புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவிளையாடல்-நல்ல கற்பனை வளம், படிக்க, படிச்க நகைச்சுவை... Poll_c10திருவிளையாடல்-நல்ல கற்பனை வளம், படிக்க, படிச்க நகைச்சுவை... Poll_m10திருவிளையாடல்-நல்ல கற்பனை வளம், படிக்க, படிச்க நகைச்சுவை... Poll_c10 
5 Posts - 63%
heezulia
திருவிளையாடல்-நல்ல கற்பனை வளம், படிக்க, படிச்க நகைச்சுவை... Poll_c10திருவிளையாடல்-நல்ல கற்பனை வளம், படிக்க, படிச்க நகைச்சுவை... Poll_m10திருவிளையாடல்-நல்ல கற்பனை வளம், படிக்க, படிச்க நகைச்சுவை... Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
திருவிளையாடல்-நல்ல கற்பனை வளம், படிக்க, படிச்க நகைச்சுவை... Poll_c10திருவிளையாடல்-நல்ல கற்பனை வளம், படிக்க, படிச்க நகைச்சுவை... Poll_m10திருவிளையாடல்-நல்ல கற்பனை வளம், படிக்க, படிச்க நகைச்சுவை... Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவிளையாடல்-நல்ல கற்பனை வளம், படிக்க, படிச்க நகைச்சுவை... Poll_c10திருவிளையாடல்-நல்ல கற்பனை வளம், படிக்க, படிச்க நகைச்சுவை... Poll_m10திருவிளையாடல்-நல்ல கற்பனை வளம், படிக்க, படிச்க நகைச்சுவை... Poll_c10 
289 Posts - 45%
heezulia
திருவிளையாடல்-நல்ல கற்பனை வளம், படிக்க, படிச்க நகைச்சுவை... Poll_c10திருவிளையாடல்-நல்ல கற்பனை வளம், படிக்க, படிச்க நகைச்சுவை... Poll_m10திருவிளையாடல்-நல்ல கற்பனை வளம், படிக்க, படிச்க நகைச்சுவை... Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
திருவிளையாடல்-நல்ல கற்பனை வளம், படிக்க, படிச்க நகைச்சுவை... Poll_c10திருவிளையாடல்-நல்ல கற்பனை வளம், படிக்க, படிச்க நகைச்சுவை... Poll_m10திருவிளையாடல்-நல்ல கற்பனை வளம், படிக்க, படிச்க நகைச்சுவை... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருவிளையாடல்-நல்ல கற்பனை வளம், படிக்க, படிச்க நகைச்சுவை... Poll_c10திருவிளையாடல்-நல்ல கற்பனை வளம், படிக்க, படிச்க நகைச்சுவை... Poll_m10திருவிளையாடல்-நல்ல கற்பனை வளம், படிக்க, படிச்க நகைச்சுவை... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருவிளையாடல்-நல்ல கற்பனை வளம், படிக்க, படிச்க நகைச்சுவை... Poll_c10திருவிளையாடல்-நல்ல கற்பனை வளம், படிக்க, படிச்க நகைச்சுவை... Poll_m10திருவிளையாடல்-நல்ல கற்பனை வளம், படிக்க, படிச்க நகைச்சுவை... Poll_c10 
20 Posts - 3%
prajai
திருவிளையாடல்-நல்ல கற்பனை வளம், படிக்க, படிச்க நகைச்சுவை... Poll_c10திருவிளையாடல்-நல்ல கற்பனை வளம், படிக்க, படிச்க நகைச்சுவை... Poll_m10திருவிளையாடல்-நல்ல கற்பனை வளம், படிக்க, படிச்க நகைச்சுவை... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திருவிளையாடல்-நல்ல கற்பனை வளம், படிக்க, படிச்க நகைச்சுவை... Poll_c10திருவிளையாடல்-நல்ல கற்பனை வளம், படிக்க, படிச்க நகைச்சுவை... Poll_m10திருவிளையாடல்-நல்ல கற்பனை வளம், படிக்க, படிச்க நகைச்சுவை... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
திருவிளையாடல்-நல்ல கற்பனை வளம், படிக்க, படிச்க நகைச்சுவை... Poll_c10திருவிளையாடல்-நல்ல கற்பனை வளம், படிக்க, படிச்க நகைச்சுவை... Poll_m10திருவிளையாடல்-நல்ல கற்பனை வளம், படிக்க, படிச்க நகைச்சுவை... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திருவிளையாடல்-நல்ல கற்பனை வளம், படிக்க, படிச்க நகைச்சுவை... Poll_c10திருவிளையாடல்-நல்ல கற்பனை வளம், படிக்க, படிச்க நகைச்சுவை... Poll_m10திருவிளையாடல்-நல்ல கற்பனை வளம், படிக்க, படிச்க நகைச்சுவை... Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருவிளையாடல்-நல்ல கற்பனை வளம், படிக்க, படிச்க நகைச்சுவை... Poll_c10திருவிளையாடல்-நல்ல கற்பனை வளம், படிக்க, படிச்க நகைச்சுவை... Poll_m10திருவிளையாடல்-நல்ல கற்பனை வளம், படிக்க, படிச்க நகைச்சுவை... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவிளையாடல்-நல்ல கற்பனை வளம், படிக்க, படிச்க நகைச்சுவை...


   
   
kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Postkavinele Mon Nov 30, 2009 8:23 am

வங்கியின் சென்னைக் கிளை. நோடீஸ் போர்டில் போட்டிருக்கும் சர்குலரை ஒருவர்
சத்தமாகப் படிக்கிறார். "நம் வங்கி அலுவலர்க்கோர் நற்செய்தி. நம்
சேர்மனுக்கு வெகுநாட்களாக ஒரு சந்தேகம் நிலவி வருகிறது. அதை நல்ல ஆபீஸ்
நோட் வாயிலாகத் தீர்த்து வைப்பவருக்கு ஆயிரம் டாலர் பரிசாக
அளிக்கப்படும்."

தருமி அங்கு வருகிறான். "ஏம்பா. பரிசுத் தொகை எவ்வளவு?"

"ஆயிரம் டாலர்."

தருமி
தனிமையில் புலம்புகிறான். "ஐய்யோ ஆயிரம் டாலராச்சே. ஆயிரம் டாலராச்சே.
எனக்கு மட்டும் அந்தப் பரிசு கிடைச்சிட்டா முதல்ல பையன் இஞ்சினீரிங்
காலேஜ் ·பீஸ் கட்டிடுவேன். அப்பறம் மிச்சம் இருக்கிற பணத்தில... கிரெடிட்
கார்டு ட்யூஸ் கட்டிடலாம். ஐய்யோ... அடுத்தவன் எவனாது இதை கேட்டு நோட்டு
போடறதுக்கு முன்னாடி நான் போடனுமே... இந்த சமயம் பார்த்து நோட்டு போட ஒரு
ஐடியாவும் வரமாட்டேங்கிறதே. என்ன செய்வேன்? யாரை போய்க் கேப்பேன்?"

சொக்கன் ஞாபகம் வருகிறது. "சொக்கா.. உன்னை விட்டா வேறு யாரு இருக்கா, ப்ளீஸ் ஹெல்ப் மீ." சொக்கன் வருகிறார். "வங்கி அதிகாரியே"

"யாருய்யா நீ?"

"நான் யார் என்பது இருக்கட்டும். உமக்கு மட்டும் அந்த நோட் கிடைத்துவிட்டால்..."

"ஆஹா
அது மட்டும் கிடைச்சிடுச்சுன்னா என்னோட முக்கியமான பிரச்சனை ஒன்னு
தீர்ந்துடும். அட நீயும் அறிவிப்பைக் கேட்டாச்சா. போச்சு. எல்லாம் போயே
போச்சு. போயிந்தே. ஹோ கயா. இட்ஸ் கான்."

"எனக்கு வேண்டாம். நீயே எடுத்துக் கொள்."

"என்னது.
உன் நோட்டை நான்.. நான்.. எடுத்துக்கறதா. இங்கப் பாரு நான் பார்க்கறதுக்கு
சாதாரணமாக இருக்கலாம். அஞ்சு வருஷத்துல ரெண்டு பிரமோஷன் வாங்கிருக்கேன்."

"எங்கே.
என் திறமையின் மீது உமக்கு சந்தேகம் இருந்தால் சோதித்துப் பாரேன்,
உனக்குத் திறமையிருந்தால். கேள்விகளை நீ கேட்கிறாயா? இல்லை, நான்
கேட்கட்டுமா?"

"ம்ஹ¤ம். எனக்குக் கேள்வி கேட்டுத்தான் பழக்கம். தட்ஸ் ஆல்."

"எங்கே கேள்விகளைத் தொடங்கு"

பிரிக்க முடியாதது என்னவோ? நாமும் நம் கோரிக்கைகளும்

பிரிந்தே இருப்பது? யூனியனும் மேனேஜ்மென்டும்

சேரக்கூடாதது? பிரமோஷனும் டிரான்ஸ்ஃபரும்

சேர்ந்தே இருப்பது? ஏடிஎம்மும் டெபிட்கார்டும்

சொல்லக்கூடாதது? டேக் ஹோம் பே

சொல்லக்கூடியது? டெல்லர் டோக்கன் நம்பர்

பார்க்க முடியாதது? சர்வீஸ் ·பைல்

பார்த்து ரசிப்பது? சம்பள பில்

சம்பளம் என்பது? மாதம் ஒரு முறை வருவது

டூர் என்பது? அடிக்கடி வருவது

அதிரடி சர்வீசுக்கு? சானியா மிர்சா

அபார சிக்ஸ¤க்கு? மஹேந்திர டோனி

சூப்பர் ஜோடிக்கு? சூர்யா - ஜோதிகா

சண்டை பார்ட்டிக்கு? அதிமுக.வும் - தி.மு.க.வும்

லோக்கல் டூருக்கு ? நீ

பாரின் டூருக்கு? நான்

"அப்பா
ஆள விடு. எனக்கு தெரிஞ்சது இவ்வளவுதான். நீர் தான் சகலகலாவல்லவர். நீங்கள்
எழுதிய நோட்டைக் கொடுங்கள். அதை அப்படியே பார்வார்டு செய்கிறேன். "

கொஞ்ச
தூரம் சென்றுவிட்டுத் திரும்பி வந்து. "அது சரி.. பரிசு கொடுத்தால்
வாங்கிக்கறேன். மெமோ, சஸ்பென்டு மாதிரி வேறு எதாவது கொடுத்தால்... "

"என்னிடம் வா. நான் பார்த்துக் கொள்கிறேன். "

"என்ன. சஸ்பென்ஷன் ஆர்டரை படிச்சுக் காட்டவா?"

சொக்கன் சிரிக்கிறான். "கவலைப்படாதே சகோதரா. யூ வில் கெட் த ரிவார்ட்டு. வெற்றி நிச்சயம்."

"என்ன சிரிப்பைய்யா. உன் சிரிப்பு. சூர்யா மாதிரி சிரிப்பு."

சேர்மன்
செயலகத்தில் உள்ள கான்·பரன்ஸ் ஹாலில் தருமி. சேர்மன் கையில் தருமி எழுதிய
நோட் இருக்கிறது. "மிஸ்டர் தர்மராஜன் அலியாஸ் தருமி அவர்களே. நீங்கள்தானே
இந்த நோட்டை பார்வார்டு செய்தது?"

"ஆமாம். உங்கள் ஐயப்பாட்டை நீக்கும் அந்த அற்புத நோட்டை நானேதான் எழுதினேன். "

"எங்கே நீரே படித்துக் காட்டும்."

தருமி
படிக்கப் படிக்க சேர்மன் முகம் பிரகாசம் அடைகிறது. "ஆஹா. அம்சமான ஆபீஸ்
நோட்டு. ஆழமான கருத்துக்கள். என் டவுட்டை க்ளியர் செய்துவிட்ட சூப்பர்
நோட்டு."
தன் செகரெட்ரியை அழைத்து பரிசைக் கொண்டுவரச் சொல்லுகிறார்.
அப்போது ஜி.எம். என்.கீரன் எழுந்திருக்கிறார். "சேர்மன் அவர்களே. ப்ளீஸ்
வெயிட். அந்த நோட்டில் பிழை உள்ளது."

"யூ மீன் மிஸ்டேக்." சேர்மன் திடுக்கிடுகிறார். ஆனால் தருமியோ....

"பிழை
இருந்தாலென்ன? எவ்வளவு பிழையோ அவ்வளவு பரிசுத் தொகையை குறைத்துக்
கொடுங்களேன்." ஆனால் அதற்கு என்.கீரன் "மிஸ்டர் தர்மராஜன். நீர்தானே இந்த
நோட்டை எழுதியது? " "எஸ். நானேதான் எழுதினேன். பின்னே ஆபீஸ் கான்டீன்ல
யாராவது எழுதிக் கொடுத்ததைக் கொண்டு வந்து கொடுப்பேனா? நானே... நானேதான்
எழுதினேன்."
"அப்படியானால் அந்த நோட்டில் எழுதியுள்ளதை விளக்கி
விட்டுப் பரிசை பெற்றுச் செல்லுங்களேன்." "சேர்மனுக்கே விளங்கி விட்டது.
நீங்க யாரு குறுக்கே?"

"நான் இந்த டுபாகூர் வங்கியின் தணிக்கைப்
பிரிவின் தலைவர். என்.கீரன், ஜெனரல் மேனேஜர். எமது சேர்மன் மிக சரியான
ஆபீஸ் நோட்டுக்கு பரிசளிக்கிறார் என்றால் அதைப் பார்த்து சந்தோஷப்படும்
முதல் ஆள் நான்தான். அதே நேரத்தில் பிழையுள்ள நோட்டுக்கு பரிசளிக்கிறார்
என்றால் அதற்கு வருத்தப்படுபவனும் நான்தான்"

"ஒஹோ. இங்க எல்லாமே
நீங்கதானா. ஒரு சில பேர் ஏகப்பட்ட பைல்களை பார்த்து அதையெல்லாம் ரெ·பர்
செஞ்சு நோட்டு போட்டு பேர் வாங்குவாங்க. ஒரு சில பேர் போட்ட நோட்டுல
எங்கடா குற்றம் இருக்குன்ணு தேடிக் கண்டு பிடிச்சு பேர் வாங்கிட்டுப்
போவாங்க. இதுல நீங்க எந்த வகையை சார்ந்தவர் என்று உங்களுக்கே புரியும்.
ஒண்ணு மட்டும் நிச்சயமைய்யா. உங்கள மாதிரி ரெண்டு பேர்.. இல்லை நீங்க
ஒருத்தரே போதும். இந்த பேங்க் உருப்பட்டாப்பலத்தான். சேர்மனிடம்
சொல்லிவிடுங்கள். எனக்குப் பரிசு வேண்டாம். நான் வருகிறேன்."

தருமி
வேகமாகப் போக என்.கீரன் அழைக்கிறார். " தருமி அவர்களே." அழைப்பை
நிராகரித்து தருமி இன்னும் வேகமாக ஓட கான்·பரன்ஸ் ஹாலில் சிரிப்பலை.
சேர்மன்
மிகுந்த சோகத்துடன் அமர்கிறார். "நல்லவேளை. என்னைக் காப்பாற்றினீர்கள்.
ஜி.எம். அவர்களே. இல்லையென்றால் என் மீது விஜிலென்ஸ் என்கொயரி
வந்திருக்கும். தாங்க்ஸ்."

அங்கே தருமி புலம்பிக்
கொண்டிருக்கிறான். "எனக்கு வேணும். இன்னமும் வேணும். ஐயையோ யாரோ இன்னமும்
தொரத்தர மாதிரியே இருக்கே. இனிமே நான் எந்த நோட் போட்டாலும் ஏம்பா இது உன்
நோட்டா இல்லே ஆபீஸ் கான்டீனுக்கு வந்த யாராவது எழுதிக் கொடுத்ததான்னு
கேப்பாங்களே. இதுக்குத்தான்... இதுக்குத்தான் கண்டவனை நம்பி காரியத்துல
எறங்கப்படாதுங்கறது. மாட்டிக்கிட்டல்ல. நல்லா அவஸ்தைப் படு. ஏன்டா...
ஏன்டா... ஏன்? ஐயோ இப்படித் தனியா பொலம்பற அளவுக்குக் கொண்டுவிட்டானே.
சொக்கா. அவனை எதுக்குக் கூப்பிடனும். அவனை நம்பாதே. அவன் வரமாட்டான். அவன்
இல்லை." சொக்கன் வருகிறார். "தருமி. பரிசு கிடைத்ததா?"

"வாய்யா.
எல்லாம் கிடைச்சுது. நல்லவேளை டிஸ்மிஸ் செய்யல. நான் உனக்கு என்னையா
துரோகம் செஞ்சேன்?" "வங்கி அதிகாரியே கான்·பரன்ஸ் ஹாலில் என்ன நடந்தது?"
"ம்... இதெல்லாம் நல்லா ஏத்த எறக்காமா பேசு. நோட் போடும் போது கோட்டை விட்டுடு."

"என்ன நடந்தது?"

"உன் நோட்டில் குற்றம் என்று சொல்லிட்டாங்கையா."

"என் நோட்டில் குற்றமா. சொன்னவன் எவன்?"

"உன் பாட்டன். அங்க ஒருத்தன் இருக்கான். எல்லா சர்குலரும் அவருக்கு அத்துபுடியாம்."
கான்·பரன்ஸ்
ஹாலுக்குள் தருமியும் சொக்கனும் வேகமாய் வருகிறார்கள். சொக்கன் நெருப்பாய்
கக்குகிறார். "இச்சபையில் என் நோட்டைக் குற்றம் சொன்னவன் எவன்?"
சேர்மன்
எழுந்து நின்று, "என்.கீரன். அவன் இவன் என்ற ஏகவசனம் வேண்டாம். ஹவ் சம்
டீசன்ஸ்சி. மரியாதையோடு கேள்வி கேட்டால் தக்க பதில் கிடைக்கும்."

"யார் இந்தக் கிழவன்?"

"பேங்க் ஆ·ப் டுபாகூரின் தலைமை தணிக்கையாளர். என்.கீரன். ஜி.எம். மிகுந்த அனுபவம் உள்ளவர்."

"அதிகம் அனுபவம் இருந்துவிட்டால் அனைத்தும் அறிவோம் என்ற அகம்பாவமோ?"
கீரன் எழுந்து, "முதலில் நீங்கள் எழுதிய நோட்டை இன்னொருவர் மூலமாக அனுப்பியதின் காரணம்?"

"அது நடந்து முடிந்த கதை. தொடங்கிய பிரச்சனைக்கு வாரும். எங்கு குற்றம் கண்டீர்? ஸ்பெல்லிங்கிலா? அல்லது ஃபார்மெட்டிலா?"

"ஸ்பெல்லிங்
மிஸ்டேக் இருந்தாலும் அவை மன்னிக்கப்படலாம். காரணம் எங்களிடம் எம்.எஸ்.
வேர்ட் இருக்கிறது. ஸ்பெல் செக் போட்டுக் கொள்வோம். ஆனால் பொருளில்தான்
குற்றம் இருக்கிறது."

"கூறும். கூறிப் பாரும்."

"எங்கே நீங்கள் எழுதிய நோட்டை சொல்லும்."

நோட்டைப் படிக்கிறார்.

"போதும். போர் அடிக்கிறது. சுருக்கமாகச் சொல்லும். இதனால் தாங்கள் சொல்லவரும் கருத்து..."

"புரியவில்லை?
இந்தியாவில் உள்ள மற்ற வங்கிகளில் என்ன Work Culture இருக்கிறதோ அதேதான்
நம் வங்கிக் கிளைகளிலும் உள்ளது என்பதுதான் என் வாதம்."

"ஒருக்காலும்
கிடையாது. இதோ. எங்கள் வங்கி சர்குலர்களின் தொகுப்பு சி.டி இருக்கிறது.
இதில் எங்குமே நீங்கள் சொன்ன கல்சர் குறிப்பிடப்படவில்லை. சர்குலர்களில்
சொல்லப்படாத எந்த விஷயத்தையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம்."

"நிச்சயமாக?"

"சத்தியமாக."

"நீ தினம் தினம் பார்க்கும் இன்ஸ்பெக்ஷன் மான்யுவல் மீது ஆணையாக.."

"அதென்ன.
ஜுஜுபி மேட்டர். நம் எல்லோரும் மறை பொருளாக மதிக்கும் பேங்கிங் ரெகுலேஷன்
ஆக்ட் மீது ஆணையாகச் சொல்கிறேன். அக்ரிகல்சர். ஹார்ட்டிகல்சர்.. இது
மாதிரி சில கல்சர்கள் இருக்கிறதே தவிர நீர் சொன்ன கல்சர் ஒருக்காலும்
இங்கு இருக்க முடியாது என்பதே என் கருத்து."

"மிஸ்டர் என்.கீரன். நன்றாக என்னைப் பாரும். நான் யார் தெரிகிறதா?"
சொக்கன்
மெதுவாக எம்.ஜி.ஆர். ஸ்டைலில் மீசையைப் பிய்க்கிறார். என்.கீரன்
திடுக்கிடுகிறார். "ஆ. நீங்களே ரிசர்வ் வங்கியின் கவர்னர் ஆகுக. உங்கள்
அதிகாரத்தினால் எனது வேலை போனாலும், பென்ஷன் கொடுக்காமல் போனாலும் குற்றம்
குற்றமே. குற்றம் குற்றமே."

"கீரா. தும் ஹோ கயா."

கீரன் கைகளை உயரே தூக்கி, கண்கள் மூடி....

"நான் வாங்கும் சம்பளம் நாலு நாளைக்குத்தான் போதும் நாய் பாடு படுவேனே தவிர உம்மைப் போல் கான்டினில் நோட் டிரா·ட் எழுத மாட்டேன்."
சொக்கன் என்.கீரனை எரித்துவிடுகிறார்.

சேர்மன்
கூவம் நதிக்கரையோரம் ஓடிவருகிறார். "கவர்னர் அவர்களே. என்ன
செய்துவிட்டீர்கள்? நீங்கள் போட்ட நோட் என்பது என் புத்திக்கு எட்டாமல்
போனது தவறுதான். அவரை மன்னித்துவிடுங்கள்."

அப்போது சொக்கன்
குரல் கேட்கிறது. "சேர்மன் அவர்களே. கவலை வேண்டாம். உங்கள் வங்கியில் ஒரு
உயர்மட்ட சர்ப்ரைஸ் டெஸ்ட் செய்யவே யாம் நடத்திய நாடகம் இது. மிஸ்டர்
என்.கீரரை கூவத்தில் போட்டால், என்னால் கூட காப்பாற்ற முடியாத அளவுக்கு
நாறிப் போய்விடுவார் என்பதால் அவரை கரையிலேயே விட்டிருக்கிறேன். இன்றைக்கு
சனிக்கிழமை. ஆபீஸ் டைம் முடிந்துவிட்டது. நாளை ஹாலிடே. என்னால் ஒன்றும்
செய்ய முடியாது. திங்கட்கிழமை வழக்கம் போல் என்.கீரன் ஆபீஸ் வருவார்.
அவருக்கு ஒன்றனரை நாள் டூர் பேட்டா கொடுத்துவிடும். நான் வரட்டா."
submit_url = '';

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக