புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
Page 11 of 40 •
Page 11 of 40 • 1 ... 7 ... 10, 11, 12 ... 25 ... 40
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே!

மேற்கோள் செய்த பதிவு: 1208345krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?
சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.
அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.
தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.
தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.
முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.
தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.
சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.
இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.
ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.
மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.
ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நேரத்தை பயனுள்ளதாக்கலாமே!
சமீபத்தில், என் தோழி வீட்டிற்கு சென்றிருந்தேன். அது மதிய நேரம் என்பதால், அவள், 'டிவி' பார்த்துக் கொண்டிருப்பாள் என நினைத்தேன். ஆனால், அவள், பழைய நாளிதழ்களை வெட்டி, பேப்பர், 'கவர்' செய்தபடி இருந்தாள். நான் வியப்புடன் பார்ப்பதை பார்த்து, 'பொழுது போக்க, 'டிவி'யே கதியென்று கிடக்காமல், உருப்படியா ஏதாவது செய்யலாம் என நினைத்து, பேப்பர், 'கவர்' செய்து, அருகில் உள்ள கடைகளுக்கு விற்று வருகிறேன். நாளிதழ்களை எடைக்கு போட்டால் கிடைக்கும் பணத்தை விட, இதில், அதிகப் பணம் கிடைக்கிறது. அதோட, பிளாஸ்டிக், 'கவர்' புழக்கத்தில் வராமல் இருக்க, என்னால் முடிந்த சிறு உதவி...' என்றாள்.
வீட்டிலேயே சிறு தொழில் செய்ய முற்படும் என் தோழியைப் போன்று, பொழுது போகவில்லை என புலம்பும் மற்ற பெண்களும் உருப்படியாக ஏதாவது செய்ய, முன் வரலாமே!
என்.உஷாதேவி, மதுரை.

வழக்கத்துக்கு மாறாக...
புறநகர் விரிவாக்கப் பகுதியில், புதிதாக வீடு கட்டி, குடியேறியுள்ளோம். அருகில் நான்கைந்து வீடுகள் மட்டுமே உள்ள நிலையில், அவசர உதவிக்காக, மொபைல் போன் எண்களை, ஒருவருக்கொருவர் பரிமாறியுள்ளோம்.
ஒருநாள் நள்ளிரவு, எனக்கு மொபைல் போன் அழைப்பு வந்தது. வெளியூர் சென்றுள்ள என் கணவர் தான் கூப்பிடுகிறார் என நினைத்து, மொபைலை எடுத்துப் பார்த்தால், பக்கத்து வீட்டு பெண்ணின் அழைப்பு. 'என்னம்மா... இந்த நேரத்தில, வீட்டுல யாருக்கும் உடம்பு சரியில்லையா...' என்று கேட்டேன்.
அதற்கு அவள், 'அதெல்லாம் ஒண்ணுமில்ல... நான் சொல்றத கவனமா கேளுங்க; பாத்ரூம் போகும் போது, எதேச்சையாக பாத்ரூம், 'சிலைடு' ஜன்னல் வழியா பார்த்தேன். உங்க வீட்டு பின்புறம், யாரோ ஒரு ஆள் நுழைந்து, கொல்லை புற குழாயை திறந்து விட்டான். தண்ணீர் விழுகுற சத்தம் கேட்குதா...' என்று கேட்டாள். 'ஆமா கேட்குது...' என்றேன், பதற்றத்துடன்!
'சரி டென்ஷன் ஆகாம அமைதியா இருங்க; எந்தக் காரணத்தைக் கொண்டும் கதவைத் திறந்துடாதீங்க. நான் பக்கத்து வீடுகளுக்கு தகவல் சொல்லி எழுப்புறேன்; எல்லாருமாக ஒரே நேரத்தில், 'லைட்'டை போட்டு, அவனை கையும், களவுமா பிடிச்சிடுவோம்...' என்றாள்.
ஜன்னல் வழியாக பார்த்த போது, யாரோ சுவரேறி குதித்து, பக்கத்து வீட்டிற்குள் நுழைவதும், பின், அங்கிருந்து தெருவிற்கு தாவி ஓடுவதும் தெரிந்தது.
உடனே எல்லாரும், லைட்டை போட்டு கூச்சலிட, ஆள் எப்படியோ தப்பி, பைக்கில் ஏறி பறந்து விட்டான்.
ஆண் துணையில்லா வீடுகள், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிவோர் வீடுகளில் இருக்கும் பெண்கள், இரவில் வழக்கத்துக்கு மாறாக சத்தம் கேட்டால், உடனே கதவை திறக்காதீர்கள்; கதவை திறக்க வைக்க, கொள்ளையர்கள் செய்யும் யுக்தி இது. ஜாக்கிரதை!
ஏ.காயத்திரி, மதுரை.

குழந்தையை தானம் கொடுத்த தாய்!
சமீபத்தில், பேருந்தில் பயணித்த போது நடந்த சம்பவம் இது: அன்று, பேருந்தில், நிற்கக் கூட இடம் இல்லாத அளவிற்கு, கூட்டம் அதிகமாக இருந்தது. பிறந்து, 15 நாட்களே ஆன குழந்தையை கையில் ஏந்தியவாறு என் அருகில் வந்து நின்ற ஒரு பெண், உட்கார இடமில்லாததால் கையிலிருந்த பெண் குழந்தையை வைத்திருக்கும்படி கூறி, என்னிடம் தந்தாள்; நானும் வாங்கிக் கொண்டேன்.
சிறிது நேரத்தில், நான் இறங்கும் இடம் வந்ததும், குழந்தையை, அப்பெண்ணிடம் கொடுத்தேன்; அவள் வாங்க மறுத்தாள். நான் அதிர்ந்த போது, 'எனக்கு, ரெண்டு வயசுல ஒரு பையன் இருக்கான். அதனால, இந்த குழந்தை வேணாம்; நீங்களே வைச்சுக்கங்க. நீங்க வாங்காம போனாலும், இந்தக் குழந்தைய நான் ஆசிரமத்தில் தான் கொண்டு போய் போடுவேன்...' என்று கூறினாள்.
பேருந்தில் இருந்த பயணிகள், அவளை திட்டி, என்னிடமிருந்து குழந்தையை வாங்கி, அவளிடம் கொடுத்தனர். பார்ப்பதற்கு மிக அழகாகவும், துறுதுறுவென்றும் இருந்தது, அக்குழந்தை. குழந்தை இல்லாமல் வாடும் எத்தனையோ பேர் இருக்க, இப்படியும் சிலர் இருப்பதை நினைக்கும் போது வருத்தமாக உள்ளது.
எஸ்.தேவி, ஸ்ரீவில்லிபுத்தூர்.

மேற்கோள் செய்த பதிவு: 1233097krishnaamma wrote:குழந்தையை தானம் கொடுத்த தாய்!

இப்படி கூட செய்வார்களா என்ன ? நல்ல காலம் இது என் குழந்தையே இல்லை என்று சொல்லாமல் போனாளே!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!
இருபது வீடுகள் உள்ள எங்கள் காலனிக்கு, ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர், புதிதாக குடி வந்தார். காலனியில், பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாமல் சில பிள்ளைகள் திணறுவதை பார்த்து, அவர்களுக்கு உதவ எண்ணினார்.
அதனால், தன் சொந்த செலவில், ஆறு ஆட்டுக் குட்டிகளை வாங்கி வந்து, காலனியின் ஒரு ஓரமாக கட்டி, 'சமையலுக்கு காய் நறுக்கும் போது, வீணாகும் கழிவுகளையும், சொத்தைக் காய்களையும், அரிசி மற்றும் பருப்பு கலைந்த தண்ணீரையும் கீழே கொட்டி வீணாக்காமல், இந்த ஆடுகளுக்கு இரையாக போடுங்கள்...' என்று, அனைவரையும் கேட்டுக் கொண்டார்.
அவரின் அன்புக்கு கட்டுப்பட்டு, அனைவரும் அவ்வாறே செய்ய ஆரம்பித்தோம். குட்டிகள் வேகமாக வளர்ந்து, ஏழு குட்டிகளை, ஈன்றது. சமீபத்தில், எட்டு ஆடுகளையும், ஆட்டுப் புளுக்கைகளையும் இரண்டு லட்ச ரூபாய்க்கும் மேல் விற்ற ஆசிரியர், அப்பணத்தை, காலனியில் உள்ள மாணவர்களின் படிப்பு செலவுக்கு கொடுத்தார்.
மேலும், அப்பணத்தின் ஒரு பகுதியை, பொங்கல் செலவுக்காக, ஒவ்வொரு வீட்டுக்கும், தலா, 2,000 ரூபாய் கொடுத்து, அசத்தினார்.
மேலும், காலனியில், சிறு அறையை கட்டி, அதில், பிளாஸ்டிக் மற்றும் இரும்புக் கழிவுகளை போடச் செய்தார். ஓராண்டு முடிவதற்குள், அந்த அறை முழுவதுமாக நிறைந்தது.
அக்கழிவுகளை, பல ஆயிரம் ரூபாய்க்கு விற்றார். தற்போது, எங்கள் காலனியில் வசிப்போருக்கு பண தட்டுப்பாடு வெகுவாக குறைந்து விட்டது.
'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' என்பதை, அந்த ஆசிரியர் எங்களுக்கு புரிய வைத்தார். எங்கள் காலனியை பார்த்து, பக்கத்து காலனிகளிலும், இந்த முறையை பின்பற்ற துவங்கி விட்டனர்.
அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

அருமையான யோசனை, நல்ல ஆசிரியர்.............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெட்ரோல் திருட்டு!
விழுப்புரத்தை சேர்ந்த நான், கடலூரில் பணியாற்றும் அரசு அலுவலகத்திற்கு, தினமும், ரயிலில் வந்து செல்கிறேன்.
ரயிலில் இருந்து இறங்கியவுடன், வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தியிருக்கும் என் பைக்கில் ஏறி, 5 கி.மீ., தூரத்தில் இருக்கும் என் அலுவலகத்திற்கு சென்று விடுவேன். மாலையில், வாகன நிறுத்துமிடத்தில் பைக்கை நிறுத்துவேன். இது, என் தினப்படி வழக்கம்.
வெள்ளிக்கிழமை பைக்கை நிறுத்தும் போது, 5 லிட்டர் பெட்ரோல் போட்டிருப்பேன். ஆனால், திங்கள், செவ்வாய், புதனில், 'டேங்க்' காலியாகி விடும். பைக்கில் எதுவும் பழுதோ என மெக்கானிக்கிடம் போனேன். அவர், வண்டியை சோதித்தார்.
'வண்டியில் பழுதில்லை; வாகன நிறுத்துமிடத்தில், பெட்ரோல் திருடுகின்றனர் என நினைக்கிறேன். திங்கள், புதன், வெள்ளி என ஒரு நாள் விட்டு ஒரு நாள், 1 லிட்டர் போடுங்கள். பெட்ரோல் திருடு போகாது...' என, யோசனை கொடுத்தார்.
வாசகர்களே... வாகன நிறுத்துமிடங்களில், வாகனங்களை நிறுத்தும் போது, புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
பா.தீனதயாளன், விழுப்புரம்.

இதுவும் ஒரு மூளைக்கழிவு!
என் நண்பரின் மகன், படிப்பில் சுட்டி. பள்ளி இறுதி வகுப்பில், 95 சதவீதம் மதிப்பெண் வாங்கி, கல்லூரியில், பி.எஸ்சி., பவுதீகம் எடுத்துப் படித்தான்.
அதில், சிறப்பாக தேர்ச்சி பெற்று, எம்.எஸ்.சி.,யும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, இரண்டு ஆண்டுகளுக்கு முன், பவுதீகத்தில் ஆராய்ச்சி மாணவனாகவும் சேர்ந்தான்.
நீண்ட நாட்களுக்கு பின், சென்னை வந்த நான், அவனை சந்தித்த போது, 'ஆராய்ச்சி எல்லாம் எப்படி இருக்கிறது?' என்று கேட்டேன், 'ஆராய்ச்சி எல்லாம் விட்டுட்டேன் அங்கிள்... இப்போ, வங்கி தேர்வு எழுதி, எழுத்தராக பணிபுரிகிறேன்...' என்று சொன்ன போது, தூக்கி வாரி போட்டது.
'வங்கியில் எழுத்தாளராக பணிபுரியவா, ஐன்ஸ்டைன் தியரியையும், அணு அமைப்பையும் படித்தாய்... பரிசோதனை சாலைகளில், எண்ணற்ற பரிசோதனைகளை செய்தாய்...' என்று கேட்டேன். அதற்கு அவன் கூறிய பதில் என்னை வியப்பட வைத்தது.
'அங்கிள்... வங்கிப் பணியில் எடுத்தவுடன், 40 ஆயிரம் ரூபாய் சம்பளம், 10 மணி நேர வேலை. ஏகப்பட்ட சலுகைகள்... இதெல்லாம் எங்கே கிடைக்கும்...' என்று கூறியவன், 'நிலையான வேலை என்றால் மட்டுமே திருமணத்துக்கு பெண் தருகின்றனர்...' என்றான்.
இது ஒரு உதாரணம் தான்; ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளும், இன்ஜினியர்களும் இதுபோன்ற, வெள்ளை, 'காலர்' வேலைகளிலும், 'டிவி' சினிமா துறைகளில் சாதாரண வேலைகளிலும் உள்ளனர்.
அரசு, கோடி கோடியாக செலவழித்து, பல்கலைக் கழகங்களை உருவாக்குவது, அந்தந்த துறைகளில் பங்களிப்பை தரத்தானே தவிர, சம்பளம் மட்டும் பெறுவதற்கு இல்லை என்பதை இவரைப் போன்றவர்கள் உணர வேண்டும்.
இத்தகைய சிந்தனையும் ஒருவகையில், மூளைக்கழிவு தான். மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர் மற்றும் அரசு சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய பிரச்னை இது!
எம்.கே.நாராயணன், கோயம்புத்தூர்.

இருப்பதை கொண்டு, சிறப்புடன் சேவை!
சமீபத்தில், என் நண்பனை காண, அவன் ஊருக்கு சென்றிருந்தேன். இருவரும் இளமை கால நினைவுகளை, பேசிக் கொண்டிருந்த போது, எதிர் வீட்டு திண்ணையில், சிறுவர், சிறுமியர் அணியக் கூடிய காலணிகளும், சட்டைகளும், ஒரு கயிற்றில் தொங்க விடப்பட்டிருந்தன. அது, எனக்கு சற்று வித்தியாசமாகப் படவே, அதைப் பற்றி, நண்பரிடம் கேட்டேன். நண்பர் பதில் சொல்வதற்குள், தற்செயலாக, ஒரு வயதான மூதாட்டி, தன் பேரனை கையில் பிடித்தபடி அவ்வீதி வழியே சென்றார். அதைப் பார்த்ததும், 'இப்ப, அங்க நடக்கப் போறதப் பார்...' என்றார்.
அப்பையனின் காலில் செருப்பு இல்லாததைக் கவனித்து, திண்ணையில் அமர்ந்திருந்த பெரியவர், 'ஏன்ம்மா... பையனுக்கு, செருப்பு இல்லையா... வெறும் காலோட நடந்து வர்றானே...' என்று கேட்க, அந்த மூதாட்டி, 'சாப்பாட்டிற்கே வழியில்லாதபோது, செருப்புக்கு எங்கய்யா போறது...' என்றார். உடனே, அவர்களைக் கூப்பிட்டு, கயிற்றில் தொங்கியவற்றில், பையனுக்குகேற்ற காலணிகளையும், சட்டைகளையும் கொடுத்து, அணிந்து கொள்ள சொன்னார். அதைப் பெற்ற இருவரும், மகிழ்வுடன் அவரை வாழ்த்திச் சென்றனர்.
அப்பெரியவரிடம் சென்று, இதைப் பற்றி கேட்ட போது, 'எனக்கு பேரப் பிள்ளைகள், நிறைய பேர் இருக்காங்க; அவங்க வேணாம்ன்னு புறக்கணித்தவைகளை குப்பையில் போட மனமில்லாமல், ஏழைக் குழந்தைகளுக்கு கொடுக்கிறேன். இதில் எனக்கு ஆத்ம திருப்தியும், மன நிறைவும் கிடைக்கிறது. இதனால், எனக்கிருந்த மன அழுத்தம், ரத்தக் கொதிப்பு மற்றும் சர்க்கரை நோய் போன்றவை குறைந்து விட்டது...' என்றார்.
ஒரு நல்ல மனிதரை சந்தித்ததாக எனக்கு தோன்ற வில்லை; மாறாக, பெரிய மகானை சந்தித்ததாக தோன்றியது.
என்.பாலமுருகன், சென்னை.

கோவில்களிலும் நடைமுறைப்படுத்தலாமே!
திருவாரூர் அருகில் உள்ள, எண்கண் திருத்தல முருகன் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். அர்ச்சனை பொருட்களை, ஒயர் கூடையில் வைத்து, எடுத்துச் சென்றிருந்தோம்.
எங்கள் பின்னால் வந்த குடும்பத்தினர், அர்ச்சனை பொருட்களை பாலிதீன் பையில் வைத்து, அர்ச்சகரிடம் கொடுக்க, அவர் பொறுமையாக, 'அர்ச்சனை பொருட்களை எங்கம்மா வாங்குனீங்க... கோவில் வாசல்ல வாங்கியிருந்தா, பிளாஸ்டிக் கூடை அல்லது மூங்கில் தட்டுல வச்சு கொடுத்திருப்பாங்க. வெளியில் வாங்குனீங்களாம்மா... பரவாயில்ல அம்பாள் சன்னதி பக்கம் தாம்பாளத் தட்டு ஏதாவது இருக்கும். அதுல வச்சு எடுத்துட்டுவாங்க... இனி, எந்த கோவிலுக்கு போனாலும், வீட்டுல இருந்து கூடை, தட்டு, தாம்பாளம் எடுத்துட்டு போங்க...' என்று கூற, அவர்களும் கோவிலில் இருந்த பித்தளை தாம்பாளத்தில் வைத்து, எடுத்து வந்த பின், அர்ச்சனை செய்து கொடுத்தார்.
ஓரளவு புகழ் பெற்ற கோவில் என்றாலும், சிறு கிராமத்தில் இருக்கும் இக்கோவிலில், இந்த அளவு விழிப்புணர்வு இருப்பது, மிகவும் மகிழ்ச்சியை தந்தது. பல பெரிய கோவில்களில், பாலிதீன் பைகளில் கொண்டு செல்லும் அர்ச்சனையை ஏற்றுக் கொள்வதில்லை. அதுபோல், எல்லா கோவில்களிலும் கனிவு காட்டி, உரிய மாற்று ஏற்பாடு செய்து, கண்டிப்புடன் கடைப்பிடித்தால், அது நாட்டுக்கு நன்மை தரும்.
எஸ்.லெட்சுமிபிரியா, திருவாரூர்.

- Sponsored content
Page 11 of 40 • 1 ... 7 ... 10, 11, 12 ... 25 ... 40
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 40
|
|