ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!!

+2
T.N.Balasubramanian
Pranav Jain
6 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! Empty மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!!

Post by Pranav Jain Thu Dec 08, 2016 7:40 pm

மக்களால் நான் மக்களுக்காக நான்
மக்களுக்காகவே இந்த அரசு.


கடந்த 2016 டிசம்பர் 5 இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அறியப்பட்ட, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், சமீபத்தில் தனது அரசியல் பிரச்சார முழக்கமாக பேசிய வார்த்தைகள்தான் மேலே உள்ள வரிகள்!. ஜெயலலிதாவின் இன்றைய அரசியல் வெற்றிக்கு ஆதாரமாக அமைந்ததும் இந்த வரிகள்தான். இன்று, அனைத்து தரப்பினரையும் ஜெயலலிதாவின் மறைவுக்காக கண்ணீர் சிந்த வைத்ததும் இந்த வரிகள்தான். இந்த வரியை வெறும் அரசியல் "பிரச்சார பஞ்ச்" என்று மட்டுமே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மையில்லை!

இந்த வரிகளுக்குள்தான் எதிர்கால இந்திய அரசியலுக்கான திட்டம் இருந்தது.! இந்த வரிகளுக்குள்தான் ஜெயலலிதா என்ற இரும்புப் பெண்ணின் ஒட்டுமொத்த சுயரூபமும் இருந்தது.! அதே நேரத்தில், ஒரு பெண்ணுக்குள் இருக்கும் இயற்கை குணமும்(?) இந்த வரிகளுக்குள்தான் ஒளிந்திருந்தது!.

ஜெயலலிதா என்ற மகத்தான அரசியல் சக்தியில் ஒரே பலம் என்பது அவருடைய தன்னம்பிக்கையும், அவருடைய ஆளுமை குணமும் மட்டும்தான். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால், "தான்" என்ற கர்வம்தான் அவருடைய ஒரே பலம். அதனால்தான் அவர் பல வெற்றிகளை சந்திக்க முடிந்தது.

ஒரு மனிதனுக்கு "தான் என்ற கர்வம்" இருக்கக் கூடாது என்று பலரும் சொல்வார்கள். ஆனால், இது தவறான கருத்தாகும். அதாவது, தமிழை தவறாக புரிந்துகொண்ட, தவறாக விளக்கம் சொல்லக் கூடியவர்களால்தான் இதுபோன்ற குளறுபடிகள் நடந்து வந்திருக்கின்றன. ஆனால், 'தலைக்கனம்' என்பதற்கும், 'அகந்தை' என்பதற்கும், 'திமிர்' என்பதற்கும், 'கர்வம்' என்பதற்கும் பல வேறுபாடுகள் இருக்கிறது!. இந்த வேறுபாடு என்பது ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு நேரத்திலும் மாறுபடும். இதுதான் தமிழ் மொழியின் சிறப்பு. இதைத்தான், "இடம், பொருள், ஏவல்" என்று தமிழ் இலக்கணம் சொல்லுகிறது!

அரசியலில் இந்த கர்வம் தேவைப்படுகிறது! அதுதான், நீ செய்யக் கூடாது, நான்தான் செய்வேன்!!

தொடரும்...
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்


பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

Back to top Go down

மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! Empty Re: மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!!

Post by T.N.Balasubramanian Thu Dec 08, 2016 7:54 pm

தொடருங்கள் பிரணவ் !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! Empty Re: மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!!

Post by M.Jagadeesan Fri Dec 09, 2016 7:57 am

" நான் " " எனது " " என்னால்தான் " என்ற கர்வம் எப்போதுமே கூடாது . அரசியலில் மட்டுமல்ல, எந்தத் துறையில் இருந்தாலும் " பதவி வரும்போது பணிவு வரவேண்டும் ".

யான்எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும் .

என்பது ஐயனின் வாக்கு .

பொருள் : யான் என்னும் அகப்பற்றும் , எனது என்னும் புறப்பற்றும் நீக்கியவன் , புகழுடம்பார் வாழும் உலகில் உயர்ந்த இடத்தைப் பெறுவான் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! Empty Re: மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!!

Post by Pranav Jain Sat Dec 10, 2016 6:56 am

பதவி என்பது பிறர் நமக்கு கொடுப்பது. அதே போல பணிவு என்பதும் பதவியில் இருப்பவர்களுக்குத்தான் பிறர் காட்டவேண்டும். இதைத்தான் "பதவி வரும்போது பணிவு வரவேண்டும்" என்று சொல்லியிருப்பார்கள். ஒருவேளை நமக்கு பதவி வந்து, யாருமே பணிஞ்சு நடந்துக்கலைன்னா நம்மகிட்ட இருக்குற பதவி வேல்யூ இல்லைன்னு அர்த்தம்.

உதாரணமா, இந்தியாவோட அதிகபட்ச பதவி அதிகாரம் மோடிகிட்டேதான் இருக்குதாம். அவரைப்போய் உங்ககிட்ட பதவி இருக்கு, அதனால எனக்கு பணிஞ்சு நடந்துக்கங்க, இந்த டிஜிட்டல் இந்தியா என்ற திட்டத்தை உடனடியா நிப்பாட்டுங்க, இல்லேன்னா நான் அம்மா தி.மு.க. அப்படின்னு தனிக்கட்சி ஆரம்பிப்பேன்னு சொல்ல முடியுமா?

அவரு முப்படைத் தளபதிகளையும் கூட்டிகிட்டு வந்து பொட்டு.. பொட்டு...ன்னு சுட்டுட்டு போய்கிட்டே இருப்பாரு!

***** யாருக்குமே சொந்தம் இல்லேன்னா இந்த கர்வம் எதுக்குத்தான் இங்கே கெடக்குது?******

ஒட்டுமொத்த இந்திய மக்களையும் மோடிகிட்ட திசை திருப்பி அனுப்பியவன் நான்!!
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்


பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

Back to top Go down

மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! Empty Re: மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!!

Post by M.Jagadeesan Sat Dec 10, 2016 7:29 am

Pranav Jain wrote:
***** யாருக்குமே சொந்தம் இல்லேன்னா இந்த கர்வம் எதுக்குத்தான் இங்கே கெடக்குது?******


மேற்கோள் செய்த பதிவு: 1228823

ஏன் சொந்தம் கொண்டாடவேண்டும் ? அழுக்காறு , ஆசை , கோபம் , இன்னாச்சொல் , ஆணவம் , அகங்காரம் , திமிர் , கர்வம் ஆகிய களைகளையெல்லாம் மனம் என்னும் வயலில் இருந்து பிடுங்கி இருந்தால்தான் , அங்கே அன்புப்பயிர் செழித்து வளரும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! Empty Re: மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!!

Post by Pranav Jain Sat Dec 10, 2016 7:37 am

பாஸ்,
இந்திய மக்களையெல்லாம் மோடிகிட்ட அனுப்பின மாதரி, தமிழ்நாட்டு மக்களையெல்லாம் அப்போல்லோ ஆஸ்பிட்டலுக்கு அனுப்பனும்.... அதனால, இந்த திருவள்ளுவர் மேட்டரெல்லாம் நாம அப்புறமா பேசிக்கலாம்....
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்


பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

Back to top Go down

மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! Empty Re: மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!!

Post by M.Jagadeesan Sat Dec 10, 2016 8:35 am

மோடியையும் , அப்பல்லோவையும் காலப்போக்கில் மக்கள் மறந்துவிடுவார்கள் ; ஆனால் திருவள்ளுவர் அப்படியல்ல !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! Empty Re: மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!!

Post by T.N.Balasubramanian Sat Dec 10, 2016 10:17 am

அரசியல் உலகில் திமுக /அதிமுக போட்டாப்போட்டி உலக அறிந்தது .
அதுவும் முக /ஜெயலலிதா இருவரும் வாளெடுத்து சண்டை போடாத குறைதான்.
இருப்பினும் ஜெயலலிதாவின் மரணத்தில் ஸ்டாலின் /கனிமொழி பங்குகொண்டு
ஆற்றிய புகழ் உரைகள்/மக்களுக்கு கூறியஆறுதல், தமிழ்நாட்டு மக்கள் நீண்ட நாட்கள்
எதிர்பார்த்த அரசியல் நாகரீகம் துளிர்ழெந்துள்ளதே ,என்ற சந்தோஷம் .

கலைஞர் கூறிய இரங்கல் செய்தியும் இதையே பிரதிபலிக்கின்றது.

அமரர் ஆன ஒருவருக்கு புகழஞ்சலி குறை விருப்பம் இல்லையென்றால் ,வாய் மூடி மெளனமாக இருப்பதே சாலச்சிறந்தது .

டீவீட்டரில் தளபதியின் செய்தி, அவரை மேலும் உயர்த்தியே காண்பிக்கிறது.

இதை ஈகரை உறவுகளுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.          
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
This is called matured and decent politics by Stalin
தளபதி முகஸ்டாலின் அவர்களின் கருத்து:-

"என் காலத்திய எனக்கு தெரிந்த தலைவர்களில் எனக்கு உடன்பாடில்லாத ஒரு தலைவருக்காக முதன் முறையாக என்னை மீறி அழுது கொண்டிருக்கின்றேன்
இத்தனைக்கும் அவர் எனக்குப் பிடித்த தலைவரில்லைதான்.
அப்படியிருந்தும் மனம் கசிகிறது.
ஆனால் அவர்
ஒரு பெண்
தனித்து நின்று அரசியலில் வென்று காட்டியவர்.
எதிரிகளை தயவு தாட்சண்யமின்றி பந்தாடியவர்.
தனது பிடிவாத குணத்தையும் நினைத்ததை செய்வதை யாருக்காகவும்
தளர்த்திக் கொள்ளாதவர்.
இந்த குணங்கள் அவரிடம் இல்லாதிருந்தால்
ஒருவேளை எனக்கும் அவர் பிடித்த தலைவராக இருந்திருக்கலாம்.
ஆனால் ...
அந்த குணங்கள் அவரிடம் இல்லாதிருந்தால்
அரசியலில் இருந்து அவரை எப்போதோ ஒழித்துக் கட்டியிருப்பார்கள்.
அரசியலில் சாணக்கியர்கள் என்று சொல்லப்பட்டவர்களுக்கெல்லாம் ஒற்றைப்பெண்ணாக சிம்ம சொப்பனமாக இருந்தவர்.
அவரைப் பாராட்டவோ
பரிகசிக்கவோ பல விஷயங்கள் நம்மிடம் இருக்கலாம்.
அதையெல்லாம் மீறிய ஒரு பரிவு அவர்மீது ஏற்படுகிறதென்றால் ...
அது எதனால் ஏற்படுகிறதென்று விளக்கம் சொல்லத் தெரியவில்லை.
நம்மோடு இத்தனை காலம் நெருக்கமாக வாழ்ந்த ஒரு பெண் மிகுந்த அவஸ்தைகளோடு
அரசியலோடும் சொல்லப்படாத ரகசியங்களோடு மோசமாக பாதிக்கப்பட்ட நிலையிலும்
தன்னை நேசிக்கும் மக்களை கடைசியாக பார்க்க முடியாமல் அவர்களுக்கு எந்த செய்தியும் சொல்லமுடியாமல்
போராடி மரணமடைந்தது மிகுந்த துயரத்தை தருகிறது.
அவருக்கு எது நல்லதோ
அதை இறைவன் வழங்கட்டும் என்று பிரார்த்திப்பதைத் தவிர வேறொன்றும் சொல்லத் தெரியவில்லை."
- #முகஸ்டாலின்*#dmkthalapathy #tncm #rip
______________________________________________________________________________________________________________

நன்றி வாட்ஸப் செய்தி அனுப்பிய உறவுக்கு .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! Empty Re: மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!!

Post by Pranav Jain Sat Dec 10, 2016 4:44 pm

T.N.Balasubramanian அவர்களின் மேற்கோளுக்கு நன்றி.

தமிழக முதல்வர் ஜெயலலிதா-வின் வாழ்க்கைக்கும் என்னுடைய வாழ்க்கைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அதை அடுத்தடுத்து நான் விளக்குகிறேன்.

அதற்கு முன்னால், என் வாழ்க்கையில் இதுவரையில் பல சம்பவங்கள் நடந்திருக்கிறது. பல போராட்டங்கள் நடந்திருக்கிறது. எந்தத் தவறும் செய்யாமல், எந்த தொடர்பும் இல்லாமல் பல குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகி இருக்கிறேன். ஆனால், இப்படி நடக்கும் போதெல்லாம் "எந்தத் தொடர்பும் இல்லாமல், ஏன் இப்படிப்பட்ட சம்பவங்கள் என் வாழ்க்கையில் நடக்கிறது?" என்று பலமுறை நான் சிந்தித்திருக்கிறேன். ஒவ்வொரு நேரத்திலும் நான் என்ன முடிவுக்கு வருவேன் என்று சொன்னால், "கடவுள் என்னை எதற்கோ தயார் செய்து கொண்டிருக்கிறார்!" என்பதைத்தான் நான் நம்பினேன்.

சினிமாதான் என்னுடைய வழி என்பது எனது லட்சியமாக இருந்தது. ஆனால், இன்று வரையில் என்னால் சினிமாவில் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை. எனது திறமையை வைத்து பிறர் சம்பாதிக்கிறார்கள். என்னுடைய சிந்தனையை வைத்து பிறர் புகழடைகிறார்கள். ஆனால், என்னால் அதை ஏன் சொந்தம் கொண்டாட முடியவில்லை? என்பது என்னுடைய நீண்ட கால கேள்வியாக இருந்தது! ஆனால், சினிமா என்பது என்னுடைய வழியில்லை. அது ஒரு தொடர்பு மட்டும்தான் என்பது இப்போதுதான் எனக்குப் புரிகிறது.

நானும் தி.மு.க காரன்தான்! நானும் ஜெயலலிதாவை விமர்சித்தவன்தான்! எனக்கும் ஜெயலலிதாவை பிடிக்காமல்தான் இருந்தது! இதை சில ஆண்டுகளுக்கு முன், பல சமூக இணையத்தளங்களும், பல பத்திரிக்கைக் காரர்களும், பல சினிமாக்காரர்களும் அறிவார்கள். ஆனால், ஜெயலலிதாவின் நடவடிக்கைகள்தான் எனக்கு பிடிக்காமல் இருந்ததே தவிர, ஜெயலலிதாவின் அரசியல் எனக்குப் பிடிக்காமல் இருந்ததில்லை! அவருடை ஆங்கிலம் எனக்குப் பிடிக்காமல் இருந்ததில்லை! அவருடைய தைரியம் எனக்குப் பிடிக்காமல் இருந்ததில்லை.!

இதைத்தான் தற்போது தி.மு.க அரசும் நிரூபித்திருக்கிறது! ஏனென்றால், ஆட்சியாளர்களுக்குத் தெரியும் யார் மக்களுக்காக போராடுகிறார்கள் என்பது. ஆனால், மற்றவர்கள் அதை செய்யக்கூடாது நாம்தான் செய்ய வேண்டும் என்ற கர்வம் தான் அரசியலில் எதிர்ப்பை உண்டாக்குகிறது. இந்த எதிர்ப்புதான் மக்களுக்கான தேவைகள் சரியாக சென்றடைய வழியாக இருக்கிறது. கடந்த 2011 தமிழக தேர்தலில் 2 ரூபாய்க்கு ரேஷனில் அரிசி வழங்கப்படும் என்று தி.மு.க. அறிவித்தது. ஆனால், அதை செய்ய முடியாது, இது ஏமாற்று வேலை என்று விமர்சித்தவர்தான் ஜெயலலிதா அவர்கள். ஆனால், அந்தத் தேர்தலில் வெற்றிபெற்ற ஜெயலலிதா அவர்கள், 1 ரூபாய்க்கு அரிசி வழங்கினார்! அதன் பிறகு இன்றுவரையில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதுதான் கர்வம்! இந்த கர்வம்தான் அரசியலுக்கு ஆரோக்கியமானது! அதுதான் மக்களுக்கான தேவை!

ஒருமுறை தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நான் சந்திக்க சென்றேன். அவரிடம் பல கோரிக்கைகளை முன் வைத்தேன். ஆனால், அவர் சொன்னார், நீ ஒருவன் சொல்வதை நான் செய்துகொடுத்தால் நாட்டில் பல குழப்பங்கள் ஏற்படும். பல போராட்டங்கள் ஏற்படும், எனவே உனக்கென்று ஒரு கூட்டத்தை சேர்த்து அழைத்து வா! உனக்குத் தேவையானதை நான் செய்து கொடுக்கிறேன்! என்று எனக்கு வாக்குறுதி கொடுத்தார்கள்.

அதை நம்பி நான் இப்போது கூட்டத்தை சேர்த்துக் கொண்டிருக்கிறேன்..... ஆனால் முதல்வரோ, கூட்டத்தோடு கூட்டமாக சென்று மெரினாவில் தூங்கி கொண்டிருக்கிறார்!....

இப்போது நான் என்ன செய்வது? யாரிடம் சென்று அழுவது?...

எனவே, ஜெயலலிதாவை அரசியலுக்கு கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர் அவர்கள். எம்.ஜி.ஆர் அவர்கள் தி.மு.க வில் இருந்து வெளியில் சென்றவர்தான்! அதே போலவே, நானும் ஒரு ஜெயலலிதாவை உருவாக்கி இந்த நாட்டிற்கு அறிமுகம் செய்ய இருக்கிறேன்! அந்தப் பெண்ணை அரசியலில் ஈடுபடுத்த இருக்கிறேன்! அந்தப் பெண்ணுக்கும், ஜெயலலிதாவின் வாழ்க்கைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது! அந்தப் பெண்ணை வரும்காலத்தில் "சின்னத்தாயி" என்று தமிழக மக்கள் அழைப்பார்கள்!!

இது நடக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை இனிமேல் வரப்போகும் 5 ஆண்டுகள் முடிவு செய்யும்!! அடுத்து தேர்தல் முடிவு செய்யும்! இதற்கான முயற்சியை சென்ற ஆண்டிலிருந்தே நான் தொடங்கிவிட்டேன்!

- ஒரு இணையதளத்திலிருந்து பகிரப்பட்ட பதிவு.

தொடரும்...
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்


பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

Back to top Go down

மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! Empty Re: மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!!

Post by T.N.Balasubramanian Sat Dec 10, 2016 7:28 pm

ம்ம் ......அப்புறம் ......
காத்திருக்கிறோம் .....

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! Empty Re: மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum