல்படுத்தினால் என் மகனைப்போன்ற எத்தனையோ மாணவர்கள் தமிழகத்தில் மருத்துவராகும் வாய்ப்பு கிடைக்கலாம். இதுதொடர்பாகவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன்” என்றார் இளங்கோவன் விரக்தியான குரலில்.

மத்திய அரசின் நீட் தேர்வு முறைக்கு ஆரம்ப காலங்களில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கம். இதன் பொதுச் செயலாளர் டாக்டர். ரவீந்திரநாத்திடம் பேசினோம்.

“நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களில் 3 ல் ஒரு பங்கினர்தான் இந்த வருடம் தேர்வாகியுள்ளனர். கல்வித்தரம்,பாடத்திட்டம், கற்பிக்கும் முறை இவற்றில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசங்கள் உள்ளன. இன்றும் மாநில பாடத்திட்டம் என்பது மனப்பாட முறைதான். மத்திய பாடத்திட்டம் தொழில்நுட்ப ரீதியாக செயல்படுத்தும் முறை. இதனடிப்படையில் பார்த்தால் தேசிய அளவில் பொது தகுதித் தேர்வு என்பது மாற்றுத்திறனாளிக்கும் இயல்பான மனிதனுக்கும் ஒரே விதபோட்டி என்பதுபோலத்தான்.

இன்றும் தமிழக பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை. ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. அப்டேட்டடு ஆசிரியர்கள் இல்லை. இவைகளை களையாமல் தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுக்கு மாணவர்களை எப்படி தயார்படுத்தமுடியும். இவற்றை களைந்து மத்திய அரசுக்கு இணையான தகுதிகளோடு மாநில மொழி பாடத்திட்டத்தை உயர்த்தியபின்தான் நீட் தேர்வை நடைமுறைப்படுத்தியிருக்கவேண்டும்.

மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்வி இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைமுறையை மாநில அரசுகளே அமைத்துக்கொள்ள வேண்டும். இதில் மத்திய அரசும் ,இந்திய மருத்துவக் கவுன்சிலும், உச்ச நீதிமன்றமும் தலையிடக்கூடாது.

தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லுாரிகளில் 85 சதவீத இடங்கள் அரசுக்குரியவை. மீதமுள்ளவை அகில இந்திய கோட்டாவில் நிரப்பப்படுகிறது. தனியார் மருத்துவக்கல்லுாரிகளில் 65 சதவீத இடங்கள் அரசுக்கானவை. மீதமுள்ள 35 சதவீத இடங்களை அவர்கள் நிரப்பிக்கொள்கிறார்கள். மாநில அரசின் இந்த உரிமையை மத்திய அரசு தட்டிப்பறிக்க நினைக்கிறது. நுழைவுத்தேர்வை ஒரு தகுதித் தேர்வாக மாற்றிவிடக்கூடாது. நுழைவுத் தேர்வை ஒரு போட்டித் தேர்வாக (Entrance Test) மட்டுமே நடத்த வேண்டும்.

மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கு மாநில அரசுகள் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கும், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும், தனியார் நிகர் நிலைப் பல்கலைக்கழக இடங்களுக்கும், மத்திய அரசு ஒரே நுழைவுத்தேர்வை நடத்தி ,ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கையை நடத்திடும் வகையில் மத்திய அரசின் உரிமையில் மாநில அரசு தலையிடமுடியாதவகையில் சட்டமியற்றப்படவேண்டும். இல்லையென்றால் எதிர்காலத்தில் தமிழக மாணவர்கள் குறிப்பாக ஏழை மாணவர்களுக்கு மருத்துவம் என்பது எட்டாக்கனியாக போய்விடும்” என எச்சரிக்கை மணி அடித்தார்.

இளங்கோவனின் வழக்கறிஞர் பாலுவிடம் பேசினோம். “ நீட் தேர்வினை நடத்தியதே சட்டப்படிதவறு. ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் தேசிய தகுதி காண் நுழைவுத்தேர்வு தேவையா வேண்டாமா என்ற வழக்கின் மறு ஆய்வு மனு நிலுவையில் உள்ள நிலையில் இடைக்கால உத்தரவின் மூலம் நீட் தேர்வை அமல்படுத்தியிருக்கக் கூடாது. இது இயற்கை நீதிக்கு முரணானது. நீட் தேர்வு 90 சதவீத கேள்விகள் மத்திய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. மாநில பாடத்திட்டத்திலிருந்து மிக சொற்பமாகவே கேட்கப்படுகிறது. கேள்வித்தாளும் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.

இதனால் மாநில கல்வி பாடத்தில் படிக்கிற, கிராமப்புற, ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாவார்கள். மேலும் நீட் தேர்வுக்கு நமது மாணவர்கள் ஓரிரு மாதங்களில் தயாராகவேண்டியிருக்கிறது. ஆனால் சிபிஎஸ்இ படிப்பவர்கள் இரு ஆண்டுகள் அதில் பயிற்சி பெறுகிறார்கள். இதுவே அடிப்படை முரண். 2 மாதங்கள் படித்தவன் இரண்டு வருடம் படித்தவனுடன் போட்டியிடமுடியுமா...

நாடு முழுக்க பொதுவான பாடதிட்டத்தை நடைமுறைப்படுத்திவிட்டு பின்னர்தான் மத்திய அரசு இந்த நடவடிக்கையில் இறங்கியிருக்கவேண்டும். வழக்கு தாக்கல் செய்ய இருக்கிறோம். வழக்கில் ஒரு நல்ல முடிவு கிடைக்கப்பெறலாம் என்று நம்புகிறேன்” என்றார்.

வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று 50 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசுக்கு எதிராக எழுப்பிய அண்ணாவின் குரல் இன்றும் பொருந்திப்போவது ஆச்சர்யம்தான்!

தமிழக மாணவர்களின் எதிர்காலம் குறித்து என்ன முடிவெடுக்கப்போகிறார் முதல்வர் ஜெயலலிதா?!

- எஸ்.கிருபாகரன்

நன்றி : விகடன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Sep 06, 2017 9:32 am

நீட் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நிறுத்தியது வேலூர் சி.எம்.சி.
========================================================================================

நீட் அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கையை வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரி நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது. வேலூர் சி.எம்.சி. மருத்துவகல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கு மறைந்த ராணுவ வீரர் ஒருவரின் மகன் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் உயர் மருத்துவ படிப்பிலும் ஒருவர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளார். எஞ்சிய இடங்கள் நிரப்பப்படவில்லை. வேலூர் மருத்துவ கல்லூரி நிர்வாகத்தைப் பொறுத்தவரையில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கு 100 இடங்கள் உள்ளன. இதில் 85 இடங்கள் சிறுபான்மையினருக்கானது. எஞ்சிய 15 இடங்கள் பொதுப்பிரிவினருக்கானது. சிறுபான்மையினர் கோட்டாவில் சேர்க்கப்படும் மாணவர்கள், தங்களது படிப்பு முடிந்த பின்னர் சி.எம்.சி. நிர்வாகத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் 2 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும். 90% மாணவர்கள் இந்த சேவையை செய்து வருகின்றனர். ஆனால் தற்போதைய நீட் தேர்வின் அடிப்படையில் இத்தகைய மாணவர்களை தேர்வு செய்ய முடியாது. நீட் தேர்வின் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை என்பது தங்களது நிர்வாக முறைக்கு எதிரானது என்பதால் எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைப்பதாக வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. எம்.பி.பி.எஸ் படிப்புக்கான 100 இடங்கள், 60 உயர் சிறப்பு மருத்துவ இடங்களுக்கான சேர்க்கையை வேலூர் சி.எம்.சி. நிர்வாகம் நிறுத்தி வைத்திருக்கிறது.

நன்றி : One India




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக